- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
அத்தியாயம் 16
"நீங்க உங்க கடமையை செய்ய நான் என்னைக்கும் குறுக்க நிற்க மாட்டேன்" என்ற மித்ரவர்ஷினியின் சர்க்கரைப் பேச்சில் சிரித்தவன்,
"அப்ப என்னை மேரேஜ் பண்ணிக்க சம்மதம்னு சொல்றியா?" என்று கேள்வி எழுப்பினான்.
ஆம் என்று தலையை மட்டும் அசைத்தாள்.
"ம்? சரி, அப்ப நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அப்பறம் முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் பாரு. நமக்கு கல்யாணம் ஆனதுக்கப்பறம் நீ வெளிய எங்கேயும் வேலைக்கு போகக்கூடாது. பொறுப்பான மனைவியா என்னையும், நம்மப் புள்ளைங்களையும் பார்த்துகிட்டு வீட்ல இருந்தா மட்டும் போதும். இதுக்கு உனக்கு ஓகேவா?" என்று கேட்டவன், தன் அன்னையின் செயல்களிலிருந்து பாடம் பல கற்றிருந்தான்.
குழந்தை வரை யோசித்துப் பேசுபவனை நினைத்து பல்லைக் கடித்தவள், சந்தானத்தின் நினைவு வரவும், "எனக்கு ஓகேங்க. ஆக்ஷூவலி எனக்கும் ஹவுஸ் வைஃப்பா இருக்கத்தான் ஆசை" என்று பொய் கூறினாள்.
"அப்ப ஓகே. நெக்ஸ்ட் ஃபங்க்ஷன்ல நம்ம மீட் பண்ணலாம்" என்றதோடு அவளிடம் எதுவும் சொல்லாமல் விடைபெற்று விட்டான்.
அவளோ புடவையை அவிழ்த்துக்கொண்டே அனிச்சையாய் புலம்பினாள்.
"ச்சே! கடைசில என் வாயாலயே என்னை கட்டிக்கோன்னு கெஞ்சுற நிலைமைக்கு என்னை கொண்டு வந்துட்டானே. இவனை என் கால்ல விழ வைக்கணும்னு பார்த்தா, என்னை அவன் கால்ல விழ வச்சிடுவான் போல? விடக்கூடாது. அவனா நானான்னு ஒருக்கை பார்த்திடனும்" என்று சிலுப்பினாள்.
கீழே வந்தவனிடம் மீனாட்சி காப்பி கோப்பையை நீட்ட, வேண்டாம் என மறுத்தவன் முக்கியமான வேலை ஒன்று வந்து விட்டதாகக் கூறி கிளம்பி விட்டான்.
நேரே தனது வீட்டிற்கு சென்றவன் தன் அன்னையிடம் திருமணத்திற்கு தனது சம்மதத்தை தெரிவித்தான். அடுத்த கணமே திருமண ஏற்பாடுகள் அனைத்தும் துவங்கப்பட்டன.
தன் அண்ணன்களின் திருமணத்திற்காக அனுஷாவும் இந்தியா வந்திருந்தாள். அது அவள் வீ.கேவுடன் அறிமுகமாகியிராத காலக்கட்டம். தன் அண்ணன் அண்ணியரின் உடைகளை தானே வடிவமைத்தாள் அவள்.
மறுபுறம் தினமும் இரவு எட்டு மணியளவில் ரதிதேவிக்கு அழைப்பு விடுத்து, சுமார் இரண்டு மணிநேரம் அவளுடன் கடலை போடும் அக்னிமித்ரன், அவளுக்கு பிடித்தது பிடிக்காததையெல்லாம் அவளறியாமலேயே கறந்தான்.
ஏற்கனவே அவன் செய்த செயலால் உள்மனதுக்குள் பயந்து கொண்டிருந்தவள், அவனுடன் இயல்பாக பேச முடியவில்லை எனினும், தன் பாட்டி மணியம்மையின் வற்புறுத்தலால் ஓரளவு பேசினாள்.
இவர்களின் திருமணத்தை அனைவருக்கும் அறிவிக்கும் விதமாய் ஒரு வாரத்திற்குப் பின் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண அறிவிப்பு விழாவில், முக்கியமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
ஐந்து நட்சத்திர விடுதியில் இவ்விழாவிற்காக பெரிய மேடை ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஜோடிகளும் உட்காரும் வகையில் தனித்தனியே, அதிக வேலைப்பாடுகள் கொண்ட இருக்கைகளும் போடப்பட்டிருந்தன.
விழா தொடங்கியதும் இரண்டு ஜோடிகளும் மேடைக்கு அழைத்து வரப்பட்டு, இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.
அடர் நீலநிற கோட் ஷூட்டில் ஆணழகனாய் திகழ்ந்தான் அக்னிமித்ரன். அவனின் விரிந்த தோள்களும், தீட்சண்யமான கண்களும், மேல் கோட்டிற்கு உள்ளே அணிந்திருந்த வெண்ணிற சட்டையின் முதலிரண்டு பட்டன்களை திறந்து விட்டமையால் தெரிந்த உரமேறிய நெஞ்சும், உதட்டிற்கு மேலிருந்த கருத்த கத்தை மீசையும், அவனை பேரழகனாய் காட்டின.
அவனருகில் தன் முக ஜொலிஜொலிப்புடன் போட்டிப்போடும் அளவிற்கு வெண்கற்களால் ஆன, அதிக வேலைப்பாடுகள் கொண்ட, பல்லாயிரங்களை விழுங்கிய, அடர் நீல நிற லெஹாங்காவை, அக்னிமித்ரனுக்கு பொருத்தமாய் அணிந்திருந்தாள் ரதிதேவி.
அவர்களுக்கு வலப்புறம் இருந்த இருக்கையிலோ இடை தாண்டிய முடியை கர்ல் செய்து முதுகில் பரப்பி விட்டு, ரவிக்கையையும் பாவாடையையும் சுமக்கவே இவள் கூடுதலாக சாப்பிட்டிருக்க வேண்டுமோ? என காண்போர் எண்ணும் அளவிற்கு கூடாரம் போல் விரிந்த கடல் நீல நிற கொசுவலை லெஹாங்காவை அணிந்திருந்தாள் மித்ரவர்ஷினி.
அசோகா தன்னை நெருங்கி நிற்கக்கூடாது என்பதற்காகவே அதனை அணிந்திருந்தாளோ என்னவோ?
அவளருகில் அதே நிறத்திலமைந்த கோட் ஷூட்டில், ஜெல் வைத்து தனது கேசத்தை படிய வாரி, அசோகமித்ரனும் மன்னர் அசோகராய் மிளிர்ந்தான்.
இரு ஜோடிகளையும் கண்டு ஓரமாய் நின்றிருந்த களக்காட்டு தம்பதியர் மனம் நிறைந்து போயினர்.
விழா ஆரம்பமாக ஒவ்வொருவராக வந்து வாழ்த்து கூறிவிட்டுச் சென்றனர்.
அதில் அசோகமித்ரனின் கல்லூரித் தோழிகள் சிலர் வந்திருக்க, அவர்களிடம் உற்சாகம் ததும்ப சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான் அந்த காவலதிகாரி.
ஏற்கனவே அவனிடம் காதலை சொல்லியிருந்து அவனால் நிராகரிக்கப்பட்டவர்கள், இப்போது மித்ரவர்ஷினியின் கொள்ளை அழகை கண்டு, பொறாமையில் அவளை வெறுப்பேத்தவென்றே அசோகாவிடம் வெகுநேரம் பேசினர்.
அவன் சிரிக்கும் போது மின்விளக்குகளால் பளீரிட்ட அவனின் முன்னெற்றி முல்லைப் பற்களையே வெறித்துக் கொண்டிருந்த மித்ரவர்ஷினிக்கு, உள்ளுக்குள் கொஞ்சம் கடுப்பாகவே இருந்தது.
‘டேய்! உனக்கு பாய் ஃப்ரெண்ட்ஸே கிடையாதா?’ என்றவள் உள்ளுக்குள் குமுறிய வேளை, அசோகமித்ரனின் உயிர்த்தோழன் மனோகரன் மேடையேறினான்.
அவன் அவளிடம், "ஹாய் சிஸ்டர், இவன் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸரா இருக்கதால பெரிய விஸ்வாமித்திரனோனு நெனச்சுடாதீங்க. சரியான சாக்லேட் பாய் இவன். காலேஜ்ல ஒரு பியூட்டிய விட மாட்டான். எல்லார்கிட்டயும் சகட்டுமேனிக்கு கடலை போடுவான்" என சொல்ல, அசோகமித்ரனை தன் பார்வையால் சுட்டெரித்தாள் மித்ரவர்ஷினி.
ஆனால், அவன் அவளை கண்டு கொண்டால் தானே?
"டேய்! வந்தவுடனேயே உன் வேலையை ஆரம்பிச்சுட்டியா? நாரதா! ஆமா ஹேமாவை எங்கடா காணோம்?" என்றான் ஆதுரமாக.
"ம்? முன்னாள் காதலன் கல்யாணத்துக்கு கூட்டிட்டு வர, நான் என்ன மலர் டீச்சர் புருசனா? வீட்லயே விட்டுட்டு வந்துட்டேன்" என்றதும், அவர்களின் பேச்சைக் கேட்டு முகம் சுளித்தாள் மித்ரவர்ஷினி. தள்ளிப்போயும் நின்றுகொண்டாள்.
அதன் பின்பு அவர்கள் புறம் திரும்பவேயில்லை.