Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சுடும் நிலவு!!! சுடாத சூரியன்!!!

Messages
15
Reaction score
6
Points
3
10 💕...

வெளிநாட்டு வாடிக்கையாளர்களை கொண்ட பன்னாட்டு நிறுவனத்தை நடத்தி வந்தாலும் மதியின் சிந்தனைகள் தமிழ் நாட்டின் கலாச்சாரங்களையே வழி மொழிந்தது.


சவிதா சொன்னது போல் ஒரு வருடம் சேர்ந்திருந்திட்டு பின் பிரிவதெல்லாம் மேலை நாடுகளுக்கு ஒத்துவரும்.


பாரம்பரியமாய் கல்யாணத்தையே விழா போல் கொண்டாடும் நம் நாட்டில் இது எந்த அளவுக்கு சாத்தியம்."


என யோசித்திருந்தான்.


மேலும் நான்கு மாதங்களுக்கு முன் ஒரு விபத்து போல் பார்த்து, தன் மனதில் பதிந்த முதல் பெண் என்பதால் அவளை வேண்டாமென ஒதுக்கவும் அவனால் முடியவில்லை.


என்னவாகினும் மதியின் மனதில் பூத்த முதல் காதல் ஆயிற்றே.


திருமணம் முடிந்ததும் தன் காதலால் அவளை மாற்றி விடலாம். ஏமாத்தியவன் மேலேயே காதலை கொட்டியவள்.. தான் அவள் மேல் இருக்கும் ஆசையை, பார்த்ததும் முளைத்த காதலை மொத்தமாய் இறைத்தால் மனம் மாறிடுவாள் என நம்பினான்.


அவளின் ஒப்பந்த கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்தான்.


"உன்னோட கண்டிஷனுக்கு ஓகே.."


"இதுனால எனக்கு லாபம் தான். நான் எந்த வித தொந்தரவும் இல்லாம பரீட்சைக்கு படிச்சு பாஸ் பண்ணிட்டு யூஎஸ் கிளம்பிடுவேன். ஆனா இந்த காண்ட்ராக்ட் கல்யாணத்தால உங்களுக்கு என்ன பலன்"


சவிதா புருவம் உயர்த்த


"என் அம்மா அப்பா ஹாப்பியா இருப்பாங்க."


"ஒரு வருஷம் கழிச்சு நம்ம பிரியும் போது வருத்தப் படுவாங்களே."


"அத அப்போ பாக்கலாம். இப்போதைக்கு ஜோசியர் சொன்ன மூணு மாசம் முடியறதுக்குள்ள என் ஜாதகத்தோட சிறப்பா ஒத்துப் போற ஜாதகக்காரியான உன்னோட என் கல்யாணம் முடிஞ்சா தான் அவுங்களுக்கு சந்தோஷம்."


"இதென்ன புது கதை."


"இந்த கதைக்காக தான் நீ வேண்டாம்னு சொல்லியும் உன்னய மேரேஜூக்கு சம்மதிக்க வச்சேன்.
என்னோட ஜாதகத்துல மூணு மாசத்துக்குள்ள கல்யாணம் நடக்காட்டி உயிர் ஆபத்து இருக்குனு ஜோசியர் சொல்லிட்டாராம்."


"அதுனால ரொம்ப தீவிரமா பொண்ணு தேடிட்டு இருந்தப்போ எந்த பொண்ணோட ஜாதகமும் என்னோடதோட பொருந்தல... இதுனால அம்மா வருத்தத்துல இருந்தாங்க அப்பதான் உங்க அப்பாவ சந்திச்சு உன் ஜாதகத்த வாங்கிட்டு வந்தார் என் அப்பா."


"என்ன ஒரு ஆச்சரியம். நம்மளோட ஜாதகம் பேஷா பொருந்துதுனு ஜோசியர் சொல்ல.. இருக்க வேலை எல்லாம் விட்டுட்டு உன்ன பொண்ணு பாக்க வந்துட்டோம்."


"இப்போதைக்கு மூணு மாசத்துக்குள்ள நம்ம கல்யாணம் நடந்தா என் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லனு எங்க வீட்ல நிம்மதியா இருப்பாங்க."


"அட.. இந்த காலத்துலயும் ஜாதகம், ஜோசியம்னு.. சரி அத நம்புறதும், நம்பாததும் அவுங்க.. அவுங்க விருப்பம். ஒப்பந்த படி ஒரு வருஷம் மட்டும் தான் உங்க வீட்ல இருப்பேன். அப்போவும் புருஷன், பொண்டாட்டினு ரெண்டு பேரும் எந்த உரிமையும் எடுத்துக்கக் கூடாது."


"ஒன் மோர் திங்.. இந்த ஒன் இயர்ல வேற எந்த பொண்ணு மேலயாச்சு உங்களுக்கு இன்ட்ரெஸ்ட் வந்தா தாராளமா நீங்க எனக்கு டிவோர்ஸ் குடுத்துட்டு அவுங்கள கல்யாணம் பண்ணிக்கலாம்.
என்ன ஓகேவா?"


சவிதாவின் கேள்விக்கு சம்மதமாய் மதியின் தலை ஆடியது.


--------------------------------------------


உடல் குளிரில் தன் நினைவில் இருந்து வெளியே வந்த மதி ஏசியை ஆப் செய்தான்.


அவன் பார்வை சவிதாவின் பக்கம் திரும்பியது.


கட்டிலில் ஒருக்களித்து படுத்திருந்தாள்.


அறைக்குள் நுழைந்ததும் அவள் தன்னை சாடிய வார்த்தைகள் காதில் கேட்க காலையில் இருந்து நடந்தவைகளை மனதுள் ஓட்டினான்.


அக்கினியை வலம் வரும்போது தன் கைகளுக்குள் இருந்த அவளின் விரல்களில் அழுத்தம் கொடுத்ததும், அவளுக்கு ஊட்டியதும், அவள் ஊட்டும்போது விரலை கடித்ததும் நினைவில் வந்தது.


இன்னும் அவளுடன் நெருக்கமாய் நின்று புகைப்படம் எடுக்க முயன்றதும் மனக்கண்ணில் தோன்றியது.


மனதுக்கு பிடித்தவளை மணந்ததும் மற்றவை மறந்திட அவளது நிபந்தனைகளை மீறி உரிமை எடுத்திட்டான்.


திருமணம் பிடிக்கவில்லை என்றவளை தனது ஆசைக்காகவும், பெற்றோர் மகிழ்ச்சிக்காகவும் கட்டாயப்படுத்தி கரம் பிடித்தவன்.


இன்று அவளது கோப முகம் கண்டு தான் செய்தது தவறோ என எண்ணினான்.


அடுத்து என்ன என யோசித்தவனுக்கு தலை வெடிப்பது போல் இருக்க


இந்த ஒரு வருடத்திற்குள் தனது காதலை அவளுக்கு உணர்த்தி அவளை தன்னவளாய் மாற்றிக் கொள்ள வேண்டும்.


அவன் காதல் மனம் தன் மனாட்டியாய் ஆனா பின்பும் தள்ளி நின்று அனலைக் கக்குபவளை ஆசையுடன் பார்த்தது.


கட்டிலில் இருந்த அலங்காரங்கள் அவனை ஏக்க பெருமூச்சு விட வைக்க


தான் அமர்ந்திருந்த சோபாவிலேயே படுத்து உறங்கி விட்டான்.


---------------------------------------------


இருண்டிருந்த வனத்தில் தன் முழு ஒளியால் வெளிச்சம் பரப்பி இருந்தாள் பௌர்ணமி நிலா.


வனமெங்கும் உயர்ந்த மரங்களும், செடி கொடிகளும் வளர்ந்திருக்க.. அதில் கூடு கட்டி வாழ்ந்திருந்தது பறவைகள்.


அப்பெரிய காட்டை இரு பகுதியாய் பிரிக்கும் வகையில் வீற்றிருந்தது ராட்சச அருவி.


அதன் அருகில் இருந்த பாறையின் மேல் அமர்ந்திருந்தாள் அவள்.


அங்கு நிரம்பி இருந்த பறவைகளின் கீச் கீச் ஓலியும் , சுகமான தென்றலும் அவள் கருத்தில் பதியவில்லை.


அவள் கண்கள் நிலவையே வெறித்திருந்தது.


" சௌமி... உன்ன எங்கெல்லாம் தேடறது. இன்னேரம் இங்க வந்து உக்காந்துருக்க "


ஆதித்யன் வினவ சிறிதும் அசைவின்றி சிலை போல் இருந்தாள் அவனால் சௌமி என விளிக்கப்பட்டவள்.


"ப்ச்.."என சலித்தவன்


"சௌமியா.."


சத்தமாக அழைத்தவாறு அவள் தோளில் கைவைத்தான்.


அதில் திட்டுக்கிட்டவள் அவனை கண்டு ஆசுவாசமானாள்.


"இங்க என்ன பண்ற?"


"அது.."


சௌமி இழுத்தவாறே தலையை பிடிக்க


"ஏதாச்சும் ஞாபகம் வருதானு யோசிச்சிட்டு இருக்கியா "


கோவமாய் கேட்டான் அதித்யன்.


ஆமென மண்டையை ஆட்டியவள்.


"இன்னும் எவ்ளோ நாள் தான் ஊரு, பேரு தெரியாம இந்த காட்டுல சுத்திட்டு இருக்கது. அதான்.."


"ரொம்ப யோசிக்க கூடாது. கொஞ்ச நாள்ல தன்னால பழசு ஞாபகம் வரும்னு உனக்கு மூலிகை வைத்தியம் பண்ற பெரியவர் சொன்னாருல..!"


அவன் கேள்வியாய் பார்க்க


அதேநேரம் "அண்ணே இங்க இருக்கிங்களா! உங்க ரெண்டு பேரையும் குடிசைல காணாம தலைவரைய்யா பாத்து பத்திரமா கூட்டிட்டு வர சொன்னார்."


பழங்குடியினரை சேர்ந்த வீரன் வந்து நின்றான்.


"இதோ வந்துட்டோம் வீரா.."


சௌமியை எழுப்பிய ஆதித்யன் வீரன் கொண்டு வந்த தீ பந்தத்தின் வெளிச்சத்தில் அவளை அழைத்துக் கொண்டு குடிசையை நோக்கி நடந்தான்.


ஐந்தரை அடி உயரம், மாநிறம், கண்களில் கண்ணாடி சகிதம் இருக்கும் ஆதித்யன் தனது குடும்ப பிரச்சனை காரணமாக இந்த காட்டில் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.


கல்லூரியில் பேராசிரியராய் இருந்தவன் இக்காட்டில் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிறான்.


ஐந்து மாதத்திற்கு முன் இவ்வனத்தின் முன் பகுதியில் மயங்கி கிடந்தாள் சௌமியா.


பழங்களை பறிக்க சென்ற மலைவாசிகள் இவளை தூக்கி வந்து வைத்தியரின் வீட்டில் விட்டனர்.


ஒரு மாத கால இயற்கை வைத்தியத்திற்கு பின் மயக்கம் தெளிந்தவளுக்கு பழையவை அனைத்தும் மறந்திருக்க


அக்காட்டுவாசி மக்களுள் தன்னை போல் இருந்த அதித்யனுடன் ஒட்டிக் கொண்டாள்.


அவனே அவளுக்கு சௌமியா என பெயரிட்டு கள்ளம், கபடமில்லாத அம்மக்களுடன் அவளை பழக செய்தான்.


மூவரும் அவர்களின் இருப்பிடத்திற்கு வந்தனர்.


அங்கு ஒரே மாதிரியான இருபது குடிசைகள் இருக்க.. அதன் அருகில் ஐம்பது காட்டுவாசிகள் இரவு உணவு உண்ண அமர்ந்திருந்தனர்.


இங்கே இதுதான் பழக்கம் மூன்று வேளையும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தான் உண்ணுவர்.


இவர்களை கண்ட தலைவர் "வாங்க சாப்பிடலாம்.. செங்கமலம் இலையப் போடு "


அங்கே நின்று பரிமாறிக் கொண்டிருந்த அவரின் மனைவி செங்கமலத்தை ஏவினார்.


இருவரும் அமர இலை போட்டு தினைக் கூழும், சுட்ட மீனும் பரிமாறப்பட ரசித்து சுவைத்தனர்.


இவர்களிடம் இருந்து வேறுபட்ட தங்கள் இருவரையும் ஒதுக்காமல் பாசமாய் இம்மக்கள் கவனித்துக் கொள்ள


நாகரீக வளர்ச்சி அடைந்த பட்டண வாசிகள் இவர்களை ஏலனம் செய்வதை அறிந்த அதித்யன்


நாகரீகம் மனித நேயத்தை மறக்க செய்த கொடுமையான உண்மையை எண்ணி வருத்த முற்றான்.

- தொடரும்.


Disclaimer:
இப்பகுதியில் பழங்குடியின மக்களோடு ஆதித்யன், சௌமியாவின் உரையாடல் கன்னட மொழியில் இருக்கும். அதை நான் தமிழிலே தந்திருகிறேன்.
 
Messages
15
Reaction score
6
Points
3
11 💕...

சோபாவில் படுத்திருந்த மதியின் ஒரு கால் தரையில் இருக்க... புரண்டு படுத்தவன் தொப் என கீழே விழுந்து விட்டான்.



அதில் தூக்கம் கலைய எழுந்தவனின் முதுகு வலித்தது.



"ராட்சசி.. ராட்சசி.. இவள காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு இந்த சோபால படுத்து முதுகு புடிச்சிக்கிட்டது தான் மிச்சம்."



அவன் பார்வை கட்டிலுக்கு செல்ல... தனது கை கால்களை திசைக்கு ஒன்றாய் பரப்பி ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் சவிதா.



" நாலு பேரு படுத்து தூங்குற பெட்டுல நல்லா செனத் தவளை மாதிரி உருண்டுட்டு இருக்கா பாரு.."



சோபாவில் படுத்துறங்கியதால் உடம்பு வலிக்க... நிம்மதியான துயிலில் இருந்த சவியை கரித்துக் கொட்டினான்.



"டேய்.. மதி.. நீயா இங்க வந்து படுத்துட்டு...அவள ஏன்டா திட்ற.."



அவனின் மனம் எடுத்துறைக்க



"ஹான்.. ராத்திரி இவ போட்ட போடுக்கு பக்கத்துல போய் படுத்துட்டாலும்... முழிச்சு பாத்திட்டு ஜிங்கு ஜிங்குனு ஆடிருப்பா.."



அவள் மேல் இருந்த கோபத்தை அவளுக்கு வக்காலத்து வாங்கிய மனதிடம் காட்டி அதனை அடக்கியவன் தனது செல் போனை எடுத்து பார்க்கலானான்.



கைபேசியில் மணி பார்த்தவன் "ஆத்தாடி மணி ஏழாச்சா "



ஐந்து மணிக்கே எழுந்து உடற்பயிற்சி செய்யும் மதிக்கு இன்று தாமதமாய் எழுந்தது வியப்பை தந்தது.



ஜன்னலின் திரைகளை விலக்கி விட்டு குளிக்க சென்றான்.



காலை கடன்களை முடித்து, குளித்து வெளியே வந்த பிறகும் சவிதாவின் தூக்கம் கலைந்திருக்க வில்லை.



"என்ன இவ கும்பகர்ணன் தங்கச்சி மாதிரி தூங்குறா"



மனதுள் சாடிவிட்டு அவளின் துயில் கலைக்க ஜன்னலை திறந்து வைத்தான்.



ஆதவனின் ஒளிக் கதிர்கள் தன் முகத்தில் பட மறுபக்கம் திரும்பி படுத்தாள் அவள்.



அதைக் கண்ட மதி "சவிதா...சவிதா .. மணி எட்டாக போகுது. எந்திரி மா.."



சத்தமிட்டு அழைக்க.. அவளிடம் ஒரு அசைவும் இல்லை.



அவள் பக்கத்தில் சிறுது இடம் விட்டு அமர்ந்தவன்



"இவ எந்திக்காம நம்ம மட்டும் கீழ போனா நல்லா இருக்காது. அதோட இவளா எழும்பட்டும்னு விட்டா மதியம் வர தூங்குவா போலயே.."



"இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு எழுப்புவோம்."



வாய்விட்டே புலம்பியவன் சிறிது நேரம் கழித்து அவளின் தோள் பட்டையில் தலையணையால் லேசாக அடித்து எழுப்பினான்.



உருண்டு அவனுக்கு வெகு அருகில் படுத்தவளை "மதி.. இதோ எந்திக்க போறா... நல்லா போர்ஸ்சா ஒரு அடி போட்டுட்டு ஓடிரு டா.."
தனக்குள் பேசியவன்.



கதவின் தாழ்பாளை நீக்கி விட்டு லேசாக கதவை திருந்து வைத்தான்.



மீண்டும் அவள் அருகில் அமர்ந்து தலையணையை கையில் தூக்கியவன் "சவி.. எந்திரிமா.. என் பாப்பால.. நேரம் ஆயிடுச்சு மா.."



செல்லம் கொஞ்சியவாரு அவளை அடிக்க போக அவனின் காலில் தலை வைத்தவள்.. தன் கைகளால் அவன் வயிற்றை கட்டிக்கொண்டு



"பா.. இன்னும் பைவ் மினிட்ஸ் தூங்கிக்கிறேன் பா.."



மதியின் செல்லமான அழைப்பில் தினந்தோறும் தன்னை எழுப்பும் தந்தையின் சாயலைக் கேட்டவள்.. அவர் மடியில் படுப்பதாய் நினைத்து அவனின் காலில் தலை வைக்க மதியின் இதயம் வேகமாக துடித்தது.



அவளின் குழந்தை முகத்தை இமைக்காமல் பார்த்தவன் அதன் ரம்யத்தில் அமர்ந்த வாக்கிலே கண் அயர்ந்திட்டான்.



"தாரு.. இந்த காபிய மதி, சவிக்கு குடுத்துட்டு வா.."



மஹா தட்டை தாருவிடம் நீட்டினார்.



"மாமா எங்க மஹா மா.."



விஷ்வா கண்களை கசக்கி கொண்டே ஹாலிற்கு வர



"வாக்கிங் போயிருக்காரு விஷ்வா."



அவனுக்கு பதில் கூறிய மஹா கிட்செனுக்கு சென்றிட



"அச்சச்சோ நான் தான் இன்னிக்கு மிஸ் பண்ணிட்டேனா.."



விஷ்வா சலித்துக் கொண்டான்.



"உங்களுக்கு கம்பெனிக்கு அண்ணன் இருக்கான் அவனும் இன்னு எறங்கி வரல "



நமட்டு சிரிப்புடன் தாரு கூற... மணி பார்த்த அவள் கணவன்.



"எட்டாச்சு இன்னுமா வரல. சூரியனையே இவன்தான் எழுப்புவான். வாக்கிங் போகாம ஒரு நாளும் இருக்க மாட்டானே.. இன்னிக்கு என்னாச்சு?"



"அட மக்கு புருஷா.. அவுங்களுக்கு நேத்து பிரஸ்ட் நைட்.. மறந்துட்டியா..!"



தலையில் அடித்து கொண்ட தாரு காபி தட்டை எடுத்துக் கொண்டு மாடி ஏற



அவள் பின்னோடு விஷ்வா படி ஏறினான்.



"எங்க என் பின்னாடி வரீங்க? குளிக்கலயா?"



"இப்போ அத விட முக்கியமான சீன் இருக்கு. அத பாக்கதான் வரேன்."



"என்ன உளறிங்க.."



"எப்பயும் ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸ்ரா இருக்க உன் அண்ணன் இப்போ எப்படி இருக்கானு பாக்க தான் வரேன்."



முப்பத்தி இரண்டு பற்கலும் தெரிய விஷ்வா சிரிக்க



"வாய மூடுங்க எதுனா உள்ள போய்ட போது. "



இருவரும் மதியின் அறையின் முன் நிற்க



"என்ன தாரா கதவு திறந்துருக்கு.."



கதவில் விஷ்வா கை வைத்ததும் மேலும் அது திறந்திட



"என்ன விஷு பண்றீங்க..."



தாரு கடிந்தாள்.



அவள் முகத்தை உள்ளே பார்க்குமாறு அவன் திருப்பினான்.



அண்ணனின் வயிற்றை கட்டிக் கொண்டு அவன் காலில் சவிதா படுத்திருக்க சுவற்றில் தலை சாய்த்திருந்தான் மதி.



இருவரும் சுகமான உறக்கத்தில் இருந்தனர்.



ஆவென பார்த்திருந்த மனாட்டியின் வாயை தன் கை கொண்டு மூடியவன் அவளை இழுத்துக் கொண்டு கீழே சென்றான்.



"அவுங்களா எழும்பி வரட்டும்."



என்ற விஷ்வா ஒரு காப்பியை அவன் குடிக்க மற்றதை அவளிடம் நீட்டினான்.



"நா குளிச்சுட்டு வரேன். "



அவ்விடம் விட்டு நகர்ந்தான்.



மதியின் ரிங்டோன் சத்தத்தில் இமை பிரித்தாள் சவிதா.



தான் எங்கு இருக்கிறோம் என அவளுக்கு பிடிபட வில்லை. தன் தலை இருக்கும் காலை கண்டவள் சிறிது மேலே பார்வையை ஓட்ட மதியின் மதி முகத்தைக் கண்டாள்.



அந்தோ பதறி விலக அதில் மதிக்கு விழிப்பு தட்டியது.



தன் அருகே புசு புசு வென மூச்சு வாங்கியவாரு அமர்ந்திருந்தவளைக் கண்டு அவன் மனம் எச்சரிக்கை மணி அடிக்க



"இதோ பாரு மா.. நான் நைட் எல்லாம் சோபால தான் படுத்திருந்தேன். அதுல முதுகே பிடிச்சிகிச்சு."



"நா உன்னய எழுப்ப தான் இங்க வந்தேன் நீயா தான் மடில படுத்திட்ட..நான் எதும் பண்ணல.. ப்ரோமிஸ்"



மிஸ்ஸிடம் மாட்டி கொண்ட எல்கேஜி பையன் உண்மையை ஒப்பிப்பது போல் அவனின் முக பாவனை இருக்க அதில் சிரிப்பு வந்தது சவிக்கு.



அச்சிரிப்பை மறைக்க வேறுபுறம் திரும்பியவள் அங்கிருந்த கடிகாரத்தில் மணி பார்த்து அதிர்ந்தாள்.



"எட்டே முக்காலா.. என்னய
எழுப்பிருக்கலாம்ல.. இவ்ளோ நேரம் ஆயிடுச்சே.. லேட்டா போனா அத்தை.. மாமா என்ன நினைப்பாங்க."



அவள் வருந்த



"ஒரு வருஷம் முடிஞ்சு இந்த வீட்ட விட்டு போகும் போது அவுங்க உன்னை பத்தி என்ன நினைப்பாங்கனே நீ கவலை படல..".



"ஒரு மணி நேரம் லேட்டா கீழ போறதுக்கு தப்பா நினைப்பாங்கனு நீ பீல் பண்றத பார்த்தா சிரிப்பு தான் வருது."



எவ்வளவோ தடுத்தும் மனதில் நினைத்தது மதியின் வாயில் வந்திட



கண்களை உறுத்து விழித்தவள்



"அந்த விஷயத்துல என்னய தப்பா நினைக்கிறதக் காட்டிலும்.."



"சின்ன பெண் போட்ட கண்டிஷனுக்கு சுயநலத்துக்காக தலையை ஆட்டி தாலியை கட்டிருக்க தன்னோட பையன நினைச்சுதான் அதிகளவுல வருத்தப் படுவாங்கனு தோணுது.."



வெடுக்கென்றவள் தன் துணிகளை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்திட்டாள்.



அவள் பதிலில் சிலையென நின்றிருந்தான் சவிதாவின் மணாளன்.

- தொடரும்.
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
கதை சொல்லும் விதமும்.. எழுத்தின் வடிவமும் அருமை...👍🏽👍🏽👍🏽
 

Latest posts

New Threads

Top Bottom