Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

revathy ramu

Member
Vannangal Writer
Messages
50
Reaction score
56
Points
18
அத்தியாயம் 21



சுஹேலும் அவன் தந்தையும் வீட்டை அடைந்தவுடன், அங்கு அவன் உம்மா ஜரீனா இவர்களுக்காக காத்திருந்தாள். சுஹேலை கண்டதும், மலர்ந்த முகத்துடன் வாப்பா ! எப்படி இருக்கே? என்று அன்பொழுக கேட்டாள். அவனும் அன்னையை பார்த்தவுடன் சந்தோஷமாக, நல்லா இருக்கேம்மா! நீங்க எப்படி இருக்கீங்க?என்று கேட்க, எனக்கென்னப்பா நான் நல்லா இருக்கேன், நீ போய் குளிச்சிட்டு வா! சாப்பிடலாம், உனக்கு பிடிச்ச உணவு வகைகளை சமைத்து வைத்திருக்கிறேன், என்று அவனை குளிக்க அனுப்பி விட்டு கணவனின் முகத்தை பார்த்தாள். அவர் முகம் எதையும் பிரதிபலிக்கவில்லை. எனவே அவளாக அவரிடம் பேச்சு கொடுத்தாள்.



"என் பையன் நீங்க கூப்பிட்டதும் வந்துட்டானா? , "அவன் எங்கே அவனா வந்தான்? நான் அல்லவா அவனை வலுக்கட்டாயமாக இங்கு அழைத்து வந்தேன் என்று உசைன் கூறவும், ஜரீனாவின் முகம் சுருங்கியது. நீங்க கூப்பிட்டவுடனே வர மாட்டேன்னு சொல்லிட்டானா? நீங்க அவனை ரொம்ப வைதீகளா? என்று பதட்டத்துடன் கேட்டாள். அவன், மருத்துவமனையில் நிறைய வேலை இருக்கிறது, வர முடியாது என்று தான் முதலில் சொன்னான், நான் தான் நீ வரலைனா இனிமேல் நான் வர மாட்டேன், "நாங்க செத்து போயிட்டதா நினைச்சிக்க", என்று அவனை பயமுறுத்தி கூட்டி வந்தேன் என்று கூறியவுடன் ஜரீனாவுக்கு மனம் மிகவும் சங்கடப்பட்டது, அல்லா! இதைக் கேட்டு அவன் மனம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? இவருக்கு அன்பாக பேச தெரியவில்லையானாலும் பரவாயில்லை, அனுசரணையாகவாவது பேசலாம் இல்லையா? இப்படியா பேசுவது? புள்ள மனசை வேதனை படுத்துனோனே இப்படி பேசறாரு, புத்தி கெட்ட மனுஷன்! என்று ,மனதிற்குள் திட்டியவாறே அங்கிருந்து அகன்றாள். சுஹேலும் அவன் தந்தையும் குளித்துவிட்டு வந்தவுடன், எல்லோரும் சேர்ந்து உணவு சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும், சுஹேல், உம்மா! எனக்கு கொஞ்சம் பயண களைப்பா இருக்கு. நான் போய் சற்று நேரம் என் அறையில் ஓய்வெடுக்கிறேன்,என்று தன் அறையை நோக்கி சென்றான்.



அறையில் படுத்ததும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. துர்காவின் நினைப்பாகவே இருந்தது. இப்போது போல் அப்போது அலைபேசி இல்லாத காலம். துர்காவிடம் எப்படி பேசுவது என்று யோசித்தான், வீட்டில் தொலைபேசி இருந்தாலும் வீட்டில் பேசுவது முடியாத காரியம். ஆதலால் வெளியில் சென்று தொலைபேசி பூத்தில் STD கால் போட்டு தான் பேசவேண்டும் என்று மனதிற்குள் எண்ணியவனாக அப்படியே தூங்கி போனான். ஜரீனாவும், உசைனும் ஹாலில் அமர்ந்திருக்க, கதவு தட்டும் ஓசை கேட்டது. ஜரீனா எழுந்து போய் கதவை திறக்க. அங்கு தபால்காரன் நின்னிறுந்தான். அம்மா! உசைன் என்ற பெயருக்கு பதிவு தபால் வந்திருக்கு, அவரை கூப்பிடுங்க, கையெழுத்து போடணும் என்று அவன் ஹிந்தி மொழியில் கூற, ஜரீனா உசைனை கூப்பிட்டு விஷயத்தை சொன்னாள். உசைன் சென்று கையெழுத்து போட்டு தபாலை வாங்கி கொண்டார். அனுப்புனர் முகவரியை பார்த்தபோது, உமர் அலியின் பெயரும் முகவரியும் போடப்பட்டிருந்தது. உசைன் அதை பார்த்தவுடன் பரபரப்பாக கவரை பிரித்தார், அதில் ஒரு கடிதமும் புகைப்படமும் இருந்தது. படத்தில் துர்காவும், சுஹேலும் அருகருகே அமர்ந்து பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். உசைன் துர்காவை புகைப்படத்தில் பார்த்ததும், நேற்று அவளை நேராக பார்த்தது நினைவுக்கு வர, இந்த பெண்ணா? பார்க்க ரொம்ப அமைதியாய் தெரிந்தாளே! என்று அதிர்ச்சியுடன் நின்றார். பிறகு கடிதத்தை படிக்க ஆரம்பித்தார். கடிதத்தில்,



உசைன் அவர்களுக்கு,



உமர் எழுதுவது, நான் தொலைபேசியில் பேசியது போலவே உன் மகனும் ஒரு பெண்ணும் அருகருகே அமர்ந்து கொஞ்சிக் கொண்டு இருந்த புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். இதை விட ஆதாரம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். நான் இப்போதும் உங்கள் பிள்ளைக்கு என் பெண்ணை நிஹ்ஹா செய்து தர சித்தமாய் உள்ளேன், இந்த விஷயத்தை நான் பெருசாக எடுத்துக் கொள்ளவில்லை, இது வெறும் வயசு கோளாறு தான், போக போக சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன். தங்களின் சம்மதத்தை தொலைபேசியில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்,



இப்படிக்கு,



உமர் அலி.



என்று ஹிந்தியில் எழுதி இருந்தது. உசைன் அந்த கடிதத்தையும், புகைப்படத்தையும் ஜரீனாவிடம் காட்ட, அவள் அதிர்ந்து போனாள். என் பிள்ளை அப்படி இல்லங்க! இவர் ஏதோ தப்பா எழுதி இருக்காரு, ஒரு வேளை அவன் மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் எல்லோரும் சேர்ந்து வெளியே போய் இருப்பாங்க. அதை இவங்க தப்பா புகைப்படம் எடுத்து இருக்காங்க, என்று தன் ஆற்றாமையை கூறினாள் ஜரீனா.



உசைன் உடனே, நேற்று தான் நான் இந்த பெண்ணை பாத்திமா வீட்டில் பார்த்தேன். பாத்திமாவின் பக்கத்துக்கு வீட்டில் தான் இருக்கிறாள் என்று அவர் மேலும் சில தகவல்களை கூறியபோது ஜரீனாவுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் யோசித்த பின், அவன்கிட்ட கொஞ்சம் தன்மையாக பேசுங்க! என்ன விவரம் என்று முதலில் கேட்டு விட்டு அவன் என்ன சொல்கிறான் என்று தெரிந்துக் கொண்டு பிறகு பேசுங்க! என்று ஜரீனா கெஞ்சும் குரலில் கூறியதை கேட்ட உசைனுக்கு அவளின் உள்ளம் புரிந்தது. சிறிது தணிந்தவராக சரி ! என்று ஒரு வார்த்தையோடு முடித்துக் கொண்டார்.



சிறிது நேரம் கழித்து சுஹேல் விழித்துக் கொண்டான். கடிகாரத்தை பார்த்தான் மணி மதியம் இரண்டு என்று காட்டியது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டேனா? என்று எழுந்து குளியல் அறை சென்று முகம் கழுவி விட்டு வெளியில் வந்தான். ஹாலில் இவனின் தாயும் தந்தையும் இவனுக்காக காத்திருந்தார்கள். இவன் வந்ததும் ஜரீனா, சாப்பிட வாப்பா! என்று அழைக்க, அவனும் டைனிங் டேபிளின் முன் அமர்ந்தான். அவனுக்கு பிடித்த உணவு வைகைகளை சமைத்திருந்தாள் ஜரீனா. சுஹேல் அதை ரசித்து உண்டான், "உங்களுடைய கைப்பக்குவம் யாருக்கும் வராதும்மா" என்று அவன் தன் அம்மாவை புகழ, அவளிடத்தில் சிறு புன்னகை தவிர, எந்த வித மகிழ்ச்சியும் இல்லை. தந்தையை பார்த்தான், அவர் முகமும் இருகியிருந்தது. ஏதோ பிரச்சனை. என்னவோ பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள், அதற்காகத்தானே என்னை இங்கு கூட்டி கொண்டு வந்திருக்கிறார்கள், என்ன விஷயம் என்று அவர்களாகவே சொல்லட்டும்! என்று மனதில் நினைத்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தான். கைகழுவிக் கொண்டு ஹாலில் வந்து அமர்ந்து தொலைக்காட்சி பெட்டியை உயிர்பித்தான். அதில் ஷாருக்கான் நடித்த ஹிந்தி பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதை ரசித்துக் கொண்டிருந்த வேளையில், அவனுடைய உம்மாவும், வாப்பாவும் அங்கு வந்தார்கள்.



உசைன் சுஹேலை பார்த்து, உன்னிடத்தில் கொஞ்சம் பேசணும், தொலைக்காட்சியை அணை என்று கூற, சுஹேலும் அதனை அணைத்துவிட்டு தந்தையிடம் திரும்பினான். என்ன வாப்பா? என்ன பேசப்போறிங்க? என்று கேட்க, உன்னை எதுக்கு இங்கே அழைத்து வந்திருக்கிறேன்? என்பதை பத்திதான், அதற்கு முன்னால், இந்த புகைப்படத்தை பார்த்து அதில் இருக்கும் பெண் யார் என்று கூறு, என்று அந்த புகைப்படத்தை அவனின் முன் நீட்ட, அதை பார்த்த பின்பு தான் சுஹேலுக்கு அனைத்து விஷயங்களும் விளங்கியது. அவன், வாப்பா , இவள் துர்கா, நம் அத்தை வீட்டிற்கு பக்கத்தில் தான் இருக்கா! ஒரு நாள் நான், அனீஸ், அத்தை மற்றும் துர்கா அனைவரும் சினிமாவுக்கு சென்றோம். அங்கு பாப்கார்ன் வாங்கி சாப்பிட்டோம். இந்த புகைப்படம் அங்கு எடுத்ததா தான் இருக்கும். ஆனா இதை நாங்க எடுக்கவில்லை, யார் எடுத்தார் என்று எனக்கு தெரியாது வாப்பா, என்று கூற, உசைன் நீ ஏன் அந்த பெண் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற? ஏன் அனீஸ் , உங்க அத்தை இல்லை, அவர்கள் பக்கத்தில் எல்லாம் உட்கார்ந்து படம் பார்த்தால் படம் பிடிக்காதா? என்று நக்கலடிக்க, நான் முதலில் அனீஸ் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தேன் வாப்பா! அவள் தான் முன் இருக்கையில் இருப்பவர் சற்று உயரமாக இருப்பதால் படம் தெரியவில்லை என்று இடம் மாற்றி துர்காவை அமரச் செய்தாள், இதில் என் தவறு எங்கே இருக்கிறது? என்று சொல்லுங்கள். உங்களுக்கு சந்தேகம் இருந்தால், இப்போதே போனை போட்டு அத்தையிடம் கேளுங்கள்! நான் எங்கும் போகவில்லை, இங்கேயே தான் இருக்கிறேன், நான் சொல்லுவது பொய் என்று தெரிந்தால், நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், இந்த அற்ப விஷயத்திற்காகவா என்னை அவசரமாக இங்கு வர வழைத்தீர்கள், என்று கச்சிதமாக கூறவும், உசைன் என்ன கூறுவது என்று ஒரு நொடி திகைத்து, பின் இதற்க்காக மட்டும் இல்லை, உமர், போன வாரம் என்னிடத்தில் தொலைபேசியில் பேசினார். நிஹ்ஹாவை எப்போது வைத்துக் கொள்ளலாம்? என்று கேட்டார், எனக்கும் நீ நிஹ்ஹா செய்து கொண்டு பின் படிப்பது நல்லது என்று பட்டது. நாம் போய் பெண் பார்க்கவேண்டும் அல்லவா! உனக்கும் பெண் பிடிக்க வேண்டும், புகைப்படத்தில் பார்த்தாலும் நேரில் பார்ப்பது போல் இருக்காது. அதற்காகவும் தான் உன்னை இங்கு அழைத்து வந்தேன், என்று கூறவும், சுஹேல் வாப்பா! என் லட்சியம் மேற்படிப்பு ஒன்று தான். நான் படிப்பை முடித்து என்னை நானே நிலை நாட்டிக் கொண்ட பின்பு தான் நிஹ்ஹா செய்து கொள்வேன். இதில் இருந்து நான் மாறுவதாய் இல்லை. இதைத் தான் நான் ஆரம்பம் முதல் இன்று வரை சொல்லிக் கொண்டு இருக்கிறேன், வாப்பா! என் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை கூட எனக்கு இல்லையா? என்று அவன் கெஞ்சும் குரலில் கேட்க, உசைனுக்கு என்னவோ போல் இருந்தது. நீ சொல்வதெல்லாம் சரிதான்! ஆனால் பெண் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் சுஹேல். எங்களின் மன திருப்திக்காவது நீ வந்து பெண்ணை பார். மற்றதெல்லாம் பிறகு முடிவெடுக்கலாம் என்று உசைன் கூறவும் அவனால் மறுக்க முடியவில்லை. நான் பெண் பார்க்க வருகிறேன், ஆனால் அந்த பெண்ணைத் தான் உடனே நிஹ்ஹா செய்யவேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தக்கூடாது. இதற்கு நீங்கள் சம்மதித்தால் நான் வருகிறேன் என்று கூறவும், அருகில் இருந்த ஜரீனா, இவன் இதுக்காவது ஒத்துக் கொண்டானே என்று நினைத்துக் கொண்டு, சரிப்பா! நீ வந்து முதலில் பெண்ணை பார். மற்றதெல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறி அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தாள். மறுநாள் உசைன் ஊரில் இருந்து தன் பிள்ளை வந்துவிட்டதாகவும் அன்று மாலையே பெண் பார்க்க வருவதாக தொலைபேசி மூலம் தகவல் சொன்னார் .



அதைக் கேட்டதும் உமர் அலிக்கு தலை கால் புரியவில்லை. தாம் நினைத்த காரியம் பாதி வெற்றி அடைந்துவிட்டது என்று மனதில் சந்தோஷம் பொங்க, ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக செய்ய தொடங்கினார்.
 
Last edited by a moderator:

revathy ramu

Member
Vannangal Writer
Messages
50
Reaction score
56
Points
18

மறுநாள் மாலை சுஹேலும் அவனின் பெற்றோரும் உமரின் வீட்டை அடைந்தனர். வாசலிலே காத்திருந்த உமர் அவர்களை வரவேற்று உபசரித்தார். சுஹேல் எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று நினைத்தவாறே உள்ளே நுழைந்தான். உள்ளே வந்ததும், வீடு மாளிகை போல் இருந்தது. இவர்கள் வீடும் பெரிது தான் ஆனால் இந்த அளவிற்கு ஆடம்பரமாக அவர்கள் வீடு இல்லை. சினிமாவில் காட்டப்படும் பங்களாகளை போல் அவ்வளவு ஆடம்பரமாய் இருந்தது. உள்ளே சென்றதும் பெரிய வரவேற்பறை, கீழே தரை முழுவதும் சிவப்பு வண்ண கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. பெரிய சோபா இரண்டும், நான்கு சின்ன சோபாக்களும் அந்த ஹாலை அலங்கரித்து இருந்தன. எதிர்புறம் சின்ன சின்ன படிக்கட்டுகள் மேலே செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்தன, மேலே அழகிய மின்விளக்குகள் தொங்கி கொண்டிருந்தன. ஆங்காங்கே பிக்காஸோவின் ஓவியங்கள் சுவரை அலங்கரித்துக் கொண்டிருந்தன. கீழேயே ஐந்து அல்லது ஆறு அறைகள் இருக்கும் போல் தோன்றியது. மேலே எத்தனை அறைகள் இருக்கும் என்று தெரியவில்லை. ஹாலில் தாஹிரா இவர்களுக்காக காத்திருந்தாள். இவர்களைப் பார்த்ததும், வாங்க! வந்து உட்காருங்க ! என்று வரவேற்றாள். சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு நடுத்தர வயது பெண்மணி ஒருவர் பழ ரச தட்டுடன் வந்து அனைவருக்கும் பழ ரசம் வழங்கினார். உமர், உசைனிடம் அவரின் வியாபாரத்தை பற்றி விசாரித்து விட்டு, பின் சுஹேலிடம் திரும்பி, என்ன தம்பி நல்லா இருக்கீங்களா? உங்கள் மருத்துவம் தொழில் எப்படி போயிட்டு இருக்கு? என்று அவனையும் கேட்க, அவன் பதில் எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டி வைத்தான். சிறிது நேரத்தில் மும்தாஜ்ஜை அழைத்துக் கொண்டு அவள் அன்னை தாஹிரா வந்தாள். மும்தாஜ் பட்டு புடைவையும் வைர நகைகளுமாக ஜொலித்தாள். அவளை பார்த்தும் சுஹேலுக்கு மனதில் எந்த வித சலனமும் ஏற்படவில்லை. அவன் மனது முழுதும் தான் துர்கா ஆட்கொண்டிருந்தாளே? அவன் அவளை சரியாக கூட பார்க்கவில்லை. ஆனால் மும்தாஜ் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். பார்க்க அழகாத்தான் இருக்கிறான். ஆனால் ஏன் என்னை பார்த்தும் பார்க்காதது போல் இருக்கிறான். ஒரு வேலை அவன் தாய் தந்தை முன் என்னை பார்க்க கூச்சமாக உள்ளதோ? பெண் தானே வெட்கபடவேண்டும். ஆனால் நானே அவனை நன்றாக பார்த்து கொண்டிருக்கேன், அவன் ஏன் என்னை ஒழுங்காக பார்க்கவில்லை? என்று பல்வேறு கேள்விகள் அவள் மனதில் எழ அவனை நோக்கியே அவள் விழிகள் இருந்தன. சுஹேல் தலை நிமிரவே இல்லை. சிறிது நேரத்தில் அவள் உம்மா அவளை உள்ளே செல்ல சொல்ல, அவளும் உள்ளே சென்று விட்டாள். உமர் பேச ஆரம்பித்தார். " என்னப்பா பெண்ணை பிடிச்சிருக்கா? எப்ப நிஹ்ஹாவை வைத்துக் கொள்ளலாம்? என்று நேரடியாகவே கேட்டு விட்டார். சுஹேலும், அவரின் கண்ணை பார்த்து, எனக்கு இப்போது நிஹ்ஹா செய்யும் எண்ணம் எல்லாம் இல்லை. உண்மையை சொன்னால் என் வாப்பா, உம்மா கட்டாயத்தினால் தான் பெண் பார்க்க வந்தேன். நான் மேல் படிப்பு படிக்க வேண்டும், பிறகு பயிற்சி எடுத்து தலை சிறந்த மருத்துவர் ஆக வேண்டும். இதற்கு மூன்று வருடமாவது ஆகும், அதுவரை உங்கள் பெண்ணை காத்திருக்க சொல்லுவதில் எனக்கு விருப்பம் இல்லை. இது ஒரு பெண் பார்க்கும் படலம் என்றில்லாமல் கெட் டு கெதர் என்று எடுத்துக் கொள்ளுங்கள். இதை உங்கள் பெண்ணிடமும் சொல்லி விடுங்கள், என்று கறாராக கூறவே உமருக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது. ஆனாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், " படிப்பா! நிஹ்ஹா பண்ணிக் கொண்டு பிறகு படி, என் பெண்ணும் மருத்துவர் தான், வேணுமின்னா இரண்டும் பேரும் சேர்ந்து வெளிநாட்டில் போய் படியுங்கள், எல்லா செலவுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன், உங்களை யாரும் தடுக்க போவது இல்லை, என்று கூறவும் சுஹேலுக்கு கோபம் வந்துவிட்டது. சார், என்னுடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவை நான் என் தாய் தந்தையிடம் கூட கொடுக்கவில்லை என்று கூறி நிறுத்தினான். "என் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை என் தாய் தந்தையிடம் கூட இல்லை", நீ என்னடா சொல்லுவது? என்று அவன் சொல்லாமல் சொல்லியது உமருக்கு விளங்கியது. அவருடைய முகம் தொங்கி போனது. உள்ளே நெருப்பாய் எரிந்தது. இவனை என்ன செய்தால் தகும்? பெண், சொத்து எல்லாம் கொடுத்து நிஹ்ஹா செய்துக் கொள் என்றால் வேண்டாம் என்கிறானே, என்ன மனிதன் இவன்? இவன் என்ன படித்த முட்டாளா? என்று மனதிற்குள் வெதும்பினார். இருந்தாலும் அதை வெளிக் காட்டி கொள்ளவில்லை. உன்னை எப்படி என் வழிக்கு கொண்டு வருவது என்று எனக்கு தெரியும், என்று மனதில் கருவிக்கொண்டே உதட்டில் புன்னகை புரிந்தார். சுஹேல் அப்படி கூறியது அவனது அன்னைக்கும், தந்தைக்கும் அதிர்ச்சி தான். இருந்தாலும் அதனை மறைத்து, அப்ப நாங்க போயிட்டு வரோம், உங்களையும் உங்க குடும்பத்தையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் என்று கூறிவிட்டு மூவரும் கிளம்பினர். உசைனுக்கு மிகவும் கடுப்பாக இருந்தது. என்ன பிள்ளை இவன்? அவர் அவ்வளவு தன்மையாக பேசுகிறார், இவன் முகத்தில் அடிப்பது போல் இப்படி பேசுகிறானே! சென்னைக்கு சென்று ரொம்பத்தான் மாறிவிட்டான் என்ற கடுகடுத்த முகத்துடன் காரில் ஏறினார். ஜரீனாவுக்கு ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? என்னாயிற்று இவனுக்கு? என்று ஒரே கவலை படிந்த முகத்தோடே வந்தாள். வீட்டை அடைந்தவுடன், என்னப்பா, ஏன் இந்த பெண்ணை வேணாம் என்கிறாய்? அதுவும் முகத்தில் அடிப்பது போல் நேரடியாக அப்படி பேசலாமா? என்று ஜரீனா கூறியவுடன் உம்மா அவர் பேசியது உங்களுக்கு புரியவில்லையாம்மா? அவர் என்னை அவருடைய பெண்ணுக்கு மாப்பிள்ளையாக இல்லை, பொம்மையாக வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார், அவரின் பெண்ணை நான் மணந்தால் அவர் சொல்லுவதற்கெல்லாம் தலையாட்ட வேண்டும் என்று எண்ணுகிறார். பிறகு நான் உங்களுக்கு பிள்ளையாய் இருக்க மாட்டேன், அவர்கள் வீட்டில் மருமகன் என்ற பெயரில் தலையாட்டி பொம்மையாகத்தான் இருப்பேன், இது உங்களுக்கு சம்மதம் தானா? என்று கேட்கவும், ஜரீனா பேச்சற்று அப்படியே சிலையாக நின்றுவிட்டாள். உசைனோ அவர் அப்படியெல்லாம் நினைத்து பேசவில்லை, ஏன் நாம் கூட அவர் அளவுக்கு ஆஸ்தி, அந்தஸ்து உடையவர்கள் தான். நாம் அதனை வெளிகாட்டிக் கொள்ளவில்லை, அவர் வெளிக்காட்டிக் கொள்கிறார், அது தான் வித்தியாசம். அப்படி இருக்கும் போது அவர் எப்படி நிஹ்ஹா ஆனவுடன் உன்னை மதிப்பு குறைவாக நடத்துவார்? எனக்கு தெரிந்து அவரிடமும் அவர் பெண்ணிடமும் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை, என்று கூறவும் . தவறு இருக்கிறதா இல்லையா என்பதை ஆராய வேண்டாம் வாப்பா! எனக்கு இப்போது நிஹ்ஹா வேண்டாம் இதை தான் முதலில் இருந்தே சொல்றேன், நீங்கள் தான் வீணாக என்னை இங்கே அழைத்து வந்து பெண் பார்க்க வைத்தீர்கள் என்று கூறவும், இறுதியாக உன் முடிவு தான் என்ன சுஹேல்? என்று உசைன் கேட்கவும் , அப்போதும் இப்போதும் ஒரே முடிவு தான் வாப்பா! நான் படித்து முடித்து சிறந்த மருத்துவர் ஆன பிறகு தான் நிஹ்ஹா எல்லாம். இதை எதற்காகவும், யாருக்காகவும் மாற்றுவதாக இல்லை. உங்களை எதிர்த்து பேசுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் மனதை கஷ்டப்படுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. என்னுடைய வாழ்நாள் இலட்சியத்தை நான் அடைய வேண்டும் என்று தான் உங்களிடம் மன்றாடுகிறேன்,தயவு செய்து என்னை புரிந்து கொள்ளுங்கள் வாப்பா! என்று அவன் மிகவும் உணர்ச்சிகரமாக கூறியதை கேட்டதும், உசைனைக்கு அவன் பேசுவது நியாயமாக பட்டது. ஒரே பிள்ளை, எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று எப்போதும் என்னிடம் கேட்டது இல்லை. முதல் முறையாக படிக்க வேண்டும் என்று கூறுகிறான், அதுவும் தான் நல்ல நிலமைக்கு வரவேண்டும் என்று தானே விரும்புகிறான் என்று மனதில் நினைத்துக் கொண்டு, இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை, " நீ உன் விருப்பம் போல் செய்! நாளையே நீ சென்னைக்கு போகலாம் என்று இறுகிய முகத்துடன் கூறினார். இதைக் கேட்ட ஜரீனா, என்ன நீங்கள், அவனை நாளையே போகச் சொல்லுகிறீகள்? வந்து இரண்டு நாள் தான் ஆகிறது. ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிறான். உடனே செல்ல சொல்றீங்களே! என்று கணவனை கேட்டு விட்டு, மகனிடம் திரும்பி, சுஹேல், என் மனத்திருப்திக்காக இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் இருந்து விட்டு போப்பா! என்று கனிவுடன் கூறியதை சுஹேலால் மறுக்க முடியவில்லை. சரி உம்மா! என்று அவன் கூறியதை கேட்ட அந்த தாயுள்ளம் மகிழ்ச்சியில் மிதந்தது. சுஹேலுக்கு அப்பாடா! என்றிருந்தது. இன்னும் மூன்று வருடங்களுக்கு நிஹ்ஹா பற்றிய பேச்சே எழாது. நாம் நம் படிப்பை தொடரலாம். நாம் அதிகமாக பெண் வீட்டாரிடம் பேசி விட்டோமா? அவர் எப்படி வேணுமின்னா நானே எங்க பொண்ணு கூட சேத்து உன்னையும் படிக்க வைக்கிறேன் என்று கூறலாம். எங்க வீட்டில் வசதிக்கு என்ன குறைச்சல்? அவரிடத்தில் மட்டும் தான் பணம் இருக்கிறதா? அவர்களுக்கு இணையாக எங்கள் வீட்டிலும் தானே இருக்கிறது. பணம் படைத்த எங்களிடமே இப்படி பேசுகிறார் என்றால் பணம் இல்லாதவரிடம் எப்படி நடந்துக் கொள்ளுவார்! இவர் பேசியது எப்படி வாப்பா சரியென்று கூறுகிறார் என்று தான் தெரியவில்லை, வாப்பா தன்னை போலவே எல்லோரையும் நினைக்கிறார், யார் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்கு தெரியும்? அவரை பார்த்தால் நல்லவராகத் தான் தெரிகிறது, ஆனால் அவர் பேசுகின்ற முறையும் பார்வையும் சரியாகப் படவில்லை. இனிமேல் அவர் எப்படி இருந்தால் நமக்கென்ன? அதுதான் இந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தாயிற்றே! துர்காவை எப்படியாவது நம் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் போதே அவளிடம் பேச வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. மணியை பார்த்தான், மணி மதியம் 2 என்று காட்டியது. இப்போது அநேகமாக துர்காவிற்கு உணவு இடைவேளை இருக்கும். இப்பொது அழைத்தால் அவளிடம் பேசலாம் என்று நினைத்துக் கொண்டு வெளியே செல்ல தயாரானான். அவன் வெளியே வந்ததும், அவன் அம்மாவை பார்த்து, உம்மா நான் சற்று வெளியே சென்று வருகிறேன், வீட்டிலேயே இருப்பது ஒரே போராக உள்ளது என்று கூறி வெளியில் செல்ல முற்பட, ஜரீனா சாப்பாட்டு நேரம் ஆயிடிச்சேப்பா! சாப்பிட்டு போப்பா! என்று அழைத்ததும், காலையில் சாப்பிட்டதே இன்னும் செரிமானம் ஆகவில்லை உம்மா! அதனால் தான் வெளியில் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து கழன்றான். நேரே தொலைபேசி பூத்துக்கு சென்று துர்கா வேலை செய்யும் அலுவலகத்திற்கு STD செய்தான். மறுமுனையில் துர்கா எடுத்து ஹலோ சொன்னதும், என்ன "லிட்டில் சுவீட்டி" எப்படி இருக்கே? என்று அவன் கேட்டதும், துர்காவிற்கு போன உயிர் திரும்பி வந்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. ஆம்! துர்கா சுஹேல் சென்றதில் இருந்து நடை பிணம் போலத்தான் இருந்தாள். கடமைக்கு அலுவலகம் செல்வது, சாப்பிடுவது என்று சிரத்தையே இல்லாமல் தான் வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள். இப்போது சுஹேலின் குரல் கேட்டதும் அவளுக்கு சுய உணர்வு திரும்பியது போல் உணர்ந்தாள். சந்தோஷத்தில் கண்களில் இருந்தும் நீர் தளும்ப, நான் நல்லா இருக்கேன் , நீங்கள் எப்படி இருங்கீங்க? என்று கேட்டதும், சுஹேலுக்கு அவளுடைய நிலை அவள் பேச்சு மூலமே நன்றாக தெரிந்தது. இவளை எப்படி நம் வழிக்கு கொண்டு வரலாம் என்று யோசித்தவனாக, நான் ரொம்ப நல்லா இருக்கேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கையிலேயே அவனுக்குள் பொறி தட்டினால் போல் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. "உனக்கு ஒரு விஷயம் சொல்லத்தான் போன் பண்ணினேன். நேற்று நானும் என் பெற்றோரும் பெண் பார்க்க போனோம். அந்த பெண்ணோட புகைப்படம் கூட நான் அங்கிருக்கும் போது எனக்கு அனுப்பி இருந்தார்களே! நீ கூட பார்த்திருப்பாய் என்று நினைக்கிறேன், அப்பப்பா ! பொண்ணு புகைப்படத்தில் இருப்பதை விட நேரில் அத்தனை அழகு, எல்ல சினிமா நட்சத்திரங்களையும் தூக்கி சாப்பிடுவா போல, அவ்வளவு அழகாக இருக்கிறாள், அவங்க வீட்டை பார்த்த அவ்வளவு செல்வ செழிப்பு, என்று சுஹேல் கூறி கொண்டே போக, துர்கா கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல் கொட்டியது. என்ன துர்கா லைன்லே இருக்கியா? என்று கேட்டுவிட்டு மேலே தொடர்ந்தான், அவங்க வாப்பா நிஹ்ஹா எப்ப வச்சிக்கலாம்? என்று ரொம்பவும் தொந்தரவு செய்கிறார், சரி என்று நானும்.. என்று நிறுத்தினான். துர்காவிற்கோ ஒரே பதட்டம், நீங்கள் ஒப்புக்கொண்டு விட்டீர்களா? என்று அழுகையுடன் கேட்டாள். நீ தான் கிளம்பும்போது சொல்லி அனுப்பினாயே! அந்த பெண்ணையே திருமணம் செய்துக் கொள்ளுங்கள் என்று, இப்போது ஏன் இப்படி கேட்கிறாய் துர்கா? என்று அவன் சிரிப்பை அடக்கி கொண்டு பேச, நான் சொன்னால் உடனே அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்களா? உன்னை எப்போதும் கைவிடமாட்டேன், என்று சொன்னதெல்லாம் பொய்யா? என்று அவள் மிகவும் தீவிரமாக கேட்க, சுஹேலுக்கு சிரிப்பு பொது கொண்டு வந்தது. அவன் போனிலேயே விழுந்து விழுந்து சிரித்தான், என் மீது காதல் இல்லை என்று சொல்கிறாய், என்னை திருமணமும் செய்து கொள்ள மாட்டேன் என்கிறாய், பின் நான் என்ன தான் செய்வது என்று அவன் பொய் கோபத்துடன் கேட்க, உடனே துர்கா, உங்களுக்கு இப்போது என்ன வேண்டும்? நான் உங்களை காதலிக்கிறேன், திருமணம் செய்துக்க கொள்கிறேன் என்று சொல்லவேண்டும், அவ்வளவு தானே! சொல்கிறேன்! நான் உங்களை ரொம்ப காதலிக்கிறேன்! உங்களை மட்டும்தான் திருமணம் செய்து கொள்வேன்! போதுமா? என்று சொல்லவும், சுஹேலுக்கு தன்னுடைய யோசனை வெற்றி பெற்று விட்டது என்ற மகிழ்ச்சியில், இப்படியெல்லாம் அழுதுக் கொண்டு, வெறுப்பாக சொல்லுவது தான் காதலா? சிரித்துக் கொண்டு மகிழிச்சியாக சொல்லவேண்டும். அப்போதுதான் நான் ஒத்துக் கொள்ளுவேன்! என்று கூறியதும், போடா! போ ! போய் அவளையே திருமணம் செய்துக்க! என்று பட்டென்று போனை வைத்தாள்.
 

revathy ramu

Member
Vannangal Writer
Messages
50
Reaction score
56
Points
18


சுஹேலுக்கு சந்தோஷமும், சிரிப்பும் தாங்க முடியவில்லை. என் மேல் இவ்வளவு காதல் வைத்துக் கொண்டு உன்னை காதலிக்கவேயில்லை என்று நாடகம் ஆடினாய்! உனக்குள் இருக்கும் காதலை எப்படி வெளிக் கொணர்ந்தேன் பார்! அதே போல் உன்னை கண்டிப்பாக என்னோடு இணைத்துக் கொள்ளுவேன் என் குட்டி தேவதையே! என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அவனுக்குள் அத்தனை மகிழ்ச்சி பீறிட்டு எழுந்தது. இந்த உகலகமே அவன் கைக்குள் வந்து விட்டது போன்று உணர்ந்தான். அந்த சந்தோஷத்தோடே வீட்டை அடைந்தான். வீட்டில் அவள் அன்னை, புன்னகை பூக்கும் தன் மகனின் முகத்தை பார்த்ததும், "என்னப்பா ஓரே சந்தோஷம் உன் முகத்தில் தெரியுது? என்ன விஷயம்? என்று கேட்க, அவன் என்ன சொல்லுவது என்று சிறிது நேரம் தடுமாறி, பின் ரொம்ப நாள் கழித்து நம்ம ஊருக்கு வந்திருக்கேன்லம்மா, இங்கு இருக்கும் அழகு, நான் பழகிய நண்பர்கள் எல்லாம் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு, என்று ஏதோ வாய்க்கு வந்ததை கூறிவிட்டு அங்கிருந்து நைசாக நழுவ பார்க்க, ஜரீனா, சாப்பிட வாப்பா! என்று அழைத்து உணவு வகைகளை தட்டில் எடுத்து வைத்தார். சுஹேல் சாப்பிட அமர்ந்ததும் ஆச்சரியப்பட்டான், வித விதமான உணவு வகைகளை சமைத்திருந்தாள். அத்தனையும் அவனுக்கு பிடித்த உணவு வகைகள். "இத்தனையும் நீங்களே சமைத்தீர்களா? என்று கேட்டதும், ஆமாம் சுஹேல்! நீ ரொம்ப நாள் கழித்து இங்கு வந்திருக்கிறாய், அங்கு நீ உன் வேலையின் காரணமாக ஒழுங்காக சாப்பிட்டு இருக்க மாட்டாய். இங்கு இருக்கும் நாள் வரையிலாவது ஒழுங்காக சாப்பிட வேண்டும் என்று தான் நம் வீட்டில் வேலை செய்யும் சாயிஷா உதவியுடன் எல்லாம் செய்தேன். "எனக்காக ஏன் உம்மா இவ்வளவு கஷ்டப்படுறீங்க?" நீங்க என்ன சமைத்தாலும் எனக்கு பிடிக்கும். இத்தனை வைகைகளை செய்ய வேண்டுமா? ஒன்று இரண்டு வைகைகள் செய்தால் போதாதா உம்மா! என்று அவன் கனிவாக கேட்கவும், " என் பிள்ளைக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்", எனக்கு இதில் எல்லாம் கஷ்டம் ஒன்றும் இல்லப்பா, நான் சமைத்ததை எல்லாம் நீ ஒழுங்கா சாப்பிடலேன்னா தான் கஷ்டப்படுவேன் என்று கூறி அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவன் அருகிலேயே இருந்து பரிமாறினாள். கயல் அன்று மருத்துவமனைக்கு விடுப்பு எடுத்திருந்தாள். இன்னைக்கு எப்படியாவது சாம்சனை பார்த்து தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, சீக்கிரமாகவே எழுந்து காலை கடன்களை எல்லாம் முடித்துக் கொண்டு டைனிங் டேபிள் முன் அமர்ந்தாள். வாஸந்தி அவளை பார்த்து, என்னடி இன்னைக்கு சீக்கிரமாக தயார் ஆகி வந்திருக்கே? மருத்துவமனையில் வேலைகள் நிறைய இருக்கா? என்று கேட்கவும், இவர்களிடம் என்ன சொல்லுவது என்று யோசித்த கயல், அம்மா இன்னைக்கு நான் மருத்துவமனைக்கு போகவில்லை, முக்கியமான ஒரு நபரை சந்திக்க வேண்டும், அதற்காகத்தான் விரைவாக தயார் ஆகிவிட்டேன். சீக்கிரம் டிபன் கொடும்மா! வாஸந்தி, யாரடி அது முக்கியமான நபர்? என்று கேட்கவும்,கயலுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. நான் அவரை பார்த்து விட்டு வந்து சொல்றேன் அம்மா! என்னம்மா இத்தனை கேள்விகள் கேட்கிறாய்? என்று கயல் அலுத்துக் கொள்ள, நீ வெளியிலே போறே, காலம் இப்போது ரொம்ப கெட்டு போய் இருக்கு, நீ எங்கே செல்கிறாய் என்று தெரிந்துக் கொள்ள வேண்டாமா? இதற்கு போய் ஏனடி இத்தனை கோவம் உனக்கு? எனக் கேட்க, கோவம் எல்லாம் இல்லம்மா! இங்கிருந்து ஒரு மணி நேரம் தான் அவர்கள் இருக்கும் இடம், சென்று சீக்கிரமாக வந்து விடுகிறேன், கவலைப்படாதே அம்மா! என்று அம்மாவை சமாதானம் பண்ணி விட்டு தன் வண்டியை எடுத்துக் கொண்டு விரைந்தாள். போகும் போதே அவனிடத்தில் என்ன பேசுவது? எப்படி பேசுவது ? என்று சிந்தித்துக் கொண்டே சென்றாள். அவன் நிறுவனத்தை அடையும் வரை அவளிடத்தில் எந்த பதற்றமும் இல்லை. அடைந்த பின்னோ அவள் மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது. ஒரு வேளை சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது? என்னை ரொம்ப கேவலமாக நினைப்பானோ? என்றெல்லாம் நினைத்துக் கொண்டு அவனுடைய நிறுவனத்தில் தன்னுடைய வண்டியை நிறுத்தி உள்ளே வந்தாள். வரவேற்பறையில் சிறிது நேரம் காத்திருந்த பின் சாம்சனே வெளியே வந்து அவளை அழைத்துக் கொண்டு அவனுடைய அறைக்கு சென்றான். வாங்க! எப்படி இருக்கீங்க? என்று புன்னகையுடன் கேட்க, கயலுக்கு வியர்த்துக் கொட்டியது. நான் நல்லா இருக்கேன். வீட்டில் உங்கள் அம்மா, அப்பா, தங்கை எல்லாம் நலமாக இருக்காங்களா? என்று விசாரித்தாள். அவன், யாவரும் நலம். உங்களுக்கு ஏன் இப்படி வியர்த்து கொட்டுகிறது? என் அறை குளிரூட்டப்பட்ட அறைதான். இங்கேயே இப்படி வேர்கிறது, நீங்க வண்டியில தான் வந்தீங்களா ? அல்லது நடந்தே வந்தீங்களா? என்று கிண்டல் அடிக்க, அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை, என் உடம்பே என்னை காட்டி கொடுக்கிறதே! அமைதி! கயல் அமைதி! ஆபரேஷன் தியேட்டரில் இருக்கும் போது கூட இவ்வளவு பதற்றம் இல்லை, இப்போ ஏண்டி இப்படி இருக்கே? என்று மனசுக்குள் தன்னையே திட்டிக் கொண்டாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை சாம், " உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்," அதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை, அதை கூறியவுடன் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்றும் தெரியவில்லை, என்று தயக்கத்துடன் ஆரம்பிக்க, என்ன கயல் ! என்கிட்ட உங்களுக்கு எதுக்கு இவ்வளவு தயக்கம்? ஏதாவது உதவி வேண்டுமா? என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள். என்னால் முடிந்த மட்டும் கண்டிப்பாக செய்கிறேன், கொஞ்சம் குடிக்க தண்ணீர் தாருங்கள்! பிறகு சொல்லுகிறேன் என்று அவள் கூற, அச்சச்சசோ! உங்களை பார்த்த மகிழ்ச்சியில் உங்களை உபசரிக்க மறந்துவிட்டேன், கொஞ்சம் இருங்கள் என்று கூறி, பணியாளரை அழைத்து இரண்டு பழச்சாறு கொண்டு வரச் சொன்னான். பழச்சாறு வரும் வரையில் கயல் அமைதியாகவே இருந்தாள். வந்தவுடன் இருவரும் அமைதியாக அருந்தினார்கள். பின்னும் அவள் அமைதியாக இருக்கவே, சாம்சனே பேச ஆரம்பித்தான். என்னதான் சொல்ல வந்தீர்கள்? தயங்காமல் சொல்லுங்கள், நீங்கள் என்ன சொன்னாலும் நான் கோவப்படமாட்டேன், அல்லது எந்த உதவி கேட்டாலும் என்னால் முயன்றது செய்வேன் என்று அவன் கூறவும், கயல் இருக்கையை விட்டு எழுந்து நின்றாள். அவனுக்கு முகம் காட்டாமல் திரும்பி நின்றாள். பின் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு, "நான் உங்களை காதலிக்கிறேன்" உங்களுக்கும் என் மீது விருப்பம் இருந்தால் சொல்லுங்கள். தயவு செய்து என்னை தப்பாக நினைக்காதீர்கள்! என்று ஒப்புவிக்கும் மாணவி போல் கட கடவென்று சொல்லிவிட்டாள். சிறிது நேரம் அங்கே ஒரே மௌனம். கயலுக்கு இவன் என்ன சொல்வான் என்றே தெரியவில்லையே என்று ஒரே பயமும் தயக்கமுமாக இருந்தது. கயல் திரும்பி பார்த்ததும், அவன் இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் கோபம் இல்லை புன்னகையே இருந்தது. இவளுக்கு அப்பாடா ! என்று இருந்தது. அவனால் அவன் காதுகளையே நம்ப முடியவில்லை. இவள் கூறியது என் காதில் தவறாக விழுந்து இருக்குமோ! என்ற சந்தேகம் வேறு அவனுக்குள் இருந்தது. சிறிது நேரம் ஒன்றுமே புரியவில்லை. தான் தேவதை என்று நினைத்த பெண் தன் மீது காதல் கொள்வது அவனுக்கு வியப்பாக இருந்தது. ஒரு வேளை இது கனவோ என்று கூட நினைக்க தோன்றியது. உண்மை என்று உணரும் போது அவனுக்கு சிரிப்பு வந்தது. அப்போதுதான் கயல் அவனை திரும்பி பார்த்தாள். நான் சொன்னதற்கு நீங்கள் எந்த பதிலும் கூறவில்லையே, என்று கூறி அவன் முகத்தை பார்க்க, சாம்சன், நீங்கள் என்னிடம் விளையாடவில்லையே, நீங்கள் சொன்னது இப்போது கூட என்னால் நம்ப முடியவில்லை. என்னை நிஜமாகவே காதலிக்கிறீர்களா? என்று அவன் கேட்கவும், ஏங்க, என் மீது இத்தனை சந்தேகம்? பெணகள் யாரும் தங்கள் காதலை ஆணிடம் சொல்லக்கூடாதா? ஏன் எங்களுக்கு மட்டும் காதலை சொல்லும் தைரியம் இல்லையா? அது என்ன அவ்வளவு பெரிய தவறா? என்று கேட்கவும், அவன் உடனே அப்படி எல்லாம் நான் உங்களை தவறாக நினைக்கவில்லை. நான் பெண்களை மதிப்பவன். மிதிப்பவன் இல்லை என்று கூறவும், கயலுக்கு சிரிப்பு வந்தது. என்ன சாம், பஞ்ச் டயலாக் எல்லாம் பேசுறீங்க ! என்று கிண்டல் அடிக்க, சாம்சனும் காதல் வந்தா இதெல்லாமும் வரும் போல் இருக்கு என்று நகைத்தான். திடீரென்று அவன் முகம் மாறியது. எனக்கு உங்க அளவுக்கு வசதி இல்லை, நான் ஒன்றும் அவ்வளவு அழகும் இல்லை என்று கூறியவுடன், கயல், காதல் ஆஸ்தி அந்தஸ்து பார்த்து வருவதில்லை அது மனது சம்மந்தப்பட்டது. மேலும் நீங்கள் அழகில்லை என்று யார் சொன்னது? உங்களை முதன் முதலில் மருத்துவமனையில் பார்த்த போதே எனக்கு பிடித்து போய் விட்டது. அதனால் தான் நீங்கள் மருத்துவமனையை விட்டு சென்ற போதும் உங்களை தேடி உங்கள் நிறுவனத்திற்கு வந்தேன், பிறகு வீட்டிற்கும் வந்தேன். என்னை உங்களுக்கு பிடித்து இருக்கிறதா? இல்லை யென்றால் சொல்லிவிடுங்கள், வசதி இல்லை, அழகு இல்லை என்றெல்லாம் காரணம் சொல்லாதீர்கள்! என்று அவள் பொய்யாக கோபம் கொண்டு வெளியே போக அடி எடுத்து வைக்க, நில்லுங்க கயல்! எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் என்று கூறினான். உடனே அவள், "எனக்கு கூட தான் நீங்கள் வைத்திருக்கும் பேனா பிடிக்கும், இதோ இந்த நாற்காலியை பிடித்து இருக்கிறது. அதோ அந்த சுவர் கடிகாரத்தை பிடித்து இருக்கிறது. நான் அதை கேட்கவில்லை. நீங்கள் என்னை காதலிக்கிறீர்களா? என்று தான் கேட்டேன் என அவள் கோபமாக கூற, அவன் சிரித்துக் கொண்டே சரி ! சரி ! கோபித்துக் கொள்ளாதே! நான் உன்னை காதலிக்கிறேன் போதுமா! என்று அவன் கூறவும் அவள் முகம் செந்தாமரை போல் மலர்ந்தது. அப்பாடா! இந்த வார்த்தையை வரவழைக்க நான் பட்ட பாடு சொல்ல முடியவில்லை! என்று அவள் அலுத்து கொள்ள, அவன் சத்தமாக சிரித்தான். அவனின் அழகிய பல் வரிசையை கண்டு, அவள் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, என்ன டாக்டர் மேடம், இப்படி பார்த்துக் கொண்டே இருப்பது தான் காதலா? என்று அவன் வினவும் தான், அவள் சுய உணர்வு பெற்றவளாக, என்ன பேசுவது என்று தெரியாமல் கன்னங்கள் சூடேறி வெட்கி தலை குனிந்தாள். பிறகு நாம் இதைக் கொண்டாட வெளியே சென்று சாப்பிடலாமா? என்று கயல் கேட்க, ஓகே வா போகலாம்! என்று இருவரும் பக்கத்தில் இருக்கும் ஒரு உணவு விடுதிக்கு சென்றனர்.அவர்களுடைய கெட்ட நேரமோ அல்லது நல்ல நேரமோ தெரியவில்லை. கமலநாதன் அன்று அதே உணவகத்திற்கு தன்னுடைய பழைய நண்பருடன் பேசிக் கொண்டு காபி அருந்திக் கொண்டிருந்தார். இவர்கள் உணவு விடுதிக்கு சென்றதும், முதலில் கமலநாதன் அவர்களை கவனிக்கவில்லை. இருவரும் சென்றதும் ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு இடத்தை தேடி அமர்ந்தனர், சாம்சன் கயலிடம் "என்ன சாப்பிடுகிறாய்? முதலில் இனிப்பு ஆர்டர் செய்யுங்கள். பிறகு பார்க்கலாம் என்று கயல் கூற, சாம்சனும் இரண்டு ரசகுல்லா ஆர்டர் செய்தான். சாம் கயலையே பார்த்துக்கொண்டிருக்க, கயல் மெனு கார்டை ஆராய்ந்து கொண்டிருந்தாள். சாம் இங்கு எந்த உணவு நன்றாயிருக்கும்? என்று கேட்டுக் கொண்டே அவனை பார்த்த போது, அவன் தன்னையே உற்றுக் நோக்குவது தெரிந்து அவள் தலை குனிந்து கொண்டாள். சிறிது நேரத்தில் ரசகுல்லா வரவே, இருவரும் உண்டனர். பின் சாம்சன் அவளைக் கேட்டு அவளுக்கு பிடித்த உணவு வகைகளை வரவழைத்தான். இருவரும் சாப்பிட்டு கொண்டே இருந்தபோது, திடீரென்று கயலுக்கு புரை ஏறவே, சாம்சன் அவள் அருகே சென்று அவள் தலையை தட்டினான். அவளுக்கு இருமல் நிற்காமல் மேலும் மேலும் வரவே, உணவகத்தில் இருந்த அத்தனை பேரும் அவர்களையே பார்த்தனர். அதில் கமலநாதனும் ஒருவர். என்ன இவள், மருத்துவமனைக்கு செல்லாமல் இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறாள்? யாரையோ முக்கியமான நபரை பார்க்க சென்றிருக்கிறாள் என்று வாஸந்தி சொன்னாளே அவன் தானா இவன்? அவன் என்ன உரிமையோடு கயலின் தலையை தடுக்கிறான்? என்னதான் இங்கு நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் குழம்பினார். சிறிது நேரத்திற்கெல்லாம் இருமல் சரியாகி விடவே, கயல் சாப்பிட துவங்கினாள். இருவரும் சாப்பிட்டு முடித்து, கிளம்ப ஆயத்தமான போது கமலநாதன் அவர்களிடம் வந்தார். அப்பாவை பார்த்ததும் கயலுக்கு தூக்கி வாரி போய்விட்டது. இவர் எப்போது இங்கு வந்தார்? நாங்கள் வரும்போது தானா இவரும் வரவேண்டும்? என்று நினைத்தவாறே தந்தையை பார்க்க, அவர், நீ இங்கே என்னம்மா செய்துகொண்டிருக்கிறாய்? யார் இவர்? என கேள்வி கணையால் இவளை துளைக்க, கயல் முதலில் சற்று தடுமாறினாலும், பின் சமாளித்துக் கொண்டு, அப்பா இவர் சாம்சன், இங்கு ஒரு நிறுவனம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். நான் இவரை பார்க்க தான் இங்கு வந்தேன். மற்றதை எல்லாம் வீட்டிற்கு வந்து சொல்கிறேன் அப்பா என்று கூறிவிட்டு சாம்சனை தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தாள். சாம்சன் கமலநாதனை பார்த்ததும் புன்னகை மலர, உங்களை பற்றி கயல் நிறைய சொல்லி இருக்கிறாள். நீங்கள் படிக்காத மருத்துவத்தை உங்கள் மகளை படிக்க வைத்தது, நீங்கள் கயலின் மீது கொண்ட பாசம் என்று நிறைய சொல்லி இருக்கிறாள் அங்கிள். உங்களை பார்த்தது எனக்கு மிகவும் சந்தோசம் என்று தன் கையை அவர் கையோடு சேர்த்து குலுக்கினார். கமலநாதன் பதில் ஏதும் சொல்லாமல் கை குலுக்கிவிட்டு கயலிடம், " நான் வீட்டிற்கு தான் போறேன்", நீ வந்ததும் நாம் பேசலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். கயலுக்கு மனதில் தொடர் வண்டி ஓடியது. மனது தடக் தடக் என்று அடித்துக் கொண்டது. இருந்தாலும் அதை வெளிக் கட்டி கொள்ளாமல் சாம்சனிடம் புன்னகைத்து நான் இங்கிருந்தே கிளம்புறேன், நாளை பார்க்கலாம் என்று சொல்ல, என்ன கயல் உன்னுடைய ஸ்கூட்டி என் நிறுவனத்தின் பக்கத்தில் தான் இருக்கு. இங்கிருந்தே கிளம்பறன்னு சொல்லற ! எனக் கேட்க, ஓ ஆமா ! மறந்துட்டேன்! வாங்க போகலாம்! என்று அவனையும் அழைத்துக் கொண்டு தன் ஸ்கூட்டி நிற்கும் இடம் சென்றாள். அவசரமாக அதில் ஏறி அமர்ந்து சாம்சனிடம் விடை பெற்று சென்றாள்.
 

revathy ramu

Member
Vannangal Writer
Messages
50
Reaction score
56
Points
18
அத்தியாயம் 24





துர்காவிற்கு சுஹேலின் மீது ஒரே கோபமாக வந்தது. அவளுக்கு நிச்சயமாக தெரியும், சுஹேல் கண்டிப்பாக திருமணத்திற்கு சம்மதம் தந்திருக்க மாட்டான், ஆனாலும் அவன் பேசிய விதம் அவள் மனதை வருந்தச் செய்தது. பெண் ரொம்ப அழகு, வசதியான இடம் என்றெல்லாம் புகழ்கிறானே! அப்படியானால் அவனுக்கு நான் அழகாக தெரியவில்லையா?, நான் பணக்கார பெண் இல்லை என்று மறைமுகமாக கூறுகிறானோ? என்றெல்லாம் பலவாறு சிந்தித்தவாறே தன் இல்லம் திரும்பினாள். அவளுக்கு சாப்பிட கூட பிடிக்கவில்லை. வேலையெல்லாம் முடித்துவிட்டு படுக்க செல்ல, பார்வதி வந்து அவளிடம், என்ன துர்கா சாப்பிடவில்லையா? என்று கேட்க, பசி இல்லை அண்ணி என்று கூறிவிட்டு படுக்க சென்று விட்டாள். இவள் சாப்பிடாமல் சென்றது பார்வதிக்கு மனம் கேட்கவில்லை, ஒரு கோப்பையில் பால் எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் சென்றாள். இந்த பாலையாவது குடித்து விட்டு படு என்று கையில் கொடுக்கவும், வேறு வழியின்றி அதை அருந்திவிட்டு படுத்தாள், படுத்ததும் அவளுக்கு தூக்கம் வரவில்லை, சுஹேல் பேசியது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. சுஹேல் வந்தால் அவனை திரும்பி கூட பார்க்க கூடாது, அவனிடத்தில் பேசக் கூடாது என்று மனதில் கருவிக் கொண்டே தூங்கி போனாள்.



ஒரு வாரம் முடிந்தவுடன் சுஹேல் சென்னை வந்துவிட்டான். வந்தவுடன் குளித்து முடித்து மருத்துவமனைக்கு செல்ல ஆயத்தமானான். பாத்திமா அவனை சாப்பிட்டுவிட்டு போகச் சொல்ல, அவனும் சாப்பிட அமர்ந்தான். அப்போது வாசல் கதவு தட்டும் ஓசை கேட்கவே, பாத்திமா சென்று கதவை திறந்தாள். அங்கே துர்கா நின்றிருந்தாள். சுஹேலை பார்க்க கூடாது பேச கூடாது என்று மூளை சொன்னாலும் மனசு அதை கேட்கவில்லை .அவள் பார்வை சுஹேலை தான் தேடியது. அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். "துர்கா, வாம்மா!" என பாத்திமா அழைக்க, "நேத்து நீங்க அண்ணியிடத்தில் கீரை வாங்கினா உங்களுக்கும் ஒன்று வாங்குமாறு கூறி இருந்தீர்களாமே! அது தான் கொடுத்து அனுப்பினாங்க! என கீரை நிறைந்த பையை பாத்திமாவிடம் நீட்ட, ஆமா ! நேத்திக்கு சொல்லிருந்தேன், ஞாபகமாக வாங்கி இருக்காங்களே! என்று பேசியவாறு அதனை வாங்கி கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.



அப்போதுதான் எழுந்து வந்த அனீஸ், துர்காவை பார்த்து என்னடி இவ்வளவு காலையிலேயே வந்திருக்கே? என்று கேட்டு விட்டு அவளருகே சென்று மெல்லிய குரலில், "உன் ஆளே பாக்காம இருக்க முடியலையோ ! என்று கிசுகிசுக்க, துர்கா சுட்டு விரலை காட்டி உதைப்பேன் என்பது போல் சொல்ல, அனீஸ் சிறிய புன்னகையுடன் அவளை பார்த்தால் அவளோ விடாமல் கோபமாய் சுஹேலை பார்த்துக் கொண்டிருக்க, என்ன இது? ஒரு வாரம் கழித்து இருவரும் பார்க்கிறார்கள். இப்படி கோபமாக சுஹேலை பார்க்கிறாளே! அதுகுள்ளே இருவருக்கும் என்ன சண்டை? என சுஹேலை பார்க்க, அவனோ சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தான். "என்னதான் இங்கு நடக்கிறது என்று தெரியவில்லையே? என்று கேள்வியாய் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தாள். துர்கா சட்டென்று மணியை பார்க்க அது காலை எட்டு மணி என்று காட்டவும், அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று உணர்ந்த துர்கா, "அனீஸ் நான் போயிட்டு வரேன்", ஆண்ட்டியிடமும் சொல்லிடு என்று அவனிடம் சொல்லாமல் வேண்டுமென்றே அவனை தவிர்த்து தன் வீட்டை நோக்கி ஓடினாள்.



அனீஸ் சுஹேலிடம், உங்க இரண்டு பேரு இடையிலே என்னதான்டா நடக்குது? ஒரு வாரம் கழிச்சு இரண்டு பேறும் பாக்கிறீங்க? அவள் என்னமோ உன்னை முறைக்கிறா ! நீ என்னவோ சிரிக்கிறே! என்னாச்சு ? உங்க இரெண்டு பேரு இடையிலும் ஏதாவது சண்டையா? என வினவ, சுஹேல் தான் அன்று துர்காவிடம் தொலைபேசியில் பேசியதை பற்றி கூற, அனீஸ் மாட்டிக்கிட்டாளா? சுஹேல், உன் ரூட் பாதி கிளையர் ஆயிடுச்சி! துர்கா உன்னை காதலிக்கிறாள் என்று வாய்விட்டு சொல்லிட்டாள். இனி நீ உங்க வீட்டில சொல்லி சம்மதம் வாங்கணும், அவ்வளவுதான்! அப்புறம் நிஹ்ஹா தான் என குதூகலிக்க, அது அவ்வளவு சுலபம் இல்லை அனீஸ், இப்போதைக்கு நிஹ்ஹா வேணாம்னு வீட்டில சொல்லிட்டு வந்துட்டேன், " ஏன்டா? என அனீஸ் கேட்க, நான் மேல்படிப்பு படிக்க வேண்டாமா? துர்காவையும் CA படிக்க சொல்லியிருக்கேன்! நாங்க இரண்டு பெரும் நல்ல நிலையிக்கு வந்த பிறகு தான் நிஹ்ஹா என்று முடிவு செய்து இருக்கிறேன். நான் இப்படி சொல்லலைனா எங்க வீட்டில் சும்மா இருக்க மாட்டாங்க! ஏதாவது ஒரு பெண்ணை பார்த்து எனக்கு நிஹ்ஹா பண்ணி வைச்சுடுவாங்க. அதனால் தான் நான் இப்படி ஒரு முடிவுக்கு வந்தேன் என்று கூறவும், அனீஸ் நீ சொல்வது சரிதான்! என ஆமோதித்தாள். துர்கா அலுவலகம் சென்றதும் அவளுக்கு சுஹேலிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. இவள் சீக்கிரமாக அலுவலகம் வந்துவிட்டிருந்தாள்.அலுவலகத்தில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் யாரும் வரவில்லை. துர்கா தொலைபேசியை எடுத்ததும், ஹலோ! என்ற சொல்லிலே சுஹேல் தான் பேசுகிறான் என்று புரிந்துக் கொண்ட துர்கா, "நான் உங்களிடம் பேச விரும்பவில்லை" என கூற, மறுமுனையில் My little sweetheart நீங்க விருப்பம் இல்லனா பேச வேண்டாம், நான் பேசறதை மட்டும் கேளுங்க என கூறவும், ஸ்வீட் ஹார்ட் என்ற சொல்லிலே அவளுடைய பாதி கோபம் பறந்தோட, ஒன்றும் பேசாமல் இருந்தாள். சுஹேல் தன் வீட்டில் நடந்ததை எல்லாம் விவரமாக கூற, அதை சிறு வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள். பேசி கொண்டே இருந்த அவனுடைய குரல் தீடீரென்று குழைந்து, " துரி, உன்னை தவிர என் மனசில் எந்த பெண்ணுக்கும் இடமில்லை, இது உனக்கு தெரியாதா? உன்னிடத்தில் சும்மா விளையாடினேன். அதற்கு போய் இந்த கோபமா "My little angel" என்று கூறவும், துர்காவிற்கு முழு கோபமும் பறந்தோடி விட்டது. சாரி அண்ட் தேங்க்ஸ் என்று துர்கா கூற, சாரி எதுக்கு? தேங்க்ஸ் எதுக்கு? " உங்க மேல கோபம் பட்டத்துக்கு சாரி, நீங்க என் மேல வைத்திருக்கிற காதலுக்கும், நீங்க வாஙகி கொடுத்த CA விண்ணப்ப படிவத்திற்கும் தேங்க்ஸ் என்று கூற எங்களுக்கெல்லாம் தேங்க்ஸ் இப்படி சொன்னா பிடிக்காது, வேறு மாதிரி தான் சொல்லணும், வேறு மாதிரினா அது எப்படினு எனக்கு தெரியலயே! என அப்பாவியாய் துர்கா கேட்க, நீ கமல் படம் எல்லாம் பார்த்ததில்லையா? வாரணாசியில் இருக்கிற நானே பார்த்திருக்கேன், வசூல் ராஜா MBBS படத்திலே ஒரு வைத்தியம் சொல்லுவாரே அது மாதிரி செஞ்சாத் தான் எனக்கு பிடிக்கும் என்று கூற, துர்கா வெட்கத்தில் மௌனமானாள். என்ன பேச்சையே காணோம்? என்று சுஹேல் கூற, இந்த மாதிரி வைத்தியம் எல்லாம் கல்யாணத்திற்கு பிறகு தான். இப்போ இல்ல என அவன் மேல பேசுவதற்கு முன் போனை வைக்கிறேன் என்று வைத்துவிட்டாள். நாணத்தால் அவள் கன்னங்கள் சிவப்பேறியது. ஒவ்வொருத்தராய் அலுவலகத்தில் நுழைய, முதலில் வந்த மேனேஜர், துர்காவை பார்த்து, என்னம்மா இன்னைக்கு சீக்கிரமாகவே வந்திட்டியா? பாவம்! காலையிலே வெயிலில் அவசர அவசரமாக வந்தது முகம் எல்லாம் சிவந்து இருக்கு என்று கூற, துர்காவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தலையை மட்டும் ஆமாம்! என்பது போல் மேலும் கீழும் ஆட்டி வைத்தாள்.



உமர் அலிக்கு ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. கூண்டுக்குள் அடைப்பட்ட புலி போல் இங்கும் அங்கும் உலாவிக் கொண்டிருந்தார், சின்ன பையன்னு பார்த்த எப்படி எல்லாம் பேசறான்! இவன் அந்த பொண்ணை தான் காதலிக்கிறான் என்று உறுதியாக தெரிந்து விட்டது. அந்த பொண்ணை மனசில் வைச்சிட்டு தான் என் பொண்ணை வேண்டாம் என்கிறான், என் பெண் அழகுக்கும் அந்தஸ்துக்கும் ஈடாகுமா அந்த பெண்! அந்த பெண் இருக்கிறதாலே தானே என் பெண்ணை வேண்டாம் என்கிறான், அந்த பெண்ணை இல்லாமல் பண்ணி விட்டால் பிறகு என் காலில் தான் வந்து விழவேண்டும். இவனுக்கு நான் சரியான படம் கற்பிக்கிறேன்! என்று உறுமிக் கொண்டு தொலைபேசியை எடுத்தார், ஏதோ ஒரு நம்பருக்கு டயல் செய்ய, மறுமுனையில் சொல்லுங்க ஐயா, எப்படி இருக்கீங்க? என்று கரடு முரடான குரல் கேட்டதும், என்ன ரங்கா நல்லா இருக்கியா? உனக்கு ஒரு வேலை கொடுக்கலாம்னு முடிவு செய்திருக்கிறேன்! என்ன செய்வாயா? என்று அலட்டலாக கேட்க, என்னங்க ஐயா இப்படி கேட்டுபுட்டீங்க? என்ன வேலை மட்டும் சொல்லுங்க ! நிமிஷத்திலே செஞ்சி முடிகிறேன் என்று அவன் கூறவும், உமர் புன்னகைத்தார். இந்த ரங்காவை அவ்வப்போது தொழில் முறையில் ஏற்படும் சண்டை, சச்சரவுகளுக்கு உபயோகித்துக் கொள்வார். அவருடைய விசுவாசமான ஆள் இவன், நான் உனக்கு ஒரு புகைப்படத்தை அனுப்புகிறேன். அதில் இருக்கும் பொண்ணை நீ தீர்த்துக் கட்ட வேண்டும். எவ்வளவு வேணுன்னாலும் பணம் வாங்கிக்கோ! எனக்கு சீக்கிரமாக செய்து முடிக்கணும், சரியா! என்று கூற, அனுப்பி வையுங்க ஐயா! முடிச்சுடறேன், அதிலே ஒன்னும் கஷ்டம் இல்லை, " வழக்கம் போல் ஏதாவது பிரச்சனை வந்தால் எம் பேரு வெளியே வரக் கூடாது என்று உமர் கூறவும், செத்தாலும் சொல்ல மாட்டேங்க ஐயா! சரி, வேலையை முடிச்சிட்டு போன் பண்ணு என்று கூறி போனை வைத்தார். என்கிட்டேயே உன் வேலையை காட்டுறியா சுஹேல் ! என்று குரூரமாய் சிரித்துக் கொண்டார், அப்போது மும்தாஜ் அங்கே வரவே, தன் முக பாவனையை மாற்றி கொண்டு வாம்மா! என்று கூற, வாப்பா, ஏதாவது பிரச்சனையா? உங்க முகம் என்னவோ போல் இருக்கே ! என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா! தொழில் பிரச்சனை தான். அதை நான் பாத்துப்பேம்மா, நீ அதை பத்தி எல்லாம் கவலை படாதே! என்று சொல்லவும், மும்தாஜ், வாப்பா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்று அவள் அருகே வர, என்ன விஷயம் சொல்லும்மா? என்று புன்னகைத்தவாறே உமர் கேட்க, வாப்பா ! சுஹேல் வீட்டில் என்ன சொன்னாங்க? என்று அவள் நேராக விஷயத்திற்கு வர, நீ ஒன்னும் வருத்தப்படாதே குட்டி! வாப்பா இருக்கேன் இல்ல, எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்! நீ இன்னும் கொஞ்ச நாள்லே பாரு! அவங்களே வந்து உன்னை நிஹ்ஹா பண்ணிட்டு போவாங்க! அப்புறம் இந்த செல்ல குட்டிக்கு இந்த வாப்பா ஞாபகம் எல்லாம் இருக்குமா! என்று அவர் கிண்டல் அடிக்க, அவர் தான் படிக்கணும் சொல்லறாரே வாப்பா! " படிக்கட்டும் மா நீயும் மாப்பிள்ளையோடு சேர்ந்து போய் படி! அதற்கெல்லாம் நான் ஏற்பாடு பண்ணறேன். இந்த வாப்பா உனக்காக என்ன வேணுன்னாலும் செய்வார் என்று அவளின் முதுகை தட்டிக் கொடுத்தார். மும்தாஜ் மனதில் பாரம் இறங்கியவளாக முகம் மலர்ந்து, சரி வாப்பா! நான் மருத்துவமனைக்கு செல்கிறேன் என்று கூறி சென்றாள். இந்த பொண்ணை போய் வேணாம்னு சொல்லறானே! சுஹேல் உனக்கு என் பொண்ணு கூடத்தான் நிஹ்ஹா, இதை அந்த அல்லாவே நினைச்சாலும் தடுக்க முடியாது என்று கூறி இறுமாப்பாய் சிரித்தார். அவருக்கு தெரியவில்லை அவரை விட விதி வலியது என்று.



சாம்சன் சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்துவிட்டான். இந்த மகிழ்ச்சியான செய்தியை அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவாறே அம்மாவை தேடினான். அவன் அம்மா சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்க, அம்மா ! அம்மா! என்று அழைத்தவாறே சென்று அவள் முன்னே நின்றான். அவர்கள் அவனை பார்த்ததும் " என்ன தம்பி கயல் உன்னை காதலிக்கிறதா சொல்லிட்டாளா? என்று மகிழ்ச்சியுடன் வினவ, அவனுக்கு ஒரே ஆச்சரியமாக போனது. இது எப்படி அம்மா உங்களுக்கு தெரியும்? என்று கண்கள் மின்ன கேட்க, அந்த பொண்ணு உன்னை காதலிக்கிறாள் என்று எனக்கு முன்னாடியே தெரியும் தம்பி, ஆனாலும் உங்கிட்ட சொல்லலே! ஏன் தெரியுமா? காதல் சொல்லி தெரியக்கூடாது. நீயே உணருணும் தான் நான் வாயை திறக்கவில்லை. அம்மா! உங்களுக்கு எப்படி அம்மா காதலை பத்தி இவ்வளவு விஷயம் தெரியும்? மகனே! நானும் உன் அப்பாவை காதலிச்சு கல்யாணம் பண்ணவா தான். என்ன அவர் எனக்கு அத்தை பையன். அதனாலே எங்க காதலுக்கு தடை ஒன்னும் இல்லை என்று அவள் கூறவும் சாம்சன் அனுபவம் பேசுது என்று அம்மாவை கிண்டல் அடிக்க, ரெபேக்கா வாய்விட்டு சிரித்தாள். பின் சாம்சன் காலையில் நடந்தவற்றை எல்லாம் கூற, ரெபேக்கா அவளுடைய அப்பாவை கூட பார்த்தியா? எனக் கேட்க, ஆமாம்மா! தற்செயலாக தான் பார்த்தோம்! ஆனா அவர் முகமே சரியில்லைம்மா! என்னை அவருக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் என வருத்தம் தோய்ந்த முகத்தோடு கூறினான். அதை பத்தி எல்லாம் யோசிக்காதே! கல்யாணம் ஆனா எல்லாம் சரியாயிடும். நீ நாளைக்கே போன் பண்ணி விசாரி. அவங்க அப்பா, அம்மா சம்மதிச்சிடாங்களா என்று கேளு. நல்ல பதிலா சொன்னா, நாளைக்கே போய் பொண்ணு கேப்போம்! அப்படி இல்லனா கயல் கிட்டேயே என்ன செய்யலாம்னு கேளுப்பா. அவள் கண்டிப்பா உன்னை தவிர யாரையுமே கல்யாணம் பண்ணிக்க மாட்டா, மேற்கொண்டு என்ன செய்யலாம்னு அவளே சொல்லுவா! என அன்னை கூறியவுடன் தான் சாம்சனுக்கு நிம்மதி பிறந்தது.
 
Last edited by a moderator:

revathy ramu

Member
Vannangal Writer
Messages
50
Reaction score
56
Points
18
அத்தியாயம் 25



கயலுக்காக வாசலிலே காத்திருந்தார் கமலநாதன். ஆம்! அவர் உணவு விடுதியில் கயலையும் சாம்சனையும் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த போது அவர் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் மற்றும் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. அவர் வாஸந்தியிடம் கூட இதை பற்றி பேசவில்லை. வாஸந்தி, கமலநாதனின் முகத்தை பார்த்ததும், என்னாச்சு இவருக்கு? ஏன் ஏதோ போல் இருக்கிறார்? என்று நினைத்துக் கொண்டு, என்னங்க , உடம்பு சரியில்லையா? என்று வினவ, அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி வெளி வராண்டாவில் வந்து அமர்ந்துக் கொண்டார்.



கயல் வீட்டிற்கு வந்ததும் தந்தையின் முகத்தைப் பார்த்தாள். அவரும் அவளை பார்க்க, என்னப்பா? என்று ஒன்றும் தெரியாதவள் போல் கேட்க, கமலநாதன், உன்னிடத்தில் பேசணும்மா, நீ போய் பிரெஷ் ஆயிட்டு வா! என்று அவளை உள்ளே அனுப்பினார். கயலும் தந்தையிடம் என்ன பேசவேண்டும் என்று மனதிற்குள் சிந்தித்துக் கொண்டே குளியல் அறை நோக்கி சென்றாள்

அவள் வெளியே வந்ததும், வாஸந்தி அவளிடம் என்னடி யாரோ முக்கியமான நபரை பார்க்கணும் போனியே பாத்தியாடி? என்று கேட்கவும்தான், அப்பா, சாம்சனை உணவு விடுதியில் பார்த்தது அம்மாவிடம் சொல்லவில்லை என்று தெரிந்தது. இதற்கு மேல் இந்த விஷயத்தை தள்ளி போடக்கூடாது என்று எண்ணியவளாக ," அம்மா, நீயும் என் கூட வாசல் வராண்டாவுக்கு வாம்மா" என்று கூறி அன்னையையும் அழைத்துக் கொண்டு தந்தை இருக்குமிடம் நோக்கி வந்தாள். கமலநாதன் அவளை பார்த்ததும் உட்க்காரு கயல்! என தன்னருகில் அமர்த்திக் கொண்டார். இப்ப சொல்லுமா! நான் உணவு விடுதியில் பார்த்த அந்த முக்கியமான நபர் யார்? நீ ஏன் அவரை பார்க்க போனே? எனக் கேட்டதும் கயல் சற்று தயங்கியவளாக, ஆனால் உறுதியாக அவள் பேச்சு வெளிப்பட்டது. அப்பா, அவர் பெயர் சாம்சன், அவர் அங்கு தான் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கமலநாதன் இடை மறித்து, இதை தான் அங்கேயே சொல்லிட்டியே! மேலே சொல்லம்மா என இறுக்கமான முகத்துடன் கூற, அப்பா, அது வந்து.. "நான் அவரை விரும்பிகிறேன் அப்பா" அவரும் என்னை நேசிக்கிறார். உங்களின் அனுமதியுடன் நான் அவரை திருமணம் செய்துக்க கொள்ள ஆசைப்படுகிறேன் என்று ஒரு வழியாக சொல்லி முடிக்கவும் அருகிலிருந்த வாஸந்தி சற்று அதிர்ந்து தான் போனாள், இவனைத்தான் முக்கியமான நபர் என்று சந்திக்க போனாளா? இவளுக்கு ரொம்ப தான் தைரியம் கூடி போச்சு, டாக்டராக இருக்கிறதால வந்த தைரியமா? என்று மனதிற்குள் திட்டியவளாக அவளை பார்த்து பேச ஆரம்பிக்கும் பொது கமலநாதன் கையை காட்டி அவளை பேச வேண்டாம் என்று சைகை காட்டி விட்டு, நாங்கள் சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வாய் கயல்? என்று இறுக்கமான முகத்துடன் கேட்க, நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் அப்பா என்று அவள் தைரியமாக கூற, கமலநாதன், இது தான் நீ எங்களுக்கு மகளாக காட்டும் நன்றியா! உன்னை மருத்துவராக்க நானும் உன் அன்னையும் பணத்திற்காக பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, அது உனக்கே தெரியும். அப்படி கஷ்டப்பட்டு படிக்க வைத்த எங்களுக்கு உனக்கு ஏற்ற மாப்பிள்ளையை பார்க்க மாட்டோமா? அல்லது எங்களிடம் நம்பிக்கை இல்லையா? என்று கேட்க. அப்பா, நீங்கள் எனக்கு ஏற்றவாறு ஆயிரம் மாப்பிள்ளைகளை பார்க்கலாம், நான் இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் எனக்கு பிடித்தவரோடு நான் வாழ்ந்தால் தான் அப்பா என்னால் மனநிறைவோடும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும். உங்களையும், அம்மாவுவையும் போல் நானும் சந்தோஷமாக வாழ வேண்டாமா அப்பா? அதற்கு என்னை மணப்பவரை நான் நேசித்து அன்பு செலுத்தினால் தான் என்னால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று கயல் கூற, அவன் நம்முடைய மதமும் இல்லை அவர்கள் வழிமுறைகள் வேறு, நம்முடைய வழிமுறைகள் வேறு, உன்னால் அங்கு போய் எப்படியம்மா சந்தோஷமாய் இருக்க முடியும் என்று கமலநாதன் கேட்கவும், அப்பா, உண்மையான அன்பு மதங்களை எல்லாம் கடந்தது. நான் அவர் மேல் வைத்த அன்பும் அவர் என் மேல் வைத்த அன்பும் என்றுமே மாறாது என்று கூறவும் அதற்கு மேல் கமலநாதனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. தன்னுடைய செல்ல மகளை கடிந்து பேசவும் அவருக்கு மனம் வரவில்லை. சரிம்மா! நான் எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டேன். இதற்கு மேல் உன் விருப்பம். என்னால் முழு மனதுடன் இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இருந்தாலும் என் கடமையை செய்வேன். நாளைக்கே அந்த பிள்ளைக்கு போன் பண்ணு. நல்ல நாளாய் பார்த்து அவர்களை பெண் கேட்டு வரச் சொல் என்று கூறி அவர் சென்றதும், வாஸந்தி மகளிடம் வந்து கயல், நான் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவள் அல்ல. ஆனால் என்னுடைய கவலை எல்லாம் அந்த பையன் உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான். நீ சந்தோஷமாக இருந்தால் தான் நாங்களும் சந்தோஷமாக இருக்க முடியும் கயல், என்று கண்களில் நீர் பனிக்க கூறியதை கேட்ட கயல், அம்மா! என்று அவளை கட்டிப்பிடித்து உங்களின் ஆசிர்வாதம் இருந்தால் கண்டிப்பாக நான் நன்றாக இருப்பேன் அம்மா என்று அவளும் கண் கலங்க கூறினாள். அங்கு ஒரு பாசப் போராட்டமே நடந்துக் கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் வாஸந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சரி! கயல், நீ போய் அந்த பிள்ளைக்கு போன் பண்ணிவிட்டு வா. நான் நாளைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு உள்ளே சென்றாள். அப்பாடா! என்றிருந்தது கயலுக்கு. என்ன பூகம்பம் வெடிக்குமோ என்று பயந்து வீட்டிற்குள் வந்ததற்கு இப்போது கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. இப்போதே அவள் முன் கல்யாண கனவுகள் ஓடிக்கொண்டிருந்தது.



துர்காவிற்கு அன்று CA நுழைவு தேர்வு. அவள் நன்றாக படித்து தான் இருந்தாள். இருந்தாலும் மனதிற்குள் பயம் வந்து நடனமாடியது. அன்று அலுவலகத்திற்கும் விடுப்பு எடுத்திருந்தாள். காலை சீக்கிரமாகவே எழுந்து தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று விநாயகரை மனப்பூர்வமாக வணங்கினாள். கடவுளே! என்னை இந்த தேர்வில் ஜெயிக்க வைத்து விடு. இந்த வேண்டுதல் எனக்காக மட்டுமல்ல. என் சுஹிக்காகவும் தான். நான் வாழ்க்கையில் நல்ல நிலமையில் உயர வேண்டும் என்ற நோக்கத்தோடு என்னை இந்த தேர்வை எழுத தூண்டியுள்ளார். அந்த நல்ல எண்ணத்திற்காவது என்னை இந்த தேர்வில் தேர்ச்சி செய்து விடு என்று மனப்பூர்வமாக வேண்டினாள். பின் அங்கிருந்த படியில் சிறிது நேரம் மௌனமாக அமர்ந்து இருந்தாள். கோவிலில் இருந்து கிளம்பிய போது வழியில் சுஹேலுக்கு போன் பூத்தில் இருந்து போன் செய்தாள். அவளுக்கு தெரியும், பாத்திமா கண்டிப்பாக போனை எடுக்க மாட்டாள், இந்த நேரத்தில் அவள் சமைத்துக் கொண்டிருப்பாள். அனீஸ் அப்பா சம்சுதீனும் நடப்பதற்காக வெளியில் சென்றியிருப்பார். ஒன்று அனீஸ் போனை எடுக்க வேண்டும் அல்லது சுஹேல், இருவரில் யார் எடுத்தாலும் பேசலாம் என்று எண்ணி போன் செய்ய, போனை சுஹேலே எடுக்கவும், அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.சுஹேல், நான் இன்னைக்கு CA நுழைவு தேர்வுக்கு செல்ல போறேன். உங்ககிட்ட சொல்லலாம் என்று தான் போன் செய்தேன். உங்க வீட்டிற்கு வந்து உன்னிடம் பேச முடியாது. அது தான் டெலிபோன் பூத்தில் இருந்து பேசுகிறேன் என்று சொல்லவும் சுஹேல், வாழ்த்துக்கள் துர்கா! நல்லா எழுது! நானே உன்னை கொண்டு போய் தேர்வு எழுதும் மையத்தில் விட்டுறேன், நீ பேருந்து நிலையத்தில் எனக்காக காத்திரு! நான் வந்திறேன்! என்று கூறவும் துர்காவும் சரி என்று போனை வைத்தாள்.



வீட்டிற்கு வந்ததும் கோவில் பிரசாதத்தை பார்வதியிடம் கொடுத்து விட்டு, ஏதோ உண்டேன் என்ற பெயரில் அவசர அவசரமாக இரண்டு இட்லிகளை வாயில் திணித்து கொண்டு காலை உணவை முடித்தாள். பிறகு தேர்வுக்கு தேவையானதை பையில் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பினாள். வீட்டிற்குள் இருந்து ஓடி வந்த லாவண்யா அவளுக்கு ஆல் தி பெஸ்ட் அத்தை என்று சொல்ல, தேங்க் யூ குட்டி என்று செல்லமாக அவள் கன்னத்தை கிள்ளி விட்டு பேருந்து நிலையம் நோக்கி சென்றாள் சிறிது நேரத்தில் சுஹேல் வந்துவிட, துர்கா அவனின் பைக்கில் ஏறி அவனை தொடாமல் சற்று தள்ளி அமர்ந்துக் கொண்டாள். சுஹேலுக்கு கடுப்பாக வந்தது. ஏன் கொஞ்சம் ஒட்டி உட்க்கார்ந்தால் என்ன அம்மணி தேஞ்சி போய்டுவீங்களோ! தேஞ்சி போய்டமாட்டேன் ஆனால் உங்ககிட்ட வீழ்ந்து போயிடுவேன் என்று மனதில் எண்ணியவளாக, கல்யாணம் வரை இந்த தூரம் பின்பற்றினால் தான் எனக்கும் நல்லது, தங்களுக்கும் நல்லது என்று கூறி சிரிக்கவும், ஸுஹேல் இதுக்கு நீ பஸ்சிலேயே போய் இருக்கலாம் என்று கூறி வண்டியை எடுத்தான். அவள் இறங்கும் இடம் வந்ததும், சரி துர்கா, தேர்வு முடிந்ததும், எப்படி எழுதினே என்று எனக்கு போன் பண்ணு. உன்னை திரும்ப அழைச்சிட்டு போக என்னால் வர முடியாது, எனக்கு மருத்துவமனையில் முக்கியமான வேலை இருக்கு. அதனால் நீயே ஆட்டோவிலோ அல்லது பஸ்சிலோ வந்திரு. பை! என்று கூறி வண்டியை தன் மருத்துவமனைக்கு திருப்பினான்.துர்கா தேர்வு எழுதும் அறையை கண்டுபிடித்து அமர்ந்தாள். தன்னால் முடிந்தவரை அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி விட்டு விடை தாளை அங்கு இருக்கும் தேர்வு கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டு வெளியே வந்தாள். சுஹேலுக்கு போன் செய்ய வேண்டும் என்று எண்ணியவாறே சென்று கொண்டிருக்க, பின்புறமாக அவளை நோக்கி வேகமாக வரும் லாரியை அவள் கவனிக்கவில்லை. ஆனால் அதை சற்று தொலைவில் நின்றிருந்த பெண் கவனிக்க, சட்டென்று பாய்ந்து வந்து துர்காவை பிடித்து தன் முரமாக இழுக்க, எழுத வேகத்தில் இருவரும் சேர்ந்து நடை மேடையில் விழ, அதன் விளிம்பு பட்டு துர்காவிற்கு காலில் இரத்தம் கசிந்தது. அந்த பெண்ணிற்கோ காய் கால்கள்களில் சிராய்ப்புகள். நல்ல வேலை இருவருக்கும் தலையில் அடிபடவில்லை. துர்கா தன்னை காப்பாற்றிய பெண் யார் என்று பார்க்க, இந்த பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தாள். சட்டென்று அவள் மூலையில் மின்னல் பளிச்சிட, நீங்க கயல் தானே? நீங்க எப்படி இங்கே? என்று துர்கா கேட்கவும், கயலுக்கு அவள் துர்கா என்று நினைவுக்கு வர, நீங்க சுஹேலின் தோழி துர்கா தானே, கொஞ்ச நாள் முன்பு மருத்துவமனைக்கு வந்து விண்ணப்ப படிவம் வாங்கி செண்றீர்களே? என்று கேக்கவே, அவளும் ஆமாம்! என்று தலை அசைத்து விட்டு, அந்த தேர்வு எழுதி விட்டு வந்து கொண்டிருந்த போது தான் இப்படி..என்று அவள் வலியுடன் கூற, ரொம்ப நன்றி கயல், நீங்க வந்து என்னை காப்பதிலேனா நான் இன்னைக்கு.. என பயத்துடன் கண் கலங்கினாள். பரவாயில்லை, துர்கா நீங்க பயப்படாதீங்க, அந்த லாரிக்காரன் ஏன் அவ்வளவு வேகமாக உங்களை நோக்கி வந்தான்? உங்களை காப்பாத்திர அவசரத்தில் லாரியை சரியா பாக்கலே.நம்பர் பிலேடையும் கவனிக்கல, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுனு சொல்லுவாங்களே, அது போல் சின்ன அடியோடு போச்சு. வாங்க துர்கா, பக்கத்தில் ஏதாவது மருத்துவமனை இருந்தால் முதலுதவி செஞ்சிக்கலாம் என்று ஒரு மருத்துவராய் கயல் சொல்ல, துர்காவும் ,கயலும் அருகில் இருக்கும் சிகிச்சையகத்திற்கு சென்றார்கள்.



அங்கு துர்காவிற்கு காலில் இரத்தம் நிற்பதற்கு மருந்து போட்டு கட்டு கட்டி விட்டிருந்தனர். கயலுக்கு சின்ன சின்ன சிராய்ப்புகள் என்பதால் மருந்து தடவி இருவருக்கும் செப்டிக் ஆகாமல் இருக்க ஊசி போட்டனர், துர்கா, கயலிடம் என்ன வேலையா இங்கு வந்தீங்க? என்று கேட்க, எனக்கு மருத்துவம் சம்பந்தமான புத்தகம் வாங்க வேண்டி இருந்தது. அது இங்கே தான் கிடைக்கும் என்று என் தோழி ஒருத்தி சொன்னாள். அதற்காகத் தான் மருத்துவமனைக்கு கொஞ்சம் தாமதமாக வருவதாக சொல்லிவிட்டு புத்தகத்தை வாங்கி செல்லலாம் என்று வந்தேன். நான் வந்ததும் நல்லதாக போய் விட்டது என்று கூறி சிரித்தாள்.



துர்காவால் பதிலுக்கு சிரிக்க முடியவில்லை. ஏன்னென்றால் அவளால் இன்னும் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை. ரொம்ப நன்றி கயல். சமயத்தில் வந்து காப்பாத்துனீங்க, என மறுபடியும் நன்றி உரைத்தாள். எத்தனை தடவை தான் நன்றி சொல்லுவீங்க? சரி! உங்க நன்றியை எனக்கு ஒரு கப் காபி வாங்கி கொடுக்கிறது மூலமா தீர்த்துக்கிறிங்களா? என்று புன்னகையோடு கூறவும், வாங்க போகலாம் என்று இருவரும் அருகில் இருந்த சின்ன உணவு விடுதிக்குள் நுழைந்தனர். அப்போதுதான்துர்காவிற்கு, சுஹேலுக்கு போன் பண்ணவில்லை என்ற நினைவே வந்தது. வீட்டிலேயும் தேடுவார்கள் என்ற எண்ணம் தோன்ற, கயல் நாம கிளம்புவோமா? இங்கு அதிக நேரம் ஆனதாலே எங்க வீட்டிலேயும் தேடிட்டு இருப்பாங்க! பக்கத்தில் ஏதாவது போன் பூத் இருந்தால் நான் போய் வீட்டிற்கு தெரிவிக்கணும் என்று கூற, நானும் கிளம்பறேன் துர்கா! நான் என்னுடைய வண்டியில் தான் வந்தேன். வரும் போதே பார்த்தேன் இந்த உணவு விடுதிக்கு பக்கத்தில் ஒரு போன் பூத் இருக்கு. நீ போய் போன் பண்ணிவிட்டு வா! நான் வேண்டும்மென்றால் உனக்காக இங்கேயே காத்திருக்கிறேன், நான் உன்னை வீட்டில் விட்டுட்டு போறேன்என்று சொல்ல, உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நான் ஆட்டோவிலே போயிறேன்! உங்களுக்கு ஏற்கனவே என்னால் தாமதமாகி விட்டது. உங்க வீட்டிலேயும் தேடுவாங்க, அதனாலே நீங்களும் சீக்கிரமாக கிளம்புங்க! என துர்கா உரைத்தாள். சரி துர்கா, நீங்க பத்திரமாக வீட்டுக்கு போயிடுவீங்களா! என கயல் அக்கறையாக கேட்க, கவலைப்படாதீங்க ! பத்திரமாக போயிடுவேன் என்று அவர் கூறி சிரித்தாள். பிறகு இருவரும் வெளியில் வந்தனர். துர்கா போன் பூத் நோக்கி விரைய, கயல் தன் வண்டியை நோக்கி சென்றாள். மருத்துவமனைக்கு போன் பண்ணி வரவேற்பாளரிடம் சுஹேலிடம் பேச வேண்டும் என்று கூற, அவர் ஒரு ஆபரேஷனில் இருக்கிறார், ஒரு மணி நேரத்திற்கு பேச முடியாது என்று கூற, போனை வைத்துவிட்டு, அவளின் அண்ணனுக்கு போன் செய்தாள். அவன் அப்போதுதான் வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தான் போன் அடித்ததும் எடுக்க, அண்ணா, "நான் துர்கா பேசறேன்" வழியில் ஒரு சின்ன விபத்து, ஆபத்தெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா. நேரமாகிவிட்டது என்று தான் போன் பண்ணேன். நீங்க அப்பாவிற்கும் அண்ணிக்கும் சொல்லிடுங்க அண்ணா என்று கூறவே, வாசுதேவன் பயந்து விட்டார் போலும், என்னாச்சு துர்கா! எப்படி விபத்து நடந்தது? என நடுங்கிய குரலில் கேட்டார். நான் எல்லாத்தையும் வீட்டிற்கு வந்து சொல்றேன் அண்ணா. இப்போதான் கிளம்புறேன், எப்படியும் வர ஒரு மணி நேரம் ஆகும், அதனால் தான் போன் பண்ணினேன் என்று கூறவும், சரிம்மா! நிதானமாக வா! நான் வேண்ணா வந்து உன்னை அழைத்துச் செல்லவா? நீ அங்கேயே இருக்கியா? எனக் கேட்கவும், அதெல்லாம் வேணாம் அண்ணா, நான் ஆட்டோவில் வந்துருவேன் என்று கூறி போனை வைத்தாள்.
 
Last edited by a moderator:

revathy ramu

Member
Vannangal Writer
Messages
50
Reaction score
56
Points
18
அத்தியாயம் 26

ஒரு மணி நேரத்தில் வீட்டை அடைந்தவுடன் வீட்டின் வெளியிலேயே அவளுடைய தந்தை நின்றிருந்தார். அவளுடைய காலில் கட்டை பார்த்ததும், என்னம்மா ஆச்சு? பெரிய அடியா? என்று பரபரப்பாய் கேட்கவும், ஒண்ணுமில்லை அப்பா என்று கூறிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். அங்கு இவள் வரவை எதிர்பார்த்து அவளுடைய அண்ணனும் அண்ணியும் என்ன நடந்தது என்று கேட்க, அவள் அங்கு நடந்ததை முழுவதுமாக விவரித்தாள். கேட்டவர்கள் கண்களில் பயம் தெளிவாக தெரிந்தது. வாசுதேவன், நீ சாலையின் நடுவில் நடந்து போனியா? இல்லை அண்ணா, நடைமேடை ஓரமாகத்தான் நடந்து சென்றேன். அதனால் தான் கயல் என்னை வேகமாக பிடித்து இழுத்த போது நடைமேடையின் விளிம்பு பட்டு அடிப்பட்டது. லாரி ஓட்டுபவன் குடித்திருப்பான் என்று நினைக்கிறேன். சென்னையில் இப்போது ஒரே லாரி தொல்லைதான். போக்குவரத்து நெரிசல் ஆவது இவர்களால் தான் என்று லாரி ஓட்டுபவர்களை திட்ட தொடங்கினார். சரி விடுங்க! பத்திரமாக திரும்பி வந்துட்டா, அதுவே பெரிய விஷயம் என்று பார்வதி ஆறுதல் கூறினாள். நான் உனக்கு ஒரு நல்ல விஷயம் சொல்லலாம் என்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக கிளம்பினேன். அதற்குள் இந்த அசம்பாவிதம் நடந்திடுச்சி என்று வருத்தத்துடன் தமக்கையை பார்க்க, என்ன அண்ணா என்ன விஷயம் என்று ஆவலுடன் துர்கா கேட்டாள். உன்னை CA படிக்க வைக்க ஒரு நல்ல இன்ஸ்டிடியூடில் சேர்பதற்க்காக என் நண்பனிடம் விசாரித்தேன். அவன் மைலாப்பூரில் நல்ல இன்ஸ்டிடியூட் ஒன்று இருப்பதாக கூறினான். நீ CA நுழைவு தேர்வு தேர்ச்சி பெற்றவுடன் அதில் சேரலாம் என்றும் கூறினான். அவனும் அங்கு தான் படித்தானாம். CA தேர்வில் வெற்றி பெற அங்கு நல்ல பயிற்ச்சி அளிக்கிறார்களாம். இந்த விஷயத்தை சொல்லி உன்னை சந்தோஷப்படுத்தலாம் என்று அலுவலகத்தில் இருந்து சீக்கிரமாக கிளம்பினால் அதற்குள் உன் போன் வந்தது என்று சொல்லி முடிக்கவும், துர்காவிற்கு சந்தோஷமாக இருந்தது. ரொம்ப நன்றி அண்ணா என்று கூறி கொண்டு அவனை பார்த்து சிரித்தாள். இதுக்கெல்லாம் யாராவது நன்றி சொல்லுவார்களா? நீ நல்லா படித்து பெரிய தணிக்கையாளர் ஆன எனக்கு தானே பெருமை என்று அவன் அவளை உற்சாகப்படுத்தினான். அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் துர்கா தூங்க போனாள். அவளுக்கு தூக்கமே வரவில்லை, ஒரே சிந்தனையாக இருந்தது. எப்படியாவது அந்த இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து நன்றாக படிக்க வேண்டும். ஆனால் மைலாப்பூரில் இருந்து நாம் வேலை செய்யும் அலுவலகத்திற்கு வர தாமதம் ஆகும், என்ன சொல்லி சமாளிப்பது? மயிலாப்பூர் அருகிலேயே வேறு வேலை தான் தேட வேண்டும் அப்போதுதான் படிக்கவும் முடியும் வேலை செய்யவும் முடியும் என்று எண்ணியவளாக தூங்கி போனாள்.


சாம்சன் வீட்டில் அன்று ஒரே அமளி துமளியாக இருந்தது. அன்றைக்குத்தான் கயலை பொண்ணு கேட்டு அவள் வீட்டிற்கு செல்ல வேண்டும். அப்படியே நிச்சயமும் செய்திடலாம் என இரு வீட்டாரும் முடிவெடுக்க, ரெபேக்கா அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் துரிதமாய் செய்துக் கொண்டிருந்தாள். மாலை நான்கு மணி ஆனதும் சாம்சன் வேன் ஒன்றை வரவழைக்க, அதில் சாம்சன் அவனின் தங்கை, மற்றும் அவனின் பெற்றோர்கள், வேறு சில உறவினர்களும் ஏறி அமர்ந்தனர். நிச்சயத்துக்கு தேவையான பொருள்களும் ஏற்றி, கயலின் வீட்டை அடைந்தனர்.


கயலின் வீட்டில் கயலின் தம்பி ராகேஷ் இங்கும் அங்குமாக போய் கொண்டு அம்மா ஏவிய வேலைகளை எல்லாம் செய்துக் கொண்டிருந்தான். கயல் தன்னை எளிமையாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அவளின் முகம் முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தது. அவள் இவ்வளவு விரைவாக இந்த திருமணம் நிச்சயமாகும் என்று நினைக்கவில்லை. அவளின் தந்தையின் முகம் இறுக்கமாக இருப்பதைத் தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஓரே பெண்ணின் நிச்சயம் இன்னும் சில மணி நேரத்தில் நடை பெற போகிறது, இவர் ஏன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றாலும் பெண்ணுக்கு பிடித்திருக்கிறது என்பதற்காகவாவது கொஞ்சம் சிரித்த முகத்துடன் இருக்கலாம் என்று நினைக்கையிலேயே அவள் முகம் சுருங்கியது. வீட்டிலேயே நிச்சயம் செய்வதால் உறவினர்களை யாரும் அழைக்கவில்லை. திருமணத்திற்கு அழைத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார்கள். எனினும் வாஸந்தி மாப்பிள்ளை வீட்டிலிருந்து வருவோருக்கு சாப்பிட உணவுகளை தயாரித்துக் கொண்டிருந்தாள். எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் அமர்ந்திருந்தார் கமலநாதன்.

வண்டி சத்தம் கேட்டதும், ராகேஷ் ஓடி வந்து பார்த்து விட்டு உள்ளே சென்று அம்மா அவங்க எல்லோரும் வந்துட்டாங்க! என்று அறிவிக்க, சமையல் அறையில் இருந்து வெளியே வந்த வாஸந்தி வாங்க! வாங்க! என்று அழைத்தாள்,கமலநாதனும் வாங்க என்று அழைத்து விட்டு அமர வைத்தார். கமலநாதன், ஜேக்கப், சாம்சன் நாற்காலியில் அமர மற்ற அனைவரும் தரையில் விரிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்தனர். ஜேக்கப் முதலில் பேச ஆரம்பித்தார். உங்க பெண்ணை எங்க எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. என் பிள்ளையையும் உங்களுக்கு போக போக பிடிக்கும். என் பிள்ளை உங்ககிட்ட இருந்து எந்த சீரும் வேணாம் என்கிறான். கயல் எங்க வீட்டிற்கு வந்த பிறகு அவள் எங்கள் வீட்டு பெண்ணல்லவா! அதனால் உங்கள் பெண்ணை மட்டும் அனுப்பினால் போதும் என்று முடித்தார். இதற்கு கமலநாதன் ஒன்றும் கூறாமல் இருக்கவே, வாஸந்தி பேச தொடங்கினாள். அதெப்படிங்க நாங்க எங்க பெண்ணை அப்படியே உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பது? எங்களால் முடிந்ததை அவளுக்கு செய்து தான் அனுப்புவோம் என்று கூற, உங்கள் பெண்ணுக்கு என்ன செய்ய வேண்டுமா அதை நீங்கள் தாராளமாக அவளுக்கு செய்யுங்கள். ஆனால் எங்கள் பிள்ளைக்கு எதுவும் வேண்டாம் என்று அவன் தெளிவாக சொல்லிவிட்டான். இது உங்கள் மீது கோபம் என்பது இல்லை. அவனுக்கு உண்மையாகவே வரதட்சணை, சீர் எல்லாம் பிடிக்காது என்று கூறியதும் வாஸந்தி, அதெப்படி மாப்பிள்ளைக்கு ஒன்றும் செய்யாமல் இருப்பது?, ஏதோ எங்களால் முடிந்த சீர் செய்யாமல் இருந்தால் நல்லாயிருக்குமா? என்று கேட்க, சாம்சன் இடைமறித்து, அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் அத்தை! உங்கள் பெண்ணே எனக்கு நீங்கள் கொடுக்கும் பெரிய சீர் தயவு செய்து இதற்கு மேல் ஒன்றும் வேண்டாம் எனக் கூறவே வாஸந்திக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. பரவாயில்லை, பணத்திற்காக இந்த பிள்ளை நம் பெண்ணை காதலிக்கவில்லை, எனவே கயலை நன்றாக வைத்துக் கொள்வான் என்ற எண்ணம் தோன்றியது.


பின்னர் ஜேக்கப் பேச தொடங்கினார், முதலில் நீங்கள் உங்கள் முறைப்படி திருமணம் செய்யுங்கள். கயல் எங்கள் வீட்டிற்கு வந்த பிறகு நாங்கள் ஒரு சின்ன விருந்து வைத்து எங்கள் முறைப்படி திருமணம் செய்கிறோம். இதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபணை உண்டா? எனக் கேட்கவும், வாஸந்தி இல்லை என்று தலையாட்டினாள். பின் ஜேக்கப் நீங்கள் தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள், தங்கள் கணவர் எதுவுமே பேசவில்லையே என்று சட்டென்று கேட்டுவிட்டார். அதை கேட்டதும் கமலநாதர், நீங்கள் சொன்ன அனைத்துக்கும் சம்மதம் என்ற சுருக்கமாக முடித்துக் கொண்டார்.


சிறிது நேரத்தில் கயலை அவள் அம்மா அழைத்து வர, கயல் அங்கு வந்து அனைவரையும் நமஸ்கரித்தாள். அவளை பார்க்க தேவலோகத்து பெண்ணே அங்கு இறங்கி வந்தது போல் இருந்தது. சிவப்பு வண்ண மெலிதாக கரையிட்ட பட்டு புடவையும் அதற்கு தோதான அணிகலன்களும் அவளை தேவதை போல் காட்டியது. சாம்சனுக்கு பிரிட்ஜ்ஜில் வைத்த ஆப்பிள் போல் இருக்கிறாளே, இவளை அப்படியே கட்டி அணைத்தால் என்ன என்று மனதிற்குள் எழுந்த ஆசையை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான். பின் வாஸந்தி ஏற்பாடு பண்ண ஐயர் நித்சயதார்த்த பத்திரிகையை படித்தார், திருமண நாள் அடுத்த மாதத்தில் ஒரு முகூர்த்த நாளை சொல்ல, இருவரும் தட்டை மாற்றிக் கொண்டனர். பின் கேசரி, பஜ்ஜி, சொஜ்ஜி பரிமாறப்பட்டது. ஒரு வழியாக சாப்பிட்டு விட்டு கிளம்பினர்.

கமலநாதன் அவர்கள் கிளம்பி செல்லும் வரை எதுவும் பேசாமல் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இறுகிய பாறை போல் அமர்ந்திருந்தார். அவருக்கு தன் ஒரே பெண்ணுக்கு எப்படி எல்லாம் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற கனவு தவிடு பொடியாகிவிட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனதிலே மருகிக் கொண்டிருந்தார்.


அப்பாவின் முகத்தை பார்க்க முடியாத கயல் அவரிடத்தில் வந்தார். என்னப்பா? இந்த கல்யாணம் உங்களுக்கு கொஞ்சம் கூட புடிக்கலயா? நீங்க இப்படி இருப்பது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு அப்பா, சாம்சன் ரொம்ப நல்லவர் அப்பா. கண்டிப்பாக அவர் வாழ்க்கையில் பெரிய நிலையை அடைவார் அப்பா. உங்களுக்கு இன்னும் என்மேல் கோபம் இருந்தால் சொல்லுங்க, நான் இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுகிறேன். எனக்கு நீங்கள் , அம்மா போதும் அப்பா. காலம் முழுதுவதும் உங்களுடனேயே இருந்து விடுகிறேன் என்று அவள் கண்ணீர் மல்க கூறியதை கேட்ட கமலநாதனுக்கு மனது கனத்தது, அவளிடத்தில் வந்து அவளை அரவணைத்து, அப்படி எல்லாம் சொல்லக்கூடாது குட்டி. நீ திருமணமாகி குழந்தைகளை பெற்று வாழ் வாங்கு வாழ வேண்டும்.அதை நங்கள் பார்த்து பூரிப்படையவேண்டும். நான் நினைத்த மாதிரி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியவில்லை என்ற ஆதங்கம் தான். வேறொன்றும் இல்லையம்மா, புதுப்பெண் அழலாமா? கண்ணை துடைத்துக் கொள் என்று அவள் முதுகை தட்டிக் கொடுக்க, கயல் தந்தையின் அரவணைப்பில் அக மகிழ்ந்தாள்.


சுஹேல் மறுநாள் துர்காவின் அலுவலகத்திற்கு போன் செய்தார். துர்கா போனை எடுத்தவுடன், என்ன துர்கா நேற்று தேர்வு எழுதிவிட்டு எனக்கு எப்படி எழுதினாய் என்று போன் செய்து சொல்ல சொன்னேனே? ஏன் போன் பண்ணவில்லை? சுஹேல், நான் உங்களுக்கு மாலை ஆறு மணிக்கு போன் செய்தேன், நீங்கள் ஆபரேஷன் தியேட்டரில் இருப்பதாக உங்கள் வரவேற்பாளர் சொன்னார். அதன் பிறகு எனக்கு வீட்டிற்கு செல்ல நேரமாகிவிட்டதால் திரும்ப உங்களுக்கு போன் பண்ண முடியவில்லை. உன்னுடைய தேர்வு நான்கு மணிக்கே முடிந்து இருக்குமே, ஆறு மணிவரை அங்கு என்ன செய்தாய் என சுஹேல் வினவ, நீங்கள் கயலை பார்க்கவில்லையா, அவள் உங்களிடத்தில் ஒன்னும் சொல்லலை? என துர்கா கேட்கவும், அவள் இன்னைக்கு மருத்துவமனைக்கு விடுப்பு எடுத்திருக்கிறாள்.அவளுக்கு இன்றைக்கு திருமணம் நிச்சயம் பண்ண போவதாக சொல்லிருந்தாள். ஆமாம், கயலை ஏன் கேட்கிறாய்? அவளுக்கும் நான் கேட்டதற்கும் என்ன சம்பந்தம்? நேற்று ஒரு லாரி என்னை மோத வந்த போது கயல்தான் என்னை காப்பாற்றினாள். இதை கேட்டதும் சுஹேல் உடனே அதிர்ந்து என்ன துர்கா? சாலையில் கவனம் தேவை இல்லையா? ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று நடந்தால் என்ன செய்வது? என கடிந்துக் கொள்ள, நான் நடைமேடை ஓரமாக தான் நடந்து சென்றேன். அவன் ஏன் ஓரமாக நடந்து சென்ற என்னை இடிக்க பார்த்தான் என்று தெரியவில்லை. லாரிக்காரனை பார்த்தாயா? அல்லது நம்பர் பிளேடையாவது கவனித்தாயா? என சுஹேல் வினவ, இல்லை சுஹேல், கயல் என்னை அவள் புறமாக இழுத்ததால் என்னால் எதுவும் பார்க்க முடியவில்லை. கயலும் என்னை காபாற்றும் அவசரத்தில் எதையுமே கவனிக்கவில்லை என்று கூறியவுடன், நல்ல வேளை அல்லா கிருபையால் தப்பித்தாய். இனிமேலாவது சாலையில் செல்லும்போது கவனமாக செல் துர்கா, இந்த லிட்டில் கேர்ள் இல்லையென்றால் இந்த சுஹேல் பாய் இல்லை என கூறியதை கேட்ட துர்கா புன்னகை புரிந்தாள் என் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் இவன், திருமணம் முடிந்த பின்பு இவன் மனம் கோணாமல் நடந்துக்க கொள்ள வேண்டும். அது ஒன்று தான் இவன் நம் மேல் வைத்த அன்புக்கு நாம் காட்டும் நன்றி என்று மனதில் நினைத்தவளாக, சரி சுஹேல்! கயலுக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் என கூற. அதெல்லாம் இருக்கட்டும், நீ எப்படி தேர்வு எழுதினாய் என்று சொல்லவேயில்லையே?முடிந்தளவுக்கு நன்றாக எழுதினேன். கண்டிப்பாக பாஸ் பண்ணிவிடுவேன் என சந்தோஷமாக கூற, வெரி குட் . இப்படியே எல்ல தேர்வையும் தன்னம்பிக்கையோடு எழுதினால் கண்டிப்பாக சீக்கிரமாக படிப்பை முடித்து விடலாம் என கூற துர்காவும் ஆமோதித்தாள். துர்கா போனை வைத்தவுடன் சுஹேலின் மனம் துர்கா சொன்னதையே அசைபோட்டது, சாலை ஓரம் போய்க்கொண்டிருந்த பெண்ணை ஏன் இடிக்க வந்தான்? இது தற்செயலாக நடந்ததா? அல்லது வேண்டுமென்றே இடிக்க வந்தானா? என பலவாறு சிந்தவாறே தன் வேலையை தொடர்ந்தான்.
 
Last edited by a moderator:

revathy ramu

Member
Vannangal Writer
Messages
50
Reaction score
56
Points
18
அத்தியாயம் 27



ரங்கனுக்கு ஒரே கடுப்பாக இருந்தது. இவனை அந்த பொண்ணு மேல லாரியை ஏத்திட்டு கொல்ல சொன்னா இப்படி வந்து நிக்கிறான் இந்த சுறா, என்று வருத்தப்பட்டான். ஏன்டா சுறா, நான் அந்த பொண்ணை கொல்ல சொன்னா தப்பிடிச்சி, யாரோ அந்த பெண்ணை காப்பாத்திட்டாங்க என்று கதை சொல்றே? நான் அந்த பெரிய மனுஷனுக்கு என்னடா பதில் சொல்லறது? கவலைப்படாதே அண்ணாத்தே! இன்னொரு தபா சான்ஸ் கொடு. அடிச்சி உடம்பு கூட அடையாளம் தெரியாதவாறு பண்ணிறேன். ஆமாண்டா! இன்னொரு தடவை அந்த பொண்ணே உன் முன்னாடி வந்து என்னை கொலை பண்ணிக்கோன்னு சொல்லும், போடா விவஸ்தை கெட்டவனே! இந்த மாதிரி எல்லாம் இன்னொரு தடவை பண்ணினா மாட்டிக்குவோம்! அப்புறம் நீயும் நானும் கம்பி தான் எண்ணனும். வேற தான் யோசிக்கணும் என அவன் வேறு எப்படி பண்ணலாம் என யோசிக்க தொடங்கினான்.அப்போது அவன் வீட்டில் தொலைபேசி அடித்தது. ஆம்! தன் தொழிலுக்காக அவன் தொலைபேசி வைத்திருந்தான். அப்போதுதானே தன்னிடம் வருபவரை அவன் தொடர்பு கொள்ள முடியும்.போனை எடுத்ததும் உமர் அலி தான் பேசினார். என்ன ரங்கா நான் சொன்ன வேலையை முடிச்சிட்டியா? என்று கேட்கவும், இல்ல ஐயா. இந்த தடவை மிஸ் ஆயிடுச்சி, அடுத்த தடவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுறேன், நீங்க ஒன்னும் கவலை படாதீங்க ஐயா, சீக்கிரமாக வேலையை முடிப்பா, இது என் பெண்ணோட வாழ்க்கை பிரச்சனை, சரியா! எனக் கேட்கவும், கண்டிப்பாக சீக்கிரம் பண்ணிறேன் ஐயா என்று கூறி போனை வைத்தான்.



சுஹேலுக்கு மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. துர்காவிற்கு எப்படி இந்த விபத்து நடந்திருக்கும்? பேசாமல் போலீசில் சொல்லலாமா! அவர்கள் என்ன வென்று ஆராய்வார்கள். ஆனால் இதில் துர்காவிற்கு எந்த வித பிரச்சனையும் வந்து விடக் கூடாது. அப்போதுதான் அவனுக்கு தன்னுடன் பள்ளியில் படித்த ரவியின் ஞாபகம் வந்தது. அவன் இப்போது மாற்றலாகி சென்னையில் தானே டி.ஸ்.பி யாக வேலை செய்கிறான். அவனிடத்தில் சொல்லி விசாரிக்க சொன்னால் என்ன என்ற சிந்தனை தோன்ற, ரவியின் எண்ணை ஆராய்ந்து அவனுக்கு போன் செய்தான். போன் பண்ணியதும் மறுமுனையில் ஹலோ யார் பேசறது? என்று குரல் வர, டி.ஸ்.பி. ரவி இருக்காறா நான் அவருடைய பள்ளி தோழன் சுஹேல் , அவரிடத்தில் கொஞ்சம் பேசணும் என்று கூற, அவர் ஒரு கேஸ் விஷயமாக வெளியே போயிருக்கிறார், அவர் வந்ததும் உங்களுக்கு போன் பண்ண சொல்றேன் என்று கூறி போனை வைத்தார். சுஹேலுக்கு ஏமாற்றமாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் போன் செய்யலாம் என்று நினைத்து தன் வேலையில் மூழ்கலானான். மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து போன் செய்ய, நல்லவேளை!ன் ரவியே போனை எடுத்தான். என்னடா சுஹேல் எப்படி இருக்கே? இப்பதான் என் நினைவு வந்ததா? என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லடா, உன்னை போல நானும் பிஸி தான் என்று புன்னகை செய்ய, என்னடா விஷயம் ? ரவி எனக்கு ஒரு உதவி செய்யணும், செய்ய முடியுமா என்று கேட்க, என்ன சுஹேல் இப்படி கேட்கறே! நாம பள்ளியில் எவ்வளவு நெருக்கமாக பழகினோம். செய்டா! சொன்னா செஞ்சிட்டு போறேன் என்று கூற, நாம நேர்ல பேசலாம் ரவி, போனில் விளக்கமாக சொல்ல முடியாது. நாளை என் மருத்துவமனையில் அருகில் இருக்கும் உணவு விடுதிக்கு வந்திடு, அங்கு பேசலாம் என்று கூறவும், சரிடா! நான் நாளை நான்கு மணிக்கு நீ சொன்ன இடத்திற்கு வந்திறேன், நாம பேசுவோம் என்று கூறி போனை வைத்தான். சுஹேலுக்கு இப்போதுதான் சற்று நிம்மதியாக இருந்தது

மறுநாள் சுஹேல் ரவியை உணவு விடுதியில் சந்தித்து பேசினான், சுஹேல் நடந்ததையெல்லாம் விளக்கமாக கூறினான். ரவி அந்த ஏரியா என் கட்டுப்பாட்டில் இல்லை சுஹேல். இருந்தாலும் உனக்காக விசாரிக்கிறேன், என் நண்பன் தான் அந்த ஏரியாவில் இன்ஸ்பெக்டரா இருக்கான். இன்னும் இரண்டு நாள்லே அந்த லாரி யாருடையது? யார் இடிக்க வந்தா? என்ற விவரங்களோடு உன்னை தொடர்ப்பு கொள்கிறேன் என்று கூறவும், ரொம்ப நன்றி ரவி. இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று சுஹேல் உரைக்கவும், ஆமாம், அந்த பெண்ணுக்காக இவ்வளவு மெனக்கெடற, அந்த பொண்ணு உனக்கு ரொம்ப தெரிஞ்ச பொண்ணோ! என்று புன்னகை புரிய, ஆமாம் ரவி. நான் திருமணம் பண்ண போற பொண்ணு என்று இயம்ப, அது தான் அவ்வளவு அக்கறையா என்று கிண்டலடித்து சிரிக்க, சுஹேலும் சிறு புன்னகை புரிந்தான்.



இருவரும் தாங்கள் ஆர்டர் செய்த உணவு வகைகளை சாப்பிட்டனர். பின் சுஹேல் ரவியிடம், எனக்கு எப்படியும் அடுத்த மாதம் படிக்க வெளிநாடு செல்ல வேண்டி இருக்கும் நீ தாம்பா என் துர்காவை பாத்துக்கணும் அவளுக்கு தெரியாம அவளை கண்காணிக்கணும். இதை நான் தப்பான நோக்கத்தோடு சொல்லலை. எனக்கு என்னமோ அவளுக்கு பெரிய ஆபத்து வரும் என்று என் உள் மனது சொல்லிகிட்டே இருக்கு. சரி சுஹேல் கொஞ்சம் பொறுமையாய் இரு. எப்படியும் இரண்டு நாள்லே விஷயம் தெரிஞ்சிடும், அதுக்கப்புறம் அடுத்த நடவடிக்கையை எடுப்போம் என்று கூறவே சுஹேல் அமைதியானான்.



மறுநாள் கயல் மருத்துவமனைக்கு வந்த போது அங்கிருந்த அனைவரும் அவளுக்கு திருமணம் முடிவானதை குறித்து அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அனைவரின் வாழ்த்துக்களையும் ஏத்துக் கொண்ட கயல் நேரே சுஹேல் இருக்கும் அறையை நோக்கி விரைந்தாள். அவள் உள்ளே நுழைந்ததும் சுஹேல் "என்னம்மா புதுப்பெண்ணே எப்படி இருக்கிறாய்? திருமணம் நிச்சயம் நல்லபடியாக நடந்ததா? என்று விசாரித்தான். நல்லா நடந்தது சுஹேல், அப்பாவுக்கு தான் சிறிய மன வருத்தம். மற்றபடி எல்லாம் சுமுகமாக நடந்தது என்று புன்னகைத்தவாறே கூறினாள். பின், சுஹேல், நீ துர்காவிடம் பேசினாயா? அவள் அன்று நடந்தை உன்னிடம் சொன்னாளா? என்று கேட்க, சொன்னாள் கயல், அதைப்பறித்தான் உன்னிடமும் பேச வேண்டும் என்றிருந்தேன். என்ன பேச வேண்டும் சுஹேல்? கயல், நீ லாரி ஓட்டுநரை பார்த்தாயா? அவன் எப்படி இருந்தான்? அவசரத்தில் நான் அவனை கவனிக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவன் சாலையின் நடுவில் செல்லாமல் துர்காவையே குறி வைத்து வருபவன் போல் நடைமேடை ஓரமாக வந்தான். துர்கா பயப்படுவாள் என்று இதை நான் துர்காவிடம் கூட சொல்லவில்லை. அவளுக்கு யாராவது விரோதிகள் உண்டா சுஹேல்? எனக்கு தெரிந்து துர்கா மிகவும் அமைதியான பெண்.யாரிடமும் அதிகம் பேச மாட்டாள். அதுவும் ஆண் மகன் என்றால் பக்கத்தில் கூட செல்ல மாட்டாள் அவ்வளவு பயந்த சுபாவம். அவளுக்கு யார் விரோதி இருப்பார்கள் என்று ஒரே யோசனையாய் இருக்கிறது. என்னுடைய நண்பன் ஒருவன் போலீசில் இருக்கிறான். அவனிடத்தில் உதவி கேட்டிருக்கிறேன். அவன் இன்னும் இரண்டு நாளில் என்ன ஏது என்று விசாரித்து சொல்லுவதாக கூறியிருக்கிறான்.என்று சுஹேல் சொன்னதும், கயல், நல்ல முயற்சிதான் எடுத்திருக்கிறாய் சுஹேல். கண்டிப்பாக அந்த ஓட்டுநர் யார் என்று போலீசாரால் எளிதில்கண்டு பிடிக்க முடியும் என்று அவனிடம் கூற, நானும் ஏதாவது தகவல் கிடைக்குமா என்று தான் எதிர்பார்கிறேன் என்று கூறி முடித்தான்.



அன்று ஞாயிற்றுக்கிழமை. சுஹேலுக்கு அன்று விடுப்பு தான். அவன் வழக்கம் போல் காலையிலேயே எழுந்து தொழுகைக்கு சென்று விட்டு குளித்து சாப்பிட்டு முடித்தான். அன்றைய நாளிதழை புரட்டிக் கொண்டிருந்த போது கதவு தட்டப்பட, சுஹேல் போய் கதவை திறந்தான். அங்கு கயல் நின்று இருந்தாள். அவளை வரவேற்று அமரச் செய்த சுஹேல் அவளை அங்கு உள்ள அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான். கயல் தன்னுடைய திருமண பத்திரிகையை சுஹேலிடம் கொடுத்து, " நீங்கள் கண்டிப்பாக என்னுடைய திருமணத்திற்கு வரவேண்டும் என்று கூற, "சுஹேல் சாரி கயல்", அனேகமாக உன் திருமணத்தன்று நான் வெளிநாட்டில் இருப்பேன். என்னால் வர முடியாது. எனக்கு பதிலாக எனது குடும்பத்தில் உள்ளவர்கள் வருவார்கள் என கூற, சரி சுஹேல், நீ எப்போது மறுபடியும் இங்கே வருகிறாயோ அப்போது எங்களை சந்திக்க எங்கள் வீட்டுக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று கூற, கண்டிப்பாக உன்னையும் உன் வருங்கால கணவரையும் சந்திக்க வருவேன் என கூற, துர்காவிடம் என்னை அழைத்து செல்ல முடியுமா? அவளுக்கும் திருமண பத்திரிகை வைக்கவேண்டும் என்று கூற, அனீஸ், வாருங்கள்! நான் அழைத்து செல்கிறேன் என்று இருவரும் துர்காவின் வீட்டை நோக்கி வந்தனர்.கதவை தட்டியதும் பார்வதி வந்து கதவை திறந்தாள். அனீஸ், அவளிடம் ஆண்ட்டி, இவங்க கயல். மருத்துவராக இருக்கிறார், துர்காவை பார்க்கவேண்டும் என்று வந்திருக்காங்க என்று கூற, பார்வதி உடனே வாங்க! வாங்க! நீங்க தான் கயலா? நீங்கள் தான் எங்கள் துர்காவை பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றியவரா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவளை திணறடித்தாள். அதற்குள் துர்காவும் வர இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் கயல், துர்கா நீயாவது கண்டிப்பாக என் திருமணத்திற்கு வரவேண்டும் என்று அழைக்க, நான் வராமல் இருப்பேனா! கண்டிப்பாக வருவேன் என துர்கா கூறவும் அதற்குள் பார்வதி அவள் பருகுவதற்கு காபி கொண்டு வர கயல் அதை அருந்திவிட்டு அனைவரிடமும் விடை பெற்று சென்றாள்.



துர்காவிற்கு அந்த கல்யாண பத்திரிகையை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யப்பட்டாள். அதில் மாப்பிள்ளை பெயர் சாம்சன் என்று இருக்கவே, ஓ! இவர்களும் கலப்பு திருமணம் தான் செய்து கொள்கிறார்களா? அப்படியென்றால் இவர்கள் திருமணமும் காதல் திருமணம் தான் போலும். நம்மிடத்தில் கயல் சொல்லவே இல்லையே! சரியான கள்ளி தான் ! என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.

 
Last edited by a moderator:

revathy ramu

Member
Vannangal Writer
Messages
50
Reaction score
56
Points
18

இரண்டு நாள் கழித்து ரவி சுஹேலுக்கு போன் செய்தான். ரவியின் நண்பன் லாரி ஓட்டுனரை கண்டுபிடித்து விட்டதாகவும், அந்த இடம் டிராபிக் சிக்னல் உள்ள இடம் என்பதால் அங்கு புகைப்பட கருவி வைத்துள்ளதாகவும், அதை வைத்து கண்டுபிடித்து விட்டதாக கூறினான். அவனை விசாரித்ததில் லாரி ரங்கா என்பவருக்கு சொந்தம் என்றும், ஆனால் அன்று ஒட்டியது அவன் அல்ல என்றும் தெரிந்தது. அதை ஓட்டியவன் பெயர் சுறா சேகர் என்று தெரியவே அவனையும் விசாரித்ததில் அவன் அன்று குடித்து விட்டு வண்டி ஓட்டியதாக தெரிவித்தான். மேலும் விசாரித்ததில் அவர்கள் இருவரும் பழைய குற்றவாளிகள் என கண்டு பிடித்து உள்ளார்கள். இரண்டு பேரின் மீதும் F.I.R. போடப்பட்டுள்ளன. அவர்களை நன்கு கவனித்தும் இருக்கிறார்கள். இனிமேல் இது மாதிரி நடக்காது என்று எழுதிக் கொடுத்து இருக்கிறான் என்று விவரமாக கூறினான். அந்த ரங்கா ஏன் குடித்து விட்டு வருபவனிடம் லாரியை கொடுத்தானாம்? என்று சுஹேல் வினவ, அவன் லாரியை அந்த சுறா சேகரிடம் கொடுக்கும்போது அவன் குடிக்கவில்லையாம், பிறகு தான் ஏதோ இடத்தில நிறுத்தி குடித்தானாம் என்று கூறுகிறான். அவர்கள் பேசுவதை பார்த்தால் இது தற்செயலாக தான் நடந்ததாக தெரிகிறது என்று ரவி கூறியும் கூட சுஹேலுக்கு உள்மனதில் உருத்திக்கொண்டே இருந்தது. கயல் ஏன் அந்த ஓட்டுநர் துர்காவைதான் குறி வைத்து வருவது போல் இருந்தது என்று கூறினாள்? கயல் புத்திசாலி பெண். அவள் பொய் சொல்லும் பெண்ணும் அல்ல. சுஹேலுக்கு ஒரே குழப்பமாகவே இருந்தது. ரவி, துர்காவிற்கு தெரியாமல் அவளை கண்காணிக்க நம்பிக்கையான ஒரு காவலாளியை போடு. இந்த உதவியை தயவு செய்து எனக்காக செய் என கேட்க, கவலைப்படாதே சுஹேல்! நான் கண்டிப்பாக செய்கிறேன். நீ கவலை இல்லாமல் போய் வா என்று கூறி சென்று விட்டான். நாட்கள் உருண்டோடிவிட்டன. ஸுஹேல் வெளிநாடு செல்லும் நாளும் வந்தது. அன்றைக்கு துர்காவின் முகமே சரியில்லை. இவனை பிரிந்து எப்படி இருக்க போகிறோம்? என்று ஒரே கவலையாக இருந்தது. மனதில் எதோ ஒன்று அழுத்துவது போல் இருந்தது. சுஹேல் டெல்லிக்கு சென்று அங்கிருந்து வெளிநாடு செல்வதாக திட்டம் போட்டிருந்தான். அவனை வழி அனுப்ப அவனது பெற்றோர்கள் டெல்லி விமான நிலையத்திற்கு வருவதாக சொல்லி இருந்தார்கள். துர்கா தன் கண்ணீரை மறைக்க பெரு முயற்ச்சி செய்து கொண்டிருந்தாள். அவளது தந்தையோ தமயனோ, ஏன் அழுகிறாய்? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது. அதனால் முயன்று தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு வலம் வந்தாள். . சுஹேலுக்கு கிளம்புவதற்கு முன் துர்காவை தனியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுஹேல், துர்காவிடம் நான் இந்தியா வருவதற்குள் நீ உன் படிப்பை முடிக்க வேண்டும் துர்கா, நானும் என் படிப்பை முடித்து என்னை நிலைநிறுத்திக் கொள்வேன். எனக்கும் உன்னை விட்டு செல்ல மனம் இல்லை தான். இருந்தாலும் என்ன செய்வது? இந்த பிரிவு நாம் பிற்காலத்தில் சந்தோஷமாக இருப்பதற்கு தான் துர்கா என சுஹேல் சொல்ல சொல்ல துர்காவின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல் வழிந்தோடியது. என்ன இது? குழந்தைத்தனமாக இருக்கிறது. நீ இப்படி அழுதுக் கொண்டே இருந்தால் என்னால் எப்படி செல்ல முடியும். நான் வேண்டும் என்றால் என்னுடைய வெளிநாடு பயணத்தை ரத்து செய்து விடவா? எனக் கூற ,வேண்டாம்! வேண்டாம் ! நான் அழவில்லை என்று அவசரமாக கூறினாள். அப்படியென்றால் மை ஸ்வீட் லிட்டில் டார்லிங் கொஞ்சம் சிரிக்கணும் என்று கூற துர்கா தன் அழுகையை மறைத்து லேசாக புன்முறுவல் செய்தாள். சரி! மாதத்திற்கு ஒரு முறை எனக்கு ISD கால் பண்ணு, அப்புறம் உடம்பை நன்றாக பார்த்து கொள், முக்கியமாக வெளியில் செல்லும்போது அக்கம் பக்கம் பார்த்து நட. நீங்களும் உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூற," சின்ன மேடம் சொன்னா கேக்காமல் இருப்பேனா?" என்று அவன் கிண்டல் அடிக்க, துர்கா அவளையும் மீறி சிரிக்கவும், இப்படிதான் எப்பவும் சிரித்துக் கொண்டே இருக்கனும் என்று கூறி பிரியா விடை கொடுத்தான் ஒரு மாதம் சென்றதே தெரியவில்லை கயலுக்கு. இந்த ஒரு மாதத்தில் சாம்சனிடம் அதிகம் பேச முடியவில்லை. இரண்டு அல்லது மூன்று தடவை தான் பேச முடிந்தது. அப்போது கூட அவன் அதிகம் பேசவில்லை. கயல் தான் பேசிக் கொண்டே இருந்தாள். திருமணத்திற்கு தேவையானதை வாங்கவும் அதற்காக அலைவதுமே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. திருமண மண்டபம் பார்ப்பது, சாப்பாடு , மண்டப அலங்காரம், மேல தாளங்கள் என நிறைய வேலைகள் இருக்கவே குடும்ப உறுப்பினர் அனைவரும் கல்யாண வேலைகளை பகிர்ந்துக் கொண்டனர். சாம்சனுக்கும் அவனுடைய நிர்வாக வேலை மற்றும் கல்யாண வேலைகள் இருக்க , இருவருக்குமே பேச வாய்ப்பு இல்லாமல் போனது. ஆயிற்று! திருமண நாளும் வந்து விட்டது. கயல் வீட்டில் அனைவரும் திருமண நாளுக்கு முன்தினம் மாலையே வந்துவிட்டனர். மாப்பிள்ளை வீட்டிற்கும் போன் செய்து அவர்களையும் வருமாறு கூறினர். கமலநாதன் மண்டபத்தின் அலங்காரத்தை கவனிக்க போய் விட்டார். வாஸந்தி கல்யாண சாப்பாட்டுக்கான மெனு எல்லாம் சரி பார்க்க சென்று விட்டாள். ராகேஷ் கல்யாணத்திற்காக வருவோருக்கு போக்குவரத்து வசதி மற்றும் அவர்கள் தங்க அறைகள் எல்லாம் ஒழுங்காக உள்ளனவா என்று பார்க்க சென்று விட்டான். கயல் மறுநாளைக்கு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அப்போது சாம்சனும் அவனது குடும்ப உறுப்பினர்களும் மண்டபத்தினுள் நுழைந்தார்கள். சாம்சனின் அன்னை ரெபேக்கா நேராக மணப்பெண் அறைக்கு சென்று கயலை பார்த்தாள். என்ன கயல் தனியாக இருக்கிறாய்? அம்மா எங்கே? என்று கேட்க, வாங்க அத்தை! அம்மா இப்போதுதான் சமையல் செய்யும் இடத்திற்கு சென்றுள்ளார்கள். உட்காருங்கள் அத்தை! மாமா, பியூலா, சாம்சன் எல்லோரும் வந்துவிட்டார்களா? நான் போய் உங்களுக்கு எல்லாம் குடிக்க ஏதாவது கொண்டு வருகிறேன் என்று செல்ல முயல, நீ உட்கார் கயல். நாங்கள் வரும்போதே சாப்பிட்டு விட்டு தான் வந்தோம். உன்னை பார்த்தால் தான் சோர்வாக உள்ளது. நீ எதாவது சாப்பிட்டாயா கயல்? இரு. உனக்கு ஏதாவது குடிக்க நான் போய் கொண்டு வருகிறேன் என்று ரெபேக்கா சமையலறை நோக்கி விரைந்தாள். அங்கு வாஸந்தியை தேட, அவள் உட்புறமாக தலைமை சமையல்காரரிடம் பேசிக் கொண்டிருந்தாள். ரெபேக்கா சுற்றும் முற்றும் பார்க்க அங்கு ஒருவரையும் காணவில்லை, ஒரு பெரிய பாத்திரத்தில் பால் கொதித்துக் கொண்டிருந்தது. ரெபேக்கா பாலையாவது கயலுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் ஒரு கோப்பையில் பாலை எடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு சமையல்காரரின் உதவியாளர் வர, அவனுக்கு ரெபேக்கா யார் என்று தெரியாததால், யார் நீங்கள்? இங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு இங்கே வர யார் அனுமதி தந்தது என்று பலவாறு கேள்விகள் கேட்க, ரெபேக்காவிற்கு அவன் கேள்வி மேல் கேள்வி கேட்கவும், அவளால் பதில் சொல்ல முடியாமல் விழிக்க, அந்த உதவியாளர் அவளை தவறாக புரிந்துக் கொண்டு கண்டபடி பேச, அந்த நேரம் பார்த்து அங்கு சாம்சன் வந்துவிட, என்னம்மா? என்ன ஆயிற்று? என்று கேட்கவும், ரெபேக்காவுக்கு வேறு வழி இல்லாமல் நடந்தை சொல்லும்படி ஆயிற்று. சாம்சனுக்கு எங்கிருந்து அந்த கோபம் வந்ததென்று தெரியவில்லை.அவன் சடாலென்று அந்த உதவியாளனை கன்னத்தில் அறைந்து விட்டான். சத்தம் கேட்டு உள்ளே இருந்து வாஸந்தியும் தலைமை சமையல்காரனும் ஓடி வர,வாஸந்தி சாம்சனிடம் என்னப்பா? என்ன ஆச்சு? என கலவரத்துடன் வினவ, சாம்சன் நடந்ததை கூறினான். தலைமை சமையல்காரனுக்கோ நடந்ததை கேட்டது கோபம் தலைக்கு ஏறியது. என் உதவியாளனை நீ எப்படி அடிக்கலாம் என சாம்சனிடம் சண்டைக்கு போக, வாஸந்தி இடையில் புகுந்து சமாதானம் செய்தாள். அப்போதும் அந்த சமையல்காரன் சமாதானம் ஆகாமல், எனக்கு இந்த மாதிரி அவமானம் எந்த கல்யாணத்திலும் நடந்ததில்லை. வாஸந்தி அம்மா, நான் செல்கிறேன், நீங்கள் வேறு யாராவது வைத்து சமையல் செய்துக் கொள்ளுங்கள். வாங்கிய முன் பணமும் திருப்பி தந்துவிடுகிறேன் என்று முறுக்கிக் கொண்டு போக, வாஸந்திக்கும் ரெபேக்காவுக்கும் தர்ம சங்கடமாகிவிட்டது. ரெபேக்கா அவனிடம் சென்று, என் பிள்ளை செய்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், மன்னித்து விடுங்கள். நாளைக்கு திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படி நீங்கள் விட்டு விட்டு போனால் நாங்கள் என்ன செய்வது? இவ்வளவு குறுகிய நேரத்தில் வேறு நபரை எப்படி தேடுவது? என அவனிடத்தில் மன்றாடி அவனை சமாதானம் செய்தாள்.
 

revathy ramu

Member
Vannangal Writer
Messages
50
Reaction score
56
Points
18
அத்தியாயம் 29


இதை பார்த்துக் கொண்டிருந்த சாம்சனுக்கு இன்னும் கோபம் அதிகமாக, அவனின் விழிகள் சிவந்தது. அவசரமாக ரெபேக்கா அவனை இழுத்துக் கொண்டு மணமகன் அறையை நோக்கி சென்றாள். வாஸந்திக்கோ என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்துக் கொண்டு நின்றிருந்தாள். ரெபேக்கா சாம்சனிடம் என்ன தம்பி இது? இவ்வளவு கோபம் உனக்கு எங்கிருந்து வந்தது? கல்யாணம் னா நல்லது கெட்டது இரண்டும் தான் இருக்கும். நாம் தான் இடத்திற்கு ஏற்றார் போல் நடந்துக் கொள்ளவேண்டும். நீ ஏம்பா அந்த பையனை அடித்தாய்? என்று கேட்க, என்னம்மா அந்த பையன் உன்னை கண்டபடி பேசியதை பார்த்து என்னால் எப்படி சும்மா இருக்க முடியும்? என்று கேட்க, அதற்காக கையை நீட்டலாமா? நீ இனிமேல் தாலி கட்டும் வரை இந்த இடத்தை விட்டு வெளியே வர கூடாது என்று அவனிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தாள். அதற்குள் இந்த விஷயம் கமலநாதனுக்கு தெரிய வர, நான் ஏற்பாடு செய்த சமையல்காரரை இவர் எப்படி அடிக்கலாம்? அதற்குத்தான் தராதரம் அறிந்து சம்மந்தம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். நமக்கு இணையாக சம்மந்தம் செய்து இருந்தால் இது நடந்திருக்குமா? என்று வார்த்தையை விட, அது அங்கிருந்த ஜேக்கப் காதில் விழுந்து விட்டது. அவருக்கும் கோபம் வர, இருந்தும் தன் பிள்ளை திருமணம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்பதற்க்காக அதனை அடக்கிக் கொண்டு, கமலநாதனை நோக்கி, சம்பந்தி நாங்கள் உங்கள் அந்தஸ்துக்கு இல்லை என்றாலும் நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் இல்லை. எங்கள் பிள்ளையும் நன்றாக தொழில் செய்கிறான். நன்றாகவும் சம்பாதிக்கிறான். படிப்பிலும் பொறியியல் துறையில் பட்டம் வாங்கி உள்ளான். பிற்காலத்தில் அவனுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. எனவே இப்படியெல்லாம் பேசாதீர்கள்! என்று கூறி சென்று விட்டார். வாஸந்திக்கு பயத்தில் கண்ணீரே வந்துவிட்டது. என்ன இது சோதனை? கல்யாணம் ஆவதற்கு முன்பே இத்தனை பிரச்சனைகள். இன்னும் என்ன என்ன வருமோ? என்று கலங்கியவாறே "இறைவா நீ தான் என் பெண்ணை காப்பாற்றவேண்டும். அவள் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டார்.


மறுநாள் கயல் அமர்ந்திருக்க, அவளுக்கு நலங்கு வைக்கப்பட்டது. கயலுக்கு மனதில் பயம் இருந்துக் கொண்டே இருந்தது. நேற்று நடந்ததெல்லாம் வாஸந்தி மகளிடம் சொல்ல, அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருவரிடத்திலும் தவறு இருந்தபடியால் யார் பக்கம் பேசுவதென்றே தெரியவில்லை. சாம்சனும் அடித்திருக்க கூடாது, தன் தந்தையும் அதற்கு அப்படி பேசியிருக்கக்கூடாது. என்று எண்ணியவளாக சந்தோசம் மலர வேண்டிய முகத்தில் வருத்தமும் பயமும் குடிகொண்டிருந்தது.


பின் சாம்சனுக்கு நலங்கு வைக்கப்பட்டது. அவனின் முகமே அவன் கோவத்தில் உள்ளான் என காட்டியது. அவனின் அம்மாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவன் எதுவும் பேசாமல் திருமண சடங்குகளில் ஈடுபட்டு மௌனமாக இருந்தான். முகூர்த்த நேரம் வந்ததும் மங்கள வாத்தியங்கள் முழங்க, சாம்சன் கயலின் சங்கு கழுத்தில் தாலி கட்டினான். அனைவரின் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடந்து முடிந்தது. அக்னியை வலம் வந்து இருவரும் அவரவர் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். சாம்சன் முகத்தில் மருந்துக்கு கூட சிரிப்போ சந்தோஷமோ இல்லை. அவன் நேற்று நடந்தவைகளையே மனதில் போட்டு உழன்று கொண்டிருந்தான். திருமணம் முடிந்ததும் அனைவரும் மணமேடை ஏறி மணமக்களுக்கு பரிசுகள் வழங்கி, புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



துர்கா, அனீஸ் மற்றும் பார்வதி மூவரும் திருமணத்திற்கு வந்திருந்தனர். துர்கா மற்றும் அனீஸ் மேடை ஏறி பரிசு தந்து கயலை வாழ்த்த, கயல் அவர்களுக்கு நன்றி கூறினாள். பின் துர்காவின் காதில் பிறருக்கு கேட்காவண்ணம் மெலிதான குரலில், எப்போது உங்களுக்கும் சுஹேலுக்கும் திருமணம் என்று கேட்க, துர்கா வெட்கத்தில் தலை குனிந்தாள்.


திருமணம் முடிந்து அனைவரும் சாப்பிட சென்றதும், மாப்பிள்ளையையும் மணப்பெண்ணையும் சாப்பிட அழைக்க, சாம்சன் கயலிடம் "கயல் வா! நாம் வீட்டிற்கு செல்லலாம், அங்கே போய் சாப்பிடலாம் என கூற, வாஸந்தி முன்னே வந்து, " மாப்பிள்ளை கல்யாணம் உங்களுக்கு என் பெண்ணுக்கும் தான். நீங்களே சாப்பிடவில்லை என்றால் ஏற்பாடு செய்த எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்காதா? உங்களுக்கு எங்கள் மீது கோபம் இருந்தால் தயவு செய்து அதை இன்றைக்கு காட்ட வேண்டாம், உங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன், சாப்பிட வாருங்கள் என கண் கலங்கி நிற்க, சாம்சனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. சரி வருகிறேன். என்று கயலுடன் சென்று பேருக்கு சாப்பிட்டேன் என்று இரண்டு கவளம் சாப்பாடை வாயில் போட்டு மென்று விழுங்கி எழுந்து விட்டான்.கயலோ நேற்று நடந்த களேபரத்தில் இரவு சரியாக சாப்பிடவில்லை, காலையிலும் சாப்பிடவில்லை, ஆதலால் அவளுக்கு நல்ல பசி. இருந்தும் சாம்சன் பேருக்கு சாப்பிட்டேன் என்று எழுந்து விட, அவளும் எழுந்து விட்டாள். இதை பார்த்த வாஸந்திக்கு மனம் பதைபதைத்தது. இந்த குழந்தைகளுக்கு தானே இவ்வளவு ஏற்பாடுகள் செய்தது, இவர்களே ஒழுங்காக சாப்பிடவில்லையே என்று உள்ளுக்குள் கலங்கினாள்.


சாப்பிட்டு முடித்தது சாம்சன், கயல் கிளம்பு, நாம் நம் வீட்டிற்கு போகலாம் என அழைக்க, வாஸந்தி இருங்க மாப்பிள்ளை, முதலில் எங்கள் வீட்டிற்கு வந்து பால் பழம் சாப்பிட்ட பின்பு தான் உங்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூற, அத்தை, இவ்வளவு நேரம் நீங்கள் சொல்வதையெல்லாம் நான் கேட்டு அதன் படியே செய்தது உங்களுக்குகாக மட்டும் தான், தயவு செய்து இனிமேலும் எங்களை தடுக்காதீர்கள், நாங்கள் வருகிறோம்! என்று கூறி கயலையும் அவன் வீட்டாரையும் அழைத்துக் கொண்டு எதுவும் சொல்லாமல் சென்று விட்டான்.


உமர் அலி ரங்காவிற்கு போன் பண்ணினார். மறுமுனையில் ரிங் போய்க் கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை. என்னவாயிற்று இவனுக்கு ? நான் போன் பண்ணினா உடனே எடுத்துடுவானே, இப்போது ஏன் எடுக்கவில்லை? என்று எண்ணிக் கொண்டு மறுபடியும் போன் செய்தார்.

மறுபடியும் ரிங் போய்க்கொண்டே இருக்க சரி வைத்து விட்டலாம் என்று நினைக்கும்போது "யாருங்கய்யா போன்ல? என்று ஒரு புது நபரின் குரல் கேட்டது. ரங்கா இல்லையா? என்று உமர் கேட்க, ஐயா அவருக்கு உடம்பு சரியில்லை. இப்ப அவரால யாரிடத்திலும் பேச முடியாதுங்க. நீ யாரு? என்று உமர் கேட்க, நான் அவரை பார்த்துக்க வந்த ஆளுங்க என்று பதில் சொன்னான். சரி! நீ அவரிடத்தில் சென்று உமர் பேசுவதாக சொல்லு என கூற, சரிங்க! கொஞ்ச நேரம் லைன்ல இருங்க என்று கூறிவிட்டு செல்ல, சிறிது நேரம் கழித்து, ஹலோ நான் ரங்கா தான் பேசுகிறேன் ஐயா என்று சன்னமாக குரல் கேட்கவே, என்ன ரங்கா என்ன ஆச்சு? அதையேன் கேட்கறீங்க ! நீங்க அந்த பொண்ணை தீர்த்து கட்ட சொன்னீங்களே! அதனாலே நான் நம்ம சுறா கிட்ட என் லாரியை கொடுத்து அந்த பொண்ணு மேல ஏத்தி கொல்ல சொன்னேன். அவனும் லாரியை எடுத்துண்டு போய் அந்த பொண்ணு மேல ஏத்த போகும்போது நடுவுலே வேற ஒரு பொண்ணு புகுந்து காரியத்தையே கெடுத்துட்ச்சி. ஐயா நீங்க கொல்ல சொல்லற பொண்ணு பெரிய இடத்து புள்ளையா? சுறா இடிச்சதை எப்படியோ போலீஸ் கண்டுபிடிச்சிட்டாங்க. லாரியும் எந்துதானு தெரிஞ்சிடுச்சி. என்னையும் சுறாவையும் பிடிச்சி பின்னி பெடல் எடுத்துட்டாங்க! இதிலே டி .ஸ்.பி யே தனிப்பட்ட முறையிலே விசாரிச்சதனாலே எங்களை செம்மையா கவனிச்சிட்டாங்க ஐயா. எல்லாமே உள் காயம், நடக்க கூட முடியல ஐயா. நானும் எத்தனையோ தப்பு செய்து சிறைக்கு எல்லாம் போயிருக்கேன், ஆனா இந்த மாதிரி அடி வாங்கினது இல்லை ஐயா. என் எலும்பை எண்ணிட்டாங்க. ஆனா உங்க பேரை மட்டும் நாங்க சொல்லல ஐயா. சுறா குடிச்சிட்டு வண்டி ஓட்டினதா சொல்லிட்டேன். இரண்டு பெரும் கடைசி வரைக்கும் அதையே தான் சொன்னோம். இனிமே இதுமாதிரி செய்ய மாட்டோம் என்று எழுதி வாங்கிட்டாங்க என்று சொல்லி மூச்சு வாங்கினான்.



இதைக் கேட்ட உமருக்கே பரிதாபமாக இருந்தது. சரி! சரி! நான் என் ஆளு மூலமா உனக்கு பணம் கொடுத்து அனுப்புறேன். அதை உன் மருத்துவ செலவுக்கு வைச்சுக்கோ. இந்த வேலையை கொஞ்சம் தள்ளி போடு. எங்க போய்டும் அந்த பொண்ணு என்று கூறவே, ஆமாங்க ஐயா, கொஞ்ச நாள் பொறுத்து தான் செய்யணும், சரிங்க! நான் போனை வச்சுடுறேன் என்று சொல்லி போனை வைத்தான். உமருக்கு பற்றிக் கொண்டு வந்தது. துர்கா உனக்கு ஆயுசு கெட்டி தான். ஆனாலும் உன்னை நான் சும்மா விட மாட்டேன் என்று தனக்குள் பொருமிக் கொண்டார்.


கயல் மற்றும் சாம்சன் குடும்பத்தினர் வீட்டிற்குள் நுழைந்தனர். ரெபேக்கா கயலை அழைத்து ஹாலில் பக்கத்தில் தொங்கப்பட்டிருக்கும் மேரியின் படத்தருகே அழைத்து போனாள். படத்தின் கீழே பொருட்கள் வைப்பதற்கான மரப்பலகை இருந்தது. அதில் மெழுகுவர்த்தி திரி சட்டம் ஒன்று இருந்தது, ரெபேக்கா அவள் கையில் மெழுகுவர்த்தி ஒன்றை கொடுத்து மேரி மாதாவை வணங்கி அத்தனை ஏற்றி அந்த சட்டத்தின் மேல் வைக்க சொன்னாள். கயலும் அவ்வாறே செய்தாள்.


ரெபேக்கா அவளிடம் உங்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லம்மா. நீங்கள் மாரியம்மனுக்கு விளக்கு ஏற்றுகிறீர்கள், நாங்கள் மேரி அன்னைக்கு மெழுகுவர்த்தி ஏற்றுகிறோம். சில சடங்குகள் தான் மாறுமே தவிர மனதால் அனைவரும் ஒன்றுதான் கயல். அனைத்து மதத்திலும் அன்பு தான் பிரதானமாக கூறப்பட்டுள்ளது என்று அவள் சொல்லி முடிக்கவும், அத்தை, நான் ஜாதி மதம் எல்லாம் பார்ப்பதில்லை. அப்படி பார்த்திருந்தால் உங்கள் மகன் தான் வேண்டும் என்று என் தந்தையிடம் வாதிட்டு இருக்க மாட்டேன். மண்டபத்தில் நடந்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அத்தை. என் தந்தை பேசினது தவறு தான். என் பெற்றோரின் நோக்கம் நான் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது தான் மற்றபடி வேறொன்றும் இல்லை, அவர் கோபத்தில் தான் என்ன பேசுவதென்று தெரியாமல் பேசிவிட்டார். மனதால் அவர் அப்படி இல்லை அத்தை. இருந்தால் இந்த திருமணதிற்கு சம்மதித்து இருப்பாரா? என்று கூறவும், ரெபேக்கா நடந்தது நடந்து விட்டது, நான் அதனை அப்போதே மறந்து விட்டேன் கயல். நீ என் மருமகள் மட்டுமல்ல; என் பிள்ளைக்கு உயிர் கொடுத்த எங்கள் வீட்டு தெய்வம், அப்படி தான் கயல் உன்னை நான் பார்க்கிறேன். என் உயிருக்கும் மேலாக உன்னை பார்த்துக் கொள்வேன். உன் சந்தோஷத்திற்கு இங்கு எந்த குறையும் வராது. ரெபேக்கா கூறியதை கேட்டு காலையில் இருந்து பயத்தில் இருந்த அவள் முகம் சற்று தெளிவாகி புன்னகை புரிந்தாள்.


ரெபேக்கா மகனிடம் திரும்பி, தம்பி இதையே நினைத்து கயல் மனதை காயப்படுத்ததே, இன்றிலிருந்து நீங்கள் புது வாழ்க்கை துவங்க போகிறீர்கள். அதை இருவரும் சந்தோஷமாக ஆரம்பியுங்கள் என்று அறிவுரை கூறினாள். பின் நீங்கள் இரண்டும் பேரும் சரியாக சாப்பிடவில்லை. நான் போய் இருவருக்கும் பால் கொண்டு வருகிறேன். குடித்து விட்டு சற்று நேரம் ஓய்வெடுங்கள். நான் அரை மணி நேரத்தில் சமைத்து விடுகிறேன் என்று கூறி சமையலறை நோக்கி சென்றாள்.


ரெபேக்கா சென்றவுடன் சாம்சன் தன் அறையில் நுழைந்து காலையில் அணிந்திருந்த வேட்டி சட்டையை கழற்றிவிட்டு பனியனும் லுங்கியுமாக மாறினான். பின் அவளிடத்தில் வந்து, "என்ன அப்படியே உட்க்கார்ந்து இருக்கிறாய்! போய் முகம் அலம்பிக் கொண்டு வேறு உடையை மாற்று என்று கூறியதும் கயல் எழுந்து அவனுடைய அறைக்கு சென்றாள். அறை சிறியதாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது. அந்த அந்த பொருள் அந்த அந்த இடத்தில் பாந்தமாய் அமர்ந்திருந்தது. சிறிய கட்டில் என்றாலும் இரண்டு தலையணைகள் புது பெட்ஷீட் என்று பார்க்க தூய்மையாக இருந்தது. அவள் நேரே குளியல் அறைக்கு சென்று முகம் அலம்பிக் கொண்டு வந்தாள். மாற்று துணி இல்லாததால் அவள் கல்யாண பட்டு புடைவையிலேயே இருந்தாள். வெளியே வந்து இருக்கையில் அமர போனவளை சாம்சன் பார்த்து, "என்ன வேறு உடை மாற்றவில்லையா" என கேட்க, நீங்கள் என்னை மண்டபத்தில் இருந்து கிளம்பு என்று அப்படியே அழைத்து வந்து விட்டீர்கள். பிறகு என்னுடைய பொருட்கள் எல்லாம் எப்படி என்னிடத்தில் இருக்கும்? எப்படியும் அம்மா வந்து இரவு கொடுத்து விட்டு போவார்கள் என கூறியதும், அதுவரை இந்த புடவையிலேயே இருப்பாயா? அம்மாவிடம் போய் கேள். அவர்கள் மாற்று உடை தருவார்கள் என கூற, சரி என்று கயல் சமையலறை நோக்கி சென்றாள்.
 
Last edited by a moderator:

revathy ramu

Member
Vannangal Writer
Messages
50
Reaction score
56
Points
18
அத்தியாயம் 30



ரெபேக்கா இவர்களுக்கு பால் எடுத்துக் கொண்டு வர, அத்தை உங்களிடத்தில் புடவை இருந்தால் தாருங்கள். காலையில் இருந்தே இதே புடைவையில் இருக்கிறேன் எனக் தயங்கியவாறு கூற, என்னம்மா நீ? இதற்கு ஏன் தயங்குகிறாய்? உனக்காக நான் இரண்டு மூன்று புடவை வாங்கி வைத்திருக்கிறேன். இரு கொண்டு வருகிறேன் என்று கூறி உள்ளே சென்று மூன்று புடவைகளை எடுத்து வந்தாள். இப்போதைக்கு ஒன்று போதும் அத்தைஎன்று கூறி ஒரு காட்டன் சாரியை எடுத்துக் கொண்டு போய் அணிந்து வந்தாள். கடல் நீல நிறத்தில் ரோஜா நிற சின்ன சின்ன பூக்கள் ஆங்காங்கு சிறியதாக இருக்க, அந்த புடவை கயலுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. ரெபேக்கா அவளை பார்த்து, இந்த புடைவையில் நீ ரொம்ப அழகா இருக்கேம்மா என்று கன்னத்தை தொட்டு திருஷ்டி கழித்தாள். சாம்சன் அவளையே தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதை பார்த்த கயலுக்கு புடவை அழகா இருக்கா இல்லையானு எதாவது சொல்றான பாரு, கடுவன் பூனை மாதிரி மூஞ்ச தூக்கி வச்சிட்டு முறைச்சு பாக்கிறத பாரு, சாம்ஸ் உன்னை அப்புறமாக கவனிச்சிக்கிறேன், என்று மனதில் சொல்லிக் கொண்டு அவனை பார்த்து செயற்கையாக சிரித்து வைத்தாள்.



சிறிது நேரத்தில் ரெபேக்கா சமைத்து விட, அனைவரும் கீழே அமர்ந்து உணவு உண்டனர். உணவு நன்றாக இருக்கவே, கயலுக்கு மிகுந்த பசியாதலால் ஒரு பிடி பிடித்தாள். எல்லாவற்றையும் சுத்தம் செய்து விட்டு ரெபேக்கா ஓய்வெடுக்க மற்றொரு அறைக்கு போக, கயலும் சாம்சனின் அறைக்குச் சென்றாள். அவள் பின்னாடியே சாம்சனும் வந்தான்.



ஒரு மாதம் சென்றுவிட்டது. துர்காவிற்கு சுஹேலுக்கு போன் பண்ண வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கோவிலுக்கு சென்று வரும் வழியில் உள்ள டெலிபோன் பூத்தில் தான் போன் செய்யவேண்டும் என்று நினைத்தவளாக, பார்வதியிடம் அண்ணி, நான் கோவிலுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றாள். அவள் சென்ற நேரம் கோவிலில் கூட்டம் அதிகம் இல்லை. விநாயகரை முதலில் வணங்கிய பின் அங்கிருக்கும் அம்மனை வணங்கிவிட்டு பிரகாரம் சுற்றிவிட்டு கொஞ்ச நேரம் அமர்ந்து செல்லலாம் என்று விநாயகர் பக்கத்தில் இருக்கும் மண்டபத்தில் அமர்ந்தாள். அங்கு இருக்கும் சூழ்நிலை அவள் மனதில் அமைதியை கொடுத்தது. அப்படியே கண்மூடி அந்த அமைதியை இரசித்துக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று அவள் காதில் "நீ விரும்புபவன் உன்னை விட அதிகமாக உன்னை விரும்புவான்" என்ற குரல் கேட்டு சட்டென்று கண் திறக்க , அங்கு ஒரு இருபது வயது மதிக்க தக்க ஒருவன் ஆடை கிழிந்த நிலையில், தலையில் முடி தாறுமாறாக களைந்து இருக்க, அவளை பார்த்து சிரித்தான் . அவனை பார்த்து பயந்தவளாக சற்றே பின்னே போனாள் துர்கா. அவன் அவளை பார்த்து சிரித்து எனக்கு பசிக்குது, ஏதாவது இருந்தா கொடேன் என்று கேட்கவும், அவளுக்கு சிறிது நேரம் பயத்தில் ஒன்றுமே விளங்கவில்லை.



பின் சுதாரித்தவளாக தன் கையில் இருக்கும் அர்ச்சனை பையில் இருக்கும் பழத்தை அவனுக்கு கொடுக்க அவன் முகத்தில் சிரிப்புடன் ஐய்யா! வாழைப்பழம் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான், துர்காவிற்கு ஒரு நிமிடம் மூச்சு நின்று திரும்பி வந்தது போல் இருந்தது. துர்கா அவன் போவதையே பார்த்துக் கொண்டிருக்க, அங்கு வந்த கோவில் ஐயர், என்னம்மா அந்த பையனை பார்த்து ரொம்ப பயந்திட்டியா! அவன் எதுவும் செய்யமாட்டன்ம்மா, யார்கிட்டயும் பேசவும் மாட்டான். சாப்பாடு கொடுத்தா சாப்பிடுவான். அப்புறம் சத்தம் எதுவும் பண்ணாம போயிடுவான். இங்கே தான் ரொம்ப வருஷமா சுத்திக்கிட்டு இருக்கான். பாவம் யார் பெற்ற பிள்ளையோ! ஆனா அவன் பேசி நான் பார்த்ததில்லை, இன்னைக்கு தான் உன் கிட்ட பேசியிருக்கான் என்று சொல்லிவிட்டு போனான்.



துர்கா இன்னும் பயத்தில் நடுங்கி கொண்டிருக்க, ஐயர் சொன்னது பாதி தான் காதில் விழுந்தது. சிறிது நேரத்தில் தன்னை சமன் படுத்திக்கொண்டு கோவிலுக்கு வெளியே வந்தாள். பின் சுஹேலுக்கு போன் பண்ண வேண்டும் என்ற ஞாபகம் வர போன் பூத்தை நோக்கி சென்றாள்.அவள் போன் பண்ணியதுமே சுஹேல் எடுக்க, ஹலோ மை லிட்டில் டார்லிங், எப்படி இருக்கே என்று கேட்க, நான்தான் போன் பன்னேறேன்னு எப்படி கண்டுபிடிசீங்க? என்று துர்கா கேட்க, என் உள் மனசு சொல்லிச்சு நீ தான் போன் பண்ணி இருப்பேன்னு, நான் நல்லா இருக்கேன் என்று சொல்ல, என்ன உன் குரல் என்னமோ போல் இருக்கு, உடம்பு சரியில்லையா என்று கேட்க, இல்ல சுஹேல், உடம்புக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லி கோவிலில் நடந்தவற்றை விளக்கினாள். அதைக் கேட்டதும் சுஹேல் சிரித்து, இதுக்கு போய் யாராவது இவ்வளவு நேரம் இப்படி பயப்படுவாங்களா? அவன் என்ன நல்லது தானே சொன்னான். பாரு! அவனுக்கு கூட தெரியுது, நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என்று அவன் சொல்லிக் கொண்டே போகவும், போதும் சார்! உங்க அன்பை பத்தி எங்களுக்கு தெரியாதா? அவன் தீடீரென்று காதில் வந்து சொல்லவும் நான் பயந்து விட்டேன் என்று கூற, சரி அதை விடு! உங்கள் வீட்டில் பார்வதி ஆண்ட்டி, குழந்தைகள் மற்றும் அங்கிள் எப்படி இருக்கிறார்கள் என கேட்க. எல்லோரும் நலமே, உங்கள் படிப்பு எப்படி இருக்கிறது? அங்கு உள்ள உணவு உங்களுக்கு பிடிக்கிறதா? பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் பசிக்கு ஏதாவது சாப்பிட்டு தானே ஆகவேண்டும். சரி துர்கா. ரொம்ப நேரம் பேசினால் உனக்கு தான் டெலிபோன் பில் அதிகமாகும். அப்புறம் பேசலாம் என்று கூறி போனை வைத்துவிட்டான். துர்கா வீட்டிற்கு சென்றதும் கோவிலில் நடந்ததை பார்வதியிடம் சொன்னாள், அனைத்தையும் சொன்னவள், அந்த பையன் காதில் வந்து என்ன சொன்னான் என்பதை மட்டும் மறைத்து விட்டாள். அதைக் கேட்டு கொண்டிருந்த பார்வதி "உனக்கு மட்டும் ஏண்டி நீ பயந்து நடுங்கும்படி எல்லாம் நடக்குது? என்று கூறி போய் சாப்பிடு என்று அவளை சாப்பிட அனுப்பினாள்.



கயல் அறைக்குள் நுழைந்ததும் கட்டிலில் மேல் சோர்வாக அமர, அவள் பக்கத்தில் சாம்சன் அமர்ந்தான். அவன் பக்கத்தில் அமர்ந்ததும் கயல் சற்று தள்ளி அமர்ந்து முகத்தை திருப்பி கொண்டாள். சாம்சன் வேண்டுமென்றே அவளை இடித்து கொண்டு அமர, அவள் அவனை பார்த்து முறைத்தாள். என்ன டாக்டரம்மா உங்களுக்கு இன்னும் என் மேல் இருக்கும் கோவம் போகலையா? என்று கூற, அவள் மண்டபத்தில் இருந்து சரியாக கூட சாப்பிடாமல், எங்கள் வீடிற்கு கூட செல்லாமல் அப்படியே அழைத்து வந்து விட்டால் கோபப் படாமல் கொஞ்சவா செய்வார்கள்! என் அப்பா, அம்மா மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? நன்றாக இருக்கிறதே! உன் அப்பா பேசியதற்கு கோப படாமல் அங்கேயே இருந்து விருந்து உண்ணவா முடியும். இதுவே நாங்கள் பணக்காரார்கள் என்றால் இப்படி பேசுவார்களா! என வருத்ததுடன் சாம்சன் கூற, கயலின் மனம் பதைபதைத்தது.



என்ன சாம்சன் இது? இப்படி பேசுகிறீர்கள்? என்னுடைய பெற்றோர் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு எல்லாம் பார்ப்பவர் இல்லை. அப்பா சொன்னது தவறு தான். அவர் ஏதோ ஆதங்கத்தில் பேசிவிட்டார், அவருக்காக மறுபடியும் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அதை மறந்து விடுங்கள். என அவள் கெஞ்சலாக கூற சாம்சன் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் மௌனமாக இருந்தான்.



அப்போது கயல் இங்கே வா, உங்கள் வீட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் என ரெபேக்காவின் குரல் கேட்க, கயல் அறையில் இருந்து வெளியே வந்தாள். அங்கே அவளின் அன்னையும் ராகேஷும் நின்றிருந்தார்கள். வாங்கம்மா, வா! ராகேஷ் என்று அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தாள். ரெபெக்காவும் அவர்களை அமரச் சொல்லி சமையல் அறைக்குச் சென்றாள். சாம்சன் வெளியே வந்து வாங்க! என்று மட்டும் கூறி மீண்டும் தன் அறைக்கே சென்றுவிட்டான். வாஸந்தி கயலிடம், "கயல் மாப்பிள்ளை இன்னும் கோபமாகத்தான் இருக்காரா? என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. வருத்தமாக இருக்கார். அப்பா அப்படி பேசி இருக்க கூடாது அம்மா என்று இறுகிய முகத்துடன் கூற, என்னம்மா பண்றது? அப்பாவுக்கு உன் மேல் பாசம் அதிகம் என்று உனக்கே தெரியும். அவர் இதற்கு முன்னே இப்படி கோபமாக பேசியது உண்டா ? அவர் உள் மனதில் உன்னை பற்றி வருத்தம், ஆதங்கம் தான் அப்படி பேசி விட்டார். நான் வேண்டுமென்றால் மாப்பிள்ளை இடத்தில் மன்னிப்பு கேட்கவா! என்று கூறிக்கொண்டே இருக்கையில் இருந்து எழ, அங்கே ரெபேக்கா கையில் காபி தட்டுடன் வந்தாள். அதெல்லாம் ஒன்னும் வேணாங்க. நீங்க வயசில் பெரியவங்க, நீங்க போய் அவன்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம். முதலில் இந்த காபியை குடிங்க! என்று காபியை வாஸந்திக்கும் ராகேஷிக்கும் கொடுத்தாள்.





வாஸந்தி அவளிடம் இன்னைக்கு அவர்களுக்கு சாந்தி முகூர்த்தம் இல்லையா, அதனால் எங்கள் பக்கத்தில் இருந்து சில சடங்குகள் செய்ய வேண்டியிருக்கு. உங்களுக்கு இதில் ஏதாவது ஆட்சேபனை இருக்கா என்று கூற, என்ன சம்பந்தி! இதுவும் உங்கள் வீடு போலத்தான். நீங்கள் பிள்ளைகள் நன்றாக வாழவேண்டும் என்று தானே செய்கிறீர்கள். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறவும், வாஸந்தி தன பைகளில் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தாள். கயலிடம் துணிக் கவரை நீட்டி, இதில் உனக்கும் மாப்பிள்ளைக்கும் புது உடை வச்சிருக்கிறேன், இதை இரண்டு பெரும் உடுத்திக் கொண்டு வாங்க என்று கூறி கவரை கொடுக்க, கயல் அதை எடுத்துக் கொண்டு அவர்களின் அறைக்கு சென்று அந்த புது ட்ரெஸ்ஸை தாமும் அணிந்து கொண்டு சாம்சனையும் உடுத்த சொன்னாள். சாம்சன் முதலில் மறுத்தாலும் கயல் அவனிடத்தில் கெஞ்சும் பார்வையால் பார்க்க அவனும் வேறு வழியின்றி உடுத்திக் கொண்டான்.



இரண்டு பேரும் வெளியில் வந்தவுடன் வாஸந்தி தான் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் ரெபேக்காவின் உதவியுடன் சாம்சனின் அறையில் எடுத்து வைத்தாள். பின் தான் எடுத்து வந்த பூக்கள் மாலைகளை எல்லாம் வைத்து அந்த அறையை அலங்கரித்து விட்டு வெளியே வந்தார்கள். பின்னர் கயலும் சாம்சனும் ரெபேக்கா, ஜாக்கோபின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். பின்னர் வாஸந்தியின் காலிலும் விழ அவர் இன்னைக்கு தொடங்கப்போற உங்கள் வாழ்க்கை என்றும் சந்தோஷமாக அமையட்டும் என்று வாழ்த்தினார்.பின்னர் கயலிடத்தில் பால் சொம்பு தர, அவள் அதனை வாங்கி கொண்டு சாம்சன் அறையை நோக்கி சென்றாள். வாஸந்தியும் ராகேஷும் அனைவரிடமும் விடை பெற்று சென்று விட, ரெபேக்கா நிம்மதி பெருமூச்சு விட்டு, சமையல் அறையை சுத்தம் செய்ய சமையல் அறை நோக்கி சென்றாள்.



அங்கு சாம்சன் கட்டிலில் அமர்ந்திருக்க, கயல் அவனிடம் சென்று பாலை கொடுத்தாள். சாம்சன் அதை வாங்கி பக்கத்தில் இருக்கும் மேஜை மேல் வைத்து விட்டு, கயல் உன்னிடத்தில் கொஞ்சம் பேச வேண்டும், இப்படி வந்து உட்கார் என்று அவளை தன் புறத்தில் அமர்த்திக் கொண்டான். இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். பின் சாம்சனே பேசத் தொடங்கினான். கயல், எனக்கு வாழ்க்கையில் ஒரே லட்சியம் என்னுடைய நிறுவனத்தை பெரிதாக்க வேண்டும் என்று முன்பே நான் உன்னிடத்தில் சொல்லியிருக்கிறேன். அதற்காகத்தான் நான் அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன், இந்த திருமணம் நான் எதிர்பாராமல் நடந்த ஒன்று. அதற்காக உன்னை நான் காதலிக்கவில்லை என்றும், விருப்பமில்லாமல் திருமணம் செய்துக் கொண்டேன் என்றும் கூறவில்லை. நான் உன்னை என் வாழ்க்கையில் நுழைந்த அதிர்ஷ்ட தேவதையாகத்தான் நினைக்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் செல்லம்மா. உன் தந்தை அப்படி பேசியதில் இருந்து ஒரு வேளை உனக்கு நான் பொருத்தமில்லையோ என்று கூட நினைக்க தோன்றுகிறது. இந்த மன நிலையில் எப்படி என்னால் உன்னுடன் சந்தோஷமாக வாழ முடியும். எனவே என் தகுதியை உயர்த்திக் கொள்ள எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை. அதுவரைக்கும் எனக்காக காத்திருக்க முடியுமா என் செல்ல டாலி என்று கேட்க, அதென்ன டாலி என்று கேட்க, நீ பொம்மை மாதிரி இப்படி வழு வழு வென்று இருந்தால் உன்னை அப்படி தான் கூப்பிட தோன்றுகிறது என்று அவன் குறும்பாக கூற, அப்படியா என்று அவள் அவனையே உற்று நோக்க, இப்படியெல்லாம் என்னை பார்த்தால் நான் லட்சியம் பெரிசில்லை என்று அலட்சியமாக இருந்து விட்டு உன்னை.. என்று அருகில் வர நில்லுங்கள்! நில்லுங்கள்! உங்களுடைய லட்சியத்திற்கு நான் என்றும் தடையாக இருக்க மாட்டேன் சாம்ஸ். நீங்கள் சீக்கிரமாகவே மிக நல்ல நிலையை அடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூற, என்னை புரிந்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி கயல், நீ என்ன சொல்வாயோ என்று எனக்கு ஒரே யோசனையாய் இருந்தது. நீ சம்மதம் தெரிவித்தது எனக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது, நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது என்று சாம்சன் கூறவும் கயல் புன்னகை புரிந்து சரி தூங்குவோமா? என கூறி கட்டிலின் ஓரமாய் அவள் படுக்க அவனும் அதே கட்டிலில் சற்று தள்ளி படுத்தான். இருவருக்கும் ஒரே அசதியாய் இருக்கவே சீக்கிரமாகவே தூங்கி போனார்கள்.
 
Last edited by a moderator:
Top Bottom