#நீ_அறியாயோ_முகிலினmae
இது தான் நான் படிக்கும் இவங்களின் முதல் கதை...
எனக்கு ரொம்ப பிடிச்சது கதை.. கௌதம் சித்தார்த், அதை அவன் சொல்றதே👌👌👌 எனக்கு இவனை மென்மையான ஒருத்தனா தான் தோணுச்சு.. அவனையும் வன்மையாக மாத்துது விதி!!!
ஒருவனின் சிரிப்பை பார்த்து கடுப்பாகி அவனை கொலை பண்ணுறான்.. என்னாது😳😳😳 சிரிப்புக்கு கொலையா? இது கடைசிவரை என்னோடு பயணித்த கேள்வி...
நந்தன், அவனின் போலீஸ் நண்பன் சுரேந்திரன், அவனின் இறப்பில் நம்பிக்கை இல்லாது தேட, கௌதம் சித்தார்த்தை கண்டும் பிடிக்கிறான்.. ஆனாலும் ஒண்ணுமே பண்ண முடியலை...
சுரேன் உண்மையான நண்பன்... அவனின் ஒவ்வொரு முயற்சியும், அதில் அவன் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை என்ற நிலையும், கௌதம் சித்தார்த் அண்ட் சுரேன் இருவரின் ஆட்டம் சூப்பர்.. சுரேன் அவனை அவ்வளவு பிடிச்சது... அவன் நட்புக்கான, நல்ல மனதுக்கான மரியாதை👌👌👌செம்ம. கௌதம் சித்தார்த்தின் ஒவ்வொரு மூவும், wow very smart🥰🥰
கௌதம் சித்தார்த் சதுரங்க வீரன், நல்லாவே கணிக்கிறான்... அவனின் தேவதை பெண் சஞ்சனா, அவளுக்காக தான் கொலைக்கடத்தலா? என சுரேன் நம்மளை நினைக்கவும் வச்சுடறான்😊😊😊
சஞ்சனா, நந்தா connected ஆக இருக்க, யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத நந்தாக்கு ஏன் இந்த நிலை? உண்மை தெரிந்தால் சஞ்சு என்ன செய்வாள்? சஞ்சுவின் மனதில் இடம் யாருக்கு? சுரேனுக்கு வெற்றி கிட்டுமா? எல்லாம் கதையில் படிச்சுக்கோங்க dears....
சரஸ்வதி, மகனை வளர்த்த விதம் வெகு அருமை.. அவரை கொண்டு அவர் மகனை எடைபோடும் அளவு அவனின் செயல்கள்👏👏👏 முகில்களுக்கும், கௌதம் சித்தார்த்துக்குமான அந்த பந்தம் சூப்பர்🥰🥰🥰 கடைசி வரை அவன் எதையும் மாற்றவே இல்லை, அது எனக்கு ரொம்ப பிடிச்சது🥰🥰🥰
ரங்கராஜன் இவரின் திறமை, சக்தி😱😱😱 எல்லாம் தெரிந்தும் கூட, நடந்ததின் பலன் கண்டிப்பா எவரொருவரும் அனுபவித்தே ஆகனும் என்ற நிலையில் அமைதி காப்பது👌👌👌
ஹரிஹரன் அப்பா பேச்சுக்கு என்ன ஒரு மரியாதை.. எப்படிபட்ட நிலையிலும் அதை ஏத்துக்கிறார்.. that's great...
சஞ்சு🥰🥰🥰 இவளை கதையில் படிச்சு ரசிக்கிறது தான் நல்லா இருக்கும்... இவளோட காதலும், சரஸ்வதி மீதான பாசமும் சூப்பர்ப்... அத்தை மீதான பாசத்தில் தான் மனதை வெளி சொல்லாது இருப்பது, கௌதமை லவ் யூ கௌதம் சொல்லியே அவன் மனநிலை மாற்றுவது, தன் நிலையையும் சொல்லுவது எல்லாம் வெகு அருமை... ஜஸ்ட் loved her character... தாத்தாவின் பேச்சுக்கு குடுக்கும் மரியாதையும், இருவரையும் சேதாரம் இல்லாமல் மீட்டெடுக்க நினைப்பதும்.அருமை...
அவனுக்கு கிடைத்த தண்டனை பாவமா இருந்தது, அதுவும் இருட்டுக்கு பழகலை, பழகிடும் இனி சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது.. அன்று அவன் உதவி இருந்தால் இன்று அவனுக்கு இந்த நிலை இல்லை... தனது சந்தேகங்களை தாயிடம் பேசி இருந்தாலும இந்த நிலை இல்லை.. தான் இடம் பறி போய் விடுமோ என்ற நிலையில் பயத்தில் அவன் செய்த தவறு, தெரியாது நடந்ததை இவன் ஒரு உதவி கூட செய்யாது தப்பாக்கிட்டான்...
வெண்ணிலவே வெண்ணிலவே பாடல், நடனம், கெஸ்ட் ஹவுஸ் உரையாடல்கள் எல்லாம் எனக்கு பிடிச்ச விசயங்கள்...
Congratulations 💐💐💐 வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே