Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

#நீ_அறியாயோ_முகிலினmae

இது தான் நான் படிக்கும் இவங்களின் முதல் கதை...

எனக்கு ரொம்ப பிடிச்சது கதை.. கௌதம் சித்தார்த், அதை அவன் சொல்றதே👌👌👌 எனக்கு இவனை மென்மையான ஒருத்தனா தான் தோணுச்சு.. அவனையும் வன்மையாக மாத்துது விதி!!!

ஒருவனின் சிரிப்பை பார்த்து கடுப்பாகி அவனை கொலை பண்ணுறான்.. என்னாது😳😳😳 சிரிப்புக்கு கொலையா? இது கடைசிவரை என்னோடு பயணித்த கேள்வி...

நந்தன், அவனின் போலீஸ் நண்பன் சுரேந்திரன், அவனின் இறப்பில் நம்பிக்கை இல்லாது தேட, கௌதம் சித்தார்த்தை கண்டும் பிடிக்கிறான்.. ஆனாலும் ஒண்ணுமே பண்ண முடியலை...

சுரேன் உண்மையான நண்பன்... அவனின் ஒவ்வொரு முயற்சியும், அதில் அவன் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை என்ற நிலையும், கௌதம் சித்தார்த் அண்ட் சுரேன் இருவரின் ஆட்டம் சூப்பர்.. சுரேன் அவனை அவ்வளவு பிடிச்சது... அவன் நட்புக்கான, நல்ல மனதுக்கான மரியாதை👌👌👌செம்ம. கௌதம் சித்தார்த்தின் ஒவ்வொரு மூவும், wow very smart🥰🥰

கௌதம் சித்தார்த் சதுரங்க வீரன், நல்லாவே கணிக்கிறான்... அவனின் தேவதை பெண் சஞ்சனா, அவளுக்காக தான் கொலைக்கடத்தலா? என சுரேன் நம்மளை நினைக்கவும் வச்சுடறான்😊😊😊

சஞ்சனா, நந்தா connected ஆக இருக்க, யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத நந்தாக்கு ஏன் இந்த நிலை? உண்மை தெரிந்தால் சஞ்சு என்ன செய்வாள்? சஞ்சுவின் மனதில் இடம் யாருக்கு? சுரேனுக்கு வெற்றி கிட்டுமா? எல்லாம் கதையில் படிச்சுக்கோங்க dears....

சரஸ்வதி, மகனை வளர்த்த விதம் வெகு அருமை.. அவரை கொண்டு அவர் மகனை எடைபோடும் அளவு அவனின் செயல்கள்👏👏👏 முகில்களுக்கும், கௌதம் சித்தார்த்துக்குமான அந்த பந்தம் சூப்பர்🥰🥰🥰 கடைசி வரை அவன் எதையும் மாற்றவே இல்லை, அது எனக்கு ரொம்ப பிடிச்சது🥰🥰🥰

ரங்கராஜன் இவரின் திறமை, சக்தி😱😱😱 எல்லாம் தெரிந்தும் கூட, நடந்ததின் பலன் கண்டிப்பா எவரொருவரும் அனுபவித்தே ஆகனும் என்ற நிலையில் அமைதி காப்பது👌👌👌

ஹரிஹரன் அப்பா பேச்சுக்கு என்ன ஒரு மரியாதை.. எப்படிபட்ட நிலையிலும் அதை ஏத்துக்கிறார்.. that's great...

சஞ்சு🥰🥰🥰 இவளை கதையில் படிச்சு ரசிக்கிறது தான் நல்லா இருக்கும்... இவளோட காதலும், சரஸ்வதி மீதான பாசமும் சூப்பர்ப்... அத்தை மீதான பாசத்தில் தான் மனதை வெளி சொல்லாது இருப்பது, கௌதமை லவ் யூ கௌதம் சொல்லியே அவன் மனநிலை மாற்றுவது, தன் நிலையையும் சொல்லுவது எல்லாம் வெகு அருமை... ஜஸ்ட் loved her character... தாத்தாவின் பேச்சுக்கு குடுக்கும் மரியாதையும், இருவரையும் சேதாரம் இல்லாமல் மீட்டெடுக்க நினைப்பதும்.அருமை...

அவனுக்கு கிடைத்த தண்டனை பாவமா இருந்தது, அதுவும் இருட்டுக்கு பழகலை, பழகிடும் இனி சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது.. அன்று அவன் உதவி இருந்தால் இன்று அவனுக்கு இந்த நிலை இல்லை... தனது சந்தேகங்களை தாயிடம் பேசி இருந்தாலும இந்த நிலை இல்லை.. தான் இடம் பறி போய் விடுமோ என்ற நிலையில் பயத்தில் அவன் செய்த தவறு, தெரியாது நடந்ததை இவன் ஒரு உதவி கூட செய்யாது தப்பாக்கிட்டான்...

வெண்ணிலவே வெண்ணிலவே பாடல், நடனம், கெஸ்ட் ஹவுஸ் உரையாடல்கள் எல்லாம் எனக்கு பிடிச்ச விசயங்கள்...

Congratulations 💐💐💐 வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே
 
என்ன சொல்லனு தெரில கௌதமோட மகள் மேலான அன்பை..கண்ணீரோட ரசித்துப் படிச்சேன் இந்த நிறைவுப்பகுதியை..சிஸ் கௌதம் சித்தார்த்,அவன் மகள் அன்பை இன்னும் நிறைய பார்ட் 2வில் எதிர்பார்க்கலமா??பூக்கடைக்காரரையும்,அப்பா இல்லனு சொன்ன குழந்தையையும் எந்த இடத்துல கொண்டுவந்து லிங்க் பண்ணுவீங்கனு பார்த்துட்டே இருந்தேன்..அந்த சீன்ம் வந்துருச்சு..சஞ்சனா சதுரங்க வீரனோட தேவதை தான்..சுரேந்தர்ட நண்பனா இருக்கக் கேட்டது அவ்ளோ புடிச்சது..சுரேந்தர் தகுதியுடையவனே கௌதம் சித்தார்த்தின் நட்பிற்கு..நந்தாவிற்கு சித்துவின் முகிலினத்தோழிகளே தண்டனையை அளித்துவிட்டனவோ..நந்தா நீலகண்டன்,வரலட்சுமியின் அன்பை இப்பொழுதாவது புரிந்து கொண்டான்..தாத்தா செம..சிறந்த நட்பிற்கு சுரேந்தர் என்றால் சிறந்த மகன்,காதலன்,கணவன்,தகப்பனுக்கு நமது சதுரங்க வீரன் கௌதம் சித்தார்த்😎😎😎 😍 😍 😍..வெற்றி பெற வாழ்த்துக்கள் மா💐💐💐💐💐
ஹப்பா.. கதை முழுவதும் கூடவே வந்து கருத்து சொல்லி ஊக்கப் படுத்தி இப்போ முதல் கருத்தையும் போட்டுடீங்க தர்ஷினி. உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்ல ன்னு தெரியலை. இந்த கமெண்ட் டும் அவ்வளவு அழகு. பூக்கடைக்காரர் தான் மெயின் கேம் சேன்ஜர். அவரை விட முடியுமா? கடைசியிலே கொண்டு வந்து சேர்த்துட்டோம் இல்ல? அதே போல சுரேந்தர் நட்புக்கும் ஒரு அங்கீகாரம் கொடுக்கணும் ன்னு தோணிச்சு. அதையும் ரசிச்சு இருக்கீங்க. அத்தனை நிறைவான உணர்வு கொடுக்குது மா உங்க கமென்ட். இரண்டாவது பாகம் எழுதினா இதோட அழகு போயிடும் அப்படின்னு ஒரு பயம் உண்டு எனக்கு. அதனாலே இப்போதைக்கு அப்படி ஒரு ஐடியா இல்லை. பார்க்கலாம். மனம் நிறைந்த நன்றிகள் மா. God bless u 😍😍😍😍😍😍
 
அருமையான முடிவு வத்சலா.. மகள் என்னும் தேவதையின் வரவு, கௌதம் மனதில் இருந்த பழி உணர்ச்சியைக் குறைத்து , நந்தாவின் தப்பிற்கு தண்டனை தராமல் விட விட்டது. ஆழமான நட்பின் இலக்கணம் சுரேந்தர். கௌதம் அப்படி ஒரு நட்பைக் கேட்டுப் பெற்றதில் தவறே இல்லை. சஞ்சனாவின் காதலும், கௌதம் தாய் சரஸ்வதியின் ஆசிகளும், தாத்தாவின் எண்ணங்களும் கௌதமை மாற்றி , அவனின் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே கிடைக்க நிலைக்க வைத்து இருக்கிறது. வத்சலா வின் மேஜிக் வரிகளில் கதையின் சுப முடிவு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் வத்சலா 😍 😍 💐💐💐
தேவி உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னு புரியலை. இந்த போட்டியை பற்றி முதலில் எனக்கு சொன்னதே நீங்கதான். கண்டிப்பா எழுதுங்க ன்னு சொல்லி தலைப்பு லே ஆரம்பிச்சு எல்லாத்திலேயும் கூடவே நின்னு ஊக்கப் படுத்தி இருக்கீங்க..ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் நான் போடும் மீம் முதற்கொண்டு ரசிச்சு ரசிச்சு கமென்ட் போட்டிருக்கீங்க. நான் இந்த கதையை இவ்வளவு சீக்கிரம் முடிப்பதற்கு உங்க சப்போர்ட் ஒரு மிகப் பெரிய காரணம். Thank you so much 😍😍😍😍😍😍 God bless u
 
Last edited:
Semma ma... Anti hero sonnenga bt endha idathulam gowtham a apadi ninIka mudiyala kandipa avan seyalkaluku pinna di oru niyayam irukumnu thonuchu... Wow great ma enna feel semmaya irundhadhu ma.... So, gowtham siddharth ,,the great gynecologist apdi solrathelam vera level semma ma... 😍😍😍😍😍
 

New Threads

Top Bottom