Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

RD NOVEL பொதிகையின் மைந்தன் - TamilNovel

Status
Not open for further replies.
அத்தியாயம் 4:

வேலனுடன் சமாதானம் பேச எவ்வளவோ முயன்றான் தித்தன். ஆனால் எதுவும் பலன் தரவில்லை.

"நீ என்னை அவமானப்படுத்தி விட்டாய்! என்னைப் பற்றி இவ்வளவு தானா நீ புரிந்து கொண்டது?" என்று அதையே திருப்பிச் சொல்லி அனுப்பி விட்டான்.

"நீ ஏன் அவனுடன் பேச மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறாய்? நமக்கு வேறு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. ஐயன் உன்னை வரச் சொன்னார்" என்றான் சிவநேசன் எரிச்சல் கலந்த குரலில்.

"இந்த இரவு நேரத்திலா?"

"ஆம்! ரகசியங்களைப் பேச, இரவு தானே சரியான நேரம்?" என்றான் சிவனேசன்.

மௌனமாக விந்தையன் ஆசிரமத்தை நோக்கி நடந்தான். ஒற்றையடிப்பாதையில் நடக்கும் போது சட்டென யாரோ ஒரு மரத்தின் பின்னால் ஒளிவது போலத் தோன்ற நின்றான் தித்தன்.

"என்ன தித்தா?"

"யாரோ மரத்தின் பின்னால் இருப்பது போல ஒரு ஓசை கேட்டதே?"

"ஆம்! எனக்கும் கேட்டது. இந்தப்பகுதியில் விலங்குகள் அதிகம். ஆனாலும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வா! இருவரும் சென்று பார்ப்போம்." என்று பாதையை விட்டு சற்றே விலகி நடந்தனர்.

இருளில் நடப்பது சற்றே சிரமமாக இருந்தாலும் சமாளித்துக்கொண்டு சென்றனர். சற்று தொலவில் சரசரவென எதுவோ காய்ந்த சருகின் மீது நகர்ந்து போகும் சத்தம் கேட்டது. தீவட்டியை அந்தப் பக்கம் திருப்ப பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருப்பது தெரிந்தது.

"பாம்பு தான் தித்தா" என்றான் சிவநேசன்.

"உம்! இருக்கலாம்!"

"நமக்கு நேரமாகிறது தித்தா! குரு நாதரை அதிக நேரம் காக்க வைப்பது முறையல்ல. வா" என அழைத்துச் சென்றான்.

பெரிய நிலவிளக்கின் ஒளியில் கம்பீரமாக அமைதியாக அமர்ந்திருந்தார் விந்தையன்.

"ஐயனே! தித்தனை அழைத்து வந்து விட்டேன்." என்றான் சிவநேசன். இருவரும் வணங்க ஆசீர்வதித்தார் பெரியவர்.

"உன் நண்பன் வேலன் சமாதானமாகி விட்டானா தித்தா?" என்றார் ஐயன்.

"இல்லை ஐயனே! இன்னமும் கோபம் குறைந்தபாடில்லை. என் சிறு வயதுத் தோழன் அவன். இப்போது விலகியிருப்பது வேதனையளிக்கிறது."

"புரிகிறது தித்தா! கூடிய சீக்கிரமே உன் வேதனை மாற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நான் இப்போது உங்கள் இருவரையும் அழைத்தது மிகவும் முக்கியமான விஷயம். ரகசியமானதும் கூட. நீங்கள் இருவரும் நான் சொல்லும் விஷயங்களை வெளியில் கசியக் கூட விடக் கூடாது. சத்தியம் செய்து தர வேண்டும்." என்றார்.

"அப்படியே செய்கிறோம் ஐயனே!" என்றான் சிவநேசன். விந்தையன் தித்தனை நோக்க அவனும் அப்படியே செய்கிறேன் என்றான். விளக்கின் மேல் இருவரும் ஆணையிட்டதும் திண்டுகள் ஒன்றிலிருந்து சிறு ஓலைச் சுவடியை எடுத்தார் விந்தையன்.

"நீங்கள் இருவரும் மதுரை செல்ல வேண்டும். அங்கே...கொடுங்கண்ணனாருக்கு நான் அளிக்கும் ஓலையை அளிக்க வேண்டும். "

"அவ்வளவு தானா ஐயனே? இந்தச் சிறு வேலைக்கா இத்தனை பீடிகை?" என்றான் தித்தன்.

"இது சிறு பணியே அல்ல தித்தா! வரலாற்றில் நீங்க இடம் பிடிக்கப் போகும் நிகழ்ச்சி இது. செண்பகப் பொழிலின் தலையெழுத்தையே மாற்றப் போகும் மகத்தான பணி அது. செய்ய முடியுமா உங்களால்?"

"இறைவன் அருளால் செய்வோம் ஐயனே!" என்றான் தித்தன்.

"சரி! இரு ஓலைகள் தருகிறேன். ஒன்றை நீங்கள் கொடுங்கண்ணனிடம் கொடுக்க வேண்டும். பிறகு அவன் உங்களை யாரிடம் அழைத்துச் செல்கிறானோ அவர்களிடம் மற்றொரு ஓலையைக் கொடுக்க வேண்டும். இறைவன் கருணையினால் நான் எதிர்பார்ப்பது நடக்கும் என நம்புகிறேன்." என்றார் ஐயன் விந்தன்.

"எப்போது புறப்பட வேண்டும் குருதேவா?"

"இன்னும் மூன்று நாட்கள் கழித்துக் கிளம்பினால் போதும். கால் நடையாகச் சென்றால் நீண்ட நாட்கள் ஆகும். ஆகையால் குதிரை வேண்டும். உங்களிடம் குதிரை இருக்கிறதா?"

"என்னிடம் ஒரு குதிரை தான் இருக்கிறது ஐயனே! ஆனால் சிவநேசனுக்கு ...?" என்று இழுத்தான் தித்தன்.

"கவலை வேண்டாம். நீங்கள் இருவரும் ஒரே குதிரையில் பயணியுங்கள். சிவநேசா உன்னால் குதிரையில் பயணிக்க முடியும் அல்லவா?"

"குதிரையேற்றமே அறிவேன் குருதேவா! மதுரை இங்கிருந்து இரு நாட்கள் பயணம், அவ்வளவு தானே? போய் விடுவோம்."

"அது மட்டுமல்ல! மிக மிக முக்கியமானது, நீங்கள் வழியில் வரும் எந்த ஊரின் வழியாகவும் செல்ல வேண்டாம். காட்டு வழியே சென்றால் போதும். உணவு கையில் எடுத்துப் போய் விடுங்கள். ஆங்காங்கே ஆறுகளில் ஊற்று தோண்டி நீர் அருந்துங்கள். நீங்கள் இருவரும் ஓலை கொண்டு செல்கிறீர்கள் என தெரியத் தேவையில்லை. மேலும் சந்திக்கப் போகும் நபரிடமிருந்து பதில் ஓலை வாங்கி வர வேண்டும். புரிகிறதா?"

"புரிந்தது ஐயனே"

"சிவநேசா, தித்தா இது எளிமையான பணியல்ல. நீங்கள் காட்டு வழியில் செல்லும் போது சதிகாரர்கள் உங்களை கொலை செய்யக் கூட முயற்சி செய்யலாம். எப்படியாவது ஓலையை மதுரையில் இருக்கும் கொடுங்கண்ணனிடம் சென்று சேர்த்து விடுங்கள். நமது நாட்டுக்கு இப்போது அது மிகவும் முக்கியம்." என்றார் விந்தையன்.

"சரி! குருதேவா! வழியில் எனக்கோ, தித்தனுக்கோ ஆபத்து ஏற்பட்டால் யாராவது ஒருவராவது தப்பித்து மதுரையில் ஓலையை சேர்த்து விடுகிறோம்."

"அந்த அளவுக்கு நிலை மோசமாகாது என நினைக்கிறேன். எல்லாம் இறைவன் செயல். இப்போது நீங்கள் புறப்படலாம்" என்றார்.

எழுந்து நின்றனர் இளைஞர்கள் இருவரும். தயங்கினான் தித்தன்.

"என்ன தித்தா?"

"ஐயனே! ஓலைகள்..."

"நீங்கள் கிளம்ப இன்னமும் மூன்று தினங்கள் இருக்கிண்றதே? கிளம்பும் போது தருகிறேன். அது வரையில் என்னிடமே இருக்கட்டும்" என்றார். மீண்டும் பெரியவரை வணங்கி விட்டு இருவரும் வெளியில் வந்தனர். இப்போது நிலவு வானில் வந்து விட்டது. முழு நிலவு அல்ல என்றாலும் ஓரளவு வெளிச்சம் இருக்கவே செய்தது. அழகான அந்த வனம் நிலவொளியில் குளித்து இன்னமும் அழகாக காட்சியளித்தது. நண்பர்கள் இருவரும் மௌனமாக நடந்து கொண்டிருந்தார்கள். இரவு விலங்குகளின் ஒலி கேட்டது. அந்த அமைதியான சூழலில் அதுவே பெரிய ஓசையாகக் கேட்டது இருவருக்கும். எதை எதையோ சிந்தித்தபடி மௌனமான நடந்தான் தித்தன். ஆனால் அவனது எச்சரிக்கை உணர்வு அவனை கூர்ந்து கவனிக்க வைத்தது. அவர்கள் நடந்து வந்த ஒற்றையடிப்பாதையை ஒட்டி சில கஜங்கள் தொலைவில் பருத்த மரம் ஒன்று இருந்தது. அதன் பின்னால் யாரோ நின்று கொண்டு இவர்களையே பார்ப்பது போண்ற உள்ளுணர்வு சொல்ல தயங்கினான். ஆனால் சிவநேசன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து கொண்டிருந்தான்.

நடக்க நடக்க அந்த மரத்துக்கும் அவர்களுக்கும் இடையேயான இடைவெளி குறைந்து கொண்டே வந்தது. இப்போது தித்தனின் சிந்தனை எல்லாம் தற்காப்பு பற்றியே யோசித்துக்கொண்டிருந்தது. அவன் படித்த போர்ப்பயிற்சிகள் நிச்சயம் யாரோ அந்த மரத்தின் பின்னாலிருந்து தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என எச்சரித்தது. ஆனால் அந்தத் தாக்குர்தல் திடீரன நிகழும் நேரடித்தாக்குதலா? இல்லை கோழைகள் போல முதுகுக்குப் பின்னால் செய்யும் தாக்குதலா? என அவனால் கணிக்க முடியவில்லை. சிவநேசன் எதையோ பேசிக்கொண்டே வந்தான். அவனுக்கு பதில் சொல்லிக்கொண்டே வந்தாலும் கண்களும் காதுகளும் படு கூர்மையாக இயங்கின தித்தனிக்கு.

அந்த மரத்த்துக்கும் அவர்களுக்கும் இடயே ஐம்பதடி தான் இடைவெளி. அப்போது தித்தனின் கூரிய செவிக்கு யாரோ இடுப்பிலிருந்து வாளோ, கத்தியோ உருவும் சத்தம் கேட்டது. சற்றே நிதானித்து கணக்குப் போட்டான். ஒரு நொடிக்கும் குறைவான நேரம் தான் ஆனது அந்த ஆயுதத்தை உருவ. அப்படியானால் அது சிறு கத்தியாத்தான் இருக்க வேண்டும். கூர்மையானதாகத்தான் இருக்க வேண்டும். விஷம் கூடத் தோய்க்கப்பட்டிருக்கலாம். சிறு கத்தி என்பதால் நிச்சயம் நெஞ்சுக்குத்தான் குறி வைப்பார்கள். மனமும் உடலும் முழுமையாகத் தயாராக இருந்தன. அந்த நேரத்தில் நிலவொளியின் வெளிச்சத்தில் பளபளவென ஒளி வீசியபடி ஒரு சூரிக்கத்தி முழு வேகத்தோடு சுழன்று வந்தது. தன்னை நோக்கியத்தான் தாக்குதல் என்ற நினைப்பிலேயே இருந்த தித்தனுக்கு அந்தக் கத்தி அவனை விடுத்து சிவநேசனைக் குறி பார்த்து வந்ததை அவதானிக்க சில நொடிகள் பிடித்தன.

அதற்குள் கத்தியைப் பார்த்து விட்ட சிவநேசன் ஓவென அலறினான். ஆனால் மிகவும் விரைந்து செயல்பட்டு அவனது காலை இடறினான் தித்தான். இதைக் கொஞ்சமும் எதிர்பாராத சிவநேசன் தடாரென்ற சத்தத்தோடு விழுந்தான். கத்தி அவனைத் தாண்டிச் சென்று மற்றொரு மரத்தில் ஆழப் பதிந்தது அந்தக் கத்தி. அது சிவநேசன் நெஞ்சில் பதிந்திருந்தால் அடுத்த கணமே அவன் உயிர் போயிருக்கும். சிவநேசன் தப்பித்து விட்டான் என்றதும் கத்தியை எறிந்த ஆளைப் பிடிக்க வேண்டும் என மரத்தை நோக்கிப் பாய்ந்தான் தித்தன். அந்த இருளிலும் யாரோ சரசரவென ஓடும் சத்தம் கேட்டது. கீழே கிடந்த கல்லை எடுத்து அவனது குதிகாலைக் குறி வைத்து எறிந்தான். மிகச் சரியாகச் சென்று தாக்கியது அது. ஆனாலும் ஓடியவன் மிகவும் நன்றாகப் பயிற்சி எடுத்திருப்பவன் போல. அவனது ஓட்டம் தள்ளாடினாலும் சிறு சத்தம் கூட எழுப்பாமல் தொடர்ந்து ஓடினான்.

"தித்தா! என்னால் நடக்கவே முடியவில்லை. என்னைக் காப்பாற்று" என்று தீனமாக அலறினான் சிவநேசன்.

"பாவம்! ஆசிரமத்தில் வேலைகள் செய்தவன். இது போன்ற தாக்குதலுக்கு பழக்கமில்லாதவன். ஆனால் நன்றாகத்தான் இருக்கிறான். கத்தி எறிந்த ஆளைப் பிடித்தால் பல விஷயங்கள் வெளியாகும் என்ன செய்ய? என்று தத்தளித்தான். இறுதியில் அவனது இரக்கமே வெல்ல சிவநேசனை நோக்கிப் போனான். பயத்தில் முகம் வெளுத்துக் கிடந்தது அவனுக்கு.

"தித்தா! எனக்கு உயிர்ப்பிச்சை அளித்தாய் அப்பா! இந்த நன்றி எப்படிச் செலுத்துவேன்?" என்றான் உணர்ச்சி மிக்க குரலில்.

"இது என் கடமை தான் சிவநேசா! கத்தியை எறிந்தவன் ஓடி விட்டான். என்னால் அவனைப் பிடிக்க முடியவே இல்லை. நீ எப்படி இருக்கிறாய்?"

"இந்த இரவு நேரத்தில், இந்தக் காட்டில் சாதாரணமாக ஓடுகிறான் என்றால் அவன் நிச்சயம் இந்தப் பகுதியைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும்."

"ஆம்! எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அவனது கத்தி இருக்கிறது. அதை வைத்து ஏதாவது கண்டு பிடிக்க முடியுமா பார்க்கலாம். உன்னால் நடக்க முடியுமா? இரவு நேரத்தில் நாம் இங்கு ஆயுதமின்றி இருப்பது அவ்வளவு நல்லதல்ல." என்றான் தித்தன்.

சிவநேசன் எழ முயன்றான். ஆனால் காலிலம் வேதனையை முகம் காட்டியது. அவனைக் கைத்தாங்கலாகத் தூக்கி மெல்ல நடக்க வைத்து அழைத்துச் சென்றான்.

"அப்பப்பா! என்ன பயங்கரம்? என்னை எதற்காகக் கொல்ல முயன்றார்கள்? எனக்கு யாரும் பகையே இல்லையே?" என்றான் சிவநேசன் வேதனை மிக்கக் குரலில்.

"உனக்குப் பகையில்லாமல் இருக்கலாம் சிவநேசா! ஆனால் நாம் செய்யப் போகும் பணிக்கு எதிரிகள் இருக்கலாமே? உன் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்றால் நமது அத்தனை திட்டங்களும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறதே? ஆனால் நமக்கு அவர்களைப் பற்றி எதுவுமே தெரியவில்லையே? அது தான் எனக்கு ஆத்திரமாக வருகிறது." என்றான் தித்தன்.

"அடேயப்பா! இந்தத் தாக்குதலின் பின்னால் இத்த்னனை அரசியல் இருக்கிறதா? ஒற்றர்களாகத்தான் இருப்பார்கள். வேறு யார்?"

"ஒற்றர்கள் தான். ஆனால் யாருடைய ஒற்றார்கள்? சோழரா? சேரரா? இல்லை வேறு ஏதேனும் குறுநில மன்னரா? இப்படி நிறையக் கேள்வி இருக்கிறதே? எந்த ஆதாரமும் இல்லாமல் நாம் ஒருவர் மீது பழி சுமத்த முடியாதே?" என்றான் தித்தன்.

"உனக்கு போர்க்கலைகளோடு நன்றாக அரசியலும் தெரிகிறது. அதனால் தான் குநாதர் உன்னைத் தேர்ந்தெடுத்தார் போல. ஆனால் என்னால் உனக்கு உதவி கிடைக்காது போலத் தோன்றுகிறது. மேலும் நான் தொந்தரவு ஆகிவிடுவேனோ எனத்தான் அஞ்சுகிறேன்." என்றான் சிவநேசன் மெல்லிய குரலில்.

"இல்லை நண்பா! அப்படி இல்லை. உனக்கு சிறிது கூடப் போர்க்கலைகளில் பழக்கமில்லையா?"

"சுத்தமாக இல்லை! நான் கற்றதெல்லாம் மருத்துவம், மூலிகைகள் நோய்களை எப்படிக் குணப்படுத்துவது அவ்வளவு தான். "

பேசிக்கொண்டே இருவரும் ஊருக்குள் வந்து விட்டனர்.

"ஊர் வந்து விட்டது சிவநேசா! உன் வீடு எங்கே என்று சொல்! முதலில் கால் வலிக்கு வைத்தியம் செய்து கொள்கிறாயா?" என்றான் தித்தன்.

"நான் எப்போதும் ஆசிரமத்திலேயே வசிப்பவன் தான் தித்தா! இது போன்ற சில சமயங்களில் எனது சிறிய தந்தையார் வீடு வாய்க்கால் கரைத்தெருவில் இருக்கிறது. அங்கே தங்கிக்கொள்வேன். அவரும் வைத்தியர் தான். ஆகையால் என்னை அங்கே கொண்டு விடு போதும்" என்றான்.

சிவநேசன் சொன்ன வாய்க்கால் கரைத்தெரு சற்றே தொலைவில் உள்ளது. அதை நோக்கி நடந்தார்கள் இருவரும். வழியில் வேலன் கையில் ஈட்டியோடு எதிரே வந்து கொண்டிருந்தான். தித்தனைக் கண்டதும் விலகிச் சென்றான். ஆனால் அவனது நடை சற்றே வித்தியாசமாக இருக்கக் கூர்ந்து நோக்கினான் தித்தன். இடது காலை சற்றே சாய்த்து நடந்தான்.

"நான் எறிந்த கல் ஓடியவனின் இடக்காலைத்தானே பதம் பார்த்தது? இவனுக்கும் இடக்காலில் அடி? அப்படியானால்....?" நினைக்கவே மனம் வேதனைப் பட்டது. தித்தன் கவனிப்பதை பார்த்து விட்ட வேலன் சாய்க்காமல் நடந்தான். ஆனாலும் வலி அதிகம் என்பதை அவனது முகம் காட்டியது. வேலனது கால் வலியை விட தித்தனுக்கு மனம் மிக அதிகமாக வலித்தது.

"வேலா! பொறாமை குணத்தால் நீ என்ன செய்து விட்டாய்? போகக் கூடாத பாதையில் போகிறாயா? சேரக்கூடாதவர்களோடு சேர்ந்து விட்டாயா? அப்ப்டியென்ன கோபம் உனக்கு? பகைவர்களோடு சேர்ந்தால் உனக்கு நல்லதா? மனம் மாறி நீ மீண்டும் வர விரும்பினால் அவர்கள் விடுவார்களா? இப்படி ஒரு புதை குழியில் போய்ச் சிக்கிக் கொண்டாயே?" என வேதனையோடு எண்ணினான். கண்களில் நீர்த்துளி எட்டிப் பார்த்தது.

"என்ன தித்தா? அப்படியே நின்று விட்டாய்? அதோ தெரிகிறதே அது தான் என் சிற்றப்பனின் வீடு. வா போகலாம்" என்றான் சிவநேசன்.

தன் எண்ணத்தை மறைத்துக்கொண்டு மெல்ல அவனை அழைத்துக்கொண்டு வீட்டில் சேர்த்தான். அங்கு இருந்த சிறிய தந்தை அவரது மகன் என அனைவரும் மனமாற வரவேற்றனர். சிவநேசன் நடந்ததை சற்றே மிகைப்படுத்திக் கூற அவர்கள் தித்தனுக்கு மிகவும் நன்றி செலுத்தினார்கள். அவனது வீரத்தையும் சமயோஜித அறிவையும் மிகவும் புகழ்ந்தார்கள். தித்தனுக்கு சங்கடமாக ஆகி விட்டது.

"ஐயா! நீங்கள் சொல்லும் அளவுக்கு நான் அப்படி ஒன்றும் பெரியவன் அல்ல. பாவம் சிவநேசன். வலியில் இருக்கிறார். அவரைக் கவனியுங்கள். நான் சென்று வருகிறேன். இரவுக்காவலுக்குச் செல்ல வேண்டும்" என்று கூறி விடை பெற்றான். அவர்கள் ஏதாவது பானம் அருந்தியே தீர வேண்டும் என்று மோர் கொடுக்க அதை அருந்தி விட்டுக் கிளம்பினான். தன் வீட்டுக்குச் சென்று ஈட்டி எடுத்துக்கொண்டு இரவுக்காவலுக்குச் செல்ல வேண்டும் என்பது அவன் எண்ணம். போகும் வழியில் மீண்டும் வேலனைக் கண்டான்.

"வேலா! கொஞ்சம் நில்லேன்" என்றான் கெஞ்சும் குரலில்.

"என்னை ஏனப்பா நிற்கச் சொல்கிறாய்? உன் புது நண்பன் உடன் வரவில்லையா? அவனோடு பேசுவது தானே? நான் தான் நம்பிக்கைக்கு உரியவன் இல்லையே?" என்று சொல்லி விட்டு நிற்காமல் சென்று விட்டான் வேலன். மனதில் குழப்பமும், வேதனையும் போட்டி போட தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தான் தித்தன்.
 
அத்தியாயம் 2:

தித்தனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அழகான ஆரோக்கியமான ஆண் குழந்தை. மனைவி கல்யாணி சோர்ந்து காணப்பட்டாள்.

"அத்தான்! எப்படி இருக்கிறான் நம் மகன்?"

"அவனுக்கென்ன கல்யாணி! அழகும் ஆரோக்கியமுமாக இருக்கிறான். நீ தான் சோர்ந்து காணப்படுகிறாய்."

"ஆம் அத்தான்! குழந்தை பிரண்டு விட்டதால் சற்றே பிரச்சனை ஏற்பட்டது. இறைவன் அருளால் தாதி வெள்ளையம்மாள் வந்து எப்படியோ என்னையும் காப்பாற்றிக் குழந்தையையும் காப்பாற்றி விட்டாள்."

"மிகவும் நன்று! அவளுக்கு ஏதேனும் பரிசு அளிக்கிறேன்."

கல்யாணியின் தாய் வந்தாள். மருமகனும் மகளும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு சற்றே ஒதுங்கி நின்றாள்.

"என்னிடம் என்ன வெட்கம் அத்தை? நான் உங்கள் மகன் போல அல்லவா?" என்றான் தித்தன்.

"உண்மை தான்! ஆனாலும் சம்பிரதாயம் என்ற ஒன்று இருகிறதல்லவா?"

"சரி உங்கள் விருப்பம்!"

"வந்து..வந்து...இப்போது கல்யாணியை குளிக்க வைத்து குழந்தையையும் குளிக்க வைக்க வேன்டும். ஆகையால் நீங்கள்....தவறாக எண்ணக் கூடாது"

"அதற்கென்ன? நான் வெளியில் இருக்கிறேன். இல்லையென்றால் மாலை வந்து பார்க்கிறேன். அருகில் தானே எங்கள் வீடும். கல்யாணி எப்போது வீட்டுக்கு வருவாள்?" என்றான் ஆர்வமாக.

" இப்போது தான் பிரசவம் ஆகியிருக்கிறது. உடல் நலம் தேற வேண்டிய நேரம் இது. பச்சை உடம்பு! எப்படியும் நான்கு மாதங்களாவது ஆகும். உங்களுக்குக் குழந்தையைப் பார்க்க வேண்டுமானால் எந்நேரமும் வரலாம். ஆனால்..."

"புரிகிறது அத்தை! கல்யாணி! நான் சென்று வரவா கண்ணே!" என விடை பெற்று வெளியில் வந்தான். தெருவில் காற்று அடித்து புழுதியைக் கிளப்பிக்கொண்டிருந்தது. அந்தப் புழுதியில் எதிரே யாரோ நடந்து வந்தார்கள்.

"ஐயா! இங்கே கல்யாணி என்பவரின் வீடு எங்கே இருக்கிறது?" என்றான் அந்தத் தலைப்பாகை அணிந்த ஆள்.

"இது தான் கல்யாணியின் வீடு. அவள் என் மனைவி தான். நீங்கள் யார் ஐயா?" என்றான் தித்தன்.

"மிகவும் நல்லதாகப் போய் விட்டது. நான் வந்ததே உங்களைத் தேடித்தான்." என்றான் அந்த ஆள்.

"என்னையா? என்னைத் தேடி வர வேண்டுமானால் மேட்டுத்தெருவில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு அல்லவா வர வேண்டும்? இங்கு ஏன் வந்தீர்?"

"ஐயா! உங்களைத் தேடி நீங்கள் சொன்ன மேட்டுத்தெருவுக்குத்தான் போனேன். நீங்கள் உங்கள் குழந்தையைக் காண இங்கே வந்திருக்கிறீர்கள் எனச் சொன்னதால் வந்தேன்."

"சரி! யார் நீங்கள்? என்னைத் தேடி வந்த காரணம் என்ன?"

"ஐயா! என் பெயர் சிவநேசன். என் குரு விந்தையன் தான் என்னை அனுப்பி உங்களை அழைத்து வரச் சொன்னார்"

"என்ன? விந்தையனா? அவருக்கு எப்படி என்னைத் தெரியும்?"

"ஐயா! என் குரு பெரிய ஞானி! முக்காலமும் உணர்ந்தவர். அவருக்கு எப்படி உங்களைத் தெரியும்? உங்களை ஏன் அழைத்து வரச் சொன்னார் போன்ற விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. தயவு செய்து வருகிறீர்களா?"

தயங்கினான் தித்தன்.

"இவர் யாரோ என்னவோ? இவர் சொல்லும் விந்தையன் எப்படிப்பட்டவரோ? இது ஏன் கொள்ளையர்களின் சதியாக இருக்கக் கூடாது? தனியாக அழைத்துப் போய் ஏதாவது சதி வேலையில் ஈடுபடும் எண்ணம் இருந்தால் நான் எச்சரிக்கையாக இருப்பது நல்லதல்லவா?" என யோசித்தான்.

"என்ன யோசிக்கிறீர்கள் ஐயா? கிளம்புங்கள்"

"வருவதில் தயக்கமில்லை. ஆனால் என் நண்பன் வேலனும் வரலாமா?"

"தாராளமாக வரலாம்."

"ஐயா! ஏற்கனவே எனக்கொரு பணி இருக்கிறது. அது விந்தன் என்பவரைத் தேடி அலைவது. அதனைச் செய்யச் சொல்லி குள்ளமான ஒரு நபர் கூறினார். அவரைத் தேடி சந்தித்து விட்டு பிறகு வருகிறோமே?" என்றான்.

கடகடவெனச் சிரித்தான் சிவநேசன்.

"உங்களை என்னவென்று சொல்ல? தேடிய மூலிகை காலில் தென்பட்டது என்பார்களே? அது போல நீங்கள் தேடும் நபர் வேறு யாரும் அல்ல. என் குருவே தான். நீங்கள் சொன்னது அவரது இயற்பெயர். மரியாதை கருதி ஐயன் சேர்த்தோம். இப்போது அவர் அனைவருக்கும் விந்தையன் ஆகி விட்டார்" என்றான்.

சொல்லத்தெரியாத ஏதோ ஒரு உணர்ச்சி தோன்றியது தித்தனுக்கு. நாமாகத் தேட வேண்டிய அவசியமே இன்றி அவரே என்னை அழைக்கிறார் என்றால் நிச்சயம் அவர் தெய்வாம்சம் பொருந்தியவராகத்தான் இருக்க வேண்டும். வேலனையும் அழைத்துச் சென்று பார்த்தால் என்ன?" என எண்ணினான்.

"போகலாமா?" என்றான் சிவநேசன்.

"போகும் வழியில் என் நண்பனையும் அழைத்துச் செல்லலம்" எனக் கூறி நடந்தான் தித்தன். முன்னால் சென்றான் சிவநேசன். வேலனும் இணைந்து கொள்ள மூவரும் கடுமையான அந்த வெயிலையும் அதனைத் தணிக்கும் குளிர் காற்றையும் அனுபவித்தபடி நடந்தனர். கிட்டத்தட்ட ஊரில் எல்லை வந்து விட்டது.

"எங்கே உங்கள் குருவின் வீடு?" என்றான் வேலன்.

"குருவின் வீடு எனச் சொல்ல முடியாது. ஆசிரமம் என்று வேண்டுமானால் சொல்லலாம். மக்களின் தொந்தரவு அதிகம் இருக்கக் கூடாது என ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ்கிறார் குரு நாதர்" என்றான் சிவநேசன்.

சற்று தூரம் ஒற்றையடிப்பாதையில் நடந்தார்கள். சிற்றாறு ஐந்து கிளைகளாப் பிரிந்து விழும் அழகான இடம். அதற்கு முன்னே பக்கவாட்டில் கதவு ஒன்று இருந்தது. அதனைத் திறந்து கொண்டு சென்றான் சிவநேசன். உள்ளே மிகவும் குளுமையாக மரங்கள் நிறைந்து காணப்பட்டது. ஆங்காங்கே சிறு ஓலை வேயப்பட்ட குடில்கள். அகவும் மயில். குயிலோசை என அந்த இடமே அழகின் இலக்கணமாக விளங்கியது. மூன்று படிகள் ஏறி கதவே இல்லாத அந்த வட்டமான கூடத்தின் ஓரத்தில் நின்றான் சிவநேசன்.

"ஐயா! நீங்கள் சொன்னது போல தித்தனை அழைத்து வந்திருக்கிறேன். உடன் அவரது நண்பன் வேலனும் இருக்கிறார்" என்றான் சிவநேசன் மரியாதையாக.

"சரி! அவர்களை அழைத்து வா" என்ற கம்பீரமான ஆனால் மென்மையான குரல் கேட்டது. கண் சாடை காட்ட தித்தனும், வேலனும் உள்ளே சென்றார்கள். அந்த வட்டமான கூடத்தின் நடுவே சற்றே உயரமாகப் போடப்பட்டிருந்த பலகையில் அமர்ந்திருந்தார் விந்தையன். தாடி, மீசை புருவம் என எல்லாமே நரைத்திருந்தது. ஆனாலும் முகத்திலோ கரங்களிலோ சுருக்கமே இல்லை. முதுகு கூட வளையாமல் நிமிர்ந்து அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் தன்னையும் அறியாமல் வணங்கினார்கள் இரு நண்பர்களும்.

"நலமே விளைக" என வாழ்த்தினார் விந்தையன். அமரச் சொல்லி கை காட்டினார். அவருக்கு எதிரே போடப்பட்டிருந்த இரு பலகைகளில் அமர்ந்து கொண்டனர்.

"உங்களோடு பேசச் சொல்லி எனக்கு கனவு மூலம் குரு உத்தரவு வந்தது. நீங்கள் யார்? உங்களது பணி என்ன? எல்லாம் விசாரித்து விட்டேன். ஆனால் என்னை எதற்கு நீங்கள் தெடுகிறீர்கள் எனப் புரியவில்லை. குருவின் கட்டளை என்பதால் உங்களை அழைத்து வரச் செய்தேன்." என்றார் விந்தையன்.

"ஐயா! எங்களுக்கு உங்களையே இப்போது தான் தெரியும். உங்களது குருவைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் நேற்று இரவு ஒரு சம்பவம் நடந்தது. அதில் குள்ளமான ஒரு நபர் உங்களை வந்து பார்க்கும்படி சொன்னார். நாங்களே உங்களை எங்கே தேடுவது எனத் தயங்கிய போது நீங்களே அழைத்து விட்டீர்கள்" என்றான் தித்தன் பணிவாக.

"என்ன? என்ன? என்னைப் பார்க்க வரச் சொல்லி குள்ளமான ஒருவர் கூறினாரா? அதுவும் முழு நிலவு நாளிலா? சற்றே விவரமாகச் சொல்லுங்களேன்" என்றார் விந்தையன். அவரது குரலில் பரபரப்பு இருந்தது.

"ஐயா! என் பெயர் தித்தன். இரவு நேரக் காவலன்" என ஆரம்பித்து எல்லாவற்றையும் கூறினான் தித்தன். இடை இடையே வேலனும் சில விட்டுப் போன விவரங்களைக் கூறி வந்தான். அவர்கள் பேசப் பேச விந்தையன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். கண்களைத் துடைத்துக்கொண்டார். தித்தன் பேசி முடித்ததும் எழுந்து வந்தார். பெரியவர் எழுந்ததைத் தொடர்ந்து தித்தனும் வேலனும் எழுந்து நின்றனர். இருவரையும் அணைத்துக்கொண்டார் விந்தையன்.

"நீங்கள் இருவரும் என்ன பேறு பெற்றீர்களோ தெரியவில்லை! குருவின் தரிசனம் கிடைத்திருக்கிறதே" என்றார்.

சிவநேசன் அவரை ஆசுவாசப்படுத்தி குடிக்க நீர் கொடுத்தான்.

"ஐயா! எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் சந்தித்ததவர் தான் உங்கள் குருவா?" என்றான் தித்தன்.

"இளைஞர்களே! அவர் சாதாரண மனிதரில்லை. அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த என் 13ஆம் தலைமுறை குரு, தமிழ் காத்த அண்ணல் அகத்தியர் தான் அவர்." என்றார். பேசப் பேசவே குரல் கம்மியது.

விந்தையனின் பேச்சின் தாக்கம் தெரிய அப்படியே அமர்ந்திருந்தார்கள் இளைஞர்கள்.

"நாம் பார்த்தது அகத்திய முனிவரா? அவரா அத்தனை எளிமையாக இருந்தார்? என்ன அன்பான பேச்சு? எவ்வளவு அக்கறை நிறைந்த வார்த்தைகள்? என் மகன் பிறந்த நேரம் எனக்கு மிகப்பெரிய முனிவரின் தரிசனம் கிடத்தது" என எண்ணிக்கொண்டிருந்தான் தித்தன்.

"தித்தா! நீ உண்மையிலேயே கொடுத்து வைத்தவன். எனக்குக் கூட நிஜத்தில் தரிசனம் தராத குருநாதர் உங்களுக்கு தரிசனம் தந்தது மட்டுமல்ல என்னை வந்து காணவும் அறிவுறுத்தி இருக்கிறார் என்றால், உங்களது நல்லூழ் எவ்வளவோ" என்றார்.

சற்று நேரம் அமைதி நிலவியது.

"தித்தா! நீ ஏதாவது கேள்வி எழுப்பினாயா குருவிடம்?" என்றார் விந்தையன்.

"ஆம் ஐயனே! செண்பகப் பொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கும் எனக் கவலைப்பட்டேன். அதோடு பெண்களும் தெருவில் நடமாட வேண்டும், அவர்களுக்கு விருப்பமானதைச் செய்ய வேண்டும் என சொன்னேன். அப்போது தான் குரு நாதர் உங்களை வந்து காணும் படி கட்டளையிட்டார்." என்றான்.

தாடியை நீவிக்கொண்டு யோசித்தார் விந்தையன்.

"அப்படியா? மேலும் விவரங்கள் சொல்ல முடியுமா?"

"ஐயா! மதுரையில் எப்போது பாண்டியர்கள் மீண்டும் நிலையான ஆட்சி செய்வார்கள் எனவும் கேட்டோம்" என்றான் வேலன்.

பளிச்சென மலர்ந்தது விந்தையனின் முகம்.

"அப்படிச் சொல்லுங்கள்! ஒரு வாரத்திற்கு முன்பு தான் மதுரை பட்டத்தரசி அங்கையற்கண்ணி தேவியாருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் செய்தி வந்தது. அதன் சாதகத்தை எப்போது கணிப்பது என யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் குருவின் அருள்வாக்கு வந்தது" என்றார்.

"ஐயனே! மதுரை எங்கோ இருக்கிறது. அங்கு குழந்தை பிறந்த செய்தி உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்றான் வேலன்.

மெல்ல நகைத்தார் விந்தையன்.

"அங்கே என் மாணவர்களில் ஒருவனான கொடுங்கண்ணன் இருக்கிறான். அவன் அரசனுக்கு முக்கியமான அமைச்சன். சாதகம் கணிக்க அவன் தான் செய்தி அனுப்பி வைத்தான்." என்றார்.

தித்தனும் வேலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

எங்கோ தென்னகத்தின் ஓரத்தில் இருக்கும் செண்பகப் பொழிலில் இருந்து கொண்டு மதுரை அரசர் வரை ஆள் வைத்திருக்கிறாரே இந்த மகான்" என எண்ணிக் கொண்டனர் இருவரும். ஆனால் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை.

"சிவநேசா! அந்தச் சுவடிக்கட்டுகளை எடுத்து வா" என்றார் அந்த மகான்.

சிவநேசன் அரையடி உயரம் இருந்த இரு சுவடிக்கட்டுகளை எடுத்து வந்து முன்னால் பணிவோடு வைத்தான்.

"தித்தா! வேலா! இதில் இரு சுவடிக்கட்டுக்கள் இருக்கின்றன. பொதுவாக அரச குலத்தில் குழந்தை பிறக்கும் போது பொதுப்பலன் பார்க்க ஒரு கட்டும், அந்தக் குழந்தையின் எதிர்காலம் குறித்துப் பார்க்க இன்னொரு கட்டும் பயன் படும். இப்போது உங்கள் முதல் கேள்விக்கு வருகிறேன். தித்தா நீ சொல், குருவிடம் என்ன கேட்டாய்?"

"மதுரையில் மீண்டும் எப்போது நிலையான ஆட்சி அமையும் எனக் கேட்டேன் ஐயனே! தவறானால் மன்னியுங்கள்" என்றான் தித்தன் பணிவாக.

"இல்லை இல்லை! தவறொன்றுமில்லையப்பா! இந்த பிரபஞ்சத்தில் எந்த விஷயமுமே காரணமின்றி நடப்பதில்லை. அனைத்துமே கண்ணுக்குத் தெரியாத நூலால் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால் கவலை கொள்ளத் தேவையில்லை. சரி குழந்தையின் பிறந்த நேரத்தை வைத்து பொதுப்பலன் பார்க்கிறேன்" என்றார்.

முதலில் இருந்த சுவடிக்கடை எடுத்து பயபக்தியோடு பிரித்து ஒவ்வொரு ஏடாகத் தள்ளிக்கொண்டே வந்தார். சில ஏடுகளே மிஞ்சியிருந்த நிலையில் ஒரு ஏட்டைக் கையில் எடுத்துப் படித்தார். படிக்கப் படிக்க அவர் முகம் சுருங்கியது.

"என்ன இது? பலன் இப்படி வந்திருக்கிறதே?" என்றார். தாடியை வருடியபடி எதிரில் அமர்ந்திருந்த இரு இளைஞர்களையும் ஏறிட்டார்.

"ஐயனே! என்ன பலன்? நாங்களும் தெரிந்து கொள்ளலாமா?" என்றான் வேலன் பணிவாக.

தலையை ஆட்டிவயர் மேலும் ஒரு முறை கையிலிருந்த ஏட்டைப் படித்தார். மீண்டும் ஒரு முறை பிறந்த நாழிகையையும் ஏட்டில் இருந்த கணக்கையும் ஒப்பு நோக்கினார். முகம் ஏமாற்றத்தைத்தான் பிரதிபலித்தது.

"நல்ல செய்தி வரும் என எதிர்பார்த்தேன். அதுவும் குரு அகத்திய மாமுனியே உங்களுக்குக் காட்சியளித்ததால் நிச்சயம் நல்ல பலன் தான் இருக்கும் என இறுமாந்தேன். என் இறுமாப்புக்கு சரியான அடி." என்றார்.

"ஐயா! ஏடு சொல்லும் செய்தி என்ன?"

"ஹூம்" என நீண்ட பெருமூச்சொன்றை உதிர்த்து விட்டுப் பேசினார்.

"என்னவென்று சொல்வது? இளவசரன் சடையவர்மன் பிறந்த நேரத்தைக் கொண்டு பொதுப்பலன் பார்த்தால் நல்ல பலனே இல்லையப்பா. குழந்தை பிறந்த ஒரு மாதத்துக்குள் மதுரையை விட்டு வெளியேற வேண்டிய நிலை வரலாம். அதுவும் நிரந்தரமாக என்றல்லவா பலன் இருக்கிறது?" என்றார் கவலையுடன்.

கேட்டுக்கொண்டிருந்த தித்தனுக்கு தலையில் அடித்தது போல இருந்தது.

அப்படியானால்..மீண்டும் மதுரையில் பாண்டியர் ஆட்சி மலரவே மலராதா? செண்பகப் பொழிலில் மட்டுமல்லாமல் நெல்லையிலும், இன்னும் பிற இடங்களிலும் மக்கள் அச்சமின்றி வாழவே முடியாதா? என எண்ணி ஏங்கினான். ஏமாற்றத்தில் ஆழ்ந்திருந்த அவன் மனதில் சிறு நம்பிக்கை ஒளி தோன்றியது.

"ஐயா! நான் குரு நாதரிடம் இரு கேள்விகள் கேட்டேன். அதில் முதல் கேள்விக்கான பதில் கிடைத்து விட்டது. ஆனால் இரண்டாவது கேள்விக்கான பதில் கிடைக்க வில்லையே? ஒரு வேளை அந்தக் கேள்விக்கு நற்பலன் இருக்கலாம் அல்லவா?" என்றான் சற்றே உற்சாகமாக. அப்போது செம்பொத்து எனப்படும் பறவை அந்த ஆசிரமத்தில் மாமரத்தில் வந்து அமர்ந்தது. அதனைக் கண்ட விந்தையன் மகிழ்ச்சி பொங்கக் கூவினார்.

"நீ சொல்வது சரி தான் தித்தா! உன் இரண்டாவது கேள்வி என்ன? சீக்கிரம் சொல்" என்றார்.

"செண்பகப் பொழில் எப்போது உலகமே போற்றும் நகரமாக மாறும்? என்பதே என் இரண்டாவது கேள்வி. இதற்குக் கூட முனிவர் பிரான் கூடிய விரைவில் அது நடக்கும், அதுவும் செண்பகப் பொழிலின் பெயரே மாறி வரலாற்றில் நிலையாக இருக்கும் என்றாரே?" என்றான்.

மகிழ்ச்சியே உருவாக இரண்டாவது சுவடிக்கட்டிலிருந்து சுவடிகளைத் தேடினார் விந்தையன். பாதியில் அவர் தேடிய சுவடி அகப்பட வாசித்தார். வாசிக்க வாசிக்க அவரது முகம் மகிழ்ச்சியால் பூரித்தது. அவரையே பார்த்தபடி இரு நண்பர்களும் காத்திருந்தனர்.
Very interesting
 
பொதிகையின் மைந்தன்....

அத்தியாயம் 4:

வேலனுடன் சமாதானம் பேச எவ்வளவோ முயன்றான் தித்தன். ஆனால் எதுவும் பலன் தரவில்லை.

"நீ என்னை அவமானப்படுத்தி விட்டாய்! என்னைப் பற்றி இவ்வளவு தானா நீ புரிந்து கொண்டது?" என்று அதையே திருப்பிச் சொல்லி அனுப்பி விட்டான்.

"நீ ஏன் அவனுடன் பேச மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறாய்? நமக்கு வேறு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. ஐயன் உன்னை வரச் சொன்னார்" என்றான் சிவநேசன் எரிச்சல் கலந்த குரலில்.

"இந்த இரவு நேரத்திலா?"

"ஆம்! ரகசியங்களைப் பேச, இரவு தானே சரியான நேரம்?" என்றான் சிவனேசன்.

மௌனமாக விந்தையன் ஆசிரமத்தை நோக்கி நடந்தான். ஒற்றையடிப்பாதையில் நடக்கும் போது சட்டென யாரோ ஒரு மரத்தின் பின்னால் ஒளிவது போலத் தோன்ற நின்றான் தித்தன்.

"என்ன தித்தா?"

"யாரோ மரத்தின் பின்னால் போவது போல ஒரு ஓசை கேட்டதே?"

"ஆம்! எனக்கும் கேட்டது. இந்தப்பகுதியில் விலங்குகள் அதிகம். ஆனாலும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வா! இருவரும் சென்று பார்ப்போம்." என்று பாதையை விட்டு சற்றே விலகி நடந்தனர்.

இருளில் நடப்பது சற்றே சிரமமாக இருந்தாலும் சமாளித்துக்கொண்டு சென்றனர். சற்று தொலவில் சரசரவென எதுவோ காய்ந்த சருகின் மீது நகர்ந்து போகும் சத்தம் கேட்டது. தீவட்டியை அந்தப் பக்கம் திருப்ப பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருப்பது தெரிந்தது.

"பாம்பு தான் தித்தா" என்றான் சிவநேசன்.

"உம்! இருக்கலாம்!"

"நமக்கு நேரமாகிறது தித்தா! குரு நாதரை அதிக நேரம் காக்க வைப்பது முறையல்ல. வா" என அழைத்துச் சென்றான்.

பெரிய நிலவிளக்கின் ஒளியில் கம்பீரமாக அமைதியாக அமர்ந்திருந்தார் விந்தையன்.

"ஐயனே! தித்தனை அழைத்து வந்து விட்டேன்." என்றான் சிவநேசன். இருவரும் வணங்க ஆசீர்வதித்தார் பெரியவர்.

"உன் நண்பன் வேலன் சமாதானமாகி விட்டானா தித்தா?" என்றார் ஐயன்.

"இல்லை ஐயனே! இன்னமும் கோபம் குறைந்தபாடில்லை. என் சிறு வயதுத் தோழன் அவன். இப்போது விலகியிருப்பது வேதனையளிக்கிறது."

"புரிகிறது தித்தா! கூடிய சீக்கிரமே உன் வேதனை மாற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நான் இப்போது உங்கள் இருவரையும் அழைத்தது மிகவும் முக்கியமான விஷயம். ரகசியமானதும் கூட. நீங்கள் இருவரும் நான் சொல்லும் விஷயங்களை வெளியில் கசியக் கூட விடக் கூடாது. சத்தியம் செய்து தர வேண்டும்." என்றார்.

"அப்படியே செய்கிறோம் ஐயனே!" என்றான் சிவநேசன். விந்தையன் தித்தனை நோக்க அவனும் அப்படியே செய்கிறேன் என்றான். விளக்கின் மேல் இருவரும் ஆணையிட்டதும் திண்டுகள் ஒன்றிலிருந்து சிறு ஓலைச் சுவடியை எடுத்தார் விந்தையன்.

"நீங்கள் இருவரும் மதுரை செல்ல வேண்டும். அங்கே...கொடுங்கண்ணனாருக்கு நான் அளிக்கும் ஓலையை அளிக்க வேண்டும். "

"அவ்வளவு தானா ஐயனே? இந்தச் சிறு வேலைக்கா இத்தனை பீடிகை?" என்றான் தித்தன்.

"இது சிறு பணியே அல்ல தித்தா! வரலாற்றில் நீங்க இடம் பிடிக்கப் போகும் நிகழ்ச்சி இது. செண்பகப் பொழிலின் தலையெழுத்தையே மாற்றப் போகும் மகத்தான பணி அது. செய்ய முடியுமா உங்களால்?"

"இறைவன் அருளால் செய்வோம் ஐயனே!" என்றான் தித்தன்.

"சரி! இரு ஓலைகள் தருகிறேன். ஒன்றை நீங்கள் கொடுங்கண்ணனிடம் கொடுக்க வேண்டும். பிறகு அவன் உங்களை யாரிடம் அழைத்துச் செல்கிறானோ அவர்களிடம் மற்றொரு ஓலையைக் கொடுக்க வேண்டும். இறைவன் கருணையினால் நான் எதிர்பார்ப்பது நடக்கும் என நம்புகிறேன்." என்றார் ஐயன் விந்தன்.

"எப்போது புறப்பட வேண்டும் குருதேவா?"

"இன்னும் மூன்று நாட்கள் கழித்துக் கிளம்பினால் போதும். கால் நடையாகச் சென்றால் நீண்ட நாட்கள் ஆகும். ஆகையால் குதிரை வேண்டும். உங்களிடம் குதிரை இருக்கிறதா?"

"என்னிடம் ஒரு குதிரை தான் இருக்கிறது ஐயனே! ஆனால் சிவநேசனுக்கு ...?" என்று இழுத்தான் தித்தன்.

"கவலை வேண்டாம். நீங்கள் இருவரும் ஒரே குதிரையில் பயணியுங்கள். சிவநேசா உன்னால் குதிரையில் பயணிக்க முடியும் அல்லவா?"

"குதிரையேற்றமே அறிவேன் குருதேவா! மதுரை இங்கிருந்து இரு நாட்கள் பயணம், அவ்வளவு தானே? போய் விடுவோம்."

"அது மட்டுமல்ல! மிக மிக முக்கியமானது, நீங்கள் வழியில் வரும் எந்த ஊரின் வழியாகவும் செல்ல வேண்டாம். காட்டு வழியே சென்றால் போதும். உணவு கையில் எடுத்துப் போய் விடுங்கள். ஆங்காங்கே ஆறுகளில் ஊற்று தோண்டி நீர் அருந்துங்கள். நீங்கள் இருவரும் ஓலை கொண்டு செல்கிறீர்கள் என தெரியத் தேவையில்லை. மேலும் சந்திக்கப் போகும் நபரிடமிருந்து பதில் ஓலை வாங்கி வர வேண்டும். புரிகிறதா?"

"புரிந்தது ஐயனே"

"சிவநேசா, தித்தா இது எளிமையான பணியல்ல. நீங்கள் காட்டு வழியில் செல்லும் போது சதிகாரர்கள் உங்களை கொலை செய்யக் கூட முயற்சி செய்யலாம். எப்படியாவது ஓலையை மதுரையில் இருக்கும் கொடுங்கண்ணனிடம் சென்று சேர்த்து விடுங்கள். நமது நாட்டுக்கு இப்போது அது மிகவும் முக்கியம்." என்றார் விந்தையன்.

"சரி! குருதேவா! வழியில் எனக்கோ, தித்தனுக்கோ ஆபத்து ஏற்பட்டால் யாராவது ஒருவராவது தப்பித்து மதுரையில் ஓலையை சேர்த்து விடுகிறோம்."

"அந்த அளவுக்கு நிலை மோசமாகாது என நினைக்கிறேன். எல்லாம் இறைவன் செயல். இப்போது நீங்கள் புறப்படலாம்" என்றார்.

எழுந்து நின்றனர் இளைஞர்கள் இருவரும். தயங்கினான் தித்தன்.

"என்ன தித்தா?"

"ஐயனே! ஓலைகள்..."

"நீங்கள் கிளம்ப இன்னமும் மூன்று தினங்கள் இருக்கின்றதே? கிளம்பும் போது தருகிறேன். அது வரையில் என்னிடமே இருக்கட்டும்" என்றார். மீண்டும் பெரியவரை வணங்கி விட்டு இருவரும் வெளியில் வந்தனர். இப்போது நிலவு வானில் வந்து விட்டது. முழு நிலவு அல்ல என்றாலும் ஓரளவு வெளிச்சம் இருக்கவே செய்தது. அழகான அந்த வனம் நிலவொளியில் குளித்து இன்னமும் அழகாக காட்சியளித்தது. நண்பர்கள் இருவரும் மௌனமாக நடந்து கொண்டிருந்தார்கள். இரவு விலங்குகளின் ஒலி கேட்டது. அந்த அமைதியான சூழலில் அதுவே பெரிய ஓசையாகக் கேட்டது இருவருக்கும். எதை எதையோ சிந்தித்தபடி மௌனமான நடந்தான் தித்தன். ஆனால் அவனது எச்சரிக்கை உணர்வு அவனை கூர்ந்து கவனிக்க வைத்தது. அவர்கள் நடந்து வந்த ஒற்றையடிப்பாதையை ஒட்டி சில கஜங்கள் தொலைவில் பருத்த மரம் ஒன்று இருந்தது. அதன் பின்னால் யாரோ நின்று கொண்டு இவர்களையே பார்ப்பது போண்ற உள்ளுணர்வு சொல்ல தயங்கினான். ஆனால் சிவநேசன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து கொண்டிருந்தான்.

நடக்க நடக்க அந்த மரத்துக்கும் அவர்களுக்கும் இடையேயான இடைவெளி குறைந்து கொண்டே வந்தது. இப்போது தித்தனின் சிந்தனை எல்லாம் தற்காப்பு பற்றியே யோசித்துக்கொண்டிருந்தது. அவன் படித்த போர்ப்பயிற்சிகள் நிச்சயம் யாரோ அந்த மரத்தின் பின்னாலிருந்து தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என எச்சரித்தது. ஆனால் அந்தத் தாக்குர்தல் திடீரன நிகழும் நேரடித்தாக்குதலா? இல்லை கோழைகள் போல முதுகுக்குப் பின்னால் செய்யும் தாக்குதலா? என அவனால் கணிக்க முடியவில்லை. சிவநேசன் எதையோ பேசிக்கொண்டே வந்தான். அவனுக்கு பதில் சொல்லிக்கொண்டே வந்தாலும் கண்களும் காதுகளும் படு கூர்மையாக இயங்கின தித்தனுக்கு.

அந்த மரத்துக்கும் அவர்களுக்கும் இடயே ஐம்பதடி தான் இடைவெளி. அப்போது தித்தனின் கூரிய செவிக்கு யாரோ இடுப்பிலிருந்து வாளோ, கத்தியோ உருவும் சத்தம் கேட்டது. சற்றே நிதானித்து கணக்குப் போட்டான். ஒரு நொடிக்கும் குறைவான நேரம் தான் ஆனது அந்த ஆயுதத்தை உருவ. அப்படியானால் அது சிறு கத்தியாத்தான் இருக்க வேண்டும். கூர்மையானதாகத்தான் இருக்க வேண்டும். விஷம் கூடத் தோய்க்கப்பட்டிருக்கலாம். சிறு கத்தி என்பதால் நிச்சயம் நெஞ்சுக்குத்தான் குறி வைப்பார்கள். மனமும் உடலும் முழுமையாகத் தயாராக இருந்தன. அந்த நேரத்தில் நிலவொளியின் வெளிச்சத்தில் பளபளவென ஒளி வீசியபடி ஒரு சூரிக்கத்தி முழு வேகத்தோடு சுழன்று வந்தது. தன்னை நோக்கித்தான் தாக்குதல் என்ற நினைப்பிலேயே இருந்த தித்தனுக்கு அந்தக் கத்தி அவனை விடுத்து சிவநேசனைக் குறி பார்த்து வந்ததை அவதானிக்க சில நொடிகள் பிடித்தன.

அதற்குள் கத்தியைப் பார்த்து விட்ட சிவநேசன் ஓவென அலறினான். ஆனால் மிகவும் விரைந்து செயல்பட்டு அவனது காலை இடறினான் தித்தான். இதைக் கொஞ்சமும் எதிர்பாராத சிவநேசன் தடாரென்ற சத்தத்தோடு விழுந்தான். கத்தி அவனைத் தாண்டிச் சென்று மற்றொரு மரத்தில் ஆழப் பதிந்தது அந்தக் கத்தி. அது சிவநேசன் நெஞ்சில் பதிந்திருந்தால் அடுத்த கணமே அவன் உயிர் போயிருக்கும். சிவநேசன் தப்பித்து விட்டான் என்றதும் கத்தியை எறிந்த ஆளைப் பிடிக்க வேண்டும் என மரத்தை நோக்கிப் பாய்ந்தான் தித்தன். அந்த இருளிலும் யாரோ சரசரவென ஓடும் சத்தம் கேட்டது. கீழே கிடந்த கல்லை எடுத்து அவனது குதிகாலைக் குறி வைத்து எறிந்தான். மிகச் சரியாகச் சென்று தாக்கியது அது. ஆனாலும் ஓடியவன் மிகவும் நன்றாகப் பயிற்சி எடுத்திருப்பவன் போல. அவனது ஓட்டம் தள்ளாடினாலும் சிறு சத்தம் கூட எழுப்பாமல் தொடர்ந்து ஓடினான்.

"தித்தா! என்னால் நடக்கவே முடியவில்லை. என்னைக் காப்பாற்று" என்று தீனமாக அலறினான் சிவநேசன்.

"பாவம்! ஆசிரமத்தில் வேலைகள் செய்தவன். இது போன்ற தாக்குதலுக்கு பழக்கமில்லாதவன். ஆனால் நன்றாகத்தான் இருக்கிறான். கத்தி எறிந்த ஆளைப் பிடித்தால் பல விஷயங்கள் வெளியாகும் என்ன செய்ய? என்று தத்தளித்தான். இறுதியில் அவனது இரக்கமே வெல்ல சிவநேசனை நோக்கிப் போனான். பயத்தில் முகம் வெளுத்துக் கிடந்தது அவனுக்கு.

"தித்தா! எனக்கு உயிர்ப்பிச்சை அளித்தாய் அப்பா! இந்த நன்றி எப்படிச் செலுத்துவேன்?" என்றான் உணர்ச்சி மிக்க குரலில்.

"இது என் கடமை தான் சிவநேசா! கத்தியை எறிந்தவன் ஓடி விட்டான். என்னால் அவனைப் பிடிக்க முடியவே இல்லை. நீ எப்படி இருக்கிறாய்?"

"இந்த இரவு நேரத்தில், இந்தக் காட்டில் சாதாரணமாக ஓடுகிறான் என்றால் அவன் நிச்சயம் இந்தப் பகுதியைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும்."

"ஆம்! எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அவனது கத்தி இருக்கிறது. அதை வைத்து ஏதாவது கண்டு பிடிக்க முடியுமா பார்க்கலாம். உன்னால் நடக்க முடியுமா? இரவு நேரத்தில் நாம் இங்கு ஆயுதமின்றி இருப்பது அவ்வளவு நல்லதல்ல." என்றான் தித்தன்.

சிவநேசன் எழ முயன்றான். ஆனால் காலின் வேதனையை முகம் காட்டியது. அவனைக் கைத்தாங்கலாகத் தூக்கி மெல்ல நடக்க வைத்து அழைத்துச் சென்றான்.

"அப்பப்பா! என்ன பயங்கரம்? என்னை எதற்காகக் கொல்ல முயன்றார்கள்? எனக்கு யாரும் பகையே இல்லையே?" என்றான் சிவநேசன் வேதனை மிக்கக் குரலில்.

"உனக்குப் பகையில்லாமல் இருக்கலாம் சிவநேசா! ஆனால் நாம் செய்யப் போகும் பணிக்கு எதிரிகள் இருக்கலாமே? உன் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்றால் நமது அத்தனை திட்டங்களும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறதே? ஆனால் நமக்கு அவர்களைப் பற்றி எதுவுமே தெரியவில்லையே? அது தான் எனக்கு ஆத்திரமாக வருகிறது." என்றான் தித்தன்.

"அடேயப்பா! இந்தத் தாக்குதலின் பின்னால் இத்தனை அரசியல் இருக்கிறதா? ஒற்றர்களாகத்தான் இருப்பார்கள். வேறு யார்?"

"ஒற்றர்கள் தான். ஆனால் யாருடைய ஒற்றார்கள்? சோழரா? சேரரா? இல்லை வேறு ஏதேனும் குறுநில மன்னரா? இப்படி நிறையக் கேள்வி இருக்கிறதே? எந்த ஆதாரமும் இல்லாமல் நாம் ஒருவர் மீது பழி சுமத்த முடியாதே?" என்றான் தித்தன்.

"உனக்கு போர்க்கலைகளோடு நன்றாக அரசியலும் தெரிகிறது. அதனால் தான் குநாதர் உன்னைத் தேர்ந்தெடுத்தார் போல. ஆனால் என்னால் உனக்கு உதவி கிடைக்காது போலத் தோன்றுகிறது. மேலும் நான் தொந்தரவு ஆகிவிடுவேனோ எனத்தான் அஞ்சுகிறேன்." என்றான் சிவநேசன் மெல்லிய குரலில்.

"இல்லை நண்பா! அப்படி இல்லை. உனக்கு சிறிது கூடப் போர்க்கலைகளில் பழக்கமில்லையா?"

"சுத்தமாக இல்லை! நான் கற்றதெல்லாம் மருத்துவம், மூலிகைகள் நோய்களை எப்படிக் குணப்படுத்துவது அவ்வளவு தான். "

பேசிக்கொண்டே இருவரும் ஊருக்குள் வந்து விட்டனர்.

"ஊர் வந்து விட்டது சிவநேசா! உன் வீடு எங்கே என்று சொல்! முதலில் கால் வலிக்கு வைத்தியம் செய்து கொள்கிறாயா?" என்றான் தித்தன்.

"நான் எப்போதும் ஆசிரமத்திலேயே வசிப்பவன் தான் தித்தா! இது போன்ற சில சமயங்களில் எனது சிறிய தந்தையார் வீடு வாய்க்கால் கரைத்தெருவில் இருக்கிறது. அங்கே தங்கிக்கொள்வேன். அவரும் வைத்தியர் தான். ஆகையால் என்னை அங்கே கொண்டு விடு போதும்" என்றான்.

சிவநேசன் சொன்ன வாய்க்கால் கரைத்தெரு சற்றே தொலைவில் உள்ளது. அதை நோக்கி நடந்தார்கள் இருவரும். வழியில் வேலன் கையில் ஈட்டியோடு எதிரே வந்து கொண்டிருந்தான். தித்தனைக் கண்டதும் விலகிச் சென்றான். ஆனால் அவனது நடை சற்றே வித்தியாசமாக இருக்கக் கூர்ந்து நோக்கினான் தித்தன். இடது காலை சற்றே சாய்த்து நடந்தான்.

"நான் எறிந்த கல் ஓடியவனின் இடக்காலைத்தானே பதம் பார்த்தது? இவனுக்கும் இடக்காலில் அடி? அப்படியானால்....?" நினைக்கவே மனம் வேதனைப் பட்டது. தித்தன் கவனிப்பதை பார்த்து விட்ட வேலன் சாய்க்காமல் நடந்தான். ஆனாலும் வலி அதிகம் என்பதை அவனது முகம் காட்டியது. வேலனது கால் வலியை விட தித்தனுக்கு மனம் மிக அதிகமாக வலித்தது.

"வேலா! பொறாமை குணத்தால் நீ என்ன செய்து விட்டாய்? போகக் கூடாத பாதையில் போகிறாயா? சேரக்கூடாதவர்களோடு சேர்ந்து விட்டாயா? அப்படியென்ன கோபம் உனக்கு? பகைவர்களோடு சேர்ந்தால் உனக்கு நல்லதா? மனம் மாறி நீ மீண்டும் வர விரும்பினால் அவர்கள் விடுவார்களா? இப்படி ஒரு புதை குழியில் போய்ச் சிக்கிக் கொண்டாயே?" என வேதனையோடு எண்ணினான். கண்களில் நீர்த்துளி எட்டிப் பார்த்தது.

"என்ன தித்தா? அப்படியே நின்று விட்டாய்? அதோ தெரிகிறதே அது தான் என் சிற்றப்பனின் வீடு. வா போகலாம்" என்றான் சிவநேசன்.

தன் எண்ணத்தை மறைத்துக்கொண்டு மெல்ல அவனை அழைத்துக்கொண்டு வீட்டில் சேர்த்தான். அங்கு இருந்த சிறிய தந்தை அவரது மகன் என அனைவரும் மனமாற வரவேற்றனர். சிவநேசன் நடந்ததை சற்றே மிகைப்படுத்திக் கூற அவர்கள் தித்தனுக்கு மிகவும் நன்றி செலுத்தினார்கள். அவனது வீரத்தையும் சமயோஜித அறிவையும் மிகவும் புகழ்ந்தார்கள். தித்தனுக்கு சங்கடமாக ஆகி விட்டது.

"ஐயா! நீங்கள் சொல்லும் அளவுக்கு நான் அப்படி ஒன்றும் பெரியவன் அல்ல. பாவம் சிவநேசன். வலியில் இருக்கிறார். அவரைக் கவனியுங்கள். நான் சென்று வருகிறேன். இரவுக்காவலுக்குச் செல்ல வேண்டும்" என்று கூறி விடை பெற்றான். அவர்கள் ஏதாவது பானம் அருந்தியே தீர வேண்டும் என்று மோர் கொடுக்க அதை அருந்தி விட்டுக் கிளம்பினான். தன் வீட்டுக்குச் சென்று ஈட்டி எடுத்துக்கொண்டு இரவுக்காவலுக்குச் செல்ல வேண்டும் என்பது அவன் எண்ணம். போகும் வழியில் மீண்டும் வேலனைக் கண்டான்.

"வேலா! கொஞ்சம் நில்லேன்" என்றான் கெஞ்சும் குரலில்.

"என்னை ஏனப்பா நிற்கச் சொல்கிறாய்? உன் புது நண்பன் உடன் வரவில்லையா? அவனோடு பேசுவது தானே? நான் தான் நம்பிக்கைக்கு உரியவன் இல்லையே?" என்று சொல்லி விட்டு நிற்காமல் சென்று விட்டான் வேலன். மனதில் குழப்பமும், வேதனையும் போட்டி போட தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தான் தித்தன்.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom