Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL மாய நிலா - Tamil Novel

Status
Not open for further replies.

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
10. மாய நிலா

ஒரு வழியா மனோவ பிடிச்சி ஆகாஷ் என் பக்கத்துல உட்கார வச்சான், அந்த வீனா போன ஆகாஷ் எனக்கு முதுக காமிச்சு உட்காந்து பாட்டுக்கு பாட்டு போட்டி போட்டு விளாடிட்டு வரவும் நான் கடுப்பாகி தூங்க ஆரமிச்சிட்டேன்.

இறங்க வேண்டிய இடம் வந்தது, ஆகாஷ் பாட்டுக்கு பசங்க கூட பேசிட்டு ரூம்க்கு போய்ட்டான், எல்லோருக்கும் தனித்தனியா ரூம் புக் செஞ்சி இருந்தான், ஸ்டாப்ல ரெண்டு பேருக்கு ஒரு ரூம் ஓகேன்னு மாத்தி, மிச்சம் ரூம்ஸ் கேன்சல் செஞ்சிட்டாங்க.

மனோ, ஆகாஷ் ஷைலுக்கு ஆப்போசிட் ரூம்ல இருந்தாங்க. ரெஸ்ட் எடுத்துட்டு நாளைல இருந்து சுத்திப் பாக்கலாம்னு பிளான் போட்டாங்க.

நைட் கேம்ப் பையர், பார்பிக்யூன்னு பிக்ஸ் செஞ்சிட்டு ஆப்டர்னூன்ல இருந்து நைட் வர நல்லா தூங்கிட்டோம். ஒருவாரம் இருந்த ட்ரிப் ரெண்டு நாளா மாறிடுச்சு.

கல்யாணத்துக்கு நகை எடுக்கணும்னு சொல்லவும். ஆகாஷ் வேணான்னு தான் சொன்னான், மனோ தான் ஷ்டாப்ஸ் கிட்டலாம் பேசி, பேட்சிலர் பார்ட்டி சிறப்பா செஞ்சிடலாம்னு முடிவு செஞ்சிட்டாங்க.

ஷைலு ஸ்பின்டர்ஸ் பார்ட்டி வைக்கிறதாவும் சொன்னதால, மத்தவங்களும் சமாதானம் ஆயிட்டாங்க.

ஒரு நாள் ஏதோ காடு, மலைனு ஏதேதோ மரம் செடின்னு சுத்திக் காட்டி, ஷைலுக்கு ஒரே கடுப்பு, பாய்ஸ் கேர்ள்ஸ் தனி தனியா வேற வேற இடத்துக்கு போறது போல ஏற்பாடு செஞ்சிட்டாங்க.

பசங்க உயரமான இடத்துக்கும், பொண்ணுங்க ஒரு ரெண்டு மணிநேரத்துல ரிட்டர்ன் ஆகுறது போலவும்.

"ஆகாஷ காலைல பத்ததோட சரி, இப்போ ரூம்க்கு வந்து இருப்பானா?" யோசிச்சிட்டே, ஆகாஷ் மனோ இருந்த ரூம்க்கு போய் தட்டினால் ஷைலு.

மனோ டையர்ட்ல டோர துறக்கவும், கண்ணு சிமிட்டுர நேரத்துக்குள்ள ஷைலு மனோவ வெளியே இழுத்து தள்ளி கதவை சாத்த.

"ஷைலு டையர்டா இருக்கு தூங்கணும், கதவை தொற".

நீ போய் என் ரூம்ல படுத்துக்கோ, ஷைலுக்கு பேர் இல்ல தனியாதான் ஆகாஷ் ரூம் போட்டு இருந்தான், முன்னாடி இதுபோல அவளுக்கு ரூம் ஷேர் செஞ்சி பழக்கம் இல்ல அதனால, ஆகாஷ் அவளுக்கு தனியா ரூம் இங்கே செஞ்சி இருந்தான்.

மனோ ஷைலு ரூம்ல போய் படுத்துட்டான், இந்த ஷைலுக்கு அறிவே இல்ல, இப்போ அவன் பேய் ஆட்டம் ஆடிட்டு இருப்பான்.

அப்போதான் ஆகாஷ் குளிச்சிட்டு வெளியே வரான், ஷைலுவ பாத்துட்டு, "இங்க என்ன பண்றா, யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க", ஆகாஷ் சீரியஸ் ஆக பேச.

"ஆகாஷ் உன்ன நான் ரொம்ப மிஸ் பண்ணேன், காலைல இருந்து உன்ன பாக்கவே இல்ல", னு நெருங்கி ஆகாஷ் சோல்டர பிடிச்சிட்டு இருந்தா.

"ஷைலு உன் ரூம்க்கு போ காலைல பேசிக்கலாம்,"

"ஆகாஷ் என்னால முடில, உனக்கு எந்த பீலிங்கும் வரலையா, கல்யாணம் பண்ணிக்க போர பொண்ணு மேல வர பீல் கூட வரலையா". ஷைலு எவ்வளவோ நார்மலா இருந்தாலும் முடில அவளால, ஆகாஷ பக்கம் வச்சிட்டு.

"அப்படிலாம் இல்ல, ஐ லவ் யூ" கீழ குனிஞ்சி மென்மையான ஒரு முத்தம் கொடுத்து ஆகாஷ் விலக.

"இது போதும் ஆகாஷ்," ஷைலு துள்ளல்லோட வெளியே போய் மனோவா இழுத்து வெளியே தள்ளி அவ ரூம் சாத்திக்கிட்டா. மனோ செம காண்டுல கோபமா வந்து படுத்துட்டான், 'மனோ இப்போ நீ கோபப்பட்டா, ஷைலுவை ஏன் விட்டன்னு சண்டைக்கு வருவான்' அமைதியா படுத்துட்டான்.

ஆகாஷ்க்குதான் தூக்கம் எங்கயோ போயிடுச்சி. ஷைலு நினைப்பாவே இருந்தது, அங்க ஷைலு நிம்மதியா ஆகாஷ நினைச்சிட்டு தூங்கிட்டா.

அன்னைக்கு நடக்க இருந்த கேம்ப் பையர் வந்தனால முடில.. இந்த லாஸ்ட் டே ஆப்டர்னூன் மேல எல்லோரும் ரெஸ்ட் எடுத்துட்டு நைட் கேம்ப் பையர்க்கு வராங்க.

ஷைலுக்கு திடீர் கிளைமேட் சேஞ்க்கே அவ உடம்பு ஏத்துக்களை, ஒரு மாதிரி தும்பிடேய் இருக்கா, கோல்டு வேற. ஆகாஷ் கேம்ப் பையர்ல ஒரு ஓரமா உட்காந்து இருக்குற ஷைலுவை பாத்துட்டு போய் பக்கம் உட்கார்ரான்.

"நீ போ ஆகாஷ், நான் பாத்துக்கிறேன்".

"ஷைலு நெருப்பு பக்கம் உட்காந்தா கொஞ்சம் பெட்டர்ரா பீல் பண்ணுவா" னு ஆகாஷ் கூட்டிட்டு போய் உட்கார வைக்கிறான். எல்லோரும் பாத்து தானவே என்ஜாய் பண்றாங்க.

இங்க ஆகாஷ் ஷைலுவை சோல்டர்ல தலைய சாச்சிவச்சி அவள இஞ்சி டீ குடிக்க வச்சிட்டு இருக்கான். ஷைலு ஆகாஷை கண்கள் மின்ன பார்த்துக் கொண்டே குடித்து முடித்தாள்.

"ஆகாஷ் நான் ரூம்க்கு போறேன்",

"வா ஷைலு நான் உன்ன கூட்டிட்டு போறேன்"

"இல்ல மா நீ இங்க என்ஜாய் பண்ணு".

சைலுவை கூட்டிட்டு போன ஆகாஷ் அவளை படுக்க வைச்சிட்டு பக்கத்தில் அமர்ந்து தலையை வருடிக் கொண்டு இருந்தான்... இன்னும் ஒரு வாரத்துல இவ என் பொண்டாட்டி, ஆனா அதுக்கு அப்புறம் எவ்ளோ சீக்கிரமா அவளை புரிஞ்சிக்கறானோ அப்போதான் என் வாழ்க்கை எனக்கு சேப், என்று நினைத்தவன் அவள் அறையில் கிழே படுத்தான்.

ஆகாஷ் நன்றாக தூங்கிவிட்டான். ஆகாஷ்க்கு ஒரு பக்கம் படுத்து இருந்ததால் கை வழி திரும்பி படுத்தான். ஷைலு நல்லா ஆகாஷ் மீது முழு பாரத்தை போட்டு தூங்கிக்கொண்டு இருந்தாள்.

"இவ எப்போ இங்க வந்தா, சரியான இம்சை" அவளை திட்டிக்கொண்டே நகர்ந்து படுத்து ஷைலு முகத்தில் இருந்த முடியை ஊதித் தள்ளினான்.

"ஆகாஷ் கூசுது அமைதியா இரு என்று சிணுங்கினாள்".

"கழுதை, பைத்தியக்காரி தூக்கத்துல கூட என்ன தான் நினைச்சிட்டு இருப்பா போல" என்று நினைத்தவனுக்கு, உள்ளுக்குள் இனித்தது. ஷைலுவை நெருங்கி முத்தம் கொடுக்க போன போது ஷைலு ஏதோ குறுகுறுக்க எந்திரித்து.

"ஆகாஷ் என்ன பண்ற, என்று கண்களை தேய்க்க" அந்த கேப் பயன் படுத்திக் கொண்ட ஆகாஷ், தூங்குவது போல கண்களை மூட. ஷைலு கண்களை தேய்த்துவிட்டு ஆகாஷை பார்க்க அவன் நன்றாக தூங்கிக்கொண்டு இருக்க, ஆகாஷை நெருங்கி படுத்து, "இம்சை பிடிச்சவனே, ஏன்டா என்னைவிட்டு தூரம் படுத்து இருக்க, எப்போ பாரு கனவுல வந்து கடிக்க வேண்டியது இல்ல கிஸ் கொடுக்கவேண்டியது நேர்ல ஏதும் தரமாட்டல்ல ராட்சசா..." என்று திட்டிக்கொண்டே ஆகாஷ் மூக்கை நன்கு கடித்து வைத்தாள்.. வழி பொறுக்காமல் ஆகாஷ் கத்தத் தொடங்கினான்.

"எதுக்குடி கடிச்ச".

"அது அழகா ஷார்ப்பா இருக்கு அதான் கடிச்சேன்" என்று சாதாரணமா சொல்லிட்டு. அவன் இடைல ஒரு கடி கடிக்க.

"இங்க எதுக்கு டி கடிச்ச",

"அதும் அழகா இருக்கு, அதான் கடிச்சேன்" னு சிறுபிள்ளை விளக்கம் சொல்லிவிட்டு தூங்கினாள். ஆகாஷ் மேல ஒரு கை கால் போட்டுகொண்டு.

இம்ச பிடிச்சவ, அவள் தலையை தொட்டுப் பார்த்து, இப்போ சரியா போச்சி போல உடம்பு.. அவள் தூங்கும் வரை இருந்தவன், ஷைலு தூங்கிட்டாளான்னு பார்த்து தூக்கி பெட்ல படுக்க வச்சிட்டு... ஆகாஷ் அவன் ரூம்க்கு போய்ட்டான்.. கேம்ப் பையர் முடிச்சிட்டு ஒரு ஒருவராக விடியர் காலை வரத் தொடங்கினர்... ஒரு நாளு மணிநேரம் தூங்கிட்டு ரிட்டர்ன் போர பிளான்.

காலைல ஒரு 8 மணிக்கு எல்லோரும் சாப்பிட்டு தயாராக, "மனோ ஷைலுவ காணோம்?"

"நேத்து ஒடம்பு சரி இல்ல நல்லா தூங்குவா போல" என்று மனோ சொல்ல.. ஆகாஷ் அவள் அறையை நோக்கிச் சென்றான்.

ஷைலு பெட்ல படுத்து இருக்கா, "என்ன இன்னும் என்ன தேடி வரல அவன்?" கதவு தொறக்கும் சத்தம் கேட்கவும் ஷைலு கண்ணை மூடி படுக்க.

"ஷைலு டைம் ஆச்சி எந்திரி கிளம்பனும்".

"ஆகாஷ் முடிலடா தூக்கமா வருது, இல்ல இல்ல மயக்கமா வருது, எனக்கு எதாவது ஆய்டுமா" என்று ட்ராமாவை துவங்க, ஆகாஷ் கண்டு பிடித்துவிட்டான். "இவளுக்கு ஒடம்பு சரி இல்லனா பேசவே மாட்டா, பக்கம் பக்காம எழுதி குடுத்தது போல பேசிட்டு இருக்கா இப்போ" என்று நினைத்தவன்.

சரி வா நான் தூக்கிட்டு போறேன் என்று ஆகாஷ் சொன்ன உடனே ஆர்வமாக கையை நீட்ட, "அடிச்சிடுவேன் நாயே, எந்திரிச்சி வா அங்க வெயிட் செய்றாங்க".

ஷைலு சோகமா ஆகாஷ் பக்கம் போய் உட்கார... இந்த முறை ஆகாஷ் ஜன்னல் ஓரம் உட்காந்து இருக்க ஷைலுக்கு நல்ல வசதியா போச்சி அவன திரும்ப கூட விடல ஷைலு. ஏதேதோ பேசிட்டு, அவன் வாயில இருந்து நினைத்த பதிலை வாங்கிக்கொண்டு வந்தா...

"நாளைக்கு டிரஸ் எடுக்க போறோம் ஆகாஷ், உனக்கு நான் செலக்ட் செய்வேன், எனக்கு நீ செய்யணும் புரியுதா" என்று ஆகாஷ்க்கு சொல்ல "சரி டி" சொன்னவன் தூங்க ஆரம்பித்தான். ஷைலுவும் அவன் தோல்மீது சாய்ந்து தூங்கத் தொடங்க, மனோ இவர்கள் தூங்கும் அழகை போட்டோ எடுத்து ஆகாஷ்க்கு அனுப்பி வைத்தான். இப்போ ஆரம்பித்த பழக்கம் தான் மனோக்கு, ஷைலு செய்யும் சேட்டைகளை ரெகார்ட் வீடியோ செஞ்சி ஆகாஷை தனிமையில் வாடாமல் நன்றாக பார்த்துக் கொண்டான், ஆனால் இவள விட்டுட்டாங்க ரெண்டு பேரும்.

ஷைலு கல்யாணத்துக்கு ஒன்னு ஒன்னும் பாத்து பாத்து செய்தான் ஆகாஷ்... திருமணமும் சிறப்பாக முடிய.

ஷைலு அட்ராசிட்டி சுத்தமா ஆகாஷ் ஆள பொறுக்கவே முடில, எப்போ பாரு ஆகாஷ் ஆகாஷ்னு பின்னாடியே திரிஞ்சிட்டு, அப்படித்தான் ஒரு நாள் "உன்ட பேசணும் டா" போகும் அவன் கையை பிடித்துக்கொண்டு அவளும் போக. ஆகாஷ் தான் பதறிட்டான்.

"ஹேய் எங்க டி வர,"

"அதான் சொன்னனே தனியா பேசணும்".

ஆகாஷ் காண்டாகி, "எங்க பாத்ரூம்ல வச்சி பேசணுமா" அப்போவர ஷைலு கவனிக்கல.
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
11. மாய நிலா

சாரி ஆகாஷ்னு சொல்லி ஓடினவள், ஒரு நாள் ஆகாஷை பாக்கும் போது சங்கடமாக நெளிந்துகொண்டு இருந்தாள்.

கிருஷ்ணன், அகிலாவிடம் சொல்லிவிட்டு கொஞ்ச நாளைக்கு வேற வீட்ல இருக்கோம்ன்னு சொல்லி வேறு வீட்டுக்கு சென்றார்கள் இருவரும்.

அத்தனை பேர் முன்னாடி சுத்திக்கொண்டு இருந்த சைலு தனியா இருந்தா சும்மா விடுவாளா, ஆகாஷ் அது இதுன்னு பேசுனது மட்டும் இல்லாமல் நினைக்கும் போது முத்தம் கொடுப்பது கடித்து வைப்பதுனு ஆகாஷை வச்சி செய்தாள்.

ஆகாஷ் உணர்வுகங்களை அடக்கத்தான் பெரும் பாடுபட்டான், "இவளை சும்மா விடக்கூடாது இன்னைக்கு பக்கம் வரட்டும் இருக்கு," என்று நினைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தான் ஆகாஷ்.

ஷைலு அப்போதுதான் எந்திரித்து ரெடி ஆகி ஆகாஷை தேட, சாப்பிடும் ஆகாஷை பார்த்து ஓடிவந்து ஆகாஷ் மடி மீது உட்கார்ந்து "ஊட்டிவிடு" என்றாள்.

ஆகாஷ்க்கு வந்தது பாரு கோபம் "வேணும்னா போட்டு தின்னு, மனுசன சாப்பிட கூட விடாம டார்ச்சர் செய்ற இடியட்னு" திட்டிட்டு போனவன், நைட் லேட்டா தான் வீட்டுக்கு வந்தான்.

ஷைலு அவனை மிரட்சியோடு பார்த்துக்கொண்டு இருந்தாள், அவன் போற இடத்துக்கெல்லாம் மெதுவா ரெண்டடி தள்ளி நடக்க ஆகாஷின் பொறுமை எங்கோ பறந்தது.

"எதுக்குடி இப்போ பாலோவ் செஞ்சிட்டு இருக்க" என்று கத்திட்டு இருக்கவனை பார்த்த ஷைலு ரெண்டு அடி பின்னாடி போய் பயந்து நடுங்க ஆரம்பிக்க. ஆகாஷ்க்கு இந்த ஷைலு புதிது, "என்னாச்சி உனக்கு" என்று ஆகாஷ் நெருங்க ஷைலு வேறு ஒரு அறையில் நுழைத்து கதவை சாத்திக்கிட்டா.

ஆகாஷ்க்கு என்ன செய்றதுனு தெரியல, வேற சாவி தேடி பிடித்து, கதவை திறந்து பார்த்தால் ஷைலு எங்கும் இல்லை.

எங்க போனான்னு தெரியல பாத்ரூம் ஸ்டோர் ரூம்னு எல்லாம் பாத்தவன், கட்டில் கீழே பார்க்க ஷைலு முகத்தை பொத்திக்கொண்டு படுத்து இருந்தாள், "ஷைலு இங்க வா, அங்க என்ன செய்ற?"

"நான் வரல நீ அடிப்ப ஆகாஷ், எனக்கு இப்போலாம் உன்ன பாத்தா பயமா இருக்கு, ட்ரீம்ஸ்ல வந்தது போலவே நீ என்னை விட்டுட்டு போய்டுவியா" என்று ஷைலு ஏதோ பிதற்றிக்கொண்டு இருக்க, ஆகாஷ்க்கு ஒன்னும் புரியல. இந்த ஷைலு புதியவள், எப்போதும் பயப்படாமல் திரிந்து கொண்டு இருக்கும் இவளை, காதல் இவ்வளவு பலவீனம் ஆக்கிவிட்டது என்றுதான் ஆகாஷ்க்கு தோன்றியது.

"பேபி, உன் ஆகாஷ் உன்ன விட்டு எப்பவும் போகமாட்டேன்" என்று சமாதானப் படுத்தி, ஆகாஷ் மடி மேல உட்கார வச்சி சாப்பாடு ஊட்டிவிட, ஷைலு அமைதியா சாப்பிட்டாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை கண்களை நல்லா துடைச்சிவிட்டு, "ஒன்னும் இல்ல பாப்பா ஆல் ரைட் இப்போ சமத்தா தூங்கணும்னு சொல்லி, ஆகாஷ் அவளை படுக்க வைத்து அருகில் படுத்து ஷைலு கையை எடுத்து அவன் மீது போட்டுக்கொண்டு நெருங்கி படுக்க வைத்தான்.

ஷைலுக்கு ஏதோ போல இருந்தது, ஆகாஷின் அருகாமையில் ஏதோ கூச்சமாக இருக்க, "ஆகாஷ் விடு நான் தனியா படுத்துக்கிறேன்" என்ற ஷைலுவை வினோதமா பார்த்து.

"என்னாச்சி மா" என்று ஆகாஷ் கேட்க.

"எனக்கு இப்போ ஏதோ கூச்சமா இருக்கு, உன் பக்கம் வந்தா. நான் எதாவது செஞ்சிட்டா உன்ன, அப்புறம் பேபி வரும், உனக்கு ஒன் இயர் டைம் வேணும்ல" என அந்த குழப்பமான பயச்சூழலிலும் அவனுக்காக யோசித்தாள்.

காதல் வந்தால் அனைவருக்கும் ஏதோ ஆகிவிடும் போல.

"ஹேய் பேபி, அதுலாம் ஒன்னும் இல்ல பக்கம் வா, வந்து ஒரு முத்தம் தா என்று ஆகாஷ் இதழை காமிக்க" ஷைலு கண்களை பொத்திக்கொண்டு திரும்பி படுத்துக்கிட்டா. ஆகாஷ் அவளை நெருங்கி "தங்கமே இங்க வா ஒரு உம்மா கிடைக்குமா?" என ஷைலுவை வெக்கப்படுத்திக்கொண்டு இருந்தான்.

அவளது உடல்மொழி ஆகாஷ்க்கு புரியாமல் போகுமா என்ன, பிடித்தவன் அருகில் இருந்தும் விலகி இருப்பது அவளுக்கு வலிக்கத்தான செய்தது.

"ஷைலு, ஷல் வி மேக் லவ்?"

ஷைலு அதிர்ச்சியிலே ஆகாஷை பார்க்க.

"பிடிக்கலையா" என்று ஆகாஷ் கேட்க.

"பிடிக்கும், ஆனா இப்போ வேண்டாம்" என்று ஷைலு இப்போது தெளிவாக பேச.

ஆகாஷ்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, ஒருமுறை நெருங்கினாள், அவனால் அவளை எப்போதும் பிரிய முடியாது. அந்த நபரை வேறுகண்டு பிடிக்கணும், அவன் நிறைய சிக்கல் செய்து வைத்து இருந்தான், அதையும் சரி செய்யனும் என்று யோசித்தவன். "ஷைலு சாரி, ஒன் இயர் இப்படியே போய்டும்" என்று அவளுக்கு சமாதானம் சென்னான்.

ஷைலு தலையை ஆட்டி, "ஆனா டெய்லி வீடியோ கால் பேசணும் இல்லாட்டி நான் கிளம்பி வந்துடுவேன்", ஆமா ஆகாஷ் நல்லா சொல்ல போகிறான் இன்னும் ஒரு வருடத்துக்கு எங்களது வாழ்க்கை வீடியோ கால்ல தான் போகும், சில முறை ரொம்ப பிஸி அப்போ மட்டும் பேசலனா அதுக்கு சார்ஜ் செஞ்சி வட்டி குட்டி என அடுத்த கால் பல மணி நேரம் தொடரும்.

அடிக்கடி சண்டை வரும், இவன் எந்த போஸ்ட்டும் போடமாட்டான், ஆனால் இவனை டேக் செய்து நிறைய அதும் பெண்கள் கூட இருக்க போட்டோ பாத்தா பொங்கிடுவா அப்படித்தான் ஒரு நாள் பொங்கி, சரக்கு அடிச்சி உங்கட்ட வந்து கதை சொன்னேன் என்று ஷைலு கதையை சொல்லி முடித்தாள்.

கதை சூப்பர் தான் ஹாப்பி எண்டிங் தான், "ஆனா அந்த முகம் ஒரே போல இருக்கிறது யாரு ஒரு வேலையா இருக்கும்?".

"இல்ல சான்சே இல்ல அந்த பேஸ்க்கும் உடம்புக்கும் சம்பந்தமே இல்ல, ஏதோ சர்ஜரி செஞ்சி விளையாடறாங்கன்னு ஷைலு சொல்ல".

மனோ ஷைலுவை வியப்பாக பார்த்தான், இதை கண்டுபிடிக்க அவங்க ஒரு வருஷம் எடுத்து கிட்டாங்க, ஆனா ஷைலு ஒரு டைம் போட்டோ பாத்து சொல்லியிருக்கா.

ஆகாஷ்க்கு இதை மெசேஜ் தட்டிவிட்டா, மனோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தது, ஆனால் இந்த முறை அவளை சட்டை கூட செய்யல.

அளவுக்கு மீறி குடித்ததால் ஷைலு வாமிட் செய்தால், இப்போது தெளிவாகவே இருந்தாள், இப்போது போய் பார்ட்டிய நல்லா என்ஜாய் செய்தால், அந்த புது நட்பு வட்டாரத்தோடு. என்னதான் ஷைலு சிரித்துக்கொண்டு இருந்தாலும் ஆகாஷை அடிக்கடி கண்கள் தேடத்தான் செய்தது.
ஆகாஷ் முடியும் வரை வரல, ஷைலு பொறுத்தது போதும் அத்தை மாமா இருக்குற வீட்டுக்கு போய்டலாம்னு அவளோட திங்ஸ் எல்லாம் பேக் செஞ்சிட்டு நைட்டே அவங்க கூட கிளம்பிட்டா.

ஆகாஷ் அங்கு அந்த பொண்ணை எப்படி மிரட்டியும் அவன் யார் என்பதை சொல்லலை, எல்லை மீற நெருங்கின போதும் கூட சொல்லலை. "என்னமாதிரியான பொண்ணு இவ, ஒன்னும் புரியலயே".

ஷைலு நினைவு வேறு ஒரு பக்கம் அவளை வாட்ட ஆகாஷ் கிளம்பி சென்றான் அடுத்த நாள், வீடு வெறிச்சோடி இருந்தது. 'எங்க போனா அம்மா வீட்டுக்கு போயிருப்பாளோ' என்று யோசித்தவன் நேரா ஷைலு வீட்டுக்கு போக அங்கு அவள் இருந்தாள் தான.

"என்ன ஆகாஷ் தனியா வந்து இருக்க", அப்போ இவ இங்க வரல நம்ம வீட்டுக்கு தா போய் இருப்பா என்று யோசித்த ஆகாஷ்.

"அது மாமா பிசினஸ்ல ஒரு டவுட்னு மொக்கையா ஓரு டவுட் கேட்டுட்டு, விட்டா போதும்னு ஓடிட்டான். நேரா அவன் வீட்டுக்கு தான் போனான் ரூம் போக இருந்த கால்கள் கிட்சேன்ல பேச்சி சத்தம் கேட்கவும் அங்கு சென்றான் ஆகாஷ். கண்கள் தானாகவே விரிந்தது கண்ட காட்சி அப்படி.

கிருஷ்ணன் தோசை சுட்டுக் கொண்டு இருக்க மாமியாரும் மருமகளும் திட்டில் ஏறி உட்காந்து "மாமா, ஆனியன் தோசை, முட்ட தோசை" னு மாறி மாறி ஆர்டர் செய்ய அவரும் சலிக்காம சுட்டு போட்டுக்கொண்டு இருந்தார்.

அப்பா எனக்கும் தோசை வேணும் பேப்பர் தோசைனு சொல்லி, ஆகாஷ் ஷைலுவை இடிச்சிக்கிட்டே உட்கார ஷைலுக்கு ஏதோ போல ஆக.

"மாமா எனக்கு போதும்னு பிலேட்டை வச்சிட்டு ரூம்க்கு ஓடிடுறா."

"என்ன இவன் போக்கே சரி இல்லையே அன்னைக்கு ட்ரீம்ஸ்ல நடந்தது இப்போ நடந்துடுமோ" என்று பயந்துட்டே ஷைலு படுத்து தூங்கிட்டா.

ஆகாஷ் அப்பா அம்மாட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு, "இனி இங்கதான் இருக்க போறோம் வீடு காலி செய்ய வேலைக்காரங்கட்ட சொல்லிட்டு வந்துட்டேன்" னு சொல்ல ரெண்டு பேருக்கும் ஒரே ஹாப்பி.

'எங்க இந்த சுண்டெலிய காணோம்' யோசிச்சிட்டே போக, "நம்ம பெரிய பிளான் போட்டுட்டு வந்தா என்ன இவ அதுக்குள்ள தூங்கிட்டா", ஆகாஷ் சத்தமா பேசிட்டு மெதுவா அவ பக்கம் போய் படுத்துட்டான்.

ஷைலுக்கு பதறிடுச்சி, இந்த ஒரு வருசத்துல, ரெண்டு பேரும் ஒன்னா உட்காந்தது கூட கம்மிதான், ஷைலு பக்கம் போன ஆகாஷ் எந்திரிச்சி ஓடிடுவான், அவன் வந்து படுக்கவும் ஷைலுக்கு லைட்டா ஜெர்க் ஆகிடுச்சி.

இப்போ என்ன செய்றதுன்னு அவளுக்கு ஓரு ஐடியாவும் இல்ல, எந்திரிச்சி ஒரே ஓட்டமா ஓடிட்டா.

ஆகாஷ் ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு சாப்பிட கீழே வந்தான்.

ஷைலு சாரீல லைட்டா இடுப்பு தெரிய, ஆகாஷ் மெதுவா கையை வைக்க, 'ஷைலு கண்ட்ரோல் அவனே ஸ்டார்ட் செஞ்சி அப்புறம் அட்வைஸ் செஞ்சி கொள்ளுவான், அதும் பாத்தாதுன்னு ஒன் இயர் டைம் கேட்டுட்டு ஒரு மாசம் கழிச்சி வந்து இருக்கான், இவனிடம் பேசக் கூடாது,' என்று யோசித்தாள் ஷைலு. அமைதியா அவன் கையை ஓரகண்ணால பாத்துட்டு இருக்க, வேண்டா வேண்டா ஆகாஷும் கையெடுத்துட்டேன் ஷைலு நெழிவதை பார்த்துட்டு. 'நம்ம ஆளு நம்ம விருப்பமில்லாம எதும் பண்ணமாட்டாங்க' என்று நிம்மதியா ஆகி ரெண்டு நிமிஷம் கூட ஆகல. அடுத்த சீண்டல்கலோடு சாப்பிட்டு முடித்தார்கள், அதன்பின் ஷைலு அறை பக்கமே போகவில்லை.

அகாஷ் விட்டுட்டு அவன் வேலை பார்க்க சென்று விட்டான், இரவு விழாக்கு போயிட்டு வந்து கவனிக்கலாம்ன்னு விட்டுட்டான்.

அன்று ஒரு விழாக்கு போக வேண்டி இருந்து, இருவரும் கிளம்பி செல்லும்போது ஆகாஷ்க்கு ஒரு அழைப்பு வந்ததும் ஷைலுவை இறக்கி விட்டுட்டு கிழம்பினான்.

"டேய் அவன் கிடைச்சானா, எத்தனை முறை பிடிச்சி பிடிச்சி அவனை தப்பிக்க வைக்க முடிவு செஞ்சி இருக்கீங்க, உங்களுக்கு சம்பளம் கொடுத்ததுக்கு என்ன பிச்ச எடுக்க வச்சிடுங்க டா."

இங்கு வேண்டா வெறுப்பாக ஷைலு விழாவில் கலந்து கொண்டுவிட்டு, டாக்ஸி புக் செய்துவிட்டு அமர்ந்து இருந்தாள், டாக்ஸி வந்ததும் ஏறும் போது ஏதோ ஒரு ஸ்ப்ரே செய்ய, மயக்கம் போட்டு விழுந்தாள்.

ஷைலுவை கடத்திய விசயம் ஆகாஷ்க்கு சொல்லப்பட்டது.

ஒரு வினோதமான பெண் குரல் "ஒழுங்கா நான் சொல்ற இடத்துக்கு இன்னும் அறை மணி நேரத்துல வந்துடு".

ஆகாஷ் வண்டியை திருப்பிக்கொண்டு அந்த வினோத குரல் சொன்ன இடத்துக்கு விரைந்தான்.

மாயா, மாயம் செய்ய வருவாள்.
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
12 மாய நிலா

வசியும் சாந்தியும் இங்கு யார் இந்த கொலையை செய்ததுன்னு ஒரு மாசம் அலைந்து திரிந்துகொண்டு இருந்தார்கள்.

உடனே வீட்டுக்கு போகணும் என்று நினைத்த ருத்ரனின் மனம், கப்பலில் இருந்து இறங்கியதும் மாறியது. சீக்கிரம் சென்று எப்படியும் பெரியதாக கலட்டப் போவதில்லை. திரும்ப ஊரை சுற்றிப்பார்க்க நேரம் கிடைக்குமோ கிடைக்காதோ இந்த நிரந்திரம் இல்லாத உலகில் நேரம் கிடைக்கும் போதே உபயோகித்துக்கொள்ள வேண்டும் என திட்டம் போட்ட வசி.

இந்த இடத்தில் விடுதியில் தங்குவது சரி வராது எதாவது ஒரு வீடு எடுத்தால்தான் சரிவரும் என்று எண்ணிய ருத்ரா, அவனது செல்வாக்கை வைத்து இருபது நிமிடத்தில் இருவரையும் அழைத்து செல்ல கார் வந்து நின்றது. அதில் ஏறிக்கொண்டவர்களை ஒரு அழகிய அரண்மனை போல ஒரு வீட்டில் இறக்கி விட்டார்கள்.

அக்னி நிலாவுக்கு எதுவும் நியாபகம் இல்லை தனக்காக யாரோ காத்துக்கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு இருந்துக்கொண்டிருந்தது. அதை ஒதுக்கிவைத்தவள் களைப்பு தீர இருவரும் படுத்து தூங்கிக்கொண்டிருக்க, அக்னிக்கு ஒரு கனவு வந்துகொண்டிருந்தது "வேண்டாம் எரிக்காதிங்க" என கத்த துவங்கினாள், ருத்ரா அவளை சமாதானப் படுத்திவிட்டு, மனதை மாற்ற ஊர் சுற்ற கிளம்பினார்கள்.

அக்னியை அதன் பிறகு ருத்ரா ஒரு முறை கூட கலங்க விடவில்லை. இப்படியே நாட்கள் நகர்ந்து, அக்னி நிலாவை கூட்டிக்கொண்டு, இரண்டு வாரம் ஊர் சுற்றிவிட்டு, ருத்ரனுக்கு ஒதுக்கப்பட்ட அந்த ஆபீஸ் வந்து சேர்ந்தனர் இருவரும்.
வசிக்கும் அக்னி நிலாவை பார்த்து, 'இந்த முகம் எங்கோ பார்த்தது போல இருக்கே?' இவன் குழம்புவதை பார்த்த ருத்ரா.

"இவ என்னோட புது தோழி, இவங்க யாரு" சாந்தியை பார்த்து கேட்டான் ருத்ரா.

"இவள் தான் மிஸ்டர். ஜீரோ ஓட லவ்வர்".

" ஓ... நீ சொன்ன அரை கிறுக்கு இதுதானா".

"டேய்ய் யார பார்த்து அரை கிறுக்கு சொல்ற, சாந்தி சராசரி உயரம் தான், ருத்ரா பக்கத்தில் ரொம்ப குட்டியாக இருந்தாள்.

"போ போய் பால் குடி, நாங்க பேச வேண்டியது நிறைய இருக்கு" சாந்தியை ஒரு விரல் கொண்டு தள்ளி விட்டுட்டு வசி அருகில் சென்ற சமயம். சாந்தி "இரு டா உனக்கு இருக்கு, என்னோட ஆளை கண்டு பிடிச்சி உன்ன அடிக்க சொல்றேன்."

"யாரு அந்த பொறுக்கி பையனை‍, அவன் ஏன் கையில் கிடைக்கட்டும் அப்போ இருக்கு அவன் சாவு என் கையால் தான்". சாந்திக்கு இந்த ருத்ராவை சுத்தமா பிடிக்கல ஏன்னு அவளுக்கே புரியவில்லை.

வசியும், ருத்ராவும் பேசிட்டு இருக்க, அக்னி நிலா அவள் கையில் ஒரு போட்டோ பிரேமோடு நின்று இருந்தாள். வசியிடம் குடுக்க சொன்னான் ருத்ரா, வசி என்ன நினைத்தான்னே தெரியவில்லை "அதை நீயோ வச்சிக்கோ".

ருத்ராக்கு சாந்திக்கூட விளாடுவது பிடித்து இருக்க, கோபமாக சாந்தி ஒரு அடி எடுத்து வைக்க‌ அவள் ஜடையை பிடித்து இழுத்து விளாடிக் கொண்டு இருந்தான். சாந்தி கோவத்தில் அடித்தாலும் ருத்ராக்கு எறும்பு கடித்தது போல இருந்தது.

ருத்ராக்கு சாந்தியை கண்டதும் காதல் பொங்கியது, ஆனால் அவள் மனதில் வேறு ஒருவன் இருக்க இனி சாந்தியை தொந்தரவு செய்யக் கூடாது என நினைத்து ருத்ரன் அவளிடம் ஒரு ஒதுங்கி இருந்தான்.

இங்கு வசி அக்னி நிலாவை பார்த்து "உன் பேர் என்ன," அவன் சாதாரணமாக பேசியது அவளுக்கு எதோ மிரட்டுவது போல தெரிய அக்னி நிலா திக்கித்திணறினாள்.

"அக்னி நிலா" என்றாள்.

"பேர் நல்லா இருக்கு, இனி நீதான் என் லவ்வர், லவ் பண்ற நீயும் புரியுதா?" அக்னி நிலா சற்றும் யோசிக்காமல்.

"நான் ருத்ராவை லவ் செய்றேன்" அக்னி நிலா சொல்லிவிட்டு ருத்ரா கையை இறுக்கமாக பிடித்து நின்றாள் அக்னி நிலா.

வசிக்கே சற்று முன்பு அக்னி நிலாவிடம் பேசியது ஆச்சரியம், கனவில் வந்த ஒரு பெண்ணுக்காக இவ்ளோ வருடம் காத்து இருந்தான், ஆனால் இப்போ முன் பின் தெரியாத ஒரு பெண்ணிடம் அதிரடியாக திருமணம் வரை பேசியது அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது, வசிக்கும் சிறு அதிர்ச்சி இருக்கத்தான் செய்தது.

வசியை முறைத்துக்கொண்டே, அக்னி நிலா சாந்தி ருத்ரா சண்டை போடுவதை பார்த்து, "ஏன் ருத்ரா என்ட மட்டும் நீ சண்டையே போட்டதில்ல?".

"நீ என் தங்க குட்டி உன்ட போய் சண்டை போட முடியுமா, சில அராத்து பொண்ண பாத்தாதான் சண்டை பிடிக்க தோணும்" என்றான் ருத்ரா, அக்னியை ஒரு பெட் அனிமல் போல கொஞ்சும் குரலில்.

அக்னி நிலா கண்களில் அன்பு மின்ன, "நிஜமா வா ருத்ரா?".

அக்னி நிலா தலையை கலைத்து விட்டு, ஆமாடி என் தங்கம் அக்னி நிலா கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்தான் ருத்ரா, இவர்கள் நெருக்கத்தை பார்த்து இருவரும்,

வசி, சாந்தி இருவரும் ஒரு நிமிடம் ரசித்து தான் பார்த்தார்கள் இவர்கள் ஒன்னும் பாசத்தில் சளைத்தவர்கள் இல்லை, ஆனால் சண்டைதான் போட்டுக் கொள்வார்கள் எப்போ பார்த்தாலும்.

ருத்ராவை முதல் முறை பார்த்தவுடன், சாந்தி அனுமதி இல்லாமல் நுழைந்து கொண்டான். ஆனால் ருத்ராவை பார்த்ததும் சாந்திக்கு பிடித்திருந்தாலும் மிஸ்டர் ஜீரோதான் முக்கியம். அது தெரியாம எங்கோ இருக்கும் ஒரு கொலைகாரனை காதலிப்பது தெய்வீக காதல் போல சாந்தி நினைத்துக்கொண்டு இருக்கிறாள், யாருக்கு யார் ஜோடி என எழுதியவனுக்குதான் தெரியும்.

அதி வேகமாக காரை ஓட்டி வந்து, வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்த சமயம்,

ஆகாஷை பார்த்த இருவரும் அதிர்ந்தார்கள் 'இவன் இங்க என்ன செய்றான்.'

வசி, ருத்ரா இருவரும் "ஆகாஷ் எப்படிடா இருக்க" அவனை கட்டிக்கொள்ள வர, ஆகாஷ் வசி, ருத்ரா இருவரையும் சரமாரியாக அடிக்கத் துவங்கினான், சில அடி வாங்கினாலும் ரெண்டு பேரும் இவன் பைத்தியம் மாதிரி செய்றதை பார்த்து நாலு அடி போட்டுட்டு பிடித்துக் கொண்டார்கள்.

வசி ஆகாஷை பின்னாடி இருந்து பிடித்துக்கொள்ள, ருத்ரா அவன் கைகளை பிடித்து கொண்டு.

"எதுக்கு டா சம்பந்தம் இல்லாமல் அடிக்கிற".

"என் பொண்டாட்டிய கடத்தி வச்சிட்டு பிளாக் மெயில் செஞ்ச உங்கள கொஞ்சனுமா" என ஆகாஷ் கோபமாக கத்தினான்.

"டேய்ய் நாங்க எதுக்கு டா உன் பொண்டாட்டிய கடத்த போறோம், நீ பைத்தியமா, ஆகாஷ் இருவர் கைகளில் இருந்து விடுபட்டு, அவன் போனில் ரெகார்ட் செய்து வைத்து இருந்ததை போட்டு காண்பிக்க.

ருத்ரா, வசி இருவரும் புரியாமல் பார்க்க, பின்னாடி ஒரு அறையில் இருந்து சத்தம் வரத் துவங்கியது, மூவரும் ஓடிச் சென்றார்கள். அங்கு சைலு கட்டப்பட்ட நிலையில் கதவை தட்டிக்கொண்டிருந்தாள், அவள் பலத்தை உபயோகித்து.

சாந்தி அக்னி நிலா, இங்க நடப்பது ஒன்றும் புரியாமல் நின்று இருக்க.

ஆகாஷ் ஷைலுவை கட்டிக்கொண்டு நின்று இருந்தான் ஆகாஷை பிரித்து இழுத்து வசியும் ருத்ராவும் "அறிவு கெட்டவன் காதல் கண்ணை மறைக்குதோ முதல்ல கட்டை அவிழ்த்து விடுடா" அப்போதுதான் ஆகாஷ் சைலுவின் நிலை புரிந்தது.

மூவரும் சைலு கால், கை, வாய் கட்டுக்களை கழட்டி விட்டு வசி ருத்ரா வெளியே சென்றதும், ஆகாஷ் ஷைலுவை கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வர, இதழுக்கு இடையில் கை வைத்தவள்.

"இவ்ளோ நாள் எப்படி இருந்தாயோ அப்படியே இருந்துக்கோ, பொண்ணுங்கனா உனக்கு விளாட்டா போச்சா, உன் இஷ்டத்துக்கு ஆட நான் ஒன்னும் பொம்மை இல்ல", ஆகாஷை தள்ளி விட்டு வெளியே போக.

"அண்ணா எப்படி இருக்கீங்க பாத்து ரொம்ப வருஷம் ஆச்சி" என்றாள் சைலு.

"ம்ம்ம் நாங்க நல்லா இருக்கோம், நீ எப்படி இருக்க, யாரு கடத்திட்டு வந்தாங்க"

"கட்டிக்கிட்டது உங்க பிரண்டை எப்படி நல்லா இருப்பேன், தெரியல பழைய படம் போல மயக்க மருந்து வச்சி கடத்திட்டானுங்க" சைலு ஏதோ பிக்னிக் வந்தது போல கடத்தலை சாதாரணமாக சென்னாள்.

"அவங்க அடையாளம் எதாவது தெரியுமா?".

"தெரில அண்ணா பிளாக் டிரஸ் போட்டு இருந்தா ஒரு பொண்ணு, கிராமத்து பொண்ணு போல இருந்தா, ஹிப்ல ஒரு பட்டர்பிளை டாட்டூ போட்டு இருந்தா" ருத்ரா சட்டென்று ஷைலுவை நெருங்கி, "வேற எதாவது அடையாளம் சொல்லு".

"அவ தோள் பட்டையில் ஒரு தழும்பு இருந்தது, எதுக்கு விசாரிக்கிறீங்க?" என வசியை சைலு விசித்திரமாக பார்த்தாள்.

"அது இவ்ளோ வருசமா நான் ஒரு பொண்ண தேடிட்டு இருக்கேன் அவதான்" சாந்தி குதுகலமாக, "சீக்கரம் அவளை கண்டு பிடிச்சிடலாம் சரியா".

"இன்னொரு விஷயம் சொல்லணும், அங்க அகழ்வாராய்ச்சியில நடந்த கொலைக்கும் அவளுக்கும் சம்பந்தம் இருக்கு".

"வசி சூப்பர், உன்னோட ஆளும் கடத்தல்காரி, என் ஆளு கொலை காரங்க சீக்கரம் இரண்டுபேரையும் கண்டு பிடிப்போம் கவலைப்படாத" சாந்தி தோளில் கைப்போட்டு வசி இருவரும் போலிஸ் குடும்பத்துக்கு கொலை கொள்ளை அடிக்கும் மருமகள் மருமகன் கொண்டுவருவதற்க்கு, இரண்டு போலிசும் திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆகாஷ் ஷைலு கிட்ட, ருத்ரா சாந்தி பேசிட்டு இருந்தாங்க, இன்னொருத்தர் யாரோ இங்க இவர்களை வைத்து விளாடுவது ஆகாஷ்க்கு புரிந்தது.

அக்னி வசியை பார்த்து, "ஆல்ரெடி ஒரு பொண்ணை லவ் செஞ்சிட்டு, என்ட இத பத்தி பேச எப்படி மனசு வந்தது?" வசி பற்றி தவறான எண்ணம் விதைத்திருந்தான், வசி அக்னி நிலா மனதில்.

"ஏன் காதல் ஒருத்தர் மேல்தான் வரணுமா, ரெண்டு பேர் மேல கூட வரலாம்". வசி சொல்லி முடித்ததும் அக்னி வசியை கொடூர மிருகத்தை போல பார்த்து 'இவனிடம் இனி சவகாசம் வைத்துக்கொள்ளக்கூடாது' என நினைத்து ருத்ரா அருகில் போய் அமர்ந்து கொண்டாள் அக்னி நிலா. வசியை விட்டு விளக நினைத்தாலும் வசி முகத்தை பார்த்துக்கொண்டு இருக்க எண்ணம் அக்னிக்கு இயல்பாக தோன்றியது. அக்னி மனம் போன திசையை அடக்கிக்கொண்டவள், அதன் பிறகு வசி பக்கம் திரும்பவே இல்லை.

வசி அவளிடம் அப்படி பேசினாலும், ஏதோ போலத்தான் இருந்தது அவனை நினைத்து.

சாந்தி ருத்ராவை முறைத்துக்கொண்டே திரிந்தாள்.

பல வருட கதைகள் பேசிவிட்டு, சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட்டுட்டு ஆகாஷ் ஷைலுவை கூப்பிட்டு கிளம்பும் சமயம்.

வசி ருத்ரா இருவரும், இதில் எதோ ஆபத்து இருக்கு முதலில் கண்டு பிடித்த அப்புறம் போ ஆகாஷ், அவனுக்கும் இவர்கள் சொல்வதுதான் சரி என்றுபட்டது.

ஆகாஷ் ஷைலுக்கு ஒரு அறையை கொடுத்துவிட்டு, ருத்ரா, வசி ஒரு ஓரம் படுத்து கிட்டாங்க. அக்னி நிலா, சாந்தி ஏதோ கதை பேசிக்கொண்டு சோபாவில் அமர்ந்து இருக்க.

ஆகாஷ் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், அன்று சரக்கு அடித்து பர்ஸ்ட் நைட் முடிந்தது சொன்ன மறு நொடி, சைலு காளியாக மாறி, அவனை வெளியே தள்ளி "அக்னி நிலா, சாந்தி வாங்க நம்ம 3 பேரும் ஒன்னா படுத்துக்கலாம்".

"ஆகாஷ்க்கு வடை போச்சே," இரு நண்பர்களும் சொல்ல.

ஆகாஷ் கோபமாக படுத்து இருந்தான் இவனுங்க முன்னாடி என் மானத்தை நல்லா வாங்கிட்டா ராட்சசி என சைலுவை செல்லமாக கொஞ்சினான் ஆகாஷ்.
வசி, ருத்ரா இரு பக்கமும் படுத்துக்கொண்டு ஆகாஷை தூங்க விடாமல் நச்சரித்துக் கொண்டு இருந்தார்கள்.

பொறுமை இழந்த ஆகாஷ் எந்திரித்து உட்காந்துட்டான் இப்போ என்னடா உனக்கு பிரச்சனை.

"எனக்கு தெளிவா ஆக வேண்டியது நிறைய இருக்கு, அது தெரிஞ்சிக்கற வரை கொஞ்சம் தள்ளியே இருங்க நீங்க."

வசி ருத்ரா எந்திரித்து இன்னும் நெருங்கி அமர்ந்து உட்காந்து "இந்த தள்ளி போதுமா" என்று கிண்டல் செய்ய.

"போங்கடா நீங்களும் உங்க மொக்கை ஜோக்கும், நான் எவ்ளோ பாவம் தெரியுமா?".

"நீ என்னடா பாவம், நல்லா கல்யாணம் செஞ்சிட்டு உன் பிசினஸ் நல்லா வேர்ல்ட் லெவல் பேமஸ், நாங்கதான் பாவம் இன்னும் கல்யாணம் செய்யாம மொட்டை பயலா செத்து போயிடுவோம் போல".

"அதான் ரெண்டு பொண்ணுக இருக்கே, அது உங்க லவ்வர் இல்லையா?" ஆகாஷ் அவனது சந்தேகத்தை கேட்க.

"இல்ல ஒருத்தி என் அத்தை பொண்ணு அவ சி. பி. ஐ ல இருக்கா" வசி அக்னி நிலாவை பற்றி பேச வாய் திறக்கும் முன்பு, ருத்ரா முந்திக்கொண்டு "அக்னி நிலா இனி கடைசி வர என் கூடதான் இருக்க போறா, என் உயிர் அவ" வசிக்கு அந்த கருப்பு நிற ஆடை போட்டவள் மீதும் காதல், அக்னி நிலா மீதும் காதல் என்ன சொல்ல.

மிஸ்டர் ஜீரோவும் அந்த கருப்பு நிற ஆடை அணிந்த அந்த மாயாவி எதற்காக தொடர்ந்து கொலை செய்கிறார்கள், கொலை செய்வது முடிந்ததா அல்ல இது தான் ஆரம்பமா?

ஆகாஷ் தேடும் பதில் யாரிடம் இருந்து கிடைக்க போகிறது? அவனை போல ஒருவன் இங்கு ஆகாஷ் பெயரில் சுற்றிக்கொண்டு இருக்கிறான். அவனை ஆகாஷ் கண்டு பிடிப்பானா?
பொறுத்து இருந்து பார்ப்போம்.

மாயா மாயம் செய்ய வருவாள்...
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
13. மாய நிலா

அடுத்தநாள் அனைவருக்கும் இனிமையான காலைப் பொழுதாக அமைந்தது.

அனைவரும் எந்திரித்து வர, இந்த அக்னி நிலா மட்டும் பெட்ல உருண்டுட்டு இருந்தாள். புது இடம் வேறு தூக்கம் வராமல் இரவு முழுவதும் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு இப்போவரை தூக்கம் வரவில்லை.

“அக்னி என்னாச்சி இன்னும் எந்திரிக்காம”, ருத்ரா அக்னி தோள் வரை இருக்கும் முடியை கலைத்துக் கொண்டு இருக்க.

“என் ஹேர் ஸ்டைல கலைக்காத, என்ன இன்னைக்கு வெளியே கூட்டிட்டு போ, அப்போதான் எந்திரிப்பேன்” என சிறுப்பிள்ளையாக கொஞ்சினாள்.

“சரி கூட்டிட்டு போறேன் முதல்ல நீ ரெடி ஆகு, உனக்கு வாங்கித்தந்த டிரஸ் எல்லாம் எங்க”.

இவர்கள் பேசுவது எரிச்சல் கிளப்பியது வசிக்கு, மனதில் வேறு ஒரு பெண் இருந்தாலும் அக்னி நிலாவை பிடித்திருந்தது.

“அது வெளியே எங்கயோ இருக்கு, போய் எடுத்துட்டுவா” ருத்ரா எடுத்து வந்து கொடுக்க “எதாவது பொறுப்பு இருக்கா இவளுக்கு, பேக் எப்படி போட்டு வச்சி இருக்கா பாரு” என ருத்ரா அக்னி நிலாவை திட்டிக்கொண்டே தயாராகிக் கொண்டு இருந்தான்.

வசிக்கும் ஒரு பெரிய சந்தேகம், அக்னி நிலாவும் அந்த மாய கருப்பு ஆடையில் வரும் பெண்ணும் ஒருவள் போல, ஒரு முறை அவளை தொட்டுப் பார்த்தால் தெரிஞ்சிடும். இரண்டு முறை முத்தம் வேற கொடுத்து இருக்கா எப்படியும் கண்டு பிடித்திடலாம் என்று நினைத்த வசி. இன்று அவளோடு ஷாப்பிங் போக முடிவு எடுத்தான் ருத்ராவை கழட்டி விட்டுட்டு. முதலில் ருத்ராவை அப்புறப்படுத்த நினைத்த வசிக்கு முதலில் நினைவுக்கு வந்தது ரோஸ்தான், கொஞ்சமும் தாமதிக்காமல் வசி ரோஸ்ஸை அழைத்து, “ரோஸ் ஒரு ஹெல்ப், இன்னைக்கு ருத்ராவை எதாவது சொல்லி உங்க லேப்க்கு வர வச்சிடு”.

“ஐயோ அவரையா!! முடியாது வசி” என பதறினாள் ரோஸ், அன்று ருத்ரா விடுப்பு எடுக்க நடந்துகொண்டதுதான் ரோஸ் நினைவுக்கு வந்தது.

“ப்ளீஸ் எனக்காக” ஒருவழியாக ரோஸ்சை சரி கட்டி, அவளும் ஒப்புக் கொண்டாள்.

மறு புறம் ரோஸ் “என்ன சொல்லி வர வைக்கிறது”, அவளது லேபில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டு இருக்க.

ரோஸை பார்க்க அந்த பக்கம் வந்து கொண்டு இருந்த ராஜா, “என்ன ரோஸ் ஏதோ தீவிரமாக யோசனையில் இருக்க?”.

“வசி சார் ஒரு ஹெல்ப் கேட்டாங்க, அதான் எப்படி முடிக்கறதுனு யோசனையா இருக்கு, நீங்க எதாவது ஒரு ஐடியா இருந்தா கொடுக்கறீங்களா?” என ரோஸ் ராஜாவை கேட்க.

“மொட்டையா ஐடியானு கேட்டா, என்ன சொல்றது தெளிவா எனக்கு புரியும்படி சொல்லு”.

“வேற ஒன்னும் இல்ல சார், ருத்ராவை இங்க வர வைக்கணும்”.

“அவன் வளக்கற முயல் குட்டிக்கு சின்ன அடி சொன்னா போதும், பிலைட் பிடிச்சி கூட ஓடி வந்துடுவான், இங்க பக்கத்து ஊருல இருக்கவன் வர மாட்டானா என்ன?” ராஜா அவனது ஒற்றை புருவத்தை உயர்த்தி சொல்ல. முதல் முறை ரோஸ் கண்களுக்கு ராஜாவின் வசிகர அலகு தெரிந்தது. நினைத்த மறு நொடி அவள் எண்ணம் போன போக்கை கட்டுப்படுத்தி.

“சூப்பர் ஐடியா சார், இது பாருங்க எனக்கு ஞாபகமே இல்ல” ரோஸ் ருத்ராக்கு போன் செய்த சமையம். அங்கு அக்னி நிலா ருத்ராக்கு டிரஸ் செலக்ட் செய்றேன்னு.

அவ போட்டு இருக்கும் பஞ்சி மிட்டாய் கலர் டிரஸ் போல ஒரு சட்டையை எடுத்து “ருத்ரா இது போட்டுக்கோ, நம்ம ரெண்டு பேரும் ஒரே கலர்ல டிரஸ் போட்டு, இன்னைக்கு ஜாலியா சுத்த போறோம்” என அக்னி நிலா குதுகலமாக கூறினாள்.

ருத்ரா, அக்னி நிலா கைகளில் இருந்த அந்த பஞ்சிமிட்டாய் சட்டையை பார்த்து, “அக்னி வேண்டா, பசங்க எல்லாம் இந்த கலர் டிரஸ் போட மாட்டாங்க சொன்னா கேளு”. ருத்ரா நாலு அடி தள்ளியே நின்று பேசிக் கொண்டு இருந்தான், பாவம் பையன் அந்த சட்டையை பார்த்து மிரண்டுட்டான்.

அக்னி நிலா சிணுங்கிக் கொண்டே “நீ இத போட்டுக்கோ, இல்லாட்டி நான் சாப்பிடமாட்டேன், உன்கூட பேசவும் மாட்டேன்” என முறுக்கிக்கொண்டு ஒரு நாற்காலியை உடைப்பது போல டமால் என்று சத்தத்தோடு அமர்ந்தாள்.

அக்னி நிலா அருகில் வந்த வசி “நான் வேணும்னா இந்த சட்டையை போட்டுக்கவா?” அக்னி வசியை முறைத்து விட்டு ருத்ராவை முறைத்தாள்.

“சரி மூஞ்சை அப்படி வைக்காத நான் போட்டுக்கிறேன்” என்றதும் தான் அக்னி முகத்தில் புன்னகை தவழ்ந்து. ருத்ராவை ஒரு வழியாக அக்னி பிடித்து அவனது டீ ஷர்ட்டை உருவிக்கொண்டு இருந்தாள்.

ஆகாஷ் அக்னி நிலாக்கு உதவி செய்ய, ஒரு வழியா ருத்ரா அந்த பஞ்சி மிட்டாய் சட்டையை போட்டுக்கொண்டு இருக்க, சைலு சாந்தி இருவரும் இங்கு நடக்கும் கலவரத்தை பார்த்து, ருத்ரா கோலத்தையும் பார்த்து வயிறு பிடித்துக்கொண்டு சிரித்தனர்.

“சரி எல்லாம் சிரித்தது போதும் கிளம்பு அக்னி”.

சைலு இருவரையும் தடுத்து “சாப்பிட்டுட்டு போங்க, நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”. ஆகாஷ் சைலு பின்னாடி போக இங்க என்ன செய்ற வெளியே போடான்னு சைலு ஆகாஷை துரத்தி விட்டுட்டாள்.

அக்னி நிலாவை முறைத்துக்கொண்டு உட்கார்ந்து சாப்பிட, சாந்தி தான் “முன்ன விட சயின்டிஸ்ட் இப்போ தான் செம பிகரு என்ன அழகு” என சாந்தி ருத்ராவை பார்த்து ஒரு பாடல் வேறு பாடி வைத்தாள்.

சாந்தியை ருத்ரா முறைக்க, அவன் முறைப்பில் இவள் வாயை மூடிக்கொண்டாள். வசி அக்னி நிலாவை பார்க்க, அவள் ருத்ராவை முறைத்துக்கொண்டு இருந்தாள்.

‘எதுக்கு இவ ருத்ராவை முறைக்கிறா?’.

ருத்ரா சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள், ருத்ரா சாப்பிட்டதும், வேகமா ருத்ரா முன்னாடி போய் நின்று, போராடி போட்டு விட்ட சட்டையை கழட்டி கசக்கி பிழிந்து தூக்கி போட்டு மிதித்து அவன் மீது வந்த அனைத்து கோபத்தையும் அந்த சட்டை மீது காண்பித்து கோவமா ரூம்க்கு போய்ட்டா.

“இவ வேற எப்போ பாரு கோச்சிகிட்டு”.

“மச்சான் நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டா?” வசி அக்னி நிலாவை சமாதானம் செய்ய முன் வர.

“வேண்டா நல்லவனே நல்லா இருப்பவளை இன்னும் அதிகம் கிளப்பி விட்டுடாத” வசி ருத்ரா சொன்னதை கேட்டு சிரிக்க, சாந்தி வசியை பார்த்து, “டேய்ய் மாமா இந்த பல்பு உனக்கு தேவையா?” என நக்கலடித்தாள்.

“உன் வேலையை பாரு” வசி சொல்லிவிட்டு சாப்பிட்டுக்கொண்டு இருக்க.

ருத்ரா, அக்னி நிலா மிதித்து போட்ட சட்டையை எடுத்து உதறிக்கொண்டு, அக்னி இருக்கும் இடம் நோக்கி சென்றான், அந்த கசக்கிய சட்டையை போட்டுக் கொண்டு.

“அக்னி இங்க பாரு சட்டையை நானே போட்டுக்கிட்டேன் நல்லா இருக்கா”.

“நல்லா இல்ல போ” அக்னி முறைப்போடு உட்கார்ந்து இருந்தாள்.

“என்ன நல்லா இல்ல, ரெண்டு பேரையும் பாரு ஒரே சட்டை, ஒரே கலர் சூப்பர்ல”.

“கழட்டிட்டு ருத்ரா உனக்கு பிடிக்கும்ன்னு ஆசையா வாங்கினேன், இனி உனக்கு பிடிச்ச லைட் கலர்ல வாங்குறேன்”. ருத்ராக்கு அக்னி நிலா முகம் சுருங்கினால் சுத்தமா பிடிக்கறதுயில்லை.

“நம்ம வெளியில எங்காவது ஊருக்கு போனா இது ஓகே டா, இங்க கொஞ்சம் கோமாளி போல பாப்பானுங்க, எனக்கு பிடிச்சி இருக்கு, வா நம்ம செல்ஃபீ எடுத்து போட்டோ வால் பேப்பர்ல வைக்கலாம்”.

“சரி என் நிலா குட்டி சமாதானம் ஆகிடுச்சா.”

நிலா யோசிச்சிட்டு “இல்லை இன்னும் எவ்ளோ சட்டை வச்சி இருக்கேன் அது எல்லாம் யார் போடுவா?” அக்னி நிலா மூக்கை உறிந்து கொண்டு சொல்ல.

“இன்னும் இருக்கா எல்லாம் பத்திரமா வை என் மச்சானுக்கு போட்டு வீட்டுடலாம்”.

“ருத்ரா ஐடியா சூப்பர்”, இதுங்க ரெண்டும் கெட்டது பத்தாதுனு இன்னொருத்தனை கெடுக்க பிளான் போட்டுக்கொண்டு வெளியே வந்தார்கள்.

சண்டை போட்டுக்கொண்டு இருந்தவர்கள் உள்ளே இருந்து சிரித்த முகமாக வர, இங்கு நடந்த கலவரத்தில் இவ்ளோ நேரம் ஓயாமல் அடித்துக் கொண்டு இருந்த போனை எடுத்து பார்க்க, ரோஸ் பல முறை அழைத்து இருந்தாள் ருத்ராவிற்க்கு.

சாந்திக்கு ஏதோ வேலை என்று கிளம்ப, ஆகாஷ் பர்ஸில் இருந்த சில துண்டு காகிதத்தை அக்னி நிலா எடுத்து வைத்துக் கொண்டாள் யாருக்கும் தெரியாமல், சைலு ஆகாஷ் கிளம்பும் சமயம்.

“டேய்ய் எதாவது ஹெல்ப் வேணும்னா கூப்பிடுங்க, எனக்கும் என் வைப்க்கும் பேசி தீர்க்க வேண்டியது நிறைய இருக்கு, அத முடிச்சிட்டு வரேன். அதுக்கு அப்புறம் உங்களுக்கு நான் ஒரு குட் நியூஸ் சொல்றேன்” சொல்லிட்டு ஆகாஷ், கிளம்பிட்டாங்க.

வசி, ருத்ரா அக்னி நிலா இருக்க ருத்ரா இவர்களை வழி அனுப்பிவைத்துவிட்டு, ரோஸ்க்கு அழைக்க “என்னாச்சி ரோஸ் இவ்ளோ கால்,” டாக்டர் உங்க முயலுக்கு ஏதோ ஆகிடுச்சு, உங்கள தேடுதுனு நினைக்கிறேன், உங்க ரூம்க்கு வர டிரை செட்சிட்டு இருக்கு”.

“சரி இரு நான் உடனே வரேன்” ருத்ரா அக்னி நிலாவை பார்த்துக்க, முயலுக்கு ஏதோ ஆகிடுச்சாம், நான்தான் சரி செய்யணும் போய்ட்டு வரேன், நீ வசியை கூட்டிட்டு வெளியே போய்ட்டு வா”. ருத்ரா சட்டையை மறக்காமல் மாற்றிவிட்டு பல பத்திரம் அக்னி நிலாவுக்கு சொல்லிவிட்டு மின்னல் வேகத்தில் போய்ட்டான்.

அங்கு ரோஸ் முயலை பிடித்து சிறு கட்டு போட்டு விட்டுக்கொண்டு இருந்தாள், ராஜா இவளை ரசித்துக் கொண்டு இருந்தான், ருத்ரா வேகமா வந்தவன், முயலை தேடி போக. அது ருத்ராவை பார்த்ததும் தாவி குதித்து அவன் முகத்தை வந்து கட்டிக் கொண்டது.

“ஏண்டி தங்கம் என்ன பிரிஞ்சி இருக்க முடிலயா, சாப்டியா வா நம்ம வாக்கிங் போய்ட்டு வரலாம்” அங்கு இரண்டு ஜீவன்கள் இருப்பதை கண்டு கொல்லாமல், ருத்ரா தூக்கிக்கொண்டு லேப் சுற்ற போய்ட்டான்.

“ரோஸ், எனக்கு உன்னை பிடிச்சி இருக்கு, உனக்கு புரியுதா இல்லையா?” என இன்று வெளிப்படையாகவே கேட்டு வைத்தான்.

“சார் இது எதும் சரி வராது, என்ன விட்டு கொஞ்சம் விலகியே இருங்க” என முகத்தில் அவ்வளவு கடுமை இருந்தது.

“சொல்லு ரோஸ் நான் எப்படி இருந்தா என்னை உனக்கு பிடிக்கும்,” என்று ராஜா ரோஸ் கையை பிடித்து கேட்க, ரோஸ் லாவகமாக கையை உருவிக்கொண்டு.

“என்னை இனி நீங்க தொல்லை செய்யாமல் இருந்தா பிடிக்கும், அப்புறம் எனக்கு கொஞ்சம் ரிசர்ச் செய்யணும், ஒரு கையேடு வேணும் அப்புறம் கொஞ்சம் டிபார்ட்மென்ட் பண்ட் வேணும், வன துறை அனுமதி வேணும், வசி சார் கேஸ்க்கு கொஞ்சம் டீடெயில்ஸ் கலேக்ட் பண்ணனும்”.

“சரி…” என்று மட்டும் சொல்லிட்டு ராஜா கிளம்பி அவள் கேட்ட அனைத்தும் செய்து கொடுத்தான்.

ருத்ரா முயலிடம் விளாடிக்கொண்டு அந்த நாளை கடந்தான்’ அக்னி நிலாவை வசி வெளியே சுற்றி காட்ட கூட்டிக்கொண்டு போனான். அக்னி நிலா வசியிடம் ஒரு வார்த்தை கூட பேசும் நிலையில் இல்லை, அவன் முகத்தை பார்த்தாலே ஒரு கோபம் உருவானது அக்னி மனதில்.

இவனை பார்த்தாவே அக்னி நிலா முகத்தை வெட்டிக்கொண்டு திரும்பி சென்று விடுவாள். பார்த்த அப்போ இருந்து இப்போ வரை இது தான் இருவருக்கும் இடையில் நடந்து கொண்டு இருக்கிறது.

“அக்னி எந்த இடத்துக்கு போலாம்” அக்னி நிலா சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு மனக்கண்ணில் பார்த்தாள். “பழைய சிற்பங்கள், பாரம்பரிய இடத்துக்கு கூட்டிட்டு போ” என்றாள்.

“அது போல ஒரு இடம் எனக்கு தெரியும், ஆனால் அங்கு நார்மல் மனுசங்களுக்கு அனுமதி இல்லை”.

“நான் நார்மல் மனுஷியில்லை, ரத்த காட்டேரி இப்போ அனுமதி கிடைக்குமா” வசி சிரித்துக்கொண்டே.

“அம்மா பயந்துட்டேன்” என்று நடித்து காம்பித்தான், பயம் முகத்தில் தாண்டவம் ஆட.

“போலீஸ் ஆகரத்துக்கு பதில் ஆக்ட்டிங் போய் இருக்கலாம், அதுக்கு தான் நீ சரி பட்டு வருவ” அவள் அவனது கோபத்தை தீண்ட எது செய்தும் வசிக்கு சிரிப்புதான் வந்தது. அக்னி நிலாவின் சிவந்து போன மூக்கை ரசித்துக்கொண்டு இருந்தவன், காரில் வைத்திருந்த சில போட்டோக்களை எடுத்தான். அதில் அவன் ஒரு போட்டோ காண்பித்து அந்த இடத்தை பற்றி சொல்ல, கடைசியாக கொலை நடந்த இடம், வசி சாந்தி தவிர வேறு யாரும் அங்கு உள்ளே நுழைய முடியாத அளவுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. அந்த இடம் சுற்றிலும் பலத்த பாதுகாப்போடு இருந்தது.

அந்த புகைப்படம் எல்லாம் பார்த்தது அக்னி நிலாக்கு அந்த இடம் மிகவும் பிடித்துப் போனது, அது மட்டும் இல்லாமல் அவளுக்கு அங்கு உள்ளே போய் ஆக வேண்டிய சூழ்நிலை இப்போது. ஏதோ ஒரு குரல் அவளை கட்டளையிட்டுக்கொண்டிருந்தது ஒரு பொருள் அங்கு இருந்து எடுக்கணும்” என வசி அக்னி நிலா கண்களை பார்த்து, ‘இவளுக்கு பிடிச்சி போச்சி, நம்ம நினைச்சது நடக்கும்’.

“என்ன இங்க கூட்டிட்டு போங்க சார் ப்ளீஸ்,” அக்னி நிலா அணில் குட்டி போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்க.

“கொஞ்சம் கஷ்டம் தான் இந்த போலீஸ்க்கு, ஒரு லஞ்சம் கொடுத்தால் உன்ன உள்ள கூட்டிட்டு போறேன்” என வசி இவளிடம் கூற.

அக்னி நிலாக்கு அங்கு போய் ஆக வேண்டும், வேறு வழி இல்லை, அந்த குரல் சொல்வதை தட்டவும் அவளுக்கு தோன்றவில்லை. “சரி சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?” என வசியை பார்க்க, வசி அவன் கைகள் பின் புறம் நீட்டி, அக்னி என்ன என்பது போல பார்க்க.

“இங்க கிஸ் கொடு கூட்டிட்டு போறேன்” வசி ஒரு முடிவோடதான் இருந்தான், அக்னி நிலா யார் என்று இன்று தெரிந்து கொள்ளவேண்டும் என.

அக்னி வசியை கோபமாக முறைத்து, திரும்பிக் கொண்டாள், வசி வண்டியை திருப்பி மீண்டும் வந்த இடத்துக்கு செல்ல வேகம் எடுத்தவனை அக்னி பாவமாக பார்த்தாள்.

அக்னி ருத்ரா சொன்ன செயலை செய்வாளா? அல்லது அக்னி நிலா வேறு வழி தேடுவாளா அந்த புதைந்த நகரம் உள்ளே செல்ல.

காட்டுக்கு செல்லும் முன்பு இந்த விஷயம் ருத்ரா, வசிக்கிட்ட ரோஸ் சொல்லிட்டு கிளம்பிட்டா, அந்த காடு உள்ளே போக பையோடு காத்துக்கொண்டு இருக்க, அங்கு வந்த உருவத்தை பார்த்த ரோஸ் பயந்து ரெண்டு அடி பின்னால் போன சமையம் கையில் ஒரு கட்டை கிடைக்க, அந்த உருவம் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தாள்.

யார் அந்த உருவம்? அக்னி நிலா வசி சொன்ன லஞ்சதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாள்?



மாய நிலா மாயம் செய்ய வருவாள்.
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
14 மாய நிலா

ரோஸ் ஒரு அடி போட்டாள் அந்த உருவத்தை, கட்டையால். அந்த உருவம் ஆஆஆஆ என கத்திக்கொண்டே ரோஸ் கையில் இருந்த கட்டையை தடுத்து இறுக்க பிடித்துக்கொண்டது.

“ஹேய் ரோஸ் எதுக்கு அடிக்கிற” தலையை தேய்த்துக்கொண்டே நின்று இருந்தான் ராஜா.

“ராஜா சார் நீங்களா நான்கூட ஏதோ மிருகம் தான் என்னை தாக்க வந்தது என்று நினைச்சிட்டேன்.”

“என்ன பார்த்தா மிருகம் மாதிரியா தெரியுது உனக்கு ராட்சசி, அடிச்ச அடியில் மூளை கலங்கிடும் போல” என ராஜா தலையை தேய்த்துக்கொண்டே நின்று பேசினான்.

“ஆமா ஒரு சின்ன அடிக்கு இவ்ளோ சீன், நீங்க இங்க என்ன செய்றிங்க? அத முதலில் சொல்லுங்க” என்று ரோஸ் ராஜாவிடம் கேட்க ஆரம்பிக்கும் போது தினறிய ராஜா ஒருவழியா, தெளிவா சொல்ல ஆரம்பித்தான்.
“அதுவா, டிபார்ட்மென்ட் ஆர்டர், இவ்ளோ அறிவாளியான சயின்டிஸ்ட்டை தனியா அனுப்ப கூடாதாம், அதனால நாட்டுக்கு பெரும் இழப்பு என்று என்னை அனுப்பி இருகாங்க”.

ரோஸ் ராஜாவை மேலையும் கீழையும் பார்த்து, “நீங்க சொல்றது எதும் நம்புவது போல இல்லையே?”.

“நீ நம்ப மாட்டன்னு தெரியும் அதான் ஆர்டர் எடுத்துட்டு வந்து இருக்கேன்”.

ரோஸ், ராஜா நீட்டிய ஆர்டர் காப்பியை பார்த்துட்டு வாங்கி பொறுமையா ஒரு வரி கூட விடாமல் படிச்சிட்டு திரும்பி கொடுத்துட்டா.

“ரோஸ் என் மேல நம்பிக்கை இல்லையா?” என்றான் அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு.
“நிறைய நம்பிக்கை இருக்கு சார், ஆனா என் விசயத்துல உங்கள நம்ப முடியல” ராஜா எதும் பேசாமல் அங்கு பக்கத்தில் இருந்த கடையில், ஏதோ வாங்கி பையில் நிரப்பிக் கொண்டு இருந்தான், ராஜாக்கு பாதுக்காப்புக்கு ஒரு மூன்று பேர் வந்து இருந்தாங்க.
டிபார்ட்மென்ட்டில் இருந்து ஐந்து பேர் மொத்தம், கையோடு வருவதற்காக அனைவரும் காத்துக்கொண்டு இருந்த சமயம், இவர்களை பார்த்தவாறு மரத்துக்கு பின்னாடி பேசிக்கொண்டு இருந்தார்கள் இருவர். அவர்களுக்கு சற்று தள்ளி கார் நின்று இருந்தது டிரைவர் இருக்கையில் ஒரு பெண் அமர்ந்து இருந்தாள்.

“நான் சொன்னது ஞாபகம் இருக்கா, அந்த கல்லு ரொம்ப முக்கியம், அதை விட அந்த புக் எவ்ளோ சீக்கரம் நம்ம கைக்கு வருதோ அவளோ சீக்கரம் நம்ம எல்லாத்தையும் சரி செஞ்சிட்டு, நாம் இழந்த வாழ்க்கையை நாம் திரும்ப வாழலாம். உன் ஆளுக்கு எதுவும் ஆகாது நான் அவளை பாத்துக்கிறேன், நீ தைரியமா போய்ட்டு வா” என ஆறுதல் சொல்ல.

“எனக்கு நீங்க இரண்டு பேரும் தான் முக்கியம் உன்னையும் பார்த்துக்கோ.”

ஆகாஷ் போல உருவத்தில் இருந்தவனிடம், கருப்பு நிற உடை அணிந்த மாயாவி பேசிக்கொண்டு இருந்தாள். தலையில் இருந்து மூக்கு வரை முகமூடி அணிந்து இருந்தாள். சாயம் பூசாத சிவப்பு உதடுகள் மின்னியது, வட நாட்டு பெண் போல ஒரு தாவணி, அவள் இடையில் ஒரு பட்டாம்பூச்சி பச்சை குத்தி இருந்தாள். கை நிறைய வெள்ளி வளையல் அவள் கை ஆட்டி பேசும்போது, அவளது வளையல் தனியாக ஏதோ பாஷை பேசிக்கொண்டு இருந்தது. இடையில் ஒரு மெல்லிய வைரம் பதித்த செயின் அவள் கொடி இடையை இன்னும் அழகாக காட்டியது. அவள் கருப்பு ஆடை முழுவதும் ரோஸ் வண்ண பூக்கள் கையால் எம்பிராய்டர் போட்டு இருந்தது. அழகு தேவதை ஆனால் செய்வது மாய வேலைகள் கொடூரமாக இருக்க போகிறது.
ஆகாஷிடம் இருந்து எடுத்த மேப், அவளிடம் இருந்த இன்னொரு மேப் இரண்டையும் ஒட்டி மாயா, ஆகாஷ் போல உருவம் கொண்டவனிடம் கொடுக்க, அதை வாங்கி பத்திரப் படுத்திக் கொண்டு.

“இந்த உருவம் என்ன செய்றது, அங்க இருக்கவங்களுக்கு தெரிஞ்சிட போது”.

“உன் உருவத்துக்கு மாத்திடறேன், நீ இனி உருவம் மாற தேவையில்லை” என கருப்பு நிற உடை அணிந்து இருந்த மாயா, அவனது நெற்றிப் பொட்டில் ஒரு விரல் வைத்து, எதோ மந்திரம் சொல்ல அவனது பழைய உருவத்திற்கு வந்தான்.

“அவளையும், உங்களையும் பாத்துக்கோங்க, நம்மை விட இந்த மனிதர்கள் ஆபத்தானவர்கள்” என்று அர்ஜுன் சொல்ல.

“சரி நான் பாத்துக்கிறேன், விடியும் முன்பு நீங்க அந்த கோட்டை இருந்த இடத்துக்கு போய்டுங்க, நான் சொன்ன மந்திரம் சொல்லு, அதன் கதவு தானா திறக்கும், ஆண்கள் மட்டும் உள்ளே போங்க, அந்த பொண்ணு எக்காரணத்தைக்கொண்டும் உள்ள போகக் கூடாது, போனால் உள்ள இருக்கும் ஆத்மாக்களுக்கும் கோபம் வந்தாலும் வரும், ஆனா அது நமக்கு சரியா தெரில முன்னெச்சரிக்கை அவசியம்”.
“அர்ஜுன், ஆதிராவை ஒருமுறை பார்த்துட்டு போறியா?”
“இல்லை மாயா மா, நான் வந்து பாத்துக்கிறேன்”.

அர்ஜுன் வேறு யாரும் இல்லை, ஆகாஷிடம் இருக்கும் மேப் எடுக்க அனுப்பிய மாயாவின் உயிர் நண்பன். ஆகாஷ் போல உருமாறி எடுக்க நினைத்தான், ஆனால் ஆகாஷ் கையில் வகையாக மாட்டிய சமையம். இங்கு மாயா வேறு ஒரு பிளான் போட்டுட்டா, ஆகாஷ் அவன் நண்பர்கள் கூட இருக்கும் போது அந்த மேப் எடுப்பதுதான் சரி என்று சைலுவை கடத்திவந்து. வசி, ருத்ரா இருந்த இடத்துக்கு வர வைத்து எடுத்துவிட்டாள். அக்னியை வைத்து மாயா சொல்வதை கேட்கும் ஒரு சேவகி போல, மாயாக்காக சொல்வது அனைத்தும் செய்யும் மாயாவின் அக்னி நிலா, இருவருக்கும் என்ன தொடர்ப்பு என பொறுத்திருந்து பார்ப்போம்.

அர்ஜுன் அங்கு நான்கு பேர் இருக்கும் இடத்துக்கு விரைந்தான். அர்ஜுன் பார்க்க ஏதோ போர் வீரன் போல உடலை வளர்த்து வைத்து இருந்தான்.
“சார் நான்தான் கைய எடு” என்றால் மிரட்டும் குரலில்.
“அதுக்கு ஏன் பா மிரட்டுர, உன் பேர் என்ன?” என ராஜா கேட்க
“அர்ஜுன் சார்” என்றான் அதே குரலில்.

மாயா ஆதிரா அமர்ந்து இருக்கும் கார் நோக்கி சென்றாள். “அர்ஜுன் கிளம்பிட்டான்” ஆதிரா சிறிது நேரம் யோசித்துவிட்டு.
“மாயா நானும் அவர் கூட போகவா?”, மாயா சிறிது நேரம் யோசித்துவிட்டு “சரி போய்ட்டு வா அந்த கோட்டைக்குள்ள நீயும் போக கூடாது, அந்த பெண்ணையும் போக விடக் கூடாது புரியுதா?” என மாயா சொன்னதை தலையில் ஏற்றிக்கொண்டாள் ஆதிரா.
ஆதிரா தூரமாக வருவதை பார்த்த அர்ஜுன், அனைவரையும் சீக்கிரம் அந்த இடத்தை விட்டு கிளப்புவத்தில் குறியாக இருந்தான்.

“ம்ம்ம்” ஆதிரா வேகமாக ஓடி வந்து அர்ஜுனை பிடித்துக் கொண்டாள்.
“இவ்ளோ ஆபத்தான இடத்துக்கு என்னை விட்டுட்டு போறியா மாமா,” ஆதிரா அர்ஜுனை கட்டிக்கொண்டு அழுகத் துவங்க.
ராஜா, ரோஜா இருவரையும் விசித்திரமாக பார்க்க, மற்ற மூவரும் சார் உங்க பாதுகாப்புக்கு நாங்க இங்கயே இருக்கோம்.” ஏற்கனவே பயந்து கொண்டு வந்த அந்த மூன்று காவலாளிகள் ஆதிரா அழுததும், பின் வாங்கினார்கள்.

அர்ஜுன் ஆதிராவை பார்த்து நீ எங்க வர கிளம்பு என்று சொன்னவன் பாதி வார்த்தையை முழுங்கிக்கொண்டான். காரணம் மாயா எதுவும் யோசிக்காமல் செய்பவள் இல்லை. இவள் அனுப்பியதுக்கு எதாவது காரணம் இருக்கும் என்று எண்ணினான்.
ராஜாக்கு இவனுங்களை கூட்டிட்டு போக கொஞ்சம் கூட விருப்பமில்லை. ராஜா சிறு தலை அசைப்போடு. அர்ஜுனை பார்க்க, “சார் நாங்க ரெண்டு பேர் வர சம்மதித்தால், நாங்க உங்களுக்கு உதவி செய்ய காட்டுக்கு உள்ள வரோம்,” என்று அர்ஜுன் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பேசினான்.

“ராஜா சார் ப்ளஸ் எனக்கு இந்த அக்கா ரொம்ப பிடிச்சி போச்சி எனக்கு துணையாக வரட்டுமே” என ரோஸ் சொல்ல.
“நீ கேட்டு என்னைக்காவது நான் இல்லனு சொல்லி இருக்கேனா ரோஸ்”.

“தேங்க்ஸ் ராஜா சார்,” ஆதிரா இருவரையும் பார்த்து “அர்ஜுன் மாமா இவங்க இருவரும் புருஷன் பொண்டாட்டியா?”.

ரோஸ் ஆதிராவை நோக்கி “இல்லை என்று சொல்ல வரும் முன்பு ராஜா முந்திக்கொண்டு.
“இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சது, எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்” ராஜா சொல்ல.

“மாமா நம்ம போலவே, இவங்களும், நாங்களும் காட்டுக்கு போய்ட்டு வந்து கல்யாணம் செஞ்சிக்கிறதா தான் இருந்தோம்”.
நால்வரும் காட்டை நோக்கி நடக்கத் துவங்கினர் காலை ஏழு மணி போல.

அக்னி நிலா திருத்திரு என்று முழித்துக்கொண்டு வசியை பார்க்க. “ஏன் நீங்க இப்படி செய்றிங்க”
வசி காரை வேகமா ஓட்டிக்கொண்டே, “எப்படி செய்றேன்?” என்றான்.
“அதான் முத்தம் கொடுக்க சொல்றிங்களே.”

“நான் உன்ன வற்புறுத்தல, கொடுத்தா கூட்டிட்டு போறேன்னு தான் சொன்னேன்”.

“வேற எதாவது கேளுங்க நான் செய்றேன் இது வேண்டாமே” அவளது அணில் கண்ணை வைத்து பாவமாக பார்க்க.
“நான் சொன்னது சொன்னதுதான்” வசி பேச்சில் உறுதி தெரிந்தது.

“சரி கொடுக்கறேன், வண்டிய திருப்புங்க”.

“முடியாது, நீ முதல்ல கொடு திருப்புறேன்” வசி வண்டியை நிறுத்திவிட்டு, அக்னி நிலா முகத்துக்கு நேராக அவனது கையை நீட்டினான்.

அக்னி வேண்டா வெறுப்பாக, அவன் கைக்கு முத்தம்கொடுக்க வர, வசி கொஞ்சம் கொஞ்சமா கையை தன் புறம் இழுத்தான். அக்னியும் அவன் கையை பிடித்து முத்தம் கொடுக்க அவனிடம் நெருங்க, வசி அக்னி நிலாவை அவள் எதிர் பார்க்காத போது ஒரு நொடியில் இழுத்து, ஆவள் மெல்லிய இதழுக்கு ஒரு மெல்லிய முத்தம் கொடுக்க.

“அக்னி நிலா கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது, வசி விலகிய சமயம்.

அக்னி நிலா கண்களில் குளம் கட்டி இருந்தது, வசிக்கு நெற்றி பொட்டில் அடித்தது போல இருந்தது ‘அந்த பெண் இவள் இல்லை’.

அக்னி நிலா முகத்தை திருப்பி அழுதுகொண்டே வந்தாள், அவளால் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அந்த இடத்துக்கு போகும் முன்பு, சாப்பிட கூட்டிக்கொண்டு போனான். வசி, அக்னி நிலா குணிந்து கொண்டே சாப்பிட்டு முடித்துவிட்டு, காரில் போய் அமைதியா உட்கார்ந்து கொண்டாள். வசியை பார்த்து பயப்பட துவங்கி விட்டாள் அக்னி நிலா, அவள் உடலில் சிறு நடுக்கம் தெரிந்தது.

அக்னி நிலா வசி அருகில் இருக்கும் போது உடல் அதிர்வதை உணர்ந்து கொண்டவன்.
“அக்னி நீ உள்ள போ, நான் இங்க இருக்கேன், ப்ரியா இரு, ஒரு மணி நேரம் கழித்து நான் வந்து கூட்டிட்டு போறேன்.”

வசி பக்கம் இருக்கும் ஒரு வேலை செய்யும் பெண்ணிடம், “இவங்கள பத்திரமா பாத்துக்கோங்க” சொல்லிட்டு கேஸ் பற்றி கொஞ்சம் பார்த்துக்கொண்டு இருந்தான்.
உள்ளே சென்ற அக்னி நிலா, ஒரு கல்லை காலால் மிதித்தாள், ஒரு துவாரம் ஏற்பட்டது அதனில் கை விட்டு ஒரு துணியை எடுத்து அவள் பையில் மறைத்து வைத்துக்கொண்டு, அங்கு காளி சிலை அடியில் இருந்த மண்ணை கொஞ்சம் எடுத்துக் கொண்டாள் அந்த துணியில். காளி கையில் இருந்த ஒரு குட்டி கத்தியும் எடுத்து ஆவள் பையில் மறைத்துக்கொண்டு, வெளியே வர வசி அவளுக்காக ஏதோ வாங்கி வைத்து இருந்தான்.
“தேங்ஸ்” சொல்லி வாங்கிக் கொண்டவள், வசிக்கு தெரியும் அக்னி நிலாக்கு அதிகம் பசிக்கும் என்று ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எதாவது வாங்கிக் கொடுத்து கொண்டே வசி வீட்டுக்கு வந்துட்டான்.
ருத்ராவும் வேகமாக, முயலை சமாதானப் படுத்தி, அங்கு விட்டுட்டு அக்னி நிலாவை பார்க்க ஓடி வந்துட்டான்.

ருத்ரா வசிக்கும் போன் போட்டு “வசி அக்னிக்கு கொஞ்சம் நைட் டிரஸ் வாங்கணும், நான் வங்க மறந்துட்டேன் அவளை கூட்டிட்டு போய் வாங்கிட்டு வா”.

“சரி டா, நீயே அவ கிட்ட சொல்லு
“சரி டா, நீயே அவ கிட்ட சொல்லிடு, நான் சொன்னா ஏதோ என்னை பொறுக்கி போல பார்ப்பாள்”.

“இவன் ஒரு லூசு, சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுவான், அக்னி கிட்ட கொடு”.

“அக்னி வசி கூட ஷாப்பிங் போய்ட்டு வா, நீ வரத்துக்குள்ள நான் உனக்கு பிடித்தது எல்லாம் சமைச்சி வைக்கிறேன் ஓகே வா”.
அக்னி நிலா “ம்ம்...” மட்டும் சொன்னா.

வசி கடைக்கு கூட்டிட்டு போக, அக்னி நிலா மனதில் வசியை நன்றாக திட்டிக்கொண்டே வந்தாள்.

ஆகாஷ் அங்கு சைலுவை ஏதேதோ சொல்லி சமாதானப் படுத்த படாத பாடு பட்டான். ஷைலுவும் போனா போதுனு விட்டுட்டா, அவனது பர்ஸ்ஸில் இருந்த மேப் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியில் இருக்கும் சமயம்.

சைலு ஆகாஷை கட்டிக்கொண்டு “ஆகாஷ் நமக்கு பாப்பா வர போது”. சற்று முன் நடந்த அதிர்ச்சி மாறி, ஆகாஷ்க்கு அவ்ளோ சந்தோசம் நான் விலகி போக நினைத்தால் கூட அந்த மேப் என்னை வச்சி செய்து.
‘இந்த நேரம் சைலுவை பாத்துக்கணும், பாவம் அவள் எனக்காக நிறைய வருஷம் காத்துக்கொண்டு இருந்தது போதும், இனியும் இவளை வருத்தப்பட விடக்கூடாது’ என நினைத்தான் ஆகாஷ்.
சைலுவை ஆதரவாக பிடித்து கொண்டு ‘கோட்டையை தேடி போறது யாரா இருந்தாலும் கடைசியா என்கிட்ட தான் வரணும்.’
அவர்கள் தேடி போற பொருளின் சாவி ஆகாஷ் கழுத்தில் இருந்ததை அவன் வருடிக்கொண்டு இருந்தான்.
மாயாக்கு அந்த கோட்டையில் என்ன வேண்டும், ஆகாஷ்கும் அந்த கோட்டைக்கும் என்ன சம்பந்தம்.

மாயா, அக்னி நிலா வேற வேற என்றால் வசி யாரை விரும்புகிறான்?

மாயா மாயம் செய்ய வருவாள்...
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18

15 மாய நிலா

இங்கு நான்கு பேர் ஆபத்தை நோக்கி பயணம் மேற்க்கொண்டார்கள்.

ஒன்னும் பெருசா ஆபத்து வராது என்று நினைத்து, பயணத்தை துவங்க.

ஆதிரா, ரோஸிடம் நன்றாக பேசிக்கொண்டே வந்தாள். ரோஸ் அமைதியான பொண்ணு, ஆனா ஆதிராவிடம் மட்டும் ஏதோ ஒன்று பேசிக்கொண்டே வந்தாள்.

ராஜா ரோஸை பார்த்து “என்ட பேசுறதுக்கு மட்டும் மேடம்க்கு கசக்கும் போல” அவன் செல்லமா கோச்சிச்கிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

ராஜாக்கு மனதில் ஒரு வெறுமை சூழ்ந்துக்கொண்டது ‘ராஜா போதும் அவளை தொந்தரவு செய்தது, பிடிக்காத பொண்ணை வற்புறுத்துவது தப்பு, ராஜாக்கு மறக்கறது கஷ்டம்தான் ஆனா வேற வழி இல்லை’ என்று தனது காயம்பட்ட மனதுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு வந்தான்.
ரோஸ்க்கு இப்போ வரை ராஜா மேல எந்த விருப்பமும் இல்லை, எதாவது கண்டு பிடிக்கணும் அவளது விருப்பம் வேறு புறம் ஒரு போதும் சென்றது இல்லை. ஆனா ராஜா கூட பேசுறது அவளுக்கு மிகவும் பிடிக்கும்‍, முழுதாய் ரெண்டு மணி நேரம் கூட முடியல ராஜா பேசாமல் விட்டு.
இவர்கள் மூவரையும் விட்டு அரை கிலோமீட்டர் உள்ளே நடந்து போய்ட்டான் ராஜா, மேப் வைத்து.

அர்ஜுன் ரோஸ், ஆதிராக்கு பாதுகாப்பாக பெண்களுடன் மெதுவா நடந்து வந்து கொண்டு இருந்தான்.
அவன் கையில் இருந்த மேப் வைத்து, சில ஆபத்துக்கள் வந்தது அர்ஜுன் அதனை லாவகமாக யாருக்கும் தெரியாமல் கட்டுப்படுத்திவிட்டான், அர்ஜுன் அவனது மந்திரசக்தி உதவியோடு.

அவர்கள் சேருமிடம் வந்ததும், ராஜா நின்று விட்டான். சுற்றி பார்த்தால் எதும் இருப்பது போல தெரியவில்லை.
அர்ஜுன் மாயா சொன்ன மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தான், பூமிக்கு அடியில் இருந்து ஒரு குகை போல ஒன்று வெளியே வர.
ராஜா கண்ணில் அந்த குகை பட்டது, சுற்றியும் முள் செடிகள் கொடிகள் படர்ந்து இருந்தது. அவன் பேக் திறந்து ஒரு வித்யாசமான சிறு கத்தியை எடுத்து கொடிகளையும், செடிகளையும் சுத்தம் செய்யத் துவங்கினான் ராஜா.

அர்ஜுன் தீப்பந்தம் தயார் செய்துகொண்டு இருந்தான், உள்ளே இருட்டாக இருப்பதால், பல மணி நேரம் நடந்த களைப்பு வேறு. ரோஸ், ஆதிரா ஒய்வாக அமர்ந்து இருக்க, ராஜா சுத்தம் செய்து முடித்து அவன் மலைக்கு கீழே வாங்கி நிரப்பிய தின்பண்டங்களை, அவள் கையில் திணித்தான்.
“ஆதிரா நீங்க ரெண்டு பேரும் இங்கவே இருங்க, நாங்க உள்ள போய் அந்த புக் எடுத்துட்டு வரோம்”. ஆதிராவுக்கு செய்தி சொன்னாலும், ராஜா பார்வை முழுவதும் என்னவோ ரோஸ் மீது தான் இருந்தது.

இங்கு நடப்பது எல்லாம் அவனது பாட்டி சொன்ன கதை போல இருந்தது ராஜாக்கு, உள்ளே ஆபத்து வர வாய்ப்பு உள்ளதால் சில ஆயுதங்கள் சிறு பையில் போட்டுக்கொண்டான் ராஜா. தேவையான பொருட்கள் எடுத்துக் கொண்டு இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
ராஜா ரோஸை பார்த்து, ஒரு தலை அசைப்போட்டு உள்ளே சென்றான்.

ரோஸ்க்கு மனம் கனத்தது ராஜாவின் மீது ஏதோ எண்ணம் தோன்றியது சரியாக அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை எவ்வகையான உணர்வு இது என.

உள்ளே சென்று ஒரு மணி நேரம் ஆனது எந்த சத்தமும் இல்லை. ஆதிரா, ரோஸ் அந்த குகை வாசலில் நின்று உள்ளே எதாவது சத்தம் கேட்கிறதா என்று பார்த்து கொண்டு இருந்தார்கள் இருவரும்.
அர்ஜுன் கோட்டைக்கு வழி என்று தான் முதலில் நினைத்தான், ஆனால் உள்ளே சென்றதும் தான் தெரிந்தது, கோட்டையை தேடி வருபவர்களுக்கு இது சவக்குழி என்று.

உள்ளே செயற்கையாக உருவாக்கப் பட்டு இருந்த புதை குழியில் தவறுதலாக கால் வைத்து ராஜா மாட்டிக்கொண்டான், அவனை காப்பாற்ற போய் அர்ஜுனும் மாட்டிக்கொண்டன்.
இருவரும் உள்ளே புதைய புதைய, ஏதோ அவர்கள் கால்களுக்கு தட்டுப்பட, அதனை ஓங்கி இருவர் முழு பலம் கொண்டு ஒரு எம்பி மிதித்து அந்த குளியில் இருந்து வெளியே வந்து விழுந்தார்கள்.

அந்த குழி மின்னல் வேகத்தில் மூடி ஒரு வேல் கிடைத்தது.
அர்ஜுன் ராஜாவை பார்த்து “இதே போல என்டயும் ஒன்னு இருக்கு” என்று அவன் காண்பிக்க. இரண்டு வேலுக்கும் ஏதோ ஒரு காந்த சக்தி இருப்பது போல ஒன்று சேர்ந்தது, ஒரு சாவி போல தெரிந்தது.

சுற்றி பார்த்தார்கள் சாவி போட எதாவது துளை இருக்கிறதா என்று ஒன்றும் தெரியவில்லை.
இன்னும் முன்னேறி சென்றார்கள் ஏதோ அமானுசிய சத்தம் கேட்க, ஒளிந்து இருந்து பார்த்தார்கள்.
அங்கு பழங்கால வேலையை செய்யும் இரு பெண்கள் பேசிக் கொண்டு இருப்பது போல தெரிந்தது. இது எதோ அடுத்த மாய டிராப் என இருவரும் தெரிந்துக்கொண்டு.
அந்த இரு பெண்கள் பேசி கொண்டவையை உன்னிப்பாக கவனிக்கத் துவங்கானார்கள்.

“அந்த புரத்தில் அரசியை அடைத்து வைத்து இருப்பது ராஜாவா அல்லது இரண்டாம் மனைவியா?”.

“எனக்கு தெரில” என்றாள் மற்றொருவள்.

ராஜாக்கு இந்த கதையை எங்கோ கேட்டு இருக்கோம் என்று சிறிது நேரம் யோசித்தவன், ஞாபகம் வந்தவன் வாய் விட்டே சொன்னான்.

“இருவரும் இல்லை, இரண்டாம் மனைவியை பழி வங்க அரசியே அவளை சிறை வைத்து இருக்கிறார்” ராஜா சொன்ன மறு நொடி அந்த இரு பெண்களும் மறைந்தார்கள். அங்கு சட்டென்று ஒரு வெளிச்சம் நிறைத்து இருவரையும் தூக்கி விசியடித்தது. தூக்கி அடித்த வேகத்தில் இருவருக்கும் பயங்கரமான உடல் வலி, மாயா இதனால் தான் பெண்கள் உள்ளே போகக்கூடாது என சொன்னாள் என அர்ஜின் புரிந்துக்கொண்டான்.
வெளியே இருந்த இருவரும், சற்று முன்பு இருந்த குகை கண் முன்னே மறைந்ததை பார்த்து.

ஆதிரா அர்ஜுன்… அர்ஜுன் என்று அலற.

ரோஸ் பதற்றத்தில் உள்ளே மறைத்துவைத்திருந்த காதல் வெளியே வந்தது “ராஜா… ராஜா… வந்துடுங்க நானும் உங்கள காதலிக்கிறேன்” என்று கதறிக்கொண்டு இருந்தாள்.

ரோஸ்க்கு ஏற்கனவே தெரியும் சுற்றி பார்க்க வருபவர்களுக்கு வசந்தம் அளிக்கும் இந்த காடு புத்தகத்தை தேடி வருபவர்களுக்கு நரகமாகத்தான் இருக்கும் என்று, நான் உங்கள கொண்ணுட்டேன். என்னோட சுய நலத்துக்காக ரெண்டு உயிர கொண்ணுட்டேன்.
ஆதிரா வேறு எதாவது வழி கிடைக்கிறதா என்று சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தாள், ஆனால் ஒரு துப்பும் கிடைக்க வில்லை, ரோஸ்க்கு பைத்தியம் பிடித்தது போல ஆனது.

அவன் வாங்கித் தந்த பையை கட்டி பிடித்துக்கொண்டு ராஜா வந்துடு, நீ இல்லாமல் நான் இருக்கமாட்டேன், எனக்கு எந்த புக்கும் வேண்டாம், நீ மட்டும் போதும்” என்று கதறிக்கொண்டு இருந்தாள்.
இங்கு சாந்திக்கு ஒரு துப்பு கிடைத்தது மிஸ்டர். ஜீரோ பற்றி.

கடைசியாக நடந்த கொலையில் ஏதோ ஒரு துணியில் மிஸ்டர். ஜீரோ என்று எழுதி இருந்தான் அந்த கொலைகாரன். இந்த துணியை வைத்து ஏதோ சாந்திக்கு செய்தி சொல்வது போல இருக்க.

காலையில் வீட்டுக்கு போய் அவள் ரூமை பூட்டிக்கொண்டு “டேய் இந்த துணி வச்சி என்னடா சொல்லவர” என்று கையில் வைத்து பலமணி நேரம் சாந்தி யோசித்துக்கொண்டு இருக்க. பதில் தான் கிடைக்கல சாந்திக்கு, எப்போது அவனை பார்ப்போம் என தவித்துக்கொண்டிருந்தாள்.
“ஒரு வேலை எழுதும்போது பேப்பர் கிடைக்காம போய் இருக்குமா, அதனால துணில எழுதி போட்டுட்டு போய் இருப்பானா?”.

சாந்தி பெட்டில் படுத்துக்கொண்டு அந்த துணியை ஒரு விரல் கொண்டு தள்ளி விட்டுக்கொண்டு இருந்தாள்.

அவள் ஒரு ஒரு முறை தள்ளும் போதும் ஏதோ மாய சக்தி உள்ள துணி போல, எழுத்துக்கள் போல மடிந்து கொண்டு, எழுத்துக்கள் எழுதிக்கொண்டு இருந்தது. முதலில் சாந்தி பெரியதாக கண்டுகொள்ள வில்லை, தொடர்ந்து இது போல நடக்க,
சாந்தி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவள் “இப்போ நீ எனக்கு என்ன தான் விஷயம் சொல்ல வர?” சாந்தி திரும்ப துணியை ஒரு விரல் கொண்டு தள்ளி விட.

“ஐ” என்ற ஆங்கில எழுத்து வர பக்கம் இருந்த பேப்பர் பேனா எடுத்து எழுத ஆரம்பித்தாள் சாந்தி.

திரும்ப தள்ள “எல்” என்று வார்த்தை போல அந்த சிறு துணி சுருண்டது ஒரு ஒரு முறையும் தள்ளி, சாந்தி அந்த வார்த்தையை எழுதி வைத்துக் கொண்டாள்.

“ஐ லவ் யூ என்று முடிய நான் ஒரு வேலை மிஸ்டர், ஜீரோ மேல லூசா ஆகிட்டானா? அதனாலதான் எனக்கு இப்படி தோணுதா? இந்த முறை அவள் விரல் கொண்டு தள்ளாமலே அந்த சிறு துண்டு துணி அசைந்து “நோ” என்றது.
சாந்திக்கு நம்பிக்கையேயில்லை “எல்லாம் மன ப்ராந்தி” என்று நினைத்தவள், எனக்கு தெரிந்த விஷயம் தானே இது சொல்லிட்டு இருக்கு,
“தனக்கு தெரியாத சில விஷயம் கேட்டு பார்த்தால் இது உண்மையா இல்லையா என்று தெரிஞ்சிடும்,” லைவ் நியூ போட்டாள்.

லைப்ட்டில் இரு நபர்கள் மாட்டிக்கொண்டார்கள், பல மணி நேரம் இருவரையும் வெளிக்கொண்டு வர போராடிக்கொண்டு இருக்கிறார்கள் மீட்புத்துறையினர், உள்ளே இருப்பவர்கள் உயிரோடு இருக்க ஒரு சதவீதம் தான் வாய்ப்பு இருக்கிறது” என செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
“இதுக்கு பதில் சொல்லு, உன்னை நம்புறேன்,” சாந்தி கேட்க “L. I. V. E.” என்று அந்த துணி உருண்டு சொன்னது.
அந்த துணியின் பதில் தெரிந்ததும், அந்த நியூஸ் சேனலை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தாள், சாந்தி சில நிமிடங்கள் கழித்து.
பாதுகாப்பு துறையும் தீயணைப்பு துறையும் சேர்ந்து இருவரையும் உயிருடன் மீட்டு அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இருவர் உயிருக்கும் எந்த பாதிப்புமில்லை என மருத்துவர் கூறினார்.
சாந்தி பயந்து ரெண்டு அடி பின்னால் நடந்தாள் “ஏய் நீ பேயா, என்னை பழிவாங்க வந்து இருக்கியா?”
அந்த துணி ஒரு பொம்மை போல வடிவம் எடுத்தது, அதை பார்த்து சாந்தி பயந்து முகத்தை மூடிக் கொண்டாள்.
“ஹேய் நீ பேய் தான், நான் ஒருத்தனை பிடித்து ஜெயில்ல போட்டேன்னு தூக்கு மாட்டி செத்துப் போன அந்த ரவுடி குமாரு நீதான? எனக்கு தெரியும்” என்று சாந்தி ஓட்டம் பிடித்தவள். ருத்ரா, வசி இப்போது தங்கி இருக்கும் இடத்தில் தான் வந்து நின்றாள்.

“ஐயோ கனவா இருக்கணும் கனவுல இருந்து சாந்தி எந்திரிச்சிக்கோ” என்று ஓடிக்கொண்டே கண்கள் மூடி அவளது கன்னத்தை வலிக்கும் அளவுக்கு தட்டிக் கொண்டு இருந்தாள்.

அந்த துணி காற்றில் பறந்து வந்து உதடு போல வடிவம் எடுத்து “சாந்தி மை ஸ்வீட் ஹார்ட் உம்மா” அவ்ளோதான் சாந்தி தெறிச்சி தெருத் தெருவா ஓடிக்கொண்டு இருந்தாள். அந்த துணி இவளை காற்றில் பறந்து துரத்திக்கொண்டு இருந்தது.
சாந்தி தெறித்து ஓடுவதை அங்கு இருப்பவர்கள், விசித்திரமாக பார்த்தார்கள்.
இங்கு ரோஸ் இருவருக்கும் தன் கையால் சாக வழி செய்து விட்டத்தை எண்ணி அழுது கரைந்தாள். இருவரும் உயிர் பிழைப்பார்களா? அந்த குகையில் இவர்களுக்கு கேட்ட கேள்விக்கு சரியான பதில் ராஜா சொன்னானா?
இந்த துணியின் ரகசியம் என்ன?
சாந்தி ஒரு புறம் ஓடிக்கொண்டு இருக்க அந்த துண்டு துணி அவளை விடுவதாக இல்லை. எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது.
ஆகாஷ் ஒரு புறம், அந்த மேப் எப்படி அவன் கைக்கு கிடைத்ததை யோசித்துக்கொண்டு இருந்தான். முதலில் அந்த மேப்பின் ஒரு பாகம் தான் கிடைத்தது.

ஆகாஷ்க்கு புதுமையான விஷயங்கள், மற்றும் கண்டுபிடிப்பதில் ஆர்வம் அதிகம். தேடல் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று, வேலை ஒரு பக்கம். இதை தேடல் ஒரு பக்கம் என்று பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து கிடைத்தது.
அவனது நண்பர்களும் சில உதவி செய்தார்கள், அந்த மீதி பாகத்தை கண்டுபிடிக்க, அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டியது, ஆகாஷ்க்கு கொடுக்க மனம் இல்லை, அவன் பல வருட உழைப்பு அதில் இருக்கிறது.
அனைத்து பாகங்களும் கையில் கிடைத்த போதும் இன்னும் அந்த மேப் பற்றி அறிந்துகொள்ள நினைத்த ஆகாஷ்க்கு இவர்களின் பிரிவு இவனை பாதித்து இந்த மேப் பற்றி அவன் மறந்துவிட்டான். ஆனால் ஏதோ குழந்தை சுமப்பது போல எந்த நேரமும் அவன் உடன் வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டு இருப்பது தான் ஆகாஷ் வேலை. ஒரு இனம் புரியாத பந்தம் அவனுக்கும் அந்த மேப்க்கும்.

ஓய்வு கிடைக்கும் நேரங்களில் அந்த மேப் தேடிச் சென்ற போது நடந்த நிகழ்வுகளை நினைப்பது ஆகாஷ்க்கு பிடித்த ஒன்று.
சைலுவுக்கு பிடித்த ரசகுல்லா செய்துகொண்டே நடந்ததை நினைத்தவன், எடுத்தது யார் என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

ஷைலுவை கண் இமைபோல பார்த்துக்கொண்டான் ஆகாஷ். அவளும் நினைத்த நேரம் அவன் இரண்டு வருடம் காக்க வைத்ததற்கு, ஒரு ஒரு நிமிடமும் பழி வாங்கிக்கொண்டு இருந்தாள், ஆகாஷை படுத்தி எடுத்தாள். அவள் செய்வதை நினைத்து கோபப்படாமல் ரசித்து அவளுக்கு சேவகனாக மாறிப்போனான் ஆகாஷ்.
அனைத்து வேலையையும் விட்டு விட்டு, அவளுக்கு சமைப்பது ஊட்டி விடுவது என்று அனைத்து வேலையும் செய்துகொண்டு இருந்தான்.
சமைப்பது கூட அவனுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை, சைலுக்கு ஊட்டி விடுவதுதான் பெரும் பாடாக இருந்தது ஆகாஷ்க்கு. இருவரும் காதல் வானில் பறந்து கொண்டு இருந்த சமயம்.

அடுத்த கட்டமாக மாயா அவளது வேலையை காட்டத் துவங்கினாள். உலகில் பழமையான பொருட்கள் ஒரு பக்கம் திருட்டு பொய்க் கொண்டு இருந்தது. திருட்டு போன பொருளை ஆராய்ச்சி செய்ய தனிக்குழு நியமிக்கப்பட்டது.

தினமும் ஒரு திருட்டு, அகழ்வாராய்ச்சி கஷ்டப்பட்டு எடுத்து வைத்து இருந்த அனைத்தும், ஒவ்ஒன்றாக மர்மமான முறையில் களவாடப்பட்டது.

திருட்டுப்போன பொருள் எல்லாம் சாதாரண சிறிய சிறிய பொருள்.

ரெண்டு திருட்டுக்கு அப்புறம் மிக முக்கியமான பொருட்களுக்கு பாதுகாப்பு போட்டுவிட்டனர். ஆனால் அவர்கள் எதிர்பாராத பொருள் காணாமல் போனது.
ஒரு வாரத்தில் 8 பொருள் காணவில்லை, ஒரு தடயமும் கிடைக்கவில்லை. அனைவர்க்கும் தோன்றியது ஒன்று தான், ஏதோ மாய வேலை போல.

இந்த கலவரத்தில் கொலை செய்யப்பட்டத்தை மக்கள் மறந்தார்கள்.

8 பொருளும் ஒரே காலத்தை சேர்ந்த வேல். விரல் அளவுகூட இருக்காது அங்கு இருப்பவர்கள் முடிவே செய்துவிட்டார்கள், இந்த சிறிய பொருளை வைத்து ஏதோ பெரியதாக செய்ய போறார்கள் என்று.

மாயா அனைத்து வேலையும் ஒன்று சேர்த்து கையில் வைத்து இருந்தாள்.

இரண்டு மட்டும் அர்ஜுனிடம், அவள் நினைத்ததை முடிக்க இன்னும் ஆறு மாதங்கள் மட்டும் இருந்தது. அதற்குள் வேண்டிய அனைத்தும் தயார் செய்து கொண்டு இருந்தாள் மாயா.

வசியை பார்த்து பயந்த அக்னி நிலா ருத்ராவை விட்டு ஒரு இன்ச் கூட விலக வில்லை.
‘வசி தப்பு செஞ்சிட்டோம் ஒரு பொண்ணுக்கு இப்படி பயம் காட்டிவிட்டேன். சாந்தி உதவி இப்போது தேவை என்று நினைத்த வசி, சாந்திட்ட சொல்லி இவளை சமாதானப் படுத்த சொல்லணும்’ என்று நினைத்தவன் சாந்தியை அழைக்க.

அவள் ஒரு புறம் ஓடிக்கொண்டே போனை அட்டென்ட் செய்தாள்” வசி என்ன காப்பாத்து, என்ன துரத்துராங்க” போன் பேட்டரி காலி ஆகி, போன் அதன் உயிரை விட்டது.

“ச்சை போன் கூட பழி வாங்குது நம்மை” ஓடுவதை சாந்தி விடவில்லை, ஒரே பயம், படத்தில் இது போல காட்சி பார்த்தால் கூட கிண்டல் செய்யும் கேஸ் முன்னால், இப்படி ஒரு மாயம் நடந்தால் என்னதான் வீரனாக இருந்தாலும் முதலில் பயம் தான் வரும்.

ஏதோ ஆபத்து என்று புரிந்து கொண்டவன், அவள் கடைசியாக இருந்த லொகேஷன் கண்டுபிடித்து வசி ருத்ராவிடம் சொல்லிவிட்டு போக நினைத்தான். விஷயம் சொல்லியவுடன் “நாங்களும் வரோம், தனியா எப்படி தேடமுடியும்” என்று ருத்ராவும் அக்னி நிலாவும் கிளம்பினார்கள் சாந்தியை தேட.

அந்த துணி நன்றாக பறந்து கொண்டே‌”ஓய்ய்ய் சாந்தி ஓய்ய்ய் சாந்தி ஓஓஓ மை சாந்தி” என்று கத்திக்கொண்டே வந்தது. அங்கு இருக்கும் மக்களுக்கு எதோ ஒரு துணி பறந்து வருவது மட்டும் தான் தெரிந்தது. அது பேசுவது சாந்திக்கு மட்டும் கேட்ட காரணத்தால் மக்கள் பதறி அடித்து ஓடவில்லை. இது பேசுவது மட்டும் அனைவர்க்கும் கேட்டு இருந்தால் ஊருக்குள்ள கலவரம் ஆகி இருக்கும்.
இதில் அந்த துணி காதலே காதலே என்னை என்ன செய்ய போகிறாய், நான்ஓவியன் என்று தெரிந்தும் நீ என் கண்ணு ரெண்டும் கேக்குற”. நல்லா பாட்டை லோக்கல் பாசையிலே பாடிக்கொண்டு வந்தது அந்த மிஸ்டர் ஜிரோ துணி.

ரோடுல ஓடி கடுப்பாகிய சாந்தி, பக்கத்தில் இருந்த பார்க் பக்கம் ஓடிச் சென்றாள். அந்த துணி பறந்து வருவதை பார்த்த அங்கு இருந்த தெரு நாய் ஒன்று அந்த துணியை கவ்விக்கொண்டு வேறு ஒரு தெருவுக்கு ஓடிவிட்டது.
“அப்பாடா தப்பிச்சோம்” என்று சாந்தி பக்கம் வசிப்பவர்களிடம் போன் வாங்கி இப்போது இருக்குமிடம் சொல்ல.
மூவரும் வருவதற்குள் அந்த மந்திர துணி அந்த நாயிடம் இருந்து தப்பித்து கிழிந்த நிலையில் பறந்து அந்த பார்க்குக்குள் வந்தது.
சாந்தி அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தாள். சாந்தி காதுக்கு அருகில் பறந்து கொண்டே வந்த துணி. “சாந்தி தண்ணீர் ரொம்ப தாகமா இருக்கா?” என ரகசியமாக கேட்டது அவ்ளோதான் அந்த துணி பேசியதும் சாந்தி குடிக்க கையில் பிடித்து வைத்து இருந்த தண்ணீரை எடுத்து அந்த துணி மீது எரிந்து விட்டு, அந்த பார்க் ஓரமாக போய் நின்று கொண்டாள்.

அங்கும் அந்த சிறு துணி பறந்து வந்து இங்க என்ன தேடிட்டு இருக்க அவள் காதுக்கு அருகில் ரகசியம் பேச, அப்போது சாந்தி பயந்து ரெண்டு அடி எடுத்து வைக்க உள்ளே இருந்து ஏதோ ஒரு சக்தி சாந்தியை இழுப்பது போல தெரிய.

“அச்சோ சாந்தி பாத்து” என்று மிஸ்டர். ஜீரோ துணி கத்த, அங்கு இருந்த மணலில் கால் புதைந்து கொண்டது. இந்த துணிக்கு பயந்து காலை வேகமாக இழுக்க, ஒரு செயின் அவனது கலோடு வந்தது, அதை கையில் எடுத்துக்கொண்டு சாந்தி ஓடி வந்து ருத்ரா மீது மோதிட்டா.

“என்னாச்சி சாந்தி?”.
“அந்த துணி என்னை துரத்திட்டு வருது” சாந்தி பதட்டமாக, மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்க திக்கி தினறிச் சொன்னாள்.

“என்ன? துணி துரத்திட்டு வருதா!” மூவரும் ஆச்சர்யமாக அங்கு பறந்து வந்த துணியா? என்று எட்டிப் பார்க்க, ஒரு பொம்மை போல உருவம் எடுத்து ருத்ரா முகத்துக்கு நேராக வந்து நின்று” எனக்கு ஏன்னு தெரில உன்ன பிடிச்சி இருக்கு” பக்கம் இருந்த அக்னியை பார்த்து.

“அக்னி நிலா பயந்து கொண்டு ருத்ரா கையை பிடித்துக்கொண்டு பின்னால் ஒளிந்து கொண்டாள், என்ன துணி பேசுது என்பது போல.
“உனக்கும் எனக்கும் ஏதோ கனெக்சன் இருப்பது போல எனக்கு தெரியுது” அந்த உருவம் எடுத்து துணி சொல்ல.

“ஐயோ எனக்கு உன்ன தெரியாது, உன்ன பாத்தாவே பயமா இருக்கு” அக்னி நிலா ருத்ரா பின்னால் நின்று கொண்டு பாதி முகம் தெரிய எட்டி பார்த்து சொன்னாள்.
“சரி விடு உன்ட நான் அப்புறம் வரேன்”. வசியை பார்த்து “உன்ன எனக்கு, எங்கோ பார்த்தது போல தெரியுது ஆனா ஞாபகம் இல்ல சரி விடு” என்று நான்கு பேருக்கும் முன்னால் வந்து நின்றது.
வசிக்கும் சாந்திக்கும் தான் இவை அனைத்தும் புதிது, ருத்ரா இதவிட அதிகமா பார்த்து இருக்கிறான் அதனால் சாதாரணமாக நின்றிருந்தான்.

ருத்ரா பொறுமையாக “யார் நீ, எதுக்கு சாந்திய பயம் காட்டுற, நீதான் எல்லா கொலையும் செஞ்சதா?”.

“நான் பயம் காட்டலை, ஆமா நீ சயின்டிஸ்ட் தான எப்போ போலீஸ் போல கேள்வி கேட்க ஆரம்பித்தாய். அதுமட்டும் இல்லாமல் அவ தான் என் லவ்வர்னு சொல்லி பேசிட்டு இருந்தா, அதான் என்ன ஒரு பொண்ணு உருகி உருகி காதலிக்கறாளேன்னு பார்க்க வந்தேன்” மொத்த பழியும் சாந்தி மேல் தூக்கி போட்டது அந்த அடங்காத சிறு துணி.
பயந்து கொண்டு இருந்த சாந்திக்கு இத கேட்டதும், கோபமாக சீரத் துவங்கினாள்.

“டேய்ய் நான் என் ஆளு மிஸ்டர். ஜீரோவை லவ் செய்றேன், உன்ன நான் எங்க லவ் பண்ணேன்?”.
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
16 மாய நிலா

அந்த துணி விரிந்து மிஸ்டர். ஜீரோ என்று எழுதி இருந்ததை காட்டியது.

ருத்ரா இதை பார்த்து ‘என்ன என் கையெழுத்து போல இருக்கு என ருத்ரா அதிர்ந்தான்’ இவன் யோசனையில் இருக்க.

வசி சாந்தியை முறைத்துக்கொண்டே.

“சாந்தி இந்த துணி எங்க இருந்து கிடைத்தது” முழு போலீஸ் காரனாகவே மாறி வசி கேட்க.

“அது லாஸ்ட் கொலை நடந்த இடத்துல”.

“எவிடென்ஸ் வைக்க வேண்டிய இடத்துல வைக்காம எதுக்கு எடுத்து வந்த, என்ட இருந்து உண்மை மறச்சி இருக்க, உனக்கு அந்த ஜீரோவை காப்பாத்தணும் அப்படித்தான?”.

வீரா திட்டுவது எதும் சாந்தி காதில் கேட்கவே இல்ல ‘மிஸ்டர். ஜீரோ ஒரு துணியா? அப்போ என்னோட பாக்காத காதல் அவ்ளோதானா?’ யோசித்துக்கொண்டு இருந்தாள்.

வசி சாந்தியை உளுக்கி “நான் பேசிட்டே இருக்கேன் நீ என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க.”

“வசி நான் மோசம் போய்ட்டேன், நான் போயும் போயும் ஒரு துண்டு துணியவா காதலிச்சேன்”.

சாந்தி சொன்னதை கேட்ட பிறகுதான் வசிக்கும் ஞாபகம் வந்தது சாந்தி மிஸ்டர். ஜீரோவை லவ் செய்தது.

“சாந்தி உன் ஆளு வந்துட்டான் இனி எங்களை எல்லாம் கவனிப்பியா. இனி நேர்லயே ரெண்டு பேரும் டூயட் ஆடுங்க உங்கள தடுக்க யாரும் இல்லை” வசி கிண்டல் செய்ய ருத்ரா அக்னி நிலா சாந்தியை பார்த்து சிரிக்க துவங்கினார்கள்.

ருத்ரா குழப்பமாக அந்த துணியில் இருந்த கையெழுத்தை பார்த்துக்கொண்டு இருந்தான்.

இந்த துணியின் ரகசியம் என்ன? என்றுதான் நான்கு பேருக்கும் புரியவில்லை.

“மிஸ்டர். ஜீரோ உண்மையா நீயா?” சாந்தி பாவமாக முகம் வைத்து கேட்க.

“நானே தான் உன்னோட காதலில் உயிர் பெற்று வந்து இருக்கிறேன், என் காதலியை பார்க்க” என்று சொல்ல.

“ஒன்னும் தேவை இல்ல போ, நீ என்வழ்க்கையில் லவ் வே இல்ல” சாந்தி அம்மா ஒரு முறை சொன்னது நினைவுக்கு வந்தது. “கொடூர முகத்தோடு ஒருவன் வருவான், அப்போ தெரியும் இந்த பார்க்காத காதலின் ஆட்டம்” என்று சொன்னபோது கூட சாந்தி பயப்பட வில்லை, இந்த இத்துலுண்டு துணியை பார்த்து பயந்துட்டா.

வசி இப்போதுதான் அந்த பார்க் சுற்றி பார்த்தான். இதற்கு முன்பு இங்கு வந்து இருப்பது ஞாபகம் வந்தது. வசி சிறிது நேரம் யோசித்துவிட்டு, அவனுக்கு பார்வை போன அந்தயிடம் தான் இது. வசிக்கும் முதல் முத்தம் கிடைத்ததும் இந்தயிடம் தான் அதும் ஒரே நாளில்.

ருத்ராக்கும் இந்த இடம் எங்கோ பார்த்தது போல இருந்தது, சிறிது நேரம் யோசித்தவன், அவனது ரூபி இறந்த இடம். கடைசியாக ஒரு முறை கூட ரூபி முகத்தை பார்க்காமல் விரக்தியில் ருத்ரா சென்ற அந்த கோரமான இடம் என்று நினைத்த இருவர் முகத்திலும் சோகம் அப்பிக் கொண்டது.

வசி... சாந்தி கையில் இருந்த செயின் பார்த்து “இது யாரோடது?”.

“தெரியல அந்த எட்ஜ்க்கு போகும் போது காலுல மாட்டிக்கிச்சி”.

ருத்ரா எதற்சையாக பார்க்க ரூ என்று டாலர் போட்ட சிறிய பிரேஸ்லெட் இருந்ததை பார்த்து “இது என்னோட ரூபியோடது இங்க எப்படி வந்தது”.

“ரூபி யாரு,” சாந்தி கேட்க.

“நான் வந்து சொல்றேன்,” சாந்தி கையில் இருந்த செயின் வாங்கிக்கொண்டு ருத்ரா வேகமாக கிளம்பினான். பாதி தூரம் சென்றவன் திரும்ப வந்து “அக்னி நிலாவை பத்திரமா கூட்டிட்டு போங்க. அவ எதாவது கேட்டா வாங்கி கொடு வசி” எனச் சொல்லிட்டு திரும்ப பைக் எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து சென்றான்.

மூவரும் இவன் எதுக்கு இத பாத்துட்டு இப்படி தெறிச்சி ஓடுறான்? அதன் பிறகு மூவரும் அவர்கள் தற்காலிகமாக தங்கி இருக்கும் இடத்துக்கு சென்றார்கள்.

அங்கு ரோஸ் மற்றும் ஆதிரா அந்த குகை திரும்ப வர எதாவது வழி இருக்கிறதா என்று அந்த இடத்தை ஆராய்ந்து கொண்டு இருந்தார்கள். காணாமல் போன குகையையும் அர்ஜுன் மற்றும் ராஜாவை கண்டு பிடிப்பார்களா இந்த இரு பெண்கள்.


17 மாய நிலா

ரோஸ்க்கு ஏதோ ஒன்று கால் தடுக்க அது என்னவென்று பார்ப்பதற்குள், ரோஸ் எடக்கு முடக்காக விழுந்து கிடந்தாள்.

ஆதிரா விரைந்து வந்து கீழே விழுந்து இருந்தவளை தூக்கி விட்டாள், நடு காட்டில் விட்டது போல தவித்து நின்றார்கள் இருவரும். அடுத்து என்ன செய்வது என ஒன்றும் விளங்கவில்லை.


ராஜாவும், அர்ஜுனும் அங்கு தூக்கி எரியபட்டவர்கள் ஒரு அரண்மனை வாசலில் விழுந்தார்கள், ஏதோ மாய உலகம் போல இருந்தது. இருவரும் எந்திரிக்கும் சமயம்

அங்கு ஒரு அழகான அரண்மனை தென்பட்டது, அதை நோக்கி நடந்தார்கள், அங்கு ஒரு தோட்டம் தென்பட்டது.

இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, “அர்ஜுன் இந்த கதை என் பாட்டி நிறைய முறை சொல்லி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்”.

“எனக்கும் இந்த கதை தெரியும்” என்றான் அர்ஜுன்.

“ஒருவேளை நாம் இறந்த காலத்துக்கு வந்து இருக்கோமா?”.

அர்ஜுன் “ஆமா” என்றான், அந்த அரசி முகம் தெரியவில்லை அருகில் சென்று பார்க்க நினைத்தார்கள். இவர்கள் நெருங்கும் முன்பு அரசி கோபமாக அரசரை தேடி அங்கு அவசரமாக போக நினைக்க வழி மறித்து நின்றார்கள் இருவரும்.

இறந்த காலத்தில் இருந்த சில முக்கிய நபர் நிகழ் காலத்தில் பிறந்ததற்கு என்ன காரணம், மாயா எதைத் தேடி அலைகிறாள், அனைத்துக்கும் இங்கு விடை கிடைக்கும்.

தற்போதைய வசி இறந்த காலத்தில் வசீகர மகாராஜாவாக இருந்தான்.

அரசி – அக்னி நிலா.

ருத்ரா – மந்திரியாகவும் சிறப்பு மருத்துவராகவும் இருந்தான், அக்னி நிலாவுக்கு மிக நெருக்கமான நட்பாகவும் இருந்தான்.

ரோஜா – ருத்ராவின் தங்கை.

ராஜ விக்ரமன் (ராஜா) – நாட்டுக்கு புதிய மற்றும் பயனுள்ள திட்டங்களை எடுத்து சொல்லும் மக்களின் தூதுவன்.

அர்ஜுன், ஆதிரை, சாந்தி – அக்னி நிலாவின் சிறப்பு காவலர்கள்.

ஆகாஷ், சைலு – காதலர்கள், அரண்மனை பாதுகாக்கும் தளபதி மற்றும் பெண்கள் அணிக்கு சைலஜா.

ஆண்கள் அணிக்கு ஆகாஷ் மறு பிறவியிலும் அதே தோற்றம் மறுபடியும் அதே பேர் உடன், ஆளுக்கு ஒரு மூலையில் சிதறி அவதரித்தார்கள். மறைக்கப்பட்ட பல ரகசியங்களை சொல்லவும், தற்போதைய ஆபத்தை தடுக்கவும் மீண்டும் பிறப்பு எடுத்து, இந்த முறையாவது தீய சக்தியின் சூழ்ச்சியிலிருந்து காப்பார்களா பார்ப்போம்.

மிக முக்கியமான ஒருவள் இருக்கிறாள் சாகுந்தலா தேவி, நாட்டை மற்றும் அரசனை ஆட்டுவிக்கும் தீய சக்தி, வசீகர மகாராஜாவின் இரண்டாவது மனைவி.

அர்ஜுனா இங்கு என்ன செய்கிறாய்? நான் உன்னை ஆதிராவை பத்திரமாக பார்த்துக்கொள்ள தானே அனுப்பி வைத்தேன், இப்போது அவள் நலமா?” ஆதிராவுக்கு உடல் நிலை சரி இல்லை.

அரசி பின்னால் வந்த ஆதிரை “தோழி யாரிடம் பேசிக்கொண்டு இருக்கிறாய்?” அங்கு இருக்கும் இருவரை பார்த்து.

“அர்ஜுனா இப்போதுதான் நீ என்னுடன் வந்தாய் அதற்குள் இங்கு எப்படி, என்ன கோலம் இது கோமாளி போல” ஆதிரை அவனது உடையை சுட்டிக் காட்டி சிரித்தாள்.


ராஜா முகம் போன போக்கை பார்த்து அர்ஜுன் சிரித்து விட்டான்.

அங்கு நடப்பது ராஜாக்கு கொஞ்சம் வித்யாசமாக இருந்தது, அர்ஜுன்க்கு ஏற்கனவே விஷயம் தெரிந்ததால் அவன் சாதாரணமாக இருந்தான்.

குழப்பமான ராஜாவை பார்த்து “உங்க பாட்டி சொன்ன கதையில் நீயும் இருக்க,” சிறு குறிப்பு மட்டும் கொடுத்துவிட்டு அர்ஜுன் அரசியை பார்த்து.

“நாங்க இந்த காலத்தை சேர்ந்தவர்கள் இல்லை,” ஆரம்பித்து அர்ஜுன் சொல்ல சொல்ல நம்பாத பார்வை பார்த்துக்கொண்டு இருந்தனர் அரசியும் ஆதிராவும்.

“நீங்க என்னை நம்பவில்லை, சரி நீங்கள் சென்று ராஜாவையும் அர்ஜுனும் தோட்டத்துல இருப்பங்கவங்கள இங்க கூட்டிட்டு வாங்க”

“நீங்க இங்க இருக்கும் போது எப்படி தோட்டத்துல இருப்பிங்க?” என பதில் கேள்வி கேட்க, இருவரும் ஏதோ தம்மிடம் விளாடிக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்த அரசி.

போய் அங்கு பார்த்துட்டு வாங்க என ஆதிராவை அனுப்பி வைத்தார் அவள் இருவரையும் விசித்திரமாக பார்த்துக்கொண்டு போனாள்.

அங்கு ஆதிரா அங்கிருந்தவர்கள், இங்கும் இருக்காங்க என இருவரையும் பார்த்து கத்திக்கொண்டு ஓடி வந்தாள். “அரசி நான் அவங்கள பார்த்தேன், நம்ம அரண்மனைக்குள்ள பேய் வந்துடுச்சி”.

இறந்த கால அர்ஜுனும், ராஜாவும் பதறி அடித்து ஓடிக்கொண்டு இருக்கும் ஆதிராவை பார்த்து பின் தொடர்ந்து வந்தார்கள், அரசியிங்கு இருப்பதை பார்த்து தலை வணங்கினார்கள் இருவரும்.

அரசிக்கு இப்போதுதான் எதோ பிடி பட்டது, மறைந்து இருக்கும் எதிர்காலத்தை சேர்ந்த இருவரும் வெளியே வர, ஆதிராவுடன் சேர்ந்து இறந்த கால அர்ஜுனும், ராஜாவும் ஆச்சர்யமாக பார்த்து, அவர்களை போல இருக்கும் இருவர் முன் வந்து நின்று, தொட்டுப் பார்த்தார்கள்.

“பார்க்க எங்களை போல இருந்தாலும், உங்கள் உடை பார்க்க சகிக்கவில்லை” அங்கு இருக்கும் அனைவரும் சிரித்தாளும், குழப்பம் அனைவர் முகத்திலும் எஞ்சி இருந்தது.

அரசி இவர்களை பார்த்து “நீங்க இங்கு வந்ததன் காரணம்”.

“இன்னும் சில நிமிடங்கள் மட்டும் தான் எங்களை உங்களால் பார்க்கமுடியம் இன்னும் சிறிது நேரத்தில் இந்த இடத்தைவிட்டு நாங்கள் மறைந்து விடுவோம், அதற்குள் நீங்கள் மறைத்து வைத்த சில பொருள் எங்களுக்கு வேண்டும்?” என அவசரமாக சில தேவையானதை அர்ஜுன் கேட்டான்.

“நான் எதும் மறைத்து வைக்கவில்லை” என்றார் அரசி.

அர்ஜுன் அவன் கையில் இருந்து ஒரு வேலை காண்பித்து, இது போல உங்களிடம் ஒன்று இருக்கும் அது வேண்டும்.”

“இது போல என்னிடம் எதுவும் இல்லையே” என அரசி யோசிக்க.

“நீங்க நல்லா யோசித்து பாருங்க, வரலாற்றையே மாத்தக்கூடிய ஒன்று அது கண்டிப்பாக வேண்டும்” ஆதிரை முன் வந்து அரசி நான் இத பார்த்து இருக்கிறேன் உங்களிடம், ஆனால் அது இது போல இருக்காது, வைரம் பதித்த வேல் உங்கள் அறையில் பார்த்து இருக்கிறேன்”.

“போய் எடுத்துட்டு வா” என அரசி கட்டளையிட.

ஆதிரை எடுத்துட்டு வந்ததும் அதை அர்ஜுன் வாங்கிக்கொண்டான். ராஜாக்கு இங்கு நடக்கும் எதுவும் புரியவில்லை, ஆனால் அர்ஜுன் கையேடு மட்டும் இல்லை என அவனுக்கு புரிந்தது. ஆனா அவன் கையேடு என்று தானே சொல்லி வந்தான், இங்கு நடப்பதை பார்த்தால் ஏதோ பெரிய திட்டத்தோடு தான் வந்து இருப்பான் போல’ என ராஜா மனதில் நினைத்துக்கொண்டான்.

அதை அர்ஜுன் ஆதிராவிடம் வாங்கிக்கொண்டு, “அரசி நீங்க இனி காண்பது எதும் உண்மை இல்லை மெய் கண்களோடு பாருங்கள் இந்த மனிதனுடைய கண்கள் உண்மையை ஒரு போதும் சொல்வதில்லை தேவையான சமையத்தில்” அர்ஜுன் சொல்லிக்கொண்டு இருக்கும் சமயத்தில் இருவருக்கும் மந்திரத்தால் கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து, இரு மின்னல் இருவரையும் மறைத்தது.

அரசி சில திட்டங்கள் தீட்டினாள், ஆனால் இவர்களால் எதாவது சிறு மாற்றம் தான் ஏற்படுத்த முடியும், முழுவதாக எதும் மாற்ற முடியாது. அது தெரிந்து அரசி சில விசயம் தெரிந்து கொள்ள ஆசைபட்டார்.

“இப்போ வந்தவர் சொல்வதை பார்த்தால் ஏதோ தவறாக இருக்கிறது, அர்ஜுனா நீ சென்று அந்த இரண்டாம் மனைவி பற்றி முழு தகவல் கொண்டு வா, ராஜா நீ சென்று அரசை, ரகசியமாக பார்க்க ஏற்பாடு செய்.”

ஆதிரை அரசிக்கு ஆதரவாக அருகில் நின்று இருந்தாலும், சிறு பயம் ஏற்பட்டது உண்மைதான், முக்கியமான சில நபர்களின் மனம் பதை பதைத்தது.

ராஜாவின் பாட்டி சொன்ன கதை நேரில் பார்த்துக் கொண்டு இருந்தான் ராஜா மற்றும் அர்ஜுன். ஆனால் இது நடந்த உண்மை கதை மறைக்கப்பட்ட கதை. அவர் பாட்டி சொன்ன கதைக்கும் இதற்கும் நிறைய வித்யாசமிருந்தது,

அரசிக்கு அந்த இரண்டாம் மனைவி பற்றி சில செய்தி கிடைத்தது. அவள் ஒரு சூனியக்காரி என்று நாட்டு மக்களை அழிப்பேன் என்று வசீகராவை பயம் காட்டி, முதலில் பயப்படாத அரசர், கோட்டையில் உள்ள பெரிய தலை அனைத்தையும் அவள் மாயத்தால் ஒரு நொடியில் கொன்று குவித்ததை பார்த்து அரண்டுவிட்டார்.

இந்த நிலைமை நாட்டு மக்களுக்கு நடக்கணும் என்று நினைக்கிறியா அரசே, என்னை திருமணம் செய்துகொள், உன் நாட்டு மக்களை விட்டுவிடுகிறேன், நான் சொல்வதையும் கேட்கவேண்டும், நீ எனக்கு மட்டும் சொந்தமாக வேண்டும். சிறு வயதில் இருந்து நான் உன்னை காதலித்துக் கொண்டு இருக்கிறேன். நீ வேறு ஒருவளை மணந்து குழந்தை குட்டி என்று இருந்தால் நான் விட்டு விடுவேன் என்று நினைத்தாயா?” இது தான் காரணம் அரசி, அரசை அவள் பயம் காட்டி வைத்து இருக்கிறாள். இப்போது எல்லாம் அரசர் உங்களை பார்க்க வராததற்கும் இதுதான் காரணம்.

அரசரை சந்திக்க ரகசிய ஏற்பாட்டோடு வந்து இருந்தான் ராஜவிக்ரமன். ராஜவிக்ரமன், அரசியோடு செல்ல.

ஆதிரா, அர்ஜுன், இருவரும் ருத்ராக்கு செய்தி சொல்ல அனுப்பப்பட்டார்கள், செய்தி தெரிந்த ருத்ரன், சாந்தா தேவி ரோஜா அனைவரும் அரசர் அறையை நெருங்கும் முன்பு அனைத்தும் முடிந்து இருந்தது.

அரசி கிளம்பும் முன்பு அவள் தினமும் அன்று நடந்ததை எழுதிவைக்கும் பழக்கம் உடையவள். இன்று நடந்ததும் எழுதிவிட்டு, இன்று நடக்கும் இருவர் யுத்தத்தில் யாரு வேணும்னாலும் இறக்கலாம் முடிந்தவரை போராட போகிறேன் என்று எழுதி முடித்துவிட்டு.

ராஜா அறைக்குள் போகும் போது.

சகுந்தலா கண்களில் விஷம் உடையவள், மாயசக்தி உதவியால் பேரழகியாக காட்சி அளிக்கும் மாயாவி இந்த சகுந்தலா.

“அரசியை இன்று இறக்க வேண்டும், இரண்டாம் மனைவி என்ற பட்டம் எனக்கு வேண்டாம். இந்த நாட்டை ஆளும் ஒரே அரசி நானாக இருக்கனும்” அரசரை அந்த சகுந்தலா மிரட்டிக்கொண்டு இருந்தாள்.

ஆனால் அரசர் அதை காது கொடுத்து கூட கேட்காமல் “நீ சொன்னதை நான் செய்ததற்கு ஒரே காரணம் மக்கள் அவர்களை உன் கையில் கொடுக்க நான் ஒன்னும் முட்டாள் இல்லை, அதும் இல்லாமல் என் மனைவியை கொல்லும் அளவுக்கு நான் ஒன்னும் பெரிய மனதுக்காரன் இல்லை, என் மரணம் நிகழ்ந்தாலும் எனக்கு சம்மதம்” அரசர் இனி சொல் பேச்சு கேட்க போவதில்லை என்று தெரிந்த சகுந்தலா அரசரை கொல்ல துணிந்துவிட்டள்.

அரசரை காப்பாற்ற வந்த அரசி தடுக்க வருவதற்குள் நெஞ்சில் விஷம் தடவிய கத்தியை வாங்கிக்கொண்டு உயிர் விட்டான் வசீகர மகாராஜா.

உள்ளே வரும் முன்பே, அர்ஜுன் மற்றும் ஆகாஷ்க்கு அரசி கட்டளை இட்டு இருந்தார்.

அளுக்கு ஒரு இடம் அழிக்கபட்டது அசம்பாவிதம் நடக்கும் பட்சத்தில் அரசின் குறிப்பேடு பத்திரமாக வைக்கப்பட வேண்டும் என்பதாகும். அர்ஜுனிடம் இருந்து ஷைலஜா விடம் கைமாறி சாந்தி, ரோஜா, ஆதிரா கடைசியாக ஆகாஷ் கைகளில் கிடைத்தது. ஊரின் எல்லையில் விழுது மரம் என்று மக்களால் பூஜிக்கப்படும் அந்த மந்திர மரத்தின் அடியில் மறைத்து வைத்தான்.

தூய்மையான உள்ளம் கொண்டவர்கள் தவிர வேறு யாரிடமும் இந்த புத்தகம் கிடைக்காதபடி அந்த மரத்துக்கு ஒட்டுமொத்த அனைவரின் உயிர் கொடுத்து சக்தி கொடுத்தார்கள்.

புத்தகம் ஒருவர் கைக்கு மாறிய மறு நொடி உயிர் துறந்தார்கள். அரசி தொடங்கி அனைவரின் ரத்தமும் தெளித்து அந்த புத்தகத்திற்கு சக்தி பெறுகியது.

கோபம் வந்த சகுந்தலா இருவரையும் கொன்று விட்டாள், கடைசியாக

சகுந்தலா சாகும் போது மீண்டும் பிறப்பேடுப்பேன், இந்த நாட்டையும் அரசனையும் ஆட்சி செய்ய.

ருத்ரனும் சொன்னான் உன்னை திரும்ப கொல்ல மீண்டும் எங்கள் படை வீரர்கள் வருவார்கள்.

மிஞ்சியது ருத்ரா மட்டும் தான் அந்த அதிசய வேர் கொண்டு சகுந்தலாவை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.

இவை அனைத்தும் எதிர்கால அர்ஜுனும், ராஜாவும் பார்த்து.

“எங்க பாட்டி கதையை தப்பா சொல்லிடுச்சி”.

“எல்லாம் சகுந்தலா வேலை, அவளை கதையில் நல்லவள் போல சித்தரித்து விட்டாள் அவள் மாய சக்தி கொண்டு”.

யார் இந்த சகுந்தலா? இந்த ஜென்மத்திலாவது இவர்கள் அவளை வதம் செய்வார்களா?
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
18 மாய நிலா


ஆதிரா, ரோஸ் ஒருவழியாக அந்த குகை இருந்த திட்டை முழு பலம் கொண்டு உடைத்து விட்டார்கள். தீடிரென கண்கள் கூசும் வெளிச்சம் அந்த இருளில் பரவியது. அதன் வழியே இருவரும் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்துக்கு வந்தார்கள்.

ராஜாவை கட்டிக்கொண்டு “இப்போது நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம்”. ராஜா இவளை விசித்திரமான பார்வை வீச “இதுபத்தி பெருமையா பேசிக்கலாம்” அங்கு நடந்ததை அர்ஜுன் விரிவாக சென்னான்.

ரோஸ்க்கு இங்கு நடப்பதை பார்த்து ஏதோ தவறாக தெரிந்தது. தங்கள் விஷயத்தை பிறகு பார்த்துக்கலாம் என்று சிட்டி நோக்கி இவர்கள் பயணம் தொடர்ந்தது.

பாதி வழியில் அர்ஜுன், ஆதிரா தேனீர் குடிக்கும் இடைவெளியில் மறைந்தார்கள், அங்கு இருந்து எடுத்துவந்த பொருளையும் கையோடு எடுத்து சென்றார்கள் அர்ஜின் மற்றும் ஆதிரா.

“இப்போ என்ன செய்றது, அவங்கள காணோமே?” என சுற்றி தேட அவர்கள் கிடைப்பதற்க்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை.

“அவங்க திடீர்னு காணாம போவாங்கனு எனக்கு தெரியும்” என்றான் ராஜா பெருமையாக.

“நீ சொல்றது எல்லாம் நம்புறதுபோல இல்ல, பாஸ்ட்க்கு எப்படி போக முடியுமா என்ன?” என்ன தான் ரோஸ் சைன்டிஸ்டாக இருந்தாலும் அறிவியலில் இது இப்போதைக்கு சாத்தியமில்லை என அவள் நன்கு அறிவாள்.

“அதான் போய்ட்டு வந்தோம் நம்பலைனா போ, மாயாஜாலத்தால் இவை நடக்கும்” ரோஸ் ராஜாவிடம் பேச்சி வளர்த்துக்கொண்டே வந்தாள். அவன் சொன்ன விசயத்தில் நம்பிக்கை வரவில்லை என்றாலும் ராஜாவை நம்பினாள்.

“அங்க என்ன போல இருந்தாங்களா!!,” ராஜா “ம்ம்” மட்டும் சொன்னான்.

“ஏன் ராஜா என்ட பேச மாட்டிங்களா?” எத்தனையோ முறை இவள் அவனை கண்டும்காணாமல் போய் இருக்கிறாள், இந்த ஒரு முறைக்கு இவளுக்கு வலிக்கிறது. பல வருடமாக நிராகரிப்பு மட்டுமே பெற்ற ராஜாக்கு எவ்வளவு வலித்திருக்கும் என தன் மன கஷ்டத்தோடு அவனது வலியையும் ரோஸ் உணர்ந்தாள்.

“ஆமா நமக்குள்ள பேச என்ன இருக்கு ரோஸ்” என்றான் ராஜா கடினப்பார்வை கொண்டு.

“என்ன ராஜா இப்படி சொல்லிட்டீங்க?”.

“வேணா ரோஸ் போதும், இதோட நிறுத்திக்கலாம். ஐ நீட் பிரெஷ் ஏர்” என்று காட்டுப் பகுதியில் வண்டியை நிறுத்திவிட்டு மலை மேல் இருந்து ஒரு மரத்தில் சாய்ந்துகொண்டு கண் மூடி அமர்ந்து இருந்தான்.

ரோஸ் அருகில் அமர்ந்து ராஜா கையை பிடித்துக்கொண்டாள், ராஜா லாவகமாக கையை பிரித்துக்கொண்டு கண்கள் மூடி அமர்ந்து இருந்தான்.

சிறிது நேரம் கண்கள் மூடி இருந்த ராஜா மனதில் பழைய நினைவுகள் கொஞ்சம் வந்தது, கடைசிவரை காதலை கூட வெளிப்படுத்தாமல் உயிர் துறந்து இருந்தான். இந்த ஜென்மத்திலும் அது தான் நடக்கும் போல நமக்கு. சலிப்பில் ராஜா மனம் சுருங்கியது, ஒருவர் ஒருவருக்காக பழைய ஜென்மம் நியாபகம் வரத் தொடங்கியது.

சிறிது நேரம் அமைதியாக இருந்த ரோஸ், ராஜா தோளில் சாய்ந்து கொண்டாள்.

“ரோஸ் ப்ளீஸ் டிஸ்டர்ப் செய்யாத” என ராஜா கோபமாக ஆரம்பித்தாலும் சோகமாக முடித்திருந்தான்.

“ராஜா சார் தூக்கமா வருது” அங்கு நடந்த மனம் உடல் களைப்பில் ரோஸ் தூங்கிவிட்டாள். ராஜா கண்டு பிடித்தது ஒன்று தான் அந்த வேர் மரம் தேடி போனும். ஆனால் அங்கு அந்த புத்தகத்தை யார் வைத்தார்களோ அவர்கள் கையால் தான் எடுக்க முடியும், ஆகாஷ் நம்பர் கண்டு பிடிப்பது பெரிய விசயமாக இல்லை, செய்தி அனுப்பினான் ராஜா.

“என் நம்பர் உனக்கு எப்படிடா கிடைத்தது?”.

“அதை விடு உனக்கு எதாவது பழைய நினைவு வந்ததா?”.

“என்ன நினைவு?” ஆகாஷ் ராஜாவிடன் கொஞ்சம் உஷாராக பேசினான். வசி, ருத்ரா, ஆகாஷ் சிறுவயதில் இருந்து நண்பர்கள். ராஜா இவர்கள் மூவருக்கும் சீனியர் அந்த முறையில் அனைவருக்கும் பழக்கம் உண்டு. இதில் வசி மட்டும் போலீஸ் துறை தோர்ந்தெடுக்க, ருத்ரான் ஆகாஷ் மருத்துவம் எடுத்து படித்தார்கள். வேறு வேறு இடத்தில் ஆனால் வேலைக்கு சேர்ந்தது ஒரே இடத்தில். புதிய புதிய கண்டு பிடிப்பில் இருவருக்கும் ஆர்வம் ஜாஸ்தி. ஆகாஷ் நோக்கம் இவர்கள் கண்டு பிடிப்பது அடித்தட்டு மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்பது, ஆனால் அதற்கு அரசாங்கம் விடவில்லை, கொடிய வகை நோய்க்கான மருந்தின் பார்முலாக்கள், பெரிய பெரிய மல்டி நேஷ்னல் கம்பெனிக்கு ஆகாஷ் கண் முன்னே விற்கப்பட்டது. அதை தடுக்க முடியாத நிலையில் ஆகாஷ் மற்றும் ருத்ரா நின்று இருந்தார்கள்.

அன்றே இருவரும் வேலையை விடும் எண்ணத்தில் சுழன்று கொண்டு இருந்தார்கள்.

அப்போது ராஜா வந்து, “இது எல்லாம் ஒன்னும் புதுசு இல்ல, ஆனா நீங்க ரெண்டு பேரும் நினைத்தால் அனைத்தும் மாற்றிவிடலாம்” இருவரும் ராஜாவை பார்க்க.

“ஆகாஷ், உன்னோட அப்பா கம்பெனியை நீ டேக் ஓவர் செஞ்சிக்கோங்க நானும் என்னோட அப்பாது எடுத்துக்கிறேன். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அந்த மருந்து கம்பெனி ஓனர் ஆகிட்டா பிரச்னை தீர்ந்திடும். அதனால் தான் ஆகாஷ் சைலுவிடம் ஒரு வருடம் நேரம் கேட்டு இருந்தான்.

சைலுக்கு மருத்துவத்தில் துளி கூட விருப்பம் இல்லை ஆகாஷ்காக வேண்டா வெறுப்பாக படித்தாள். இவள் நோக்கம் ஆகாஷை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும்”.

இறந்த காலத்துக்கு இருவரும் போய்ட்டு வந்ததில் இருந்து ஒரு ஒருவருக்காக பழைய ஞாபகங்கள் வந்தது வசி தவிற.

ராஜா அனைவர்க்கும் கான்பிரன்ஸ் கால் போட்டான் முதலில் ஆகாஷ்க்கு, அதன் பிறகு ருத்ரா வெளியே போய் இருந்தான் அவனது ரூபியை பற்றி விசாரிக்க. சாந்தி அந்த துணியை முறைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள். ராஜா கால் வரவும் எடுத்து ஸ்பீக்கர் போட்டுவிட்டு அந்த துணி ஒரு ஆண் பொம்மை போல மாறி அங்கும் இங்கும் திரிந்து கொண்டு இருந்தது, அதன் செயலை சாந்தி திகிலாக பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“சொல்லுங்க ராஜா” அனைவரும் ஒரு சேர கேட்க வசி மட்டும் தொடர்பில் இல்லை. வசி சாப்பாடு வாங்கி வர போய் இருந்தான்.

ராஜா நடத்தத்தை சுருக்கமாக சொன்னான் உங்களுக்கு பழைய நினைவு எதாவது வந்ததா? அனைவரும் ஆமா ஏதோ ஒரு கனவு மாதிரி வந்தது, அக்னி நிலாவும் ஆமா என்றாள்.

“ஆனா முழுசா புரியல இப்போ நம்ம என்ன செய்யணும்னு” அக்னி நிலா அதற்கு.

“நேரம் வரும்போது தானா தெரியும் என்றால்” ராஜாக்கு அரசியின் கம்பீரம் அக்னி நிலாவிடம் தெரிந்தது.

“இந்த அர்ஜுன், ஆதிராவை கண்டு பிடித்தால், எதாவது நமக்கு என்ன செய்வது என்று புரியும்?”.

“இப்போதைக்கு அவங்க நம்ம கண்ணுல சிக்க வாய்ப்பு இல்ல, அவங்களா வருவாங்க, அவங்க என்கிட்ட வந்துதான் ஆகணும்” ஆகாஷ் அவனிடம் இருக்கும் அந்த புத்தகத்தின், மேப் பற்றியும் சாவியை பற்றியும் சொன்னான்.

“அதுதான் மேப் அர்ஜுனிடம் இருக்கிறது என்றாயே?”.

“என்னிடம் இப்போது இருப்பது, அந்த புத்தகத்தை எப்படி அணுகணும் என்கிற மேப், அதும் இல்லாமல் நான் இல்லாமல் அதை அரசியால் கூட தொட முடியாது”.

நிறைய அழைப்புக்கு பிறகு வசி கடையில் பார்சல் வாங்கிக்கொண்டு கால் செய்தான்.

ராஜா எடுத்த எடுப்பில் “உனக்கு எதாவது ஞாபகம் வந்தா?”.

“என்ன டா ஞாபகம், நடு ரோட்ல இருந்து பேசிட்டு இருக்கேன் என்னன்னு சொல்லுங்க”.

“எல்லோருக்கும் நான் கதை சொல்லி சொல்லி நான் சோர்ந்துட்டேன்” நடந்ததை சொல்ல.

“ஆமாடா எனக்கும் ஞாபகம் வந்தது நான் பெரிய மகாராஜா” வசி மனதில் ‘இவனுங்க பிராங்க் செய்றாங்க வசி உஷாரா ஆகிக்கோ.’

“அப்பாடா இவனுக்கும் ஞாபகம் இருக்கு பரவாயில்ல” அடுத்த நொடி வசி ஒரு ஷாக் கொடுத்தான்.

“பெரிய மகாராஜா, எனக்கு மாசம் ஒரு கல்யாணம் நடக்கும் அதும் லவ் செய்து கல்யாணம் செஞ்சிப்பேன்” அக்னி நிலா வசி பேசுவதை கேட்டு கொந்தளித்துக் கொண்டு இருந்தாள்.

“டேய்ய் காமெடி செய்யாதீங்கடா, ஒன்னுக்கே வழி இல்ல எனக்கு வந்துட்டானுங்க. நானே என்னோட ட்ரீம் கேர்ள் தேடிட்டு இருக்கேன் அவ கிடைச்சதும் கல்யாணம்தான்”.

இவர்களுடன் பேசிக்கொண்டே வசி திரும்ப அந்த கருப்பு நிறம் உடை அணிந்த மாயா போல அந்த பக்கம் வசியை கவர வந்தாள் சகுந்தலா.

சகுந்தலா திட்டம் தெரிந்து கொண்ட மாயா இங்கு விரைந்து வருவதற்குள் சகுந்தலா வசியை நெருங்கினாள். மாயா வேகமாக வருவதை பார்த்த சகுந்தலா வசியை அதி வேகமாக நெருங்கினாள் மாயாவின் உருவத்தில்.

அப்போ வசி தவிற மத்தவங்களுக்கு ஞாபகம் இருக்கு இது எதும் தெரியாத வசி இருக்க அனைவர்க்கும் தொல்லை கொடுத்து கொண்டு இருக்க. இன்னொரு தொல்லையை கூட்டிட்டு வந்து இருக்கும் குழப்பம் பத்தாது என்று ஒருவள் வசி வாழ்க்கையை புரட்டிப்போட.

கான்பிரன்ஸ் கால் வசி வைத்துவிட்டான், “இவனுக்கு என்ன காலேஜ் பசங்களா என்ன கலாய்த்துக்கொண்டு இருக்கிறார்கள்”.

ராஜா இங்கு பேசிக்கொண்டு இருக்க, ரோஸ் தூங்க ஆரம்பித்து இருந்தாள், அவன் தோளில் சாய்ந்துகொண்டு ரோஸ்க்கும் கனவு மூலம் சில விசயங்கள் தெரியவந்தது.

ரோஸ் தூக்கம் கலையாதவாறு அவளை கைகளில் ஏந்திக் கொண்ட ராஜா காரில் படுக்க வைத்துவிட்டு, மீண்டும் அவன் அமர்ந்து இருந்த மரத்துக்கு கீழ் வந்து அமர்ந்து எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டான். வசிக்கு நினைவு வராது என்று உகித்தவன், ருத்ரா மனதிலும் ஆகாஷ் மனதிலும் இதுதான் ஓடிக்கொண்டு இருந்தது.

ராஜா ஒரு முடிவு எடுத்தான் இந்த போர்க்களத்தில் உயிர் போக நிறைய வாய்ப்பு இருக்குறது. பெண்கள் அனைவரையும் ஒரு இடத்தில் பாதுகாப்பா வைக்கணும். அர்ஜுன் சொன்னதை வைத்து பார்த்தால் இன்னும் ஆறு மாதத்தில் ஒரு பாதுகாப்பான இடம் அமைக்க வேண்டும் என்று ஊருக்கு ஒதுக்குப்புறம் இருக்கும் ஒரு இடம் தேர்வு செய்து அதற்கான ஏற்பாட்டை ராஜா இப்போதே செய்ய துவங்கினான்.

அந்த மிஸ்டர். ஜீரோ துணி இங்கு நடந்து கொண்டு இருக்கும் உரையாடல் போன் வழியாக கேட்டுக்கொண்டு இருந்தவர்கள்.

“நான்கூட நான் மட்டும் தான் வித்யாசம்னு நினச்சேன், நீங்களும் செம வித்யாசம் போல இறந்தக்காலம், நிகழ்காலம் என்று ஜாலியாக ட்ரிப் போய்ட்டு இருக்கீங்க” கை கட்டி நடந்து கொண்டே அக்னி நிலா முன்னால் போய் நின்ற மிஸ்டர். ஜீரோ “வணக்கம் மஹாராணி”.

“டேய்ய் டென்ஷன் கிளப்பாம போ, நானே கடுப்புல இருக்கேன்”.

“ஒஹ்ஹஹோ மகாராஜா லவ்வர் தேடுறது தெரிஞ்சி மஹாராணி கண்டாகிட்டீங்களா?” அக்னி நிலா எதும் பேசாமல் முறைத்துக்கொண்டு நின்று இருந்தாள்.

திடீர் என்று அக்னி நிலாக்கு மனது பதை பதைக்க தூங்க செல்வதாக சொல்லி அக்னி நிலா ரூமில் சென்று அடைந்துகொண்டாள்.

சாந்தி மிஸ்டர். ஜீரோவை பார்த்து “நீ உண்மையாவே மனுஷன் இல்லையா, என் காதல் போச்சா”. சாந்தி விட்டாள் அழுத்து விடுவாள் போல கண்களில் நீர் கோர்த்திருந்தது.

வசி சாப்பாடு வாங்கிக்கொண்டு சாலையை கடக்கும் முன்பு வேகமாக சென்று இருந்த டிரக் யூ டர்ன் எடுத்து வசியை வேகமாக இடித்தது.

மாயா வசியை காப்பாற்றுவதற்குள் அனைத்தும் நடந்து முடிந்தது டமால் என்ற சத்தத்தோடு.
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
19 மாய நிலா

ருத்ரா தேடிச் சென்ற ஒருவன், சற்று முன்புதான் இறந்தான் என்று கேள்விப்பட்டு ருத்ராக்கு ஏதோ அவனை சுற்றி தவறாக பட்டது. ருத்ரா சுற்றி நடப்பதை இனி கவனிக்கத் துவங்கினான்.

இந்த இறப்பு மர்மம், சில நேரம் முன்பு பழைய நினைவு என ருத்ராவை மொத்தமாக மூலையே வேலை செய்யாத அளவுக்கு வேகமாக அனைத்தையும் யோசித்துக்கொண்டு இருந்தான்.

‘அக்னி நிலா கூட கொஞ்சம் நேரம் பேசினால் அனைத்தும் கொஞ்சம் மறக்க முடியும்’ என்று யோசித்து ருத்ரா வீட்டுக்கு சென்றான்.

லாரி வசியை இடிக்க ஒரு நொடி பொழுதில் ஒரு மென்மையான கரம் ஒன்று வசியை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டது, தீ தொட்டதுபோல விழுந்த வேகத்தில் வசி எந்திரித்து “தேங்க் யூ, சாரி” என்று விலகி நின்றான்.

அப்போதுதான் வசி கவனித்தான், இடையில் குத்தி இருந்த அந்த பட்டாம்பூச்சி அந்த பெண்ணின் ஆடை.

எப்போதும் தன்னை பார்த்து ஓடும் இவள், இன்று மறைத்த முகத்தோடு நின்று இருப்பது வசியின் மனதிற்கு ஒரு உற்சாகம் கொடுத்தது. வசி அவளை நெருங்கி அவளது கையை தொட்டுப் பார்த்தான். அவள் மாயாவின் மோதிரம் ஒன்று ஆட்டையை போட்டு வைத்து இருந்தாள். அது சரியாக வசி கையில் படும்படி வைத்துக்கொண்டாள்.

வசி ஏற்கனவே சோதிக்கிறேன் என்று அக்னி நிலாவை முத்தம் கொடுத்து வைத்து செய்த பைத்தியக்காரத்தனம் செய்யாமல், தொட்டு பார்த்து தெரிந்து கொள்ளும் நோக்கில் தொட்டான் சகுந்தலாவை. வசி கையை பிடித்து இருந்தாள் அப்போதே தெரிந்து இருக்கும் இவன் பார்க்காமல் காதலித்த பெண் இவள் என்று, ஆனால் சகுந்தலா அறிவுக்கு வசியை நம்ப வைப்பது மிகவும் எளிது.

போன ஜென்மத்தில், அக்னி நிலாக்கு அவன் ஆசையாக அளித்த முதல் பரிசு.

அப்போதுதான் தூரம் இருந்த மாயா அவள் கையை பார்த்து ‘எப்போது அவள் கைக்கு எனது மோதிரம் எப்படி போனது’, தூரம் இருந்து பார்த்தாள் இங்கு நடப்பதை, கண்களில் கண்ணீரோடு.

மாயா நினைத்தால் கூட இப்போது அவள் இருக்கும் நிலையில் வசியை நெருங்க முடியாது. மாயா அக்னி நிலாவின் அழிக்கபட்ட நினைவுகள், ஒரு நினைவால் என்ன செய்ய முடியும், வசியை காற்று போல மோதி அடுத்த பக்கம் செல்லத்தான் முடியும். மாயாவின் மர்மம் என்ன பொறுத்து இருந்து பார்ப்போம்.

மாயா கலங்குவதை பார்த்த அர்ஜுன் மற்றும் ஆதிராக்கு என்ன செய்து அவளை சரி செய்வது என தெரியவில்லை.

“எல்லாம் சரியா போய்டும், நாங்க இருக்கோம்,” மாயாவின் பழைய நினைவுகள் ஒரு புறம். மாயாவின் மாய உடல் ஒருபுறம் இரண்டும் ஒன்றாக சேரும் நாள் என்னாளோ, காலம்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இங்கு அக்னி நிலா வசி வேற யாரோ ஒரு பெண்ணை பார்க்காமல் காதலிப்பது தெரிந்ததும், மனம் உடைந்து போனாள், பழைய நினைவுகள் இவளிடம் இருந்து இருந்தால் தெரிந்து இருக்கும், வசி நேசித்தது அக்னி நிலாவைத்தான் என்று.

அறையில் அடைந்து கொண்டு அழுது தீர்த்தவள் வெளியே வரும் சமயம் ருத்ரா வந்திருந்தான்.

“அக்னி நிலா என்னாச்சி எதுக்கு முகம் சிவந்து இருக்கு” என அவளை கேட்க.

“ஒன்னும் இல்ல ருத்ரா.”

“சரி வா ஒரு வாக் போய்ட்டு வரலாம்” என்றான்.

சாந்தி அந்த மிஸ்டர். ஜீரோ துணி செய்யும் சேட்டைகளை பார்த்து புலம்பிக் கொண்டு இருந்தாள்.

“என் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே” தலையில் கைவைத்து அமர்ந்து இருந்தாள்.

“சாந்தி நீங்களும் வரீங்களா வெளியே போய்ட்டு வரலாம், என ருத்ரா கேட்க.

“இல்ல நான் வெளியே வரல, காலையிலேயே பட்டது போதும் ஒரு பக்கம் ஏதோ பழைய காலத்து ஸ்டோரி கேரக்டர், அது கூட நான் டைஜிஸ்ட் செஞ்சிட்டேன் ஆனா, என் காதல் இப்படி ஒரு துணியா போய்டுச்சே. என் தலையிலே மண் அள்ளி போட்டுடுச்சி” என ரோஸீயிடம் புலம்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“ஐயோ, டார்லிங் நீ எதுக்கு சோகமா இருக்க நான் உன்ன இன்னும் நிறைய லவ் செய்றேன்.” அந்த துணி வெட்கப் பட்டுக்கொண்டே “ஐ லவ் யூ” என்று சொன்னதும் தான் சாந்தி அந்த உருவம் கொண்ட துணியை கசக்கி டஸ்ட்பின்னில் தூக்கி போட்டாள் அடக்க முடியாமல்.

ருத்ரா அதிர்ச்சியில் இருந்தான், என்னதான் முறைப்பாக திரிந்தாலும், ரொம்ப ஜாலி டைப் ருத்ரா, அவனது நண்பர்களுன் இப்படிதான் பேசிக்கொண்டு இருப்பான்.

அப்பாவியாக கசங்கி இருந்த துணி, அதன் இதழை ஒரு நெளி நெளித்துக்கொண்டு மீண்டும் பழையப்படி ஆனது.

ருத்ராக்கு அவனது கையெழுத்து இருந்த அந்த துணியை பார்த்து மண்டை காய்ந்தது.

நடுவில் கொஞ்சம் பக்கம் வேறு காணவில்லை, அவன் நினைவுகளில் இருந்து சகுந்தலாவால் அழிக்கப்பட்டது.

அன்று என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளத்தான் ருத்ரா அந்த செயின் பார்த்து அவசரமாக ஒருவனை தேடினான். ஆனால் இவன் நேரம் அவன் தூக்கு போட்டு செத்துட்டான், ருத்ராக்கு பதில் கிடைக்கவில்லை.

சாந்தியை பார்த்து, “பத்திரமா இரு, நாங்க ஒரு வாக் போய்ட்டு வரோம்” என இருவரும் சொல்ல.

“போறதுதான் போறீங்க அந்த துணியை கொஞ்சம் தூக்கிட்டு போய்டுங்க, என்னால முடியலை”.

சாந்தி அமர்ந்து இருந்த இடத்திலே தலை சாய்த்து படுத்துக்கொண்டாள்.

குப்பைக் கிடையில் இருந்து எழுந்து வந்த மிஸ்டர். ஜீரோ “ஐயோ மேல எல்லாம் பேட் ஸ்மெல் வருதே, என்ன செய்யலாம்” என்று சிறிது நேரம் யோசித்த மிஸ்டர். ஜீரோ அங்கு வைக்கப்பட்டிருந்த சாந்தியின் பொருட்களில் தேடிப் பிடித்து மிஸ்டர். ஜீரோ சாந்தி உபயோகிக்கும் வாசனை திரவியத்தை காலிசெய்து கொண்டு இருந்தது “என் மேல எல்லாம் சாந்தியின் வாசம், பொண்ணுங்க யூஸ் செய்றதுமட்டும் ஏப்படி தான் வாசமா தயாரிக்கறானுங்க.”

ஹாலில் படுத்து இருந்த, சாந்தி நசியில் அவளது சென்ட் மனம் நுழைய. “சரியா மூடாமல் வீட்டுட்டோமா” எழுந்து அவளது பொருள் இருக்குமிடம் போய் பார்த்தாள். அவளது பொருட்கள் எல்லாம் அளங்கோலமாக இருந்தது. பக்கம் நின்று இருக்கும் மிஸ்டர். ஜீரோவை பார்த்து அனல் பார்வை வீசினாள்.

“அடேய் அறிவு கெட்டவனே உன்னை என்ன செய்றேன் பாரு” மிஸ்டர். ஜீரோவை அடிக்க துடப்பதோடு துரத்திக்கொண்டு இருந்தாள் சாந்தி. மிஸ்டர். ஜீரோ சிறு சிறு சந்துகளில் பூந்து ஒளிந்து சாந்தி கைகளில் சிக்காமல் விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தான்.

வெளியே சென்ற ருத்ரா அக்னி நிலாவுக்கு ஐஸ் கிரீம் வாங்கிக்கொடுத்து, அந்த இரவு வேலையில் இருவரும் நடக்கும்போது, இருவரது தலை முடியும் காற்றோடு உறவாடிக்கொண்டு வந்தது.

ரூத்ராவின் சிறு முடி பெரிதாக அவனை தொந்தரவு செய்யவில்லை, அக்னி நிலாவின் நீண்ட முடி அவளை ஐஸ் கிரீம் சாப்பிட விடாமல் செய்துகொண்டு இருந்தது. முகத்தில்பட்ட முடி, ஐஸ் கிரீம் பட்டு முகம் முழுவதும் அங்கு அங்கு ஐஸ் கிரீம் ஒட்டிக்கொண்டது.

அவளுக்கு ஐஸ் கிரீமும் வேணும், முடியை ஒதுக்கிவிட சோம்பேரித்தனம்.

“ருத்ரா ஐஸ் கிரீம் சாப்பிட முடியல, முகத்துல இருக்க முடியை எடுத்து விடு”.

“ஐஸ் கிரீம் என்ட கொடுத்துட்டு, நீயே உன் முடிய சரி செய்துகொள்” ருத்ரா கையை நீட்டினான்.

“உனக்கு எதுக்கு ருத்ரா சிரமம், உனக்கு கை வலிக்கும் முடிமாட்டும் எடுத்து விடு”.

“என் மேல நம்பிக்கை இல்ல அப்படித்தான” ருத்ரா முறைக்க.

“அப்படி எல்லாம் இல்லடா தங்கம்” என்று ருத்ரா அக்னி நிலா முகத்தில் இருந்த முடியை விளக்கி, ஒழுங்காக போட்டு விட்டான், ருத்ரா நிறைய முறை நினைப்பது உண்டு, அக்னி மீது எதுக்கு இவ்ளோ பாசம் வைத்து இருக்கிறான், என்று அதற்கு விடை இருவரிடமும் இல்லை.

ஐஸ் கிரீம் சாப்பிட்டுக்கொண்டே நிறைய தூரம் சென்றார்கள். “அச்சோ ரொம்ப தூரம் வந்துட்டோம் ருத்ரா, இந்த குட்டி வயிறு கத்துது பாரு” என்று அக்னி நிலா அவளது குட்டி வயிரை வருடினாள்.

“எப்போதான் அந்த குட்டி வயிருக்கு, பசிக்காம இருக்கு? எப்போ பாரு மியாவ் மியாவ்னு கத்திக்கொண்டு இருக்கவேண்டியது, உனக்கு சாப்பாடு வாங்கி தரவேண்டி, நான் எக்ஸ்ட்ரா வேலை பார்க்கணும் போல” அக்னியை ருத்ரா செல்லமாக திட்டிக்கொண்டிருந்தாள்.

“என்ன பார்த்து தீனி பண்டாரம்னு சொல்றியா?” இடுப்பில் கை வைத்து அக்னி நிலா முறைக்க. “நான் சொல்லலைப்பா நீயாத்தான் சொன்ன”.

இருவரும் ரோடு என்று கூட பார்க்காமல் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டே இவர்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

வசி அந்த கருப்பு நிற உடை அணிந்தவளை நெருங்கி.

“நீ யார், உன்ன நான் இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கனா?”
.

“ம்ம்ம்” என்றாள் வாய்க்கு கூட வலிக்காத அளவுக்கு, வசி முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“என்ன பிடிக்குமா?”

“ஹ்ம்ம்” என்றாள் சகுந்தலா.

“எதுக்கு என்ன பாலோ செய்ற?”.

“அதான் சொன்னானே,” என்றாள் தயக்கத்தோடு.

“உன் பேர் என்ன?”.

“மாயா” இவை அனைத்தும் தூரம் இருந்து ஒரிஜினல் மாயா கேட்டுக்கொண்டு இருந்தாள்.

“அன்னைக்கு கொலை நடந்த இடத்துல உனக்கு என்ன வேலை” என வசி போலிசாக விசாரித்தான்.

“உங்களை பார்க்க தான் வந்தேன்” வசி மெலிதாக சிரித்துக் கொண்டான்.

போலீஸ் காரன் விசாரணை துடங்கிட்டான் என்று நினைத்தாள் சகுந்தலா.

இவன் விசாரித்ததில், சகுந்தலா அனைத்தும் அவள் மந்திர சக்தியால் மாற்ற நினைத்தவள், முகத்தை மாற்ற மறந்துவிட்டாள்.

ஆவளாக முகத்தை திறந்து காட்டும் போது மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தாள். வசி மாயாவின் மறைத்து இருந்த துணியை சட்டென்று விலக்கினான்.

வசிக்கு அந்த முகத்தை பார்த்து, எங்கோ பார்த்தது போல இருக்கு?”.

சகுந்தலா திருதிருன்னு முழித்துக் கொண்டு இருந்தாள்.

‘ஐயோ சகுந்தலா மாயா முகம் வைக்க மறந்துட்டியே நம்மை கண்டுபிடிச்சிடுவானே’.

“இல்ல என்முகம் இது வரை நான் யாருக்கும் காட்டியது இல்லையே” என தனக்குதானே சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தாள் சகுந்தலா.

“ஆமா, நான்தான் மறந்துட்டேன், உன் வீடு எங்க இருக்கு சொல்லு நான் உன்னை கொண்டு போய் விடுறேன்” என்றான் வசி அவளது வீட்டை தெரிந்துகொள்ளும் நோக்கத்தில்.

“எனக்கு வீடு இல்ல”.

“அப்போ இவ்ளோ நாள் எங்க தங்கி இருந்த, கூட யாரும் இல்லையா?”.


“இல்ல, ரோடு சைடு தான் படுத்துப்பேன்” வசிக்கு இதயம் கனத்து துடித்தது.

“சரி வா, இனி என்கூடவே வந்துடு” சகுந்தலா நல்லவள் போல தயக்கமாக நின்றிருந்தாள். வசி தன் காதலை தடாலடியாக உடைத்து அவளை சமாதானப் படுத்திக் கூட்டிக்கொண்டு வர போராடினான்.

வசி மாயா பேரில் இருக்கும் சகுந்தலாவை கூட்டிக்கொண்டு வரவும், இங்கு ருத்ரா, அக்னி நிலா வரவும் சரியாக இருந்தது.

சகுந்தலா முகத்தை பார்த்து ருத்ரா, அக்னி நிலா கண்கள் விரிந்துகொண்டது. வசியை தவிர அனைவருக்கும் அவளது விசம் கக்கும் விசயம் தெரியுமல்லவா.

‘சகுந்தலா, நல்லா வசமா மாட்டப்போற, ருத்ரா ஏற்கனவே பார்த்து இருக்கிறான்.’ சகுந்தலா நெஞ்சம் படபடத்தது, அதற்கு பிறகுதான் நினைவு வந்தது. அவள் இருந்த அத்யாயத்தை ஏற்கனவே ருத்ரா மனதில் இருந்து அளித்தது, இப்போதுதான் சகுந்தலாக்கு மூச்சி சீராக வந்தது.

ஆனால் சகுத்தலாவாள் இந்த ஜென்ம நினைவை அழிக்க முடியும் ஆனால் போன ஜென்மத்தின் நினைவை அவளால் அழிக்க முடியாதே.

ருத்ரா அக்னி நிலாவிடம் பேச நினைத்ததை மறந்துட்டோம் அப்புறம் பேசிக்கலாம் இப்போ வந்து இருக்க பிசாசை கவனிக்கலாம்.

மாயா மாயம் செய்ய வருவாள்...
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
20. மாய நிலா

வசி காதலியை அழைத்து வந்து அக்னி நிலாவின் இதயத்தை சுக்கு நூறாக உடைத்தான்.

“என்ன ருத்ரா இப்படி ஷாக்ல பாக்குற, நான் சொன்னேன்ல என்னோட பார்க்காத காதலி அது இவ தான், வாங்க உள்ள போலாம் எல்லோருக்கும் மாயாவை அறிமுகப் படுத்திவைக்கனும்.”

அக்னி நிலாவிடம் திரும்பி, “இது ஆரம்பம் தான், நிலா நீ ஸ்டராங் ஆக இருக்கனும் புரியுதா”, அக்னி ருத்ரா கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு உள்ளே வர.

சாந்தியும், மிஸ்டர். ஜீரோவும் சேர்ந்து அந்த இடத்தை நாஸ்தி செய்துகொண்டு இருந்தார்கள்.

வசி வேகமாக போய் சாந்தியை பிடித்து “பொறுமையா இரு சாந்தி” அவளுக்கு தண்ணீர் கொடுத்துட்டு.

“எதுக்கு அந்த சாதாரண துணியை பார்த்து, இவ்ளோ கோபம் உனக்கு” வசி கேட்க.

“உனக்கு என்ன தெரியும், ஆசை அசையா காதலித்து, இவ்ளோ நாள் காதலித்தது வெறும் துணி என்று தெரிந்தால் மனசு எப்படி வலிக்கும் தெரியுமா?”.

“உன் நிலைமை புரியுது, சாந்தி இதுக்கு நம்ம என்ன செய்ய முடியும் நீயே சொல்லு?”.

சாந்தி அமைதியாக இருந்துட்டு, “இனி இது என்ட பேசக் கூடாது, எனக்கு வெறுப்பா வருது புரியுதா?”.

மிஸ்டர். ஜீரோக்கு மனம் உடைந்தது போல ஆனது, மெதுவாக நடந்து போய் அக்னி மாடி மீது தலை சாய்த்து படுத்துக் கொண்டது.

அக்னியும் மிஸ்டர். ஜீரோ தலையை வருடி விட்டுக்கொண்டு இருந்தாள், காதல் பிரிவு அவளும் அறிந்தவள் தானே.

ருத்ராக்கு இருவரை பார்த்ததும் மனம் வருந்தியது, காதலுக்கு உருவம் தேவையா?” என்றுதான் ருத்ரா நினைத்தான்.

இவ்ளோ நேரம் கலவரத்தில் சகுந்தலாவை யாரும் கண்டுக்க கூட இல்லை.

வசி பேச துவங்கினான் “இது என்னோட காதலி மாயா” என்றான்.

மிஸ்டர். ஜீரோ அந்த முகத்தை பார்த்து, “மாயா வா நான் இவங்க பேர் சகுந்தலா என்றுதான நினைத்தேன்” வசி சகுந்தலாவை பார்த்து “என்ன” என்பது போலிருந்தது.

சகுந்தலா சமாளிக்கும் நோக்கோடு, “மாய சகுந்தலா என் முழு பேர் அத சொல்றாங்க?” ஆமா இந்த துணி எப்படி பேசுது சங்குந்தலாவுக்கு ஆச்சர்யம் என்னன்னா துணி பேசுறது இல்ல, அவளை பற்றி விவரம் சொல்வதுதான்.

வசியை பயத்தோடு பார்க்க, “அது சாந்தியோட லவ்வர்,” சுருக்கமாக சொல்லி முடித்தான்.

அனைவரும் அமர்ந்து வசி வாங்கி வந்ததை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது கூட மிஸ்டர். ஜீரோ அக்னி நிலாவை விட்டு நகரலை, சாந்திக்கு அவள் பேசியது ஏதோ போல தான் இருந்தது. அதும் இல்லாமல், அதன் பிறகு மிஸ்டர். ஜீரோ சாந்தியை திரும்பி கூட பார்க்கவில்லை.

சாந்தி சீக்கரம் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றாள், அவள் சிதறிய பொருளை எடுத்துக்கொண்டு.

அக்னி நிலா வெளியே சிறிது நேரம் பேசிவிட்டு வர சென்றார்கள்.

வசி மாயாவை அடிக்கடி காதல் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தான்.

‘எதுக்கு இவன் இப்படி பாத்து வைக்கிறான், ஒரு வேலை என்னை பற்றிய உண்மை தெரிந்து இருக்குமா?’ என சகுந்தாலாவிற்க்கு தான் பீதி கிளம்பியது.

“எதுக்கு இப்படி பாக்குறீங்க கூச்சமா இருக்கு,” என்றாள் சகுந்தலா வசியின் எண்ணப்போக்கை தெரிந்துக்கொள்ள.

“அது ஒன்னும் இல்ல மாயா பேர விட, சகுந்தலா பேர் தான் உன்னோட முகத்துக்கு பொருத்தமா இருக்கு” என வசி சகுந்தலா முகத்தை ஆர்வமாக பார்த்தான்.

“அப்போ மாயா பேர் யாருக்கு பொருத்தமா இருக்கும்,?”

வசி மனதில் நினைத்துக்கொண்டான், ஆனால் வெளியே சொல்லவில்லை, ‘அக்னி நிலாக்கு பொருத்தமா இருக்கும்’ என்று.

அது அவள் வெளியில் சொல்லவில்லை என்றாலும். சகுந்தலாக்கு அது நன்றாக கேட்டது என்னவோ உண்மைதான். போன பிறவியில் சாகும்போதுதான் ஒன்று புரிந்துகொண்டாள். மந்திர சக்தியோடு அறிவியலும் கலந்தால் அதனின் பலன் அதிகம் என்று. அதனால் இந்த பிறவில் தனியாக மந்திர சக்தியையும் பெருக்கினாள், கூடவே தன் வசம் அனைத்து அறிவியலில் தலை சிறந்தவர்களையும் தன்னுடன் வைத்துக்கொண்டாள். அவள் திட்டம் போட்டதில் தப்பித்தவன் ஆகாஷ் மட்டுமே.

ஒரு குழுவை அவளது கீழ் வைத்து, அறிவியலை தனது விரல் நுனியில் வைத்து இருந்தாள் சகுந்தலா. அந்த வேரின் தன்மையை மாற்ற ஒரு பெரிய ஆய்வுக்கூடமே அமைத்திருந்தாள். ஒருபக்கம் அபரிவிதமான மனிதனால் உணர முடியாத அளவுக்கு சக்தியை உருவாக்க, அவள் கீழ் நிறைய திறமைகள் உள்ள மாந்திரிக தந்திரம் மாயாஜாலம் தெரிந்த ஒரு கூட்டத்தை தன்னுடன் வைத்துக்கொண்டிருந்தாள் சகுந்தலா, மீதி பாதி இடத்தில் அவர்கள் என்ன ஆராய்ச்சி செய்கிறோம் என தெரியாத அளவுக்கு அந்த வேரின் தன்மையை மாற்ற பல குழு அந்த வேரை ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தது. ஆகாஷிடம் இருக்கும் ஒரு பொருளும் அக்னி நிலாவின் உயிரும் தேவைப்பட்டது அந்த வேரின் தன்மையை மாற்ற, அதற்க்காக வசி மூலம் தந்திரமாக இப்போது நுழைந்திருக்கிறாள் இந்த விசத்தால் உருவான சகுந்தலா.

ருத்ராக்கு சில நாட்கள் நடந்தது மட்டும் அக்னி நிலாவுக்கு இந்த பிறப்பில் ஆரம்பம் முதல் அவர்கள் நினைவுகளில் இருந்து பிரித்து எடுத்து, எரிந்துவிட்டாள் சகுந்தலா. அதனால் தான் எங்கு இருந்து வந்தோம் என அக்னி நிலாவுக்கு சுத்தமாக நியாபகமில்லை.

என்னதான் அறிவாளியாக இருந்தாலும், நன்மை தீமை கணக்கு இருக்கும் அல்லவா, அதன் படி அக்னி நிலாவின் நினைவுகளும், ருத்ராவின் நினைவுகளும் சக்தி பெற்று அவர்கள் நினைவுகளின் சக்தி கொண்டு அனைவரையம் வதம் செய்தது.


மிச்சம் இருப்பது சகுந்தலா மட்டும் தான்.

அக்னி நிலாவுக்கு இயற்கையில் சில சக்தியோடுதான் பிறந்து இருந்தாள் அதனை சகுந்தலாவால் பிரித்தெடுக்க முடியவில்லை.

அதனால் என்னவோ அவள் நினைவுக்கு உருவம் இருந்தது, அதுதான் மாயா, அர்ஜுன் ஆதிரா துணைக்கொண்டு சில வேலைகள் செய்துகொண்டு இருக்கிறார்கள். அக்னி நிலா மாயாவின் நினைவுகளையும் ருத்ரா மற்றும் மிஸ்டர். ஜீரோவின் நினைவுகளையும் ஒன்று சேர்க்க சில வேலைகளை ரகசியமாக செய்துக்கொண்டிருக்கிறாள்.

மாயாவின் மந்திரம் சாந்தியின் கண்ணீர் கொண்டு அதனால் தான் ருத்ராவின் நினைவுகளுக்கு சக்தி கிடைத்து ஒரு பொருளில் நுழையும் அளவுக்கு மிஸ்டர். ஜிரோக்கு சக்தி கிடைத்திருந்தது.

ஆனால் மாய சக்தி இல்லாததால் வடிவம் இல்லை, காற்றோடு கலந்து சில வேலைகள் செய்துகொண்டு இருந்தார்கள். மாயா மற்றும் மிஸ்டர். ஜீரோ ஒரு கூட்டணி சேர்ந்து சில கொலைகள் செய்தார்கள். சகுந்தலாவின் தூண்களை சாய்க்கத்தான் இருவராலும் முடிந்தது, சகுந்தலாவை இவர்கள் நெருங்க வேண்டுமெனில் இந்த நினைவுகள் அதனின் சொந்தமானவர்களிடம் சேரவேண்டும். ருத்ராவை நெருங்க சாந்தி மூலம் மிஸ்டர். ஜீரோ வந்து சேர்ந்தான்.

வசி மூலம் மாயா வந்து சேர நினைத்தாள், ஆனால் அதற்குள்

சாந்திதான் ருத்ராவின் நினைவுகளுக்கு ஒரு வடிவம் கொடுத்தாள். அவள் அம்மன் காலடியில் இருந்து எழுதப்பட்ட துண்டை எடுத்து ‘எங்க இருக்க, மிஸ்டர். ஜீரோ சீக்கிரம் என் கண் முன்னாடி வந்து நில்’ என்று சொல்லும்போதே சாந்தி கண்களில் இருந்த ஒரு துளி கண்ணீர் துணியில் பட்டு அம்மன் காலடியில் பட்டது.

சாந்தி செயலை அருகில் இருந்து பார்த்த ருத்ராவின் நினைவுகளுக்கு (மிஸ்டர். ஜீரோ), மனம் வருந்தியது ‘நம்மை இவ்ளோ லவ் செய்றாளா, ஆனா என்னை எப்படி அவள் ஏற்றுக்கொள்வாள்’ ஒன்னும் விளங்காம மிஸ்டர். ஜீரோ ருத்ரா நினைவுகள் கலங்கியது. ஒரு ஒளி கண்ணை பறித்தது ‘உனக்கு பிடித்த பொருளில் இனி நீ வசிக்கலாம்’ அந்த ஒலிக்கும் நன்றி சொல்லிவிட்டு சாந்தி வாயில் இருக்கும் அந்த துண்டு துணியில் நுளைந்து கொண்டது ருத்ராவின் நினைவுகளான மிஸ்டர் ஜீரோ என்ற பெயரில்.

ஜீரோ தனியாக மொட்டைமாடி மத்தியிலே படுத்து நிலாவை பார்த்துக்கொண்டு இருந்தான். “சொல்லு நிலா எனக்குமட்டும் ஏன் இப்படி, மனிதனா இல்லாமல் நினைவை வைத்து எவ்ளோ இழந்தேன் என்னோட ரூபி, அதன் பிறகு உருவம், இப்போ என் காதல், நானா அவளை காதலிக்க சொன்னேன் அவளே வந்தா அவளா போய்ட்டா” மேலே மிஸ்டர். ஜீரோ புலம்பிகொண்டு இருக்க.

சாந்திக்கு அதிர்ச்சியில் இருந்து நிதானமாக இப்போது யோசித்தாள் ‘நான் ஏன் இப்படி பிஹேவ் செஞ்சோம், காதல் காதல் என்று தானே, அதுக்கு எதுக்கு உருவம்’ மனம் தெளிவு ஆனாலும், மிஸ்டர். ஜீரோவை நல்லா ஹர்ட் செஞ்சிட்டோம் இப்போ போய் பேசறது சரியா இருக்காது” என்று படுத்து தூங்கிட்டா சாந்தி.

வசி மாயா என்று அழைப்பதை விட்டுட்டு சகுந்தலா என்று கூப்பிட ஆரம்பித்தான்.

ருத்ரா அக்னி நிலா சாலை ஓரம் இருந்த பூங்காவில் அமர்ந்துகொண்டு.

“இந்த ஒரு மாசத்துல ஏதேதோ நடந்துடுச்சி இல்ல அக்னி நிலா.”

“ஆமா நான் எப்படி உன்ட வந்து சேர்ந்தேன், எனக்கு ஏன் மொத்தமா எதும் ஞாபகம் இல்ல, நான் யார்னு நிறைய குழப்பம் இருந்தது, ஆனாலும் ஒரு இதம் நேற்றுதான், சில போன ஜென்ம நினைவுகளாவது எனக்கு சொந்தமா இருக்குன்னு சந்தோசமா இருக்கு”.

“எனக்கு புரியுது நிலா, எனக்கும் இது போலத்தான், உனக்கு புத்தகம் மறைஞ்சிடுச்சி, உனக்கே பரவலா இல்ல மொத்தமா மறந்துடுச்சி, ஆனா எனக்கு சில பக்கம் மறந்து, அவஸ்தையா இருக்கு”.

“என்னாச்சி” ருத்ரா அவனது ரூபி பற்றி சொன்னான்.

அக்னி நிலா ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தாள், ருத்ரா சொல்லி முடிக்கவும் “ரொம்ப கியூட் இல்ல ரூபி”.

“ஆமா உன்ன போலவே” என்று அக்னி நிலா தலையை கலைத்துவிட்டான் செல்லமாக.

அக்னி நிலா கலைத்த முடியை சரி செய்யாமல், ருத்ராவிடம் முகத்தை காண்பித்து “நீதான கலைத்து விட்ட, நீ தான் சரி செய்து விடனும்” என்றாள் அக்னி நிலா.

ருத்ராவும் பொறுப்பாக குழந்தைக்கு சரிசெய்வது போல அவன் கலைத்த முடியை சரிசெய்து விட்டான்.

அங்கு இருக்கும் பூக்கள் சிலது பறித்து கொடுத்தான் “எங்கள் நாட்டின் அரசிக்கு, என்னால் முடிந்த சிறிய பரிசு” என்று ருத்ரா பவ்யமாக சொன்னான்.

அக்னி நிலா சிரித்துவிட்டு, வாங்கி “அழகா இருக்கு, அது முடிந்து போன கதை அதை பற்றி பேசி டென்ஷன் செய்யாதே, நம்ம எல்லோரும் ஒன்னுதான் எப்பவும், அது ஏதோ பழையகாலத்து டுபுக்கு ரூல்ஸ், இனி அது மனதுல வச்சி இப்போ பேசறதா இருந்தா என்ட பேசாத புரியுதா எங்கள் நாட்டின் தலைமை மருத்துவரே”.

அக்னி நிலா பேசியதை பார்த்து, ருத்ரா சிரித்துவிட்டான்.

“உனக்காக ஒன்னு வச்சி இருக்கேன்” ருத்ரா ஒரு கண்கவரும் ஒரு சிறு பெட்டியை கொடுத்தான்.

அக்னி இந்நிலையில் ஆர்வமாக வாங்கி “இதுல என்ன இருக்கு” வேக வேகமாக மேலே சுற்றி இருக்கும் கவரை பிரித்தாள்.

அவளை சுற்றியும் சிதறி கிடந்தது “என் ரூபியே பரவா இல்ல எவ்ளோ நீட்டா பேப்பர் எல்லாம் பிரிப்பா”, அக்னி நிலா நாக்கை வெளியே நீட்டி பழிப்பு காண்பித்து.

ரூபியும் அக்னி நிலாவை போலத்தான் சுற்றியும் குப்பையாகி வைப்பதுதான் வேலை, ருத்ராக்கு அதை சுத்தம் செய்வதுதான் வேலை, ரூபிக்கு முதல் பரிசு கொடுக்கும்போதும் இப்படிதான் கிப்ட் பேப்பர் அறை முழுவதும் சிதறி கிடந்தது.

ருத்ரா அந்த நினைவுகளோடு இருக்க, இங்கு அதற்குள் அக்னி நிலா பிரித்து முடித்திருந்தாள். ஒரு மெல்லிய செயின் கழுத்தை ஒட்டியது போல,

மூன்றாம் பிறை நிலா பொம்மை, அதன் பிறகு ஆர் ஆங்கிலத்தில் இருந்தது.

“செயின் சூப்பரா இருக்கு, ஆனா ஒன்னும் புரில, ருத்ரா முன் நானு இது என்ன வி”.

“வசி” என்றான் ருத்ரா.

“அவன் பேர் இங்க எதுக்கு,” என்று திட்டினாள்.

“என்னதான் இருந்தாலும் அவன்தானே எனக்கு மச்சான்”.

“அதான் அவனுக்கு சகுந்தலா வந்துட்டாளே, இப்போ ரெண்டு பேரும் டூயட் பாடிட்டு இருப்பாங்க” என அக்னி நிலா சலித்துக்கொண்டாள்.

ருத்ராக்கு அக்னி நிலாவை எப்படி சமாதானப் படுத்துவது என்று சுத்தமா தெரியல.

வசி சகுந்தலா சூழ்ச்சியை கண்டு பிடிப்பானா.

சகுந்தலாவை வசி உடன் சேர்த்து பார்த்த மாயா மனநிலை என்ன?

மாயா மாயம் செய்ய வருவாள்.
 
Status
Not open for further replies.
Top Bottom