Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL மாய நிலா - Tamil Novel

Status
Not open for further replies.

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
21 மாய நிலா


மாயா உடைந்து போய் உட்கார்ந்து இருந்தாள்.

அர்ஜுனும், ஆதிராவும் தான் மாயாவை எப்படி சமாதானம் செய்வது என்று ஒன்றும் புரியாமல் இருந்தார்கள்.

"மாயா கொஞ்ச நாள் பொறுத்துக்கோ மா நான் இருக்கேன், எல்லாம் சரியா போய்டும் நாங்க பாத்துக்குறோம் தங்கம்" என்ற அர்ஜுன் வார்த்தைகளை மாயா மனம் ஏற்கவில்லை.

"என் நிலையை பாத்தியா அண்ணா என்னால யாரையும் கட்டிப்பிடித்து கூட ஆறுதல் தேட முடியல, ஒரு பக்கம் என் நினைவுகள். இந்த நிலைக்கு நான் இல்லாமல் போயிருந்தா கூட கவலை பட்டிருக்க மாட்டேன்" புலம்பிக் கொண்டிருந்த மாயா திடிரென்று வசீகரன் மீது ஆத்திரத்தில் பொங்கினாள் மாயா "அந்த வசீகரனுக்கும் மூளையே இல்லை, போன ஜென்மத்திலும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அனைத்தும் சரி கட்டி இருப்பேன், நல்லது செய்றேன்னு ஒத்தையில் நின்று அனைத்து பிரச்சனையும் இழுத்து விட்டுட்டு எவ்ளோ பேர் வாழ்க்கையை வாழாமல் தவிச்சிட்டு இருந்து இருக்கோம் பாரு". வசி மீது கோபம் தான் வந்தது மாயாக்கு (அக்னி நிலாவின் நினைவுகள்).

"போன ஜென்மத்தில்தான் அனைவர் உயிரையும் வாங்கினான், இப்போதும் அந்த சகுந்தலைக்கும் இவனுக்கும் வித்யாசம் தெரியாம இப்படி செய்தால் என்ன செய்வது" மாயாக்கு கோபம் அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது.

ஆதிரா அர்ஜுனிடம் மாயாக்கு எப்படி சமாதானம் சொல்வது என்று ஒன்றும் புரியாமல் நின்று இருந்தார்கள்.

அவர்கள் வாழ்ந்த வீட்டில் பல நினைவுகள் மூன்று குடும்பமும் ஒரே வீட்டில் அவ்ளோ சந்தோசமா இயற்கையின் மடியில் சுதந்திரமாக சுற்றி திருந்தவர்களின் நிலை இப்போது மிகவும் மோசமாக இருந்தது.

அர்ஜுன் ஆதிராவால் பழையபடி வீட்டைதான் புதுமை படுத்த முடிந்தது, உயிர் இழந்த 8 பேர் உயிரை கொண்டு வர வைக்க முடியாதல்லவா.

சுதந்திர பறவையாக அந்த காட்டில் எந்த பயமும் இல்லாமல் சுற்றித் திரிந்தது மூணு ஜோடி. பெற்றோர்களின் பாசத்தை முழுமையாக பெற்றவர்கள், இப்பொழுது ஒருவரும் இல்லாமல் இருப்பதற்கு இதயம் வலித்தது மூவருக்கும்.

"மாயா முடிந்ததை விடு இப்போ என்ன செய்வது அதை பற்றி யோசிக்கலாம்" என்று அர்ஜுன் இவர்கள் மன நிலையை மாற்ற முயற்சி செய்து கொண்டு இருந்தான்.

மாயா அதை பற்றி பேசாமல் அர்ஜுன் மடி மீது தலை சாய்த்து படுத்து விட்டாள்.

ஆதிரா அர்ஜுனை பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருக்க அவளை அர்ஜுன் தோள் மீது சாய்ந்து கொண்டான்.

அங்கு சகுந்தலா வசியிடம் ஒட்டி உரசி உட்கார்ந்து அக்னி நிலாவுக்கு கோவத்தை அதிகரிக்க செய்துகொண்டு இருந்தாள்.

ருத்ராவும் அக்னி நிலாவை திசை திருப்ப, அவளுக்கு பிடித்ததை அவளுக்கு மட்டும் சமைத்து கொடுத்து முடிந்த அளவுக்கு அவன் கூடவே வைத்துக்கொண்டு இருந்தான்.

மிஸ்டர் ஜீரோ மூழியமாக பல துப்புகள் வசிக்கு கிடைத்தன, கொலை நடந்த விசயத்தை பத்தி. சில துப்புகளும், சகுந்தலா நாட்டில் கண்டு பிடிக்கும் பல அறியவகை மருந்தை வெளிநாட்டுக்கு அரசாங்கத்துக்கு தெரியாம பார்முலா விற்பது போன்ற நிறைய ஆதாரங்கள் மிஸ்டர் ஜீரோ மூலம் கிடைத்ததது. ஆனால் பேர் மட்டும் மிஸ்டர் ஜீரோ கொடுக்கவில்லை, காரணம் அவனாக தெரிந்து கொள்ளும் சமயம் மொத்தமாக அவள் மீது உள்ள நம்பிக்கை உடையும் அப்போது தான் சகுந்தலாவை வைத்து செய்ய முடியும் என நினைத்தான் மிஸ்டர் ஜிரோ.

சாந்தி அறியாத சமயம் அவளை ரசித்துகொண்டுதான் இருக்கிறான். ருத்ரா அக்னி நிலாவிடம் நிறைய நேரம் செலவழித்தான். அக்னி நிலாவுக்கு எதும் தவறாக நடந்துவிடக் கூடாது என அவளுக்கு ஒரு காவலனாகவே மாறிப்போனான்.

சாந்தி கிடைத்த ஆதாரம் வைத்து இறந்தவர்களுக்கு தலைமையில் இருந்தது யார்? என்று கண்டு பிடிக்க கிளம்பினாள்.

"என்னை யாராலும் கண்டுபிடிக்க முடியாது" என சகுந்தலா மனதில் கர்வம் தாண்டவமாடியது.

இறந்த அனைவரும், ஒரு வகையில் பழங்காலத்து பொதுப்பணியில் இருந்தவர்கள். சாந்தி எவ்வளவு முயற்சி செய்தும் அவளுக்கு ஒரு துப்பும் கிடைக்கவில்லை.

இந்த ரெண்டு கேள்விக்கும் பதில் கிடைத்தால் போதும் அனைத்தும் சரியாகி விடும். இன்னும் ஒரு கொலையை தடுக்கவும் முடியும், அந்த பாரம்பரியம்மிக்க பொருளை எடுக்கத் தான் இந்த கொலை நடந்துகொண்டிருக்கிறது என மட்டும் சாந்தி கண்டுபிடித்திருந்தாள்.

"அந்த நபரை கண்டுபிடித்தால் தான் அவரையும் அவரிடமிருக்கும் பாரம்பரிய பொருளையும் ஆபத்தானவர்களின் கைகளுக்கு போகாமலும் தடுக்க முடியும்" என சாந்தி மண்டையை குழப்பிக்கொண்டிருந்தாள்.

வசி கொலையை பற்றியும் அந்த கொலை செய்யப்பட்ட தலை யார் என்றும் தேட துவங்கினான்.

சகுந்தலா அவனை தடுக்க வசியை விடாமல் கூடவே இருந்து கொண்டு இருந்தாள்.

அவன் விசாரிக்கும் போது காரில் இருப்பவள் வசி வேறு பக்கம் சென்றதும் இவள் வேறு ஒரு வழியில் அவன் தேடி வந்ததை எடுத்துக் கொண்டு, ஒன்னும் தெரியாத பாப்பா போல வந்து உட்கார்ந்து கொள்வாள் சகுந்தலா. வசியை வைத்து அவளுக்கு தேவையான பொருட்களையும் சேகரித்துக்கொண்டிருந்தாள்.

என்னதான் அவள் அறிவாளியாக இருந்தாலும் அவள் செய்த மிக பெரிய தவறு முகத்தை மாற்ற மறந்தது தான். அதுவே அவளுக்கு வினையாக வரப்போவது தெரியாமல் வசியுடன் காதல் செய்கிறேன் என்று அவளது மனதில் உண்மையாகவே ஆசையை வளர்த்துக்கொண்டாள். இதுவும் அவளது புத்திசாலி தனத்துக்கு செக் வைத்தது, வசி பாசத்தில் காதல் கரைபிரண்டோடியது.

வசியை எப்படியாவது வேலை செய்ய விடாமல் எந்த நேரமும் அவளுடனே வைத்துக்கொண்டு அந்த நகரத்தில் காதல் ஜோடியாக வளம் வந்தார்கள். வசிக்கு சில சமயம் தோன்றும் 'இப்போ எல்லாம் இவளை தொடும்போது அந்த உணர்வு வருவதில்லை ஏன்?' அது அடிக்கடி நினைவுக்கு வந்தாலும், அவனுக்கவனே சமாதானப் படுத்திக்கொள்வான். 'அப்போது புதியது இப்போ நிறைய முறை தொட்டு பழகியதால் அந்த உணர்வு வருவது இல்லை போல' என்று அவன் கேள்விக்கு அவனே பதில் சொல்லிக் கொள்வான்.

நவீன மருத்துவம் வைத்து, அந்த வேரின் சக்தியை மாற்ற ரகசியமாக முயற்சி செய்துகொண்டு இருந்தார்கள். அந்த வேர் கெட்டவர்கள் தொட்டாலும் எதும் ஆகாத வகையில் அதன் தன்மையை மாற்றி அதனின் முழு சக்தியையும் தனக்குள் வைத்துக்கொள்ள சகுந்தலா முயற்சி செய்துகொண்டு இருக்கிறாள். ரோஸியிடம் அந்த மரத்தை பற்றி சில விசயம் சேகரிக்க துவங்கினாள் சாந்தி. சகுந்தலாவை தேடுவதை விட்டுவிட்டு அந்த வேரை பின் தொடர எண்ணினாள்.

அதற்க்கான முக்கிய பொருள் சமீபத்தில் பூமிக்கு அடியில் கிடைத்துள்ளது என ஒரு பொய்யான குறிப்பை அவர்கள் கண்ணில் படும்படி செய்தாள்.

அந்த சிறு கோட்டையில் அதற்கான குறிப்பு இருப்பது தெரிந்து அனைவரும் அங்கு வருவார்கள் அந்த சமயம் அனைவரையும் பழிதீர்த்திட நினைத்தாள் மாயா. மாயாவாள் வரவைக்கப்பட்ட சூழ்ச்சி என்று தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டார்கள். சகுந்தலாவால் அன்று வர முடியாமல் தப்பித்துவிட்டாள் மாயாவிடமிருந்து.

மாயா ஒருவர் பின் ஒருவராக அனைவரையும் வேட்டை ஆடினாள். சகுந்தலா மட்டும் சிறு நூலிலையில் உயிர் தப்பினாள். அன்று அவள் வர சற்று தாமதமானதால் மாயாவும் மிஸ்டர் ஜீரோவும் சேர்ந்து ஆளுக்கு ஒருவரை கொன்று விட்டு கிளம்பும் போது வசியிடம் மாயா மாட்டிக்கொண்டாள், என்ன செய்வது என தெரியாமல் சில சக்திகள் மூலம் வசிக்கு முத்தமிட்டு காற்றோடு கரைந்தாள், அவள் பார்க்காமல் ரசித்த அந்த முகத்தை தான் கடைசியாக பார்த்திருந்தாள் மாயா.

இங்கு சாந்தியின் கதறல் கேட்ட காளி ருத்ராவின் நினைவுகலான மிஸ்டர், ஜீரோக்கு அந்த துணி மூலம் உருவம் கிடைத்தது.

சகுந்தலாவிற்கு மாயா உருவம் பெற்றது தெரிந்தது. ருத்ராவின் நினைவுகள் தான் ஜீரோ என்று அவளுக்கு தெரியவில்லை.

சகுந்தலாவால் மொத்தமாக அக்னி நினைவையும் ருத்ராவின் நினைவுகளையும் அழிக்க முடியவில்லை. ஆனால் அவள் குறிப்பிட்ட அவளுக்கு அழிக்க முடிந்தது அழித்துவிட்டாள். காரணம் அவள் வெளிநாட்டுக்கு புதியதாக கண்டு பிடிக்கும் பார்முலா மாட்டிக்கொள்ளும் சமயம் ருத்ராவும் அக்னி நிலாவும் பார்த்துவிட்டார்கள். அதனால் மொத்தமாக அவர்கள் ஒன்றாக இருந்த நினைவுகளை அழித்து விட்டாள்.

அளித்தது மட்டும் இல்லாமல் அக்னி நிலாவின் உயிரையும் எடுத்துவிட்டாள்.

இப்போது நல்லவள் போல வசியின் பழைய நினைவுகள் வராத படி செய்துவிட்டு. அக்னி நிலா இருக்கும் இடத்தில் அவள் வந்து ஆடிக்கொண்டு இருக்கிறாள்.

மாயாவும் அர்ஜுனும் சில வேலைகள் செய்தார்கள், நினைவுகள் தானே விட்டுவிடலாம் என்று நினைத்தாலும் அதனால் ஆகவேண்டிய காரியங்கள் நிறைய இருப்பதால் இருவரின் நினைவுகளும் அவர்கள் மூளைக்கும் போக வேண்டும். அதுமட்டும் இல்லாமல் வசிக்கு பழைய நினைவுகள் வர வைக்க வேண்டும்.

அக்னி நிலா வசிக்கு பார்வை போன சமயம் வரைந்த அக்னி நிலாவின் ஓவியம் வசியிடம் காட்டவேண்டும் என்று தக்க சமயம் பார்த்து காத்துக்கொண்டு இருந்தாள். ஆனால் சகுந்தலா அதனை அளிக்க வந்த நாளன்று முயற்சி செய்துகொண்டு இருக்கிறாள். ஆனால் அவளால் அக்னி நிலாவை மீறி கை வைக்க முடியவில்லை.

பிரேம் முழுவதும் அக்னி நிலா வேர்களை ஒட்டி வைத்து இருந்தாள். அதை தொட்ட மறு நொடி அவளுக்கு மரணம் வரும் என்று தெரிந்து ஒதுங்கிக் கொண்டாள் சகுந்தலா.

இருவரையும் சும்மா ஒன்றாக பார்த்தாலே அக்னி நிலா வயிறு பற்றி எரியும், ஆனால் அவளால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.

சாந்தி ஒரு புறம் அவள் செய்ததை நினைத்து பார்த்து வருந்தினாள். சில சமையம் மிஸ்டர் ஜீரோவிடம் மன்னிப்பு கேட்கும் எண்ணம் இருந்தது அவளுக்கு இருந்தாலும் ஒரு தயக்கம் அவனிடம் பேச.

சாந்தி அமைதியாக நாட்களை கடத்திக்கொண்டு இருந்தாள் ஆக மொத்தம் எவரும் எந்த வேலையும் செய்யாமல் சுற்றிக்கொண்டு இருந்தார்கள்.

அக்னி நிலாவால் பொறுக்க முடியவில்லை, இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது அந்த பெய்ண்டிங் பற்றி தொடங்கினாள்.

வசி பதில் எதிர்பார்த்து அமர்ந்து இருந்த சமயம் வசிக்கு யோசிக்க கூட அவகாசம் தரமுடியாமல் நான் தான் நேர்ல வந்துட்டனே எதுக்கு அந்த பெய்ண்டிங். வசியும் "ஆமா என் காதலை நேரில் பார்த்துட்டேன், அந்த பெய்ண்டிங் பாத்துதான் கண்டு பிடிக்கணும்னு நினைத்தேன் அதுக்கு அவசியம் இல்லாமல் என்னுடைய தேவதை என் உயிரை காப்பாற்ற என்னிடம் வந்துட்டா".

'யாரு இவ உயிர காப்பாற்றவா உயிரை எடுக்க தான் வந்து இருக்கா, அது தெரியாம இவர் வேற' என காண்டாக்கிட்டு.

அப்போதுதான் அக்னி நிலாவுக்கு மண்டையில் உரைத்தது, இந்த விஷத்தை தனியாக வசியிடம் பேசி இருக்கணும் தவறு செஞ்சிட்டேன். கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கணும்.

வேற எப்படி வசிக்கு நான்தான் நீங்கள் காதலித்த பெண் அதுமட்டும் இல்லாமல் போன ஜென்மத்தில் நான் காதல் மனைவி என்று எப்படி சொல்வது என்ற யோசனையில் அமர்ந்து இருந்தால் ' சொன்னாலும் நம்பாது இந்த ஜென்மம்.

ஆகாஷ் அவன் கழுத்தில் இருக்கும் சாவியை மிகவும் பாதுகாப்பாக வைத்து இருந்தான், சைலுவை ஒரு தாங்கு தாங்கினான்.

ராஜா அனைவர்க்கும் செய்தி அனுப்பினான் வசியை தவிர்த்து சில சமயம் அவனுக்கு சொல்லி புரியவைக்க முயற்சி செய்த போதும் போங்கடா சும்மா விளாடிட்டு என்று அவர்கள் சொல்ல ஆரம்பிக்கும் போதே தடுத்து விடுவான் வசி.

வசி புரிந்துகொள்ளும் நாள் என்னாளோ.

மாயா மாயம் செய்ய வருவாள்.
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
22. மாய நிலா

வசி மற்றும் மாயா உருவில் வந்த சகுந்தலா ஆட்டம் தொடங்கியது அக்னியை வெறுப்பேற்றினாள்.

அக்னி நிலா பார்க்கும் போது வசியை நெருங்கி அமர்வது கன்னத்தில் முத்தம் கொடுப்பது என்று சகுந்தலா எதாவது ஒன்று செய்துகொண்டே இருந்தாள்.

அக்னி ஆத்திரத்தை அடக்க முடியாமல் சில சமயம் ருத்ரா பேசுவதற்கு சம்பந்தம் இல்லாமல் எரிந்து விழ ஆரம்பித்தாள்.

ருத்ராவும் அவளது மன நிலையை புரிந்துகொண்டு அமைதியாக இருந்துவிடுவான்.

வசி சகுந்தலாவுக்கு அனைத்தும் பார்த்து பார்த்து செய்தான். அவளுக்கு உணவு முதல் அவளுக்கு ஆடை வரை அவனே அவளுக்கு தேர்வு செய்வது என்று ஏதோ கணவன் போல செய்துகொண்டு இருந்தான்.

அக்னி நிலா அதன் பிறகு வசி சகுந்தலா ஒன்றாக இருக்கும் சமயத்தில் தனியாக சென்று அமர்ந்து கொள்வாள். மிஸ்டர் ஜீரோ தான் எதாவது பேசி அவளை சரி கட்டுவான். அவளது மன நிலையை மாற்ற அடிக்கடி வெளியே கூட்டிச்செல்வான்.

ருத்ராவின் தேடல் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தான், அவன் மறந்ததை அன்று என்ன நடந்தது என்று சகுந்தலா பி. எ வுக்கு மட்டும் தான் தெரியும், அவனை தேடிப் போன சமயம் அவன் இறந்தது தெரிய வந்தது.

சகுந்தலா வசி உடன் வரும்போது அவனுக்கு தோன்றியது இவளுக்கும் ரூபிக்கும் ஏதோ செய்துவிட்டாள் என்று, ஆனால் ரூபி போன துக்கத்தில் அவன் போக்கே மாறியது சோகத்தை மறைக்க நிறைய உற்சாகமாக இருப்பது போல காட்டிக்கொண்டான். அதன் பிறகுதான் அவன் கண்டு பிடிக்கும் அனைத்தும் தடாலடியாக விளையாட்டு பிள்ளை போல செய்து வாரத்துக்கு ஏழு ஆய்வு கூடத்தை எரித்துக்கொண்டு இருந்தான். இதையே வாடிக்கையாகவும் வைத்து இருந்தான். அதன் பிறகு அவனிடம் மனதில் பேசும் அக்னி நிலாவின் பேச்சும் இல்லாமல் போனது. ருத்ரா தனிமையில் இருந்த போது அவனுக்கும் நிலா தான் துணை. அந்த நிலாவை தனியாக அவன் மட்டும் ரசிக்க வேண்டும் என்று நிறைய வேலைகள் செய்து விட்டு தனியாக கிளம்பும் போதுதான். அக்னி நிலாவை சந்தித்து அவனது தனிமையை போக்கினாள் அக்னி நிலா.

அவன் தனிமையை போகியவள் மீது அலாதி பிரியம் ருத்ராவுக்கு.

வசி செயல் அக்னி நிலாவை வெறுப்பேற்றியது. இவனை இன்றே கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவைத்திருந்தான் வசி.

சகுந்தலா அக்னி நிலாவை வெறுப்பேற்ற ஒரசிக்கொண்டிருந்தாள் அவனை, வசியும் பெரிதாக சகுந்தலாவை நெருங்க வில்லை. அவனுக்கு கிடைக்கும் ஆதாரங்கள் எப்படி காணாமல் போகிறது என்று குழம்பினான்.

'கூட வருவது சகுந்தலா தான் ஆனா அவள் பார்க்க அப்பாவி போல இருக்காளே, ஒரு வேலை எதாவது திட்டத்தோட வந்து இருப்பாளா' என்று யோசித்தான் வசி, ஆனால் மறு நொடி 'நல்ல பொண்ணு ரொம்ப அமைதி, இங்க இருக்கவங்க கிட்ட கூட பெருசா பேசிகறதில்ல'. வசி அவன் எண்ணத்தோடு பயணித்துக்கொண்டிருக்க.

வசி தூங்க போகும் போது சகுந்தலா முன் வந்து "நானும் உங்க கூட படுத்துக்கவா எனக்கு தூக்கமே வருவதில்லை புதுயிடம்ல" என்று சொல்ல.

"சரி வா, நம்ம பேசிட்டு இருக்கலாம்" என்று வழக்கமாக வசி படுக்கும் இடத்தில் அமர்ந்தான். சகுந்தலா வசி கால் மீது தலை வைத்து படுத்துக் கொண்டு ஏதோ பேசி சிரித்துக் கொண்டு இருந்தார்கள். வசி தான் நெளிந்துகொண்டு இருந்தான், அவனுக்கு இது ஏதோ ஒரு ஒவ்வாமையை தந்தது.

அக்னி நிலா கண்ணிலும் இது பட்டது வசியை முறைத்துக் கொண்டே ஆத்திரம் தீரும் அளவுக்கு தண்ணீர் குடித்து விட்டு மிஸ்டர் ஜீரோ மற்றும் ருத்ராவின் காது கிழியும் வரை புலம்பிக் கொண்டு இருந்தாள்.

ருத்ராவும் அக்னியை சமாதானப் படுத்தி தூங்க வைத்தான்.

வசிக்கு அந்த ஆதாரத்தை எடுத்தவனையும் கண்டு பிடிக்கணும், வேலையும் காதலும் ஒன்னா செய்யக் கூடாது என்று உருப்படியான ஒரு வேலையை செய்தான் வசி.

அடுத்தநாள் சகுந்தலாவும் தயாராகி வர "நம்ம ஈவினிங் வெளியே போலாம் சகுந்தலா, எனக்கு ரொம்ப இம்பார்ட்டண்ட் ஒர்க் இருக்கு" என சகுந்தலாவை கழற்றிவிட்டு வெளியே கிளம்பினான் வசி.

முதலில் வசி மொத்தமாக எவ்வளவு பேர் இந்த அகழ்வாராய்ச்சி சம்பந்த பட்டவர்கள் இறந்து இருக்கிறனர் என்று கணக்கு எடுத்தான். இன்னும் மிச்சமிருப்பவர்களை தோடினான்.

தீ விபத்து நடந்து இருக்கிறது சில மாதத்துக்கு முன்னால் ஒருவர் உயிர் பழி, மற்றவர்களுக்கு சிறு காயம் கூட இல்லை. அது வேற யாரும் இல்லை சகுந்தலாவின் பி. எ அவளை எதிர்த்து ஒரு செயல் செய்தான் அப்போது கோபம் வந்த அவள் அருள் மீது தீ வைத்துவிட்டாள்.

குடும்பத்தை எதும் செய்யவில்லை, அவர்களுக்கு சகல வசதியும் செய்து கொடுத்து அருள் குடும்பத்தில் நல்ல பேர் வாங்கிக்கொண்டாள். இந்த நிகழ்வுக்கு அவளுக்கு சிட்டியில் அவார்ட் எல்லாம் கொடுத்தார்கள்.

வசி அந்த அருளை பற்றி ராஜாவிடம் விசாரிக்க சகுந்தலா பற்றியும் அவள் எந்த தவறு செய்தாலும் அவளுடன் வருபவன். ஆனால் தனிப்பட்ட முறையில் ரொம்ப நல்லவன் அருள் வீட்டு தேவைக்கு மட்டும் பணம் எடுத்துக்கொண்டு மொத்தமாக கொடுத்துவிடுவான் அனாதை குழந்தைகளுக்கு.

வசிக்கு விசித்திரமாக இருந்தது, சகுந்தலா நல்ல ஆளு போல இருக்கே.

ராஜா வேண்டும் என்றே சகுந்தலா பெயரை அழுத்தி சொன்னான். 'இந்த முட்டாள் அரசனுக்கு இப்போவாவது உண்மை தெரிகிறதா என்று பார்ப்போம்'.

சகுந்தலா அவளது மந்திர சக்தி மூலம் வசி செல்லும் இடத்தை அறிந்து கொண்டவள். அருள் வீட்டுக்கு அழைப்பு போய்க்கொண்டே இருந்தது யாரும் எடுக்க வில்லை.

குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கோவிலுக்கு போய் இப்போதுதான் திரும்பிக்கொண்டு இருந்தார்கள்.

இவர்கள் அழைப்பை எடுக்காததால் சகுந்தலாவே அவர்கள் வீட்டுக்கு வந்தாள்.

யாருக்கும் தெரியாமல் அங்கு தோட்டத்தில் வேலை செய்துகொண்டு இருக்கும் பெண்ணின் உருவம் மாற்றிக்கொண்டு அவளது புகைப்படம் எதாவதுஅங்கிருக்க வாய்ப்பிருக்கு, அதனை அப்புறப்படுத்த மாறு உருவத்தில் உள் நுழைந்தாள். அங்கிருக்கும் அவளது சம்பந்தப்பட்ட போட்டோ அனைத்தும் ஒழியவைத்தாள்.

வசி வாசலில் நின்று கொண்டு இருந்தான் இவர்கள் வருகைக்காக. வாட்ச்மன் வீட்டில் யாரும் இல்லை என்று சொல்லிவிட்டான், "எங்க போய் இருகாங்க?" என வசி விசாரிக்க.

"பக்கத்துல இருக்க கோவிலுக்கு ஐயா சீக்கரம் வந்துடுவாங்க, நீங்க உள்ள உட்காருங்க ஐயா" என வசியின் போட்டிருந்த உடுப்புக்கு மரியாதை தந்து உள்ளே அனுப்பினான்.

வசியும் உள்ளே போகும் போது, வீட்டை சுற்றி பார்த்தான் என்ன அரண்மனை போல காட்சி அளித்தது.

'சாதாரண ஊழியருக்கு எதுக்கு இவ்ளோ பெரிய வீடு?' என்று வசி ஒரு குழப்பத்தோடு வீட்டில் நுழைந்தான்.

அங்கு இருக்கும் பொருட்களை பார்த்தான் அனைத்தும் விலை உயர்ந்ததாக இருந்தது.

உள்ளே மாறுவேடத்தில் நுழைந்த சகுந்தலா அனைத்தும் எடுத்து விட்டோம் என்று பெருமூச்சி விட்டதும் வசி உள்ளே வந்தான், அவனை பார்த்து ஒரு உடனே நடுங்கி விட்டாள்.

"என்னமா பாத்துட்டு இருக்க போ, தண்ணீர் கொண்டு வா".

"சரி ஐயா".

"இவ எதுக்கு நடுங்கரா" என்று யோசித்தவன் அங்கு இருக்கும் போட்டோ ஆல்பத்தை பார்த்துக்கொண்டு இருந்தான்.

அதில் சகுந்தலா போட்டோ இருந்தது, என்ன நம்ம ஆளு போட்டோ இருக்கு என்று யோசித்தவன் பின்னால் வந்து நின்ற வேலைக்காரி உருவில் இருந்த சகுந்தலா, அவன் அவளது போட்டோ பார்த்துவிட்டதை எண்ணி கையிலே இருந்த கண்ணாடி ஜூஸ் கிளாஸ் கைத்தவரி போட்டாள்.

"பாத்து மா, கை குத்திக்க போது" என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்த புகைப்படத்தை பார்க்க இப்போது வேறு ஒரு உருவம் இருந்தது. சகுந்தலா அனைத்தையும் மாற்றி விட்டாள் அவளது மந்திர சக்தியால்.

'நம்ம சகுந்தலாவை நினைத்து இருக்கோம், அதுதான் காதல் முத்திடுச்சி' என்று நினைத்தான். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் உள்ளே வரும் போது சகுந்தலா அங்கு இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறினாள்.

அருள் குடும்பம் வந்தது வசி அவன் விசாரணையை தொடர்ந்தான், அவர்களிடம் அவரது கணவன் இறப்பை பற்றியும் சகுந்தலா செய்த உதவியும் சொன்னான்.

"சகுந்தலா இருக்கும் போட்டோ காட்டுங்க" என்று சொன்னவன் திரும்பி அங்கு ஆள் உயரம் இருக்கும் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்தான் வசி காதலிக்கும் சகுந்தலாவும் இப்போது சந்தேகத்தின் பேரில் இருக்கும் சகுந்தலாவும் ஒன்று.

அந்த இறந்த ஆய்வாளர் தலைமை பொறுப்பில் இருந்ததார் இவள பார்க்க போனது போல இருந்து மாயா பேரில் அவள் என்னிடம் எதற்கு வரவேண்டும்.

வசிக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. எதிர்ச்சியாக அருளின் மகள் கழுத்தில் இருந்த டாலர் பார்த்துவிட்டு.

"அதை கொஞ்சம் கழட்டி கொடு மா".

அந்த பொண்ணும் தயக்கத்தோடு கழட்டி கொடுக்க, அதனை பிரித்தவன் கையில் ஒரு சிப் வந்து விழுந்தது ஒரு சிறு காகிதமும் அதனுள்ளிருந்தது. "அக்னி நிலா" என்று எழுதி இருந்தது அந்த சிறு துண்டுகாகிதத்தில். வீட்டிலிருக்கும் அனைவரையும் வசி ஒரு பார்வை பார்த்து.

"இதை பற்றி எதும் யாரிடமும் சொல்லக்கூடாது முக்கியமா சகுந்தலாவிடம், உங்க புருஷன் செத்தது விபத்து இல்லை கொலை" என்று மனைவியிடம் மட்டும் சொல்லிவிட்டு வசி கிளம்பினான். அதனை சொன்னதுக்கு காரணம் இந்த விஷயம் சகுந்தலாவிற்கு தெரியக்கூடாது என்பதற்காக.

வசி யோசனையாக வெளியே வந்தான். தோட்டத்தில் வேலைக் கார பெண் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தாள், வசி யூகித்துவிட்டான் வந்தது சகுந்தலாவாகத்தான் இருக்கும் என்று.

அந்த பெண் உடை முழுவதும் அங்கங்கு சேறு அப்பி காய்ந்து இருந்தது. உள்ளே இருந்தவளும் இவளும் ஒன்று இல்லை என்று யூகித்தவன் ருத்ராவிற்கு அழைத்தான்.

"ருத்ரா என் ஆளு என்ன செஞ்சிட்டு இருக்கா?".

"இப்போதான் வெளியே போனாள்" சொல்லி முடிப்பதற்குள் சகுந்தலா அங்கு வந்து நின்றாள் மூச்சி வாங்க. அவளது பதட்டத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நின்று இருந்த சமயம். "சகுந்தலாவே வந்தாச்சு" என்று போனை கொடுத்துவிட்டு அங்கு இருக்கும் இருக்கையில் அமர்ந்தான் ருத்ரா.

"சகுந்தலா என்னாச்சி ஏன் இவ்ளோ மூச்சி வாங்குது?".

"வெளியே கொஞ்சம் நடந்துட்டு வந்தேன் ஒரு நாய் துரத்திட்டு வந்தது அதான் ஓடி வந்தேன், சரியா மூச்சி வாங்குது" என்று பொய்யையும் உண்மையையும் சேர்த்து கோர்த்து ஒருவழியாக சொல்லி முடித்தாள் சகுந்தலா.

"சரி சாயந்தரம் தயாராக இரு நான் வரேன் கொஞ்சம் வெளியே போகலாம்."

சகுந்தலாவிற்கு இப்போது தான் மூச்சே வந்தது "சரிங்க நான் தயாராகுறேன்" போனை வைத்துவிட்டு ருத்ராவிடம் கொடுத்தான்.

"உன் அழிவு நெருங்கிவிட்டது".

சகுந்தலா "என்ன?" என்றாள் ருத்ராவை முறைத்து.

"படம் பேரு கொஞ்சம் பழைய படம்‍, நான் படம் பார்க்க போறேன் வரையா?".

"இல்லை நான் வரல" என்று சகுந்தலா அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

வசி வந்ததும் அவளை அழைத்து சென்றான் என்றும் இல்லாமல் அவளை மிக அருகில் நிற்பதும். இவளும், அவன் காதலித்ததும் ஒரு பெண்ணா என்று சோதிதான். இன்று பார்த்து அக்னி நிலாவின் மோதிரத்தை சகுந்தலா எடுத்து வர மறந்திருந்தாள்.

வசி கண்டு கொண்டவன் பெரியதாக காட்டிக்கொள்ளவில்லை. காரணம் இவள் எதற்க்கு வந்து இருக்கிறாள் என்று தெரிந்த பின்புதான் எதாவது செய்ய முடியும் என்று வசிக்கு தெரிந்தது. சகுந்தலாவிடம் சந்தேக பார்வை வீசாமல் சாதாரணமாக பார்த்தான்.

சாந்தி ஒரு புறம் அவளுக்கு கிடைத்த செய்தியை வைத்து கண்டு பிடித்ததை வசியிடம் சொல்ல வந்தாள். சகுந்தலா இருப்பதை பார்த்து அதனை சொல்லாமல் அவளுடன் எடுத்து சென்று விட்டாள்.

சாந்தி கொண்டு வந்த புத்தகத்தில் அனைத்து கேள்விக்கும் பதில் இருந்தது.

முன் ஜென்மத்தில் நடந்ததை ஒன்று விடாமல் அக்னி நிலா எழுதி வைத்து இருந்தாள் புகைப்படத்தோடு. இதை பார்த்தால் வசி நம்புவாங்க என்று நினைத்தாள். ஆனால் சகுந்தலா முன்பு இதனை காண்பிப்பது ஆபத்து என்று புரிந்து கொண்டவள் அந்த பழைய கதையை திரும்ப படித்துக்கொண்டு இருந்தாள்.

அக்னி நிலாக்கு நடந்தது என்ன? அவளது நினைவுகளுடன் சேர்ந்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவாளா?

மாயா மாயம் செய்ய வருவாள்...
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
23 மாய நிலா

அக்னி நிலா பிறந்தநாள் அன்று பலத்த மழை, இடி என்று காடே அனைவரையும் பயம் காட்டியது. அந்த சில மணி நேரத்தில் போன ஜென்மத்தில் ஒரே நாளில் இறந்த அனைவரும் பிறந்தார்கள், பல்வேறு இடத்தில்.

இது இவர்கள் இறப்பிலே முடிவு ஆனதுதான் மீண்டும் பிறப்பெடுத்து அவர்கள் வாழாத அந்த வாழ்வை மறுபிறவியில் வாழ நினைத்தார்கள். ஆனால் விதி மீண்டும் விட்டதிலிருந்து தொடங்கியது. இவர்களுடன் சேர்ந்து கெட்ட குணம் கொண்ட சகுந்தலாவும் வரவிருப்பது விதியின் விளையாட்டு போல.

முதலில் அவதரித்தது ருத்ரன் சந்திரனின் முழு அருள் பெற்று பிறந்தான். அன்று நிலவு சந்தோசத்தின் வெளிப்பாடக தங்கமும் வெள்ளியும் கலந்தது போல வெளிச்சத்தால் நிரப்பியது, அந்த இரவை பகல் நேரம் போல.

அடுத்து வசி பிறந்தான், அமைதியான சூழலில், அவனை தொடர்ந்து அர்ஜுன், ஆகாஷ், சாந்தி, ரோஸ், ஆதிரா, சைலு என அனைவரும் வெவ்வேறு சூழலில் பிறந்திருந்தார்கள்.

கடைசியாக அக்னி நிலாவும், சகுந்தலாவும் ஒரே நேரத்தில் ஒரே தாயின் வயிற்றில் யார் “முதலில் யார் வருவது?” என்று போட்டிப்போட்டுக் கொண்டு இருந்தார்கள் அவர்களின் தாய் வயிற்றில்.

அக்னி நிலா வெளி வருவதற்குள், சகுந்தலா தாயின் உயிரையும் அக்னி நிலா உயிரையும் எடுத்துவிட்டு முதலில் வெளியே வந்தாள்.

யாருக்கும் சக்தி இல்லை, பிறந்த போதே அபறிவிதமான சக்தியோடு வெளியே வந்த சகுந்தலா, அவளுக்கான வழியை அப்போதே தேடத் துவங்கிவிட்டாள், அறிவியலை தன் கைக்குள் வைத்துக்கொள்ள.

அக்னி நிலாவின் தந்தை, இறந்த மனைவியையும் குழந்தையையும் நினைத்து அழுவதா, இல்லை இருக்கும் ஒரு குழந்தையை வைத்து வாழ்வதா என்று குழம்பிய சமயம். காதல் மனைவி இல்லாத உலகில் அவருக்கு வாழ சுத்தமாக விருப்பமில்லை.

அந்த சமயம் மலைக்கு ஒதுங்க வந்த அந்த மாவட்டத்தில் தலைமை இடத்தில் இருக்கும் ஒரு அலுவலர், இவர்கள் வீட்டு பக்கம் வந்து நின்றார்கள், மழையின் புயல் வேகத்துக்கு பயந்து.

இவர்களுக்கு பல வருடங்கள் குழந்தை இல்லாமல், எதோ பரிகாரம் செய்ய காட்டு கோவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் மழையில் மாட்டிக்கொண்டார்கள்.

ஏற்கனவே அந்த அலுவலரை அக்னி நிலா தந்தைக்கு தெரிந்து இருந்தது.ற

“ஐயா எனக்கு வாழ பிடிக்கல, என் மனைவி இல்லாத உலகில், உங்களுக்கு குழந்தை இல்லைனு எனக்கு தெரியும் இந்த குழந்தையை நீங்க வச்சிக்கோங்க”.

இருவரும் ஒருவர் முகம் மாற்றி பார்த்துக்கொண்டு, “சரி ஆனா நீங்க உயிரோட இருக்கிறதா இருந்தா நாங்க வாங்கிக்குறோம்”.

அக்னி நிலா அப்பாவுக்கும், இறைவன் கொடுத்த உயிர் இறைவனே எடுத்துக்கட்டும் என்று நினைத்து “சரி” என்று சகுந்தலாவை அவர் கையில் கொடுத்துவிட்டார்.

“நாங்க கிளம்பறோம்” என்று அந்த தம்பதிகள் அந்த இடத்தைவிட்டு கிளம்பினர். போகும் முன்பு “உங்க குழந்தையை எப்போ பார்க்க தோணினாலும் வந்து பார்த்துட்டு போங்க” என்று சொல்லிவிட்டு தான் சென்றார்கள்.

சகுந்தலா அந்தயிடத்தைவிட்டு செல்லவும் மழை நிற்கவும் சரியாகயிருந்தது.

இறந்த மனைவியையும் குழந்தையையும் அக்னி அப்பா கண்களில் கண்ணீரோடு காட்டு பகுதிக்கு கொண்டு சென்றார் இறுதி சடங்கு செய்ய.

இருவரையும் ஒன்றாக புதைக்க மண் வெட்டிக்கொண்டு இருந்தார் கண்களில் கண்ணீர் வடிய. புதைக்க கூட அங்கு ஆட்களில்லை தனியாகதான் அனைத்தும் செய்தார், புதைக்கும் முன்.

மனைவியையும் குழந்தையும் கட்டி அழுதுகொண்டு இருந்த சமயம் குழந்தைக்கு ஏதோ ஒரு துடிப்பு இருப்பது போல தெரிந்தது மண் வெட்டுவதை விட்டுவிட்டு குழந்தையை தூக்க.

குழந்தையை தூக்க முடியாமல் போனது அவரால் என்ன என்று பார்க்கும் போதுதான் தெரிந்தது அந்த வேர் மரத்தின் விழுதுகள் அக்னி நிலாவை சிறிது சிறிதாக மேலே தூக்கியது. தனக்குள் அந்த மரம் இழுத்துக் கொண்டது இங்கு நடக்கும் அதிசயத்தை பார்த்து பிரமித்து நின்று இருந்தார் அக்னியின் அப்பா.

வானம் நெருப்பு போல சிவந்தது அந்த நேரத்தில், பால் நிலவின் ஒளி கண்கள் கூசியது.

அவரின் இறந்த குழந்தையின் உடலை உள்ளே இழுத்தது, அக்னி நிலா தந்தை பதறிவிட்டார். விழுதுகள் அதன் சக்தியை அக்னி நிலாவின் உடலில் செலுத்தி உயிருடன் திருப்பி கொடுத்தது, அக்னி நிலா அப்பா கைகளில்.

விழுதுகளின் கைகளிலிருந்து அவளை வாங்கி அணைத்துக் கொண்டவர், நிலா ஒளியில் வேர் மரத்தின் சிவப்பு கைகலால் அவளை வாங்கி அடுத்த நொடி அக்னி நிலா என்று பெயர் வைத்தார்.

அக்னி நிலா அன்னையை நோக்கி கை நீட்ட நிலா அப்பா அருகில் படுக்க வைத்தார். அக்னி நிலா கை பட்டதும் அன்னையின் கண்களை மெல்ல திறந்தார்.

கண் திறந்து குழந்தையயை வருடிக்கொண்டு இருந்தவர், “ஏங்க இங்க இருக்கோம்”, நடந்ததை சொல்ல, ஆச்சர்யமாக இருவரும் குழந்தையை பார்த்தார்கள்.

கொடுக்கப்பட்ட குழந்தையை பற்றி நிலாவின் அப்பா மறைத்திருந்தார்.

அக்னி நிலா அழகிலும் அறிவிலும் அதிக ஆற்றல் பெற்று பிறந்து இருந்தாள்.

கேள்வி கேட்டு கேட்டு அன்னையையும் தந்தையையும் ஒரு வழி செய்து விடுவாள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது.

அவள் கேட்கும் கேள்விக்கு பெற்றவர்கள் பதில் தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தார்கள். அதும் இல்லாமல் இவர்கள் காட்டு பகுதியில் வசிப்பதால், பள்ளிக்கூடமும் பெரியதாக இல்லை 10 ஆம் வகுப்பு வரைதான் இருந்தது.

அக்னி நிலா வெளியே நண்பர்களோடு விளையாட சென்று இருந்தாள். ஆதிரா அப்போதுதான் அறிமுகம் ஆனால், புதியதாக அந்த காட்டை ஆராய்ச்சி செய்ய இரு குடும்பம் வந்தது, அதில் அர்ஜுன் குடும்பமும், ஆதிரா குடும்பமும் சேர்ந்து அந்த காட்டில் செடி கொடிகளின் தன்மையை ஆராய்ச்சி செய்யத் துவங்கினார்கள்.

மூவரும் ஒரே வயதில் இருந்ததால் சீக்கிரமே நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டார்கள்.

அர்ஜுனும் சரி ஆதிரையும் சரி அக்னி நிலாவை சிறுவயதில் இருந்து தாங்கினார்கள்.

குழந்தைகள் மூலமாக பெற்றோர்களும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.

அர்ஜுன், ஆதிரா அப்பாக்கள் இருவரும் காட்டில் ஆராய்ச்சி செய்ய அவர்களுக்கு உதவியாக நிலா அப்பா கூட செல்வது என இன்னும் நெருங்கிய நண்பர்களாகினார்கள்.

நிலா அப்பாவுக்கும் சில மரத்தின் பண்புகள் அதனை உபயோகிக்கும் முறையும் தெரியும் கிட்டத்தட்ட படிக்காத சயின்டிஸ்ட் அக்னி நிலா அப்பா. மூவரும் சேர்ந்து வித்யாசமான செடிகளை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார்கள்.

மூன்று இல்லத்தரசிகளும் சேர்ந்து நாள் முழுவதும் தேடி அலைந்து வரும் கணவர்களுக்கு ஒன்றாக சமைப்பது, குழந்தைகளை பார்த்துக் கொள்வது இப்படியே இனிமையாக இவர்கள் வாழ்க்கை நகர்ந்துக்கொண்டு இருந்தது.

சகுந்தலா அவளது சக்தி கொண்டு தோட்டத்துல எல்லாம் வைரமாக மாற்றிக்கொண்டு இருந்தாள். சிறுவயது ஆனால் அவள் அப்போதே 60 வயது உடையவர்களின் அறிவு. மாவட்டத்தில் ஒரு ஓரத்தில் வேலை செய்து கொண்டு இருந்த வளர்ப்பு அப்பா. உலக அளவில் மருத்துவ துறையில் தலைமை இடத்தில் இருந்தார் சகுந்தலாவின் தந்திரத்தால்.

அவளும் தக்க சமயத்துக்கு காத்துக் கொண்டு இருந்தாள், அக்னி நிலாவை சிறப்பாக வைத்து செய்ய. ஆனால் அதற்கான பலம் இன்னும் வேண்டும் என்று தந்தை தொழிலையும் நிலையையும் இன்னும் அதிகரிக்க, என்ன செய்ய முடியுமோ அனைத்தும் செய்தாள் அவள் மாய சக்தி கொண்டு.

அக்னி நிலாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சக்தி இல்லாவிட்டாலும் இப்போது எல்லாம் அவள் கேட்கும் கேள்விக்கும் பதில் உடனடியாக கிடைத்தது.

இவள் மனதில் நினைக்கும் சமயம் பல ஆயிரம் கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ருத்ராவிற்கு கேட்கும் அவனுக்கு தெரிந்த பதிலை மனதில் சொல்லிவிட்டு, தெரியாத கேள்விக்கு பதில் தேடி சொல்லுவான்.

டெலிபதி இருவருக்குமிடையில் தொடங்கியிருந்தது, பள்ளி இறுதிகட்டத்தில் இருந்த போது ஏற்பட்ட இந்த நட்பு தெடர்ந்தது. ஆனால் இதுவே ருத்ரா தேடி தேடி படித்துக்கொண்டு இருந்தான்.

அக்னி நிலாவிற்கு சில சமயம் வசி குரலும் ருத்ரா மூழியமாக கேட்கத் துவங்கியது, வசீகரமான வசீகரனின் குரல் அவளை சில சமயம் தூங்க விடாமல் செய்துவிட்டது, 12 வது முடித்த சமயம் வசியை பார்க்காமலே காதலிக்கத் துவங்கினாள். இது அனைத்தும் ஒரு கற்பனை என்று தான் அக்னி நிலா நினைத்திருந்தாள்.

ருத்ராவிடம் சந்தேகம் மட்டும் கேட்டுக் கொண்டு இருந்ததைவிடுத்து.

ருத்ராவிடம் பேசவும் துவங்கினாள் அக்னி நிலா, தெலைபேசி செலவேயில்லாமல் மணி கணக்காக இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பெரும்பாலும் இரவு சமயத்தில் அமைதி சூழலில் மட்டும் இருவரும் பேசுவது நன்றாக கேட்கும். மற்ற நேரங்கள் இருவராலும் தொடர்பு கொள்ள முடிவதில்லை என்ன தான் பேசிக்கொண்டிருந்தாலும்.

“ஹலோ நான் பேசுறது கேக்குதா?”.

ருத்ராக்கு இதைப் பற்றி படித்த அறிவு இருந்தாலும் அவன் நினைத்தது என்னவென்றால் நமக்கு எழும் சந்தேகத்துக்கு லேடி வாய்ஸ் மனதில் நினைத்துகொண்டோம் போல என்று.

“ஹாய் நீ” என்றான் ருத்ரா தயங்கிக்கொண்டே.

“எனக்கு இவ்ளோ நாள் பதில் சொன்னது நீங்களா?”.

“கேள்வி கேட்டது நீங்களா?”.

“ஆமா ஆச்சர்யமா இருக்கு, இவ்ளோ நாள் நான்கூட என்னோட மைண்ட்க்கு லேடி வாய்ஸ் கொடுத்துட்டேன்னு நினச்சேன்” என்றான் ருத்ரன்.

ருத்ரா பேச்சை கேட்டு அக்னி நிலா சிரித்துக்கொண்டு இருந்தாள்.

இப்படியே துவங்கியது இவர்களின் பேச்சி.

சிறிது சிறிதாக வசி பற்றியும் அவள் அவனுக்கே தெரியாமல் அவனை பற்றி சேகரிக்க துவங்கினான்.

அழுக்கு ஒரு பக்கம் கல்லூரி சேர்ந்து இறுதி ஆண்டும் படித்து முடித்தார்கள்.

அடிக்கடி பேசிக்கொண்டு இருந்த ருத்ராவும் அக்னி நிலாவும் எப்போவாவது பேசத் துவங்கினார்கள்.

ருத்ராவின் திறமையை கண்டு அரசாங்க ஆய்வுக்கூடம் பெயரளவில் மட்டும் தான் மற்றபடி சகுந்தலாவின் பெரிய சாம்ராஜ்யம் அது.

அந்த கூடத்தில் பணி கொடுக்கபட்டது ருத்ராவிற்கும் ஆகாஷ்க்கும்.

திடீர் என்று அக்னி நிலா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் சகுந்தலா. அவளுக்கு தேவையான அனைத்தும் இருக்கிறது, ஆனால் அக்னி நிலா உயிரோடு இருக்கக்கூடாது. இதுமட்டும் தான் அவள் சிறு வயதில் இருந்து மனதில் விஷத்தை விதைத்து அது விருட்சமாக வளர்ந்து நின்றது.

அனைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்த சமயம் அர்ஜுன், ஆதிரா, அக்னி நிலா மூவரும் டென்னிஸ் விளையாடிவிட்டு உள்ளே வரும் போது.

அக்னிக்கும், அக்னி அம்மாவிற்கும் சொல்லப்பட்ட செய்தி கேட்டு அக்னி அம்மாக்கு சகுந்தலாவை பார்த்து ஆனந்த கண்ணீர் பொங்கியது.

சகுந்தலாவுடன் அவளை வளர்த்தவர்களும் வந்து இருந்தார்கள், மூவர் குடும்பமும் ஒரு வீட்டில் மூனு போர்சன் கட்டி ஒன்றாகத்தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அனைவரும் சாப்பிட உட்காற அக்னி நிலா சகுந்தலாவை யோசனையாக பார்த்துக் கொண்டு இருந்தாள். சகுந்தலாவை பார்த்து அக்னிக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை. அவளை பார்த்தது பாச உணர்வு வருவதற்கு பதிலாக வெறுப்பு உணர்வு தான் வந்தது, அனைவரும் சாப்பிட்டு முடிந்தபின்பு சிறுவர்கள் நால்வரும் சாப்பிட அமரும் போது சகுந்தலா தான் பாசமாக உணவு மூவருக்கும் பரிமாறினாள்.

அர்ஜுன், ஆதிரா உம் சாப்பிட துவங்க அக்னி நிலாக்கு பசிக்கவில்லை என்று அமர்ந்து இருந்தாள்.

வீட்டில் உள்ளவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் மயங்கி சரிந்தார்கள்.

சகுந்தலா பெற்றவர், வளத்தவர் என்று எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைவர்க்கும் விஷம் வைத்து விட்டாள். இவர்கள் கிட்சனில் இருந்தாதால் அங்கு நடப்பது இந்த மூவருக்கும் தெரியவில்லை.

சகுந்தலா கை கடிகாரத்தை பார்த்து, “எல்லோரும் கிளோஸ்” என்று மனதில் நினைத்தவள்.

அர்ஜுன் ஆதிரா சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை பார்த்து கொஞ்ச நேரத்தில் இவங்களும் காலி ஆகிடுவாங்க, இவளையும் நம்ம கையில சாகடிக்கணும்” என்று நினைத்தவள்.

அக்னி நிலாவுக்கும் சகுந்தலா ஊட்டிவிட வந்தாள்.

அக்னி நிலாவும் வேண்டா வெறுப்பாக வாயை திறந்தாள். ஆயிரம் தான் சகுந்தலாவை பிடிக்கலை என்றாலும் அக்காவாச்சே என்று நினைத்து வாயை நம்பி திறந்தாள்.

விஷம் கலந்த சாதத்தை ஒரு வாய் ஊட்டியும் விட்டாள்.

அக்னி நிலா சகுந்தலா சூழ்ச்சியில் இருந்து தப்பிப்பாளா?

மாயா மாயம் செய்ய வருவாள்…
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
24 மாய நிலா

நிலா அப்பா நடக்க போகும் விபரீதம் புரிந்து, மயங்கியபின் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று ஓடி வந்தார். அவர் வருவதற்குள், அர்ஜுனும் ஆதிராவும் மயங்கி சரிந்தார்கள்.

சகுந்தலா இரண்டாம் வாய் அக்னி நிலாவுக்கு ஊட்டிவிட்டு வரும்போது பக்கத்தில் சரிந்து விழுந்தவரை பார்த்து பதறினாள்.

“அர்ஜுன் என்னாச்சி, ஆதி எந்திரி டி” என்று இருவரையும் உளுக்கி எழுப்ப முயற்சி செய்துகொண்டு இருந்தாள்.

சகுந்தலா தான் ஏதோ செய்துவிட்டாள் என்று நிலா அப்பா, அந்த சாகும் தருவாயில் போராடி சட்டென்று விழித்துக்கொண்டவர். தலையில் யாரோ சுத்தியால் அடிப்பது போல இருந்தது.

அந்த வலியை சமாளித்துக் கொண்டு எந்திரித்து நின்றவருக்கு அனைத்தும் இரண்டு இரண்டாக தெரிந்தது.

ரெண்டு அடி எடுத்து வைக்கவே அவ்ளோ சிரமப் பட்டு அவர்கள் உயிர் போனாலும் பரவாயில்லை குழந்தைகளின் உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்று விரைவாக இவர் அப்பா வருவதற்குள் சகுந்தலா நினைத்தது நடந்தந்து, மூவரும் உணவை சாப்பிட்டு விட்டார்கள்.

அக்னி நிலா அப்பா ஓடி வந்து அர்ஜுன் அதிரா மயங்கி இருப்பதை பார்த்து. “அர்ஜுன் எந்திரி, ஆதி குட்டி என்னாச்சி, அடிப் பாவி ஏண்டி என் குடும்பத்தை அழிச்ச” சகுந்தலாவை அடிக்க போனார் நிலா அப்பா.

வயதானவர் என்று கூட பார்க்காமல் கீழே தள்ளி விட்டாள், அந்த கொடூர அரக்கி. உங்கள எல்லாம் அழிக்கத்தான் நான் பிறப்பு எடுத்து வந்து இருக்கேன் என்றாள் சாவகாசகமா.

இரு பிள்ளைகள் தான் போய்ட்டாங்க, அக்னி நிலாவாவது உயிர் தப்பிக்கவேண்டும் என்று நினைத்த நிலா அப்பா.

“நிலா இங்க இருந்து போ இந்த பொண்ணு சாப்பாட்டுல ஏதோ கலந்து கொடுத்துட்டா.”

நிலா வெளியே அனைவரையும் விட்டு எப்படி ஓடுவது “இல்லப்பா நானும் உங்க எல்லோரும் கூடவும் வந்துடறேன்” என்று கதறிக்கொண்டு இருந்தாள்.

“இந்த டெத் ட்ராமா எனக்கு பிடிச்சி இருக்கு, ஆனா இன்னும் ரியாலிஸ்டிக்கா வரணும்” என்று சகுந்தலா நிலா அப்பா நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி மிதித்தாள். சகுந்தலாவின் பி. எ மன வருத்தத்தோடு இங்கு நடக்கும் அனைத்தையும் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தான்.

“போயும் போயும் இந்த ராட்சசிங்ககிட்டவா நான் வேலை பார்க்கணும், ரத்தம் குடிக்கும் காட்டேரியை கதைகள் சினிமாவில் மட்டும் பார்க்க பழக்க பட்டவனுக்கு இவை அனைத்தும் ஒரு வித பயத்தை கிளப்பியது அந்த பி. எ க்கு.

“அப்பா” என்று அக்னி நிலா அருகில் சென்று கட்டிக்கொண்டாள்.

“நீ எதுக்கு இப்படி செய்ற என் குடும்பத்தை, ஒரே நாளுல சிதச்சிட்டியே ராட்சச்சி”.

“ஆமாடி நான் ராட்சசி தான், உன்னை கொல்ல மறு பிறவி எடுத்து வந்த ராட்சசி” என்று அகங்காரமாக சிரித்தாள்.

பக்கம் இருந்த அவள் பி. எ வை பார்த்து “ஒழுங்கா கை ஆடாம வீடியோ எடுக்கணும் புரியுதா?” என்று அவனையும் ஒரு மிரட்டிவிட்டு அவனது அதிரும் கைகளை பார்த்தாள். அவள் பார்வை அவனது கைகளில் இருக்கிறது என்று சகுந்தலா பார்வையில் கண்டு கொண்டு மிக சிரமப்பட்டு அவனது பயத்தில் அதிரும் கைகளை இறுக்கி பிடித்து படம் பிடிக்க துவங்கினான்.

“நிலா அம்மா நான் சொல்றதை ஒழுங்கா கேளு, அப்பா கடைசி ஆசை நிறைவேத்து மா” என்று நிலா அப்பா உயிரை விட்டார்.

நிலாவுக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் இல்லாத வாழ்க்கை எனக்கு மட்டும் எதற்கு நானும் சாகுறேன் என்று நினைத்தாள்.

அர்ஜுனிடம் அசைவு இருப்பதை தெரிந்துக்கொண்டவள், சகுந்தலாவுக்கு சந்தேகம் வராத படி, கதறிக்கொண்டு அர்ஜுன் பக்கம் போனாள்.

நிலா மயங்கி கிடக்கும் அர்ஜுனை கட்டிப்பிடித்து. “அண்ணா எந்திரி அண்ணா, அவ பாரு நம்ம குடும்பத்தை கொன்னுட்டா, எந்திரிச்சி அவளை நம்ம எதிர்த்து நிற்கணும்,” என்று கதறிக் கொண்டே சகுந்தலாவிற்கு தெரியாமல் அர்ஜுன் காதில், அர்ஜுன் பாதி மயக்கத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட அக்னி நிலா.

“அண்ணா நான வெளியே ஓடி போறேன் நீ, ஆதிராவை தூக்கிட்டு காட்டு பக்கம் போ, நானும் அங்க வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அக்னி ஓட்டத்தை பிடித்தாள்.

“நினைத்தேன் இவள் அமைதியாக இருக்கும் போதே, டேய்ய் நீ இங்கவே இரு” என்று பி. எ வை இருக்க சொல்லிவிட்டு அக்னி நிலாவை துறத்திச் சென்றாள் சகுந்தலா.

அக்னி நிலாவுக்கு காட்டில் அனைத்து இடங்களும் அத்துப்படி சகுந்தலாவை வேற திசை திருப்பி விட்டு, அழுதுகொண்டே அக்னி நிலா முள் பாதையில் கால்களில் ரத்தம் வழிய வழிய ஓடி வந்தாள். அது ரொம்பவே கடினமான பாதை சில விச முள்கள் அவளது கைகளிலும் கால்களிலும் கீறி ரத்தம் வடிய வடிய ஓடி வந்தாள்.

அர்ஜுன் இருக்கும் இடத்தை நோக்கி வந்தாள், இவர்களுக்கு பிரியமான அந்த வேர் மரம், எப்போதும் பிடித்த இடம், அங்குதான் எப்போதும் சுற்றித் திரிவார்கள். இன்னொரு தாய் மடி போல அவர்கள் மூவருக்கும், நிலா அப்பாகும் அம்மாக்கும் அந்த வேர் மரம் தான் குலசாமி. குடும்பமா இங்கு நடந்த அதிசயத்தை சொல்லிக்கொண்டே இருப்பார். பல ஆயிரம் முறை சொன்ன பிறகும் இது தான் முதல் முறை போல சொல்லுவார் நிலா அப்பா.

அர்ஜுன் ஆதிரா இருக்கும் இடத்துக்கு ஓடி வந்தவள், இருவரும் பாதி மயக்கத்தில் இருந்தார்கள்.

அங்கு ஆதிராவை மயக்கத்திலிருந்து தெளியவைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான் அர்ஜுன்.

அக்னி நிலா அவசரமாக வந்து அங்கு இருக்கும் மரத்தின் முன்பு நின்று.

“அப்பா நிறைய முறை சொல்லி இருக்கார், நீங்கதான் எனக்கும் என் அம்மாக்கும் உயிர் கொடுத்தீங்கன்னு, இது எல்லாம் தெரிஞ்சும் உன்ன நாங்க கடவுளா தான் பார்த்தோம், இது வரை எதும் வேண்டிக்கிட்டது கூட இல்லை. எனக்கு என்ன ஆனாலும் பரவா இல்லை இவங்க உயிரை காப்பாற்றுவது உனது கடமை” என்று மனமுருக வேண்டியபின் அங்கு இருந்த ஒரு விழுது அர்ஜுன் ஆதிரா மற்றும் அக்னி நிலாவையும் தொட்டது.

அந்த வேர் இவர்களை ஒரு சுற்று சுற்றி அவர்களுக்கு உள்ளே இருந்த விஷத்தை உறிஞ்சி எடுத்தது.

அக்னி நிலா அந்த வேர் மரத்துக்கு நன்றி சொல்லிவிட்டு “எனக்கு கொஞ்சம் விழுது கொடுங்க என் குடும்பத்தை நான் காப்பாற்றனும்” வேர் மரமும் அவளது கையில் சில விழுதுகள் கொடுத்தது, மரம் கொடுத்தை கொஞ்சம் எடுத்துக்கொண்டு, மீதியை மரத்திலே வைத்து விட்டாள் அக்னி நிலா. அர்ஜுன் ஆதிராவுக்கு சிறிது மயக்க நிலையில்தான் இருந்தார்கள்.

இருவரையும் அங்கு இருக்கும் ஒரு கொடியை எடுத்து கைகளையும் கட்டிவிட்டு, “இதுக்கு அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது, ஆனா இத நான் நம்ம குடும்பத்துக்காக செய்துதான் ஆகணும், உங்க ரெண்டு பேரையும் நான் மிஸ் பண்ணுவேன், அங்க இருக்க நம்ம குடும்பத்தை நான் காப்பாத்த போறேன், அப்படி இல்லனா அவளை கொல்லப் போறேன், நீங்க ரெண்டு பேரும் உங்க வாழ்க்கையை வாழனும் அதான் என் ஆசை” என்று சொல்லிவிட்டு கிளம்பும் போது இருவருக்கும் மயக்கம் தெளிந்திருந்து.

“அங்க யாரும் உயிரோட இல்லை அக்னி போகாத”.

“அவங்கள காப்பாத்த முடியும்னு எனக்கு தோணுது”.

“சரி கையை அவிழ்த்து விடு நானும் வரேன் அக்னி தனியா போகாத” என்று அர்ஜுன் பாதி மயக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் கையை விலக்க போராடிக் கொண்டு இருந்தான்.

“அர்ஜுன் நான் வளந்துட்டேன் டா, இனி தனியா தான் பிரச்சனையை சமாளிக்கனும்” என்று அவர்கள் இருவரும் எவ்ளோ சொல்லியும் கேட்காமல் சென்று விட்டாள்.

அக்னி நிலா சகுந்தலாவை சுத்த விட்ட சிறிது நேரத்தில் கண்டு கொண்ட சகுந்தலா, அந்த வீட்டை நோக்கி வந்தாள்.

“டேய்ய் அந்த வீட்டை கொளுத்திடு” அவளது பி. எ தயங்கி நிற்க.

“உனக்கு ஒன்னும் பாவம் வராது, நான் ஏற்க்கனவே என் கையால கொன்னுட்டேன், செத்த பாம்பை கொழுத்தலாம் போ போ, சரியான சாமியார்” என்று சகுந்தலா அவனை விரட்டினாள். அவளும் வேண்டா வெறுப்பாக மனதில் பாரம் ஏறி அந்த வீட்டை கொளுத்தி விட்டான்.

ஆதிரையும் அர்ஜுனையும் ஒரு இடத்தில் கட்டிப்போட்டு விட்டு அக்னி நிலா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வீட்டை நோக்கி போனாள். அங்கு இருப்பவர்களுக்கு அந்த வேர் உடைய சக்தியை கொடுத்து உயிர் பிழைக்க வைக்க அங்கு ஓடினாள்.

அக்னி நிலா இது போல எதாவது செய்வாள் என்று புரிந்துகொண்டு மொத்தமாக வீட்டை எரித்துவிட்டாள்.

அந்த வீடு கொழுந்து விட்டு எறிவதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள் சகுந்தலா.

பக்கம் இருக்கும் அவளது பி. எ அருளுக்கு அடி மனதில் இருந்து சகுந்தலாவிற்கு சாபம் கொடுத்துக்கொண்டு இருந்தான்.

அக்னி நிலா கடைசி முயற்சிக்கும் தடையாக இருந்த சகுந்தலா மீது ஆத்திரம் பொங்க அங்க இருக்கும் கட்டையால் அவளை அடிக்க வந்தாள்.

அக்னி நிலா அடியில் இருந்து லாவகமாக தப்பித்து, அவளை ஒரு சொடக்கு போட்டுட்டு அக்னி நிலாவை மறைய வைத்தாள்.

சகுந்தலா ஆட்டத்தை முடிக்க வருவாளா? அக்னி நிலா.

மாயம் செய்ய வருவாள் மாய நிலா…
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
25 மாய நிலா

சகுந்தலா அவள் கால் அடியில் இருக்கும் முயல் குட்டியாக மாறியிருந்த அக்னி நிலாவை தூக்கினாள்.

அவள் மந்திர சக்தியால், அக்னி நிலாவை மறைய வைக்க முடியவில்லை. அக்னி நிலா அங்கு பக்கம் ஓடிக் கொண்டு இருந்த முயலை கடைசி நேரம் பார்த்ததால், "நான் மறையக் கூடாது முயலாக மாறவேண்டும்" என்று கையில் இருந்த வேரை பிடித்து வேண்டிக்கொண்டாள். அதனால் சகுந்தலாவின் மந்திரம் பலிக்கவில்லை.

"ஓ சோ ஸ்வீட், இனி நீதான் எனக்கு பெட் அனிமல்" பக்கம் இருக்கும் பி. எ விடம் தூக்கி போட்டாள்.

"இதை என் சயின்ஸ் லேப்ல மிருகங்கள் அடைத்து வைக்கும் இடத்துல அடைத்து வை" என்று அனைவரையும் முடித்து விட்டோம் என்று நினைத்த சகுந்தலாவிற்கு தெரியவில்லை இதுதான் ஆரம்பம் என்று.

அந்த பி. எ விற்கு மனம் கேட்கவில்லை எப்படியாவது அக்னி நிலாவை பாதுகாப்பாக இருக்க வைக்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு தோன்றியது ருத்ராவின் நினைவு, பெரிய பெரிய அறிவாளிகள் கூட மிருகத்தை ஒரு சோதனை பொருளாக நினைக்கும் அந்த இடத்தில் ருத்ரா குட்டி குட்டி மிருகங்களை கொஞ்சி பேசுவதை பல முறை பார்த்து இருக்கிறான். அவனிடம் எப்படியாவது அக்னி நிலாவை சேர்த்து விட வேண்டும் என்ற முனைப்பில், அக்னி நிலாவை பத்திரமாக பிடித்து காரில் அமர்ந்தான் அந்த அசிஸ்டன்ட்.

அக்னி நிலாவிற்கு சாப்பாடு போடக் கூடாது என்று சொல்லிவிட்டுத்தான் போனாள் சகுந்தலா.

'இந்த பிறவி இந்த உலகத்துல பிறக்கலன்னு யார் அழுதா, கடவுளே உனக்கு கண்ணு இல்லையா' என அசிஸ்டன்ட் முயலாக மாறிய அக்னி நிலாவை கையில் வைத்துக்கொண்டு வழி முழுவதும் சகுந்தலாவை தாளித்துக் கொட்டிகொண்டே வந்தான்.

வீட்டிற்கு உள்ளே போகும் முன் சகுந்தலா திரும்ப வந்து "அந்த போன் கொடு டா, அந்த வீடியோ செம. இனி அத பார்த்து ரசிக்கும் போது இனிமையாக இருக்கும்".

'மத்தவங்க உயிரை எடுத்துட்டு இனிமையா இருக்குமாம், ராட்சச மிருகம்' என்று சகுந்தலாவின் அசிஸ்டன்ட் அருள் நினைத்தான்.

"என்னை மனசுல திட்டினது போதும், போய் வேலைய பாரு, புதுசா வந்த சயின்டிஸ்ட் கிட்ட என்ன என்ன டாலன்ட் இருக்குன்னு சீக்கரம் தெரிஞ்சிக்கோ, ரொம்ப நாள் ஆச்சி புது கண்டுபிடிப்பு கண்டு பிடிச்சி இந்த மாசம் எதாவது கண்டு பிடிக்கல நம்ம மார்க்கெட் அவுட் ஆகிடும்".

அருள் "சரிங்க மேடம்" என்று முயலக மாறிய அக்னி நிலாவை தூக்கிக்கொண்டு கிளம்பும் சமயம்.

"அருள் இங்க வா" அருள் அக்னி நிலாவை காரில் விட்டுவிட்டு வர எண்ணினான்.

"அவளையும் தூக்கிட்டு வா".

'ஐயோ கடங்காரி, இந்த சின்ன பொண்ணை என்ன செய்வானுங்கன்னு தெரிலயே' அக்னி நிலாவை தூக்கிக்கொண்டு மெதுவாக நடந்து அவள் அருகில் வந்தான்.

"ஏன்டா ரெண்டு எட்டு வைக்கறதுக்கு ஒரு மணி நேரம் மெதுவா வருவியா? எனக்கு வேகம் முக்கியம் புரியுதா" அருளால் தலையை மட்டும் தான் ஆட்ட முடிந்தது.

"மண்டையை மட்டும் நல்லா ஆட்ரீங்கடா".

அக்னி நிலா இரு காதையும் பிடித்து அவளது முகத்துக்கு நேராக தூக்கி நிறுத்தினாள். "ஐயோ மை கியூட் தங்கச்சி, உன்னை பிறக்கும் போதே கொன்னுட்டுத்தான் பிறந்தேன்னு நினச்சேன், கடைசியா கொஞ்ச வருஷம் முன்னாடித்தான் தெரிஞ்சது நீயும் உன் அம்மாவும் உயிரோட இருக்குற விஷயம். சரி படிப்பு எல்லாம் சிறப்பாக முடிச்சிட்டு உங்களை முடிக்கலாம்னு நினச்சேன், பார்த்தையா நான் சிறப்பாக முடிச்சிட்டேன்" அக்னி நிலா கோவத்தில் சகுந்தலா கன்னத்தை கீறிட்டா.

"ஆ என்று அலறியவள், ஏதோ ஒரு மந்திரம் உபயோகித்து அந்த காயத்தை இரு விரல்கள் கொண்டு காயத்தை குணமடைய செய்தாள்.

அருள் அமைதியாக சகுந்தலாவிடம் இருந்ததற்க்கு இந்த மந்திர சக்தியும் ஒரு காரணம் தான். முதலில் மிரண்டவன் பிறகு அவளை கண்டு நடுங்க ஆரம்பித்தான். அவளை எதிர்த்து நின்றால் அவனது குடும்பத்தை எதாவது செய்துவிடுவாள் என்று பயந்து அவள் சொல்வதை எண்ணம் மனதை இரும்பாக மாற்றிக்கொண்டு செய்து வருகிறான்.

சகுந்தலாவின் சக்தி தெரிந்த ஒருவன் அருள் மட்டும் தான்
அக்னி நிலாவை தூக்கிக்கொண்டு அவர்களுக்கு சொந்தமான ஆய்வு கூடத்திற்குள் நுழைந்தான். "என்ன மன்னிச்சுடு மா என்னால அங்க நடந்த அநியாயத்தை தட்டி கேட்க முடியாத நிலையில் இருந்து இருக்கேன். நான் ஒருத்தர் கிட்ட கூட்டிட்டு போய் விடுறேன், அங்க பத்திரமா இரு. உனக்கு திரும்ப உயிருக்கு பாதிப்பு வரும் சமயத்தில் என் உயிரை கொடுத்தாவது உன்னை காப்பாத்துவேன்" என்று அருள் வாக்கு கொடுத்துவிட்டு.

ருத்ரா பணி புரியும் இடத்தை நோக்கி சென்றான்.

"ருத்ரா" அருளின் அழைப்பில் திரும்பி பார்த்தவன், அவர் கையில் இருக்கும் முயலை பார்த்து "சோ கியூட் என்கிட்ட வரியா உனக்கு கேரட் தரேன்".

அக்னி நிலா அவளது சிவப்பு கண்களை உருட்டி அருனை பார்த்தா, அவர்களிடம் போவதா வேண்டாமா என்று கேட்பது போல தெரிந்தது ருத்ராக்கு அவளது பார்வை.

"போ…" என்றார் அருள், அக்னி நிலாவும் தயங்கிக்கொண்டே ருத்ராவின் கைகளில் வந்த உடன் ஒரு பாதுகாப்பு உணர்வு வந்தது அவளுக்கு.

"இத நீங்க பாத்துக்கோங்க மேடத்தோட ஸ்பெஷல்."

"அவங்க ஸ்பெஷல்லா?" என்று கேள்வியாக அருளை பார்க்க. அவருக்கு தெரியும் ருத்ரா எதை கேட்கிறான் என்று, பேசக் கூடிய நிலையில் அருள் இல்லை, அந்த இடத்தை விட்டு செல்லும் போது ஒரு நாள் மிருகங்கள் அடைத்து வைத்து இருக்கும் இடத்திலிருந்து ஒரு குட்டி பப்பி வெளியே ஓடி வந்து விளாடிக்கொண்டிருந்தது. அந்த சமயம் பார்த்து சகுந்தலா கால் மீது ஓடி சென்று சுச்சு போய்விட்டது. ஆத்திரம் வந்த அந்த மிருகமாக மாறிய சகுந்தல பப்பியை ஓங்கி ஒரு மிதி அதனை பார்த்து ருத்ரா பதறிக்கொண்டு ஓடிவந்து பப்பியை மிகவும் சிரமப்பட்டு காப்பாத்தினான் அன்று.

'இவள் எல்லாம் பெண்ணா இல்லை மிருகமா' என்று நினைத்தான். அப்போது இருந்த அந்த சகுந்தலா எப்போவாவது மேற்பார்வையிட வரும்போது எல்லாம் ருத்ரா அவளை முறைத்துக்கொண்டுதான் இருப்பான்.

சகுந்தலா அவன் முறைப்பது தெரிந்தாலும், 'உன்னால என்னை முறைக்க மட்டும் தான் முடியும் மூடனே' என்று நினைத்து விலகி விடுவாள்.

அவனது திறமையை பணமாகவும் ருத்ராவை கூட வைத்திருந்தாள். முடிந்த அளவுக்கு இவனது கண்டுபிடிப்பை உரிஞ்ச நினைத்தாள் சகுந்தலா.

சயின்ஸ் மற்றும் மாயாஜாலம் சேர்ந்த ஒரு உலகத்தை உருவாக்க ருத்ரனின் உதவி அவளுக்கு தேவைப்பட்டது. அதனால் சற்று அவனிடம் இருந்து விலகியே இருந்தாள்.

அவனை எதாவது சொன்னால் அடுத்த நிமிடம் அவன் இங்கு இருந்து செல்ல நிறைய வாய்ப்பு இருப்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். ருத்ராவால் நிறைய வருமானமும் வந்து கொண்டு இருந்தது பழைய மருந்துடன் மூலிகையை சேர்த்து புது வித புரட்சி ருத்ராவும், ரோசும் துவங்கிக் கொண்டு இருந்தார்கள். அவன் மருந்து சாப்பிடுபவர்களுக்கு வியாதி சீக்கிரமா குணமாவது மட்டும் இல்லாமல், அவர்களுக்கு எந்த பக்கவிளைவு ஒரு சதவீதம் கூட வராது என்ற நம்பிக்கை ருத்ரா கொடுத்து இருந்தான்.

அது வெற்றிகரமாகவும் அவன் நிரூபித்துக் காட்டி இருந்தான். அதன் பிறகு அவனுக்கு என்று தனி பிரிவை கொடுத்து இருந்தார்கள்.

ருத்ரா மற்றும் ஆகாஷ் சேர்ந்துதான் அந்த கண்டு பிடிப்பு செய்ததால் இருவரையும் ஒரே பிரிவில் தூக்கி போட்டுட்டு இருந்தார்கள். ரோஸ் அசிஸ்டன்ட் ஆக ராஜா தேர்ந்து எடுத்தனர். முதல் பார்வையில் அவள் மேல் காதல் கொண்டான், அவளை இன்டெர்வியூ எடுக்கும்போது அவளது பதில்கள் மெய் சிலிர்க்க வைத்தது. அவர்கள் அலுவலகத்தில் எப்போதும் இளமையாக இருக்கும் நபரைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். மூவரும் தொடர்ந்து புதியதாக எதையாவது கண்டு பிடிக்க வேண்டும் என்பதுதான் இவர்கள் நோக்கம். சகுந்தலா இவர்களை நல்லா உபயோக படுத்திக்கொண்டிருந்தாள்,
தொடர்ந்து நிறைய கண்டுபிடித்தார்கள். ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அக்னி நிலாவை முயலாக இருக்க அதற்க்கு ரூபி என பெயர்வைத்து தூக்கிவைத்து கொஞ்சிக் கொண்டிருப்பது இதுதான் ருத்ராவின் வேலை.

அக்னி நிலாவிற்கு இது மனதில் பேசிக் கொள்ளும் அந்த ருத்ராவின் குரல் போல் தெரிய ஒரு எண்ணம் தோன்றியது.

ஒரு நாள் இதை தெளிவுப்படுத்த எப்போதும் போல மனதில் இருவரும் சில வருடம் கழித்து பேசினார்கள்.
"ஹலோ ருத்ரா" சிறிது இடைவேளை விட்டு "ருத்ரா நான் பேசுறது கேட்குதா?".

"கேட்குதே மேடம்க்கு இப்போதான் என்ன தெரிஞ்சதோ".

"காலேஜ் பிஸி இப்போதான் முடிஞ்சது".

"எனக்கும் நானும் காலேஜ் முடிச்சிட்டு, இப்போ வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டேன்".

"எங்க போற" அவன் வேலை செய்யும் இடத்தை சொல்ல, "எந்த பிரிவு" என்று கேட்டாள். 'அப்போ நிலா நீ நினைத்தது சரி தான்', அதன் பிறகுதான் அக்னி நிலா ருத்ரா ஓடு நன்றாக ஒட்டிக்கொண்டாள். அக்னி இந்த விசயத்தை சொல்லி அவனையும் வருத்த படவைக்க கூடாது என அவள் நிலையை ருத்ராவிடமிருந்து மறைத்திருந்தாள்.

இவர்கள் நெருக்கம் எப்படி இருந்தது என்றால் இருவரும் ஒன்றாக சாப்பிடும் அளவிற்கு.

அவளுக்கு தினமும் கேரட் கொண்டு வருவதை மட்டும் ருத்ரா மறக்க மாட்டான்.

தனியாக இருக்கும் சமயம் குடும்பத்தை நினைத்து அவளால் கண்ணீர் மட்டும் தான் விட முடிந்தது.

அர்ஜுனும் ஆதிராவும் சிறிது நேரம் போராடி அக்னி நிலா கட்டிய கைகளை அவிழ்த்து விட்டு வீட்டை நோக்கி வந்தார்கள். வீடும், அதில் உள்ளவர்களின் சாம்பல் மட்டும் தான் பார்க்க முடிந்தது.

அனைத்தும் சுத்தம் செய்துவிட்டு இருவரும் ஆளுக்கு ஒரு மூலையில் சோகமாக உட்கார்ந்து இருப்பார்கள். அர்ஜுன்தான் எதாவது கிடைக்கும் பொருள் வைத்து சமைத்து ஆதிராவுக்கு ஊட்டி விடுவான்.

இவ்ளோ வருடம் பழகி இருந்தாலும், இந்த தனிமையில் தான் இருவரும் தங்கள் காதலை உணர்ந்தார்கள்.

அக்னி நிலாவையும் அந்த சகுந்தலா கொன்று விட்டாள் என்று தான் நினைத்தார்கள். கடவுள் மனதை அவர்களால் திட்ட தான் முடிந்தது. சகுந்தலாவை பழிவாங்க வேண்டும் என்று அவர்கள் முதல் அடி எடுத்து வைக்கும் போதே தெரிந்து விட்டது அவள் சாதாரணமானவள் இல்லை என்று அதற்கான ஏற்பாடுகளும் துவங்கினார்கள், அந்த வேர் மரத்திடம் உதவி கேட்டார்கள்.

அந்த மரமும் சில விழுதுகளை அவர்கள் மேல் போட்டது, ஆனால் இருவருக்கும் ஒன்று புரியவில்லை. இவர்களை வேர் தான் காப்பாற்றியது ஆனால் அவர்கள் மயங்கி இருந்ததால் அது இருவருக்கும் தெரியவில்லை. வேர்மரம் கொடுத்த விழுதுகளையும் வேரையும் பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டார்கள் இருவரும். இதை வைத்து என்ன செய்வது என இருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

26 மாய நிலா

அக்னி தனிமையிலே சோகத்தில் இருந்தாள் அவளுக்கு ஒரே ஆதரவு ருத்ராதான். அவளுக்கு ரூபி என்று பெயரும் வைத்தான். கழுத்தில் ஒரு பெல்ட் போட்டு ஒரு சிறிய டாலரும் இணைந்திருந்தது.
அவளை தன்னோடு கூட்டிப்போக ருத்ரா அதிகாரிடம் கேட்டபொது அனுமதி அவனுக்கு கொடுக்கப்பட வில்லை.

அதனால் சில சமயம் அவன் தூங்குவது கூட அலுவலகத்தில் தான்.

ஆரம்பத்தில் அமைதியாக இருந்து
கேரட் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து போய்விட்டது, ரூபியாகயிருக்கும் அக்னி நிலாக்கு.

இவர்கள் அனைவர்க்கும் 25 வயதுக்கு பிறகு பழைய நினைவு வருவது என்பது விதி. ஆனால் சகுந்தலாவிற்கு பிறந்ததில் இருந்தே அந்த பழைய வஞ்சம் மனதில் வைத்துக்கொண்டுதான் பிறந்தாள்.

சகுந்தலாவின் மாய வேலையால் அதனை தடுக்க நினைத்தவளுக்கு வசியின் நினைவுகளை மட்டும் தான் மறைக்க முடிந்தது.

மற்றவர்களை அவளால் தடுக்க முடியவில்லை, இதனை பயன்படுத்தி அக்னி நிலா நினைவு உருவில் வசியிடம் வந்து சேர்ந்தாள் சகுந்தலா.
அவள் அழித்த முக்கியமான ருத்ரா நினைவுகள் மிஸ்டர் ஜீரோ என்ற பெயரில் சுத்திக்கொண்டிருப்பது தெரியாமல் சகுந்தலா ஆடிக்கொண்டிருந்தாள்.

வசிக்கு பழைய நினைவுகள் வந்தால்தான் அனைத்தும் சுலபமாக முடியும்? ஆனால் சகுந்தலா அதற்க்குவிட மாட்டாள் போல.

சகுந்தலாவுக்கு தெரியாமல் அனைவரும் யோசித்துக்கொண்டு இருந்த சமயம்.

வசியும், சகுந்தலாவும் கைகள் மட்டும் தான் தொட்டு பேசிக்கொள்வார்கள்.

இவர்களை நிறைய முறை மிஸ்டர் ஜீரோ பார்த்துக்கொண்டுதான் இருந்தான். அவர்கள் கை படும் வேலையில் ஏதோ ஒரு பொருள் கொண்டு சகுந்தலா அவனது உடல் படும் படி வைப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள்.

அந்த சமயம் சாந்தியை முறைத்துக்கொண்டு வந்து அக்னி நிலா தோளில் பறந்து வந்து உட்கார்ந்தான்.

சாந்திக்கு முன்பு போல எல்லாம் இப்போது மிஸ்டர் ஜீரோ மேல் வெறுப்பும் இல்லை நெருக்கமும் இல்லை. அவனை சாதாரணமாக பார்க்கத் துவங்கினாள்.

ஆனால் மிஸ்டர் ஜீரோக்கு அவள் மீது ஆத்திரம், காதலுக்கு எதற்கு உருவம் என்று யோசிக்க துவங்கியது.

அன்று இரவு அனைவரும் தங்குவது போல ஒரு வீடு ஏற்பாடு செய்தான் ருத்ரா.

சகுந்தலாவை நெருங்க விடுவது சரி இல்லை என்று தோன்றியது அவனுக்கு.

ராஜா பாதுகாப்பான ஒரு இடத்தை பார்த்து சுற்றிலும் வேர்கள் பாதுகாப்போடு ஒரு இடத்தை வடிவமைக்க திட்டம் தீட்டியது போல செய்தான், பாதி வேலை முடிந்த நிலையில் ரோஸை பார்க்க சென்றான்.

"பாரு டா சார் இன்னைக்கு வந்துட்டீங்க போல".

"ஆமா" என்று மட்டும் சொல்லி அவன் அறைக்குள் பதுங்கிக் கொண்டான்.

இவர்கள் திருமணம் முடிந்து சில வாரங்கள் கழித்து இன்று தான் வந்து இருந்தான் ராஜா வீட்டுக்கு.

அவனுக்காக சில பிடித்த உணவை சமைத்து மேஜையை நிரப்பிக் கொண்டு இருந்தாள்.

அமைதியாக ராஜா சிறிது நேரம் ஓய்வு எடுத்தவன் சாப்பிட வந்து அமர்ந்தான்.

ரோஸ் ஆசையாக பரிமாறினாள், ரசித்து கூட சாப்பிடவில்லை ராஜா, சாப்பிட்டு எழும்போது.

"நீங்க நாளைக்கு பிரியா?".

"எதுக்கு கேக்கற?".

"என்னோட பாட்டியை போய் பாத்துட்டு வரலாமா?".

"இப்போ போனா ரிலாக்ஸ்சா இருக்க முடியாது டா புரிஞ்சிக்கோ".

"சரி வீடியோ கால் ஆச்சி பேசலாமா?".

"ம்ம்ம்".

"ரொம்ப தேங்க்ஸ் ராஜா" அவனை நெருங்கி அமர்ந்தால், ராஜா அவளை பார்க்க.

"பாட்டி கண்டு பிடிச்சிடும் என்ன பிடிக்காம கட்டிக்கிட்டீங்கன்னு".

"நான் பிடிக்காம கட்டிகிட்டேனா?".

"ஆமா அப்படித்தான சொன்னிங்க".

"சரிதான்" ராஜாவுக்கு இறுக்கம் தளர்ந்து சிரித்தான்,
இந்த பிரச்சனையில் இருவரும் தங்கள் சுயத்திலேயே இல்லை. எப்போதும் பேசிக்கொண்டு இருப்பவன் அமைதியாகவும் அமைதியாக வேலை பார்த்துக் கொண்டு இருப்பவள், விறுவிறு என்று இவனிடம் பேச கிடைக்கும் சில நிமிடத்தில் மொத்தமாக இடைவிடாமல் பேசிக்கொண்டு இருக்கிறாள்.

ராஜாவுக்கு அவளது வற்புறுத்தல் பேரில் திருமணம் செய்துகொண்டாலும் அவளை மனைவியாக பார்ப்பது பிடித்துதான் இருந்தது.

பிடித்து என்ன பலன் அதனை முழுவதாக மனதில் ரசிக்கக்கூட முடியவில்லை. சிறிது மாதத்தில் நடக்க இருப்பதை நினைத்து கலங்கினான் அவன்.

ரோஸ்க்கு போன ஜென்மத்தில் தான் காதலை கூட சொல்லாமல் அடுத்த கணவன் மனைவியாக ஆக நினைத்த இருவரும் இந்த ஜென்மத்தில் தாலியாவது கட்ட மாட்டானா என்று தான் ரோஸ் அதிரடியாக அன்று ராஜாவை கிட்டத்தட்ட தற்கொலை முயற்சி செய்து திருமணத்தை முடித்தாள்.

சேர்ந்து வாழ்வோமா என்பது தெரியாது அவளுக்கு, ஆனால் அவன் கூட இருக்க வேண்டும் அவ்ளோதான். ஆனால் ராஜாவுக்கு எப்படியாவது தனது உயிரை கொடுத்தாவது மற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம். அவனுக்கு பின்னால் இவளது வாழ்க்கை என்ன ஆவது என்ற பயம் ராஜாவுக்கு இப்போதே தொற்றிக்கொண்டது.

ரோஸ் பாட்டியை பார்த்துக்கொள்ளும் நர்ஸ்க்கு போன் போட்டுட்டு அவர் உடல் நிலையை விசாரித்து, "பாட்டி முழிச்சிட்டு இருக்காங்களா?"

"ஆமா அக்கா முழிச்சிட்டுதான் இருகாங்க".

"சரி சிஸ்டர் பாட்டிய பத்திரமா பாத்துக்கோங்க".

ரோஸ் பாட்டிக்கு அழைத்தாள்.

அவர் ஜாலியாக கொரியன் சீரிஸ் பார்த்துக்கொண்டு இருந்தார்.

"ரோஸ் எப்படி இருக்க, இரு டிவி ஆப் செஞ்சிடறேன்" என்று சீரிஸ் நிறுத்திவிட்டு. பாட்டி பேத்தியை ரசித்து பார்த்தார், புது தாலி நெற்றியில் குங்குமம் என மங்களகரமாக இருந்தாள் ரோஸ்.

"எப்படி டா இருக்க?".

"பாட்டி நான் சூப்பர், என் வீட்டுக்காரர பாரு" என்று ராஜாவை காண்பித்தாள்.

"ரோஸ் சூப்பர் செலக்சன் டா, மாப்பிள்ள ஜம்முனு இருக்கார்".

ராஜாவும் அவரது குழந்தை பேச்சை ரசித்துவிட்டு, அவரது உடல் நிலை பற்றி விசாரிக்க "நீங்க வேற தம்பி எனக்கு ஒன்னும் இல்லை. இவதான் நான் தனியா இருக்கேன்னு ஒரு ஆளு போட்டுட்டு போய்ட்டா, அந்த பொண்ணு செம போறிங். வா சீரிஸ் பாக்கலாம்னு கூப்பிட்டா அட போங்கமா வேலை இருக்குனு துடைத்த வீட்டை திரும்ப திரும்ப துடைச்சிட்டு இருக்கா".

"சரி பாட்டி நான் இனி அவங்கள வீடு துடைக்க வேண்டா, என் பாட்டி ரொம்ப ஹெல்த்தியா இருக்கு அவங்க இனி துடைப்பாங்கன்னு சொல்லிடறேன்".

"அடி பிச்சு, சும்மா பந்தாக்கு சொன்னேன்? முன்பைவிட இப்போ உடம்பு பரவா இல்லை" என்றார் பாட்டி.

"அதான பாத்தேன் சரியான பிராட் பாட்டி நீங்க ஆமாடி உன் கூட சேர்ந்து நானும் பிராட் பாட்டி ஆகிட்டேன் என்ன செய்றது".

"ஈஈ" என்று பாட்டி குழந்தை போல பற்களை பழிப்பு காண்பிக்க. ராஜாவும் சிரிக்க துவங்கியவன், "ரோஸ் உன் பாட்டி செம கியூட் இல்லை".

"என் பாட்டி ஆச்சே என்ன போல கியூட் ஆக தான் இருப்பாங்க" என்று ரோஸ் காலர் தூக்கி சொல்ல.

ரோஸ் சும்மா இருந்தாவே ரசிக்கும் ராஜா, இன்று பாட்டியுடன் சேர்ந்து அடித்த லூட்டியையும் குழந்தையாக மாறி பேசும் ரோஸை ரசிக்க துவங்கினான்.

ராஜா தனது பேத்தியை ரசிப்பதை பார்த்து "ரோஸ் நான் சீரிஸ் பாக்கணும் நான் பிஸி அப்புறம் கூப்பிட்றேன்" என்று போனை வைத்து விட்டார்.

ராஜா அவன் பார்வையை திருப்பிக்கொள்ளவே இல்லை. இவ்ளோ நேரம் நெருங்கி உட்கார்ந்து இருப்பவளுக்கு, முன்பு ஒன்றும் தோன்றவில்லை இப்போது சங்கடமாக நெளிந்தாள்.

"என்னாச்சி நெளியுற, மேடம் தான் ரொம்ப வீர தீர செயல்கள் செய்யும் பெரிய ஆளாச்சே".

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை கையை விடுங்க நான் இன்னும் சாப்பிடல சாப்பிடணும்" எந்திரிக்கும் ரோஸை பிடித்து அவன் கைக்குள் வைத்துக்கொண்டான்.

"எனக்கு உன் வாழ்க்கையை நினைச்சி பயமா இருக்கு ரோஸ்".

"இனி பிரிச்சனை இல்லை, இது நம்ம வாழ்க்கை".

"நான் இல்லனா உன் வாழ்க்கை என்ன ஆகும்".

ராஜா வாயை பொத்திக்கொண்டாள் ரோஸ், "எங்க திரும்ப பிறந்து இருக்கோம் சாக இல்லை வாழ, ஒரு ஜென்மத்துல வாழாத வாழ்க்கையை இந்த ஜென்மத்துல வாழுங்கன்னு கடவுள் கொடுத்து இருக்கார்".

"கொடுத்தவர் அந்த சகுந்தலாவுக்கும் இல்லை வாழ்க்கை கொடுத்து இருக்கார், அவளால எல்லா பிரச்சனையும் திரும்ப வந்து இருக்கு".

"இங்க எவ்ளோ பேரு இருக்க ஒரு வாழ்க்கையை வாழாமல் இறந்து இருப்பாங்க, எல்லோருக்குமா திரும்ப வாழ்க்கை கொடுத்து இருக்கார். நமக்கு கொடுத்து இருக்கார்னா எதாவது சோதனை வரும் அதை தாண்டி வாழுங்க அர்த்தம் புரியுதா?".

"கேட்க நல்லா தான் இருக்கு இருந்தாலும்" ராஜா தயங்க.

"ஒன்னும் இல்லை சரியா போய்டும் புரியுதா".

"பாப்போம் சீக்கிரமா தெரிஞ்சிடும் வாழ்வோமா என்னன்னு".

புதியதாக வந்த வீட்டில் அனைத்து பொருட்களும் எடுத்து வந்துகொண்டு இருந்தார்கள். சாந்தி மட்டும் ஏதோ யோசனையில் இருந்தாள், மிஸ்டர் ஜீரோக்கு வாய் வரை வந்தது' என்னாச்சி உனக்கு' என்று அதனை முழுங்கிகொண்டான்.

'இவட்ட நமக்கு என்ன பேச்சி, உருவம் வேணும்னு நினைக்கறவளுக்கு நான் வேண்டா'.

அக்னி நிலா வசியும் சகுந்தலாவும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த வெறுப்பில் தூங்க போனாள். அதன் பிறகு ருத்ரா, வசி, சகுந்தலா ஒருவர் பின் ஒருவர் அவர்களுக்கு ஒதுக்க பட்ட அறையில் தூங்கச் சென்றார்கள்.

சாந்தி மட்டும் மிஸ்டர் ஜீரோவை ஏற்றுக்கொல்வதா இல்லையா என்ற மன குழப்பத்தில் இருந்த சமயம் ஏதோ தீயும் வாசம் வந்தது.

"என்ன தீ வாசம் வருது எங்க இருந்து வருது" ஒரு ஒரு அறையில் சோதித்து கொண்டு இருக்கும் போது அக்னி நிலா அறையில் தீ கொழுந்து விட்டு எறிந்தது. சாந்தி போட்ட கூச்சலில் அனைவரும் ஓடி வந்தார்கள்.

ருத்ராவும் வசியும் கதவை திறக்க முயற்சி செய்து தோற்றுதான் போனார்கள்.

வேகமாக கதவு திறந்து கொண்டது அக்னி நிலாவை முழு பலம் கொண்டு மிஸ்டர் ஜீரோ அவளை தள்ளி விட்டு சிறு துணிப்போல இருந்த மிஸ்டர் ஜீரோ பெரிய உருவம் எடுத்து அந்த அறையில் இருந்த தீயை அணைத்து மீண்டும் பழைய சிறு துணி போல வந்து சாந்தி காலடியில் சாம்பலாக விழுந்தன்.

சகுந்தலா 'ச்சை இவள அவ்ளோ சீக்கரம் சாகடிக்க முடியாது போலவே' மனதில் மிஸ்டர் ஜீரோவை வதக்கிக்கொண்டு இருந்தாள்.

மிஸ்டர் ஜீரோ கடைசி மூச்சி போது கூட "சாந்தி நான் உன்னை காதலிக்கிறேன்" என்று சொல்லி அதன் இறுதி முச்சை விட்டது.

சாந்தி கண்களில் இருந்த கண்ணீர் மிஸ்டர் ஜீரோ சம்பலில் பட்டு தெரித்தது.

சாந்தி இப்போதாவது உண்மையான காதல் என்று உணர்ந்து கொள்வாளா?

மாயா மாயம் செய்ய வருவாள்…
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
27 மாய நிலா

சாந்தி தன் காலடியில் சாம்பாலாக கிடந்த மிஸ்டர் ஜீரோவை பார்த்து கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்தாள். நீ சின்ன துணியா இருந்தாலும் பரவால்ல நான் உன்ன காதலிக்கிறேன் என்ட திரும்ப வந்துடு" என சாந்தி சாம்பலாக இருக்கும் ஜீரோவை பார்த்து கண்கலங்கி கதறினாள்.

"நான் காதலுக்கு உருவம் இருக்கனும்ன்னு நினைத்தது தவறுதான் என்னை மன்னிச்சிடு. மிஸ்டர் ஜீரோ வந்துடு, திரும்ப வா" என்று அந்த கருகிப்போன துணியை பார்த்து கதறிக்கொண்டு இருந்தாள்.

வசி அருகில் வந்து "சாந்தி கொஞ்சம் பொறுமையா இருமா என ஆறுதல் சொல்ல"

"எப்படி பொறுமையா இருக்குறது சொல்லு, உன்னால திரும்ப செத்துப்போனவனை உயிரோட கொண்டு வர முடியுமா".

"அதான் உனக்கு அவன் துணியா இருக்கான்ல, இது லவ்வே இல்லைன்னு சொல்லிட்டு இருந்த" என்றான் ருத்ரா.

"அப்போ சட்டுன்னு ஒரு ஏமாற்றம், அட்லீஸ்ட் ஜாலி ஆக ஒன்னா வாச்சி எங்களால போக முடியுமா சொல்லு, ஏதோ குழந்தையை தூக்கிட்டு போறது போல அவனை சுமந்துட்டு போனும், நான் அவ்வளவு காதல் வச்சி இருந்தேன், அவன் கொலைகள் செய்து இருந்தாலும்" இவ்வளோ நாள் அவள் மனதில் அழுதுகொண்டு இருந்ததை இன்று பேசி முடித்தாள் சாந்தி.

"சரி அப்படியே இருந்துட்டு போட்டும், இனி அவனை சுமக்கவும் தேவையில்லை நிம்மதியா இருக்கலாம்" என வசி சொல்ல.

"இல்லை நான் முட்டாள் போல பண்ணிட்டேன், எனக்கு மிஸ்டர் ஜீரோ வேணும். நான் பேபி மாதிரி தூக்கிட்டு கூட போறேன், என் போக்குல போட்டு தூக்கிட்டு போவேன்" ருத்ராவையும் வசியையும் பார்த்து அழுதுகொண்டே சொன்னாள்.

'செம லவ்வு, இப்போவாவது புரிஞ்சதே காதலுக்கு உருவம் கூட தேவை இல்லை என்று, இருவரும் இனி சந்தோசமாக இருப்பார்கள் என்று ருத்ரா சாந்தி பின்னால் இருந்த உருவத்தை பார்த்து தான் சாந்தியிடம் பேச்சி கொடுத்தான், அவள் மனம் விட்டு பேச வேண்டும் என்று.

மிஸ்டர் ஜீரோ ஒரு போர்வையில் புகுந்து சாந்தி பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான்.

சாந்தி பின் நின்று அவளை சுரண்டிக்கொண்டிருந்தான், முதலில் அதை கவனிக்காத சாந்தி யாரோ சுரண்டுவது போல தெரிய அந்த கையை தட்டி விட்டவள். திரும்ப மிஸ்டர் ஜீரோ சாந்தியை சுரண்ட சாந்தி கடுப்பில் "ஏன்டா எல்லோரும் என் பீலிங்ஸ்ஸ புரிஞ்சிக்காம" என வேகமாக திரும்பியவள் கண்ணில் அவளது போர்வை ஒரு உருவம் எடுத்து நின்றிருக்க.

சாந்தி முதலில் அதிர்ச்சி ஆனாலும் சுதாரித்தவள் "மிஸ்டர் ஜீரோ" என தாவி அணைத்தவள் அவளது பலவீனம் போகும் வரை சாந்தி அமைதியாக கட்டி அணைத்திருந்தாள். அந்த போர்வையை, சுற்றியிருந்த அனைவருக்கும் இந்த காதலர்கள் இணைந்ததை நினைத்து, மனதில் ஒரு உற்சாகம் வரத்தான் செய்தது, சாந்தியின் இந்த அமைதி மட்டும் அனைவருக்கும் ஏதோ போலானது. மிஸ்டர் ஜீரோ அங்கிருப்பவரின் மனநிலையை மாற்ற. "இருக்கும் போது மெழுகா உருகும்போது தெரியாது, சாம்பலாக ஆனால் தான் தெரியும் இந்த காதல் மங்கைக்கு புரியும்" என மிஸ்டர் ஜீரோ சொன்னதும்தான் வயிற்றில் ஒரு குத்துவிட்டாள் சாந்தி.

"நான் பீளிங்குல இருக்கேன் உனக்கு என்ன பஞ்ச் டயலாக் கேக்குது".

"அம்மா இந்த போர்வை நெஞ்சி தாங்குமா வழிக்குது டி" என நெழிந்துகொண்டு சொன்னான், போர்வைக்குலிருக்கும் மிஸ்டர் ஜீரோ.

"நீ முதல்ல இந்த போர்வையை விட்டு வெளியே வா" என போர்வையின் நுனியை சாந்தி இழுக்க மிஸ்டர் ஜீரோ பதறி அடித்து இரண்டடி தள்ளி நின்றான்.

"ஏய்… என் டிரஸ் எதுக்கு கழட்டற" என பதறினான்.

"நீ இப்படி வேண்டா குட்டியா வா, அது தான் நல்லாயிருக்கு".

"அது எல்லாம் முடியாது பா… எனக்கு இது தான் பிடிச்சியிருக்கு, குட்டியாயிருந்தா ஏதோ குழந்தைய வச்சியிருக்க போல பீல் ஆகும் இப்போ பாரு, ஹக் செய்யலாம்," என மிஸ்டர் ஜீரோ சாந்தியை கட்டிப்பிடிக்க வர சாந்தி தப்பி ஓடினால் இருவரும் இங்கு விளையாடிக்கொண்டிருக்க.

சகுந்தலாவுக்கு மண்டை காய்ந்தது 'இதுங்களை பிரிக்க வந்தால் ஒன்னா சேர்ந்து சுத்துதுங்க, இந்த மிஸ்டர் ஜீரோ யாருன்னு வேற தெரியலை' என சகுந்தலா புலம்பிக்கொண்டிருக்க,
சகுந்தலா அவளது முழு சக்தியையும் வேர் ஆராய்ச்சி செய்தததால் சில மாயமந்தரங்கள் வைத்து தான் உருவம் மாற்றி சுற்றிக்கொண்டிருக்கிறாள்.
அதும் சிறிது காலத்துக்கு மட்டும் தான், அனைவரும் அவர்அவர் இணையோடு சுத்திக்கொண்டிருக்க.

ஆகாஷ், ராஜா மனைவியோடு வந்திருந்தார்கள். சைலு வளைகாப்பு முடிந்த கையோடு ஆகாஷ் கூட்டிவந்துவிட்டான். அவளை தனியாக விடுவது அவ்வளவு நல்லதில்லை என ராஜா சரசு காட்டிலிருந்த அக்னி வீட்டைதான் பாதுகாப்புக்காக அமைத்திருந்தான். ஒரு எறும்பு கூட இவர்கள் அனுமதில்யில்லாமல் வர முடியாத அளவுக்கு கட்டுப்பாடு போட்டிருந்தான்.

ராஜா அனைவரையும் அழைத்து செல்லத்தான் வந்திருந்தான்.
ருத்ராவின் பார்வை அவனையும் மீறி சாந்தியை ரசித்துக்கொண்டிருந்தது.

ருத்ரா அவனது மனதை அடக்கிக்கொண்டிருந்தான் "ருத்ரா இது தப்பு" என்ன தான் சொன்னாலும் ருத்ராக்கு சாந்தியை பிடித்திருந்தது கஷ்டப்பட்டு மனதை ஒரு நிலைக்கு கொண்டுவந்தவன்.

அக்னி நிலாவுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டிருந்தான், அனைத்து பொருளையும் எடுத்து முடித்ததும் ருத்ரா அக்னியை பார்க்க அவளது கண்களில் கண்ணீர் இப்பவோ அப்பவோ என விழுக காத்திருந்தது. அவளது கண் தண்ணீரை துடைத்துவிட்டவன் "எல்லாம் சரியா போயிடும் அதுக்கு தான காட்டுக்கு போறோம். திரும்பி வரும் போது எல்லாம் சரியாகியிருக்கும், என்னை நம்பு என் அழகு மயிலு" என முயலை கொஞ்சுவது போல கொஞ்சினான். முதலில் ருத்ரா மனதில் பேசிய அக்னியும் தன்னுடனிருந்த ரூபி என பெயர்வைத்த அந்த முயலும் ஒன்று என தெரியாது. அனைவருக்கும் பழைய நினைவுகள் வர, அதனுடன் சேர்ந்து பழைய நினைவுகள் வந்திருந்தது. அக்னிக்கு இயற்க்கையாகவே மாய சக்தியிருந்ததால், அவள் எளிதில் கண்டுகொண்டாள் அவளது நினைவுகள் தான் மாயாவாக அழைந்துகொண்டிருக்கிறது என ருத்ராக்கு இந்த விசயம் தெரிய வாய்ப்பில்லை. மிஸ்டர் ஜீரோ அவனது நினைவு, இந்த விசயம் எதும் தெரியாததால் சாந்தி மீதிருந்த ஈர்ப்பை அடக்காமல் வைத்திருப்பான். பாவம் மனதால் நொந்து நூடுல்ஸ் ஆகிட்டான் மிஸ்டர் ஜீரோ லவ்வரை இப்படி பார்த்து வைத்ததற்க்கு மனதால் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

மாயா… திட்டம் இன்னும் இரண்டு தினங்கள் தான் இருக்கு, செய்து முடிக்க வேண்டிய ஒரு காரியம் இருந்தது இன்னும். அது ஆகாஷிடமிருக்கும் ஒரு சாவி அதுயில்லாமல் எதும் நடக்காது. அதற்க்கு முன் இரு நினைவுகளும் தங்கள் உடலுக்கு போனால் தான் சக்தியை உபயோகிக்க முடியும்.

ருத்ராவால் அறிவியல் சக்தியும் அக்னியின் அறிவும்கொண்டுதான் இந்த கும்பலை அழிக்க முடியும் என ராஜா அனைத்து ஏற்பாடும் செய்து சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு நடந்துகொண்டு இருந்தது அக்னி நிலாவின் பழையவீட்டில்.

ராஜாவுக்கு மறைமுகமாக அர்ஜுன், ஆதிரா வீட்டுக்கு இன்னும் பலம் சேர்க்க வேரை வீட்டை சுற்றி பல அடுக்குகள் புதைத்து வைத்தார்கள்.

எப்படியும் சகுந்தலா வசியோடு ஒட்டிக்கொண்டு இங்கு வருவாள் என தெரிந்தது, அதனால் இந்த ஏற்பாடு.

வசியிடம் மட்டும் ஒரு டிரிப் போய்ட்டு வரலாம் என சொல்லிவிட்டு அழைத்து சென்றார்கள். வசிக்கு புரிந்திருந்தது இவர்கள் அனைவரும் சேர்ந்து ஏதோ செய்துக்கொண்டிருக்காங்கன்னு. 'ஏதோ செஞ்சிட்டு போட்டும் ரிலாக்ஸ்சா ஒரு டிரிப் போய்ட்டு வரலாம் என அனைவரும் கிளம்பி வேர் மரத்திடம் வர, வசி அந்த மரம் பக்கம் போகாமல் ஏதோ கால் பேசிக்கொண்டு போக சகுந்தலாவுக்கு வசதியாக போய்விட்டது வசியிடம் ஒட்டிக்கொண்டு வந்துவிட்டாள்.

இவர்கள் மனதில் ஆயிரம் பிரார்த்தனைவைத்து வரும் போது அர்ஜுன், ஆதிரா, மாயாவையும் கூட அழைத்து வந்தார்கள். மாயா வசி கண்களுக்கு மட்டும் தெரியமாட்டாள், பழைய ஜென்மத்தின் நினைவு உள்ளவர்களின் கண்களுக்கு மட்டும் தான் இவள் தெரிவாள் என்பது ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டது.

புதிதாக வரும் இருவரை பார்த்த வசி "யார் இவங்க?"

"நாம் தங்க போர வீட்டுக்கு சொந்தக்காரங்க" என மட்டும் சொல்லி தங்களது துணையோடு நடந்து போனார்கள்.

ஆகாஷ் சைலுவை பூப்போல பிடித்து நடந்தான்.

"ஆகாஷ் இன்னும் கொஞ்ச நாளில் பாப்பா வந்திடுமில்ல".

"ம்ம்" என மனதில் ஆயிரம் குழப்பங்களோடு ஆகாஷ் வர சைலு ஆகாஷின் மனநிலையை புரிந்துகொண்டு.

"நீ ஒன்னும் கவலை படாத நம்ம பாப்பா வரும் போது எல்லாம் சரியாகயிருக்கும்" என ஆறுதல் சொல்ல.

ராஜா ரோஸை ஆசையாக அவனது கண்கள் வருடிக்கொண்டிருந்தது. அவனது பார்வை வீச்சு தாங்காமல் மறுபுறம் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அர்ஜுனும் ஆதிராவும் மாயாவை பாவமாக பார்த்துக்கொண்டு வந்தாள்.

இருவரும் எதுக்கு புக் எடுத்து போனிங்க என ராஜா ரோஸை விசாரிக்கவில்லை, காரணம் அவர்களுக்குதான் அடுத்த நாளே பழைய நினைவுகள் வந்து சிறப்பாக விளக்கம் தந்துவிட்டதே.

வசி, சகுந்தலாவின் கையை பிடித்துவர அருகில் வந்த மாயா இருவரின் இணைந்திருக்கும் கையை பார்த்து சோகத்தில் கண்ணீர் தான் வடிக்க முடிந்தது.

மிஸ்டர் ஜீரோ சாந்தியின் வர்புறுத்தலின் பேரில் ஒரு சிறு பச்சை கர்சிப் உள் நுழைந்துகொண்டு காற்றில் பறந்து வந்தான் சாந்தியிடம் காதல் வசனங்கள் பேசிக்கொண்டு.

மாயா அழுத கண்ணீர் அழுத்தி துடைக்கும் போது ஒரு துளி தெரித்து வசி கன்னத்தில் விழ "மழை வரப் போகுது என குதூகலமாக சென்னான்" அனைவரும் மாயாவையும் வசியையும் மாற்றி பார்த்து பரிதாபப் பட.

சகுந்தலா மட்டும் வன்மமாக சிரித்தாள், மாயா நிலையை பார்த்து.

இப்போது அனைவரது பார்வையும் சகுந்தலா மீதிருந்தது.

'என்ன சிரிக்கரியா? நீ எப்படி உள்ள வரன்னு நானும் பார்க்குறேன்' என்பது போல முன் நின்றார்கள்.

சகுந்தலா அசால்ட்டாக நுழைந்து வந்தாள் அந்த வேரால் எந்த பாதிப்பும் அவளுக்கு ஏற்படவில்லை. அனைவருக்கும் முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் பொருமையாக உள்ளே வந்தார்கள்.

அனைவர் மனதிலும் குழப்பம் வேரின் சக்தி போய் இருக்குமா இந்த குழப்பத்திலேயோ நாட்கள் நகர்ந்தது.

மாயா வசி பக்கமே இருந்தால் மனதில் குமுறல்களோடு 'என் காதல் உனக்கு புரியவில்லையா 'என்பது போல பார்த்து வைத்தாள்.

அனைவருக்கும் முடிவு கட்டும் நாள் வந்துவிட்டது என சகுந்தலா உற்சாகமாக சுற்றித் திரிந்தாள். இந்த வசியால் சகுந்தலாவை யாராலும் நெருங்க விடமுடியவில்லை.

மாயா அனைத்தையும் சரி செய்வாளா?

சகுந்தலாவும் வசி அருகில் வந்து நின்றுகொண்டு வசி வரைவதை பார்க்க. மாயாவும் இங்கு என்ன நடக்குது என வந்து நின்றவள் பார்வையில் விழுந்தது என்னவோ, வசி வரைந்திருந்தை பார்த்து சகுந்தலாவும் மாயாவும் அதிர்ந்து நின்றார்கள்.

மாயாவின் மறைந்துபோன ஒரு உருவம் வரைந்து வைத்திருந்தான். சகுந்தலா அதை பார்த்து, 'ஒருவேலை கண்டுபிடிச்சிடுவானோ' என நினைத்திருக்கும் நேரம் அதிர்ந்த மாயாவின் விழிகள் புன்னகையில் மறைந்திருந்தது. வரைந்து முடித்ததும் தான் வசி கவனித்தான், மனதிலிருந்த மாயாவை வரைந்து வைத்திருப்பதை. வசிக்கு தலை பயங்கரமாக வலித்தது, யாரோ சுத்தியால் மண்டையை பிளப்பது போலிருந்தது. வசி மயங்கும் முன் அக்னி நிலாவையும் அவன் சற்றுமுன் வரைந்திருந்த பெயின்டிங்கும் பார்த்து குழப்பத்தோடு சேர்ந்து மயங்கி சரிய.

அனைவரும் இங்கு நடக்கும் கலவரம் தெரிய வசியை பார்க்க ஓடி வந்தார்கள்.

மாயா, அர்ஜுன், ஆதிரா மூவரும் அக்னி நிலாவையும், ருத்ரா, மிஸ்டர் ஜீரோவை அவர்கள் ஏற்கனவே வரைந்து வைத்திருந்த ஒரு மாய வட்டத்தில் தள்ள கடைசியாக மாயாவும் உள் நின்றாள். பிரிந்திருந்த நினைவுகளோடு ஒன்றாக சேருவதை பார்த்து சாந்திதான் அதிர்ந்து நின்றாள்.

ருத்ராவும் மிஸ்டர் ஜீரோவும் ஒன்னா என்பது போல.

சகுந்தலா வசியை பார்த்துக்கொண்டிருக்கும் போது இது அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.

சகுந்தலாவிற்க்கு உள்ளுணர்வு ஏதோ தவறு நடப்பது போல சொல்ல வெளியேயே எட்டிப் பார்க்க அதிர்ந்திருந்தாள். அவள் தடுப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.

அனைவரும் ஒன்றாக நின்று சகுந்தலாவை கேலியாக பார்க்க சகுந்தலாவிற்க்கு ஆத்திரம் பொங்கியது. யாருக்கோ போன் போட்டு "எல்லாம் தயாராயிருக்கா சரி உள்ள வாங்க இன்னும் ஒரு மணி நேரத்தில் எல்லாத்தையும் முடிக்கனும்" என சொல்லி நின்றிருந்த அனைவரையும் பார்த்து "என்ன எல்லாம் ஒன்னா சேர்ந்துட்டிங்க போல. அதுக்கு நான் விட மாட்டேன்" என சகுந்தலா அகங்காரமாக சிரிக்க.

அவளது கொடுர சிரிப்பு அனைவருக்கும் ஒரு செய்தி சொன்னது என்னவோ உண்மைதான் பெரிய திட்டம் வைத்திருப்பது நன்றாக தெரிந்தது அனைவருக்கும். அனைவரும் சுதாரிக்கும் முன் ஒரு ஐம்பது பேர் பக்கம் சுற்றி வளைத்தார்கள்.

ராஜா அதிர்ந்தான் இவ்வளவு பாதுகாப்பு மீறி எப்படி உள்ளே நுழைந்தார்கள் என. இவர்களில்லாமல் இன்னும் சிலர் சுற்றிவளைத்து அனைத்து பாதுகாப்பையும் தகர்த்துக்கொண்டிருக்க.

வசி எழுந்திரிக்காத வகையில் சகுந்தலா மயக்க மருந்து கொடுத்திருந்தாள்.

அக்னி, ருத்ராக்கு சில சக்திகள் கிடைத்திருந்தது அவர்களின் நான்னைவான மாயா மற்றும் மிஸ்டர் ஜீரோவிடமிருந்து ஆனால் இவ்வளவு பேரை சமாளிக்க முடியாது.

ராஜா முன் வந்து "இப்போ உனக்கு என்ன வேணும்? இங்க இருப்பவர்களை எதும் செஞ்சிடாத என கெஞ்சினான்.

ருத்ரா, அர்ஜின், ஆகாஷ் அருகில் வந்து ராஜா "இவகிட்ட எதுக்கு கெஞ்சிட்டுயிருக்க நாம் தயாரித்து வைத்தது ஒரு துளி இவள்மிது பட்டால் போதும் பொசுங்கிடுவா" என இங்கு இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ரோஸ் அவளை தாக்க அந்த திரவத்தை எடுத்துவந்து ருத்ராவிடம் கொடுக்க அக்னி நிலாவும், ருத்ராவும் கை கோர்த்து ஏதோ மந்திரம் உச்சரித்து அந்த திரவத்தை தெளிக்க சகுந்தலாவிற்க்கு உடல் எரிய ஆரம்பித்தது அனைவரும் கொஞ்சம் ஒதுங்கி நின்றார்கள் அந்த வட்டத்தைவிட்டு.

சகுந்தலா எரிந்த உடலோடு மயங்கி சரிய அனைவரின் மனதிலும் ஒரு மகிழ்ச்சி, கூட ஒட்டிவந்தது விட்டுத்தொலைந்தது என அவர்கள் சந்தோஷத்துக்கு ஆயுசு குறைவு போல, சாம்பலாக இருந்த சகுந்தலாவின் உடல் மீண்டும் ஒன்றாக சேர்ந்து பழைய உருவத்திற்க்கு வந்திருந்தாள்.

சும்மா நின்றிருந்த ஐம்பது பேரும் சுற்றி வளைத்தார்கள், சகுந்தலா அகங்காரமாக சிரித்து "என்னை அவ்வளவு சீக்கிரம் ஒன்றும் செய்ய முடியாது."

மாயா மாயம் செய்ய வருவாள்.
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
28 மாய நிலா

"என்ன எல்லோரும் முழிச்சிட்டு இருக்கிங்க, உங்க வேர் சக்தியால என்னை இனி ஒன்னும் செய்ய முடியாது. அந்த வேரிடமிருந்து தப்பிக்கும் பார்முலா நான் சிறப்பா கண்டுபிடிச்சிட்டேன். அதுமட்டுமில்ல இனி அந்த வேரின் முழு சக்தியும் எனக்கு கிடைச்சிடுச்சி" என அனைவருக்கும் அடுக்கடுக்காக அதிர்ச்சி கொடுத்துக்கொண்டிருந்தாள் சகுந்தலா.

இவர்களிடமிருக்கும் ஒரே விடை வசி மட்டும்தான் மூவரின் நினைவுகளின் சக்திகொண்டு போராடலாம், ஆனால் வசி சில மணிநேரம் எழுந்திரிக்காதவாறு சகுந்தலா செய்து வைத்திருந்தாள். திக்கு தெரியாத காட்டில்விட்டது போல அனைவரும் முழித்துக்கொண்டிருந்தார்கள்.

சகுந்தலா ஏற்கனவே பாதுகாப்பு வளையத்தை விட்டு அனைவரையும் வெளியே அனுப்பியிருந்தாள். அவர்களுக்கே தெரியாமல் அனைவரும் திக்கி தினறிக்கொண்டிருக்க சைலு வசியை எப்படியாவது எழுப்பிடலாம் என வசியிருக்கும் அறையை நோக்கி போக, சகுந்தலா கண்ணில் சைலு பட, சகுந்தலா ஒற்றை விரலை அசைத்து அவளை தூக்கி சுவற்றில் அடித்தாள். சகுந்தலா கொஞ்சம் கூட இறக்கமில்லாமல் நிறைமாத கற்பினியை அப்படி தூக்கியடிக்க, அனைவரும் தங்கள் கையாலாகாத தனத்தை நினைத்து மனதால் மறுத்துப்போனார்கள். ஆகாஷ் சைலு வலியால் துடிப்பதை பார்த்து பதறி அவள் அருகில் ஓடிப்போக எந்திரிக்கும் முன் சகுந்தலா மாய கயிறால் ஆகாஷை கட்டிப்போட்டிருந்தாள். அவனால் ஒரு இன்ச்கூட நகர முடியாமல் இருந்தயிடத்தில் நின்றான். ரோஜா, ஆதிரா அருகில் போக பார்க்க அவர்களையும் தூக்கி விசி அடித்தாள். சகுந்தலா இவர்களை ஒரு மூலையில் லாக் செய்து வைத்திருந்தாள் அந்த கொடுரமான அரக்கி.

ராஜா, அர்ஜுன் சகுந்தலா செய்யும் செயலை பொறுக்க முடியாமல் சகுந்தலாவை ஆயுதம் வைத்து தாக்க, சகுந்தலா அசையாமல் நின்றிருந்தாள் சிலை போல. அவள் உடலில் சென்ற ஆயுதத்தால் அவளுக்கு ஒரு காயமும் வரவில்லை.

"இனி எனக்கு அழிவேயில்லை மொத்த வேரின் சக்தியும் இப்போது என்னிடத்தில் இந்த சகுந்தலாவுக்கு அழிவு என்பதே கிடையாது இனி" என அகங்காரமாக சிரித்தவள் இருவரையும் முடக்கி ஒரு இடத்தில் தள்ளிவிட்டாள்.

அந்த ஐம்பது பேரும் ஏதேதோ மந்திரம் ஓதிக்கொண்டிருக்க.

ஆகாஷின் கழுத்திலிருந்த சாவியை எடுத்து அர்ஜுனிடமிருந்த புத்தகத்தை திறந்தான். இரண்டு புத்தகம் ஒன்று வேர் மரத்திடம் இன்னொன்னு அந்த புதைந்திருந்த மாய கோட்டையில். மாயக்கோட்டையிலிருந்த புத்தகத்தில் முழு மாய சக்தி பெற சில குறிப்புகளை அந்த ஐம்பது பேரும் ஒன்றாக ஜபித்துக்கொண்டிருந்தார்கள். அக்னி நிலா, ருத்ரன் என்ன நடந்தாலும் சரி இணைத்திருந்த கைகளை விடக்கூடாது. ஒருவர் பிரிந்தாலும் இருவரால் சக்தியை உபயோகிக்க முடியாது என சுற்றி நடக்கும் கொடுற செயலை பல்லை கடித்துக்கொண்டு நின்றிருக்க. சகுந்தலாவின் திட்டப்படி அந்த பார்முலா கூட மாய சக்திகள் கலந்து அந்த வேரின் தன்மையை முற்றிலும் மாறி அளவில்லாத சக்தியை தன்வசம் இழுத்துக்கொண்டிருந்தாள்.

சகுந்தலா அக்னி நிலாவிடமிருந்த 16 தனி தனி வேல் போலிருந்த பாகங்களை ஒன்றாக வைக்க அது காந்தம் போல ஒட்டி ஒரு உருண்டை சாவி போலானது, இடையில் ஒரு துவாரமிருக்க அதில் அக்னி அந்த ஜன்மத்தில் உபயோகித்த பரம்பரை பொக்கிசத்தை இடையில் சொருக அந்த சாவி மின்னியது.

சக்தியை எடுத்துவிட்டு விட்டுவிடுவாள் என நினைத்த அனைவருக்கும் அதிர்ச்சி தருவது போல ஒரு செயல் செய்தால்.

அந்த சாவி மிக சக்திவாய்ந்தது கேக்கும் அனைத்தும் அந்த நொடியே கிடைக்கும். இது அக்னி நிலாவின் பரம்பரை பாதுகாத்து வந்தது, இக்கட்டான சூழலில் தேவதைகள் அதை சரி செய்ய தேவலோகத்திலிருந்து வரவைக்கலாம். அதே போல அழிக்கவும் நரகத்திலிருந்து வித்தியாச சக்திக்கொண்ட அரக்கிகளையும் அசுரர்களையும் அழைத்துவரவைக்கும் அந்த சாவி.
அந்த சாவியை தூக்கிப்போட்டு ஏதோ மந்திரம் சொல்லிமுடித்து வரம் கேக்கும் சமயம் வசி எழுந்து வந்தான்.

"என்ன எல்லோரும் விளையாடிட்டு இருக்கிங்களா?".

சகுந்தலாவிற்க்கு பலத்த அதிர்ச்சி இவன் எப்படி எழுந்து வந்தான் சகுந்தலா சமாளிக்க வாய் திறக்கும் முன் ருத்ரா நொடி பொழுதில் ஒரு ஐடியா செய்து.

"ஆமா வசி இந்த பால் லைட் அனையரத்துக்கு முன்னாடி, அவங்கவங்க மனசுலயிருக்க விசயத்தை வேண்டிக்கனும் கடைசியா யாரு அதிகமா ஒரே போல வேண்டிக்கிராங்களோ அவங்க எல்லோரும் ஒரு டீம் வேண்டிக்க ஆரப்பிக்கலாமா?" என ருத்ரா விசமமாக சகுந்தலாவை பார்க்க.

சகுந்தலாவிற்க்கு அவளது ஆனவம் கொஞ்சம் கூட குறையாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். 'எப்படியிருந்தாலும் வசி என் பக்கம் தான்' என அசையாத நம்பிக்கையோடு நின்றிருந்தாள் சகுந்தலா அதற்க்கு அடிபோடும் வகையில்.

"வசி நீங்க என் பக்கம் தானே?" என ஆசையாக நஞ்சு உள்ளத்தோடு கோட்டாள்.

"நான் எப்பவும் என கனவு தேவதை பக்கம் தான்" என்று சகுந்தலாவிற்க்கு வாக்குறுதி கொடுத்தான் வசி.

"சரி போட்டி ஆரம்பிக்கலாமா?" என ருத்ரா சகுந்தலாவை தோற்க்கடிக்க துடித்துக்கொண்டிருந்தான்.

சுற்றியிருந்தவர்கள் வேதனையில் துடிப்பது வசிக்கு தொரிந்தால் காரியம் கெட்டுவிடும். கூடயிருப்பவர்கள் மற்றும் அந்த மந்தாரவாதிகள் என அனைவரையும் வசியின் பார்வையிலிருந்து மறைத்திருந்தாள், சகுந்தலா அந்த மாயாஜாலத்தின் உதவியோடு.

அந்த ஐம்பது பேரும் சுற்றி நின்றிருக்க ருத்ரா அவனிடமிருக்கும் இரண்டாவது புத்தகத்தை எடுத்து, அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தான் ருத்ரா. என்னதான் சகுந்தலா அறிவாளியாகயிருந்தாலும் இந்த புத்தகத்தை பற்றி மறந்திருந்தாள். ஒரு முறை அந்த புத்தகத்தின் விதிமுறையை பார்த்திருந்திருந்தால் இந்த விளையாட்டையும் சக்தியை பற்றியும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். அனைத்தும் மாயாவின் விளையாட்டு, முதலில் சக்திகளை பெற குறிப்புகளில் இருக்கும் புத்தகத்தை காட்டி அவளுக்கு மதியிழக்க செய்திருந்தாள்.

இவள் அழிவு ஒன்றுதான் இவர்களுக்கு வாழாத வாழ்க்கையை திருப்பி தர முடியும்.

ருத்ரா புத்தகத்திலிருக்கும் போட்டி விதிகளை படிக்க துவங்கினான்.

"இந்த போட்டி யாரும் யாருடனும் கலந்து பேச கூடாது, எந்த மந்திர சக்தியோ அதன் சார்ந்த நபர்களை இங்கிருந்து முதலில் அப்புறப்படுத்த வேண்டும்" ருத்ரா சகுந்தலாவை நக்கலாக பார்த்து சிரித்தான்.

அந்த சக்திவாய்ந்த பந்து கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். தவறான பதில் முதலில் கலந்துகொண்டவர்களின் மந்திர சக்தியை சிறிது சிறிதாக எடுக்கும், நல்லவர் வெல்லுவார்கள் தீயவர்கள் அவர்களின் பிறவி பலன் அடைவார்கள்" என ருத்ரா படித்து முடிக்க, அனைவரையும் மந்திரக்கட்டுகளிருந்து சகுந்தலா விடுவித்து, அவர்களை சுற்றியிருந்த மந்திரவாதிகளை கிளம்ப சொல்லிவிட்டாள் வசி கண்களுக்கு தெரியாததாலா "என்ன சகுந்தலா தனியா பேசிட்டிருக்க இங்க யாருமில்லையே".

"அது சும்மா விளையான்டேன்" என கேவலமாக நடித்தாள்.

துடித்துக்கொண்டிருந்த ஆகாஷ் சைலுவை நெருங்க வயிற்றில் அடிப்பட்டதால் வலியால் துடித்துக்கொண்டிருந்தாள்.

ரோஸ், ஆதிரா குழந்தை சிறிது நேரத்தில் பிறந்துவிடும் தேவையான ஏற்பாடுகள் செய்ய ராஜாவும் ஆகாஷ் சைலுக்கு ஆதரவாக நின்றிருந்தார்கள்.

சாந்தி ருத்ராவைதான் பார்த்திருந்தாள், 'எப்படியாவது, எல்லாத்தையும் சரி செஞ்சிட்டு என்கிட்ட வந்திடு மிஸ்டர் ஜீரோ' என கண்களால் ருத்ராக்கு செய்தி அனுப்ப.

நிசப்த அமைதி அந்த ஒளி பந்து பேசத் துவங்கியது.

"ஒரே கேள்வி உங்கள் எண்ணம் போல அந்த பதில் உங்களுக்கான வாழ்க்கையை கொடுக்கும்".

சகுந்தலா உறுதியாக இருந்தாள்.

"உங்கள் வாழ்வில் மிக முக்கியமானவர்கள் யார்?".

மனதில் ஒரு பெயரை சொல்ல வசி, அக்னி நிலா, ருத்ரா மூவரின் மீது ஒரு ஒளி கோடு இணைக்க, அந்த பந்து பேசத் துவங்கியது

"சகுந்தலா உன் முடிவு உன் முன்னால்" என சொல்லி அக்னியின் கைகளில் அந்த பந்து பந்தமாக அமர்ந்துக்கொண்டது.

சகுந்தலாவால் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

"வசிகரா என்னை ஏமாத்திட்டயில்ல?" என ஆக்ரோசமாக கத்தினாள்.

"யாரு நான் ஏமாத்தினனா, என் மாயா தான் பிடிக்கும்னு உன்மையை தான் நினைத்தேன்" என வசி அக்னி நிலாவின் தோல்மீது கை போட. அங்கிருப்பவர் அனைவருக்கும் அப்படி ஒரு ஆனந்தம் வசிக்கு நியாபகம் வந்ததால் தான் அனைத்தும் சரியாகியது என ருத்ரா அக்னி நிலாவுக்கு தெரியும். வசி மாயாவை தான் நினைப்பான் அந்த மாயா அக்னி நிலா நாம் தான் வின் செய்வோம் என அவர்களுக்கு தெரியும். இருந்தும் அனைவருக்கும் ஒரு பயம் வரத்தான் செய்தது, வசி சகுந்தலாவை நினைத்துவிட்டாள் என்ன செய்வது என.

வசிக்கு அனைத்தும் நியாபகம் வந்துவிட்டதா என அவனை பார்க்க.

சைலு குழந்தை இந்த பூமிக்கு வர துடித்துக்கொண்டிருந்தான், சைலு வலி பொறுக்காமல் கத்த.

அனைவரும் ஒரு பக்கமிருப்பதை பார்த்த சகுந்தாலாவுக்கு அவள் பெற்ற சக்திகள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக்கொண்டிருந்தவள் மிருகமாக மாறியிருந்தாள்.

அவளது கோபத்தில் முதலில் வீக்காக இருக்கும் சைலு மேல் உபயோகிக்க பிரசவலியுடன் சேர்ந்து கொண்டவள், கை அசைத்து குழந்தையை கருவில் அழிக்க முயற்சி செய்துகொண்டிருக்க, அனைவரும் சகுந்தலாவை திசை திருப்ப, அருகில் வந்து வசி. நக்கலாக சிரித்தான் "என்ன சகுந்தலா என்னை முட்டாள்ன்னு நினைச்சியா எனக்கு ஆரம்பத்திலிருந்து உன் மேல சந்தேகம்?" சகுந்தலா அதிர்ந்து நின்றாள்.

"உன் மந்திரத்தையும், தந்திரத்தையும் வைத்து மறைக்க தெரிந்த உனக்கு அக்னி மோதிரம் வைத்து தொடுவது கூடவா எனக்கு உணர்த்தியிருக்காது?".

"எல்லாம், சரியா செய்த நீ உன் முகத்தை மறைக்க மறந்துட்ட".

"அதான் மாயா முகம் நீ பார்த்ததில்லையே?" என சகுந்தலா கோபத்தோடு கத்தினாள்.

"மாயா முகம் பார்த்தில்லை, ஆனா மாயாவின் உதடும் அதன் கீழிருக்கும் மச்சத்தை பார்த்திருக்கேன். அதுமட்டுமில்லை, நீ கொலை செய்த பி.எ வீட்டில் உருமாறி வந்ததும் நீ தான்னு எனக்கு தெரியும். எதிரியை கூடவே வைத்துக்கொள்ளத்தான் இந்த நாடகம்".

"அப்போ உனக்கு முன்னவே தெரியுமா நடிச்சி என்னை ஏமத்திட்டியா வசி" என சகுந்தலாவின் கோபம் எல்லையை கடந்தது.

"எனக்கு எதும் நியாபகம் வரலை என் பிரண்ட்ஸ் சொன்னதை நம்பாத அளவுக்கு நானிருப்பேன்னு நினைத்தது உன் முட்டாள் தனம்" என வசி வெற்றிப்புன்னகை வீசினான்.

"ஆனா அக்னியை வரைந்த அப்போ எனக்கு மொத்தமா நியாபகம் வந்துடுச்சி என குதுகலித்தான் நல்லவங்ககிட்ட நடிக்க கூடாது, ஆனா சூழ்ச்சியை சூழ்ச்சியால் தான் வெல்லமுடியும்" என வசி பேசிக்கொண்டிருக்கும் போது. சற்றுமுன் சைலு குழந்தையை கருவில் கொல்ல நினைத்ததை இப்போது செயல்படுத்தத் துவங்கினாள் சகுந்தலா.

ருத்ரா,வசி, அக்னி நிலா மூவரும் கையை கோர்த்து மூவரின் மொத்த சக்தியையும் உபயோகித்து சகுந்தலா சைலுவை துன்புருத்துவதை தடுக்க முயற்சி செய்துக்கொண்டிருக்க, சகுந்தலாவின் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்திருந்தாலும் அவள் முழு பலத்தை பயன்படுத்தி ஒரு கையால் இவர்கள் மூவரையும் சமாளித்து ஒரு கையால் சைலுவை துடிக்கவைத்துக்கொண்டிருந்தாள்.

கோபம் வந்த மூவரும் சகுந்தலாவை தள்ளிவிட்டு சைலுவை காப்பாற்ற, ஆகாஷ் துடித்துக்கொண்டிருந்தான். ராஜா மனதால் இறந்திருந்தான் அனைவரையும் காப்பாற்ற நினைத்து இங்கு வந்து அனைவரையும் இப்படி சிக்க வைத்துவிட்டேனே என கண்களில் நீர் கோர்த்தது, ரோஸ் ராஜாவை ஆதரவாக கைபிடித்து நின்றிருக்க.

மூவரும் சகுந்தலாவை சமாளித்துக்கொண்டிருக்க சகுந்தலாவிற்க்கு சக்தி குறைந்துக்கொண்டேயிருந்தது. இருந்தாலும் சகுந்தலா முழு பலத்தை பயன்படுத்தி மூவரையும் தள்ளிவிட, சைலுவை துடிக்க வைத்திருந்தாள் சகுந்தலா. சைலு கதறிக்கொண்டிருக்க அனைவரையும் மாய கட்டு போட்டு கட்டிவைத்தாள், சைலு தனியாக துடித்துக்கொண்டிருக்க, யாராலும் சைலுவுக்கு ஆதரவாக கூட கையில் பிடிக்க மூடியவில்லை.

அக்னி நிலா ஆத்திரத்தில் அந்த மாய கட்டை கழற்றிவிட்டாள். சைலு துடிப்பதை பார்த்து அனைவரும் துடிப்பதை பார்த்து சகுந்தலா ரசித்துக்கொண்டிருந்தாள். "ச்சே விடியோ எடுக்க, என் பி. எ யில்லை சும்மாயிருக்காம அக்னி பத்தி சொல்லிவிடுவேன்னு என்னவே மிரட்டினான் அதான் என் கையால போட்டுத்தள்ளிட்டேன்".

வசி ஆத்திரமாக கத்தினான் "சைலுவை விட்டுவிடு" என.

அக்னி மந்திர கட்டை உடைத்திருந்தாலும் இன்னும் முழுமையாக அதிலிருந்துவிடுபட முடியவில்லை. சகுந்தலா சைலுவை துடிதுடிக்கவைத்துக் கொண்டிருக்க, "இப்போ இவளை கொல்லப்போறேன்" என சைலுவின் கழுத்தை பிடித்து நெருக்கினாள்.

அக்னி கஷ்டப்பட்டு அந்த கடைசி கட்டை அவிழ்த்து போகும் போது துடித்துக்கொண்டிருந்த சைலுவின் வயிற்றை பிடித்து அழுத்திக்கொண்டிருந்தாள். சைலுவின் கதறலை அங்கிருந்தவர்களின் யாராலையும் சமாளிக்க முடியவில்லை, ஆளுக்கு ஒரு பக்கம் துடித்துக்கொண்டிருந்தனர்.

அக்னி கட்டை அவிழ்த்து உள்ளே வருவதற்க்குள் சைலு கதறலோடு அவளது குழந்தை பிறந்திருந்தது, எந்த அசைவுமில்லாமல்.

மாயா மாயம் செய்ய வருவாள்…
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
29 மாய நிலா

சைலுக்கு ஆறுதலாக கையைபிடித்து அருகில் கூடயில்லாத தன் நிலையை எண்ணி ஆகாஷின் இதயத்தில் உதிரம் வழிந்தது. சாதாரணமாகவே கணவன்களால் மனைவியின் பிரசவ கதறல்களை தாங்க முடியாது. அந்த ஆண் மகன் எப்படிப்பட்ட வீரானாகவோ கல் நெஞ்சம் கொண்டவனாகவோ இப்படியிருப்பவர்களைக் கூட கறையவைத்துவிடும் இந்த கதறல்கள். சுற்றி நடக்கும் கொடுரத்தை தடுக்கக்கூட முடியாத நிலையிலும் ஆளுக்கு ஒரு பக்கம் "இறைவா இந்த அரக்கியை அடக்க உனக்கு இப்போதும் மனம்வரவில்லையா?" என கடவுளிடம் சண்டையிடுவதை தவிற என்ன செய்ய முடியும்?

சைலுவை சகுந்தலா ஒரு சுழற்று சுழற்றி தூக்கி எறிய இருக்கும் வலியில் இதுவும் சேர்த்துக்கொண்டு சைலு துடித்தாள். தன் அன்னையின் வலியையும், கஷ்டத்தை குறைக்கும் விதமாக குழந்தை பிறந்தது இறந்த நிலையில்.

தன் குழந்தையிடம் அசைவுயில்லாததால் சைலு கதறிவிட்டாள்.

குழந்தையை கையிலேயெடுத்து "தங்கம்… அம்மாவ பாரு டேய், அம்மாட்ட விளையாடுறியா போதும் எந்திரி. நீ வருவன்னு அப்பா உனக்கு டாய்ஸ், டிரஸ் எல்லாம் நிறைய வாங்கி வச்சி இருக்கார்" என தன் குழந்தையை மார்பில் அணைத்துக் கொண்டு கதறினாள் சைலு.

சுற்றியிருந்தவர்களின் கண்களில் கோபம் ஆத்திரம் என கலந்த கலவையில் சகுந்தலாவை பார்க்க, அவள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து அவர்கள் வேதனையை ரசித்துக்கொண்டிருந்தாள்.

அக்னி நிலா மந்திர கட்டுகளை கழற்றிவிட்டு வருவதற்குள் சைலுவை தூக்கி எறிந்த அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்தாள், தன்னால் தானே இந்த உயிர்கள் துடித்துக்கொண்டிருக்கிறது" என மனம் வருந்திப் பேய் பிடித்தவள் போல சகுந்தலாவை பார்த்திருந்தாள்.
சகுந்தலா சைலுவை நோக்கி வந்து குழந்தையை சைலுவிடமிருந்து பறித்தாள்.

"ஏய் என் குழந்தையை கொடு" சைலுவால் எழுந்து நிற்க கூட முடியாமல் சகுந்தலாவை நெருங்கி குழந்தையை பிடித்து இழுக்க.

குழந்தை உடலில் ஒரு துடிப்பு ஏற்ப்பட்டது, தன் அன்னையின் உடல் சூட்டிலிருந்து பிரிந்ததால் போல.

வீல் என ஒரு கத்தல், அதனின் குட்டி வாயிலிருந்து இவ்வளவு சத்தமா என்பது போலிருந்தது அந்த சத்தம்.

அங்கிருந்தவர்களுக்கு இப்போது தான் உயிரே வந்திருந்தது அதை கொடுக்கும் வகையில் சகுந்தலாவின் அடுத்த செயலிருந்தது.

குழந்தையை தலைகீழாக தூக்கி பிடித்து ஒரு சுழற்று சுழற்றி சுவற்றில் எறிந்தாள்.

"என்ன எல்லாம் சந்தோஷப் படுறிங்க போல, அப்படி எல்லாம் உங்களை விட மாட்டேன். இப்போ பாருங்க ரத்தம் தெறிக்க உங்க குடும்பத்தோட முதல் வாரிசு என் கையால சாகப்போவதை" என தூக்கிவீச இவ்வளவு நேரம் சுயநினைவுயில்லாமல் கிடந்த அக்னி நிலா ஆத்திரத்தில் சகுந்தலாவின் கழுத்தைபிடித்து மிஞ்சியிருந்த அவளது சக்தியை உறிஞ்சிக்கொண்டிருந்தாள். சகுந்தலாவின் சக்தியை குறைக்க குறைக்க இங்கு மந்திரக் கட்டு பலமிழந்து கொண்டிருக்க அந்த கட்டு பலவீனமாவது தெரிந்து அனைவரும் அதிலிருந்து விடுபட்டு குழந்தையை காக்க ஓடினார்கள். குழந்தை சுவற்றில் மோத ஒரு இன்ச் இடைவெளியில் அனைவரும் குழந்தையை பிடிக்க ஆளுக்கு ஒரு திசையிலிருந்து ஓடி வந்தார்கள் அதற்குள் குழந்தை நழுவி சென்று மிதக்கத் துவங்கியது.

அனைவரும் ஆச்சரியமாக குழந்தையின் செயலை பார்க்க குழந்தை தன் கை கால்களை அசைத்து சைலு அருகில் வந்தது அந்தரத்திலிருந்து. கண்ணீர் கடலில் மூழ்கியிருந்த சைலு தன் குழந்தை சுவற்றில் மோதி சாவதை பார்க்க சக்தியில்லாமல் கண்களையும் காதையும் இறுக்கி மூடியிருக்க குழந்தை அழைத்ததை அம்மா பார்க்கலை "ங்க" என தொடர்ந்து அழைத்தது.

சைலு குழந்தை அருகிலிருப்பது போல தோன்ற கண்களில் ஒரு நடுக்கம், மனதில் ஒரு ஆசை குழந்தை திரும்ப என்னிடம் வர வேண்டும் என தாயுள்ளம் பதறியது. கண்களை மெதுவாக திறக்க, குழந்தை சைலுவை பார்த்து பறந்தவாறு கையை நீட்ட தாவி அணைத்துக்கொண்டாள். ஆகாஷும் சைலு அருகில் வந்து அமரந்துக்கொண்டான். குழந்தை பெரிதாக அவன் வாயை திறந்து தாய்க்கு ஒரு செய்தி சொன்னது. "மா… ஒரே டயர்ட் தூக்கம் வருது" என குழந்தையை அணைப்பாக பிடித்து கொண்டிருக்கும் சைலுவை பார்த்ததும் தான் அனைவருக்கும் ஒரு நிம்மதி பிறந்திருந்தது. பக்கத்தில் பயங்கர சத்தம் வருவதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியிலிருந்தார்கள்.

சாந்தமாக தன்னுடன் வலம் வந்துகொண்டிருக்கும் அக்னி நிலாவா இது.

நிலாவின் குளுமையுடன் சுற்றிக்கொண்டிருப்பவள் அனைத்தும் பொறுத்துப்போனவளால் குழந்தைக்கு இப்படி ஆனதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கோபத்தில் அக்னி குழம்பமாக மாறி சகுந்தலாவின் சக்தியை உறிஞ்சி தூக்கிப் போட்டு கால்களை சகுந்தலா கழுத்தில்வைத்து அவள் சாகும் வரை அக்னி நசுக்கிக்கொண்டிருந்தாள்.

சகுந்தலா உயிர் பிரியும் ஒரு நொடி முன் சைலு கைகளிலிருந்த பூக்குவியலை பார்த்து, உயிர் பிரிக்கும் மந்திரம் உபயோகித்து இறந்தாள் கொடுரமாக.

அக்னி அந்த உயிர் பிரிக்கும் மந்திரம் சைலு குழந்தைக்கு அருகில் செல்வதற்க்குள் தன்னுள் வாங்கிக்கொண்டு. அனைவரையும் ஒரு பார்வை பார்த்து. "மிஸ் யூ" வசி அக்னி நிலா உடலில் உள்ள அனைத்து சக்தியும் வடிந்து சாய, வசி துடிதுடித்து அருகில் வந்து கையில் ஏந்த "லவ் யூ வசிகரா" என மயங்கி சரிந்தாள்.

அனைவரும் கதற துவங்கினார்கள் அர்ஜுன், ருத்ரா அவர்களிடமிருந்த வேரைக் கொண்டு வந்து அக்னி கையில் கொடுக்க சகுந்தலா செய்த சதியால் அந்த வேர் தன் தன்மையையிலந்திருந்தது இது வேலைக்கு ஆகாது என,

ஆகாஷ் அக்னி நிலாவை தூக்கிக்கொண்டு அந்த மரமிருக்கும் இடத்தை நெருங்கும் முன் பலத்த மழை நிறைய தடங்கள்கள் வழியில் மரம் சரிந்திருக்க அர்ஜுன் மாற்று பாதையில் தூக்கிப் போக அந்த பாதை வழக்கத்தை விட நீண்டுக்கொண்டே இருந்தது.

ராஜா, அர்ஜுன், ஆகாஷ் மாற்றி மாற்றி தூக்கிக்கொண்டு ஓட வசி அக்னியை தன் கரத்தில் கொடுக்காமல் மூவரும் மாற்றி மாற்றி தூக்கிச்சென்றார்கள்.

வசிக்கு சகுந்தலா கொடுத்த மயக்க மருத்து சிறிது உட்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த காரணத்தால் வசி கைகளில் கொடுக்காமல் இவர்கள் அந்த புயல் மழையில் தல்லாடிச் சென்றார்கள்.

வசி துடித்தான் தன் தேவதையை தன் கைகளில் தர மறுக்கிறார்கள் என அந்த வேர் மரத்திடம் போய் பார்க்க அனைவரும் அதிர்ந்தார்கள்.

சைலு யார் சொல்லியும் கோட்காமல் பச்சக் குழந்தையை அந்த கொட்டும் மழையில் துணிகளை சுற்றி அனைவரின் பின்னாலும் வலி பொறுத்துக்கொண்டு ஓடி வந்திருந்தாள்.

இவ்வளவு கலவரத்தில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்த சைலு ஆகாஷ் குழந்தை எழுந்து அதன் பஞ்சு கைகளை நீட்டி அங்கு சகுந்தலாவால் எறிந்துக்கொண்டிருக்கும் மரத்தை பார்த்து "ங்க" என தாவி குதித்து பறந்து சென்றது சைலுவின் குழந்தை.

"ஐயோ குழந்தை நெருப்புகிட்ட போகுது" எனப் பதற்றம் அனைவரிடமும் தொற்றிக்கொள்ள சைலு குழந்தை நெருப்பை தொட்டு விளையாடிக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் நெருப்பு அணைந்து கரிய நிறம் பூசிக்கொண்டிருந்த மரம் பூக்கள் பூத்துக் குலுங்கியது.

சைலு குழந்தையை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்க, மரத்திலிருந்து பூக்கள் அக்னியை தொட, அக்னி மேல் பட்ட வெள்ளை பூக்கள் நீலமாக மாறிக் கொண்டிருந்தது.

வசி துடிதுடித்தான் "உன்னோடு வாழாத வாழ்க்கை வாழ இந்த பிறவியிலும் எனக்கு கொடுத்து வைக்கலை போல" என அக்னியின் கன்னத்தில் முத்தம் பதித்து இவர்களிருந்த வீட்டுக்கு நடந்து சென்றான்.

"அக்னி அவ்ளோ தான நீ போயிட்டயா? இனி என்னை பார்த்துக்க யாரு இருக்கா" என வாய்விட்டே புலம்பிக்கொண்டிருந்தான்.

இந்த மரத்தால் கூட அக்னி நிலாவை காப்பாற்ற முடியவில்லை எங்களை காப்பாற்ற உயிரை விட்டு நிம்மதியா போயிட்டா கடங்காரி" என ருத்ரா புலம்ப.

அனைவரிடமும் மவுனம் மட்டுமே எஞ்சியிருந்தது.

குழுந்தை மரத்தை சுற்றி பறந்து விளையாடி களைத்து அக்னி நிலா அருகில் பறந்து வந்தது.

அதிசய குழந்தையை பெற்றெடுத்ததுக்கு சந்தோஷப் படுவதாயில்லை, அக்னி அவனை காப்பாற்ற இறந்ததை எண்ணி வருத்தப் படுவதா என சைலு ஆகாஷ்க்கு சுத்தமா புரியாமல் மனம் முழுவதும் பாரத்தோடு ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து அக்னியை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஆகாஷின் அடங்காத அழகு மகன் அக்னி பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டு ஏதோ பெரிய மனிதன் போல அக்னியை பார்த்துக்கொண்டிருந்தான். மழை ஓய்ந்திருந்தது காற்று மெல்ல வீச மரங்களிலிருந்த மழை துளி அக்னி மீது பட பதறி அடித்து எழுந்தவள் முதலில் தேடியது வசியை தான்.

"அக்னி" என அதிர்ச்சியில் அழைக்க,

"அக்னி நிலா சுற்றி சுற்றி பார்த்து இங்க எதுக்கு வந்துயிருக்கோம் வசி" என குட்டிப்பையனை கையில் தூக்கிக்கொண்டாள்.

"ஆகாஷ் அண்ணா பாத்திங்களா, என் லட்டு பறக்குது" என சைலு குழந்தையை கொஞ்சி தூக்கிக்கொண்டு சைலுவிடம் குழந்தையை கொடுத்துவிட்டு, ஒரு ஓட்டம் பிடித்தாள் காற்றை கிழித்துக்கொண்டு. சுற்றியிருக்கும் அனைவரும் மின்னல் வேகத்தில் மறைந்த அக்னியை பார்த்து வியந்து நிற்க.

அட அக்னியோட பவர் போல அப்போ நம்ம எல்லோருக்கும் பவர்யிருக்குமா? என மாற்றி மாற்றி முகத்தை பார்க்க.

ஆமா என்பது போல சைலு குழந்தை சிரிக்க.

சைலு ஆர்வமாக "இப்பவே செக் செஞ்சி பாத்துடரேன்" என குதுகலித்தாள். ஆகாஷ் சைலுவை முறைத்தான் இவ்வளவு போராட்டத்துல எனக்கு எவ்வளவு வலி இவ கஷ்டப்படுறத பாத்துட்டு ஆனா இவளை பாரு ஆட்டத்தை இந்த சைலு அடங்கமாட்டாள் என ஆகாஷ் மனதில் குறித்துக்கொண்டு.

"முதல்ல உடம்பை சரி செஞ்சிட்டு என்ன பவர்னு" கண்டுபிடிக்களாம் என சைலு குழந்தையை தூக்க ஆகாஷ் சைலுவை தூக்க சைலு முகம் செவ்வானமாக சிவந்திருந்தது.

அனைவரும் ஆகாஷை கலாய்த்தவாறு தன் இணையின் கையை இனி விடப் போவதில்லை என இறுக்க பிடித்துக்கொண்டு அவரவர் வாழ்கையை இனி வாழ பல கனவுகளோடு ஓடி வர.

வசி ஒரு நாற்காலியில் அக்னியின் சாலை பிடித்து தொய்ந்து அமர்ந்திருந்தான்.

"இனி நான் உன்னோட டேட்டே பார்க்க முடியாதுல தூங்கும் போது கூட இனி ரசிக்க முடியாதுயில்ல அவ்ளோ தான இரண்டு பேருக்கும் பிரிவுன்னு அந்த வீனாப்போன கடவுள் எழுதிவச்சிட்டானா?".
"எதுக்கு நிலா என்னை விட்டுட்டு போன நான் பாவம்ல. உங்க எல்லோரையும் காப்பாத்த தான் அந்த சகுந்தலாவை என் கண்பார்வையில் வைத்திருந்தேன். அதுவே தவறாகிடுச்சே அப்போவே அவளை நான் கொண்ணுயிருக்கனும்" என மேஜையில் தலை வைத்து கண் மூடி படுத்தான்.

அக்னி வந்த வேகத்தில், மரம் செடி கொடிகள் எல்லாம் ஏதோ புயல் காத்து அடித்தது போல அசைந்தது.

வசீ அருகில் வந்து நின்று. "வசீ" என அவன் தலையை வருடினாள் அக்னி தன்னவளின் தொடுதலில் உயிர் பெற்றவன்.

"என்... அக்னி... நிலா" என தாவி அணைத்துக்கொண்டு அக்னி முகத்தில் முத்த மழை பொழிந்துக்கொண்டிருந்தான்.
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
30... மாய நிலா

அனைவரும் உற்சாகமாக வீட்டில் நுழைய வசி அக்னி நிலா இருவரும் பாச மழை பொழிந்து கொண்டிருந்தார்கள்.

வசியும் அக்னியும் டயார்ட் ஆகும் வரை பேசிக்கொண்டிருக்க, நாலு ஆண்களும் சிறிது நேரம் தூங்கி எழுந்து சமைக்கத் துவங்கினார்கள்.

சைலுவின் குழந்தையை வைத்துக்கொண்டு பெண்கள் மூவரும் அல்லாடிக் கொண்டிருந்தார்கள்.

தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேகமாக தவழ்வது, பறப்பது என பிறந்த முதல் நாளிலிருந்து அதன் அட்டகாசத்தை ஆரம்பித்துக்கொண்டிருந்தது.

சைலு குழந்தையை நீங்களே பாத்துக்கோங்க என சாந்தி, ரோஸ், ஆதிரா மூவரும் குழந்தையை பிடிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள்.

சைலு தூங்கி எழுந்ததும் வசி அக்னி நிலா சிறிது நேரம் தூங்கி எழுந்தவர்கள், மறுபடியும் பேசத் துவங்கினார்கள்.

இருவரும் பேசிக்கொண்டு மூவரையும் வைத்து செய்துக்கொண்டிருக்கும் குட்டி தம்பியை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

ஓடி ஓடி கலைத்தவர்கள் குழந்தையை சைலுவிடம் கொடுத்துவிட்டு, கை எடுத்து கும்பிட்டார்கள் "ஆளைவிடுங்கடா சாமி குழந்தை மேலேயிருந்த ஆசையே போயிடுச்சி" என ராஜா, அர்ஜுன், ருத்ரா அதிர்ந்து அவரவர் காதலிகள் பக்கம் வந்து நின்று ஒரு குழந்தைக்கே இப்படி செய்தால் எப்படி இன்னும் நிறைய பேபிஸ் பாத்துக்கணும் இப்படி எல்லாம் முடிவு எடுக்கக்கூடாது, என தனது துணைவியாக வருபவர்களை சமாதானப் படுத்த.

அனைவரும் சாப்பிட அமர ருத்ரா அக்னிக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தான். அவன் மட்டுமில்லை வசியை தவிர அனைவரும் ஊட்டிவிட வசி கடுப்பாகி.

"டேய் போங்கடா… உங்க ஆளுக்கு ஊட்டிவிடுரதை விட்டுட்டு ஏன்டா என் கூடும்பத்தை சித்திரவதை படுத்துறிங்க பாவிகளா" என அக்னி நிலாவை தன் கை வளைவுக்குள் வைத்துக்கொண்டான்.

"வசி எங்க அண்ணா எனக்கு ஊட்டிவிட்டான், நீ போய் உனக்கு தான் நாலு தங்கச்சி இருக்குயில்ல போய் ஊட்டிவிடு" என அக்னி நிலா தன் அண்ணன்களுக்கு, ஊட்டிவிட.

வசி தன் நாலு தங்கைகளுக்கு ஊட்டிவிட்டுக்கொண்டிருக்க.

இங்கு ஒரு பாச மழை தங்களை குட்டி தம்பிக்கு தூங்கிக்கொண்டிருந்தவன் அட்டகாசம் செய்யத் துவங்க, இந்த முறை ஆண்கள் அவன் பின்னால் ஓடத் துவங்கினார்கள்.

இப்படியே இவர்கள் நாட்கள் குட்டி தம்பியிடம் ஒரு பேராட்டமாக சென்றது.

இரவு வந்ததால் தான் ராஜா, ஆகாஷ்க்கு ருத்ரா, அர்ஜுன், வசிகரன் மூவரும் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தார்கள்.

"இவனுங்களுக்கு முதலில் கல்யாணம் செய்து வைக்கனும், இவனுங்களுக்கு பிரித்துவைப்பதே வேலையாக இருக்கு" என யோசித்து, இதுக்கு ஒரு வழி செய்யனும் என எண்ணினான்.

ருத்ரா… சாந்தியை அருகில் அழைத்து, "அடியே என்ன இரண்டு நாளா ஒன்னும் பேசாமயிருக்க என்னை பிடிக்கலையா?"

"அது… அது… நான் தூங்கனும்" என சாந்தி ருத்ராவிடமிருந்து நழுவிச் சென்றாள்.

ருத்ரா எவ்வளவு முறை பேச முயற்சித்தும் சாந்தி முகம் கொடுத்துகூட பேசவில்லை.

அக்னி வசி கஷ்டப்பட்டு பிரித்து அவர்களது அறைக்குள் அனுப்புவதற்குள் ருத்ராக்கு தான் போதும்போதுமென்றானது.
அடுத்து அர்ஜுனை அலேக்காக தூக்கிக்கொண்டு அவன் அறையில்விட்டுவிட்டு, அடுத்து ருத்ரா படுக்கும் போது விடிந்திருந்தது.

"நாளைக்கே இதுக்கு ஒரு வழி செய்யனும்" என ஆகாஷ் மற்றும் ராஜா ஒரு முடிவோட படுத்தார்கள்.

அடுத்த நாள் எல்லோரும் டைம் டேபில் போட்டு ஓடியும் பறந்தும் அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் ஆகாஷ் சைலு மகனுக்கு பெயர் சூட்டும் விழா, ஒரு பக்கம் பறந்து கொண்டிருக்கும் குழந்தையை பிடித்துக் கொண்டும், அவன் இவர்கள் எல்லாம் ஒரு பொருட்டேயில்லை என்பது போல மீண்டும் நழுவிக் ஓடிக்கொண்டும் இருந்தவன், பசிக்கும் நேரம் மட்டும் சமத்தாக சைலுவின் கைகளுக்குள் வந்து படுத்துவிடுவான், சைலுவும் தன் மகனின் சுட்டித்தனத்தை பார்த்து,

"சமத்துப்பாப்பா" என கொஞ்சி பசியாற்றிவிட்ட மறு நொடி அனைவரையும் ஓட வைத்துக்கொண்டிருந்தான்.

அக்னி நிலா அத்தையிடம் சமத்தாகயிருக்கும் குட்டியை பார்த்து அனைவரும் வியந்து நின்றார்கள். குழந்தை அக்னியிடம் சமத்தாயிருக்கான் அவளிடம் விட்டுவிடலாம் என நினைக்க இந்த வீனாப்போன வசி அக்னியை விட்டாள் தானே, இன்றே உலகம் அழிந்துவிடுவது போல குரங்குக் குட்டியாக அக்னியை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தான் வசி.

அனைவரும் அந்த குட்டிப்பையனை வைத்து ஒரு வழியாக தயாராகி வர.

இவ்வளவு நேரம் தூங்கிக்கொண்டிருந்த அந்த குட்டி இம்சை, விழா தொடங்கும் போது தனது மாய விழிகளை விழித்துக் கொண்டது.

அக்னியும், வசியும் ஒரு ஓரமாக ஒதுங்கி தங்களது காதல் வசனத்தை பேசிக்கொண்டிருக்க.

சாந்தி ருத்ராவை பார்த்து ஒதுங்கி ஒதுங்கி போய்க்கொண்டிருந்தாள்.
குழந்தையை பார்ப்பதற்க்கே அனைவருக்கும் நேரம் சரியாகயிருக்க ருத்ராக்கு சாந்தியின் இந்த விழகல் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது.

சைலுவும், ஆகாஷும் தொட்டிலை அலங்காரம் செய்கிறேன் என்ற பெயரில் இவள் ஒரு அலங்காரம் செய்ய ஆகாஷ் அதனை கலைத்துக் கொண்டிருந்தான். ஆகாஷின் சேட்டை ஒரு எல்லையை கடக்க கோபம் கொண்ட சைலு பக்கத்தில் எதாவது அவனை அடிக்க கிடைக்கிறதா என்று பார்க்க அருகில் தொட்டியும், பூக்களும் தான் இருந்தது.

தொட்டிலை எடுத்து அடிக்க முடியாது என நினைத்தவள், டைனிங் டேபிலில் இருந்த பெரிய சைஸ் சொம்பு கண்ணில் பட, 'இந்த சொம்புல நாலு அடி அடிக்கனும் ஆனா எழுந்திரிக்க சோம்பேறியாக இருக்கே' என மனதில் நினைத்ததை செயல்படுத்த முடியாமல் சைலு ஆகாஷ் கலைத்து வைத்திருந்த மலர்களை மீண்டும் சரி செய்துகொண்டிருக்க.

ஆகாஷின் திடிர் அலறலை கேட்ட சைலு திரும்பிப் பார்க்க அவனின் நிலையைக்கண்டு அதிர்ச்சியில் சைலு தனது முட்டை கண்கள் கீழ் விழுந்துவிடும் அளவிற்க்கு விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த கண்கொள்ளா காட்சியை.

முழித்திருக்கும் குழந்தையை ஆதிராவும் சாந்தியும் இருக்க பிடித்துக்கொண்டு "என்ன சத்தம் ஆகாஷ் எதுக்கு கட்டையை எடுத்து யாரோ அடிப்பது போல அலரிக்கொண்டிருக்கிறார்" என வெளியே வர‍, ஆகாஷ் கட்டையாலில்லை பூஜைக்கு வைத்திருந்த பெரிய சைஸ் சொம்பால் அடி வாங்கிக்கொண்டிருந்தார், இதில் என்ன ஆச்சரியம்யம் என்றால்.

சொம்பு தானாக நான்கு அடி அடித்து முடித்துவட்டு சமத்தாக அதனிடத்தில் அமரந்துகொண்டது காற்றில் மிதந்து.

"இங்க என்ன நடக்குது" என ஆகாஷ் தலையை அழுத்தி தேய்த்துக்கொண்டிருக்க, சைலு பூனைக்குட்டி போல பதுங்கி செல்வதை பார்த்த ஆகாஷ் "சைலு எங்க எஸ்கேப் ஆக போற எனக்கு உன் மேலத்தான் சந்தேகமா இருக்கு".

"சாரி ஆகாஷ் நான் வேணும்னு இப்படி செய்யலை மனசுல சும்மா தான் நினைத்தேன் இப்படி ஆகிடுச்சி" என சொன்னதும்

ருத்ராவும் ராஜாவும் அருகில் வந்து "ஏய்… சைலு உன்னோட பவர் இது தானா" என குதுகலித்தனர்.

"ஆமாவா… செம" என பக்கத்திலிருக்கும் தொட்டிலை, தூக்க மனதில் நினைத்தால் சைலு. அவள் நினைத்தது அப்படியே நடக்க, மற்ற பெண்களுக்கும் இந்த மந்திர சக்தியை பற்றி ஆர்வம் வர அனைவரும் மனதில் ஏதேதோ நினைக்க, அந்த வீட்டிலிருக்கும் முக்கால் வாசி பொருட்கள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது.

அவரவர் மனதில் நினைத்தது பறந்து முடித்து அதன் முன்னிருந்த இடத்துக்கு மீண்டும் சமத்தாக அமர்ந்து கொண்டது. அக்னியை தவிர அனைவருக்கும் இந்த சக்தியிருக்கா அக்னிக்கும் ருத்ராக்கும் இருக்கும் சக்தி அவர்களுக்கே தெரியாது என்னிலடங்காத சக்தியோடு பிறந்திருந்தார்கள் இருவரும்.

மற்ற மூவரும் இதை சோதித்து பார்த்தார்கள்.

வசி, ராஜா, ஆகாஷ், அர்ஜின் பொருட்களை தூக்க மனதில் நினைக்க.

ஒருவர் நினைத்த பொருள் கூட அசையவில்லை எங்களுக்கு இந்த சக்தியில்லை போல என எண்ணிக்கொண்டிருக்கும் போது வசி நினைத்த பொருள் அந்தரத்திலிருந்தது.

அப்போ… இவங்க மூனு பேர், மற்றும் வசிக்கு ஒரே சக்தியா, அப்போ இவங்களுக்கு ஒரு சக்தியுமில்லையா?" என தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க.

"நான், என் தங்கைகள் எல்லாம் புன்னியம் செய்தவர்கள் அதான் பாத்திங்களா சக்தி எல்லாம் கிடைத்திருக்கு" என வசி தன் பாச மலர்களுடன் உறவாடிக்கொண்டிருக்க.

மற்ற மூவருக்கும் அக்னி அன்று ஓடியது நினைவுக்கு வந்திருந்தது. ஆகாஷ், ராஜா, அர்ஜுன் ருத்ராவையும், அக்னியையும் ஒரு அழுத்த பார்வை பார்க்க.

இருவரும் ஆம் என்பது போல தலையாட்ட. ஐம்பது பேரும் கைகளை கோர்த்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த காட்டை ஒரு ரவுன்ட் அடித்து போன வேகத்தில் திரும்பிவந்து நிற்க வசி சொன்ன டையலாக்கை இவர்களுக்கு திரும்பி சொன்னார்கள். புதிதாக சக்தி கிடைத்திருக்க சும்மாவாயிருப்பார்கள்.,
முதலில் குழந்தைக்கு பெயர்வைக்க அக்னியை அழைக்க.

"ஐயோ ஆகாஷ் அண்ணா நான் எதற்க்கு ஆளைவிடுங்க நீங்களே வைங்க பெயர்" என அக்னி நிலா மறுத்துவிட சைலு வழுக்கட்டாயமாக அக்னியை பிடித்திழுத்து நிற்க வைத்து. "ஒழுங்கா உன் மருமகனுக்கு நியே பேர்வச்சிட்டு போ" என தள்ளிவிடாத குறையாக குழந்தை பக்கம் நிற்க வைக்க.

"முன்னவே சொல்லியிருந்தா நல்ல பேர் செலக்ட் செய்து வச்சிருப்பேன்ல" இருவரையும் முறைத்துவிட்டு அக்னி நிலா "என்ன பேர்வைக்கலாம்" சிறிது நேரம் யோசித்தவள். ஆகாஷ் சைலு பெயரை எதாவது மாற்றி வைத்துவிடலாம் என நினைக்க ஒன்னும் அக்னி நிலாவுக்கு தோன்றவில்லை.

"ரிஷி தேவ்" என மூன்று முறை குட்டி பையன் காதில் சொல்ல அனைவருக்கும் இந்த பேர் பிடித்துப் போய் அனைவரும் ரிஷியை தூக்கி சுற்றினார்கள்.

இங்கு விழா முடிந்திருக்க அனைவரும் வேர் மரமிருக்கும் இடம் நோக்கி செல்ல ஆச்சரியமாக கண்கள் அனைவருக்கும் விரிந்து கொண்டது.

வண்ணத்துப் பூச்சிகள் தனது இரக்கையை விரித்து வேர் மரம் முழுவதும் சுற்றித்திரிந்தது புதிதாக முளைத்திருந்த வண்ணத் தொட்டில் வேரின் விழுதுகளில் பட்டுத்துணியால் ஒரு மெத்தையோடு தொட்டிலுமிருந்தது. அதில் ரிஷியை படுக்க வைக்க, அனைவரையும் அந்த வேர் மரம் வானத்தில் மரத்தோடு வானில் ஒரு உலகத்துக்கு தூக்கிச் சென்றது பறந்துக்கொண்டிருந்த அந்த மரம் ஆகாயத்தில் ஒருயிடத்தில் நிற்க.

மேகத்தின் நடுவில் புதுயிடத்தை பார்த்த ரிஷி அந்த மேகத்தின் நடுவில் தனது கை கால்களை அசைத்து விளையாடத் துவங்கினான். மாலை நேரம் முடிந்து நட்சத்திர தேவதைகள் இவர்களை சூழ்ந்து கொண்டது.

நிலாவை இவ்வளவு அருகில் பார்த்த ருத்ரன் தனிமையில் நின்று தனது நிலா தேவதையை ரசித்துக்கொண்டிருக்க.

பின் ஏதோ ஒரு சத்தம் கேட்க திரும்பிப் பார்த்த ருத்ரன் கண்ணில் சாந்தி பட. "ஏய் எங்க போற" என நழுவிச்செல்ல நினைத்த சாந்தியை பிடித்துக்கொண்டு.

"இவ்வளவு பக்கத்தில் நீ இதுக்கு முன் நிலா பாத்திருக்கியா? இந்த வெள்ளை நிலா அவ்வளவு கொள்ளை அழகு என் அருகிலிருக்கும் இந்த அழகியை போல" என நிலாவை ரசிவப்பதை விட்டுவிட்டு ருத்ரன் சாந்தியை ரசித்துக்கொண்டிருந்தான்.

சாந்தி அவனது அணைப்பிலிருந்து அமைதியாக விடுபட நினைத்து தோற்றுத்தான் போனால் அவளது கரங்களை விடுபட போராட போராட ருத்ராவின் அணைப்பு இறுகிக்கொண்டே போனது.

"சாந்தி… என்னாச்சி எதுக்கு இந்த விலகல், இன்று நீ பதில் சொல்லாமல் நகர கூட நான் விடப்போவதில்லை" என இன்னும் நெருங்கி அணைத்துக்கொண்டான்.

ஆகாஷ் தத்தமது ஜோடிகளோடு சிதறியிருக்கும் அனைவரையும் அழைத்தான்.

"எல்லாம் இங்க ஓடி வாங்க முக்கியமான விசயம் சொல்லனும்" என அவன் கொண்டு வந்திருந்த பையை ஒரு மரக்கட்டை அருகில் வைத்திருந்தான்.

ருத்ரா… சாந்தியின் பிடியை தளர்த்த சாந்தி வேகமாக விளகியிருந்தாள்.
ரொம்ப பன்னாதடி நாளைக்கு கல்யாணம் ஆனதும் என் கூட என் அறையில் தான் இருக்கனும் அப்போ கவனிச்சிக்கிறேன்" என அனைவரும் இருக்கும் இடத்துக்கு வந்து நின்றான் சாந்தியுடன்.

"என்னால உங்களுக்கு இரவு பகலா காவலிருக்க முடியாது, அதனால உங்க எல்லோருக்கும் இன்று நிச்சயம் நாளை திருமணம்" என சொல்ல.

முதலில் எதிர்ப்பு தெரிவித்தது வசி தான் "மத்தவங்களுக்கு வேணும்னா கல்யாணம் செஞ்சிவை எனக்கு வேண்டாம் நாங்க இன்னும் குறைஞ்சது இரண்டு வருசமாச்சி லவ் செய்யனும்" என வசி ஒற்றைகாலில் நின்றான்.

"நீ சொல்றது எல்லாம் கேட்க முடியாதுடா நான் தூங்கி எவ்வளவு நாள் ஆச்சி தெரியுமா, ஆசையா என் பொண்டாட்டிக்கிட்ட பேச கூட விடாம என்னை வச்சி செஞ்சிட்டிருக்கீங்க என்னை" என பொறிந்த ஆகாஷ், மூன்று ஜோடி கைகளுக்கும் மோதிரம் மாற்றி மாற்றி கொடுக்க
சாந்தி தான் தயக்கத்தோடு வாங்கி நின்றிருந்தாள்.

ருத்ராக்கு அவளது தயக்கம் புரிந்தது ஆனா அந்த தயக்கம் எதை நினைத்து, எதுக்குனு தான் சுத்தமா புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தான்.

முதலில் அர்ஜுன் ஆதிரா ஜோடி கைகளில் மோதிரம் மாற்றிக்கொள்ள ஆதிரா வெட்கப்படுவதை பார்த்த அனைவரும் அவளை கலாய்த்த முகம் பிங்க் நிறம் பூசும் வரை கலாய்த்து கடைசியாக போனால் போகுது பிழைத்து போ என விட்டுவிட்டார்கள்.

அடுத்து வசி தயங்கி நிற்க அவனை நெருங்கி நின்ற அக்னி நிலா "போன ஜென்மத்தில் நடந்தது போல எதும் நடக்காது நான் சொன்னா கூட நம்ப மாட்டியா?" என வசியை சமாதானப் படுத்தி மோதிரம் மாற்றிக்கொண்ட மறு நொடி சுற்றி இவ்வளவு பேர் இருப்பது எதையும் கண்டுகொள்ளாமல் அக்னியின் இதழ்களை சிறைபிடித்திருந்தான்.
இங்கு நடக்கும் செயலை பார்த்து அனைவரும் கண்களை மூடிக்கொள்ள வசி அவன் வேலையை முடித்ததும். "முடிஞ்சிடுச்சி எல்லோரும் கண்ணை திறங்க" என சொல்ல அக்னி தான் கூச்சத்தில் வசி பின் சென்று மறைந்துகொண்டாள்.

அடுத்து ருத்ரா சாந்தி முறை வர, சாந்தி அவள் கைகளிலிருந்த மோதிரத்தை தயங்கிக் கொண்டே அருகிலிருந்த அறுபட்ட மரத்தின் மீது வைத்துவிட்டு.

"எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்" என சொல்லிவிட்டு தனியாக நிற்க்கும் நிலாவை பார்த்து உன்னை போல நானும் தனியாக வாழ ஆசைப்படுகிறேன்" என இரு சொட்டு கண்ணீர் அவளது கன்னத்தில் கோடு இழுத்திருந்தது.

சாந்தி இப்படி சொல்லுவாள் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை, ருத்ரா முதலில் அதிர்ந்தாலும், அவளை சமாதானப் படுத்த அனைவரும் செல்ல எந்தரிக்கும் போது.

"இருங்க நீங்க எல்லோரும் நான் என்னான்னு கேட்டுட்டு வரேன்" என ருத்ரா சாந்தி அருகில் வந்து நிற்க.

"இப்போ உனக்கு என்ன பிரச்சனை?" என ருத்ரன் அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்க.

"எனக்கு உன்னை பிடிக்கலை போதுமா" என சாந்தி வாயிலிருந்து வந்த வார்த்தை ருத்ராவின் செவியை அடைவதற்க்குள்.

ருத்ரா சாந்தி கன்னத்தில் அறைந்தது சிறிது தூரம் நின்றிருந்த அனைவருக்கும் கேட்டது.
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
மாய நிலா 31

சாந்தி அடியை வாங்கிக்கொண்டு அமைதியாக நின்றிருக்க.

அமைதியாக இருக்குற ருத்ரா என்னும் புயலை சீண்டியது அவளது அமைதி.

"எப்படி நிக்கிரா பாரு… கல்லு மாதிரி உனக்கு ஒரு அடி எல்லாம் பத்தாது இன்னும் நாலு அடிவிடனும்" என ருத்ரா மீண்டும் அடிக்க கையை ஓங்க… சாந்தி இவ்வளவு நேரம் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அழுகையை ஒரே மூச்சாக அழுக, உதட்டை சுழித்துக் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

சாந்தி அழுக துவங்கும் முன் "இந்த கண்ணுலயிருந்து தண்ணீ கீழ விழுந்தது வை… மகளே… அடி பிச்சி எடுத்துடுவேன்" என ருத்ரா விரல்களை நீட்டி எச்சரிக்க. இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சாந்திக்கும் கோபம் எல்லையை கடக்க,
ருத்ராவின் நீட்டிய ஆள் காட்டி விரலை, பிடித்து அவளது பல் தடம் பதிந்து ரத்தம் வரும் அளவுக்கு கடித்து வைத்தாள்.

"ஆஆஆ…" என ருத்ரா அலற,

"அதான் சொல்றேன்ல… எனக்கு உன்னை பிடிக்கலைனு, எதுக்குடா மிரட்டுர, அடிக்கர, எவ்வளவு தைறியமிருந்தா இவ்வளவு பெரிய சி. பி. ஐ மேலையே கையை வைப்ப" என்ன தான் சாந்தி மற்ற பெண்களை விட உயரமாகயிருந்தாலும் ருத்ராவின் அருகில் குட்டியாக தான் தெரிவாள்.

அவள் குழந்தைத் தனமான கோபப்பேச்சில் மயங்கிய ருத்ரா, அவளை அணைத்துக்கொண்டான். சாந்தி வீரவசனம் பேசிக்கொண்டிருந்தது எல்லாம் காற்றோடு கலந்து, இப்ப அவள் வாயிலிருந்து காற்று மட்டும் தான் வந்தது.

"ஏய் நீ எதுக்கு ஒதுங்கி போரன்னு கண்டுகொண்டேன்".

'என்னாது… கண்டு பிடிச்சிட்டானா!" என சாந்தி கண்கள் விரிந்துகொண்டது, அணைத்திருந்த ருத்ரா சற்று விலகி கையனைவில் வைத்துக்கொண்டு சாந்தி முகத்தை பார்த்து.

"நான் உன்னை தப்பா எல்லாம் நினைக்க மாட்டேன்… புரியுதா நீதான் என் நினைவு மிஸ்டர் ஜீரோக்கிட்டையே ஒத்துக்கிட்டியே, எப்படி இருந்தாலும் காதலிப்பேன்னு அவனும் நானும் வேறயில்லை டி தங்கம் புரிஞ்சிக்கோ. அவள் அக்னியிடமிருந்து என்னை பிரிக்க போட்ட சதி… ஆனா அந்த சதியாலத்தான் என் தேவதையை கண்டுபிடித்தேன்" என அன்று கடைசியாக அக்னி நிலா முயலாகயிருந்த போது நடந்த கோர சம்பவத்தை நினைத்துப் பார்த்தான்.

ருத்ரன் அன்று வழக்கம் போல லேபுக்கு கிளம்பி அங்கு அக்னியை தேட அவள் இருக்கும் அடையாளம் எதுவுமில்லாமலிருந்தது.

அக்னியை தேடிக்கொண்டு வரும் போது சகுந்தலா அந்த வேர் பற்றிய ரகசியத்தையும், அதனின் தன்மையை மாற்றும் பணி ஐம்பது சதவிதம் முடிந்திருப்பது என பேசிக்கொண்டிருக்க, ருத்ரா காதில் அந்த திட்டம் தெளிவாக விழுந்தது. இது பெரிய ஆபத்து என நினைக்கும் போதே வந்த சுவடு தெரியாமல் விலகிவிட நினைத்த ருத்ராவை சகுந்தலா பார்த்து பதற்றமடைந்ததால் 'ஐயோ இவனுக்கு விசயம் தெரிந்தால் அவ்வளவுதான் அனைத்தும் மொத்தமாக கெட்டுவிடும்' என சகுந்தலா ருத்ராவை ஆட்கள் வைத்து கட்டிப்போட, அவனது நினைவுகளை அழிக்க திட்டம் போட்டுக்கொண்டிருக்க.

சகுந்தலாவின் பி. எ பதற்றமா அவனது கையில் அக்னி நிலா (ரூபியை) லேபிலிருந்து தூக்கி வந்திருந்தான். நேற்றிரவு அக்னியை போட்டுத் தள்ள சகுந்தலா பிளான் போட்டிருப்பதை தெரிந்துக்கொண்டவன். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யாருக்கும் தெரியாமல் அக்னியை தூக்கிவந்துவிட்டான், இங்கு சகுந்தலா ஒரு திட்டம் போட்டாள்.

இரண்டு பேரையும் ஒன்னா போட்டு தள்ளிடலாம் என "டேய் அந்த ரூபி முயலை எடுத்துட்டு வாங்கடா, இரண்டு பேரையும் சேர்த்து சாகடச்சிடலாம்" என சொல்ல.

ருத்ராக்கு தூக்கிவாரி போட்டது, "பாவம் அந்த சின்ன உயிர் உன்னை என்ன செய்தது விட்டுடு இல்லைனா, உன்னை கொல்ல கூட நான் தயங்க மாட்டேன்" என ருத்ரா கத்திக்கொண்டே கட்டப்பட்ட கைகளிடமிருந்த கயிரை அகற்ற முயற்சி செய்துகொண்டிருந்தான்.

ரூபியை எடுத்து வரச் சென்றவன், ரூபியில்லை என்று வந்து சொல்ல.

"எல்லாம் இந்த பி. எ வேலையாதானிருக்கும்" என அவனை டிராக் செய்ய சொல்ல.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அனைவரும் அந்த பார்க்குக்கு வர, ருத்ராவையும் காரில் அள்ளிப்போட்டுக்கொண்டு போனால் சகுந்தலா.

ருத்ரா கார்க்கு உள்ளே ஏறும்முன் அவனுக்கு பிரியமான வேலையாளிடம் வசிக்கு அழைத்து இங்கு வர சொல்லிவிடு என சொல்ல. வசிக்கும் செய்தி சென்றதும் ருத்ராவின் போனை டிராக் செய்து அந்த பார்க்குக்கு வந்துவிட.

சகுந்தலா பி. எ, ரூபியின் காதுகளை பிடித்து கொண்டு அருகிலிருந்த ஒரு மரத்தில் அடிக்க ரூபி துடிதுடித்தாள்.

அக்னி நிலா மிருகமாகயிருந்து கதறுவது காரில் கட்டப்பட்டிருந்த ருத்ராவிற்க்கு தெளிவாக கேட்டது "ருத்ரா வலிக்குது இந்த பிசாசு ராட்சசி என்னை மரத்தில் தூக்கி அடிக்கிறா," என அக்னி குரலில் ருத்ராவுக்கு கேட்க.

"அக்னி என்னாச்சி என பதறினான்".

அக்னியும் நான்தான் ரூபியும் நான் தான் என சொல்லி ரூபி உயிர் பிரிந்திருந்தது.

அப்போது தான் இந்த பார்க்கில் நுழைந்த வசி ஒரு அழகான குட்டி முயலை அடித்தே சாகடித்த இந்த ராட்சசியை உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டனும் என நினைத்தவன்.

"ஏய் யாரு நீங்க, எதுக்கு இப்படி வாயில்லா மிருகத்தை துன்புருத்துறிங்க" என வசி குரல் கேட்ட சகுந்தலா முதுகு தான் தெரிந்தது அவனுக்கு.

"நான் பேசிட்டு இருக்கேன் அங்க எங்க திரும்பியிருக்க... திரும்பு" என சகுந்தலாவிடம் வசி சொல்ல.
'வசி இப்போ நம்மலை பார்த்தா அனைத்தும் கெட்டுப்போய்டும்' என அவசரமாக அவள் கைப்பையிலிருந்த ஒரு தாரவத்தை எடுத்து வசி முகத்தில் வீச தற்காலிகமாக அவனது பார்வை பறிக்கப்பட்டிருக்க.

சகுந்தலா… அவளது பி. எ வையும் இறந்துகிடந்த ரூபியையும் விட்டுட்டு சென்றிருக்க.

சகுந்தலா பி. எ அருகில் வந்து வசி எறிச்சலில் தள்ளாடிக் கொண்டிருந்தான் "சார் ஒரு வாரத்தில் சரியா போய்டும்" என் கூட வாங்க என வசியை ஒரு இருக்கையில் அமரவைத்துவிட்டு பி. எ அக்னி நிலாவை அந்த பார்க் மூலையில் புதைத்தான், இவை அனைத்தும் தூரமிருந்து ருத்ரன் கைகள் கட்டப்பட்ட நிலையில் பார்த்திருந்தான்.

நண்பனுக்கு உன்னால் இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே என நினைக்க பி. எ வசியை பார்த்துப்பான் என் ரூபி அக்னி நிலாயில்லை. கடைசியாக கூட பார்க்க முடியாத பாவி நான் அக்னி முகம் எப்படியிருக்கும் என்று கூட தெரியவில்லை ருத்ராக்கு.

சகுந்தலா ருத்ரா அருகில் அமர்ந்தவள் அன்று நடந்த ருத்ராவின் நினைவுகளை மொத்தமாக எடுத்திருந்தாள். ரூபி சோதனைக்கு புதிய மருந்து செலுத்தும் போது இறந்துவிட்டாள் என அவன் மூளையில் பதிய வைத்திருந்தாள்.

அதன் பிறகு ரூபியை நினைத்து வருத்தப்பட்டவன் அவனது தினமும் செய்யும் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தான்.

ருத்ரா முகத்தில் வந்துபோகும் உணர்ச்சிகளை படித்த சாந்தி "ஜீரோ ஒன்னுமில்ல ஒன்னுமில்ல" என அவனை ஆறுதல் படுத்த அருகிலிருந்த தண்ணீர் எடுத்து குடிக்கவைத்தபின்.

"இந்த ஜீரோவை ஏத்துப்பியா…" ருத்ராவின் வார்த்தைகளில் ஈர்க்கப்பட்டவள், சரி ஆனா என்னை எப்போதும் மனுசனா இருக்கனாலத்தான் கட்டிக்கிட்டைன்னு சொல்லிக்காட்ட கூடாது" என சாந்தி அவளது பயம் கலந்த குரலில் தயக்கத்தோடு சொல்ல.

"மக்கு மாமி வா" என மகிழ்வாக இந்த ஜோடியும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட மோதிரத்தை மாற்றிக்கொள்ள.

அந்த இரவு ஆட்டம் பாட்டம் கும்மாலமாக இந்த இரவு நீண்டுகொண்டே போனது.

ஆகாஷ் தான் இவர்களை பிரித்தெடுத்து ஒழுங்க படுங்கபோய் இல்லை கல்யாணத்தை கேன்சல் செஞ்சிடுவேன்" என அனைவரையும் மிரட்ட.

வசி மனதில் அப்படி ஒரு ஆனந்தம்... "சரிடா சீக்கரமா நிறுத்து, ஒரே டென்ஷன்". "மகனே உனக்கு மட்டும் கல்யாணம், நீ எது செய்தாலும்" என சொல்ல அனைவரும் சிரித்துக்கொண்டிருக்கும் போதே மாய புகை ஒன்று அனைவரையும் ஆக்ரமித்து இவர்கள் வீட்டில் கொண்டு சேர்த்தது.

அடுத்தநாள் அழகாக விடிந்தது, அனைவரும் உற்சாகமாகயிருக்க, என்ன தானிருந்தாலும் இந்த இனிமையை யாராலும் விவரிக்க முடியவில்லை அனைத்தும் சரியாகி இரண்டு ஜென்மத்தின் வாழ்வை தன் துணையோடு வாழ காத்துக் கொண்டிருக்கிறார்கள் அனைவரும்.

வசி அழிச்சாட்டியம் செய்துக்கொண்டிருந்தான்.
"டேய் நேரா கல்யாணம் செய்தா நல்லாயிருக்காது டா. எப்படி எப்படியோ காதலித்து பொழுதை கழிக்க திட்டமிட்ட என் ஆசையில் மண் அள்ளி போட்டுட்டிங்களே, என கல்யாணத்துக்கு தயாராகமாட்டேன் என அடங்காமல் வீட்டை வட்டமடித்துக் கொண்டிருக்க, பின் இவனை துறத்திக் கொண்டிருந்தார்கள். ராஜாவும் ஆகாஷும் அவனை இழுத்துபிடித்துக்கொண்டு பட்டுசட்டை வேட்டி மாற்றிவிட்டு மணமேடைக்கு இழுத்து வந்திருந்தார்கள். குடும்ப உறுப்பினர் மற்றும் சில நண்பர்களை மட்டும் அழைத்து மூன்று ஜோடியும் சிறப்பாக திருமணம் நடக்க இரண்டு தினங்கள் வீட்டில் சொந்தங்கள் நிறைந்து வழிந்தது. முதலிரவை ஒரு வாரம் தள்ளிவைத்து, புது மணத் தம்பதிகளின் சாபத்தை அனைவரும் வாங்கிக்கொண்டிருக்க.
இப்படியே நாட்கள் நகர்ந்துக்கொண்டிருக்க சொந்தங்கள் அனைவரும் கிளம்பிவிட, இத்தனை நாள் தங்களது சக்தி தெரிந்தும் பயன் படுத்த முடியாமல் அனைவரும் தவித்துக்கொண்டிருந்தார்கள்.

அனைவரும் கிளம்பிவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு மூன்று பெண்கள், வசி வீட்டிலிருக்கும் அனைத்து பொருட்களையும் பறக்க வைத்துக்கொண்டிருந்தார்கள்.

வீடே எதோ ஒரு போர்கள பூமிபோல காட்சி அளிக்க அக்னி நிலா குடும்பத்தை சேர்ந்தவர்கள்‍, "போங்கடா சிறு பிள்ளை தனமா ஆட்டம் போட்டுட்டிருக்கிங்க" என கல்யாண கலைப்பில் படுத்து தூங்கிக்கொண்டிருக்க.

அக்னி அருகில் படுத்துக்கொண்டு சமத்தாக தூங்கிக்கொண்டிருந்தான் ரிஷி. சக்தியை பயன்படுத்தி டயார்டு ஆகி படுத்து விட்டார்கள்.

அந்த நாள் அப்படியே நகர அடுத்த நாள் ஆகாஷ் அனைவரையும் ஆளுக்கு ஒரு இடத்துக்கு டிக்கட் போட்டு அனுப்ப படாத பாடு பட்டுக்கொண்டிருந்தான். வீட்டை அளங்கோளப் படுத்தி விட்டு தான் சென்றிருந்தார்கள்.

அனைவரையும் கார் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் வீட்டை தலைகீழாக மாற்றிவிட்டு தான் சென்றிருந்தார்கள்.

ஆகாஷ்க்கு வீட்டின் நிலையை பார்த்து கலங்கி நின்றார்கள் அது பத்தாது என தூங்கிக்கொண்டிருந்த ரிஷி எழுந்து சுற்றலில் விட்டுக்கொண்டிருந்தான்.

ஆகாஷ் நிலையை பார்த்த சைலு வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

"மகனே என்னை எப்படி சுத்தலில் விட்ட அதுக்கு வட்டி போட்டு என் மகன் உனக்கு கொடுக்கயிருக்கான்" என சைலு ஆகாஷின் நிலை பார்த்து அகமகழ்ந்து நின்றாள். எப்படி எப்படி எல்லாம் என்னை டார்ச்சர் செய்த, அதுமட்டுமில்லாமல் காதலிச்சி நடிச்சி கஷ்டப்பட்டு கல்யாணம் செய்தா பெரிய இவன் மாதிரி ஒரு வருசம் டைம் கேட்டு மயக்கத்துல எல்லாம் முடிச்சிட்டு பாவிபயன் நான் லூசு போல கனவுல நடந்ததுக்கு எப்படி பிரக்னென்ட் ஆனேன்னு குழப்பிவச்சி, குடிகாரிக்கு ரோட்டில் போரவரவங்ககிட்ட எல்லாம் பைத்தியம் போல புலம்பி சொல்லும் போதே இப்படி மூச்சி வாங்குது. எனக்கு எல்லாம் நடக்கும் போது எப்படியிருந்திருக்கும் என சைலு சொல்லிக்காட்ட, ஆகாக்ஷ்க்கு அவளின் நிலையை நினைத்துப் பார்க்கும் போதே மனதில் ஒரு மலைப்பு வந்தது.

சைலுவை ஒரு சுழற்று சுழற்றி "நல்லா வச்சி செஞ்சிட்டேன்ல, உனக்கு நிறைய கஷ்டமில்ல" என ஆகாஷ் உண்மையில் வருந்தமாகயிருந்தான்.

"அதுக்கு தான் இந்த தங்கக்கட்டி அவனோட அப்பாவை டார்ச்சர் செய்ய வந்துட்டானே" என சைலு தன் குழந்தை அடுத்து எங்கு தாவி ஓடலாம் என தனது மின்னும் கண்களை மின்ன சொல்ல. அவனும் அடுத்த இலக்கை நோக்கி பறக்க மகன் ஆகாக்ஷ்க்கு டிமிக்கி கொடுத்து ஓடுவதை ரசித்துக்கண்டிருந்தாள் சைலு.

ஆகாஷ் இங்கு நடந்துக்கொண்டிருந்த கலவரத்தில் அனைத்து பொருப்பையும் மனோ இருவரையும் அழைத்திருந்தான்.

சைலு போனை எடுத்து பேச, "சொல்லுடா இப்போ தான் போன் செய்ய தெரிந்ததா குழந்தை வச்சிட்டு இங்க ஒருத்தி கஷ்டப்பட்டுட்டு இருக்காலேன்னு எதாவது அறிவுயிருக்கா டா" என பொறிந்து தள்ள.

"சைலு என்னை திட்டுறதுயிருக்கட்டும் என்னை வந்து காப்பாத்து, ரொம்ப ஆபத்து" என அவன் பதட்டமாக பேசிக்கொண்டிருக்கும் போதே மனோவின் போன் கட் ஆனது.

மனோக்கு என்ன தான் சரக்கு அடித்து தள்ளாடிய போது தோள் கொடுத்த நண்பனாயிற்றே, அவனுக்கு உதவி செய்ய ஆகாஷையும் ரிஷியையும் தூக்கிக்கொண்டு பதற்றத்தோடு கிளம்பப் போகும் வழியில் மனோக்கு அழைத்துக்கொண்டே போக தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக பதில் வந்துகொண்டிருந்தது.

மனோக்கு என்னாச்சி?
 
Status
Not open for further replies.
Top Bottom