Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL மாய நிலா - Tamil Novel

Status
Not open for further replies.

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18


மாய நிலா 32

ஆகாஷ்… சைலு தமது அடங்காத ரிஷியை ஒரு வழியாக அறைக்கு அழைத்துக்கொண்டு வருவதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஒருவழியாக அடித்துபிடித்து மனோயிருக்கும் இடத்துக்கு வந்து சேர, சைலுவை வைத்துசெய்ய ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருந்தது.

"ஏன் கா… குழந்தை பிறந்ததை கூட என்ட சொல்லல உனக்கு தெரியாதா" என பாச மிரட்டலிட்டு சைலுவை நெருங்கினார்கள் அந்த கல்லூரி மாணவர்கள், சைலுவின் சேட்டையால் கிடைத்த நண்பர்கள்.

"குழந்தை பிறந்திருக்கு அதுக்கூட சொல்லல" என கோபத்தில் அனைவரும் முறைத்திருக்க.

சைலுதான் முதலில் இவர்கள் பாசத்தில் திக்கு முக்காடி போனாள், தன்னை சமநிலை படுத்திக்கொண்டு.

"சரி சரி ஈசியா விடுங்க, பிடிங்க நீங்களே வச்சிக்கோங்க, இந்த குட்டி பிசாசு நிம்மதியா என் லவ்வர்கூட கூட பேசவிடுரதில்லை. இன்னும் ஒரு மாசத்துக்கு இவனை வச்சி பாத்துக்கோங்க. இவனுக்கு பசித்தால் மட்டும் கூப்பிடுங்க சும்மா சும்மா எங்களை டிஸ்டர்ப் செய்யக்கூடாது" என அந்த பாச கூட்டத்திடம் குழந்தையை கொடுத்துவிட்டு செல்ல.

ஆகாஷ்தான் கூச்சத்தில் நெழிந்து கொண்டிருந்தான்.

"என்ன டீ… சின்ன பசங்க முன்னாடி இப்படி பேசிட்டிருக்க".

"இதுக்கே இப்படி சொன்னா என்ன அர்த்தம் ஆகாஷ் நீ செய்த அனைத்தும் ஒரு மெகா சீரியல் எடுக்கும் அளவுக்கு சொல்லி வைத்திருக்கேன்" என ஆகாஷை இன்னும் அதிரவைத்தாள்.

"எது… அந்த ஒன்னியர் மேட்டரா?" என அவன் கேட்க.

"கிஸ் தொடங்கி… நீ செய்தது அனைத்தும் சொல்லிவிட்டேன்" என ஆகாஷை அதிரவைத்தவள்.

"அதைவிடு ஆகாஷ் எனக்கு கால் கை எல்லாம் ஒரே வலி பையனை தூக்கிட்டு வந்ததில், கால கொஞ்சம் அமுக்கிவிட்டா நல்லாயிருக்கும்".

"அடிப்பாவி…! இதுக்கு தான் தனியா கூட்டிட்டு வந்தியா? நான் கூட என்மேலயிருந்த ஆசையில கூட்டிவந்தன்னு நினைச்சேன்" என்று அவன் காற்றுப்போன பலுனாக சொல்ல.

"டேய்… நீ செய்ததுக்கு வட்டி முதலும் கொடுக்க வேண்டாமா? இன்னும் ஒரு மூணுவருசத்துக்கு டச் மீ நாட் காண்ட்ராக்ட்" என சைலு அசால்ட்டாக சொல்ல.

"என்னாது... மூணு... மூணு வருசமா" என வாயில் வார்த்தை வராமல் ஆகாஷ் திக்கித் தினறிப் பேச.
"அதே தான் ஒரு திருத்தம் இரண்டு மூணு இல்ல… ஒரே மூணு தான்" என சொல்லிவிட்டவள் சோபாவில் சாய்ந்துகொண்டு. ஆகாஷ் மடிமீது கால் வைத்து படுத்துக்கொண்டாள்.
ஆகாஷ் நீ செய்த அனைத்துக்கும் மீட்டர் வட்டி ஸ்பீடு வட்டி என எக்கச்சக்க வட்டி போட்டு கலக்ட் செய்வா போல, என அவன் மனதில் புலம்புவதாக நினைத்து வாய்விட்டு புலம்ப.

"ஆகாஷ்..." என்று அழைத்தாள் சின்ன குரலில்...

"என்ன சைலு" என்றான் அவளது கால்களை அழுத்தியவாறு.

"நெக்ஸ்ட் டைம்… மைன்ட் வாய்ஷ் மனசுல பேசு, வெளியே இருக்கவங்களுக்கு கூட கேட்டிருக்கும். அவ்வளவு சத்தம்" என சொல்லி மணியாக சிரித்தாள்.

"வேணா சைலு சிரிக்காத…" ஆகாஷ் முகத்தில் கோபம் எட்டிப்பார்க்க.

"சைலு எஸ்கேப் ஆகிடுடி தங்கம்" என மனதில் நினைத்தவள் எழுந்து ஓட எந்திரிக்கும் போது அவளை வளைத்துபிடித்திருந்தான் ஆகாஷ். "எங்க ஓடுர நானும் போனா போவுதுன்னு விட்டா மேடம் ரொம்ப துள்ளுரிங்க" என அவன் குரல் கணிரென மிரட்டினாலும் அவனது செயலில் காதல் பொங்கி வழிந்தது.

சைலுவை பூங்கொத்தை கையாலுவது போல தாங்கினான் சைலுவை.

"சார் பேச்சிக்கும், செயலுக்கும் சம்பந்தமேயில்லையே..." என சைலு தனது குறும்புக்குரலில் சொல்ல.

"கோபமாதானடி இருக்கேன்... உன்னை அப்படியே ராச்சனா மாறி, மொத்தமா எனக்கூட வைத்துக்க" என அவன் காதல் பொங்க பேச.

"அது எல்லாம் முடியாது... மூணு வருசம் டச் மி நாட் டீல் ஐயா மறந்துட்டிங்களா" என மீதி வந்த வார்த்தை அவனின் இதழுக்குள் சத்தமில்லாமல்தான் சொல்லி முடித்திருந்தால் சைலு.

விட்டகாதலை இன்று தொடங்கியது இந்த காதல் பைங்கிளிகள்.

எப்போதும் அமைதியாக வந்துகொண்டிருக்கும் ஆதிரா அர்ஜுனிடம் வாய் வலிக்கும் அளவிற்க்கு அர்ஜுனின் காது கிளியும் அளவிற்க்கு பேசினாள் பேசினாள் பேசிக்கொண்டேயிருந்தாள். இன்று தான் பல வருடத்திற்குபின் பேச்சிவந்தவள் போல காதல் வசனமாக பேச.. 'ஐயோ என் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே.. இப்படி மேடையில் பேசுவது போல என்றுமில்லாமல் பேசிக்கொண்டே போனால், முதல்ராத்திரி கொண்டாடி குழந்தை பெத்து.. அதை வளர்த்து என் வாழ்க்கைக்கு விடிவேயில்லையா?' என கடவுளிடம் மன்றாடிக்கொண்டே கட்டிலில் சாய்ந்த வாக்கில் "ம்ம்... ம்ம்" என பாதித்தூக்கத்தில் படுத்தவன் ம்ம் கொட்டுவதை விட்டுவிட்டு தூங்கிப்போனான், அர்ஜுன்.

'என்ன மாமா சத்தத்தை காணேம்' என ஆதிரா திரும்பிப் பார்க்க அர்ஜுன் நிஜத்தில் கொண்டாடாத முதலிரவை கனவில் கொண்டாடிக் கொண்டிருந்தான்.

அதுவும் பொறுக்காமல் இந்த ஆதரா ஆத்திரத்தில் "டேய் மாமா இவ்வளவு கலவரத்தில் பேசாதது எல்லாம் பேசி முடிச்சிடனும்னு இங்க நான் உயிரை கொடுத்து பேசிட்டிருக்கேன். உனக்கு என்ன தூக்கம் வேண்டியிருக்கு" என தன் வலிய கரத்தால் அவனை புரட்டி எடுக்க.

அர்ஜுன் கனவில்

"மாம் எதுக்கு இப்படி பார்க்கர.. ஏதோ ஆகுது" என ஆதிரா சிணுங்க.
அவளின் சிணுங்கள் அர்ஜுனுக்கு அடுத்த கட்ட அடிக்கு அடிப்போட. ஆதிரா இன்னும் சிணுங்க பொறுமையில்லாதவன் ஆதிரா இதழ்களை சிறைப்பிடிக்க ஒரு இன்ச் இடைவெளியில் ஆதிரா அடி பொறுக்காமல் கண் திறந்தவனுக்கு ஆத்திரம் மட்டும் தான் மிஞ்சியிருந்தது.

"ஆடியேய் பிசாசே.. கனவுல கூட டூயட் பாடக்கூடாது அவ்வளவு தானே உனக்கு" என கோபமாக எந்திரித்து மொட்டை மாடிக்கு போய்விட்டான்.

"ஊமை மாதிரி சுத்திட்டு பாவி மகள் பேசியே என் முத ராத்திரியை கெடுத்துட்டா… கடங்காரி" என சுவற்றில் சாய்ந்து நின்றுக்கொண்டிருந்தான்.

"ஐய்யோ… அர்ஜுனையே இப்படி கோபப்பட வச்சிட்டியே ஆதிரா கோபம் வந்தா ஐயாவை மலையிறக்குவது வேறு ரொம்ப கஷ்டமாச்சே" என பூனைகுட்டி நடைபோட்டு மாடிக்கு வர. அவள் வருவதை பார்த்த அர்ஜுன் திரும்பி நின்றுகொண்டு "இங்கயும் அவளது சொற்ப்பொழிவு அரங்கேற்ற வந்துட்டா" என அவனது கோபத்தை சுவற்றை பிடிப்பதில் காட்டிக்கொண்டிருந்தான் அர்ஜுன்.

நைசாக வந்தவள் அர்ஜுனை பின்னிருந்து அணைத்தவள்.

"சாரி ஏதோ உணர்ச்சிவசத்துல கொஞ்சம் பக்கம் பக்கமா பேசிட்டேன்".

"எது கொஞ்சமாவா.. மணி என்னன்னு தெரியுமா ஒரு மணி பேசுற நேரமாடி இது" என அவள் அணைப்பின் கதகதப்பை ரசித்துக்கொண்டே மென்மையாக பேச.

'ஆதிரா சாமி மலையிறங்க போது எதாவது பேசி சாந்தமா பேசி நார்மல் ஆக்கிடனும்' என நினைத்தவள்.

'இனி பேசவே மாட்டேன் போதுமா' என்றால் அர்ஜுனை பின்னிருந்து அணைத்துக்கொண்டே.

அவளை ஒரு சுழற்று சுழற்றி முன் வரவைத்தவன் ஆதிராவை தன் உயரத்துக்கு தூக்கி அணைத்துக்கொண்டவன்.

"நீ பேசரது எல்லாம் எனக்கு பிரச்சனையில்ல கேட்க நான் உன் கூட எப்பவுமிருக்கும், அதுக்குன்னு முதராத்திரியில மேடம் மேடையில் மைக் பிடிச்சி பேசனது தான் கொஞ்சம் காண்டாகிடுச்சி" என அர்ஜுன் இனக்கமாக பேச ஆதிராவுக்கு சிறு வயது சில நினைவுகள் வந்து முகம் மாறியது.

அவளது முக மாற்றத்தை குறித்துக்கொண்டவன். "எதுக்கு இதுக்கு இப்படி போகுது முகம்" என கேட்க.

ஆதிரா கோபமாக அவனிடமிருந்து விளகியவள்.

"உங்களுக்கு நான் எது செய்தாலும் தப்பு தான் உங்களுக்கு தான் என்னை பிடிக்கவே பிடிக்காதே நான் தான் உங்க பின்னாடி அழைந்துகொண்டு காதல் வசனம் பேசிக்கொண்டிருந்து இருக்கேன்" என அவளது பவளக்கண்களில் ஒரு துளிக்கண்ணீர் வெளிவந்தது.

"என்னாச்சி எதுக்கு இவ்வளவு எமோசன், நீ தான் ஸ்ட்ராங்கா இருக்க பெண்ணாச்சே" என அர்ஜுன் ஆதிராவை ஆராய்ச்சா பார்வை பார்க்க.

"எப்பவும் உனக்கு, அக்னி தான் முக்கியம் இது போராமையில சொல்லலை. அவள் கிறுக்கி தந்தா கூட ரவி வர்மன் பெயின்டிங் போல தூக்கி வச்சி கொண்டாடுவிங்க. நான் அழகா எதாவது வரைஞ்சி வச்சா அதை கண்டுக்கக்கூட மாட்டிங்க தானே. அதுமட்டுமா அவளுக்கு பாசமா ஊட்டிவிடுவிங்க, என்னை பார்த்தா எப்போதும் எறிஞ்சி விழுவது. தனியா படுக்க பயமாயிருக்குன்னு உங்க ரூம்க்கு வந்து படுத்தா அடிச்சி துரத்தாத குறையா துரத்துவிங்க. அதுவே அந்த இடத்துல அக்னியிருந்தா.. கொஞ்சி கதை சொல்லி தூங்கவைப்பிங்க" என சிறுவயதிலிருந்த ஆதிராவின் மனதில் அடைத்துவைத்திருந்ததை மூச்சிவாங்க சொல்லிமுடித்தவளை. அர்ஜுன் அலேக்காக தூக்கிவந்து கிட்சனில் உட்கார வைத்தவன் முதலில் தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினான்.

'நான் எலவ்வளவு பீல் செஞ்சிட்டிருக்கேன் கல்லு மாதிரி நிக்கறான் பாரு ராட்சசன்' என மனதில் திட்டிக்கொண்டிருக்க.

"மேடம் திட்டி முடிச்சாச்சா…"

"ஆச்சி ஆச்சி" என ஆதிரா எங்கோ பார்த்து சொல்ல.

"இங்க பாரு" என அர்ஜுன் அவளது முகத்தை தன்னை நோக்கி பார்க்க வைத்தவன்.

"நீ சூப்பரா வரைவ ஆனால் ஒரு டைம் சூப்பர் சொல்லிட்டா அதுக்கு அப்பறம் உன்னிடம் ஒரு அடுத்த கட்டத்துக்கு கத்துக்கறதையே மறந்து அதே இடத்துல நீ நிறைய முறை நின்றிருந்ததை பார்த்து தான், உனக்கு நெகட்டிவ் மோட்டிவேசன் தான் உனக்கு சரி வரும்ன்னு சொன்னேன். அக்னி சும்மா நீ வரையரன்னு எதாவது கிறுக்கிட்டு வந்து கொடுப்பா அது குழந்தை எது செஞ்சாலும் ஒரு அண்ணனா நான் தான் பாத்துக்கனும்" என அர்ஜுன் நிறுத்தி ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவன்.

"நான் உன்ன சின்னதுல இருந்து காதலிச்சிட்டிருந்தேன். திடீரென ரூம்க்கு வந்து என் பக்கத்துல நீ படுத்தா என்னால எப்படி அமைதியாயிருக்க முடியும் அதான் ரூம் விட்டு துரத்திவிட்டேன். அவ என் தங்கச்சி ஆனா உன்னை அப்படி நினைக்கலை அதுமில்லாம நீ ஒரு புலோவில் என்னை அண்ணா கூப்பிட்டுடுவ அது எரிச்சலை கிளப்பி நான் எதாவது திட்டிவிட்டுடுவேன்" என அர்ஜுன் பொறுமையாக விளக்கம் கொடுத்தவன். பிரிஜ்ஜையை திறந்து ரு ஐஸ் கீரிம் டப்பாவை திறந்து அவளிடம் கொடுத்து. "சாப்பிட்டு பொறுமையா வா" என படுக்க போய்விட்டான்.

'ஆதிரா இப்படி சொதப்பி வச்சிருக்கியே ராட்சசி' என அந்த ஜஸ்கிரீம் டப்பாவை மூடிவைத்தவள் அர்ஜுனை நோக்கி நடந்து சென்றாள்.

அவனே தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.

அவனின் தலைக்கு அருகில் அமர்ந்தவள்.

அர்ஜுனின் தலையை எடுத்து தன் மடிமீது வத்துக்கொண்டவள்.

"சாரி" என்றாள்.

"அது எல்லாம் ஒன்னுமில்லை... நீயும் வந்து படு" என அவள் மடியிலிருந்த தலையை எடுக்க பார்க்க.

ஆதிரா இல்லை என்பது போல தலையாட்டி அவனது முகத்தை பிடித்து கண்களில் காதல் பொங்க லவ் யூ சொன்னால் முதல் முறையாக
அதை ஏற்றுக்கொள்ளாதவன்.

"தமிழ்ல சொல்லு" என்று அவளை பார்த்தவாறு அமர்ந்துகொண்டான்.

சொல்லமாட்டேன் என்பது போல தலை அசைக்க… ஆதிராவின் முகத்தில் இளம் சூரியக் கதிர்கள் பட்டது போல முகம் சிவந்திருந்தது ஆதிராவின் சிவக்க சிவப்பை ரசித்தவன் அவளை நெருங்கி இருவருக்கான தனி உலகில் பயணிக்கத் துவங்கினார்கள்.
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18


33...மாய நிலா

ராஜா... ரோஸை அவளது பாட்டிவீட்டுக்கு அழைத்துச் சென்றான் ரோஸ்க்கே தெரியாமல்.
கல்யாண அலைச்சலில் நன்றாக தூங்கிக்கொண்டு வந்தவளுக்கு எங்கு போறோம் என்று தெரியவில்லை.

ரிஷியுடன் விளையாடி இன்னும் சோர்வில் அடித்து போட்டார் போல தூங்கிக்கொண்டிருந்தாள். சில மணி நேரம் கழித்து ராஜா பாட்டி வீட்டு வாசலில் நிறுத்த அவர்கள் வருவதை பாட்டியிடம் சொல்லிவிட,
பாட்டி ஒரே பரபரப்பாக… இருவருக்கும் தன் கையால் சமைத்துவிட்டு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.
ஊர் எல்லைக்கு வரும் போது ராஜா பாட்டிக்கு இன்பார்ம் பன்னதும் பாட்டி இருவரையும் வரவேற்க்க, ஆரத்தித் தட்டுடன் அமர்ந்திருந்தார்,
ராஜா வண்டியை நிறுத்திவிட்டு.

ரோஸை அலேக்காக தூக்கிக்கொண்டு வாசலில் நிற்க, பாட்டி இந்த கண்கொள்ளா காட்சியை பார்த்து... மகிழ்ச்சி கடலில் மூழ்கினார்.

எங்கே சிறுவயதிலிருந்து தனியாக வாழ்ந்து வந்த தன்னை போலவே தனிமையில் இருந்துவிடுவாளோ? ஆனால் தன் பேத்தியின் கணவன் குழந்தை போல தூக்கி வருவதை பார்த்து சந்தோஷத்தில் மிதந்தார்.

ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பிவிட பாட்டியிடம் அவள் ரூம் எங்கயிருக்கு என சைகையில் கேட்டு... அவளை பூப்போல படுக்கவைத்தவன். போர்வையை போற்றிவிட்டு கையோடு கதவையும் சாற்றிவைத்தவன். பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தான்,
"பாட்டி நல்லாயிருக்கறிங்களா?" என வந்ததும் விசாரிக்க முடியாததை விசாரிக்கத் துவங்கினான்.

பாட்டியும் பாசமாக கவனித்துக்கொண்டார்.

பாட்டி ஜூஸ் கொடுத்ததும் ராஜா குடித்துக் கொண்டிருக்கும் போது, ரோஸ் எழுந்துகொண்டாள். பக்கத்தில் சுற்றிப்பார்க்க உண்மையிலேயே ஆனந்த அதிர்ச்சிதான்.
அவள் குழந்தையிலிருந்து கிரிக்கிவைத்த பொம்மைகள் அனைத்தும், ஒட்டிவைத்த கலர் காகிதங்கள் என அன்று வீடு எப்படியிருந்ததோ... இன்றும் பாட்டி அப்படியே வைத்திருந்தார்.

சுற்றி பார்த்தவள் மனதில் அவளது சிறுவயது நினைவுகள் அலைமோதி வந்துகொண்டிருந்தது.

தனிமையில் தான் வளர்ந்தாள்.

சிறுவயதிலேயே, மருத்துவத்தில் ஆர்வமாகயிருந்தவள், ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருந்தாள் இப்படியே இவளின் வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது.. கடைசியாக ராஜாவை பார்த்ததிலிருந்து காதல் கொண்டவள்.. அவனுக்கு தெரியாமல் ரசிப்பது என நாட்களை கடத்திக்கொண்டிருந்தாள். ராஜா பதவி பணம் எல்லாம் பார்த்து விலகித்தானிருந்தாள்.. ஆனால் அவனை விலகியிருந்தவள், அவனது விலகலை ஏற்றுக்கொள்ள முடியாமல் காதலை சொல்லியவள். பழைய நினைவு வந்ததும் இனியும் பிரிந்திருக்க முடியாது என அடுத்த நாளே கோவிலுக்கு கூட்டிச்சென்று தாலியை வர்ப்புறுத்தி கட்டவைத்துவிட்டாள்.

நிகழ்வுலகுக்கு வந்தவள்... ராஜாவைத்தான் கண்கள் முதலில் தேடியது. தனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கத்தான் இங்கு அழைத்துவந்திருக்கும் தன் காதலனை நினைத்து, வெளியே வந்து பாட்டியை பார்க்க ஓடிவந்தவள் பாட்டியை கட்டிக்கொண்டு... ராஜாக்கு ஒரு பறக்கும் முத்தத்தை கொடுத்தாள்.

அவளது செயலை பார்த்த ராஜா.. அடிப்பாவி என தனதுவாயில் கையை வைத்துக்கொண்டான்.

'பூனைமாதிரி இருந்துட்டு என்ன வேலை பார்க்குறா பாரு' என பார்க்க.

எப்போதும் தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவள்.

குழந்தையாக மாறி பாட்டியிடம் கைகளை ஆட்டி கதைகள் பேசிக்கொண்டிருந்தாள்.

தன் மனைவியை ரசித்துக்கொண்டே அன்று மதிய உணவை முடித்துவிட்டு மூவரும் ஓய்வாக அமர்ந்திருக்க.

பாட்டி ஒரு சாவியை எடுத்துக்கொடுக்க "எதுக்கு சாவி" என இருவரும் சாவிமீது ஒரு பார்வை வைத்துக்கொண்டு கேட்க.

"நம்ம தோட்டத்து வீட்டை சுத்தம் செய்து வச்சி இருக்கு.. அங்க போய் தங்கியிருங்க" என பாட்டி சொன்னதும், ரோஸ் குதிக்கத் துவங்கினாள். அவளுக்கு பிடித்தயிடம் 'எதுக்கு சிறுப்பிள்ளையாக குதித்துக் கொண்டிருக்கா... எப்படி இருக்க போது அந்தயிடம்" ராஜா யோசனையாக நின்றிருக்க..

"பாட்டி டாட்டா... நாங்க கிளம்பறோம்" ராஜா கையை இழுத்துக்கொண்டு வெளியில் துள்ளிகுதித்துவர.

"ரோஸ் பொறுமையாயிரு, எதுக்கு இந்த ஆட்டம் ஆடிட்டிருக்க.. வண்டி சாவி கூட எடுக்கலை" ராஜா சொல்ல,

"இரண்டு கிலோமீட்டர் தான் வா நடந்துட்டே போலாம்".

"ஓய்... என்னால நடக்க முடியாது இப்பவே ரொம்ப டையார்ட் ஆகிட்டேன்" என ராஜா சோர்ந்து உட்கார.

ரோஸ் விட்டுடுவாளா என்ன "ராஜா..." என தன் இடையில் கைகளை குன்றிக்கொண்டு முறைக்க.
"போதும் ஆத்தா முறைக்காத, சரி வா" இருவரும் ஆளில்லா சாலையில் நடந்து போனவர்கள். சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த ஒரு தோட்டத்துக்கு உள்ளே செல்ல.

வண்ணவண்ண பூக்கள் குலுங்க... சுற்றிலும் மரம், செடி கொடி... பூக்கள், பழங்கள் என பூத்துக்குலுங்க... அங்கு ஒரு பழைய காலத்து சிறிய வீடிருந்தது. ஒரு வரவேற்பு அறை, சமையல் அறை என கச்சிதமாக வடிவமைத்திருந்தது.

"ரோஸ் இது யார் வீடு செம்மையாயிருக்கு" என சுற்றிப்பார்த்தவன்.

"அம்மா அப்பா ஓட வீடு..." என அவள் சொல்ல.

"அவங்க எங்க?" என ராஜா தயக்கத்தோடு கேட்க.

"சின்னதுலையே இறந்துட்டாங்க" சோகமாக சொன்னவள் ராஜா முகம் மாறிய அடுத்த நொடி தனது முகத்தை மாத்திக்கொண்டு சரி விடு... என மலரும் நினைவுகளை பற்றிச் சொன்னவள். அங்கிருக்கும் அறையை திறந்து பார்க்க இருவரும் முதலில் அதிர்ந்தாலும்.. இருவர் முகத்திலும் வெட்கம் பூசிக்கொண்டது.

பாட்டி அழகாக... முதலிரவுக்கு அறையை அழகாக அலங்காரம் செய்து வைத்திருந்தார்.
இங்கயிருக்கும் பூக்களை வைத்து, நேர்த்தியாகயிருந்த பூக்களை வருடிக்கொண்டிருக்க.

ராஜா ரோஸ் அருகில் வந்து நின்றவன், அவனது மூச்சிக்காற்று அவளது வெற்று முதுகில் மோதியது.

சூழ்நிலைகள் அனைத்தும் மாறியது... இயல்பாக நின்றிருந்தவளுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. திருமணம் ஆகி சில மாதங்களானாலும், நாள் முழுவதும் தோளில் சாய்ந்து காதல் வசனம் பேசியிருந்தாலும், இன்று அவனது நெருக்கம் புதியது, இயல்பாக வரும் பதற்றம் தான் என புரிந்துக்கொண்டவன்.

ரோஸ் வெளியே கொஞ்ச நேரம் நடந்துட்டு வருவோமா? என அவளை இயல்பு நிலைக்கு மாற்ற நினைத்தான்.

தென்றலின் காற்று இருவரையும் அணைத்தது, மௌனமாய் இருவரின் விழிகளும் கதைகளை பரிமாறியது.

சற்றுமுனிருந்த தயக்கம் மறைந்து ராஜா மரத்திலிருந்த ஒரு பெரிய பலகை ஊஞ்சலில் அமர, ரோஸும் அவனது தோல் உரசியது போல அமர்ந்துக்கொண்டாள்.

அமைதியாக ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்க அவர்களின் நெருக்கத்தை கண்ட நிலா மேகத்திற்க்கு பின் ஒழிந்துகொண்டது.

லேசாக மழை தூரல் ஆரம்பிக்க இருவரும் கைகளை கோர்த்துக்கொண்டு வீட்டுக்குள் வருவதர்க்குள் நனைந்திருந்தார்கள்... மழையோடு கொஞ்சம் காதல் மனம் வீச... தயக்கத்தை மொத்தமாக தூக்கி எறிந்த இருவரும் அணைத்துக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து.. தனிமையில் தங்களின் காதல் பொழுதை செலவிடத் துவங்கினார்கள்.

அக்னியும் வசியும் வரவேண்டிய இடத்துக்கு வந்ததும்.

அக்னிநிலா மனதில் வசி நேற்று நடந்துக்கொண்டது காட்சிகளாக வளம்வந்து கொண்டிருந்தது.

"மகனே... கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டிருந்த.. இருடா பக்கம் வருவயில்லை அப்போ இருக்குடா உனக்கு" என்று மனதில் அக்னி நிலா வசியை வச்சி செய்ய திட்டம் போட்டவள்.. மெதுவாக அவர்களுக்காக புக் செய்து வைத்திருந்த விடுதிக்கு வந்தனர் இருவரும்.

கட்டிலில் எதாவது அலங்காரம் இருக்கும் என்று நினைத்த வசிக்கு அதிர்ச்சி.

வித விதமாக உணவுகள் மேஜையில் அடுக்கிவைத்திருக்க.

'அடிப்பாவி இதுக்குதான் சீக்கிரமா ரூம்க்கு போலாம்ன்னு... ராவடி செய்துட்டுயிருந்தியா?.. நான் கூட நம்மகூட தனியாயிருக்கத்தான்.. என் செல்லம் ஆசைபடுதுனு நினைச்சேன்... ஆனா' வசி மனதில் அவளை வறுத்தெடுத்துக் கொண்டிருக்க.

அக்னி நிலா உள்ளே வந்ததும்.. மெத்தையில் உட்கார்ந்து இருந்து உணவை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருந்தாள்.

வசிக்கும் அவள் சாப்பிடுவதை பார்த்ததும் தானாக பசிக்க ஆரம்பித்தது.

சரி சாப்பாடு தான் முக்கியம் சாப்பிட்டு முடிச்சதும்... 'இவளிடம் சண்டை போடலாம்' என சாப்பிட அமர்ந்தான்.. ஒரு பருக்கை கூட விட்டுவைக்காமல் அக்னி நிலா சாப்பிட்டு முடித்துவிட்டு பக்கத்திலிருந்த குட்டி பிரிட்ஜிலிருந்த ஒரு ஐஸ்கிரீம் டப்பாவை எடுத்து சாப்பிடத் துவங்கினாள்.

"அடிப்பாவி... இவ்வளவு சாப்பிட்டும் பசி அடங்கலையா, இந்த ஐஸ்கிரீம் ஆச்சி கொடு" என இருவரும் சண்டைப்போட்டு சாப்பிட்டு முடித்தார்கள்.

"சரி வசி நான் பிரஸ் ஆகிட்டு வர்றேன்" என பெட்டியிலிருந்த ஆடையை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

சிறிது நேரத்தில் தங்க நிற புடவையில் தேவதை போல வந்திருந்தாள்.

வசி அக்னி நிலா அருகில் வந்து "வெய்ட் செய்ய... அஞ்சி நிமிசத்தில வந்துடறேன் அவளை விழுங்கிவிடுவது போல பார்த்துச் சென்றான்.

"டேய்... நீ என்ன பார்வை பார்த்தாலும் ஒன்றும் நடக்காது" அக்னி நிலா படுத்து தூங்கிவிட்டாள்.

குளித்துவிட்டு வந்து பார்த்தால் நல்லா கும்பகர்னி போல தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்து.
"இவ்வளவு கொட்டிக்கிட்டா.. இப்படி தான் தூக்கம் வரும்" அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்தவன் அவளுக்கு வலிக்காதது போல தலையில் செல்லமாக கொட்டினான்.

அக்னி நிலா சிணுங்கிக்கொண்டே மறு புறம் திரும்பி படுத்துக்கொள்ள.

வசியும் அக்னியை தொந்தரவு செய்யாமல் படுத்துக்கொண்டு கண்களை மூடும் முன் அக்னி நிலாவின் முக்காவாசி உடலை வசி மீது வைத்து படுத்து தூங்க ஆரம்பித்தார்கள். வசி முதல் முறையாக நிம்மதியான தூக்கம் தூங்கிக் கொண்டிருக்க.

அழகாக விடிந்திருந்தது அக்னி நிலா எழுந்ததும் வெளியே சுற்றிப்பார்க்க கிளம்ப அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு தயாராகி வந்தவள்.

"அவள் உடைக்கு மேச்சாக வைத்திருந்த ஆரஞ்சு சட்டையை எடுத்து வைத்துவிட்டு வசியை எழுப்பினாள்.

"அக்னி அதுக்குள்ள எதுக்கு எழுப்புற இப்போ தானே தூங்கினேன்".

"டேய் மணி பத்தாச்சி, வா பசிக்குது சாப்பிட்டுட்டு அப்படியே ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாம்".

வசியும் தயாராகி வர, அவள் எடுத்துவைத்திருந்த சட்டையை பார்த்து, "ருத்ரா எஸ்கேப் ஆகிட்டான், இன்று நான் மாட்டிக்கிட்டேன்" என்று குறும்பு கண்களில் பார்க்க.

"அக்னி நிலா, வெளியே போகனுமா? இங்கவே இருக்கலாமே" அக்னி எதிர் பார்க்காத போது அணைத்து நிற்க.

வசியின் முதுகிலையே, நன்கு வலிக்கும் அளவுக்கு அடித்தவள் அவனை பின்னிருந்து தள்ளிக்கொண்டு சாப்பிட போக ஊர் சுற்ற போக மீண்டும் சாப்பிட ஊர் சுற்ற இரவு வழக்கத்தை விட சீக்கிரம் தூங்கிடுவது, அக்னி நிலா வசியை அவள் பக்கம் நெருங்கவேயில்லை.

இப்படியே ஒரு வாரம் செல்ல.

"இப்ப என்ன பிரச்சினை எதுக்கு விலகி போற?".

"நான் எங்க விலகினேன், உனக்கு தான் கல்யாண லைப் பிடிக்கலை அதான் உனக்கு பிடிச்சது போல லவ் லைப் செய்யறேன்" அக்னி நிலா அவனது குற்றத்தை சுட்டிக்காட்டியது மட்டுமில்லாமல்.

நிச்சய மோதிரம் வசி அப்படி சொன்னதால் எப்படி அக்னி நிலா மனதில் அடிவாங்கியது வசிக்கு இப்போது புரிந்துகொள்ள முடிந்தது.

"அக்னி நிலா... நிலா குட்டி சாரி" அவன் மன்னிப்பை யாசிக்கும் முன்னே அக்னி கோபமாக முறைத்து.

"கொஞ்சம் நிறுத்து வசி" கோபமாக கத்திக்கொண்டே குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
34 மாய நிலா

என்ன தான் அக்னி நிலா வசிக்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தாலும், ஒரு எல்லைக்குப்பிறகு அவனை வச்சி செய்வது பிடிக்காமல் சரண்டர் ஆகிவிட்டாள். இருந்தாலும் அவன் திருமணம் வேண்டாம் என சொன்னதுக்கு தண்டனையாக ரூமை கலைத்துவிடுவது, அடுக்கிய துணியை கலைத்து திரும்ப மடிக்கவைப்பது, என அவன் நடக்கும் வழிகளில் எல்லாம் எதாவது சேட்டை செய்து வசியை அலர விட்டுக்கொண்டிருந்தாள்.

வசி சரியாக வேலை செய்தால் பாராட்டிவிட்டு குட்டி குட்டி முத்தங்கள் கொடுத்து அவனை சீண்டவும் மறக்கவில்லை.

அக்னி நிலா டயார்ட் ஆகும் வரை அவனை வைத்து செய்தவள். ஊரைச்சுற்றிவிட்டு இரவு தாமதமாக வந்தவர்கள், சாப்பாடு ஆர்டர் கொடுத்துவிட்டு அருகிலிருந்த பூங்காவில் உலாவிக்கொண்டிருக்க.

அக்னி நிலா வசியின் கை அணைப்பும், சுகமாக அவனது மார்பில் சாய்ந்து கொண்டு, அருகிலிருந்த பூக்களை வருடிகொண்டிருக்க.

இருவரிடமிருந்தது அமைதிதான், காதல் பொங்கிவரும் இருவரின் கண்களும் அடிக்கடி லாக் போட்டது போல அணைத்திருந்தது.

மனம் நிறைய ஆசைகள் இருவரும் பொறுத்து பார்த்தவர்கள், ஒரே நேரத்தில் உள்ள போலாமா? என சொல்லி முடித்ததும் இருவர் மனதிலும் வெட்கம் சூழ்ந்து கொண்டது.
மெதுவாக உள்ளே வரை பொறுமையாக போனவர்களுக்கு அறையை நெருங்கியதும் பொறுமை எங்கேயோ சென்றது.

இருவரின் தனிமையை உடைக்க வசி அக்னி நிலாவின் நெற்றியில் அழுத்தி முத்தம் பதிக்க, அவர்களின் அழைப்பு மணி அடிக்க வசி அக்னி நிலாவிடம் பசை போல ஒட்டிக்கொண்டே நிற்க.

"வசி பெல் அடிக்குது"

"தெரியும் டி, பிடியவே மனசில்லை" என மேகம் அறுபட்டதில் சிறு கோபமும் ஏக்கமும் அவனிடம் வெளிப்படத்தான் செய்தது மனதேயில்லாமல் அவனிடமிருந்து பிரிந்தவன்.

வாசலில் அவர்கள் ஆர்டர் கொடுத்திருந்த உணவு தனது பர்க்கலை காட்டி சிரிக்க "கிளிஞ்சது என் சாப்பாடு, ராணி நல்லா விதவிதமா மொக்கிட்டு படுத்துடுவா, போச்சி என் சந்தேசம் தூர தேசத்துக்கு போயிடுச்சி" என மனதில் புலம்பியவன். உணவுக்கான காசை கொடுத்துவிட்டு உள்ளே வரும் போது,

சோகம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது, அக்னி தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டிருந்தாள்.

உள்ளே வந்தவன் மேஜைமீது உணவை எடுத்து பரப்பி வைத்தவன்.

'இந்த குட்டி வயிறுக்குள்ள எப்படிதான் இந்த அண்டா சாப்பாடு இடம் பத்துதோ "ஒரு அடி அடிச்சா உடைந்து போவதுபோல குச்சி உடம்பு. இவ்வளவு இவள் சாப்பிடுவான்னு சொன்னால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள்" என உணவு பொட்டலங்கள் பரப்பியதை முடித்தப்பின் அதனை பிரிக்க ஆரம்பிக்க.

அக்னி நிலாவின் கரங்கள் வசி கைகளை பற்றி "பிரிக்க வேண்டாம்" என முகத்தில் வராத வெட்கத்தை வரவைக்க அக்னி நிலா முயற்சி செய்துகொண்டிருக்க. அவளின் எண்ணப்போக்கை
புரிந்துக்கொண்ட வசி அடுத்த நொடி புயல் போல அக்னியை ஆட்சிசெய்யத் துவங்கியவன். அவளது நெற்றியில் ஒரு அழுத்தமான முத்தத்தை கொடுத்து அவளிடமிருந்து பிரிந்து படுத்தவன்.

அவளது இரு கண்களை பார்த்து "சாரி" எதுக்கு என்பது போல அக்னி நிலா அவனை நோக்க.

"இல்ல" என தயங்கியவன் "அது போன ஜென்மத்திலும் சரி இந்த ஜென்மத்திலும் சரி.. அவனை தனியாவை தவிக்க விட்டு வேடிக்க பார்த்தேன்ல. "நான் உனக்கும் உன் காதலுக்கும் சற்றும் பொருத்தம்" வசி முடிக்கும் முன் அக்னி நிலா தன் பொற்க்கரங்களால் அவனது வாயை அடைத்தவள்.

"இல்ல, நீங்க சுயநலமா ஒன்னும் மறைக்கலையே, நாட்டுக்காக.. என் உயிர்க்காக மறைச்சிங்க. ஆனா இந்த ஜென்மத்தில் கொஞ்சம் உசாரா, அந்த பிசாசை உங்க உதவியோடத்தான் போட்டுத்தள்ள முடிந்தது. நீங்க உண்மை தெரிந்தும் மறைத்ததால்தானே அந்த நயவஞ்சக மிருகத்தை போட்டுத்தள்ள முடிஞ்சது" என வசி செய்ததை சொல்ல.

"அது சரி தான், ஆனா நான் சகுந்தலா பக்கமிருக்கும் போது உன் கண்களில் பார்த்த வலி என்னை வதைத்துக்கொண்டிருக்குதே".

"அது எப்படி…" என அக்னி நிலா குழம்ப.

"எனக்கு உங்களுக்கு நியாபகம் வந்த அப்போதே எனக்கும் நியாபகம் வந்துடுச்சி, ஆனா எனக்கு முன் போல அவளுக்கு அடிமையாகயிருந்து உங்களை இழக்க விருப்பமில்லாமல். சகுந்தலாக்கூட சேர்ந்து கொஞ்சம் உங்களை எல்லாம் வச்சி செஞ்சிட்டேன்" என உண்மையிலேயே மனம் வருந்தினான் வசி.

"பிராடு பயலே ஒரு வார்த்தையாச்சி சொன்னியா இருந்நாலும் எங்க மேல நீ வச்சிருக்கும் பாசத்தைக் கண்டு கண்ணு வேர்த்துப்போச்சி" என அக்னி கண்களில் எல்லையில்லாத காதலை சுமந்து வசியை பார்க்க சற்று முன் விட்ட வேலையை தொடர்ந்தான் வசி.

இருவருக்கும் மனநிறைவு அனைத்து ஜோடிகளும் தங்களது தேனிலவை சிறப்பாக முடித்து காட்டிலிருக்கும் இவர்கள் இருப்பிடத்துக்கு உள்ளே வந்துவிட்டார்கள்.

அனைவரும் அக்னி நிலா, வசி வருவதற்க்கு ஆவலாக காத்திருக்க.

இருவரும் இவர்கள் பொருமையை சோதித்து ஒருவழியாக வந்து சேர.

அக்னி நீ திரும்பவும் மூணு மூணு பேருக்கு அத்தை ஆக போரனு அவளின் அண்ணன்கள் குதுகலிக்க.

குதிக்காத குறைதான் அக்னி நிலா… "ஐ எனக்கு மருமகன் வர போது" என குதித்துக்கொண்டிருக்கும் அக்னி நிலாவை வசி பிடித்து நிறுத்த.

"அக்னி குதிக்காத குழந்தைக்கு எதாவது ஆகிடப்போது".

"ஐ நான் மாமாவாகப்போறோன்" என அர்ஜுன், ருத்ரா, ராஜா சந்தோஷத்தை அடக்க முடியாமல் குதிக்க.

சந்தோசத்தில் நிறைந்திருந்தது.

அனைவரும் தங்களது மனைவிக்கு சமைத்து ஊட்டிவிட.

"வசி எனக்கு பீளிங்கா இருக்கு".

"என்ன பீளிங்கு என் குட்டி தங்கத்துக்கு" என ருத்ரா கேட்க.

"இன்னும் எனக்கு மூணு பாப்பா வேணும்ல என் அண்ணா குழந்தைக்கு கட்டிவைக்க அதான் யோசனையாயிருக்கு"

ஆகாஷ் விழி பிதுங்கி நின்றவன். "அடியே… குட்டி ராட்சசி, உன்னை எல்லாம் என்ன செய்றது இப்ப வரப்போற நாலு குழந்தையையே எப்படி அடக்குவது என தெரியாமல் விழி பிதுங்கிட்டு இருக்கேன், அதுக்குள்ள அடுத்த பிளான் போடுரையே உனக்கு நியாயமா" என வெளிப்படையாக தலையை அடித்துக்கொண்டவன். எல்லாம் ஹனிமூன் கொண்டாடினா இந்த ரிசி பையன் விளையாட்டுக்கு கூட எக்சர்சைஸ் செய்யாத நம்ம ஆகாஷை, ரன்னிங், ஜாக்கிங், பிளையிங்குனு ஓட ஓட விரட்டிக்கொண்டிருந்தான்.

ஆகாஷின் நிலையை பார்த்து அனைவரும் சிரிக்க, என்னதான் மனதில் சிரித்தாலும் அனைவருக்கும் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. எப்படி இந்த மாய சக்தியிருக்கும் குழந்தைகளை வைத்து மேய்ப்பது என.

இப்படியே அனைவரும் தங்கள் மனைவி, தங்கை அண்ணா என ஒரு கூட்டுக்குடும்பமாக வாழ ஆரம்பித்தார்கள். அவர்கள் அனைவரும் ஆராய்ச்சி துறையிலும், அது சம்பந்தமாக ஒரு பெரிய கம்பெனி வைத்திருந்ததால் ரகசிய ஆராய்ச்சிக்கூடத்தை வீட்டுக்கு சற்று தள்ளி வைத்துக்கொள்ள அரசாங்கம் அனுமதித்தது. அதில் அனைவரும் எதையாவது கண்டுபிடிப்பது என அட்டகாசம் செய்துக்கொண்டிருக்க.

ருத்ரா வழக்கம் போல அவனது சேட்டைகள் செய்வதை நிறுத்தவில்லை. லேபை எரிப்பது பொசுக்குவது என அவன் அட்டகாசத்தை சிறப்பாக செய்துக்கொண்டிருக்க.

சில வாரங்கள் கழிந்திருந்தது, தங்களது மனைவிகளுக்கு மருத்துவராகவும் ஆகினார். வசி மட்டும் ருத்ராவின் பொறுப்பில் அக்னி நிலாவை விட்டுவிட்டான்.
வசி அக்னி நிலாவை பார்த்து பயந்துதான் போனான். சாதாரணமாகவே காட்டு தீனி சாப்பிடுபவள், நாள் முழுவதும் சாப்பிட துவங்கினாள். அதற்கடுத்த மாதம் இரவு கூட பசிக்குது என வசியை சமைக்க வைத்து ஒரு வழி ஆக்கிவிட்டாள்.

நான்கு மாதத்தில் அக்னி நிலா வயிறு சற்று பெரியதாகவேயிருந்தது. வசிக்கு பயம் தொற்றிக்கொண்டது இவ கண்டதை சாப்பிட்டு தான் வயிறுக்கு ஏதோ ஆகியிருக்கு என நினைத்து ருத்ராவை சோதிக்க அனுப்பிவைக்க. ருத்ரா வசி மட்டுமில்லை அனைவரும் அதிரும் வண்ணம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அக்னி வசியிடம் சொல்ல.

அக்னி குதிக்காத குறை தான் வசி பேய் அறைந்தது போல வெளியே வந்தான்.

மனோவும் வந்திருந்தான் அனைவரையும் பார்க்க.

அனைவரும் பதற்றமாக அமர்ந்திருந்தார்கள்.

"என்னாச்சி?" என மனோ விசாரிக்க.

"அது அக்னிக்கு டிவின்ஸ் போல தெரியுது அதான் செக் செய்துட்டுயிருக்காங்க"

ரிஷி மனோ தலையில் ஏறி உட்கார்ந்து உலுக்கி எடுத்துக்கொண்டிருந்தான்.

அனைவரும் ஆவலாக இருக்க, அக்னி நிலா வசியை பார்த்து "டிவின்ஸ் சா" ஒரு சேர கேட்க.

அக்னி இரு விரல்களை காட்டி இல்லை என்பது போல தலை அசைக்க.

அக்னி நிலா மூன்று விரல்கள் காட்ட "ஐஐஐஐ மூணா?" என அனைவரும் ஆரவாரமாக கேட்க.

"இல்ல நாலு" என சொல்லி வெட்கத்தில் வசி முதுகில் முகம் மறைத்து நிற்க, பேய் அறைந்த வசி முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாட.

மனோ கழுத்தில் அமர்ந்திருந்த ரிஷி ஒரு ஜம்ப் அடித்து அக்னி நிலா அருகில் போய் அவள் கழுத்தை கட்டிக்கொண்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்.

மனோ தன் பொட்டிப் படுக்கையை தூக்கிக்கொண்டு ஆளை விடுங்கடா சாமி ஒன்னவே வச்சி சமாளிக்க முடியலை இதுல இன்னும் ஏழு குழந்தை வந்தா அவ்வளவு தான் என வாசல் வழியாக தப்பிக்க பார்க்க,

"அப்படி எல்லாம் விட மாட்டோம் ஒரு ஸ்கூல் கட்டி எங்க பிள்ளைங்களுக்கு நீ தான் வாத்தி" என இவர்கள் குடும்பதில் ஆள்ள அடங்காத குழந்தைகளை முழு நேரம் பார்த்துக்கொள்ள அடிமை சிக்கிவிட்டது.

மனோ அலர அலர அவனை இழுத்துச் செல்ல.

இவர்களின் குடும்பத்தில் மனோவையும் இணைத்துக்கொண்டு மாயாஜாலம் ஆராய்ச்சி என சிறப்பாக வாழ்ந்து வந்தார்கள்.

நன்றி…
 
Status
Not open for further replies.
Top Bottom