Bindu sarah
Member
- Messages
- 59
- Reaction score
- 54
- Points
- 18
5 மாய நிலா
அங்கு கடலில் இருவர் சிற்றி திறிய... இங்கு நிலத்தில் ஒருவளின் காதல் பயணம்...
மயக்கும் இரவு பொழுது கண் கவரும் வண்ண விளக்குகள் அங்கும் இங்கும் கூட்டம் கூட்டமாக மக்கள் சுற்றி திரிந்தார்கள்
சிட்டி நடுவில்.... நியூ இயர் கொண்டாட்டங்கள் கோளாகலமாகத் துவங்கியது.
"டேய் உன்ன டிவோர்ஸ் பண்ணப் போறேன்டா..." என்றாள் நடு ரோட்டில் உச்சகட்ட சத்தத்தோடு, அந்த சமயம் அங்குச் சென்ற அனைவரும் இவளை வித்யாசமாகப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அவள் உடுத்தி இருந்த உடைக்கும் அவள் போடும் சத்தத்திற்கும் சிறிதும் பொருத்தம் இல்லாமல் நின்றிருந்தாள்...
கருப்புக் கலர் புடவைக் கட்டி, மேக்கப்பே இல்லாமல் அந்த சிக்னலில் ஜொலித்தாள்.. அழகு ஓவியமாக...
சற்று நேரம் தேடிக் கண்டுபிடித்து அவளது மொபைலை எடுத்து 'மியாவ்' என்று சேவ் செய்து வைத்திருந்த எண்ணிற்கு அழைத்தாள்.
சில வினாடிகள் கழித்து போனை எடுத்த அந்த நபர்... "ஷைலு எங்க இருக்க?" என்று கேட்ட அடுத்த நொடி...
"டேய்ய்ய்! நான் உன்ன டிவோர்ஸ் செய்யப் போறேன்டா. கல்யாணம் ஆகி ஒரு வருஷத்த முழுங்குன சரி.. ஏதோ பிசினஸ் செய்றன்னு உன்னவிட்டு வச்சா, எவடா அவ எலியா எலியா அவக்கூட ஒரசிட்டு போட்டோ எடுத்தது மட்டும் இல்லாம... எவ்ளோ தைரியமிருந்தா இன்ஸ்டால போட்டோ வேறப் போடுவ!!".
பேசிக்கொண்டே போனவளை நிறுத்தி "குடிச்சிருக்கியா?" என்றான் கடுமையாக .
"ஆமா நீ எப்படிக் கண்டுபிடிச்ச?? ஆமாடா அப்படித்தான் குடிப்பேன் உனக்கு என்ன" என்று போனை வச்சிட்டு.
'எலியா எலியா... மை பெஸ்ட்டி' என்று டேக் செய்யப்பட்ட போட்டோவைப் பார்த்து வெறிவந்த ஷைலு... போனை அங்கேயே போட்டுவிட்டு... 2 மிதி மிதித்துவிட்டுக் கொஞ்சம் தூரம் நடந்தாள்.
அங்கு அமைதியாக ஒரு கும்பல் உட்கார்ந்து இருக்க, அவர்கள் அருகில் சென்று நின்று..
"இங்க என்ன கூட்டம், நியூஇயர் செலிப்ரேட் செய்யாம" என்று வழியப் போய்ப் பேசினாள் ஷைலு.
"அதெல்லாம் எங்களுக்குப் பிடிக்காது கா... மீட் பண்ணனும்னுத் தோனுச்சி அதான் இங்க உட்காந்து, வேடிக்கப் பாக்கறோம்" என்றான் அதில் ஒருவன்.
'நானும் வரேன்டா வேடிக்க பாக்க' என்று அங்கு அமர்ந்திருந்த ஒரு பொண்ணுப் பக்கத்தில் போய் உட்காந்தாள் ஷைலு.
"ஹே நீ லவ் செஞ்சிருக்கியாடி?" என்று கேட்டாள் ஷைலு, பக்கத்தில் இருந்த பெண்ணிடம்.
"இல்ல கா இனிதான், தேடிட்டு இருக்கேன், எதாவது நல்ல பையனா இருந்தாச் சொல்லு" என்றாள் அந்தப் பொண்ணு.
"ஏன்? உனக்கு நல்ல பையன்தான் வேணுமா? ஆனா இருக்கறதுலயே மோசமான ஒரு பையனதான் லவ் பண்ணேன் தெரியுமா?" என்றாள் ஷைலு அனைவரையும் பார்த்து.
"அக்கா ஏதோ நல்லா அடி வாங்கிருக்கப் போல....." என்றான் ஒருவன்.
"பலமா டா.... நல்ல வலி, அதான் போய்க் கொஞ்ச ரவுண்டு ஏத்திட்டு வந்தேன், அந்த நாயைத் திட்ட" என்றாள் ஷைலு .
அதில் துருதுருவென ஒரு பெண்... "அக்கா! எத்தனை ரவுண்டு, 1.2.3.4...." என்று கையைக் காட்டிக்கொண்டே போனாள்.
"என்னக்கா பாக்க குடும்பக் குத்துவிளக்கு மாதிரி இருக்கீங்க, செமயா அடிக்கிறீங்க தூள்... சூப்பர் கா" என்றாள்.
"எனக்கென்ன ஆசையா, இப்படி இருக்கனும்னு? அவனுக்குப் பிடிக்கும்ன்னு நா சாப்டுறத கூடக் குறைச்சிட்டேன் டா... முன்னாடி 65 கிலோ இருந்தேன் தெரியுமா, இப்போ வெறும் 45 தான்டா இருக்கேன்" என்று புலம்ப ஆரம்பித்தாள் ஷைலு.
"அக்கா நீ ரொம்பப் பாவம்தான்.... அவ்ளோ லவ்வா மாமா மேல?"
உட்காந்து பேசிக்கொண்டு இருந்தவள், எந்திரித்துக் கையை அகலமாக விரித்து.... "இவ்ளோ, இவ்ளோ, இவ்ளோ.... இன்னும் இன்னும் அதிகமா லவ்வு" என்றாள் ஷைலு கண்களில் காதல் பொங்க.
"அக்கா அப்போ ஸ்டார்ட் பண்ணு உன்னோட ஸ்டோரிய" என்று அங்கு இருந்த கும்பல் கூச்சல் போட.
"எப்படி இருப்பான் தெரியுமா?", என்று ஆரம்பித்தவள்.... "ஜம்முனு ராஜாக் கணக்கா இருப்பான். செம ஹேண்ஸம், டேலன்ட் எல்லாம் என்னவே முடியாது, பிரண்டுனா உயிரக்கூடக் கொடுப்பான். ஸ்வீட் அண்டு சாக்லேட் பாய் மத்தவங்களுக்கு மட்டும்" என்றாள் உற்சாகமாக ஆரம்பித்தவள் சோகமாக முடித்தாள்.
"மத்தவங்கள விடு. உன்னப்பத்திச் சொல்லு, உன்ட எப்படி மாமா நடந்துக்குவாரு?" என்று ஆர்வத்தில் அனைவரும் ஒருசேரக் கேட்க.
"சரியான பிக் சைஸ் மியாவ், எப்போ பாரு மொறச்சிட்டே இருப்பான், நான் ஆசையா ஐ லவ் யூ சொன்னா.... அவன் என்ன சொன்னான் தெரியுமா?"
"என்ன சொன்னாங்க கா?" கோரஸாகக் கூறினர்.
"ஐ லவ் மை பேமிலி" ன்னு சொன்னான்".
"அச்சோ அப்புறம் என்னாச்சி".... என்றனர் அனைவரும்.
"டேய் கோரஸ்ஸ நிறுத்துங்கடா எனக்கு ஃப்லோ வரல"...
"சரி கா நீ சொல்லு"... அனைவரும் வாய் மீது விரலை வைத்து அமைதியானார்கள்.
"சரி பேமிலி தான் பிடிக்கும்ன்னு சொல்லிட்டேனே... இவனக் கரெக்ட் செய்றது ரொம்பக் கஷ்டம், பேமிலிக்குள்ளப் போய்டலாம்ன்னு பிளான் செஞ்சி, என் அப்பா முன்னாடிப் போய் நின்னா... அவரே ஒரு நல்ல ஆபர் குடுத்தாரு... ஆனா அது எனக்கு ஒரு யூஸ்ஸும் இல்ல"
"அப்படி என்னக்கா ஆபர்?" என்றான் அந்தக் கூட்டத்தில் ஒருவன் ஆர்வமாக.
"அப்பா நான் உங்கக்கிட்டப் பேசனும்..." என்று ஷைலு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேசத் தொடங்கினாள்.
அவள் ஆரம்பித்ததைப் பார்த்த ஷைலுவின் அப்பா... "அதுக்கு முன்னாடி நான் உன்டப் பேசனும்" என்று அவர் பாட்டுக்குப் பேச ஆரம்பித்தார் .
"நீ என்ன பண்ற நாளைக்கு நம்ம கிருஷ்ணன் அங்கிள் ஆபீஸ்க்குப் போற... கொஞ்ச மாசம் பிசினஸ் பத்தி கிருஷ்ணன் அங்கிள் அவங்க பையன்டக் கத்துக்கிட்டு வந்து, நம்ம கம்பெனிய பாத்துக்குற".
'கண்ணா லட்டு தின்ன ஆசையா???? அதும் ரெண்டு லட்டு!!!!' என்று யோசித்து 'செம சந்தோசம் ஐயா... யாருக்குத்தான் லவ் பண்றப் பையன் கூட நாள் முழுக்க இருக்கப் பிடிக்காது? செம்ம ஹாப்பி ஷைலு.' என்று மனதிற்குள் குஷியானவள், "சரி பா நான் இன்னைக்கே போறேன்" என்று துள்ளிக் குதித்துக்கொண்டு வந்தாள்.
அந்த சந்தோசம் கொஞ்ச நேரம் கூட நீடிக்கல. 'ஐயோ அறிவுக் கெட்ட ஷைலு , பேமிலிதான்டி முக்கியம், அத பர்ஷ்டு கரெக்ட் செய்னும் அதைவிட்டுட்டு இப்படி வந்து அப்பா வச்சப் பொறியில மாட்டிகிட்டியே...! சரின்னு வேற சொல்லிட்டோம். இப்போ போய்ப் போலன்னு சொன்னா, கடிச்சிக் கொதறிடுவாரே!' என்று சற்று முன்பு தான் செய்த முட்டாள்தனத்தை நினைத்து ஷைலு தன்னைத்தானே திட்டிக்கொண்டு இருந்தாள்.
"சரி எப்படியும் கிருஷ்ணன் அங்கிள் வருவாரு அவரக் கரெக்ட் செஞ்சா போதும் கல்யாணம் செஞ்சி, அவன உரிமையா லவ் டார்ச்சர் செய்லாம்" ன்னு ஷைலு போட்டக் கணக்கு மொத்தமா தப்பாப் போயிடுச்சி, ஆபீஸ் போன அப்புறம்தான் ஷைலுக்குத் தெரிஞ்சது.
மொத்தப் பொறுப்பையும் நம்ம ஹீரோட்டக் குடுத்துட்டு டாடி எஸ்கேப்னு, இதுல ஒரே நல்ல விஷயம், இன்னைக்குக் கிருஷ்ணா அங்கிள் வந்து இருக்கார், ஷைலுவ வெல்கம் பண்ண. சோகமாக உள்ளே நுழைந்த ஷைலுவைப் பார்த்த, இவளது ஆருயிர் நண்பன் மனோ.
"வாங்க ஜூலியட் வாங்க, ரோமியோவத் தேடி வந்துட்டீங்க போல" என்று நக்கலாக வரவேற்றான் மனோ.
"போடா டேய் அப்படியே வந்துட்டாலும், உன் பிரண்டு எப்படியும் பூனை மாதிரி என்ட சீறத்தான் போறான்", என்று சலித்துக்கொண்டே பேச.
ரொம்ப நேரம் மனோ சவுண்டுக் கேக்காம இருக்க, 'என்ன இவன் அமைதியா இருக்கான்' என்று யோசித்தவள் நிமிர்ந்து மனோவைப் பார்க்க, அங்கு அவன் இருந்தாள் தானே.
"எங்கப் போனான் மனோ? டேய்ய்ய்ய் எங்க டா இருக்க....?" என்று திரும்பியவளின் முன்னாள் கைகளைக் கட்டிக்கொண்டு ஷைலுவை முறைத்து, நின்றிருந்தான் ஆகாஷ்.
ஆகாஷைப் பார்த்த ஷைலு, விழிகளை விரித்து ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள், எவ்ளோ டைம் பார்த்தாலும், சலிக்காத முகம், 'ஐயோ இவனா, எப்போ வந்தான்னுத் தெரியலயே, சொன்னது எல்லாம் கேட்டுட்டானா' என்று ஆகாஷ் முகத்தை ஆராய்ச்சி செய்ய. எப்போவும் ஒரே போல மூஞ்ச வச்சி இருந்தனா எப்படித்தான் கண்டு பிடிக்கிறதாம், என்று அவனைத் திட்டித் தீர்த்தாள் மனதில்.
"இங்க என்ன பண்ற...?" என்றான் ஆகாஷ் மிரட்டும் குரலில்.
"அது கிருஷ்ணன் அங்கிள, பார்க்க வந்தேன்" என்றாள் ஷைலு.
"பாக்க வந்தா பாக்க வேண்டியதுதானே இங்க என்ன வேடிக்கப் பாத்துட்டிருக்க?"
"சரி மியாவ் ...." நாக்கைக் கடித்துக்கொண்டு, 'அய்யோ'ன்னு தலையில அடித்துக்கொண்டு.. "சரி ஆகாஷ்" என்றவள் விட்டால் போதும் என்று கிருஷ்ணாவைத் தேடிப் போனாள் ஷைலு.
அவள் பேசுவதைப் பார்த்து, அந்தக் கடுமையான முகத்துல சிரிப்பு வரத்தான் செய்தது ஆகாஷ்க்கு.... "என்ன டிசைன் டிசைனா இம்ச பண்ணப் பிளான் போடறதுக்கே பொறந்து இருப்பா போலப் பிசாசு" என்று போகும் ஷைலுவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு நின்றிருந்தான்.
"மனோ இங்க வா" என்றான், மறைந்திருக்கும் மனோவைக் கூப்பிட, அவனும் தலையைச் சொரிந்து கொண்டே வந்தான் .
"இங்க என்னடா பண்றா அவ?" என்றான் ஆகாஷ், ஷைலு வந்ததன் நோக்கத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்..
"அதுவா டா? ஒரு ஆறு மாசம், உனக்கு அசிஸ்டன்ட்டா இருக்க அவ அப்பா அனுப்பி வச்சிருக்காருடா" என்று ஆகாஷின் தலையின்மீதுப் பெரிய இடியை இறக்கினான் மனோ.
"ஐயயோ!!! என்னாது????? அசிஸ்டன்ட்டா?!!!!! மனோ! என்ன காப்பாத்து.... அவளைக் கூட வச்சிட்டு வேலைப் பாக்கிறது, ரொம்பக் கஷ்டம்டா. உனக்கே தெரியும்ல? என்ன படிக்கக்கூட விடாம காலேஜ்ல எவ்ளோ டார்ச்சர் செஞ்சான்னு" என்ற ஆகாஷின் முகத்தில் பதட்டம் தெரிந்தது.
"டேய்ய்!! எல்லோரும் லவ் பண்றப் பொண்ணுக் கூட இருக்கனும்ன்னு தானடா நினைப்பாங்க? நீ என்னடா வித்யாசமா நடந்துகிற?" என்றான் ஆகாஷ் மனதைப் படித்த மனோ.
"உனக்கு எப்படிடா தெரியும்!!" என்றான் ஆகாஷ் மனோவைப் பார்த்து அதிர்ச்சியாக.
"அதான் வழியுதே!! அவ கூட இருக்குற வர அவளைப் பாத்தாலே, எரிந்து விழுறது.... அவப் போன அப்புறம் ஏக்கமாப் பார்க்க வேண்டியது.... காலேஜ்ல மூக்காவாசிப் பேருக்குத் தெரியும் நீ அவள லவ் பண்றன்னு".
"டேய்ய் அவட்ட சொல்லிடாதடா, ஒரு ரெண்டு வருஷம் போகட்டும், கொஞ்ச சிக்கல் இருக்கு அதெல்லாம் சரி செஞ்சிட்டு நானே அவகிட்ட சொல்லிக் கல்யாணம் செஞ்சிக்கிறேன்" என்றான் ஆகாஷ் காதல் போங்க.
"ஆகாஷ், பாவம் டா அவ.. ஜஸ்ட் சொல்லிடு இல்லாட்டி அவ இருக்குற ஸ்பீடுக்கு சீக்ரம் கல்யாணம் செஞ்சிப்பா" என்று மனோ கூற...
"அதுலாம் நான் பாத்துக்கிறேன் மனோ, அப்படி என்ன பண்ணிடுவா என்ன மீறி அவ?" என்றான் ஆகாஷ் தனது முடியை தன் கைகளால் கோதியப்படியே..
அவள் கல்யாணம் செய்யும் பிளானை இன்றே துடங்கிவிட்டாள் ஷைலு, அவளின் மாமனாரிடம்.
இது தெரியாத ஆகாஷ், அப்போது இருக்கும் அலுவலகப் பிரிச்சனையை அவிழ்க்க முடிவு செய்து கொண்டுடிருந்தான்.
கிருஷ்ணனை நோக்கிச் சென்ற ஷைலு, அவளது வேலையைத் தொடங்கினாள். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தவள், பேச்சை நிறுத்தி ஏதோ சோகமா மூஞ்ச வச்சிட்டு திடீர்ன்னு அமைதி ஆயிட்டா. அதைப் பார்த்த கிருஷ்ணன்.
"ஷைலு என்னாச்சி?" என்றார்.
அப்போதுதான் கனவுலகத்தில் இருந்து வெளியே வந்தது போல நடித்தவள் "சொல்லுங்க அங்கிள்" என்றாள்.
"என்னாச்சி திடீர்னு சைலன்ட் ஆயிட்ட?" என்றார் கிருஷ்ணன்.
"அங்கிள் ஒன்னுக் கேட்டாத் தப்பா நினைச்சிக்க மாட்டிங்களே?" என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள் .
"இந்த அங்கிள்கிட்ட என்ன தயக்கம்?" என்றார் அவர்.
"நா உங்களை மாமான்னு கூப்பிடலாமா?" என்றாள் ஆர்வமாக கிருஷ்ணாவின் முகத்தைப் பார்த்து.
"இங்கிலிஷ்ல அங்கிள்ன்னுக் கூப்பிட்றத தமிழ்ல மாமான்னுக் கூப்பிட எதுக்கு இவ்ளோ யோசிக்கிற" என்று அவர் அறிவாளித்தனமாகப் பதில் சொன்னதாக நினைத்துச் சிரித்தார்.
'இவரு பையனுக்கு மேல டியூப்லைட்டா இருக்காரே!' ஷைலு கோபத்தை அடக்கி தன்னை சமநிலைப் படுத்திக்கொண்டு.
"அப்போ உங்க வைஃப்ப அத்தைன்னுக் கூப்பிடனும், லைப் முழுக்க" என்றாள்.
"நான் மாமான்னா அவ உனக்கு அத்தைதான், தாராலமாக் கூப்பிட்டுக்கோ மா" என்றார்.
'இவரை.... மாமான்னு பாக்குறேன்..... இல்லன்னா, உன்ன கொல்லப் போறேன்' என்று அவர் கழுத்தை நெரித்துவிடும் அளவிற்குக் கடுப்பானாள் ஷைலு. "குடும்பமே என்ன சாவடிக்கணும்ன்னு தான் பொறந்தீங்க" என்று சலித்துக் கொண்டாள் ஷைலு.
"அய்யோ! என்னம்மா? எதுக்குக் கோபப்படுற? அதான் கூப்பிட்டுக்கோன்னு சொல்லிட்டேன்ல" எஎன்றார் கிருஷ்ணன் தன் கழுத்தைப் பாதுகாப்பாகப் பிடித்துக்கொண்டு.
"லூசா மாமா நீ? இது கூடவா உனக்குப் புரியல?",
"புரியற போல. என்னனு சொல்லு மா" என்றார் அவர் வெள்ளந்தியாக..
"உங்க பையனை நான் புருஷன்னு சொல்லுனும்" என்றாள் அதிரடியாக .
அவரோ "அதுக்கு என்னமா கூப்டுக்கோ..!!" சொல்லி முடித்து ... தன் வாயிலே கை வைத்துக் கொண்டார்.
'ஹப்பா... இப்போவாவது புரிஞ்சதே!' என்று நினைத்து, கிருஷ்ணன் முகத்தைப் பார்த்தாள்.
கொஞ்ச நேரம் கழிச்சி அவரது ஷாக்கான மனநிலை கொறஞ்சதும், "இத நீ அவன்கிட்ட தானம்மா சொல்லணும்" என்று வினவ...
"சொல்லிட்டேன் அங்கிள். நா ஐ லவ் யூ ன்னு சொன்னா, அவன் ஐ லவ் மை பேமிலின்னு சொல்லுறான்" என்று ஆரம்பித்தவள் நடந்த அனைத்தும் சொல்லி முடிச்சிட்டு, அவருடைய ஜூஸ்ஸும் சேர்த்துக் குடித்து விட்டாள், களைப்பில்.
"என்ன மா என் புள்ளயா இருந்துட்டு, இவ்ளோ தெண்டமா இருக்கான்." என்று சலித்துக்கொண்டார் கிருஷ்ணன்.
"உங்களை விட மோசம் அவ்ளோதா வித்யாசம்" என்று கிருஷ்ணனுக்கு ஒரு பஞ்ச் கொடுத்தா.
"சரி விடுமா, உங்க வயசுப் பசங்க பேசிக்கிற கோட் வேர்டு லாம் எனக்கு எப்படி மா தெரியும்?" என்றார் அவர் சிரித்துக் கொண்டே.
"எது!!! இது கோட் வேர்டா? வேணா அங்கிள். ஏற்கனவே உங்க பையன் செஞ்சதுல காண்டுல இருக்கேன், இதுல நீங்கவேற" என்றாள் ஷைலு சலித்துக் கொண்டு.
"சரி. என்ன பண்லாம்னு சொல்லு மா நீயே.." என்றார் அவர்.
"எப்படியாவது கல்யாணம் செஞ்சி வச்சிடுங்க, அந்த மாடு நீங்க சொன்னா கேப்பான்" என்றாள் ஷைலு.
"யாருமா? அவனா? அவனும் அவன் அம்மாவும் என்ன ஒரு ஆளாவே மதிக்குறதே இல்ல" தன் தலையில் கைவைத்துக்கொண்டார் கிருஷ்ணன்.
"உங்களால எதுமே முடியாதா... என்ன மாமா பண்றது" என்றாள் சோர்வாக. சிறிது நேரம் யோசித்த கிருஷ்ணன்.
"ஒன்னுப் பண்ணு மா. நீ அவன பாலோவ் செய்றதுக்கு உன் அத்தைய பாலோவ் செய். அத்தையக் கரெக்ட் செஞ்சிடு.. அவ எது சொன்னாலும் ஆகாஷ் கேப்பான்" என்றார்.
ஷைலு கண்கள் மின்ன, "அப்படியா அங்கிள்?? அவங்க சொல்லியும் கேக்கலான என்ன செய்றது?"
"அவ நிறைய ட்ரிக்ஸ் வச்சி இருப்பா மா. அவன சம்மதிக்க வைக்க", என்றார் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே.
"சரி மாமா.." என்று தன் அத்தைப் பற்றிக் கொஞ்சம் டீட்டைல்ஸ் கேட்டு பிளான் போட்டுக் கொண்டிருந்தார்கள் இருவரும்.
ஆகாஷ் வேகமாக தன் அப்பாவைப் பார்க்க வந்தான்... சிறிது நேரம் வேலை செய்துகொண்டிருக்கும் போது தான் நினைவுக்கு வந்தது. ஷைலுவின் ஆட்டத்தைப் பற்றி... 'அப்பாவை பிரைன் வாஷ் செஞ்சிடுவாளோ?' என்று பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தான்.
இருவரும் பிளான் போட்டு முடிச்சி "நாளைல இருந்து ஸ்டார்ட் பண்றேன் மாமா" என்றாள்.
'என்ன இவ புதுசா, மாமான்னு லாம் கூப்பிடறா? சரி இல்லையே' என்று நினைத்தவன், "என்ன திடீர்ன்னு மாமான்னு சொல்ற என்ன விஷயம்?" என்றவாறு ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான் அவன்.
"அது வந்து.... அங்கிள் மாமாலாம் ஒன்னுதான? நாங்க தமிழ வளர்க்கப் போறோம்" என்று ஷைலு கேவலமாக சமாளித்தது ஆகாஷ்க்குத் தெரிந்தது.
"சரி ஏதோ பண்ணுங்க, அப்பா ஷைலு அப்பா போன் செஞ்சி இருந்தாரு, அவரு அடங்காத பொண்ண அடக்கி அனுப்பணுமாம் ஒரு ஆறு மாசத்துல,"
"யாரு நான் அடங்காதவளா, பாருங்க மாமா உங்க புள்ளய" என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தாள்.
"டேய்ய் அப்படியெல்லாம் சொல்லாத , குழந்தை மூஞ்சியப் பாரு சுருங்கிடுச்சி".
"சுருங்கிட்டாளா 4 கிலோ ஏறி இருக்கா, காலேஜ்ல மெயிண்டைன் பண்ணா, காலேஜ் முடிஞ்சதும், நல்லா அத்தைய டார்ச்சர் செஞ்சி தின்னுட்டே இருந்திருக்கா".
'அடப்பாவி! இன்னும் குறைக்கணும்னா நான் பட்னியா தான் டா இருக்கனும்'. மனதிற்குள் எண்ணிக்கொண்டாள் ஷைலு.
"மாமா நா என்ன மாடலாவா போகப் போறேன்? ஒல்லியா ஆகி, ஹவுஸ் வைப்க்கு இந்த வெயிட் போதும்ன்னு சொல்லுங்க மாமா".
"மருமக சொல்றதும் சரி தான்டா மகனே". என்று ஷைலுக்கு ஆதரவாக பேசிய கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியானான் ஆகாஷ்.
"என்னது மருமகளா? நைனா உன் பேச்சே சரி இல்ல... பாத்துக்கோ". அதுக்கப்புறம் கிருஷ்ணன் வாயைத் தொறந்தால் தான.
"ஷைலு வா பைல்ஸ் பாக்கணும்" என்றான் ஆகாஷ் .
"நீ போய்ப் பாருடா, நான் டையார்ட் ஆயிட்டேன் அங்கிள்ட்ட பேசிப் பேசி" என்று சேர்ல நன்றாக சாய்ந்து உட்கார்ந்தாள் .
ஆகாஷ் விடுவானா "ஷைலு காதை பிடித்துக்கொண்டு அவனது அலுவலுக அறைக்குக் கூட்டிக்கொண்டு போனான்.
இங்கு கிருஷ்ணன் "பையன் போக்கே சரி இல்லையே" என்று நினைத்துக் கொண்டிருந்தார்.
'எப்படிப் பைலை பார்ப்பது?' என்று சொல்லிக் கொடுத்து இவன் டையர்டு ஆனது தான் மிச்சம். ஒரு லைன் பாக்க 100 டவுட் கேட்டாள்...
ஆகாஷ் தீவிரமாக வேலைச் செய்துகொண்டிருக்க, திடீர்ன்னு "என்ன இவ சத்தத்தைக் காணோம்?" என்று யோசித்தவன் திரும்பி சோபாவில் அமர்ந்து இருக்கும் ஷைலுவைப் பார்க்க, அவளோ உட்காந்தவாறு நல்லாத் தூங்கிட்டாள்...
"இவளை, இந்தாடி ஷைலு எந்திரிடி என்று கன்னத்தைத் தட்டி, கண்களை மூடி இருந்தவள், ஆகாஷை நெருங்கி அமர்ந்து அவன் மீது சாய்ந்துப் படுத்துத் தூங்க ஆரம்பித்தாள்.
கொஞ்சம் நேரம் கழித்துக் கிருஷ்ணா வர, இவங்க ரெண்டுப் பேரைப் பார்த்து.... "இதுக்கு பேர்தான்
'ஐ லவ் பேமிலியா' மகனே?" என்று நினைத்த கிருஷ்ணன் போட்டோ எடுத்து ஆகாஷ் அம்மாக்கு அனுப்பிவைத்தார் .
ஆகாஷின் அம்மாவோ கொஞ்சம் இல்ல, நிறையவே ஒழுக்கம் பார்ப்பவர். அப்படிப்பட்டவர், ஆகாஷ் ஷைலுவின் போட்டோவைக் கண்டு சும்மா இருப்பாரா?
'ஆகாஷ் எப்போ வீட்டுக்கு வருவான்? பேய் ஓட்டலாம்...' என்று காத்துக்கொண்டிருந்தார் ஆகாஷின் தாயார்.