Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL மாய நிலா - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
583
Reaction score
588
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:
1 மாய நிலா

முகம் முழுவதும் தாடி, கண்களில் கருப்பு நிற கண்ணாடி, கையிலே உயர் ரக பீர், சிறிது சிறிதாக பருகிக் கொண்டு இருந்தான், அந்த கருப்பு நிற கண்ணாடியையும் தாண்டி நிலவைப்போல பளிச்சிடும் அந்த பற்களை காட்டி சிரிக்க, சொக்கித்தான் போனான் இந்த ஆறடி உருவம், போட்டு இருந்த மெல்லிய சட்டையை கழட்டி எறிந்தவன், மூன் பாத் எடுக்கத் துவங்கினான்.

சுற்றிலும் தண்ணீர், இவன் கைகளிலும் தண்ணீர், புகழ் பெற்ற அறிவியல் விஞ்ஞானி, புதியதாக கண்டுபிடிக்கும் துறையைச் சார்ந்தவன், அவன் கண்களில் பார்க்கும் அனைத்தையும் கலந்து, அவனது ஆராய்ச்சிக் கூடத்தை தினமும் பொசுக்கி அரசாங்கத்துக்கு வாரத்துக்கு ஏழு முறை செலவு வைப்பதில் வல்லவன்.....

இப்படி இருக்கும் ஒருவன் தேவையா என்று ஒருபோதும் நினைத்து இல்லை, காரணம் அவனது கண்டுபிடிப்பு, புதிதாக முளைத்த சயின்டிஸ்ட்டாக இருந்தாலும் குறுகிய காலத்தில் நிறைய புதிய கண்டுபிடிப்புகளை தந்த பெருமை அவனுக்கே சேரும், அரசாங்கம் இவன் என்ன செய்தாலும் வெளியில் அனுப்பும் நோக்கம் சிறிதும் இல்லை. ஒரே மருந்து வாடை, கெமிக்கல்ல தினமும் ஒரு பையர் அக்சிடென்ட், தினமும் ஒரே போல வாழ்க்கை போய்க்கொண்டு இருப்பது இவனுக்கு சுத்தமா பிடிக்கவில்லை, மூச்சி முட்டியது, இரண்டு மாதங்கள் லீவ் கேட்டு கேட்டு கிடைக்காத கடுப்பில், அவன் ஆய்வு செய்யும் அறைக்குள் நுழைந்தவன்,

பல வருடம் செலவழித்து, கண்டுபிடிக்க முயன்ற மருந்தை, அவன் அன்றுதான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எல்லா வகை நோய்க்கும் பயன்படுத்தும் ஒரே மருந்து, பல மாதம் பல ஆய்வுக் கூடத்தை எரித்து கலவரப் படுத்தி, ஒரு வழியாக கடுப்பில் கண்டு பிடித்தவன், சோதிக்கும் அறைக்கு ஊசியில் மருந்தை ஏத்திக்கொண்டு, ஊசிக்கு அதனுடைய மூடியைப் போட்டுக்கொண்டு நடந்தான், அவனது அசிஸ்டன்ட் டாக்டர் ரோஸ்,
அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்னாடி ஓடிவந்து கொண்டு இருந்தாள், ஐந்து அடி உயரமுள்ள அந்த டாக்டர்.

‘ஒன்னு நான் ஹையிட் ஆகனும், இல்ல இவரு குள்ளையா ஆகனும். காலையில சாப்பிட்டது எல்லாம் மொத்தமா கரஞ்சி போயிடுச்சி’ ரோஸ் புலம்பிக்கொண்டே ஓடிவந்தாள்.

அவர்கள் நுழைந்த அறையில் அனைத்து வகை நிலம், கடல் வாழ் உயிரினங்கள் அங்கும் இங்கும் ஓடித் திரிந்து கொண்டு இருந்தது, ஆபத்தான மிருகங்கள் மட்டும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.

ரோஸ் ஒருவழியா அங்கு இருக்கும் வெள்ளை எலிகள் ஒளிந்து இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச் சென்று ஒரு வழியாக எலியை பிடித்தாள், அதுவரை அங்கு இருக்கும் மீன்களோடு விளாடிக் கொண்டு இருந்தான் அந்த ஆறு அடி அறிவாளி டாக்டர் ருத்ரா.

அங்க இருந்த ஒரு எலியை தூக்கி ஊசி போட வசதியா ரோஸ் பிடித்துக்கொண்டு இருக்க,
திடீரென்று ருத்ராக்கு ஒரு யோசனை... அதை ரோஸ் கிட்ட சொல்லிய மறு நொடி, அவன் எலியை தூக்கி ஓரமாக விட்டவன், எலி விட்டால் போதும்னு ஓடிடுச்சி.

“டாக்டர் எவ்ளோ கஷ்டப்பட்டு பிடிச்சேன், இப்படி விட்டுட்டீங்க, இப்போ நான் திரும்ப பிடிக்கணும்”.

“அது இனி தேவை இல்ல பிடிக்க” ருத்ரா அருகில் வருவதை பார்த்த ரோஸ்க்கு புரிஞ்சிடுச்சி, “சார் வேண்டா நீங்க என்ன நினைக்கறீங்கன்னு எனக்கு புரியுது”.



அதேதான் ரோஸ் புரிஞ்சிக்கிட்டியே, ருத்ரா ரெண்டு அடி எடுத்து வைக்க, ரோஸ் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருந்தாள், போகும் வழியில் அனைத்துப் பொருட்களையும் சிதரடிக்க ஓடிக்கொண்டு இருந்தாள்.


“டாக்டர் விட்டுடுங்க, நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு, என்ன விட்டுடுங்க, நான் ரொம்ப பாவம் புரிஞ்சிக்கோங்க”.

அங்கு இருக்கும் உபகரணங்கள், கெமிக்கல் எல்லாம் இவர்கள் ஓடிப் பிடித்து விளாடியதில் அனைத்தும் அங்கும் இங்கும் சிதறிக்கிடந்தன.

வீரா விடுவது போல தெரில, ஒரு வழியா தப்பித்து தலைமை அலுவலர்கள் அரையை நோக்கி தலை தெறிக்க ஓடினாள்.
ருத்ரா விடுவதாக இல்ல துரத்திக்கொண்டே ஓடினான்,

“சார் காப்பாத்துங்க”,


“ரோஸ் என்னாச்சி, ஏதாவது மிருகம் உன்னை துரத்துதா” அவள் பின்னாடி எட்டிப் பார்க்க ருத்ரா வேகமா நடந்துகொண்டு வந்தான்.

‘நாய விட ரொம்ப டேஞ்சர் ஆச்சே இவன்’, இவன் மனதில் நினைத்ததை ரோஸ் சொன்னாள்,

“ஐயோ சார், நாய விட கொடூரமான மிருகம் சார்”,

“என்ன ரோசா இங்க வந்துட்டியா” வில்லன் போல வாயால ஊசி முடியை கடித்து துப்பி,

“இப்படி வா வலிக்காம ஊசி போட்டுக்க போய்டுறேன், இப்படி ஓடிட்டு இருந்தா எடக்கு முடக்கா குத்திட்டா உனக்கு தான் பிரச்சனை”.

“ரெண்டு பேரும் அமைதியா இருங்க, ஒழுங்கா என்ன நடந்ததுன்னு சொல்லுங்க”,

சில நிமிடங்களுக்கு முன்பு,

எலியை ஒரு கையால் நீவி வீட்டுக்கொண்டு நின்று இருந்த ரோஸ், கையில் இருந்த எலியை பிடித்து அதன் இடத்தில் விட்டு விட்டு,

“ஏன் சார் டெஸ்ட் செய்யப் போறதில்லையா.”

“டெஸ்ட் செய்னும் ரோஸ், ஆனா ஒரு சேஞ்க்கு ஹியூமன் வச்சி அதும் பொண்ணு வச்சி டெஸ்ட் செஞ்சிட்டு, சக்ஸஸ் ஆன அப்புறம் அந்த பொண்ணு பேர வைக்கலாம்ன்னு இருக்கேன்.”

“சரிதான் சார், ஆனா யாரு ஒத்துப்பா முதல் முறையா சோதிக்க.”

“ஒத்துப்பாங்க,” அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்டு “சார் வேண்டா அது மட்டும் சொல்லிடாதீங்க.”

“நீதான் எனக்கு சரியான அசிஸ்டென்ட் புரிஞ்சிக்கிட்டியே, தடுப்பு மருந்துக்கு உன் பேர் வச்சிடலாம், ரோஸ் வேக்சின், பேர் எப்படி இருக்கு?”

அதுக்கு அப்புறம்தான் இந்த ஓடிப் பிடித்த விளாட்டு எல்லாம்.

“இப்போ சொல்லுங்க சார் அந்த எலியும் நானும் ஒன்னா?”

ருத்ரா எதுக்கு இப்படி செய்கிறான் என்று புரிந்து கொண்ட ராஜா, ஆறு அடி உயரம், முப்பது வயது இளம் காளை, அரசாங்கத்தின் வற்புறுதல் பேரில் இங்கு வேண்டா வெறுப்பாக பணி புரிபவர், என்ன தான் பிடிக்காத வேலை என்றாலும் பிடித்தது போல மாற்றிக்கொண்டு, அந்த பதவிக்கு ஏற்ப கடினமான இரும்பை முழுங்கியது போல சுற்றிக் கொண்டு இருக்கும் ஸ்ட்ரிக்ட் ஆபிசர், ருத்ராக்கு இரண்டு மாதம் லீவு தராத அந்த நல்ல உள்ளம் இவன் தான்.

“உனக்கு இப்போ என்ன வேணும்னு எனக்கு தெரியும், அதுக்கு நேரடியா என்ட வந்து இருக்கனும் ரோஸ் மேடம துரத்துரது ரொம்ப தப்பு”.

அவர் சொல்வதை காதில் வாங்காமல், “ஒன்னும் இல்ல, ஒரு டெஸ்ட், ஒரே ஊசி, ரோஸ் மேடமை விடுங்க” ராஜா சொன்ன ரோஸ் மேடம் மட்டும் அழுத்தி சொன்னான்.

ராஜாக்கு அந்த டாக்டர் ரோஸ் மேல ஒரு கண்ணு. பொறுப்பான டாக்டர், வேலை செய்யும் போது அவள் கவனம் ஒருமுறை கூட சிதறியது இல்லை, அது ராஜாக்கு இன்னும் வசதியா போயிடுச்சி, ராஜா நல்லா சைட் அடிக்க, ருத்ராக்கு லீவ் தராததுக்கும் ரோஸ் தான் காரணம், ருத்ராக்கு லீவு கொடுத்தால், ரோஸ்க்கும் சேர்த்துதான் லீவு குடுக்கணும், ராஜாக்கு ரோஸ்ஸ பாக்கலனா பொழுதே போகாது.

அது கொஞ்சம் லேட்டாதான் தெரிய வந்தது ருத்ராக்கு,

ரோஸ் ருத்ராவை பார்த்து பயந்து ராஜா கையை பிடித்துக்கொண்டு “சார் காப்பாத்துங்க, இனி நான் அவர்கிட்ட வேலை பாக்கமாட்டேன், மக்களுக்கு எதாவது நல்லது செய்யனும்னுதான் நான் என்னோட இயற்கை மருத்துவத்தை விட்டுட்டு இங்க வந்தேன், ஆனா இவரு என் உயிருக்கு ஆப்பு வைக்கிறார், என்னை எலியா யூஸ் செஞ்சா நான் என்ன செய்றது,” ராஜா ரோஸ் புலம்புவதை கவனிக்கவில்லை. அவள் கையையும் அவளையும் இந்த கலவரத்துலயும் சைட் அடித்துக்கொண்டு இருந்தான்.
“நீ ஒன்னும் பயப்படாத பேபி இனி என் கூடவே இரு” இதற்கு முன்பு பலமுறை ரோஸ் பேபி சொன்னான், பதற்றத்தில் ரோஸ் கவனிக்கல, இப்போதுதான் ராஜா சொன்ன பேபியை கவனித்தாள். ராஜாவின் கையை வேகமாக விட்டு ஒதுங்கி நின்றாள். வடை போச்சா என்பது போல ருத்ரா ராஜாவை பார்த்து நின்றுக்கொண்டு இருந்தான்.

“ருத்ரன் போதும் என் பொண்டாட்டியை பயம் செய்தது, உனக்கு தோணும் போது திரும்பி வந்து வேலையில் சேந்துக்கோ”, ரோஸ்க்கு அவன் சொன்ன பொண்டாட்டி வெறுப்பேத்தியது ‘என்னது பொண்டாட்டியா’. சபை நாகரிகம் கருதி அமைதியா நின்றாள்.

“தேங்க்ஸ் சார்,” ரோஸ் நிற்கும் தோரணையை பார்த்து, ‘செத்தான் சிவனாண்டி’ ராஜாவின் அறையை விட்டு வெளியே வந்த நொடி, எதையோ சாதித்த திருப்தி, சுதந்திர காற்றை சுவாசிக்க பறவை போல பறக்கத் துவங்கினான் ருத்ரா.


ரோஸ் அங்கு கிடைக்கும் அனைத்தையும் ராஜா மீது தூக்கி எரிந்து “ஏன்யா, எவ்வளவு தைரியம் இருந்தா என்னை பொண்டாட்டின்னு சொல்லுவ, இனி இது போல பேசுற வேலை வச்சிக்காத, கை கால கட்டி தூக்கிட்டு போய் சர்க்கரை தண்ணில மூக்கி, நாங்க புதுசா கண்டு பிடித்த பாய்சன் எரும்பை உடம்புல விட்டு, மாச கணக்கா எந்திரித்து நடக்க முடியாதது போல செஞ்சிடுவேன் ஜாக்கிறதை,” ரோஸ் பிளான பக்காவா விளக்கிட்டு சென்ற மறு நொடி.


“அடி ஆத்தி, உயிரோட சமாதி கட்டிடுவா போல, கிராதகி,” வாய் சொல்வது ஒன்றாக இருந்தாலும், ராஜா கண்கள் போகும் ரோஸையே ரசித்துக்கொண்டுதான் இருந்தது.
வெளியே வந்த, ருத்ரன் அவனது உயிர் நண்பனுக்கு போன் செய்தான், “டேய் இன்னும் ஆறு மாசத்துக்கு தேடாத, ரிலாக்ஸ்ஸா ஒரு ட்ரிப் போய்ட்டு வரேன்”.

“சரி நான் சொல்ற இடத்துக்குப் போய் ஒரு பார்சல் வாங்கிட்டு வா, என்னோட ஸ்பெஷல் பெயிண்டிங்”.

“சரி டா புரியுது, நான் இன்னைக்கு நைட் வாங்கிடறேன், ஆனா உன் கைக்கு வந்து சேராது, ரொம்ப லேட் ஆகும்”.

“பரவா இல்லடா, இங்க வேற எனக்கு இருக்க வேலையில், அத பத்தி யோசிக்க கூட டைம் இல்ல”.

“ரொம்ப ஸ்பெஷல்ன்னு சொல்ற, ஆனா அத விட கேஸ் முக்கியமா உனக்கு?”

ரெண்டு டெட்பாடி கிடைச்சி இருக்கு இயற்கை மரணம் போலத்தான் முதல்ல தெரிஞ்சது, அடுத்த டெத் ஆகும் போதுதான் நான் கண்டு பிடிச்சேன் இது கொலைன்னு”.

“எப்படி கண்டு பிடிச்ச? கொலை எப்படி நடந்தது”,


“முதல் கொலை பிளைட்ல கரெக்ட்டா தமிழ் நாட்டுல லேண்ட் ஆகும்போது நடந்து ஊருக்கு மூச்சி திணறி, அங்க என் கண்ணுல ஒரு கசங்கின பேப்பர் கிடைச்சது, அதுல மிஸ்டர் ஸிரோன்னு போட்டு இருந்தது, அப்போ நான் அத பெருசா கண்டுக்கல, ஆனா அடுத்த டெத்லயும் அதே போல எனக்கு பேப்பர் கிடைச்சது, எல்லாமே மூச்சி திணறி நடந்து இருக்குன்னு ரிப்போர்ட் வருது”.

“எதாவது கெமிக்கல் யூஸ் செஞ்ச சாயல் இருக்கா?”

“ரிப்போர்ட்ல இல்லனு தெரியுது,
ஒரே குழப்பமா இருக்கு, கொலை அதும் சிட்டியில முக்கிய புள்ளி மற்றும் ரொம்ப பிரபலம் கொன்னுட்டு, எல்லோர் கண்லயும் விரலை விட்டுட்டான், இன்னும் ஒன் வீக் அதுக்குள்ள ஏதும் முன்னேற்றம் இல்லனா சிபிஐக்கு போய்டும்டா வெக்கக் கேடு, அதும் அந்த சிபிஐ ஆஃபீஸ்ர் வேற பொண்ணு, சரியான கிறுக்கி டா.”

“என்னடா பெரிய ஆஃபீஸர்ன்னு சொல்ற, ஆனா கிறுக்கின்னு சொல்ற?”.


“அத ஏன் கேக்குற, அந்த கொலைகாரனைக் கண்டுபிடிச்சி லவ் செய்ய போறேன்னு சுத்திட்டு இருக்கா அந்த கிறுக்கி, அவ கைக்கு போச்சு, என் இமேஜ் டேமேஜ் ஆகிடும்டா”.

“அப்படியா இன்டெரெஸ்ட்டிங், நான் வந்ததும் மீட் செய்யனும் அந்த பொண்ணை.”


“சரி நீ சொல்றத பாத்தா அந்த 2 இயற்கை டெத் ஒன்னு போல தெரில.”

“எப்படி சொல்ற?”

சிலப்பல விஷயங்கள் அந்த மரணத்தைப் பற்றி பேசிவிட்டு,

“ரோஸ் உனக்கு ஹெல்ப் செய்வாங்க, நான் வந்த மித்தது பாத்துக்கிறேன்”.

“சரி டா சில மாசம் கழித்து பாக்கலாம்” என்று அந்த கொலைகளை பத்தி சிறிது நேரம் யோசித்துவிட்டு,

ஒரு பெரிய போட் வாடகைக்கு எடுத்துக்கொண்டு, ஆறு மாசத்துக்கு தேவையான பொருளை எடுத்துக்கொண்டு, உள்ளே கீழ் தளத்தில் உள்ள பெட்ரோல் டேங்க்ல எக்ஸ்ட்ரா எரிவாயு, நிரப்பிக்கொண்டு, ஆட்டோமேட்டிக் சர்வீஸ் ஆன் செய்துவிட்டு, சமைக்க தேவையான பொருள், போட்டுக்கும் தேவையான பொருள், உடை, தண்ணீர் குடிக்க குளிக்க மிதக்க, உயர்தர சரக்கு நிறப்பிக்கொண்டு அவன் பயணத்தை தொடர்ந்தான்.

இவன் என்ன சாதாரணமான ஆளா அவனது மொத்த பலத்தையும் வைத்து, கடலில் பயணிப்பது ஒன்னும் சாதாரணமான விஷயம் இல்லை, அது இது என்று காரணம் சொல்லி சிறைபிடிக்க வாய்ப்பு உள்ளதால், இன்டர்நேஷனல் லைசென்ஸ், சில சமையம் அனைத்து நாடுகளின் பவர் புல்லான அந்த அந்த நாட்டுக்குத் தேவையான லைசென்ஸ்ஸை தனித் தனியா வாங்கிக்கொண்டு முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்துவிட்டுத்தான் கிளம்பினான். பாவம் அவனுக்கு தெரியப் போவதில்லை, ஒரு மாதம் கூட அவனால் அங்கு இருக்க முடியாமல் திரும்பி வர போறான் என்று.

இப்படி ஒரு நாளுக்காகத்தான் காத்துகொண்டு இருந்தான்.

இரவு வேலை நெருங்க போட் மேல் பகுதியில் மல்லாந்து படுத்துக்கொண்டு,

இப்படி வாழ்க்கையை ரசிக்க எவ்வளவு கலவரம் செய்துவிட்டு வந்ததை நினைத்து ருத்ரன் உதட்டில் அளவுக்கு அதிகமான புன்னகை, மெல்லிய உதட்டின் இடையில் மின்னல் கீற்று பற்கள், அந்த சிரிப்பில் நிலவுக்கே வெட்கம் வந்துவிட்டது போல, மேகத்தின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டது அந்த நிலா பெண்.


இவ்வளவு நேரம் நிலவை பார்த்து ரசித்தவனுக்கு ஒரே ஏமாற்றம், “நிலா பேபி எங்க போன, உன்ன பொறுமையா ரசிக்கத்தான் பல போராட்டங்களுக்கு பின்பு உன்னை தேடி வந்தா, இப்படி செய்றயே,

அதுவும் உன்ன இந்த நாள், நடு கடலுக்கு அடித்து பிடித்து வந்தா, நீ இப்படி ஒளிந்து கண்ணாமூச்சி ஆடினால் என்ன அர்த்தம், “முதல்ல வெளிய வா” பாதி போதையில் நிலவை பார்த்து கத்திக்கொண்டு இருந்தான். நிலா வரமாட்டேன் என்று பிடிவாதமாக நின்று இருந்தது, கோபத்தில் ருத்ரன் கையில் இருந்த பாட்டில் அவன் பலம் கொண்டு இறுக்கிப் பிடித்த வேகத்தில் உடைந்தது, அந்த ரத்தத்தை ஒளிந்து இருந்துபார்த்த நிலா ரத்த நிலவாக மாறியது, ருத்ரவுக்கு அது தெரிய வாய்ப்பு இல்லை.

கையில் ரத்தம் சிந்துவது எந்த உணர்வும் இல்லாமல் நின்று இருந்தான், அவனது ஒரே நோக்கம் நிலவை இப்போவே பாக்கணும்.

ரத்த பௌர்ணமி நிலவை, கரு மேகம் சூழ....

நிலா மகனின் ரத்தத்தில் நிலவொளி படும் அந்த சமையம்...

மின்னலை துரத்தி இந்திரன் வரும் சமையம், இருவரின் சக்தியும் ஒன்று கலந்து ரத்தத்தில் ஊடுருவியது.

இந்த அனைத்து சக்தியும் ஒன்று சேர்ந்து கற்பனை உருவத்தில் உயிர் பெற்றால் அக்னி நிலா.....


அக்னி நிலா கீழ் தளத்தில் கண்களை திறந்த சமயம், முதலில் பார்த்த பொருள், அவள் மனதை ஈர்த்தது, அதன் மீதும் அதனை வண்ணம் தீட்டியவன் மீதும் ஒரு ஈர்ப்பு உருவாகியது, நிலா அந்த வரைந்த போட்டோ பிரேமை கையில் எடுத்துக்கொண்டு. வெளியே செல்லும் வழியை கண்டுபிடித்து வெளியே வந்தாள்.

மேலே, அங்கு ருத்ரா வானத்தை பார்த்துகொண்டு, “ஏய்ய்ய் நிலா வந்துடு, எவ்ளோ நாள் ஆச்சி நம்ம ரெண்டு பேரும் சந்திச்சி, நீ இப்போ என் கண் முன்னாடி பளிச்சுனு தெரியற வரை நான் கத்திட்டுதான் இருப்பேன்,

எங்கு இருக்கோம் என்று புரியாமல், தட்டு தடுமாறி, அங்கு வந்து சேர்ந்தாள் அக்னி நிலா, ருத்ரன் கையில் சொட்டும் ரத்தத்தை பார்த்து, பதறினாள் அவளது பக்கத்தில் இருந்த துணியை கிழித்து, அவனது கைகளில் கட்டு போட்டு விட்டாள், இப்போதுதான் ரத்தம் கொஞ்சம் நின்றது.
நிலாவிடம் பேசிக்கொண்டு இருந்தவனுக்கு இப்போதுதான் யாரோ கையை பிடித்து இருப்பது தெரிய வர, “யார் இது? என் கையை பிடிக்கற அளவுக்கு தைரியம் இருக்கு இங்க” திரும்பி பார்க்கும் போது, நிலவு ஒளி அக்னி நிலா மீது பட்டு தங்கமாக ஜொலித்தாள், வாவ், அதன் பிறகு சாதாரண நிரமாகத்தான் தெரிந்தாள், ருத்ரா கண்களுக்கு.


“நான் அக்னி நிலா, இங்க எப்படி வந்தேன்னு தெரில” இன்று பிறப்பு எடுத்ததால் அவளுக்கு சில நினைவுகள் தவிர வேறு ஏதும் தோணல,

“உங்களுக்கு அடி பட்டு இருக்கு தூங்குங்க”.

அக்னி நிலா கண்கள் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு எங்கோ இவனை பார்த்தது போல தெரிந்தது, அவள் பேர் தவிர ஏதும் நினைவில் இல்லை அவளுக்கு, விடியும்வரை யோசித்துக்கொண்டே இருந்தாள்.

முகத்தில் சூரியன் கடுமையாக படும்வரை ருத்ரன் தூங்கிக்கொண்டு இருந்தான், சந்திரா ருத்ரா சந்திரன் என்று எந்த நேரத்தில் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை வெயிலைப் பார்த்தால் சுத்தமா பிடிப்பது இல்லை,

காலை சூரியன் உதயம் மற்றும் மறையும் சமையம் மட்டுமே சந்திரனை பார்க்க முடியும், அதே போலத்தான் இவனும்.

கண்கள் கசக்கி எந்திரித்து இருந்தான், திடீரென ஒரு உருவத்தை பார்த்து “ஐயோ பேய்”,

“இல்ல, நானும் உங்கள போலத்தான், என் பேர் அக்னி நிலா”,

“அறிமுகம் எல்லாம் நல்லா இருக்கு, இங்க எப்படி வந்த, ஒரு வேலை கடல் கொள்ளைக் கூட்டத்துத் தலைவியா நீ,” என்று கேட்க.

“இல்ல, இங்க எப்படி வந்தேன், எந்திரிக்கும் போது கீழ இருந்தேன்”.

“கீழையா? நீ சொல்றது நம்பறது போல இல்லையே” ருத்ரன் கீழ் தளத்தை நோக்கி நடக்கத் துவங்கினான், உள்ளே பார்த்தால் ஒரு பெரிய ஓட்டை, வானம், வானத்தில் பறக்கும் பறவைன்னு எல்லாம் தெரிந்தது,

“இங்க எப்படி ஓட்டை வந்தது”,

கீழே சில ரத்தத் துளிகள் “போட் எடுக்கறதுக்கு முன்னாடி உள்ள வந்து இருப்பா போல, இங்கு எதுலயாவது இடித்து விழுந்து அடிப்பட்டு இருக்கும்,” அங்கு சிதறி இருக்கும் ரத்தத்தை பார்த்து அவன் யூகித்துக் கொண்டான்.
“அத விடு எப்படி உள்ள வந்த அத முதல்ல சொல்லு.”

“தெரியல.”

“எந்த ஊரு, உன் வீடு எங்க இருக்கு”.

“தெரியல” அவளுக்கு எதும் நினைவுக்கு இல்லை, அவள் பெயரைத் தவிர.

“சரி மண்டை குழம்பி போச்சி போ, டெம்ப்ரவரி மெமரி லாஸ் போல, சரி நான் சரி செஞ்சிடறேன் ஊருக்கு போய்”.

“எதுக்கு என் கையில் துணியை சுத்தி வச்சி இருக்க” ருத்ரன் காட்டியதுணியை பிரித்துக் கொண்டு இருந்தான்.

“அச்சோ அத எதுக்கு கழற்றிங்க, கையில் அடிபட்டு ரத்தம் வந்து இருந்தது, மேல பாட்டில் கூட உடைஞ்சி இருந்தது” ருத்ரா அக்னி நிலாவை விசித்திரமாக பார்த்தான்.

“கையை பாரு அடிஎதும் இல்லை,, உனக்கு மண்டைல அடிபட்டு குழம்பிட்ட” ருத்ரா அக்னி நிலாவை லூசு போல சைகை காண்பிக்க.

“நான் ஒன்னும் லூசு இல்லை, மேல ஒடஞ்ச பாட்டில் இருக்கும், இப்போது நிரூபிக்கறேன் வா” ருத்ரா கையை பிடித்து இழுத்துச் சென்றாள் அக்னி நிலா.


அங்கு போய் பார்த்தாள், ருத்ரா வைத்த இடத்தில் பாட்டில் பத்திரமா இருந்தது, நிலா முகம் மாறுவதை கவனித்தான் சந்திரன்.

“சரி விடு, எதோ கனவு கண்டு இருக்கும்” என ருத்ரன் சமாதானப் படுத்தி, கைக்கு கிடைத்ததை வைத்து பத்து நிமிடத்தில் சமைத்து நிலாவுக்கும் அவனுக்கும் எடுத்துக் கொண்டு வந்தான் ருத்ரன்.

நிலா தயங்கிக்கொண்டே அவன் கொண்டு வந்த உணவையும், ருத்ரனையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“நான் படிச்ச டாக்டர், உன்ன எதும் செய்யாமட்டேன், நீ இன்னும் நம்பலனா இரு, இது என் போட்டோ பட்டம் பெற்றபோது எடுத்த போட்டோவைக் காட்டினான்.

“இல்ல வேண்டா, உங்கள நம்புறேன்” சாப்பாட்டை வாங்கி சாப்பிட, சாப்பிட்டு முடிக்கும் போது, ருத்ரன் பேசிக்கொண்டு, அவனது அனுபவங்கள், அவனது சொந்தக் கதை அனைத்தையும் சொல்லி சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தான்.

இவன் மொத்த ஆறு மாத பிளானையும் சொதப்பி வைத்தாள் அக்னி நிலா. அப்படி என்ன செய்து வைத்தாள்?



 
Last edited:
2 மாய நிலா


திடீரென்று உருவாகிய அந்த ஓட்டையை அளவு எடுத்தவன் அந்தப் போட்டிலிருக்கும் ஸ்டோர் ரூம் சென்று அங்கே இருக்கும் தேவையான பொருளை எடுக்கச் சென்ற சமையம்,


“ருத்ரா எனக்கு பசிக்குது” என்றாள், கையில் இருக்கும் சாஸ்ஸை சுவைத்துக் கொண்டே…

"என்ன இந்தத் தீனி திங்குறா? ஏற்கனவே ரெண்டு முறை சாப்டாச்சு…போதும். நான் மதியத்துக்கும் சேர்த்துதான் சமைச்சேன். இப்போவே சாப்டுட்டா திரும்ப என்னால சமைக்க முடியாது"

"ப்ளீஸ் ப்ளீஸ்…நான் சமைக்கிறேன். செமப் பசி. ஏதோ ரொம்ப வருஷம் சாப்பிடாதது போலத் தோணுது எனக்கு".

"நீ ஏதோ ரத்தக் காட்டேரி பேமிலின்னு நினைக்கிறேன்", அக்னி நிலா முகம் சுருங்குவதைப் பார்த்த ருத்ராக்கு, இதயத்தைப் பாதித்தது. இதற்குப் பெயர் என்னவென்று புரியவில்லை. இனம் புரியாத பாசம்.


"சரி டேங்க்க துறந்து விட்டுடாத எல்லாத்தையும் தின்னுத் தொலை" என்று சமைத்து வைத்திருந்த மொத்த சாப்பாட்டையும் அவள் தட்டில் கவிழ்த்தி விட்டு, விட்ட வேலையைத் துவங்கினான்.
அக்னி நிலா ரசித்து ருசித்து அவனது உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அவன் ஒரு ஆணி கூட அடிக்கவில்லை,
ருத்ராவைப் பார்த்து "எனக்கு இன்னும் பசிக்குது," ஆணி அடித்தவன் காதில் கேட்டக, அதில் பெரிய ஆணி அவன் கையில் ஏறியது,
"ஆஆஆஆ கை போச்சி" கையை உதறியவன், ரத்தத்தைப் பார்த்தான்,
"நீ ஒழுங்காச் சொல்லு, நீ மனிசியா இல்ல ரத்தக் காட்டேரியா?" அவன் சொல்லிக்கொண்டு இருப்பதைக் காதில் வாங்காமல், ஐயோ ரத்தம், அவன் கையை எடுத்து அவள் வாயில் வைத்துக் கொண்டாள், ருத்ரன் முடிவே செஞ்சிட்டான், இவ ஏதோ மனிசி இல்லன்னு,
"ஏய்ய்ய் கைய விடு, கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும், ஜூஸ் குடிக்கிறது போல உறிஞ்சி என் மொத்த ரத்தத்தையும் குடிக்கப் பாக்குறியா?".


'ருத்ரா இங்கிலிஷ் பான்டசி புக் படிச்சி நீ கெட்டுப் போய்ட்ட. ஒழுங்கா நிஜத்துக்கு வா' அவன் எண்ணம் போன போக்கை விட்டுவிட்டு,

"சரி வா ஸ்னாக்ஸ் தரேன்",

"அப்போ பசிச்சிச்சு இப்போ பசிக்கல" என்றாள் அக்னி நிலா.

'ஒரு வேலை ரத்தம் குடிக்கும் பிசாசு போல' அந்த எண்ணத்தை விட்டுட்டு அக்னி நிலாவிடம் யாரிடமும் பேசாத அளவுக்குப் பேசினான்.

மிருகங்களிடம் மட்டுமே உறவு வளர்த்தவன்… முதல் முறையாக இவ்வளவு தூரம் பேசுகிறான், அவனது நண்பனுக்கு அடுத்து..
அக்னி நிலா மீது என்ன ஈர்ப்பு என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவனுக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு எதுவும் பெரிதாக ஞாபகமும் இல்லை. இருந்திருந்தால், ரெண்டுப் பேரும் பேசி தனித் தனியே அவரவர் வாழ்க்கைப் பற்றிப் பேசிருப்பார்கள். அந்த வாய்ப்பில்லாமல் போக…. ருத்ரன் மட்டுமே பேசி, அவன் செய்ததுச் சொல்லி ஒரே கலாட்டா…
இரவு உணவு சாப்பிடும் பொழுது அக்னி நிலா, "உனக்குக் கைல அடிப்பட்டுப் போச்சு. வலிக்கும். வா நான் ஊட்டி விடுறேன்".


"அது சரியா போச்சு".

"எப்படிச் சரியா போகும்? இவ்ளோ சீக்கரம்".

"அது அப்படித்தான், ஒரு மருந்து கண்டுபிடிச்சேன், நானே உள்ள ஒரு கிளாஸ் ஊத்திகிட்டேன் அதான், அடிப்பட்டது உடனே சரியா போய்டும், அவ்ளோ பவர் அதுக்கு."

"அடப்பாவி அன்னைக்கு கூட அதான் சரியா போச்சா".

"ஈஈஈ ஆமா, உடஞ்சது கிளாஸ். நான் அது உடஞ்சதும் தூக்கிப் போட்டுட்டேன்" என்று ருத்ரா சிரித்தான்.

"என்ன குழப்பி விடப் பிளான் போட்டிருக்க, சரியான ஃப்ராட்",

"பிளான் இல்ல… ஆனா நீயா வந்து மாட்டிக்கிட்ட, நானும் கொஞ்சம் உன்னை வச்சி செஞ்சிட்டேன்",

"சரியான பிராட்"
இந்த இடம் ஆழம் கம்மியா இருக்கும், ஒரு தீவு பக்கம் திருப்பினான் ருத்ரன், கடல் கண்ணாடியாகத் தெரிந்தது. கலர் கலர் மீன்களைப் பார்த்துப் பிரம்மிப்பு.

"ருத்ரா எனக்கு மீன் பிடிச்சு தா. அந்தக் கோல்ட் கலர் ஒன்னு ரோஸ் கலர் ஒன்னு வேணும்",

"ஹேய் அடம் பிடிக்கக் கூடாது, அதோட இடத்துலதான் எல்லோரும் வாழனும், அதை விட்டுட்டு அடச்சி வைக்கிறது தப்பு" ருத்ரா கசந்துப் போன புன்னகையோடு சொன்னான்.

"அப்போ நீங்க கூட டெஸ்ட் செய்ய எவ்ளோ மிருகத்த கொன்னு இருப்பிங்க" அக்னி நிலா சாதாரணமாகச் சொன்னாள்.
ருத்ரன் உடல் விறைத்து நின்றது,
"அதோட வலி எனக்கு தெரியும், அதனாலதான் ரொம்ப ஆபத்தா இருக்கறத நானே குடிச்சிக்கிறேன்" ருத்ரன் அவனால் இழந்த உயிருக்கு இன்று கண்ணீர் சிந்த, பேச்சை மாற்றிவிட்டு,

"சரி உள்ள போலாம், கடலுக்கு உள்ள நான் போனது இல்ல",

"அதுலாம் முடியாது இங்கவே நின்னு பாரு, கடல் எப்பவும் ஆபத்துதான்".

"நீ கூட்டிட்டு போறயா இல்ல நான் குதிச்சிடுவேன்….” அக்னி நிலா கண் சிமிட்டும் முன்பு கப்பல் ஓரத்தில் நின்று ருத்ராவை மிரட்டிக் கொண்டிருந்தாள்.

"இவள் சரியான இம்சை. ஒழுங்கா அமைதியா இரு இல்ல அடி"

"கூட்டிட்டு போவியா? மாட்டியா? அத மட்டும் சொல்லு, தேவையில்லாம அதிகம் பேசிட்டிருக்காத புரியுதா?"
ருத்ரா சிறிது நேரம் யோசித்துவிட்டு,

"சரி உள்ளப் போலாம், என் கூடவே தான் வரனும் எதாவது வித்யாசமா இருக்குன்னு ஓடக் கூடாது புரியுதா."
அக்னி நிலா கண்கள் மின்ன சிரித்துக்கொண்டு தலையாட்ட, அதற்குள் ருத்ரன் பாதுகாப்பு உடையைக் கீழ் தளத்திலிருந்து எடுத்து வந்து, முதலில் அக்னி நிலாக்கு போட உதவி செய்து விட்டு, அவனும் போட்டுக் கொண்டு பாதுகாப்பிற்கு ஒரு கயிறுக் கட்டி இருவரும் குதிக்கத் தயாராக இருந்தார்கள்.

அக்னி நிலா முதலில் பயந்தவள், ருத்ராவை பிடித்துக்கொண்டே நடந்தாள்….
சூரியன் ஒளியால் நீல நிற கடல் பெண் தங்க நிறம் பூசிக்கொண்டாள்.
அந்தக் கடல் தாயின் வண்ண செல்வங்கள் தவழ்ந்து கொண்டிருக்க, சில வித்யாசமான செடிகளைத் தொட்டுப் பார்க்கச் சென்ற அக்னி நிலாவை பிடித்துத் தன் புறம் இழுத்தான். ‘வேண்டாம்' என்பது போல சைகை காட்ட..
அக்னி நிலா ருத்ராவை முறைத்து,

"போடா டாக்" மனதில் திட்டிக்கொண்டு,
மீன்களைப் பார்த்தவுடன் ஒரே குஷி…. கூட்டம் கூட்டமாக நீந்திப் போகும் வண்ண மீன்களைக் கையில் பிடித்து முத்தமிட்டாள், எந்த மீனை முதலில் பிடித்துக் கொஞ்சுவது என்றுதான் தெரியவில்லை. அனைத்தும் குட்டி குட்டியா அதன் உடலை வளைத்து நெளித்து, சுதந்திரமாகத் திரிந்ததைப் பார்த்தாள்.
ருத்ரா அக்னி நிலா செய்யும் அனைத்தையும் ரசித்துக்கொண்டு, அவளை அழகாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான்.
ருத்ராவிற்கு அக்னி, வளர்ந்த குழந்தையாகத் தெரிந்தாள்.
அதனை ரசித்துக்கொண்டு சுற்றி ‘ஏதாவது ஆபத்து இருக்கிறதா?’ என்று ஒரு காவலன் போல அங்கும் இங்கும் தத்தித் தத்தி ஓடும் அக்னி நிலாவைப் பாதுகாத்தான். சுற்றி ஏதோ அமானுஷ்சியம் தெரிய…. அது அக்னி நிலாவை நோக்கி வர, அதைத் தடுக்கும் முன்பு அக்னி நிலா உடம்பில் அந்தத் தங்க நிற உருவம் புகுந்து கொண்டது.

'இன்னும் ஒரு சக்தி மட்டும் தான் பாக்கி. என்னை அழித்த உங்களை அழிக்கும் வரை அடங்க மாட்டாள் இந்த அக்னி நிலா' அவளது ஆட்டத்தைத் துவங்க தயாரானாள்.


அவள் சக்தியை மூன்று பாகமாகப் பிரித்துப் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். ஒன்று இயற்கை அவளுக்கு உருவம் கொடுத்தது..


ஏதோ ஒரு அசம்பாவிதம் என்று புரிந்துகொண்ட ருத்ரன், அக்னி நிலாவை நெருங்கும் முன்பு, அக்னி நிலாவால் அந்த சக்தி ஈர்க்கப்பட்டது. இன்னும் சிறிது தூரம் சென்றாள். தீவிற்கு நடுவில் சந்திரனின் அருள் பெற்ற ஒருவனால் திறக்கப்படும், அந்தப் பெட்டி மூலம் அந்த சக்தி வெளிப்படும். அந்த சந்திரன் அருள் பெற்றது வேறு யாருமில்லை… நம்ம ருத்ரன் தான்.


அந்த சக்தி வந்து அக்னி நிலாவை பக்கத்திலிருக்கும் தீவிற்குத் தூக்கிச் சென்றது. ருத்ராவால் பாதுகாப்பு உடையுடன் நீந்த முடியவில்லை, போட்டு இருக்கும் உடையின் பாரம் வேறு, அவனை வேகமாக நகர அனுமதிக்க வில்லை, அனைத்தையும் கழட்டிவிட்டு, அக்னி நிலாவை தொடர்ந்து சென்றான்,
அந்தப் பெட்டிக்கு அருகில் அக்னி நிலா மயங்கியது போலப் படுத்துக்கொண்டாள்.
ருத்ரன் பைத்தியம் பிடித்தவன் போல ஓடி வந்தான், தண்ணீர் தடத்தை வைத்து அந்த சிறு தீவுக்கு நடுவில் வந்தான். அக்னி நிலா மயங்கி இருப்பதைப் பார்த்துப் பதறினான் ருத்ரன்.


"அக்னி நீயும், என் ரூபி போல விட்டுட்டு போயிடாத எந்திரி அக்னி நிலா,... நிலா..." கன்னத்தைத் தட்ட, லேசாகத் கண்களைத் திறந்த நிலா.. தண்ணி தண்ணி என்று கேட்க,

அக்னியும் ‘சுற்றி ஏதாவது தண்ணி எடுத்துவர‌ இடம் இருக்கிறதா?’ என்று பார்க்கும் சமையம், கண்ணில் ஒரு பெட்டி தென்பட்டது. இதை எங்கோ பார்த்தது போலிருக்கு. யோசிக்கிற சமையம், இது மண்ணில் புதைந்து கொஞ்சம் வெளியே தெரிந்தப் பெட்டியை எடுத்துத் திறக்க முயன்று, தோற்றான். பக்கத்தில் இருக்கும் பறையைப் பார்த்து ஓங்கி ஒரு அடி அடிக்க, அது இரண்டாகப் பிரிந்து அதன் உள்ளே இருந்து ஒரு சிறு சக்தி சென்று அக்னி உள்ளே புகுந்து கொண்டது.


சாதாரண அக்னி நிலாவாக இருந்தவள், முழு சக்திப் பெற்றாள். அனைத்து சக்தியும் ஒன்றாகச் சேர்ந்த களைப்பில் படுத்திருந்தாள்.
அந்தப் பெட்டியைத் தூக்கிச் சென்றவன், சுற்றி தண்ணீர் இருக்கிறதா என்று ஓடினான். கண்ணில் தண்ணீர் இருக்கும் இடம் பட, வேகமாக ஓடிச் சென்றவன் அந்த உடைந்த பெட்டியிலே தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளித்தான், அக்னி நிலா எந்திரித்து, "ருத்ரா என்ன ஆச்சி," அப்பாவியாகக் கேட்க,
'இப்போ நடந்தத சொன்னா குழம்பிடுவா. அப்புறம் நேரம் பாத்துச் சொல்லிக்கலாம்.' என்று நினைத்தவன்.."அது ஒன்னும் இல்ல, தண்ணில மூச்சி முட்டிடுச்சி உனக்கு அதான் இங்க தூக்கிட்டு வந்துட்டேன்"
அவளிடம் பேசிக்கொண்டே அவள் அணிந்து இருக்கும் கவச உடை அக்சிஜன் சிலிண்டர் எல்லாம் ருத்ரா உதவியோடு கழட்டினாள்,
சிறிது நேரம் இங்குச் சுற்றிவிட்டு , அக்னி நிலா அடுத்துச் செய்வதற்குத் திட்டம் தீட்டினாள், ருத்ராக்கு தெரியாமல்.
கப்பலுக்கு சென்ற சமையம் இருவரும் வேற வேற மனநிலையில் இருந்தனர், அவளுக்கு ரூத்தாவின் உடை கொடுக்க, அவளை முழுவதும் முழுத்திக் கொண்டது,
அவள் நின்ற கோலத்தைப் பார்த்து,
"இதுக்குத் தான் சொல்றது வளரனும்னு", அவளுக்குச் சாப்பிடக் கொஞ்சம் கொடுத்துவிட்டு, ருத்ரா சாப்பிட தோணாமல் கடலை வெறித்துக் கொண்டு பார்த்தான்.


ருத்ரா மாயம், மந்திரம் இது பற்றி எல்லாம் நம்பாதவன், முதல் முதலில் இவை அனைத்தும் பார்த்ததில், கொஞ்சம் மிரண்டுதான் போனான்,
'இனி அக்னி நிலாவை பத்திரமா பாத்துக்கனும்' என்ற எண்ணம் ருத்ராக்கு மேலோங்க அக்னி கையை இருக்கமாகப் பிடித்துக் கொண்டான்.


உருவம் இல்லாமல் இருவரை கொன்றவளுக்கு, மீதம் உள்ள நாலுப் பேரைக் கொல்வது சாதாரணமானது. அதற்கு ருத்ராவை பயன்படுத்திக்க நினைத்தாள் அக்னி நிலா.
ருத்ரா அவள் கையை விடுவதாக இல்லை, "ருத்ரா கை வலிக்குது விட்டுத் தொலை" என்ற போதுதான் நினைவு வந்தவன் பிடியை தளர்த்தான்,
இருவரும் கடலின் அமைதியை ரசிக்க… சிறிது நேரத்தில் ஏதோ நடக்க இருப்பது புரிய, அடுத்த நொடி, ருத்ரா சுதாரிக்கும் முன்பு கடல் கொள்ளையர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள்.


வந்தவர்கள் இருவரையும் கத்தி முனையில் நிறுத்தி, அக்னியை அங்கிருந்த ஒருவன் கழுத்தைப் பிடிக்க…


ருத்ராக்கு எங்கிருந்து கோபம் வந்தது என்றுத் தெரியவில்லை… இயற்கையாகவே மிகவும் மென்மையான குணம் கொண்டவன். அவன் அந்த நிலவைப் போல… கண் இமைக்கும் நேரத்தில் அக்னியைப் பிடித்து அவன் பின்னால் நிறுத்திக் கொண்டான்.


"என்ன செய்ய நினைத்தாலும் என்ன செய்ங்க..அவ மேல ஒரு தூசுகூடப் படக் கூடாது" ருத்ரா விரலை நீட்டி எச்சரித்தான்.
அங்கு இருப்பவனுக்கு அவன் பேசியது புரியாவிட்டாலும் விரல் நீட்டி எச்சரித்தது கோபம் கிளப்ப, ருத்ரா நெஞ்சில் அவன் வைத்து இருந்த சிறு கத்தியை வைத்து அழுத்திக் கீறி விட்டான், அது அழுத்தமாகப் பதிந்து, வலி எடுத்தது, அவன் எடுத்துக் கொண்ட மருந்தின் வீரியம் குறைந்து விட்டது போல, அந்தக் காயம் மறையாமல் அவன் மெல்லிய சந்தன நிற சட்டை முழுக்கச் சிவப்பாக மாறியது.

 
3. மாய நிலா

இவர்கள் முரட்டுத் தனமாக ருத்ராவை தாக்கியதைப் பார்த்த அக்னி நிலாக்கு உடல் நடுங்கியது... என்னதான் மனிதர்கள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு சக்திகள் கூட வைத்து இருந்தாலும்... இவளை வளர்த்தவர்கள் என்னவோ சாதாரண மனிதர்கள்தான். இயல்பாகவே பயந்தவள் வேறு... கோபம் வந்தால் மட்டும் ஆத்திரத்தில் கண்ணு மண்ணு தெரியாது அக்னி நிலாக்கு. ஆனால் மற்றபடி இனிமையானவள்.

அக்னி நிலா கலங்கி ருத்ராவை கட்டிக்கொண்டாள், உடலில் ஒரு அதிர்வும், பயமும் அவள் உடல் மொழியில் புரிந்த ருத்ரா.

"ஒன்னும் இல்லை அக்னி அந்த கடல் கொள்ளையர்கள் இப்போது போய்டுவாங்க, நீ பயப்படாதே...." ருத்ரா அவன் வலியை பொறுத்துக்கொண்டு அவளுக்கு சமாதானம் சொன்னான். அக்னி ருத்ரா நெஞ்சில் வழியும் ரத்தத்தை கையால் அழுத்தி பிடித்துக்கொண்டு நின்று இருந்தாள்.

ருத்ராவால் எதிர்க்கவும் முடியாது இந்த நிலையில், அவர்கள் தேவையானதை எடுத்துட்டு போட்டும் என்று அமைதியாக அக்னியை ஒரு கையால் பிடித்துக்கொண்டான், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டே.

அவர்களுக்கு ஒரு வார உணவு மட்டும் வைத்து விட்டு மொத்தமாக எடுத்துச் சென்றார்கள்.

"சரியான ரத்தம் குடிக்கும் மிருகங்கள் போல இவனுங்க" ஒரு 10 பேர் வந்து இருந்தார்கள் உள்ளே, மற்றவர்கள் கப்பலைச் சுற்றி சிறு சிறு படகு மற்றும் ஆயுதத்தோடு நின்று இருந்தார்கள்.

"ருத்ரா என்ன இவங்க பார்க்க காட்டு எருமை போல இருகாங்க, ஒரு அடிக்கே நான் செத்துடுவேன் போல".

"அக்னி வாய மூடு, இவனுங்களுக்கு பேசினவே பிடிக்காது போல" அக்னி பசை ஒட்டியது போல வாயை இறுக்க மூடிக்கொண்டு நின்று இருந்தாள்.

அதில் ஒருவன் மட்டும் அக்னி நிலாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து இருந்தவன் அவர்கள் கிளம்பும் போது.... அக்னியை பார்த்து, "பியூட்டி புல் ஐஸ்".

அக்னி அவனை விசித்திரமா பாத்து, ஆமா இந்த கலவரத்துல இத்து ரொம்ப முக்கியம் பாரு, என்று முனுமுனுத்துக் கொண்டாள்.

அவர்கள் சென்றதும், ருத்ராக்கு அதிகம் ரத்தம் போனதால் கொஞ்சம் தலை சுற்ற பக்கத்தில் இருந்த கம்பியை பிடித்து இருந்த இடத்தில் அப்படியே அமர்ந்தான்.

அக்னி நிலா, ருத்ரா அருகில் உட்கார்ந்து ஆறுதலாக, பேசிக்கொண்டும் ரத்தத்தை சுத்தம் செய்து, அவனை படுக்க வைத்தாள்.

எச்சரிக்கைக்கு அவன் எடுத்து வந்த மருந்தை எடுத்துத் தர சொல்லி போட்டுக்கொண்டு, மருந்தின் வீரியத்தால் ருத்ரன் தூங்கிவிட்டான்.

அவன் தூங்கியதை உறுதி செய்துகொண்டு, அவனது கீறல் பட்ட இடத்தை அழுத்தி பிடித்து கண்களை மூடி ஏதோ ஒரு வார்த்தை திரும்ப திரும்ப ஜபித்து.

அவள் கை எடுத்த மறு நொடி அவனுக்கு ஏற்பட்ட காயங்கள் சிறிது சிறிதாக குணம் அடைந்தது.

ஒரு பக்கம் ஒருவள் காதலுக்காக ஏங்கியும், இன்னொரு பக்கம் ருத்ராவின் நண்பன் வசி, ரோஸ் உடன் சேர்ந்து, நடந்த இரு கொலைகளின் காரணத்தை அறிய முனையும் போது தெரிய வந்த விஷயம் அறிந்த ரோஸ் நெஞ்சில் கையை வைத்து உட்கார்ந்துட்டா.

"டாக்டர் என்னாச்சி?".

"நான் எது இருக்கக் கூடாதுன்னு நினைத்த அனைத்தும் இங்கு நடக்கிறது",

"பிளைட்டில் இறந்தவர்களின் தொண்டையில் இருந்து ஒரு வேர் கிடைத்தது, அது பழைய மருத்துவ புத்தகத்தில் இருக்கு, ஆனா அதை யாரும் நேரில் பார்த்தது இல்ல, நம்ம பார்த்து இருக்கோம் அதிர்ஷ்டம் செஞ்சவங்க, அந்த வேர் உயிரையும் கொடுக்கும் உயிரையும் எடுக்கும்".
வசீகரனை பார்த்து ரோஸ் சொல்ல.

வசீக்கு இப்போது தான் மூச்சி வந்தது, "இதுக்கான எவிடன்ஸ் வேணும்", ரோஸ் அந்த புத்தகத்தின் குறிப்பு மற்றும் அந்த வேர் சாம்பிள் எல்லாம் எடுத்து வைத்து வசீயிடம் கொடுத்துவிட்டு செல்லும் சமையம்.

"ரோஸ் நீங்களும் என் கூட வரீங்களா, கொஞ்சம் வேலை இருக்கு.. நீங்க இத பத்தி கொஞ்சம் சொன்னா சரியா இருக்கும்," வசி அவனது அலுவலகத்துக்கு கூட்டிக்கொண்டு போனான், அவனது மேல் அதிகாரியை பார்க்க.

அவன் அவர் அறைக்கு அனுமதி பெற்று உள்ளே செல்லும் சமையம், அங்கு நதியா ஒய்யாரமாக அமர்ந்து இருந்தாள், 'இவளுக்கு வேற வேலை இல்ல, போலீஸா இருந்துட்டு கொலைகாரனை காதலிக்கறேன்னு பைத்தியம் போல சுத்திட்டு இருக்கா' வசீக்கும் நதியாவை ரொம்ப பிடிக்கும், அடங்காத பெண் சிங்கம், இவளுக்கு ஒரு பேர் இருக்கு டிபார்ட்மென்ட்டில் சண்டி ராணி, சண்டைக்காரி என்று நேரம் தகுந்த போல போற்றப்படும் இருபத்து மூன்று வயது ஆகும் நதியா.

வசி அவளை ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு ஐ. ஜியை நோக்கி நடந்தான்,

"வாங்க வேலையை முடிச்சிட்டீங்களா, சி. பி. ஐ க்கு மாத்தி விட ஆர்டர் வந்து இருக்கு". ஐ. ஜி நதியாவை பார்த்து சொல்ல. நதியா அவளுக்கு வந்து இருந்த ஆர்டர் காப்பியை ஆட்டிக்கொண்டு இருந்தாள். அவள் செய்வதை பார்த்து ருத்ராக்கு எரிச்சல் தான் வந்தது. சாந்தியை முறைத்து விட்டு.

"சார் அவ்ளோ சீக்கரம், இந்த வசி விட்டு கொடுக்க மாட்டேன் புரியும்ன்னு இங்க சிலருக்கு தெரியும்" வசி நதியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ரோஸின் உதவியோடு அவன் கண்டு பிடித்ததை சொல்ல.

"இது எல்லாம் உண்மையா? இப்படி எல்லாம் கூட நடக்குமா?" என்று அவர் அச்சர்யப் பட்டுப் போனார், இருந்தாலும் ஆதாரத்தோடு இருப்பதால் ஒன்றும் மறு பேச்சி பேசும் நிலையில் இல்லை.

"சரி வசி இந்த கேஸ் நீங்களே எடுத்துக்கோங்க" மாலை ஐந்து மணி ஆனதும், நதியா சண்டி ராணியாக மாறி, அவள் கையில் வைத்து இருந்த நியூஸ் பேப்பரை ஐ. ஜி மூஞ்சில விட்டு எரிந்தாள்.

"நதியா திஸ் இஸ் டூ மச்".

"நைனா அஞ்சி மணி ஆகி, அஞ்சி நிமிஷம் ஆச்சி".

"என்னதான் அஞ்சி மணி ஆனாலும் இது ஆபீஸ்".

"உங்க ஆபீஸ் நீங்களே வச்சிக்கோங்க வசி மாமாட்ட சொல்லி என்னையும் சேத்துக்க சொல்லுங்க இதுக்காக நான் எவ்ளோ கஷ்டப் பட்டு
இருக்கேன் தெரியுமா? எங்க ஆபீஸ்ர் காலுல மட்டும்தான் விழவில்லை" நதியா செய்யும் கிறுக்குத்தனம் அனைவர்க்கும் தெரியும், வசி நதியாவின் சொந்த அத்தை பையன், முன்னாடி பெரிய மீசையோடு கம்பிரமாக உட்காந்து இருப்பது சாட்சாத் நதியாவின் தந்தை தான்.

"பாவம் டா வசி என் பொண்ணு, இப்போதான் இந்த வயசுல யாரு மேலையோ காதல் வந்து இருக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க டா".

"நல்ல அப்பா நல்ல பொண்ணு, நீங்க தான் மாமா இவள இப்படி கெடுத்து வச்சி இருக்கீங்க, 10 நாள் என்ட விடுங்க முட்டிக்கு முட்டி தட்டி சரி செய்றேன்" ரோஸ் ஒரு புறம் இங்கு நடப்பது விளங்காமல் முழிக்க, வசி அதனை பார்த்து, இவரு மாமா, இவ அவரோட பொண்ணு நான் சொன்னேன்ல, மிஸ்டர். ஜீரோவை ஒன் சைடு லவ் செய்யறான்னு, அது இவ தான்".

ரோஸ் அதனை கேட்டு, "சூப்பர் நதியா, எனக்கும் அந்த எண்ணம் இருந்தது ஆனா என்ன நம்பி ஒருத்தன் தாடியோட சுத்துறான் அதனால லவ் செய்யல".

"செம ரோஸ் உனக்கும் எனக்கும் ஒரே டேஸ்ட் பாறேன்" இருவரும் முதல் சந்திப்பில் ராசி ஆகிட்டாங்க.

"இவ்ளோ கெஞ்சி கேக்கறதால என்கூட வேலை செய்ய ஒத்துக்கறேன்" வசி பெருந்தன்மையாக சொல்ல,

"போடா டுபுக்கு, நைனா ஆர்டர் டைப் செஞ்சி வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடு, நான் என் ஆளு கூட டூயட் பாட போறேன்".

வசிக்கு இது சுத்தமா பிடிக்கல, வசி குழப்பமான முகத்தை பார்த்த ரோஸ், "நீங்க நினைக்கற போல மிஸ்டர். ஜீரோ மோசம் இல்ல, அவர் செஞ்சது நல்லது தான்".

"புரியல ரோஸ்".

"நல்லவர்களை வாழ வைக்கும் கெட்டவர்களை அழிக்கும் அந்த வேர், இது தெரிந்து செயல் படும் அவன் ஜீரோ இல்லை ஹீரோ வாகத்தான் இருக்க முடியும் வசி".

அதற்கான கதை மற்றும் ஆதாரத்தை வசியிடம் காண்பித்த பிறகுதான் சாதாரண மன நிலைக்கு வந்தான். மனதில் மெச்சிக் கொண்டான், 'பிராட் புள்ள அனைத்தும் தெரிந்துதான் இவனைப் பிடித்து இருக்கும் போல' நதியாக்கு வசி கண்டு பிடிக்கும் முன்பே அனைத்து விசயமும் தெரியும், வசி நதியா அறையை அதிரடியாக அன்றே சோதித்த போது தெரிய வந்தது.

பெரிய மேப் போட்டு வைத்து இருந்தாள், ஆனா ஒன்னு மட்டும் ருத்ராக்கு புரியல, அதை பார்த்துக் கொண்டு இருக்கும் போது சாந்தி டூயட் பாடி முடித்துவிட்டு வர,
"என்னடா போலீஸ், இங்க என்ன செய்ற".

"நீ கண்டு பிடிச்சது எல்லாம் கரெக்ட் தான், ஆனா என்ன கவிதை எழுதி வச்சி இருக்க?"

"இது தூக்க தெரில, அவன் காத்தில் வந்து காற்றாய் கரைவான், படிக்கக் கூட தெரில, இந்த சிரிப்பு போலீஸ்க்கு".

"லூசு படிக்க தெரியும், இந்த இடத்துல எதுக்கு எழுதி வச்சி இருக்க, அது என்னது காத்துல கரைவானா?."

"ஆமா ஒரு எவிடென்ஸ் இல்ல, கை ரேகை, கால் தடம் ஒன்னும் கிடைக்கல இல்லை, அதான்".

"அவன் அதை அழித்து கூட இருக்கலாம்".

"டுபுக்கு போலீஸ், அளித்தத்துக்கும் அங்கு எந்த அடையாளமும் இல்லை, வா இங்க வந்து உட்காரு உனக்கு தெளிவா சொல்றேன்" சாந்தி தொண்டையை சரி செய்துகொண்டு.

"முதல் கொலை, அந்த புகழ் பெற்ற அறிவாளி தனி விமானத்தில் வந்து இருக்கார், அதும் இல்லாம பிளைட் ஓட்டின இருவரை தவிர மற்றவர்கள் பெண், அந்த மனுஷன் அப்படி இப்படி போல, தெய்வம் ஒரே குஜாலா இருந்து இருக்கார், புல்லா வீடியோ செக் செஞ்சாச்சி, பிளைட்டும் அலசியாச்சி ஒன்னும் கிடைக்கல, அந்த மிஸ்டர். ஜீரோ கசக்கிய பேப்பர் தவிர".

"இது எல்லாம் எனக்கே தெரியும் போடி".

"சரி அது விடு, சீக்கிரமா அவர கண்டு பிடிச்சி என்ன தடை வந்தாலும் எனக்கு கட்டி வைப்பேன்னு சத்தியம் பண்ணு" சாந்தி கையை நீட்டி காண்பிக்க.

"அது அப்புறம் பாத்துக்கலாம்" அவள் கையை தட்டிவிட்டு வசி கிளம்பிட்டான்.

இங்கு சாந்தி கன்னத்தில் கை வைத்துக்கொண்டு, என் மன்னவா எப்போ என்னை பார்க்க வருவாய், "சற்று முன்பு பாதியிலே விட்டு விட்டு வந்த டூயட் தொடர்ந்தாள் சாந்தி.

அங்கு கடலில், அக்னி நிலா போட்டை ஊரை பார்க்க, அக்னி சக்தியை கொண்டு திருப்பினாள்.

மயக்கத்தில் இருந்த ருத்ரா, போட் வேறு திசை போவதை, எழுந்த பின்புதான் கணித்தான்.

"அக்னி நிலா என்னாச்சி?".

"ஒன்னும் இல்ல கொஞ்சம் மயங்கிட்டிங்க, இப்போ சரியா போயிடுச்சி". ருத்ரா அடிபட்ட இடத்தை பார்த்து அதிர்ந்தான், சிறு காயம் கூட இல்லை. 'எப்படி இது சாத்தியம், அதுதான் ஏற்கனவே எடுத்து கொண்ட மருந்தின் வீரியம் குறைந்ததே இப்போ எப்படி சரியா ஆச்சி' அக்னி நிலாவை சந்தேகமாக பார்க்க.

"உனக்கு எப்படி போட் ஆப்ரேட் செய்ய தெரியும்?"

அக்னி நிலா இதனை எதிர் பார்க்கவில்லை, இவன் இப்படி கேள்வி கேட்பான் என்று.

"அது தெரில கை தானா ஏதோ செஞ்சது, ஆனா எனக்கே தெரில நான் அது எப்படி செஞ்சேன்னு" அக்னி நிலா தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தாள்.

"சரி விடு மனச குழப்பிக்காத, நீ இது சம்பந்தமா படிச்சி இருப்ப".

அக்னி அதன் பிறகு எதும் பேசல, தனியா அமர்ந்து எதையோ யோசித்துக்கொண்டு இருந்தாள், ருத்ராவும் சாப்பிடும் போது மட்டும் அவளுக்கு ஊட்டி விடுவான், மத்த நேரங்களில் அவன் அவளை தொந்தரவும் செய்யவில்லை.

"அக்னி நிலா நம்ம இன்னும் ஒரு அஞ்சி நாளுல ஊருக்கு போயிடுவோம்."

அக்னி நிலா மூளை வேகமாக ஒரு திட்டம் போட்டது இன்னும் மூன்று பேரை அதற்குள் கொலை செய்ய முடிவு எடுத்தாள்.

இரண்டாம் கொலை நடந்தது பற்றி வசியிடம் ரோஸ் டிஸ்கஸ் செய்து கொண்டு இருந்தாள், பிரபல அழகியல் நிபுணர், எந்த வகையான முக அமைப்பையும் மாற்றக் கூடியதில் திறமை வாய்ந்த அந்த முப்பதுகளை இளமையாக இருக்கும் மாதவி, ஆயுர்வேத மசாஜ் மாதத்தில் இரண்டு முறை எடுத்துகொள்வது தெரிந்து அவளது கண்ணில் விடும் எண்ணெயில் அந்த வேர் துகள்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

"அது எப்படி கண்ணுல விடுற ஆயில், எப்படியும் அங்கு வேலை செய்றவங்க செக் செய்து இருப்பார்களே?".

"வசி, துகள்கள் இருந்தது, வேர் இருந்து இருந்தா கண்டிப்பா வேலை செய்றவங்க தூக்கி போட்டுடுவாங்க, அதனால அவங்க யூஸ் செய்த அனைத்து எண்ணெய்யிலும் இருந்து இருக்கு, ஆனா வேலை முடிந்ததும் அது மறைஞ்சி போய் இருக்கு, இத ரிப்போர்ட்ல சொல்ல முடியாது சோ, உடம்பில் இருக்கும் வேர் எடுத்து தான் சொல்ல முடியும்".

"ஏன் கண்ணுல இருந்தது மறையல".

"உடம்புக்குள் போய்டுச்சுன்னா அதோட மொத்த சக்தியும் உபயோகித்து அந்த நபரை வாழ வைக்கும், அல்லது சாகடிக்கும்.. கடைசில சக்தி அந்த வேர்க்கு இருக்காது, அதனால அங்கவே தங்கிடும்".

"ஆனா கொலை காரன் நான்தான் செஞ்சேன்னு சொல்லாம சொல்லறான், அந்த கசக்கிய பேப்பர் வைத்து".

அப்போது ருத்ராக்கு ஒரு மெயில் வந்தது, இன்னும் ஒரு வாரத்தில் சிட்டிக்கு வருவது போல.

"ருத்ரன் வர போறார்" சொன்னதும் ரோஸ் தெரிச்சி ஓடிட்டா.

"சார் இனி என்ன கூப்பிடாதீங்க" அவ்ளோதா ரோஸ் ருத்ரா செய்த காரியம் அப்படி. வசி ரோஸ் செயலை பார்த்து தூங்கச் சென்ற சமையம், நடிக்கும் ருத்ராக்கும் ஒரு செய்தி வந்தது ரெண்டு கொலை ஒரே இடத்தில்.

இப்படி மர்மமான முறையில் கொள்ளப்பட்டது யார்?



கதை உங்களுக்கு பிடித்து இருக்கிறதா இல்லையா இங்கு சொல்லுங்கள் நட்பே....

 
4 மாய நிலா

வசி பாதி தூக்கத்தில், சாந்தியை அழைத்துக்கொண்டு கொலை நடந்த இடத்தை நோக்கிச் சென்றான்.

"டேய் நீ வேணும்னா போ என்ன எதுக்கு கூட்டிட்டு போற, தூக்கமா வருது" என்று வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும் வசி மீது சாய்ந்து நல்லா தூங்கிட்டு வந்தாள் சாந்தி.

"நீ இப்படி சோம்பேறியா இருந்தா, மிஸ்டர். ஜீரோக்கு உன்னை சுத்தமா பிடிக்காது, சீக்கிரமா அவனை நீ கண்டு பிடிச்சி வாழ்க்கை கொடுக்கணும்ல" வசி சொன்ன அடுத்த நொடி தூக்கத்தில் இருந்தவள் டூயட் மோடுக்கு போய்ட்டா சாந்தி.

இறங்க வேண்டிய இடம் வந்ததும், "அடியே விஜய சாந்தி எந்திரி".

"நான் சா...ந்....தி.... புரியுதா இன்னும் ஒரு டைம் விஜய சாந்தின்னு சொன்ன அடிச்சி முகறைய பேத்துடுவேன் புரியுதா?". சாந்திக்கு அவ இடத்துல அவ தான் ராணி மத்தவங்க கூட ஒப்பிட்டு பேசுவது எப்பவும் பிடிக்கறதில்லை, வசியும் அவளை கூப்பிடுவதை விட போறதும் இல்லை. சாந்தியை வெறுப்பு ஏற்றுவதில் அவனுக்கு அலாதி பிரியம்.

இருவரும் சண்டை போட்டுக் கொண்டாலும், ஒருவர் மீது ஒருவர் உயிர். இதுக்காக கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி வீட்டில் கேட்க, இருவரின் பதிலும் ஒன்றாக இருந்தது.

"யாராவது பிரண்ட கல்யாணம் செஞ்சிப்பாங்களா, செஞ்சி கிட்டாலும் அவங்களுக்குள்ள லவ் இருந்து இருக்கும், எனக்கு உள்ள ஒருத்தனை கற்பனை செய்து உயிர் கொடுத்து வச்சி இருக்கேன் அவனை தான் கட்டிப்பேன்" இது சாந்தியின் பதில்.

வசி ஒரே வரியில் முடித்துக் கொண்டான், "எனக்கு லவர் இருக்கு".

அந்த லவர் எங்க இருக்குன்னு கேட்டா வசியிடம் பதில் இல்லை, அவளை பார்த்த மறு நொடி என் மனைவியா இந்த வீட்ல இருப்பா போதுமா."

இந்த ரெண்டு அறிவாளியை, பெற்றவர்கள் தான் கடுப்பில் கடுகாக பொரிந்தார்கள். அதன் பிறகு திருமணம் பற்றி பேசினாலும் பிடி கொடுத்து பேசவில்லை இருவரும், முகம் கூட பார்த்ததில்லை. ஒரு முறை சந்தித்து இருக்கிறார்கள்... அப்போது இருந்து காதல்.

ஆனால் இந்த சாந்தி அது கூட இல்ல, ஒரு கொலைகாரனை காதலித்துக் கொண்டு இருக்கிறாள், அடிக்கடி சாந்தி வீட்டில் இருப்பவர்கள், அவள் மனதை மாற்ற,

"அந்த கொலைகாரன் காட்டு எருமை போல கருப்பா, அகோர முகத்தோடு வந்து உன் முன்னாடி நிற்கும் சமயம் தெரியும் உன் விளையாட்டு, எங்கு சென்று விபரீதமாக முடியப் போகுது" என்று சாந்தி அன்னை இதை சொல்லி சொல்லி சாந்தியை வெறுப்பு ஏற்றுவது வழக்கம்.

"அவன் ராஜ குமரன் போல பட்டு உடுத்தி, என்னை தூக்கி போக வருவான்" அன்று இருந்து அடிக்கடி டூயட் போவது இவளது வழக்கமானது.

இவர்கள் இருவரும் சென்ற இடம்.... ஒரே கூட்டமும் கும்பலுமாக இருந்தது, ஆறு மாதத்துக்கு முன்புதான் இந்த இடத்தை அரசாங்கம் கைப்பற்றியது.

பழங்கால பொருள் ஒன்று தோட்ட வேலை செய்யும்போது கிடைத்ததால், இன்னும் தோண்டினால் எதாவது கிடைக்கும் என்று அவர்கள் ஆராய்ச்சி செய்தது போல ஒரு பழங்கால நகரம் புதைந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது, இரவும் பகலும் இங்கு வேலை நடந்துகொண்டும், ஆட்கள் நடமாடிக்கொண்டும் இருப்பார்கள். அப்போ எப்படி இது நடந்தது, என்று அங்கு இருக்கும் அனைவருக்கும் இதுதான் குழப்பமே.

சாந்தி கொலை செய்யப்பட்டவனை சோதிக்கும் போது, அதே துண்டு காகிதம், இங்கும் இருந்தது. மிஸ்டர். ஜீரோ அதனை யாருக்கும் தெரியாமல் எடுத்து சாந்தி பாக்கெட்டில் மறைத்து வைத்துக் கொண்டாள். சாந்திக்கு அந்த கொலைகாரனை ஜெயிலுக்கு அனுப்ப கொஞ்சமும் விருப்பம் இல்லை. காதலன் ஆச்சே எப்படி விடுவாள்.

வசி அங்கு விசாரிக்கத் துவங்கினான்.

"அங்கு இறந்து கிடப்பவர்கள்... யாரு டீடெயில்ஸ் சொல்லுங்க".

"இவங்க டெல்லியில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் வந்தாங்க, பல ஆயிரம் வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு வேர பதப்படுத்தி வைத்து இருந்தார்கள் ஒரு பெட்டியில், அதனை நாங்க கண்டு பிடித்தோம் அதை ஆபீஸர் கிட்ட ரிப்போர்ட் செய்ய, அதனை சோதனை செய்ய வரவைக்கப்பட்ட உயர் அதிகாரி இந்த இருவரும்.

"அவரப் பத்தி இன்னும் சொல்லுங்க".

"அவர் நிறைய அவார்ட் வாங்கி இருகாங்க, அகழ்வாராய்ச்சி சம்பந்தமாக, அதும் இல்லாம நிறைய பொருளுக்கு கரெக்ட் ஆன விளக்கம் ஆதாரத்தோட நிரூபிச்சி இருக்கார்".

வசி இங்கு பேசிட்டு இருக்கும் போது ஒரு பெண் கருப்பு துணியால் முகத்தை மறைத்து, வேகமாக போவதை பார்த்து.

பக்கம் இருக்கும் போலீஸ் கிட்ட, "இவர விசாரிங்க நான் வரேன்".

அந்த கருப்பு நிற உடை அணிந்த பெண்ணை துரத்திக் கொண்டு போனான் வசி, இவன் துரத்தி வருவது தெரிந்து அவளும் வேகம் எடுத்தாள், அவள் கையை ஏதோ சுழற்றி தெரு விளக்குகள் அனைத்தும் அணையச் செய்தாள். வசி அந்த இருட்டிலும் துரத்திக் கொண்டு போனான், வேறு வழி சென்று அவள் முன் வந்து நின்றான்.

அந்த பெண் முகம் இருட்டில் தெரியவில்லை, அவள் ஓடக் கூடாது என்று எண்ணியவன் அவள் கையை பிடித்துக்கொண்டு "யாரு நீ... எதுக்கு என்னைப் பார்த்ததும் ஓடுற".

வசிக்கும் ஏதோ வித்யாசமான உணர்வு, "இதுக்கு முன்னாடி நம்ம பார்த்து இருக்கோம் சொல்லு, யாரு நீ..?" அவன் கேட்டுக்கொண்டு இருக்கும் போது சட்டென்று வசி சட்டையை இழுத்து ஒரு மெல்லிய முத்தம் கொடுத்துவிட்டு மாயமாக மறைந்தாள் மயக்கும் பாவை.

வசி அதிர்ந்த அந்த ஒரு நொடி போதுமாக இருந்தது அந்த இடத்தை விட்டு அவள் போவதற்கு.

"இவ நான் அன்னைக்கு பாத்த பொண்ணு, அன்னைக்கு கைல ரத்த வெள்ளத்தில் இருந்தாள், அன்றும் இப்படிதான் சாகும் தருவாயில் முத்தமிட்டாள். அப்போ நான் தேடி கொண்டு இருப்பவள் இவள்தான், மாயமாக மறைந்தவளை அங்கும் இங்கும் தேடி களைத்து.

அங்கு வரும் போது வசிக்கு ஏதேதோ தோன்றியது, அவளுடன் வாழனும் என்ற எண்ணம் மேலோங்கியது. இவன் அவளது காதல் தேவதையை நினைத்துக்கொண்டு வரும் சமையம், சாந்தி அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு.

"இந்த கொலைக்கும் வேர் தான் காரணம் என்று சொன்னாள், ஆனா மிஸ்டர். ஜீரோ செய்யல ஏதோ ஒரு பொண்ணு செஞ்சி இருக்கா, கழுத்தை நெரித்து சாக அடிக்கப் பட்டு இருக்கான்.... அதும் பெரிய வேர் நெரித்தது போல தடம் இருக்கு ஆனா வேர் அங்கு இருப்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. ஒரு முடி கிடைத்து இருக்கு, டெஸ்ட்க்கு அனுப்பி வச்சி இருக்கேன்,

மொத்தம் ரெண்டு கொலை ஒன்று ஆட்கள் நடமாடும் இடத்தில் இன்னும் ஒன்றும் அதே இடத்தில் தான் நடந்து இருக்கு, ஆன யாரோ இழுத்துட்டு போய் வேறு இடத்தில் போட்டு இருக்காங்க.

ரெண்டு இடத்துலயும் ஒரு பெண்ணின் முடி கிடைத்து இருக்கு. ஒருவன் கழுத்தில், மற்றொண்டு இழுத்து செல்ல பட்டவனின் கையில்.

வசிக்கு ஒரு வேலை நம்ம இன்னைக்கு பார்த்த பொண்ணு செஞ்சி இருப்பாளோ, எப்படியாக இருந்தாலும் என் வாழ்க்கை அவளோடுதான்.

இவ்ளோ நாள் சாந்தியை கிண்டல் செய்துகொண்டு இருந்தவனுக்கு இப்போது தான் புரிந்தது, அந்த காதல் கிறுக்கின் மகிமை.

இருவரின் நிலையும் ஒன்று தான். தெரியாத, புரியாத இரு நிழல்களை காதலித்துக் கொண்டு இருக்கிறார்கள், இவர்கள் இருவரும் காதலில் ஜெயிக்க வாய்ப்பு இருக்கா? அவர்கள் துணையை மீண்டும் சந்திப்பார்களா என்று விதிக்கு தான் தெரியும்.

கேஸ் பற்றி அனைத்து முடிச்சிகளும் அவிழ்கப்பட்டது, ஒன்றைத் தவிர, யார் அந்த கொலையாளி? ஆணா, பெண்ணா? அல்லது எதாவது அமானுசியமா? இது புரியாமல் இங்கு தத்தலித்துக் கொண்டு இருக்கிறார்கள். மேல் இடத்தில் இருந்து பிரஷர் வேறு இருவருக்கும். விலகவும் சொல்லியாச்சு முடியாது என்று பிடிவாதத்தோடு இருவரும் நின்று இருந்தார்கள்.

அக்னி நிலா, ருத்ரா இருவரும் மௌனமாக இருப்பது ஏதோ போல இருக்க, அக்னி நிலா ருத்ரனிடம் "எனக்கு கொஞ்ச கொஞ்சம் ஏதோ ஞாபகம் இருக்கு, எனக்கு அடி பட்டு இருக்கும் போது ஒருத்தர் என்னை கட்டிப் பிடித்து அழுதுகொண்டு இருந்தார், நானும் கண் மூடும் முன்பு அவருக்கு முத்தம் கொடுத்தேன்" திடீர்ன்னு ஞாபகம் வந்ததை ருத்ராவிடம் சொல்ல.

ருத்ரா சந்தோசமாக "இனி கொஞ்சம் கொஞ்சமா சரியா போய்டும் கவலைப்படாதே, சிட்டி போய்ட்டு ட்ரீட் மென்ட் பாத்து உன்ன சரி ஆக்கி உன்னோட காதலன் கிட்ட சேத்து வச்சிடறேன்" அக்னி நிலா வெட்கத்தில் சிரித்தாள்.

அக்னியின் வெட்கத்தை பார்த்த ருத்ரா, அவளை சீண்டி சிரிக்க வைத்துக் கொண்டும் மிச்சம் இருந்த பொருள் கொண்டு ருத்ரா சமைக்க, அக்னி நிலா சாப்பிட. அக்னி ருத்ராவை முழு நேர சமையல் காரனாகவே மாற்றி விட்டாள்.

"உனக்கு என்ன வேணும் அக்னி நிலா".

"எனக்கு உன் கூடவே இருக்கனும் எப்பவும், அது போதும்".

ருத்ரா அக்னி நிலா சொன்ன மறு நொடி வாரி அனைத்து அவளது உச்சியில் முத்தம் கொடுத்தான்.

அக்னி நிலா முகத்தை அவனை நோக்கி.

"இங்க கொடு" என்று நெத்தியை காட்ட. ருத்ராக்கு ரூபி நினைவுக்கு வந்தால்.

இரு சொட்டு கண்ணீரோடு, ருத்ரா ரூபியை நினைத்து அக்னி நிலாக்கு நெற்றியில் மொத்த அன்பையும் திரட்டி முத்தமிட,

"உனக்கு நெத்தியில முத்தம் கூட கொடுக்க தெரில எச்சை செஞ்சிட்ட" அவனது சட்டையில் நெற்றியை அழுத்தி துடைத்தாள்.

"என் கியூட்டி....." அக்னி நிலா குண்டு கன்னத்தை பிடித்து இழுத்துக் கொஞ்ச.

"நீ எனக்கு சோறு போட்டு கிள்ளி வச்சா, சாப்பிட்டது காணாம போய்டும், போ நீ கிள்ளி வச்சதால எனக்கு திரும்ப பசிக்குது, வா வந்து திரும்ப எதாவது சமைச்சி கொடு" ருத்ரன் சட்டையை பிடித்து இழுத்துக் கொண்டு சமைக்கும் பகுதியில் தள்ளி விட்டுட்டு அக்னி நிலா அந்த கிட்சன்க்கு எஜமானி அம்மா போல மேற்பார்வையிடத் துவங்கினாள்.

"ருத்ரா சமைத்துக்கொண்டே உனக்கு என்ன வேண்டும், நியூ இயர்க்கு" அக்னி நிலா யோசித்துவிட்டு.

"தேவைப்படும் போது கேட்டு வாங்கிக்கிறேன் ருத்ரா".

"சரி டா குட்டி...".

"அங்க போனதும் நீ என்ன செய்ய போற ருத்ரா?"

"லேப்க்கு போய்டுவேன், அப்புறம் என் பிரண்டு ஒருத்தன் இருக்கான், என் உயிர் அவன், அவனுக்கு ஏதோ ஒரு கேஸ் கொடைச்சல் கொடுக்குதாம் அதுக்கு ஹெல்ப் செய்யனும், பர்மிஸ்ஸன் எப்படியும் இந்த நேரம் வாங்கியிருப்பான்".

"அப்போ நான் உன் வீட்ல தனியா இருக்கணுமா," அக்னி நிலா கோபித்துக்கொண்டு ஒரு மூலையில் சென்று உட்கார்ந்து கொண்டாள்.

ருத்ரன் அவள் கோபத்தில் நடக்கும் போது அழுத்தி கால் வைத்து போட்டை அதிர வைத்து கொண்டு இருந்தாள், "சரியான அடம்".

சமைத்ததை எடுத்துக் கொண்டு போய் கொடுக்க "எனக்கு ஒன்னும் வேண்டா போ" அவள் சொல்வதை காதில் வாங்காமல் ருத்ரா ஊட்டி விட துவங்கினான்.

அதே சிடு சிடு முகத்தோடு அக்னி நிலா சமத்தாக சாப்பிட்டுக் கொண்டு இருக்க.

"கோவம் போச்சா அக்னி நிலா குட்டிக்கு".

"இல்லை" என்றாள் முகத்தை ஒரு முழம் தூக்கி வைத்துக் கொண்டு.

ருத்ரா அவளுக்கு ஊட்டி விட்ட கழுவாத கையை வைத்து, மூக்கில் ஒரு கோடு போட்டு.

"நம்ம ரெண்டு பேர் மூக்கும் நீளமா இருக்கு இல்ல".

"அதை வாயால சொன்னா பத்தாதா, எச்சை கையில் மூக்கை அசிங்கப் படுத்துற." ருத்ரா சட்டையில் துடைத்துட்டு ஓடிட்டா,

"நீ இப்படியே என் சட்டையை அழுக்கு பண்ணிட்டு இரு, ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்னை துணி துவைக்க வைத்து வச்சி செய்றேன் பாரு".

"அதையும் பாப்போம் போடா..." இப்படியே இருவருக்கும் நெருக்கம் அதிகரித்துக் கொண்டே போனது, பெயர் தான் இந்த உறவுக்கு வைக்க தெரியல இருவருக்கும்.

சாந்தி வசி மண்டையை பிச்சிகிட்டு இன்னும் பைத்தியம் தான் ஆகலை. இந்த நாலு கொலை கேஸ் நிற்க விடாமல் இருவரையும் சுழற்றிப் போட்டது.

இவர்கள் சிட்டியை நோக்கி பயணத்தை துடங்க, அங்கு உலகமே கொண்டாடிக் கொண்டு இருந்தது புதிய வருடத்தை.



மாயா மாயம் செய்ய வருவாள்....
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom