4 மாய நிலா
வசி பாதி தூக்கத்தில், சாந்தியை அழைத்துக்கொண்டு கொலை நடந்த இடத்தை நோக்கிச் சென்றான்.
"டேய் நீ வேணும்னா போ என்ன எதுக்கு கூட்டிட்டு போற, தூக்கமா வருது" என்று வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும் வசி மீது சாய்ந்து நல்லா தூங்கிட்டு வந்தாள் சாந்தி.
"நீ இப்படி சோம்பேறியா இருந்தா, மிஸ்டர். ஜீரோக்கு உன்னை சுத்தமா பிடிக்காது, சீக்கிரமா அவனை நீ கண்டு பிடிச்சி வாழ்க்கை கொடுக்கணும்ல" வசி சொன்ன அடுத்த நொடி தூக்கத்தில் இருந்தவள் டூயட் மோடுக்கு போய்ட்டா சாந்தி.
இறங்க வேண்டிய இடம் வந்ததும், "அடியே விஜய சாந்தி எந்திரி".
"நான் சா...ந்....தி.... புரியுதா இன்னும் ஒரு டைம் விஜய சாந்தின்னு சொன்ன அடிச்சி முகறைய பேத்துடுவேன் புரியுதா?". சாந்திக்கு அவ இடத்துல அவ தான் ராணி மத்தவங்க கூட ஒப்பிட்டு பேசுவது எப்பவும் பிடிக்கறதில்லை, வசியும் அவளை கூப்பிடுவதை விட போறதும் இல்லை. சாந்தியை வெறுப்பு ஏற்றுவதில் அவனுக்கு அலாதி பிரியம்.
இருவரும் சண்டை போட்டுக் கொண்டாலும், ஒருவர் மீது ஒருவர் உயிர். இதுக்காக கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி வீட்டில் கேட்க, இருவரின் பதிலும் ஒன்றாக இருந்தது.
"யாராவது பிரண்ட கல்யாணம் செஞ்சிப்பாங்களா, செஞ்சி கிட்டாலும் அவங்களுக்குள்ள லவ் இருந்து இருக்கும், எனக்கு உள்ள ஒருத்தனை கற்பனை செய்து உயிர் கொடுத்து வச்சி இருக்கேன் அவனை தான் கட்டிப்பேன்" இது சாந்தியின் பதில்.
வசி ஒரே வரியில் முடித்துக் கொண்டான், "எனக்கு லவர் இருக்கு".
அந்த லவர் எங்க இருக்குன்னு கேட்டா வசியிடம் பதில் இல்லை, அவளை பார்த்த மறு நொடி என் மனைவியா இந்த வீட்ல இருப்பா போதுமா."
இந்த ரெண்டு அறிவாளியை, பெற்றவர்கள் தான் கடுப்பில் கடுகாக பொரிந்தார்கள். அதன் பிறகு திருமணம் பற்றி பேசினாலும் பிடி கொடுத்து பேசவில்லை இருவரும், முகம் கூட பார்த்ததில்லை. ஒரு முறை சந்தித்து இருக்கிறார்கள்... அப்போது இருந்து காதல்.
ஆனால் இந்த சாந்தி அது கூட இல்ல, ஒரு கொலைகாரனை காதலித்துக் கொண்டு இருக்கிறாள், அடிக்கடி சாந்தி வீட்டில் இருப்பவர்கள், அவள் மனதை மாற்ற,
"அந்த கொலைகாரன் காட்டு எருமை போல கருப்பா, அகோர முகத்தோடு வந்து உன் முன்னாடி நிற்கும் சமயம் தெரியும் உன் விளையாட்டு, எங்கு சென்று விபரீதமாக முடியப் போகுது" என்று சாந்தி அன்னை இதை சொல்லி சொல்லி சாந்தியை வெறுப்பு ஏற்றுவது வழக்கம்.
"அவன் ராஜ குமரன் போல பட்டு உடுத்தி, என்னை தூக்கி போக வருவான்" அன்று இருந்து அடிக்கடி டூயட் போவது இவளது வழக்கமானது.
இவர்கள் இருவரும் சென்ற இடம்.... ஒரே கூட்டமும் கும்பலுமாக இருந்தது, ஆறு மாதத்துக்கு முன்புதான் இந்த இடத்தை அரசாங்கம் கைப்பற்றியது.
பழங்கால பொருள் ஒன்று தோட்ட வேலை செய்யும்போது கிடைத்ததால், இன்னும் தோண்டினால் எதாவது கிடைக்கும் என்று அவர்கள் ஆராய்ச்சி செய்தது போல ஒரு பழங்கால நகரம் புதைந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது, இரவும் பகலும் இங்கு வேலை நடந்துகொண்டும், ஆட்கள் நடமாடிக்கொண்டும் இருப்பார்கள். அப்போ எப்படி இது நடந்தது, என்று அங்கு இருக்கும் அனைவருக்கும் இதுதான் குழப்பமே.
சாந்தி கொலை செய்யப்பட்டவனை சோதிக்கும் போது, அதே துண்டு காகிதம், இங்கும் இருந்தது. மிஸ்டர். ஜீரோ அதனை யாருக்கும் தெரியாமல் எடுத்து சாந்தி பாக்கெட்டில் மறைத்து வைத்துக் கொண்டாள். சாந்திக்கு அந்த கொலைகாரனை ஜெயிலுக்கு அனுப்ப கொஞ்சமும் விருப்பம் இல்லை. காதலன் ஆச்சே எப்படி விடுவாள்.
வசி அங்கு விசாரிக்கத் துவங்கினான்.
"அங்கு இறந்து கிடப்பவர்கள்... யாரு டீடெயில்ஸ் சொல்லுங்க".
"இவங்க டெல்லியில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் வந்தாங்க, பல ஆயிரம் வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு வேர பதப்படுத்தி வைத்து இருந்தார்கள் ஒரு பெட்டியில், அதனை நாங்க கண்டு பிடித்தோம் அதை ஆபீஸர் கிட்ட ரிப்போர்ட் செய்ய, அதனை சோதனை செய்ய வரவைக்கப்பட்ட உயர் அதிகாரி இந்த இருவரும்.
"அவரப் பத்தி இன்னும் சொல்லுங்க".
"அவர் நிறைய அவார்ட் வாங்கி இருகாங்க, அகழ்வாராய்ச்சி சம்பந்தமாக, அதும் இல்லாம நிறைய பொருளுக்கு கரெக்ட் ஆன விளக்கம் ஆதாரத்தோட நிரூபிச்சி இருக்கார்".
வசி இங்கு பேசிட்டு இருக்கும் போது ஒரு பெண் கருப்பு துணியால் முகத்தை மறைத்து, வேகமாக போவதை பார்த்து.
பக்கம் இருக்கும் போலீஸ் கிட்ட, "இவர விசாரிங்க நான் வரேன்".
அந்த கருப்பு நிற உடை அணிந்த பெண்ணை துரத்திக் கொண்டு போனான் வசி, இவன் துரத்தி வருவது தெரிந்து அவளும் வேகம் எடுத்தாள், அவள் கையை ஏதோ சுழற்றி தெரு விளக்குகள் அனைத்தும் அணையச் செய்தாள். வசி அந்த இருட்டிலும் துரத்திக் கொண்டு போனான், வேறு வழி சென்று அவள் முன் வந்து நின்றான்.
அந்த பெண் முகம் இருட்டில் தெரியவில்லை, அவள் ஓடக் கூடாது என்று எண்ணியவன் அவள் கையை பிடித்துக்கொண்டு "யாரு நீ... எதுக்கு என்னைப் பார்த்ததும் ஓடுற".
வசிக்கும் ஏதோ வித்யாசமான உணர்வு, "இதுக்கு முன்னாடி நம்ம பார்த்து இருக்கோம் சொல்லு, யாரு நீ..?" அவன் கேட்டுக்கொண்டு இருக்கும் போது சட்டென்று வசி சட்டையை இழுத்து ஒரு மெல்லிய முத்தம் கொடுத்துவிட்டு மாயமாக மறைந்தாள் மயக்கும் பாவை.
வசி அதிர்ந்த அந்த ஒரு நொடி போதுமாக இருந்தது அந்த இடத்தை விட்டு அவள் போவதற்கு.
"இவ நான் அன்னைக்கு பாத்த பொண்ணு, அன்னைக்கு கைல ரத்த வெள்ளத்தில் இருந்தாள், அன்றும் இப்படிதான் சாகும் தருவாயில் முத்தமிட்டாள். அப்போ நான் தேடி கொண்டு இருப்பவள் இவள்தான், மாயமாக மறைந்தவளை அங்கும் இங்கும் தேடி களைத்து.
அங்கு வரும் போது வசிக்கு ஏதேதோ தோன்றியது, அவளுடன் வாழனும் என்ற எண்ணம் மேலோங்கியது. இவன் அவளது காதல் தேவதையை நினைத்துக்கொண்டு வரும் சமையம், சாந்தி அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு.
"இந்த கொலைக்கும் வேர் தான் காரணம் என்று சொன்னாள், ஆனா மிஸ்டர். ஜீரோ செய்யல ஏதோ ஒரு பொண்ணு செஞ்சி இருக்கா, கழுத்தை நெரித்து சாக அடிக்கப் பட்டு இருக்கான்.... அதும் பெரிய வேர் நெரித்தது போல தடம் இருக்கு ஆனா வேர் அங்கு இருப்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. ஒரு முடி கிடைத்து இருக்கு, டெஸ்ட்க்கு அனுப்பி வச்சி இருக்கேன்,
மொத்தம் ரெண்டு கொலை ஒன்று ஆட்கள் நடமாடும் இடத்தில் இன்னும் ஒன்றும் அதே இடத்தில் தான் நடந்து இருக்கு, ஆன யாரோ இழுத்துட்டு போய் வேறு இடத்தில் போட்டு இருக்காங்க.
ரெண்டு இடத்துலயும் ஒரு பெண்ணின் முடி கிடைத்து இருக்கு. ஒருவன் கழுத்தில், மற்றொண்டு இழுத்து செல்ல பட்டவனின் கையில்.
வசிக்கு ஒரு வேலை நம்ம இன்னைக்கு பார்த்த பொண்ணு செஞ்சி இருப்பாளோ, எப்படியாக இருந்தாலும் என் வாழ்க்கை அவளோடுதான்.
இவ்ளோ நாள் சாந்தியை கிண்டல் செய்துகொண்டு இருந்தவனுக்கு இப்போது தான் புரிந்தது, அந்த காதல் கிறுக்கின் மகிமை.
இருவரின் நிலையும் ஒன்று தான். தெரியாத, புரியாத இரு நிழல்களை காதலித்துக் கொண்டு இருக்கிறார்கள், இவர்கள் இருவரும் காதலில் ஜெயிக்க வாய்ப்பு இருக்கா? அவர்கள் துணையை மீண்டும் சந்திப்பார்களா என்று விதிக்கு தான் தெரியும்.
கேஸ் பற்றி அனைத்து முடிச்சிகளும் அவிழ்கப்பட்டது, ஒன்றைத் தவிர, யார் அந்த கொலையாளி? ஆணா, பெண்ணா? அல்லது எதாவது அமானுசியமா? இது புரியாமல் இங்கு தத்தலித்துக் கொண்டு இருக்கிறார்கள். மேல் இடத்தில் இருந்து பிரஷர் வேறு இருவருக்கும். விலகவும் சொல்லியாச்சு முடியாது என்று பிடிவாதத்தோடு இருவரும் நின்று இருந்தார்கள்.
அக்னி நிலா, ருத்ரா இருவரும் மௌனமாக இருப்பது ஏதோ போல இருக்க, அக்னி நிலா ருத்ரனிடம் "எனக்கு கொஞ்ச கொஞ்சம் ஏதோ ஞாபகம் இருக்கு, எனக்கு அடி பட்டு இருக்கும் போது ஒருத்தர் என்னை கட்டிப் பிடித்து அழுதுகொண்டு இருந்தார், நானும் கண் மூடும் முன்பு அவருக்கு முத்தம் கொடுத்தேன்" திடீர்ன்னு ஞாபகம் வந்ததை ருத்ராவிடம் சொல்ல.
ருத்ரா சந்தோசமாக "இனி கொஞ்சம் கொஞ்சமா சரியா போய்டும் கவலைப்படாதே, சிட்டி போய்ட்டு ட்ரீட் மென்ட் பாத்து உன்ன சரி ஆக்கி உன்னோட காதலன் கிட்ட சேத்து வச்சிடறேன்" அக்னி நிலா வெட்கத்தில் சிரித்தாள்.
அக்னியின் வெட்கத்தை பார்த்த ருத்ரா, அவளை சீண்டி சிரிக்க வைத்துக் கொண்டும் மிச்சம் இருந்த பொருள் கொண்டு ருத்ரா சமைக்க, அக்னி நிலா சாப்பிட. அக்னி ருத்ராவை முழு நேர சமையல் காரனாகவே மாற்றி விட்டாள்.
"உனக்கு என்ன வேணும் அக்னி நிலா".
"எனக்கு உன் கூடவே இருக்கனும் எப்பவும், அது போதும்".
ருத்ரா அக்னி நிலா சொன்ன மறு நொடி வாரி அனைத்து அவளது உச்சியில் முத்தம் கொடுத்தான்.
அக்னி நிலா முகத்தை அவனை நோக்கி.
"இங்க கொடு" என்று நெத்தியை காட்ட. ருத்ராக்கு ரூபி நினைவுக்கு வந்தால்.
இரு சொட்டு கண்ணீரோடு, ருத்ரா ரூபியை நினைத்து அக்னி நிலாக்கு நெற்றியில் மொத்த அன்பையும் திரட்டி முத்தமிட,
"உனக்கு நெத்தியில முத்தம் கூட கொடுக்க தெரில எச்சை செஞ்சிட்ட" அவனது சட்டையில் நெற்றியை அழுத்தி துடைத்தாள்.
"என் கியூட்டி....." அக்னி நிலா குண்டு கன்னத்தை பிடித்து இழுத்துக் கொஞ்ச.
"நீ எனக்கு சோறு போட்டு கிள்ளி வச்சா, சாப்பிட்டது காணாம போய்டும், போ நீ கிள்ளி வச்சதால எனக்கு திரும்ப பசிக்குது, வா வந்து திரும்ப எதாவது சமைச்சி கொடு" ருத்ரன் சட்டையை பிடித்து இழுத்துக் கொண்டு சமைக்கும் பகுதியில் தள்ளி விட்டுட்டு அக்னி நிலா அந்த கிட்சன்க்கு எஜமானி அம்மா போல மேற்பார்வையிடத் துவங்கினாள்.
"ருத்ரா சமைத்துக்கொண்டே உனக்கு என்ன வேண்டும், நியூ இயர்க்கு" அக்னி நிலா யோசித்துவிட்டு.
"தேவைப்படும் போது கேட்டு வாங்கிக்கிறேன் ருத்ரா".
"சரி டா குட்டி...".
"அங்க போனதும் நீ என்ன செய்ய போற ருத்ரா?"
"லேப்க்கு போய்டுவேன், அப்புறம் என் பிரண்டு ஒருத்தன் இருக்கான், என் உயிர் அவன், அவனுக்கு ஏதோ ஒரு கேஸ் கொடைச்சல் கொடுக்குதாம் அதுக்கு ஹெல்ப் செய்யனும், பர்மிஸ்ஸன் எப்படியும் இந்த நேரம் வாங்கியிருப்பான்".
"அப்போ நான் உன் வீட்ல தனியா இருக்கணுமா," அக்னி நிலா கோபித்துக்கொண்டு ஒரு மூலையில் சென்று உட்கார்ந்து கொண்டாள்.
ருத்ரன் அவள் கோபத்தில் நடக்கும் போது அழுத்தி கால் வைத்து போட்டை அதிர வைத்து கொண்டு இருந்தாள், "சரியான அடம்".
சமைத்ததை எடுத்துக் கொண்டு போய் கொடுக்க "எனக்கு ஒன்னும் வேண்டா போ" அவள் சொல்வதை காதில் வாங்காமல் ருத்ரா ஊட்டி விட துவங்கினான்.
அதே சிடு சிடு முகத்தோடு அக்னி நிலா சமத்தாக சாப்பிட்டுக் கொண்டு இருக்க.
"கோவம் போச்சா அக்னி நிலா குட்டிக்கு".
"இல்லை" என்றாள் முகத்தை ஒரு முழம் தூக்கி வைத்துக் கொண்டு.
ருத்ரா அவளுக்கு ஊட்டி விட்ட கழுவாத கையை வைத்து, மூக்கில் ஒரு கோடு போட்டு.
"நம்ம ரெண்டு பேர் மூக்கும் நீளமா இருக்கு இல்ல".
"அதை வாயால சொன்னா பத்தாதா, எச்சை கையில் மூக்கை அசிங்கப் படுத்துற." ருத்ரா சட்டையில் துடைத்துட்டு ஓடிட்டா,
"நீ இப்படியே என் சட்டையை அழுக்கு பண்ணிட்டு இரு, ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்னை துணி துவைக்க வைத்து வச்சி செய்றேன் பாரு".
"அதையும் பாப்போம் போடா..." இப்படியே இருவருக்கும் நெருக்கம் அதிகரித்துக் கொண்டே போனது, பெயர் தான் இந்த உறவுக்கு வைக்க தெரியல இருவருக்கும்.
சாந்தி வசி மண்டையை பிச்சிகிட்டு இன்னும் பைத்தியம் தான் ஆகலை. இந்த நாலு கொலை கேஸ் நிற்க விடாமல் இருவரையும் சுழற்றிப் போட்டது.
இவர்கள் சிட்டியை நோக்கி பயணத்தை துடங்க, அங்கு உலகமே கொண்டாடிக் கொண்டு இருந்தது புதிய வருடத்தை.
மாயா மாயம் செய்ய வருவாள்....