Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"இதைக் குடிச்சா முகம் நல்லா பளபளன்னு இருக்கும்னு சொன்னாங்க. அதான் வாங்கினேன். நான் இதை குடிக்கிறது குழந்தைக்கு எவ்வளவு கெடுதலோ அவ்வளவு கெடுதல் நீங்க சிகரெட் ஸ்மோக் பண்றது. ஆமா, நிஜமாத்தான் சொல்றேன். சில நேரம் ஃப்ரெஷ் ஏர் நல்லதுனு நான் அம்முலுவை இங்க தான் தூக்கிட்டு வருவேன். அம்முலு தவக்க ஆரம்பிக்கும் போது இந்த சிகரெட் சாம்பலை வாயில வைக்க வாய்ப்பிருக்கு. அக்கார்டிங் டூ த எபெக்ட் ஆப் நிகோடின்…" என்று கண்களை உருட்டி ஆரம்பித்தவளை பெரிய கும்பிடாகப் போட்டு,


"அம்மாத்தாயே! இனி நான் சிகரெட்டே குடிக்கல. போதுமா? ஒழுங்கா இந்தப் பாட்டிலைத் தூக்கி குப்பையில போடு" என்று சரணடைந்தான் விக்ரமன்.


"சரி, ஆனா இனி நீங்க சிகரெட் ஸ்மோக் பண்றதைப் பார்த்தா நான் என்ன செய்வேனு எனக்கேத் தெரியாது. ஜாக்கிரதை" என்று எச்சரித்துச் சென்றாள்.


"சரியான இம்சைடி நீ" என விக்ரமன் தன் தலையில் அடித்துக் கொள்ள உள்ளே சென்ற அதிதியின் இதழ்களில் வெற்றிப் புன்னகை தவழ்ந்தது.


அதீத காதல் அதட்டவும் செய்யும் என்பதை அக்கணம் தான் உணர்ந்தான் விக்ரமன்.


ஆனால், அவனுக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. கடந்த இரண்டு மாத காலமாக தன்னை கண்டு கொள்ளாமல் விலகியே இருந்தவள், இன்று மட்டும் தன்னை அதிகப்படியாய் நெருங்குவது ஏன்? என்று குழம்பினான்.


மறுநாள் காலையில் குளியலறையிலிருந்து வெளியேறி ஜிம்மிற்குள் நுழையப் போனவனை வழிமறித்து தடுத்தாள் அதிதி.


"மாமூ நில்லுங்க" என்றாள்.


நேற்று வாங்கிய உடைகளிலிருந்து கையில்லாத பனியனும், ட்ராக் பேண்ட்டும் அணிந்து கொண்டு நின்றவளைக் கண்டு கண்ணிமைக்க மறந்தான் விக்ரமன். அவனுக்கு உள்ளுக்குள் புது ரத்தம் பாய்வது போல இருந்தது.


அவன் வழிசலை கண்டுகொண்டவள் மனதில் கொண்டாட்டத்துடன் வெளியே ஏதுமறியாதவள் போல் மிரட்டினாள்.


"இங்கப் பாருங்க மாமூ, இனிமே நீங்க எக்ஸர்சைஸ் பண்ணணும்னா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே எழுந்து எல்லாம் முடிச்சிடுங்க. இனிமே நான் மட்டும் தனியா அம்முலுவுக்கு மசாஜ் செய்ய முடியாது. நீங்களும் என்கூட சேர்ந்து அவளுக்கு மசாஜ் செய்யணும். இவ்வளவு நாள் உங்களை பாவம் பார்த்து விட்டு வச்சதே தப்பு." என்று தன்போக்கில் பேசிக்கொண்டே குழந்தையை தரையில் ஒரு துண்டில் படுக்க வைத்து, அவனை தன்னருகில் அமரச்சொல்லி உத்தரவிட்டாள்.


பின், குழந்தையை நோக்கி குனிந்து, "அம்முலுமா, நம்ம மசாஜ் பண்ணப் போறோமா? சைக்கிள் ஓட்டப் போறோமா?" என குழந்தையின் இரு கைகளையும் பிடித்து ஆட்டிக் கேட்க, அதுக்கு என்ன புரிந்ததோ தன் அன்னையை நோக்கி கிளுக்கிச் சிரித்து ஆமாம் என்றது.


நின்று வேடிக்கைப் பார்த்தவனை அதட்டினாள் அதிதி.


"என்ன இன்னும் உட்காரலையா?" என்றாள்.


தலையை உதறி தன்னிலைக்கு வந்தவன் மறுக்க மனமில்லாமல் அவள் கூறியவற்றிற்கு அடி பணிந்து, அவளை விட்டு சற்றுத் தள்ளியமர்ந்தான்.


ஆம், மோகத்தீ பற்றிக் கொள்ளுமோ எனப் பயந்தான்.


ஆனால், பற்ற வைத்தே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு தன் கண் முன்னேயே ஒருவள் அமர்ந்திருந்திருப்பதை பாவம் அப்போது அவன் அறியவில்லை.


"அதிதி எனக்கு இந்த மசாஜ்லாம் பண்ணத் தெரியாதுடி. பேசாம நீயே பண்ணிடுறியா ப்ளீஸ்?"


"ப்ச்! உங்கப்பொண்ணு நடக்கணுமா? வேணாமா? ஆமா இன்னும் ஒரு கிலோ மீட்டர் தள்ளி உட்காருங்க. ஏங்க இப்படி கிறுக்குத்தனம் பண்றீங்க? படுத்தாதீங்க ப்ளீஸ்" என்றாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"அதிதி"


"ம்"


"என் கை ரொம்ப சொரசொரப்பா இருக்கும்டி. உன் கை தான் ரொம்ப சாப்ட்டா இருக்கும். அதனால நீயே மசாஜ் செஞ்சிடு" என்றவன் நைசாக நழுவப் பார்க்கவும்,


"அதெல்லாம் இல்ல. நீங்களும் என் கூட சேர்ந்து மசாஜ் செஞ்சே ஆகணும். இல்ல தெரியாமத் தான் கேட்கறேன். நான் மட்டும் தனியா குந்தி தேவி மாதிரி மந்திரம் சொல்லியா இவளைப் பெத்தேன். நீங்களும் தானே இவளுக்குப் பொறுப்பு? ஒழுங்கா எப்படி மசாஜ் செய்யுறதுனு கத்துக்கற வழியைப் பாருங்க" என்றவளின் மிரட்டலில் வேறு வழியில்லாமல் மசாஜ் செய்ய ஆரம்பித்தான் விக்ரமன்.


இடையிடையே, "ஹேய்! எதுனாலும் தொடாம சொல்லிக் கொடு. எனக்கு காது கேட்கும்" என அவள் கை பட்ட கூச்சத்தில் படபடத்தான்.


கடந்த ஐந்தரை மாத காலமாக அவளை தொடாமல் தள்ளியிருந்தவனுக்கு அவள் கைகள் பட்டவுடன் உடலில் ஒளி பரவி, பூக்கள் பூக்க ஆரம்பித்தன.


"ப்ச், நான் என்ன பண்ணினாலும் குத்தம் சொல்றதே உங்களுக்கு வேலையாப் போச்சு? சும்மா சும்மா யாருமில்லாத சின்னப் பொண்ணையே திட்டிக்கிட்டு" என்று சலித்தாள் அதிதி.


"ஐய் பாருடா, சின்னப் பொண்ணாம். ஆனா, பார்த்தா அப்படித் தெரியலையே?"


அவன் கண்கள் ஏகபோகமாய் அவள் மேல் மேய்ந்தது.


அவன் பார்வை உள்ளே ஏதோ செய்தாலும் அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல், "ஹலோ சார்! ஜொள்ளு விட்டது போதும். கொஞ்சம் இங்கப் பாருங்க" என மசாஜிற்கு இழுத்தாள்.


ஜொள்ளு என்றதுமே அவனுக்கு கோபம் வந்துவிட்டது. விரைப்பாய் எழுந்து நின்று சாடினான்.


"ஹேய்! என்ன இன்னும் கொஞ்ச நாள்ல விரட்டி விட்டுடுவேனு தெரிஞ்சி தொட்டுத் தொட்டுப் பேசி என்னை மயக்கப் பார்க்கறியா?" என்று துள்ளினான்.


"ஆமா இவரு பெரிய விசுவாமித்திரரு. இவரை நான் மேனகையா மாறி மயக்கப் பார்க்கறேன்." எனத் தானும் எழுந்தவள் தன்னைத் தாண்டிச் சென்றவனின் கையைப் பிடித்து தடுத்தாள்.


நேராய் திரும்பி அவள் முகம் பார்த்தான் விக்ரமன். அவள் உதட்டின் மினுமினுப்பு சட்டென்று மின்னலாய் தாக்கியது அவனை.


அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவள் முகத்தை இழுத்து இதழ் மேல் இதழ் பொருத்தி விட்டான்.


அவன் கைகளிலிருந்த எண்ணெய் அவள் கன்னத்திற்கும் பின், அவள் இடைக்கும் இடம் பெயர்ந்தது. அவள் கைகளிருந்த எண்ணெயோ முதலில் அவள் கன்னங்களை பிடித்திருந்த அவன் கைகளுக்கும் பின், அவன் முதுகிற்கும் இடம் பெயர்ந்தது.


நீண்ட நாட்களுக்கு பிறகேயான முத்தம் என்பதால் முத்தமும் நீண்டதாகவேயிருந்தது.



தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
நாவல் பிடிச்சிருந்தா மறக்காம உங்கள் கருத்துக்களை பதிவிட்டுச் செல்லவும் பால்பனியாரம்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 16



தாயும் தந்தையும் முத்த பித்தத்தில் திளைக்க சிறுநீர் கழித்த ஈரத்தில் படுத்திருந்த அம்முலு, 'டேய்! என்னைக் கொஞ்சம் கவனிங்கடா’ என அழுகை மொழியில் அழைத்தாள்.


முதலில் விக்ரமனின் அணைப்பில் கட்டுண்டிருந்த அதிதி பின், குழந்தையின் அழுகை சத்தத்தில் சுதாரித்து வலுக்கட்டாயமாக தன்னிலிருந்து அவனைப் பிரித்து தள்ளிவிட்டாள்.


'அய்யோ! கொஞ்ச நேரத்துல இப்படி புத்தி தடுமாறிட்டோமே. இப்போ நம்மளைப் பத்தி அவர் என்ன நினைப்பாரு? நல்ல வேளை எப்பவும் போல அம்முலு வந்து காப்பாத்தினா. இல்லைனா நானே என்னை இந்தாங்கனு தூக்கிக் கொடுத்திருப்பேன். எப்போ பார்த்தாலும் என் பொண்ணை வச்சு தப்பிக்கிறதே எனக்கு பொழப்பா போச்சு' என மனதுள் தன்னைத் தானே திட்டிக்கொண்டாள்.


அவனோ, "ச்சே! இப்படி ஒரு சின்ன உதட்டசைவுல சறுக்கிட்டியேடா விக்கி. நம்ம வீக்னெஸை கண்டுபிடிச்சிருப்பாளோ? கண்டுபிடிச்சா என்ன? அப்படியே கெத்தா இருக்கற மாதிரியே மெயின்டைன் பண்ணுவோம்" என தெம்பாய் நெஞ்சை நிமிர்த்தி அவளைப் பார்க்கவும்,


"இவ்வளவு நாள் தள்ளி நின்னு தானே மோப்பம் புடிச்சீங்க? இப்போ மட்டும் என்ன?" எனத் தன் கேள்வி தான் முதலிலென்று அவனை நோக்கி எறிந்தாள்.


அவனிடமிருந்து “ப்ச்” என்ற ஒரு சலிப்பு மட்டுமே வந்தது.


"வாயில என்ன கொழுக்கட்டையா இருக்கு? பேசுங்க" என்றவள் ஆத்திரப்படவும்,


"ம்? கொழுக்கட்டை இல்ல. என் பொண்டாட்டி கொடுத்த முத்தம் தான் இருக்கு. வேணுமா?" என நக்கலாகக் கேட்டான்.


அது அவளை பெரிதும் சீண்டிவிட்டது.


"இதெல்லாம் உங்க ஸ்ருதி அண்ணி தங்கச்சி அந்த மோனிகாக்கிட்ட வச்சிக்கோங்க" என என்ன பேசுகிறோமெனத் தெரியாமலேயே உளறி வைத்தாள் அதிதி.


"மோனிகாவா? ம்ஹீம், எனக்கு இந்த மோகினியே போதும். அதிதி லேட்டா கேட்கறேனு கோவிச்சிக்காத. நம்ம சண்டையை முடிச்சு நாம ஒன்னு சேர்ந்துடலாமா?" எனக் கெஞ்சலாகக் கேட்டான்.


அதிதியும் உடனே ஒப்புக்கொண்டாள். "ம், சேர்ந்திடலாங்க" என்றாள்.


அவள் உடனே இப்படி சம்மதிப்பாள் என எதிர்பார்க்காதவன், 'நான் கேட்டது உண்மையா?' என்றவளைப் பார்த்திருக்க,


"என்ன பார்க்கறீங்க? வாங்க சீக்கிரம் கிளம்புங்க. உங்க நாச்சூ..ம்மா கிட்டப் போய் பேச வேண்டாமா?" என துண்டையெடுத்து தன் மேல் துப்பட்டா போல் போர்த்தி குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு கிளம்பி நின்றாள்.


அவளை புரியாமல் பார்த்தான் விக்ரமன்.


"அவங்கக்கிட்ட எதுக்கு?"


"என்னங்க பேசறீங்க? அவங்க தானே என்னை வெளியப் போக சொல்லிட்டு இருக்காங்க. அதனால அவங்கக்கிட்டயேப் போய் இனி எக்காரணத்தைக் கொண்டும் என் பொண்டாட்டியையும், புள்ளையையும் நான் பிரியமாட்டேனு என் கண் முன்னாடி சத்தியம் பண்ணி சொல்லுங்க. அப்போ தான் எந்த பயமும் இல்லாம என்னால உங்கக் கூட குடும்பம் நடந்த முடியும்" என்று கிடுக்குப்பிடி போட்டாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அவளின் நச்சரிப்புத் தாங்காமல் அவளுடன் நாச்சியம்மையின் அறைக்குச் சென்றான் விக்ரமன்.


தன்னறையில் வட்டி கணக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் அதிதியின் உடையைக் கண்டு முகம் சுழித்தார். பின், அவள் இடுப்பிலிருந்த தன் அலமுவை கண்ணெடுக்காமல் பார்த்தார்.


அவரின் விழிப்போகும் திசையை அறிந்த அதிதி, "ஹுக்கும்.. ஹுக்கும்.." எனத் தன் தொண்டையைக் கனைத்து திசை திருப்பினாள்.


‘குட்டி சரியான விஷமி’ என வாயைக் கோணியவர் அவளை முறைத்துக் கொண்டே, "என்ன விஷயம் விக்ரமா?" என்றார்.

விக்ரமன் வாய் திறக்கும் முன் தான் முந்தியவள், "நீங்க இன்னும் வேற யாரையாவது பழி வாங்க வேண்டியதிருக்கா?" என்று எகத்தாளமாகக் கேட்டாள்.


புரியாமல் பார்த்தவரிடம், "அப்படி யாராவது இருந்து அவங்க வீட்டுல ஏதாவது பொண்ணுயிருந்தா உங்கப் புள்ளைக்கு கட்டி வைங்க. என் பின்னாடியே அலைஞ்சு ரொம்ப டிஸ்டர்ப் பண்றாரு. நா உண்டு என் வேலை உண்டுனு இருக்கேன். திடீருனு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கறாரு. நானே என் பொண்ணுக்காகத் தான் இங்க இருக்கேன். இதெல்லாம் சரியில்லன்னும் சொல்லிட்டேன். ஆனா, உங்கப் புள்ள கேட்க மாட்டேங்குறாரு. நீங்களாவது உங்கப் புள்ளைக்கு நல்ல புத்தி சொல்லி அனுப்பி வைங்க" என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னவள் குழந்தையுடன் வெளியேறிவிட்டாள்.


‘ராட்சசி! பிளேட்டையே மாத்தி போட்டுட்டு போறாளே’ என மனதில் அவளை தாளித்தவன், வெளியே நாச்சியம்மையின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல், "நான் அப்புறம் வரேன் நாச்சூம்மா" என்று தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே ஓடிவிட்டான்.


நாச்சியம்மையோ வேறு மாதிரி யோசித்தார்.


‘விக்ரமன் இவ்வளவு கஷ்டப்படுறானே, பெரிய பாவத்தை பண்ணிட்டோமோனு நெனச்சா, இந்த சதிகாரி அம்முலுவை என்கிட்டயிருந்து பிரிச்ச மாதிரி இவனையும் பிரிக்கப் பார்க்கறா. உன்னால எவ்வளவு தூரம் போக முடியுமோ போடி. ஆனா, கடைசில நீ என் கால்ல தான் வந்து விழணும். விழ வைப்பேன்’ என அலமுவை தராத கோபத்தில் மேலும் அதிதி மேல் வஞ்சத்தை வளர்த்துக் கொண்டார் நாச்சியம்மை.


அறைக்குள் வந்தவன் அவளை முறைத்துப் பார்க்க ஏதுமறியாதவள் போல் தன் வேலையிலேயே கண்ணாயிருந்தாள் அதிதி.


"இவளை நம்பினது உன் தப்பு தான்டா" எனத் தன் தலையில் அடித்துக் கொண்டவன் கிளம்பி அலுவலகம் சென்றுவிட்டான்.


காலை காபிக்கு பதிலாக தேன் அருந்திய சந்தோஷத்தில் விக்ரமன் அலுவலக வேலையை பேராற்றலுடன் பார்த்துக் கொண்டிருந்த போது, அவனுடைய துப்பறிவாளரிடமிருந்து வந்த செய்தி ஒன்றை அவனிடம் நீட்டினாள் அவனுடைய காரியத்தரிசி.

அதனை படித்துப் பார்த்தவன் அதிர்ந்து போனான். இவ்வளவு நாள் தான் மலைபோல் நம்பிய ஆளா இப்படி என விக்கித்து நின்றான்.


மேலும் அதிலிருந்த சில விபரங்கள் அவனை பெரிய அளவில் குழப்பியது.


"அது எப்படி சாத்தியம்?" என நம்ப மறுத்தான் விக்ரமன்.


இவன் இங்கு குழம்பி நிற்க, சிறையில் தன் மகனை சந்திக்கச் சென்ற சங்கரப்பாண்டியன் நெகிழ்ந்து நின்றார்.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom