Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பண்ணையார் தோட்டம் - Full Story

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
பரந்தாமன் சந்திரன் தீனா மூவருக்கும் பயத்தில் கை கால் நடுங்கியது . எப்படியோ இன்று நம் மூவரின் கதை வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று நினைத்து பயத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள்
அப்பொழுது பரந்தாமனின் மனைவி மூவரையும் கவனித்தாள் ஏன் இவர்கள் மூவரும் ஊர் மக்களைப் பார்த்து இப்படி பயந்த சுபாவத்தில் இருக்கிறார்களே . ஒருவேளை இந்த பிரச்சனையில் இவர்களுக்கு தொடர்பு இருக்குமோ என்று லேசான சந்தேகம் ஏற்பட்டது.

ஐயா நாங்கள் எல்லோரும் இதுநாள் வரைக்கும் தைரியமாக தோட்டத்தில் வேலை செய்து வந்தோம் . ஆனால் இப்பொழுது எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்கிறது .ஏனென்றால் ஏற்கனவே ஒரு குடும்பம் காணாமல் போனது .அப்போது நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் ஏதோ அவங்க குடும்ப சூழ்நிலை காரணமாக இருக்கும் அதனால் தான் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டார்கள் எங்கேயோ . என்று நினைத்திருந்தோம் ஆனால் அதே தோட்டத்தில் வேலை செய்த நம்ம கனகா குடும்பமும் இப்போது காணாமல் போனது எங்களுக்கு பெரிய பயத்தை உண்டாக்குகிறது இதில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது. அதனால் இனி எங்களால் தோட்டத்தில் நிம்மதியாக வேலை செய்வதற்கு இனி தயக்கம் தான் அதனால் எங்களை நீங்கள் தான் மன்னிக்கவேண்டும் . இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எங்களுடைய பயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் ஐயா என்று கூட்டத்தில் ஒரு தொழிலாளி பண்ணையாரிடம் கூறினார்.
உடனே பரந்தாமனுக்கு ம் சந்திரனுக்கும் தினவுக்கும் சற்று பயம் குறைந்தது . கனகா யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவட்டால் போல் தெரிகிறது ஏற்கனவே அந்தப் பெரியவரின் மருமகள் ஓடிப் போனது போல இவளும் ஒடிவிட்டால் விஷயத்தை புரிந்து கொண்டு பரந்தாமன் பெருமூச்சு விட்டான்.
ஊர்மக்கள் நீங்கள் என்ன முடிவு செய்தாலும் அதற்கு நான் கட்டுப்படுகிறேன் . அதேபோல நான் என்ன செய்யவேண்டும் என்பதும் நீங்களே சொல்லுங்கள் இந்த விஷயத்தில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை . ஒன்று மட்டும் புரிகிறது இதுவரைக்கும் எனக்கு எதிரி இல்லை என்று நினைத்திருந்தேன் ஆனால் அது என் முட்டாள்தனம் என்று இப்போது எனக்கு நன்றாக தெரிகிறது அதனால் நீங்களே ஒரு நல்ல முடிவை சொல்லுங்கள் எனக்கு எந்த முடிவாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் காணாமல் போன இரண்டு குடும்பம் உண்மையாகவே ஓடி விட்டார்களா அல்லது யாராவது அவர்களை கொன்று விட்டார்களா என்ற உண்மை தெரிந்தே ஆக வேண்டும் . அப்பொழுதுதன் இந்த ஊருக்கு நிம்மதி பிறக்கும் எனக்கும் நிம்மதி பிறக்கும் என்று பண்ணையார் ஒரு குறிக்கோளுடன் ஊர் மக்களுக்கு சொன்னார்.
முத்தையாவுக்கு பண்ணையார் தலைகனிந்து நிற்பதை பார்த்து அவர் கண்கள் லேசாக கலங்கியது அப்போது பண்ணையாரை கட்டியணைத்துக் கொண்டார் முத்தையா.
இந்த ஊரே உன் தோட்டத்தை நம்பிதன் குடும்பத்தை நடத்துகிறார்கள் . அதுமட்டுமல்ல இந்த ஒரே உன்ன தெய்வமாகவும் பார்க்கிறார்கள் .தனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை ஊர் மக்களுக்கு வேலை இல்லை என்று சொல்லக் கூடாது என்ற குறிக்கோளோடு நீ இந்த தோட்டத்தை நல்ல முறையில் விவசாயம் செய்து வருகிறாய் இப்படிப்பட்ட உன் நல்ல மனசுக்கு இப்படி ஒரு கஷ்டத்தை கொடுத்துவிட்டார் கடவுள் கவலைப்படாதே நீ செய்த புண்ணியத்திற்கு நிச்சயம் நீ மீண்டு வருவே . உனக்கு நாங்கள் என்ன முடிவு சொல்ல போறோம் உங்கள் குடும்பத்தின் மீது இன்னும் எங்களுக்கு நம்பிக்கை குறையவில்லை எங்களுக்கு வேலை செய்வதற்குத் தான் பயமாக இருக்கிறதே தவிர உங்கள் குடும்பத்தின் மீது எங்களுக்கு துளிகூட சந்தேகம் கிடையாது அதனால் நீ கவலைப்பட வேண்டாம் இரண்டு குடும்பங்களும் காணாமல் போனது உன் பிரச்சனை அல்ல இது ஊர் பிரச்சனை எங்களுக்கும் இந்தப் பிரச்சினையில் பங்கு இருக்கிறது இதை கண்டுபடிப்பதில் நாங்களும் முயற்சி செய்கிறோம் அதனால் நீ தலைகுனிந்து நிற்க தட என்று முத்தையா பண்ணையாருக்கு தைரியம் சொன்னார்.
நீங்கள் என் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை நினைத்துப் பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது அதேசமயம் இரண்டு குடும்பங்கள் காணவில்லை என்பது நினைத்தால் என் மனம் ரொம்ப கவலையா இருக்கு அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் என்னைக்கு காணாமல் போனவர்களை பற்றின தகவல் கிடைக்கிறதோ அதுவரைக்கும் என் வீட்டில் எந்த ஒரு நல்ல காரியமும் நடக்காது ஏனென்றால் இரண்டு குடும்பத்தை தொலைத்துவிட்டு என் வீட்டில் நல்ல காரியத்தை செய்வதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை இந்த முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் இதில் யாரும் கவலைப்பட வேண்டாம் .அப்போதுதான் அனைவருக்கும் காணாமல் போனவர்களை தேடுவதற்கு முழுமூச்சாக செயல்படுவார்கள் என் குடும்பத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன் . என்று பண்ணையார் உருக்கமாக சொன்னார்.
நம்ம ஊருக்கு சோதனை காலம் வரப் போகுதுன்னு இந்த சாட்டையடி சாமியார் சொன்னது சரியாதான் போச்சு அவரு எப்படி கனிச்சு சொன்னாரு என்று தெரியல அவர் சொன்னபடியே நம்ம ஊருக்கு சோதனை காலம் வந்துருச்சு அய்யோ இதற்கு என்னதான் தீர்வு என்று ஒரு கூலித்தொழிலாளி கூட்டத்தில் புலம்பினார்.
பண்ணையாரின் முடிவு ஊர் மக்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியது இந்தப் பிரச்சினைக்காக பண்ணையார் தனது மகன் திருமணத்தையே நிறுத்தி விட்டாரே என்று கவலைப்பட்டார்கள் ஊரே கோலாகலமாக இந்த கல்யாணத்தை கொண்டாட வேண்டுமென்று நினைத்தார்கள் ஆனால் இப்படி தலைகீழா மாறி போச்சு என்று ஊர் மக்கள் கவலையோடு நின்றார்கள்.
சந்திரனுக்கு மனம் உடைந்து போனது தேவையில்லாமல் தவறு செய்து வாழ்க்கையை தொலைத்து விட்டோம் என்ற எண்ணம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது அவனால் தனது எச்சி கூட முழுங்க முடியவில்லை துக்கம் தொண்டையை இறுக்கப் பிடித்துக் கொண்டது இப்படி நம் வாழ்க்கை வீணாக போய் விட்டதே என்று நினைத்து தலைகுனிந்து கொண்டான்.
ஊர் மக்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் சோகத்தோடு திரும்பிச் சென்றார்கள்
ஒன்றுமே தெரியாதவனை போல பரந்தாமன் தனது தந்தையை தாங்கிப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்.
தீனாவுக்கு அண்ணன் திருமணம் நின்றுவிட்டதே. இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் இந்த தவறை நான் செய்திருக்க மாட்டேனே ஐயோ அண்ணன் என் மீது கோபப்படுவார் போல் தெரிகிறதே நான் என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்றுக்கள்ள மாட்டார் இனி அண்ணனுக்கும் நமக்கும் திருமணமே நடக்காது போல் தெரிகிறது . காணாமல் போனவர்கள் கிடைத்து விட்டாலும் பிரச்சனை மீண்டும் வெடிக்கும் கனகாஉண்மையை சொல்வாள் அப்போதும் நம் தந்தை அண்ணன் திருமணத்தை நிறுத்துவார் நம்ம திருமணமும் நின்றுவிடும் போல் தெரிகிறதே இப்படி தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டிக் கொண்டோமே என்று எண்ணி தீனாவும் கவலையில் ஆழ்ந்தான்.
சந்திரன் கவலையோடு அவன் அறைக்கு சென்று விட்டான் தீனாவும் அவன் அறைக்கு சென்று விட்டான் பண்ணையார் வருத்தத்தோடு பூஜை அறையில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார் பரந்தாமனும் அவனது மனைவியும் அவர்கள் அறைக்கு சென்றார்கள்
நீங்கள் மூன்று பேருமே ஒரே பயத்தோடு இன்று இருப்பதை நான் கவனித்தேன் ஏன் ஊர் மக்களைப் பார்த்து நீங்கள் மூவரும் பயப்படுறீங்க என்று பரந்தாமனின் மனைவி பரந்தாமனிடம் கேட்டாள்.
ஊரே ஒன்று கூடி சோகத்தோடு வந்து நம்ம வீட்டு வாசல்ல நின்னா பயம் வராதா ஊருக்கு என்ன ஆச்சு என்றுதான் நான் பயந்தேன் அதேபோலத்தான் தம்பிகளும் பயந்து இருப்பானுங்க ஏன் எங்க அப்பா கூட பயத்தோடு தான் ஊர் மக்களை பார்த்தாரு. அவங்க நம்ம மேல பாசமா இருக்காங்க நாமளும் அவங்க மேல பாசமா இருக்கிறோம் அப்படி இருக்கிறப்போ எல்லாரும் ஒன்று கூடி நம்ம வீட்டு வாசல் முன்னாடி வந்து நின்னா சோகத்தோடு பயம் இருக்காதா என்றான் பரந்தாமன்
அதுக்குத்தான் பயம் திங்களா நான் என்னமோ ஏதோ என்று நினைத்து பயந்து போனேன்.
இனிமேல் மாமா யாரு கூடவும் பேசமாட்டார் போல் தெரிகிறது இந்த பிரச்சினைகளிலிருந்து எப்படித்தான் மீண்டு வரப் போகிறோமோ என்று தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டே பரந்தாமனின் மனைவி சோகத்தோடு வீட்டு வேலையை பார்ப்பதற்கு கிளம்பினாள்.
பரந்தாமன் நடந்ததையெல்லாம் நினைத்துப் பார்த்தான் நாம் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று இந்த கனகா நம் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வாள் என்று நினைத்தோம் ஆனால் அவள் இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டு ஓடிவிட்டாள் எப்படியோ தம்பி திருமணத்தை நிறுத்தி விட்டோம் ஆனால் விவசாய வேலைக்கு இனி யாரும் வரமாட்டேன் என்று ஊர்மக்கள் சொன்னது கவலையாக இருக்கிறது விவசாயம் நடக்கவில்லை என்றால் நமக்கு வருமானம் குறைந்து விடும் நாம் திட்டம் போட்டது எல்லாம் விவசாய நிலத்தையும் நாமே அனுபவிக்க வேண்டும் என்றுதான் ஆனால் இப்படி தலைகீழா மாறி விட்டதே மீண்டும் எப்படி இந்த ஊர் மக்களை வேலைக்கு வர வைப்பது என்று தெரியவில்லையே நம்ம போட்ட திட்டம் முழுமையாக வெற்றி பெறவில்லையே என்று எண்ணி பரந்தாமனும் சற்று சோகத்தில் ஆழ்ந்தான்.

தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
இதுநாள் வரைக்கும் செழிப்பாக இருந்த பண்ணையார் தோட்டம் கனகா குடும்பம் காணாமல் போன நாள் முதல் ஊர் மக்கள் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு வராததால் நெற்பயிர்கள் கரும்புத் தோட்டங்களும் மற்ற எல்லா விவசாயமும் தண்ணீர் இல்லாமலும் சரியான பராமரிப்பு இல்லாமலும் விவசாயம் வீணாகப் போகும் அவலம் ஏற்பட்டது பண்ணையார் தோட்டத்திற்கு.

சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யர்களும் ஒருநாள் வழக்கம்போல அவர்களின் பூஜை அறையில் பேசிக்கொண்டார்கள்.

இனிமே நமக்கு நல்ல காலம் தான் இந்த ஊர் மக்கள் நம்ம எது சொன்னாலும் நம்புவாங்க செ ல்போனை வச்சுக்கிட்டே இந்த ஊரையே என்னம்மா பயன்படுத்தி வருகிறோம் இப்போ என்னுடைய வாக்கு இந்த ஊர் மக்களுக்கு ஒரு தெய்வ வாக்காக மாறிடுச்சு. நம்ம இந்த ஊருக்கு சோதனை காலம் வரப்போகிறது என்று சொல்லி இருந்தோம் . அதேபோல சோதனை காலமா இந்த ஊருக்கு வந்துடுச்சு நம்ம போட்ட கணக்கு வேற நடந்தது வேறு நம்ம பண்ணையார் ஓட கரும்பு தோட்டத்தை தீ வச்சிவிட்டு இந்த ஊருக்கு சோதனை காலத்தை ஏற்படுத்தலாம் என்று நினைத்தோம் ஆனா நம்ம சொன்ன நேரம் பண்ணையார் தொட்டதில்ல பம்புசெட்டில் வேலை செஞ்ச கனகா குடும்பம் காணாமல் போயி இன்னியோட மூணு நாளாச்சு அதனால ஊர் மக்கள் எல்லாம் பண்ணையார் தோட்டத்துக்கு வேலைக்கு போக பயப்படுறாங்க நம்ம சொன்னபடியே இந்த ஊருக்கு சோதனைக்காலம் வந்துடுச்சுடா கடவுள் நம்ம பக்கமும் இருக்கார் என்பது நல்லாவே தெரியுது இனிமே நம்ம ராஜாங்கம் தான் இந்த ஊருல கொடிகட்டி பறக்க போகுதுடா என்று ரொம்ப சந்தோஷமா சாட்டையடி சாமியாரு தனது இரண்டு சிஷ்யர்கள் இடமும் சொல்லிக்கிட்டு இருந்தான்.

இனிமேல் தான் நம்ம ரொம்ப கவனமா இருக்கணும் குருவே ஏன் என்றால் இந்த ஊர் மக்களுக்கு நம்ம சோதனையை கொடுத்துகிட்டே இருக்கணும் நம்ம எப்போ இந்த ஊருக்கு நல்ல காலம் வருதுன்னு சொல்கிறோமோ அது வரைக்கும் இந்த ஊரையே நம்ம கைவசத்தில் வச்சுக்கணும் கூறுவேன் என்றார் ஒரு சிஷ்யன்.

மற்றொரு சிஷ்யனும் ஆமாம் ஆமாம் குருவே . . இவன் சொன்னதை போலவே இந்த உரை இனி நம் கைவசத்தில் வச்சுக்கணும் முடிஞ்ச அளவுக்கு பண்ண யாரோட குடும்பத்தை நம்ம பக்கம் இருக்கிற மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கனம் குருவே அப்பதான் நமக்கு நல்ல காசு வரும் என்றார் மற்றொரு சிஷ்யன்.

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் நீங்கள் இருவரும் என் கூட இருக்கும் வரை இந்த ஊரையே என் வசம் நான் வைத்துக் கொள்வேன் அதேபோல இந்த ஊருக்கு ஒரு நல்ல காலம் வருவதை போல தெரிந்தாள் .உடனே நாம் திட்டம் போட்டது போல பண்ணையார் கரும்புத் தோட்டத்திற்கு தீ வைத்து விடலாம் அப்போதுதான் இந்த ஊரு நம்ம வார்த்தையே நம்புவாங்க அதுக்கப்புறம் பண்ணையார் குடும்பம் கூட நம்ம வழிக்கு வந்துடுவாங்க எனக்கு நம்பிக்கை இருக்கிறது . சரி சரி பேசினது போறும் யாராச்சும் வந்துடப் போறாங்க நம்ம வேலையை பார்க்கலாம் என்றான் சாட்டையடி சாமியார்.



ஊரு ஒரு சோகத்தில் ஆழ்ந்தது வேலையிலலாமல் அனைவரும் சுற்றி சுற்றி வந்தார்கள் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றால் வீடு திரும்புவோம் இல்லை காணாமல் போய்விடுமோ என்ற பயத்தில் அனைவரும் சுற்றி சுற்றி வந்துகண்டிருந்தனர் அப்பொழுது முத்தையா தனது மகனை அழைத்தார்.

இந்த ஊரே பயப்பட்டாலும் நீ பயப்படலாமா உன் மூலமாக இந்த ஊர் மக்களுக்கு தைரியத்தை ஏற்படுத்த வேண்டும். நீ நாளையிலிருந்து பண்ணையார் தோட்டத்துக்கு உன் நண்பர்களை கூட்டிக்கிட்டு வேலைக்கு போ அப்பதான் ஒவ்வொருவருக்கும் தைரியம் வரும். இப்படி நீயும் அவங்களைப் போல பயந்துகிட்டு இருந்தா நல்லா இருக்காது . என்ன காரணம்னு தெரியல இரண்டு குடும்பம் காணாமல் போனது எனக்கும்தான் மனசு சங்கடமா இருக்கு. ஏதோ ஒரு மர்மமான சம்பவம் நடந்து இருக்குன்னு புரியுது நடந்தது நடந்து போச்சு அதை கண்டுபிடிக்கிற வேலையில பண்ணை யாரு ஒரு முடிவோட இருக்காரு அதனால பண்ணையார் ஓட தோட்டத்தை காயப் போடுவது ஒரு நல்ல தொழிலாளிக்கு அழகு இல்லப்பா இந்த ஊரே அந்த தோட்டத்தை நம்பி தான் இருக்குது அதனால நீயாச்சு உன் நண்பர்களோட போயிட்டு வேலை செஞ்சிட்டு வாப்பா என்று முத்தையா சங்கரிடம் பொறுமையாக எடுத்துச் சொன்னார்.

எனக்கு பயம் ஒன்றும் இல்லை அப்பா நான் பண்ணையார் தோட்டத்துக்கு வேலைக்கு போக ரெடி ஆனா இந்த ஊர் மக்களின் பயம் போகுமா என்று எனக்குத் தெரியாது நாளைக்கு நான் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு கிளம்புகிறேன் என்று சங்கர் சொல்லும்போது. நீங்க வேலைக்கு போகக்கூடாது என்ற குரல் கேட்டது .சங்கர் திரும்பிப் பார்த்தான். ரேகா நின்றிருந்தாள்

ஊரே பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது இந்த வேலையில இவரை பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை தாத்தா இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் காணாமல் போன வங்கள பத்தி ஏதாச்சும் தகவல் கிடைத்ததா என்று பார்ப்போம் அதுக்கப்புறம் இவரை வேலைக்குப் போகச் சொல்லலாம் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இருப்போம் தாத்தா எனக்கு என்னமோ பயமா இருக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணத்த வச்சிருக்கோம் அதனால கொஞ்ச நாள் போகட்டும் தாத்தா என்று முத்தையா விடும் தாழ்மையாக கேட்டாள் ரேகா.

சரிமா அப்படியே ஆகட்டும் உன் பயம் உனக்கு . உன் கணவனுக்கு ஏதாச்சும் நடந்திட போகிறது என்ற பயம் உனக்கு அதனால் நீ வேண்டாம் என்று சொல்ற நியாயம்தானே சரி பொறுமையா இருப்போம் என்றார் முத்தையா.

வாரத்தில் இரண்டு நாள் காணாமல் போனவர்களை தேடுவதற்காக பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் கிளம்புவது வழக்கம் அதே போல இந்த வாரத்தின் முதல் நாள் காணாமல் போனவர்களை தேடுவதற்காக மூவரும் கிளம்பிச் சென்றார்கள் அப்போது பண்ணையார் மூவரையும் முறைத்துப் பார்த்தார்..

மூன்று பேரும் எங்க கிளம்பிட்டீங்க.



காணாமல்போனவர்களை தேடுவதற்காக கிளம்புறோம் .அப்பா என்று மெல்லிய குரலில் சொன்னான் பரந்தாமன்.

யாரும் எங்கேயும் போகத் தேவையில்லை இனிமே காணாமல் போனவர்களை நீங்கள் ஒன்றும் தேடத் தேவையில்லை என்று சற்று விரைப்பாக சொன்னார் பண்ணையார்.

எப்போதுமே அப்பா இப்படி கோபப்பட மாட்டார் ஒருவேளை அப்பாவுக்கு நம்மிது . சந்தேகம் வந்துவிட்டதோ என்ற பயத்தில் முகம் பதட்டம் அடைந்தது அப்போது பரந்தாமன் மெதுவாக கேட்டான்.

ஏன்பா என்ன ஆச்சு எப்பவுமே நாங்க வாரத்துல ரெண்டு நாள் தேடபோவது வழக்கம்தானே.

மொதல்ல என்னுடைய எதிரி யாருன்னு தெரியணும் அதுக்கப்புறம் தான் இந்த வேலையெல்லாம் . இதுவரைக்கும் நீங்க காணாமல்போனவர்களை பற்றி எந்தத் தகவலையும் தரல இனிமேலும் நீங்க கண்டுபிடிப்பீங்க என்ற நம்பிக்கை எனக்கு குறைஞ்சிடுச்சு ஏதோ என் மருமகள் அடிக்கடி எனக்கு தைரியத்தை சொல்லுவா அந்த நம்பிக்கை மில் உங்கள நான் தேடுவதற்கு அனுப்பியிருந்தேன் இனியும் உங்களை நம்புவதில் பயனில்லை அதனால் இனி என் விரோதி யார் என்று தெரியும் வரை நீங்கள் காணாமல் போனவர்களை தேட போக வேண்டாம் . என்னுடைய விரோதி எனக்கு ரொம்ப பக்கத்துல தான் இருக்கான் அவனை எப்படியாவது நான் கண்டுபிடிக்க வேண்டும் ஏனென்றால் அவனால் மேலும் ஒரு அசம்பாவிதம் நடக்கக்கூடாது அதற்கு முன்னாடியே அவனை கண்டுபிடிக்க வேண்டும் . இனி அதுவரை உங்களுடைய வேலை என் விரோதியை கண்டுபிடிபதுதான் அதுக்கு அப்புறம் காணாமல்போனவர்களை நீங்கள் தேடிச் செல்லுங்கள் இப்போது ஒரே வேலை நம் குடும்ப விரோதியை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆணித்தரமாக பண்ணையார் கோபத்தோடு சொன்னார். அப்பொழுது வெளியில் ஐயா என்ற குரல் சத்தம் கேட்டது பண்ணையாரும் பரந்தாமனும் வெளியே வந்து பார்த்தார்கள் கல்யாணத்திற்கு ஊர் மக்களுக்கு புது துணி ஆடர் செய்திருந்தது வந்திருந்தது.

ஆர்டர் செய்து இருக்கும் துணி வந்திருப்பதை பார்த்த சந்திரனுக்கு மனம் தீயாய் கொதித்தது சிறப்பாக நடக்க வேண்டிய திருமணம் இப்படி நாமே கெடுத்து விட்டோமே என்று நினைத்து அவன் மனம் மேலும் வேதனையில் தலைகுனிந்தான்.

பண்ணையாருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சந்திரனை பார்த்தார் . சந்திரனும் கவலையில் நின்றிருந்தான் அப்பொழுது பரந்தாமன் அவனது மனைவி மற்றும் தீனா அனைவரும் சந்திரனைப் பார்த்து கவலைப்பட்டார்கள் அப்பொழுது பண்ணையார் ஒரு முடிவுக்கு வந்தார்.

நான் எடுத்த முடிவுக்கு என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு வேறு வழி தெரியவில்லை. திருமணத்தை நடத்துவதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை .அதனால்தன் நான் இந்த முடிவு எடுத்தேன் என்னை மன்னித்து விடுங்கள் இப்பொழுது நாம் ஆர்டர் செய்த துணி வந்துவிட்டது திருப்பி அனுப்ப முடியாது அதனால் திருமணம் நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை .என்னைக்கோ ஒரு நாளைக்கு நிச்சயமாக திருமணம் நடக்கும் அதனால் இப்போது இந்த புது துணியை நாம் திட்டமிட்டபடி ஊர் மக்களுக்கு இன்று மாலை நீங்கள் மூவரும் சென்று அனைவருக்கும் கொடுத்து விடுங்கள் என்றார் பண்ணையார்.

அப்படியே செய்கிறோம் அப்பா இன்று மாலை ஊரில் உள்ள அனைவருக்கும் புது துணி கொடுத்து விடுகிறோம் என்று பரந்தாமன் சொல்லிவிட்டு புதுத் துணியை இறக்கி வைக்கும் இடத்தை காட்டினான் கொண்டு வந்தவரிடம்.

மாலை நேரம் ஆனது ......சொன்னபடி பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் ஊருக்குள் புதுத்துணி கொடுக்கும் வேளையில் இருந்தார்கள் அப்பொழுது ஊர் மக்கள் தயங்கிக்கொண்டே புது துணியை வாங்கினார்கள்.

இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களுக்கு கடவுள் இப்படிப்பட்ட சோதனையை கொடுத்துட்டாரு இருந்தாலும் பண்ணையார் அவசரப்பட்டு இருக்கக் கூடாது .திருமணத்தை நடத்தி விட்டு பிறகு ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கலாம் பாவம் சந்திரன் என்று அங்கு கூடியிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள்.

நீ ஒன்றும் கவலைப்படாதே தம்பி உன் திருமணத்தை நான் நடத்தி வைக்கிறேன் கொஞ்சநாள் பொறுத்துக்க எல்லாம் சரியாப் போகும் . ஏதோ தெரியாம மூணு பேரும் தப்பு செஞ்சுட்டோம் இனி எந்த தப்பையும் நம்ம செய்ய மாட்டோம் செஞ்ச தப்புக்கு நம்ம மேல யாருக்கும் இதுவரைக்கும் சந்தேகம் வரல அதனால இப்போ இந்த துணியை நம்ம சந்தோஷமா கொடுக்குறது நாளா நம்ம மேல யாருக்கும் சந்தேகம் வராது அதனால நீ கொஞ்சம் கவலைப்படாம இரு மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பரந்தாமன் சந்திரனிடம் ரகசியமாக சொன்னாள்.



எப்படியோ திருமணத்தையும் நிறுத்தி விட்டோம். இப்போ ஊருக்குள்ள எல்லாருக்கும் புது துணியை கொடுத்து நல்ல பெயரையும் எடுத்துவிட்டோம் . என்ன விவசாய வேலை தான் கொஞ்சம் பாதிப்பு பரவாயில்லை போகப்போக அதையும் சரி பண்ணி விடலாம் என்று மனசுக்குள் நினைத்து பரந்தாமன் மட்டும் நிஜமான சந்தோசத்துடன் ஊர் மக்களுக்கு துணியை கொடுத்துக்கொண்டிருந்தான் பரந்தாமன்...



பரந்தாமனின் வெற்றி தொடருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்



தொடரும்........

 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
கனகா குடும்பம் காணாமல் போன நாள் முதல் அந்த ஊர் மக்களும் பண்ணையார் குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்தது நாட்களும் நகர்ந்தது..

பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் வழக்கம்போல தோட்டத்திற்கு கிளம்பினார்கள் அவர்கள் முகத்தில் எந்த ஒரு உற்சாகமே தென்படவில்லை . சற்று சோகத்தோடு கிளம்பினார்கள் பண்ணையாரும் யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை. அமைதியாக எதையோ பறிகொடுத்தவர் போல யோசித்துக் கொண்டிருந்தார். பரந்தாமனின் மனைவி மூவரையும் வழக்கம்போல ஒரே பைக்கில் தோட்டத்திற்கு அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் பண்ணையார் சோகத்தில் இருப்பதை கவனித்தால்.

மாமா குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வரவா..

அதெல்லாம் ஒன்னும் வேணாம் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும் இப்படி உட்காருமா என்று பண்ணையார் பொறுமையாக சொன்னார்.

எவ்வளவு சந்தோஷமா இருந்தோம் சந்திரனுக்கு கல்யாணத்தை பண்ணப் போறோம் என்று . ஆனால் கடைசியில இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு ரொம்ப பயமா இருக்கு . மா அந்த காலத்துல நான் எதுக்குமே பயந்தது கிடையாது எப்படிப்பட்ட சவால்களையும் சமாளித்து விடுவேன் .எனக்கு பக்க பலமா என் நண்பன் முத்தையா இருந்தான் . அதனால எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் அதை முறியடித்து விடுவோம் ஆனால் இப்போ ஒரு சின்ன பிரச்சனை நடந்தால் கூட என்னால தீர்க்க முடியல மா அதுக்கு காரணம் என்னோட வயசு தான் என்னால ஓடிப்போய் காணாமல்பனவர்களை தேட முடியுமா அவங்க எதனால காணாமல் போனார் என்ற தகவல் கூட என்னால இப்போதைக்கு சேகரிக்க முடியலையே இதெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்குமா எனக்கு ஆரம்ப காலத்துல ஞாயம் தர்மத்துக்கு நான் பாடுபடுவேன் அதேபோல இப்போதும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நியாயம் தர்மத்தை நான் பாக்குற அம்மா. என் மனசுக்கு வயசு ஆகல என் பிடிவாதத்துக்கு வயசு ஆகல என் தர்மத்துக்கு வயசு ஆகல ஆனா ஆனால் என் உடலுக்கு வயசு ஆயிடுச்சு மா அதனால என்னால முன்ன மாதிரி எதையமே ஜெயிக்க முடியல என்று உருக்கமாக பண்ணையார் தனது மருமகளிடம் சொன்னார்..

ஒரு பிரச்சனை எப்போது உச்சத்திற்கு போகுதோ . அப்போவே அந்தப் பிரச்சனைக்கு தீர்வும் சீக்கிரம் கிடைத்துவிடும் . இதுதான் காலத்தின் கட்டாயம் அதனால இப்போதான் நீங்க ரொம்ப தைரியமா இருக்கணும் மாமா நீங்க வேணா பாருங்க இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு மாற்றம் வர போகுது பாருங்க மாமா.

எனக்கு என்ன வருத்தம் என்ன நம்ப குடும்ப விரோதி ரொம்ப பக்கத்திலே இருக்கிற மாதிரிதான் எனக்கு தோன்றுதம்மா . நீ என்ன நினைக்கிற.

எனக்கும் அப்படித்தான் தெரியுது மாமா நடந்ததை எல்லாம் பார்க்கும் போது இதை யாரோ திட்டமிட்டு தான் செஞ்சிருக்காங்க . அது யாருன்னு தான் தெரியல உங்களுக்கு யார் மேல சந்தேகம் இருக்குதா மாமா

தினமும் உன் கணவனும் அவனது தம்பிகளும் தோட்டத்திற்கு சென்று வராங்க அவனுங்களுக்கே இது யார் செஞ்சி இருப்பாங்கன்னு தெரியல வீட்ல இருக்குற எனக்கு எப்படிமா தெரியும் நான் யார் மேல சந்தேகம் பாடுறத அது மட்டும் இல்ல ஊர் மக்களும் யார் மேலேயும் சந்தேகம் படல இந்த காரியத்தை யார் செஞ்சு இருப்பாங்கன்னு. அவங்களுக்கும் தெரியல நம்ம வீட்டுல இருக்கிற ஆம்பளைக்கும் தெரியல வயசானவன் எனக்கு எப்படி தெரியுமா.

நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க மாமா இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க ஒரு திருப்பம் ஏற்பட போது பாருங்க . உங்கள் நண்பர் முத்தையாவின் மகன் சங்கருக்கு திருமணம் நடக்கப் போது அல்லவா அந்த திருமணத்திற்கு நாம் குடும்பத்தோட போகப்போறோம் அல்லவா நம்ம வீட்டு திருமணத்தை தான் தள்ளிப் போட்டுட்டீங்க உங்க நண்பர் வீட்டுத் திருமணத்தை நல்ல சந்தோசமா முடிச்சுட்டு வரலாம் அந்தத் திருமணம் முடிந்ததும் உங்களுக்கு ஒரு திருப்பம் ஏற்படும் பாருங்க என்று சொல்லி சமாதானம் செய்தாள்.



வழக்கம்போல பரந்தாமன் சந்திரன் தீனா தோட்டத்திற்கு சென்று ஆளுக்கு ஒரு திசையில் சென்றார்கள் தோட்டத்தை சுற்றிப்பார்க்க . அப்பொழுது பச்சை பசுமையாக இருந்த தோட்டம் எல்லாம் வதங்கி விநாகம் அளவிற்கு இருந்தது இதைப்பார்த்த மூவருக்கும் சோகம் மேலும் அதிகரித்தது நாம் செய்த தவறினால் இப்படி விவசாயமே நாசமாகிவிட்டது என்று கவலைப்பட்டார்கள் அப்போது பரந்தாமன். சந்திரனிடம் என்னை மன்னித்து வீடு தம்பி என்றான் தலைகுனிந்தபடி.

அண்ணே பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க என்றால் சந்திரன்.

நான் உங்கள் மீது உள்ள பாசத்தினால் இப்படி ஒரு தவறை செய்துவிட்டேன் எனக்கு உங்கள் ஆசை தான் பெரிதாக தெரிந்ததே தவிர அதன் விளைவுகள் எனக்கு அப்போது தெரியவில்லை . தம்பிகள் ஆசை தான் முக்கியம் என்று நினைத்து தான் இந்த தவறுக்கு சம்மதித்தேன் . ஆனால் இப்படி உன் திருமணமே நின்று போகும் என்று தெரிந்திருந்தால் நான் இதுபோன்ற தவறை செய்து இருக்கவே மாட்டேன் . அந்த கனகா நம் வழிக்கு வந்து விடுவாள் என்று எண்ணி தான் உங்களை அவளுடன் சேர சொன்னேன் . ஆனால்நாம் நினைத்தது ஒன்று இப்போது நடந்தது ஒன்று . எப்படியோ இனி எந்தத் தவறையும் நான் உங்களை செய்ய அனுமதிக்கமாட்டேன் இனி உங்கள் வாழ்க்கைதான் எனக்கு முக்கியம் நான் செய்த தவறுக்கு என்னை இரண்டு பேரும் மன்னித்துவிடுங்கள் என்று உருக்கமாக சொல்வதைப்போல நடித்தான் பரந்தாமன்.

எப்போதும் போலவே சந்திரனும் தீனாவும் அண்ணனின் பாசத்தை பார்த்து பெருமை அடைந்தார்கள் பிறகு பரந்தாமனுக்கு ஆறுதலும் சொன்னார்கள்.

சந்திரனும் தினாவும் ஆளுக்கொரு திசையில் சென்றார்கள் தோட்டத்தைப் பார்க்க பரந்தாமன் மட்டும் கவலையோடு பம்பு செட்டின் அருகிலேயே நின்றிருந்தான் தம்பிகள் சற்று தூரத்தில் சென்றதும் பம்புசெட்டில் மற்றொரு அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் முன்பு நின்று பேசத் தொடங்கினான்.



அம்மா நான் உன்கிட்ட வேண்டியது போல தம்பி திருமணத்தை நிறுத்திவிட்டேன் . அது எனக்கு சந்தோசம் தான் . ஆனால் விவசாயமும் சேர்ந்து நின்னு போச்சு எதுக்காக நான் இந்த திட்டத்தை போட்டேன் . விவசாயம் சிறப்பாக நடக்கணும் லாபம் எனக்கு மட்டுமே கிடைக்கணும் என்று நினைத்துதான் இந்த திட்டத்தை போட்டேன் ஆனால் நடந்தது வேறு. அம்மா நீ எனக்கு நல்லது செய்றியா இல்ல கெட்டது செய்றியா எனக்கு தெரியவில்லை . எப்பவுமே நீ எனக்கு நல்லது தான் செய்வே அந்த நம்பிக்கையில்தான் நான் இருக்கேன் ஆனா இப்போ நடந்திருப்பதை வச்சு பார்த்தா எனக்கு ஒண்ணுமே புரியல இந்த விவசாயத்துல கிடைக்கிற லாபத்தை எல்லாம் அப்பாவிடம் கொஞ்சம் கொடுத்து விட்டு மீதி பணத்தை எல்லாம் உன் பக்கத்துல தானே வச்சிருக்கேன் . எதனால நீ பத்திரமா பாத்துக்குவே என்ற நம்பிக்கையில் தானே வச்சிருக்கேன் இப்போ எனக்கு இந்த விவசாயத்துல வருமானம் கிடைக்காது போல தெரிகிறது நான் நினைத்தபடி தம்பி திருமணத்தை நிறுத்தி விட்டேன் உன்னோட துணையோடு ஆனா இந்த ஊர் மக்கள் எல்லாம் நம்ம விவசாயத்தை நிறுத்திவிட்டார்கலே . நான் உன்கிட்ட வேண்டி கேட்கிறது இந்த விவசாய நிலமும் அதுல கிடைக்கிற லாபம் எனக்கு மட்டுமே சேரனும் என்னோட குறிக்கோளே அது தானே உனக்கு தெரியாதா . ஒரு ஆசையை நிறைவேற்றி விட்டு இன்னொரு ஆசையே தடைபோட்டு விட்டாயே அம்மா . எனக்கு தெரியாது .நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ இன்னும் கொஞ்ச நாள்ல இந்த விவசாயம் பழையபடி செழிப்பாக வளர வேண்டும் அதுக்கு நீதான் உறுதுணையா நிக்கணும் எப்படி என்னோட ஆசையை நீ ஒன்னொன்னா நிறைவேற்றினியோ அதேபோல இந்த ஆசையும் .நீதான் நிறைவேற்ற வேண்டும் . எனக்கு உன்ன விட்டா யாரும் கிடையாது அதனால தான் நான் சேர்த்த பணத்தை எல்லாமே உன் படத்துக்குப் பின்னாடி மறைச்சு வச்சு இருக்கேன் அந்த அளவுக்கு உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு அம்மா நீதான் என் தெய்வம் என்னை நல்ல நிலைமைக்கு நீதான் கொண்டு வரணும் . தம்பிகளை நான் சந்தோஷமா பார்த்துகிறேன் நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம் ஆனால் திருமணத்தை மட்டும் நடத்த மாட்டேன் மத்த எல்லா சந்தோசத்தையும் அவங்களுக்கு நான் கொடுக்கிறேன் . அதனால நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம் அம்மா இப்போ என்னுடைய ஒரே வேண்டுதல் பழையபடி நம்ம தோட்டம் செயிப்பா வளரனும் எனக்கு லாபம் வரணும் இதுதான் என்னோட ஆசையும் . இதை நீ கூடிய சீக்கிரத்துல நிறைவேத்தி வெப்ப என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாவே இருக்கு என்னோட ஆசையை நீ இதுவரைக்கும் தட்டிக் கழித்தது இல்லை அந்த நம்பிக்கையில் நான் இப்போ காத்துகிட்டு இருக்கேன் அம்மா என்று பரந்தாமன் மீண்டும் தனது தாயிடம் வேண்டிக்கொண்டான். பிறகு தாயின் படத்தின் பின்புறமாக சென்று பணமெல்லாம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்த்தான் . வச்ச பணம் அப்படியே இருக்கிறது பிறகு வெளியே வந்தான் . தம்பிகளும் வயல்களை சுற்றிப் பார்த்துவிட்டு வந்தார்கள் .அப்பொழுது தீனா பரந்தாமன்னிடம் சொன்னான்.

நம்ம தோட்டம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல மொத்தமா காஞ்சிவிடும் அளவுக்கு வந்துடுச்சு அண்ணா . சரியா தண்ணி போகாள அதனால எல்லா வாழலும் காஞ்சி போச்சு. பாக்குறதுக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா இது போல நான் என்னைக்குமே நம்ம தோட்டத்தை பார்த்ததில்லை என்று வருத்தத்தோடு சொன்னான் தீனா

என்னோட அனுபவத்துல கூட நம்ம தோட்டத்தை நான் இதுபோல பார்த்ததில்லை என்ன பண்றது நம்ம செஞ்ச தப்பு . இப்போ நாம தானே அனுபவிச்சே ஆகணும் என்று நிஜமாகவே கவலைப்பட்டான் பரந்தாமன்.



நாட்கள் நகர்ந்தது . ஊரில் உள்ள வாலிபர்கள் எல்லாம் சங்கரின் திருமணத்தை கோவிலில் சிறப்பாக நடத்த வேண்டும் என்று எண்ணி கோலாகலமாக ஊரையே அலங்கரித்தனர் சந்தோஷமாக . ஒரு சிலர் லேசான வருத்தத்தோடு இருந்தார்கள் முத்தையாவும் முழுமையான சந்தோசத்தில் இல்லை பண்ணையார் வீட்டு திருமணம் நின்றுவிட்டது நம்முடைய மகன் திருமணம் மட்டும் சிறப்பாக நடக்கிறது பண்ணையாரும் கவலையில் இருக்கிறார் இரண்டு குடும்பம் காணாமல் போய்விட்டது என்ற கவலையில் இந்த நிலைமையில் நமது மகன் திருமணத்திற்கு வருவானோ வர மாட்டானோ என்றன்ற கவலையும் இருந்தது முத்தையாவுக்கு.

ஷங்கரும் ரேகாவும் நாளை முதல் நம் கணவன் மனைவியாக குடும்பத்தை நடத்தப் போகிறோம் என்று பேசிக்கொண்டு நண்பர்களோடு ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள்.

ரேகாவின் அம்மா மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் தனது ஒரே மகளின் திருமணம் இப்படி ஊரே மகிழ்ச்சியாக கொண்டாடுவதை பார்த்து பெருமை கொண்டாள் அதேசமயம் சங்கர் மருமகனாக கிடைத்ததற்கு நான் எவ்வளவோ புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று நினைத்து பெருமைப் பட்டாள் ரேகாவின் அம்மா லட்சுமி.

பண்ணையார் வாங்கி கொடுத்த புது துணியை உடித்துக்கொண்டு ஊர் மக்கள் அனைவரும் பளிச்சென்று இருந்தார்கள் ஒரு சிலர் வருத்தப்பட்டார்கள் பண்ணையார் அவருடைய மகன் திருமணத்துக்காக புதுத்துணி ஆர்டர் செய்து இருந்தார் ஆனால் பண்ணையாரின் வீட்டு திருமணம் நின்று போய்விட்டது அவர் ஆர்டர் செய்த துணி மட்டும் அவர் நினைத்தபடி ஊர்மக்களுக்கு கொடுத்துவிட்டார் அப்படிப்பட்ட நல்ல மனசு காரருக்கு இப்படி ஒரு சோதனை . இருந்தாலும் முத்தையாவின் ஒரே மகன் திருமணத்தை யாவது நல்லபடி செய்து முடிக்க வேண்டும் என்று ஒரு சில பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.......,



பண்ணையார் மருமகள் சொன்னது போல .சங்கர் ரேகா திருமணத்திற்கு பிறகு பண்ணையார் குடும்பத்தில் மாற்றம் ஏற்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.,



தொடரும்....​
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
அதிகாலை நான்கு மணி இருக்கும் அந்த அழகிய கிராமத்தில். மங்களகரமான நாதஸ்வர மேளதாளங்கள் நல்ல உற்சாகமாக ஒலிக்கத் தொடங்கியது . ஊரில் உள்ளவர்கள் சட்டென்று விழித்துக் கொண்டார்கள் கோவிலில் கல்யாணம் மேளச்சத்தம் கேட்கிறது சங்கர் ரேகாவின் திருமணம் இன்னும் கொஞ்ச நேரத்தில் நடக்கப்போகிறது அதனால் உடனே கோவிலுக்கு கிளம்ப வேண்டும் என்று ஊர் மக்கள் அனைவரும் விழித்துக்கண்டு கல்யாணத்திற்கு கிளம்பினார்கள் சந்தோஷமாக.

பண்ணையார் வீட்டிலும் சங்கர் திருமணத்திற்கு மும்மரமாக கிளம்பிக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது பண்ணையார் மருமகளை அழைத்து.

அம்மாடி பீரோ வில் புதுத்தாலி வைத்து இருக்குமே அதை மறக்காமல் எடுத்துக்கோ அவசரத்துல மறந்துட்டு போக போறோம் என்று சொன்னார்.

மொத வேலையா குளிச்சி முடிச்சதும் தாலியை எடுத்து பேக்குல வெச்சுட்டேன் மாமா என்று சிரித்தபடியே சொன்னாள் மருமகள்.

பிறகு பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் வழக்கம்போல திருமணத்திற்கு தயாராகி விட்டு மூவரும் ஒரே பைக்கில் திருமணத்திற்கு கிளம்பினார்கள்.

பண்ணையார் அவருடைய மருமகள் மற்றும் பேரன் இவர்களும் திருமணத்திற்கு கிளம்பிச் சென்றார்கள்.

அந்த அழகிய கிராமத்தில் அற்புதமான அம்மன் கோவிலில் மாவிலை தோரணங்கள் ஓடு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது சங்கர் ரேகாவின் திருமணம் . ஊரே ஒன்று கூடி சந்தோஷமாக திருமணத்தை நடத்திக் கொண்டிருந்தனர் . ஒரு பக்கம் சமையல் வேலையும் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.

பண்ணையாரின் குடும்பம் திருமணம் நடக்கும் அம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள் ஊர்மக்களுக்கு பெரும் சந்தோஷம் பண்ணையார் குடும்பத்தோடு திருமணத்திற்கு வந்துவிட்டார் என்று எண்ணி. முத்தையா மற்றும் அங்கிருந்தவர்கள் எல்லாம் எழுந்து நின்று பண்ணையாரை வரவேற்றார்கள் . பண்ணையாரும் ஊர் மக்களை அனைவரையும் ஒரே இடத்தில் பார்த்த சந்தோஷத்தில் பெருமகிழ்ச்சி கொண்டார் சந்தோஷம் அவர் முகத்தில் பொங்கியது. அனைவரையும் தனது இரண்டு கைகளால் கும்பிட்டு மரியாதை கொடுத்தார் பண்ணையார். ஊர் மக்களும் பண்ணையார் குடும்பத்தை வணங்கி திருமணத்தை நடத்தி வைக்கும் படி சொன்னார்கள் . அப்பொழுது பண்ணையார் தனது மருமகளிடம் இருக்கும் தாலியை வாங்கி பூசாரியிடம் கொடுத்து சடங்கு சம்பிரதாயம் செய்யச் சொன்னார்.

ரேகாவின்அம்மா லட்சுமி அம்மாவுக்கு தனது மகள் திருமணத்தை பார்த்து கண் கலங்கியபடி சந்தோசததில் நின்று கொண்டிருந்தார் . நமது மகள் திருமணம் இந்த அளவுக்கு சிறப்பாக நடப்பதைப் பார்த்து சந்தோசத்தில் கண் கலங்கினாள் அப்போது முத்தையா வைப் பார்த்து அவளுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் பாசத்தில் திகழ்ந்தால் . கணவனை இழந்து அனாதையாக நின்றபோது . சொந்த மகளாக நினைத்து ஆதரவு கொடுத்தார் இப்பொழுது ஒரு பெரிய பாச பந்தத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் . இவருக்கு நாம் என்ன செய்து இவர் நன்றிக்கடனை தீர்க்க முடியும் . இந்த ஜென்மத்தில் அது முடியாது நீங்கள் உண்மையிலே என்னைபெத்த அப்பாதன் என்று நினைத்து . இரு கைகளால் கும்பிட்டாள் முத்தையா வை பார்த்து.

லட்சுமி இரு கைகளால் வணங்கி கும்பிடுவதை பார்த்த முத்தையா புரிந்துகொண்டார்.

இன்னும் கொஞ்ச நேரத்துல மகள் திருமணம் நடக்கப்போகுது இந்த நேரத்தில் கண் கலங்க த அம்மா என்று லட்சுமி அம்மாளுக்கும் பாசமாய் சொன்னார் முத்தையா.

பிறகு பண்ணையார் முன்னிலையில் சங்கர் ரேகா திருமணம் சிறப்பாக நடந்தது பண்ணையார் தாலியை எடுத்துக்கொடுக்க சங்கர் ரேகா கழுத்தில் தாலியை கட்டினான் மேலம்கொட்டினார்கள்.

பிறகு விருந்து உபசரிப்பு நடந்தது பண்ணையாரும் குடும்பத்தோடு அமர்ந்து கல்யாண சாப்பாடு சாப்பிட்டனர் அப்போது சந்திரனின் முகம் சற்று வாடியபடி இருந்தது இதை கவனித்த பண்ணையாரும் முகம் வாடினார் . மகன் திருமணத்தை நிறுத்தி விட்டோமே என்று எண்ணி லேசாக கவலைப்பட்டார்.

பிறகு முத்தையாவும் பண்ணையாரும் இருவரும் மனம்விட்டு பேசத் தொடங்கினார்கள் கடந்த கால நினைவுகளை இருவரும் பகிர்ந்துகொண்டார்கள் . எனக்கு உன்னை விட்டால் ஆளில்லை என்பதுபோல பண்ணையாரின் பேச்சு இருந்தது . முத்தையாவும் நீ இல்லை என்றால் நான் இல்லை என்பது போல இருவரும் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது முத்தையா சொன்னார்.

இதுநாள் வரைக்கும் என் நினைவு தெரிந்த நாள் முதல் நமது தோட்டம் தண்ணி இல்லை என்று வாடி போனதே கிடையாது . ஆனால் இன்று தண்ணீர் இருந்தும் தோட்டங்கள் எல்லாம் பராமரிக்க ஆள் இல்லாததால் வாடிக் கொண்டு இருப்பதை பார்த்தாள் என் மனம் ரொம்ப கவலைப்படுகிறது. என்று உருக்கமாக சொன்னார் முத்தையா.

அதை நினைத்தால்தான் எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது இப்படியே நம் தோட்டம் ஒரு முடிவுக்கு வந்துவிடுமோ என்ற பயம் எனக்கும் இருக்கிறது. அது மட்டும் இல்ல இந்த பம்புசெட்டில் தங்கி வேலை செய்த இரண்டு குடும்பமும் காணாமல் போனது மேலும் என் பயத்தை அதிகரிக்கிறது . நான் இந்தப் பிரச்சனையில் இருந்து எப்படித்தான் வெளியே வரப் போகிறானோ என்று எனக்குத் தெரியலை . இந்த பிரச்சனையிலிருந்து நான் வெளியில வந்தா தான் . என் இரண்டாவது மகன் சந்திரனுக்கு திருமணத்தை நடத்துவதா முடிவு பண்ணியிருக்கேன் . இதனால என்னால நிம்மதியாக இருக்க முடியல ஒரு பக்கம் தோட்டம் வீணா போது ஊர் மக்களும் வேலைக்கு வர பயப்படுகிறார்கள் அதனால அவங்க குடும்பத்திலும் கஷ்டம் இருக்கு வேலை இல்லை ஆனா அவங்க எப்படி குடும்பம் நடத்த முடியும் இது நாள் வரைக்கும் விவசாயத்தில் எனக்கு லாபம் இல்லாவிட்டாலும் ஊர் மக்களுக்கு வேலை இல்லாம நான் விட்டதே இல்லை . ஆனா இன்னைக்கு நலமைஅப்படி இல்ல . வேலை இருந்தும் அவங்களால் வேலை செய்ய முடியல அப்படி ஒரு நிலைமைக்கு வந்துருச்சு நம்ம உருவாக்கின இந்த தோட்டம் இந்தப் பிரச்சினையை சரி செய்வதற்கு எனக்கு வயசு இல்ல என் மகன்களும் இந்தப் பிரச்சனையை சரி செய்வார்கள் என்ற நம்பிக்கை கொஞ்சம் கூட இல்ல இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று உருக்கமாக சொல்லி கவலைப்பட்டார் பண்ணையார். முத்தையா விடம்.

நீ ஒன்றும் கவலைப்படாதே நிச்சயமா ஒரு நல்ல முடிவு பொறக்கும் பொறுமையா இரு என்று தோளைத் தட்டிக் கொடுத்தார் முத்தையா

என் மருமகளும் இதையேதான் சொன்னாள் சங்கர் திருமணம் முடிந்ததும் ஒரு நல்ல வழி பொறக்கும் உங்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவு வரும் என்று என் மருமகள் சொன்னால் . அதே போல தான் நீயும் சொல்ற. பார்க்கலாம் இனியாச்சும் என் குடும்பத்திற்கும் ஏன் தோட்டத்திற்கும் இந்த ஊர் மக்களுக்கும் ஒரு நல்ல காலம் பொறக்குத என்று இதோ இந்த அம்மன் தான் இதற்கெல்லாம் ஒரு முடிவு சொல்ல வேண்டும் என்று பண்ணையார்சொன்னார் . பிறகு அனைவரும் புறப்பட தயாரானார்கள் பண்ணையார் குடும்பத்தை மக்கள் சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தார்கள் முத்தையாவும் சங்கர் ரேகா லட்சுமி அம்மாளும் பண்ணையாரை கையசைத்து சந்தோஷமாக வழிஅனுப்பினார்கள் பிறகு ஊர் மக்கள் கல்யாண சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டார்கள்.

மாலைப்பொழுது முத்தையா தனது வீட்டின் திண்ணை மீது அமர்ந்தபடி டீ குடித்துக் கொண்டு லட்சுமி அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார் வீட்டின் கதவு லேசாக சாத்தியிருந்தது

வீட்டுக்குள் சங்கரும் ரேகாவும் கட்டில் மீது கட்டியணைத்தபடி ஒருவரையொருவர் செல்லமாக பேசிக்கொண்டிருந்தனர் . இருவரின் இதழ்கள் உரசிக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

மாமா இனிமே என்ன கேக்காம எங்கேயுமே நீ போகக்கூடாது சின்ன பிள்ளை மாதிரி கபடி எல்லாம் இனிமே விளையாடக்கூடாது இந்த சேத்துல போயிட்டு நீங்கள் கபடி விளையாடுவது எனக்கு பிடிக்கல நீங்க எங்க வேலைக்கு போனாலும் அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடனம் அப்புறம் தினமும் பூ வாங்கிட்டு வரணும் அப்புறம் தினமும் நல்லா சாப்பிடணும் அப்பத்தான் ....அப்பத்தான்..... என்று இழுத்தாள் ரேகா.

என்னடி சொல்ல வர இவ்வளவு நாளா நல்லா தானே சாப்பிட்டுகிட்டு இருக்கேன் . இப்ப என்ன புதுசா நல்லா தான் சாப்பிடணும்னு இயுக்குற என்றான் செல்லமாய் சங்கர்.

நான் எதுக்கு சொல்றேன்னு இப்ப புரியாது உங்களுக்கு அப்புறமா தான் புரியும் இப்போ நான் சொல்றதை கேளு மாமா நல்லா சாப்பிடுங்க.

சரி சரி நீ சொல்ற மாதிரியே நல்லா சாப்பிடுறேன் ஆனா இப்ப என்ன வச்சி இருக்க நான் சாப்பிடுறதுக்கு என்று சொன்னான் சங்கர்.

ஐயோ மக்கு நீ சாப்பிடறதுக்கு இப்போ எதுவுமே இல்லையா நல்லா பாரு என்று. சிரித்துக்கொண்டே தன் இடுப்பு அழகை வளைத்துக் காட்டினாள்ரேகா

ஓ இதைத்தான் நல்லா சாப்பிடணும் சாப்பிடணும்னு சொன்னியா பரவாயில்லை உம்மை போல இருந்துகிட்டு இவ்வளவு நாளா என்னை ஏமாத்திகிட்டு இருந்தய.

இப்ப பாரு எப்படி சாப்பிட போறேன் .நீ மெதுவா போய் அந்த கதவ கொஞ்சம் தாப்பால் போட்டுட்டு வா அதுக்கு அப்புறம் பாரு மாமா எப்படி சாப்பிடுறேன். என்று நாக்கை மடித்துக் கொண்டே சொன்னான் சங்கர் . ரேகாவல் வெட்கம் தாங்க முடியவில்லை .தலை குனிந்தபடியே எழுந்துசென்று மெதுவாக கதவை தாப்பால்போட்டாள் . முத்தையாவும் லட்சுமி அம்மாளும ரேகா கதவை சாத்துவதை கவனித்தும் கவனிக்காதது போல இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள் பிறகு லட்சுமி அம்மாள் இனியும் நம்ம இங்கே உட்கார்ந்து இருக்கக்கூடாது என்று நினைத்து . சிரித்துக் கொண்டே முத்தையா விடம் நான் எல்லோருக்கும் சமையல் செய்கிறேன் நேரமாச்சு அப்பா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினால் எதிரில் இருக்கும் அவள் வீட்டுக்கு.

சங்கரும் ரேகாவும் இனிமையான மாலைப் பொழுதை இருவரும் காமதேவனின் உதவியோடு சந்தோஷமாக கழித்தனர் இரவு நேரம் ஆனது கதவின் தாழ்ப்பாள் திரந்தது. அப்பொழுது ரேகா தனது தாய் செய்து வைத்திருந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு முத்தையாவுக்கு சங்கருக்கும் பரிமாறினாள் . இருவரும் ரசித்து சாப்பிட்டார்கள் பிறகு வழக்கம்போல முத்தையா மீண்டும் திண்ணை மீது அமர்ந்து கொண்டார் . சங்கர் ரேகாவும் மறுபடியும் கட்டில்மது படுத்துக்கொண்டார்கள் அப்பொழுது சங்கரின் முகம் லேசாக வாடியது சங்கரை கவனித்தாள் ரேகா.

ஏ மாமா ஒரு மாதிரியா இருக்கீங்க நல்லா தானே பேசிக்கிட்டு இருந்தீங்க.

இவ்வளவு நாளா நல்ல வேலைக்குப் போய் சம்பாதித்து கிட்டு இருந்தேன் ஆனா நமக்கு திருமணமானதும் இனி பண்ணையார் தோட்டத்தில எப்ப தான் வேலைக்கு போவேன் என்று எனக்கே தெரியல . அதுதான் மனசுக்கு ஒரு சங்கடமா இருக்கு அப்பா சொன்னபடி உன்னை நான் ராணிபோல பாத்துக்கணும். அப்பா ஆசைப்பட்டார் இப்படி நான் வேலைக்கு போகாம இருந்தா எப்படி நான் உன்ன ராணி போல பாதிக்கிறது. என்று சங்கர் கவலையோடு ரேகா விடம் சொன்னான்.

பணம் நகை இருந்தாத்தான் ராணியா . உன் பக்கத்துல இருந்தாலே நான் ராணி தான் மாமா இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம் . தாத்தா என் மேல உள்ள பாசத்துல அப்படி சொல்லி இருக்காரு நான்தான் ஏற்கனவே சொன்னேன் நான் கடைசி வரைக்கும் உன் கூடவே இருந்தலே அதுவே நான் செஞ்ச பாக்கியம் அந்த ஒரு சந்தோசம் மட்டும் எனக்கு போதும் நம்ம ரெண்டு பேரும் என்னிக்குமே பிரியாம வாழனும் அதுதான் என்னோட ஆசை மத்தபடி பணத்தின் மிதும் நகைகள் மேலேயும் எனக்கு ஆசை எதுவும் கிடையாது மாமா புரிஞ்சுக்குங்க நீங்க மட்டும் தான் எனக்கு சொத்து தாத்தா அப்படிதான் சொல்லுவாரு ஒரு பேரனோ பேத்தியோ பாத்துட்டா அதுக்கப்புறம் எல்லாமே பேற பிள்ளைகளுக்காக மட்டும்தான் அவரு பாசத்தை காட்டுவாரு அப்புறம் நம்ம ரெண்டு பேரையும்கூட கண்டுக்க மாட்டார் என்று சிரித்தபடி சொன்னாள் ரேகா.

ரேகாவின் பேச்சைக் கேட்டதும் சங்கருக்கு மீண்டும் உற்சாகம் வந்தது இருவரும் மறுபடியும் ரொமான்ஸ் வேலையில் இறங்கினார்கள்....



பரந்தாமனுக்கு எப்படியாவது விவசாயத்தை பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஆசை.....

பண்ணையாருக்கு நம் குடும்பத்திற்கும் இந்த ஊருக்கும் கெடுதலை செய்யும் அந்த தீய சக்தியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை..,...

சங்கரின் திருமணத்தினால் ஒரு திருப்பம் ஏற்படுமா...

இனி யார் திட்டம் பலிக்கபோகுது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.



தொடரும்.......
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
ஒரு நாள் அந்த ஊரில் அக்கம்பக்கத்தினர் தனது வீட்டு வாசலில் கட்டில் போட்டு அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர் . இரவு எட்டு மணி இருக்கும் அப்பொழுது ஒருவர் பக்கத்து வீட்டு நண்பரிடம் கட்டிலில் அமர்ந்தபடி பேச்சுக் கொடுத்தார்.

என்னப்பா ....முத்தையாவின் வீட்டு திருமணம் எப்படியோ நல்லபடியா முடிஞ்சிடுச்சு நம்ம பண்ணையார் ஓட மகன் திருமணம் தான் தள்ளிப் போயிருச்சு . என்னைக்கு நடக்கும் தெரியல . இந்த பம்புசெட்டில் வேற நம்ம கனகா குடும்பம் ஏற்கனவே நம்ம பெரியவரின் மகனும் மருமகளும் காணாம போய் இருக்காங்க .இந்த ரெண்டு குடும்பத்தால் இந்த ஊருக்கே வேலை இல்லாம போச்சு . பாவம் அந்த ரெண்டு குடும்ப என்ன ஆனாங்கதெரியல . யாரைத்தான் நம்புவதோ ஒன்னும் புரியல நம்ம ஊர்ல என்னதான் நடக்குதுன்னு தெரியல . இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் எப்போது வருமோ வேலை இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்குப்பா என்று சொன்னார்.

நீ சொல்றதும் சரிதான் ......இப்போ இருக்கிற நிலைமைக்கு யாரைத்தான் நம்புவது என்று தெரியல . வேலைக்கு போனா இரண்டு குடும்பம் காணாம போனது எல்லோருக்கும் பயத்தை ஏற்படுத்தி ருச்சி . போதாத குறையாக நம்ம சாட்டையடி சாமியார் வேற இந்த ஊருக்கே சோதனை காலம் வரப் போகுதுன்னு சொல்லிட்டாரு . அவர் சொன்னபடியே நமக்கெல்லாம் வேலை இல்லாம போச்சு . இப்படியே இன்னும் ஒரு மாசம் போனா சாப்பிடுவதற்கு வழி கிடையாது பண்ணையாரும் . பண்ணையார் பசங்களும் தங்கமான பசங்க அவங்கதான் இன்னைக்கு கூட வேலைக்கு வாங்க என்றுதான் சொல்றாங்க . ஆனா வேலைக்கு போறதுக்கு நம்மளுக்குத்தான் தைரியம் இல்லை . ஏன்னா நமக்கு ஏதாச்சு ஆகிவிடுமோ என்ற பயத்தில் . நம்மசும்மாவே வீட்ல உட்கார்ந்து கொண்டு இருக்கும் இதுக்கெல்லாம் ஒரு முடிவு பண்ணனும் அப்பாதன் நாமளும் நிம்மதியா இருப்போம் . இந்த ஊரும் நிம்மதியா இருக்கும் என்று பதிலுக்கு மற்றொரு தொழிலாளி சொன்னார் .இப்படி இருவரும் பேசிக் கொண்டதில் நேரம் 10 ஆனது இருவரும் தூங்குவதற்கு ஆயத்தமானார்கள் வீட்டு வாசலில் கட்டில்மீது அவர்களின் மனைவி பிள்ளைகள் எல்லாம் வீட்டுக்குள் தூங்கினார்கள் . இந்த இரண்டு நண்பர்கள் மட்டும் வெளியில் காற்றோட்டமாக கட்டில்மீது ஓரங்க தயாரானார்கள் .

நேரம் 12 .30 அப்பொழுது திடீரென்று ஒரு பெண் சத்தமாக சிரிப்பதை போன்ற குரல் கேட்டது வெளியில் படுத்து இருக்கும் நண்பர்கள் இருவருக்கும் இந்தக் குரல் கேட்டது இருவருக்கும் மனதில் லேசான பயம் ஏற்பட்டது . இந்த நேரத்தில் யார் சிரிப்பது என்று யோசித்தார்கள் மறுபடியும் ஒய்யாரமாக சிரிக்கும் குரல் கேட்டது அப்போது ஒரு நண்பர் கண்விழித்து சட்டென்று எழுந்து நின்றபடி சுற்றுமுற்றும் பார்த்தார் யாருமே இல்லை . எங்கு இந்த சிரிப்பு குரல் வருகிறது என்று திரும்பித் திரும்பிப் பார்த்தார் யாருமே இல்லை அவருக்கு மேலும் பயம் அதிகரித்தது. மறுபடியும் விட்டு விட்டு ஒரு பெண் சிரிக்கிறாள். மற்றொரு நண்பரும் பயத்தில் எழுந்துகொண்டார் .இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நடுங்கினார்கள் இந்த நேரத்தில் யார் இப்படி பேய் போல சிரிக்கிறார்கள் உண்மையாகவே பேய்தான் சிரிக்கிறதா என்று இருவரும் பேசினார்கள் . அப்போதும் திடீரென்று ஒரு பெண் சத்தமாக சிரிக்கிறாள் . இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் வாசலையே சுற்றி சுற்றி வந்தார்கள் பிறகு அவர்கள் வாசல் முன்பு இருக்கும் தென்னை மரத்தின் உச்சியில் தான் இந்த சத்தம் வருகிறது என்று இருவரும் உணர்ந்தார்கள் . அப்போது இருவரும் பயத்தில் கைகள் நடுங்கின என்ன செய்வது வீட்டுக்குள்ளே ஓடி விடலாமா என்று பேசினார்கள் . அப்பொழுதுஅந்தப் பெண் மறுபடியும் விட்டு விட்டு சிரித்தாள் . இவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டுக்குள்ளே ஓடி கதவை சாத்திக் கொண்டார்கள். வீட்டிலுள்ளவர்கள் பயந்துபோய் எழுந்து ஒக்காந்து கொண்டார்கள் . என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று மனைவி கேட்டாள் . நம்ம வாசலில் இருக்கும் தென்னை மரத்தின் உச்சியில் ஒரு பெண் சிரிப்பது போல சத்தம் வருது என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மறுபடியும் அந்தப் பெண் சிரிக்க ஆரம்பித்தாள் . வீட்டிலுள்ள அனைவரும் பயந்து போனார்கள் இவ்வளவு நாளா இந்த பிரச்சனை இல்லையே இப்பொழுது நம்ம வீட்டு தென்னை மரத்தில் பேய் வந்து இருக்கிறது போல் தெரிகிறது என்று எண்ணி குடும்பமே பயப்பட்டார்கள் மற்றொரு குடும்பத்தில் இதே போல அவர்களும் பயந்தார்கள் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இரண்டு குடும்பமும் பயத்தில் அன்று இரவு முழுவதும் உறங்காமல் நடுங்கிக் கொண்டிருந்தார்கள் ஜன்னல் வழியாக தென்னை மரத்தின் உச்சியை பார்த்து பயந்து கொண்டிருந்தார்கள் அந்தப் பெண் சிரிக்கும் போதெல்லாம். அதிகாலை மூன்று முப்பது மணி .....அதிலிருந்து அந்தப் பெண் சிரிக்கவில்லை இவர்களும் தூங்காத இருந்த களைப்பில் லேசான பயத்தோடு உறங்க ஆரம்பித்தார்கள் .

பிறகு பொழுதும் விடிந்தது ..நேரம்... ஆறு மணி ......இரண்டு குடும்பமும் கதவைத்திறந்து கொண்டு பயத்தோடு வெளியே வந்து தென்னை மரத்தை பார்த்தார்கள் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார்கள் இனிமே நம்மால் நிம்மதியாய் உறங்க முடியாது . இந்த தென்னை மரத்தின் பேய் வந்து தங்கிவிட்டது அந்தப் பேய் இனிமே நம்மளை சும்மா விடாது இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று இரண்டு குடும்பத்தாரும் பேசிக்கொண்டிருந்தனர் . அப்பொழுது அடுத்த தெருவில் இருக்கும் நண்பர் ஒருவர் இவர்கள் பேசிக் கொண்டு இருப்பதை கவனித்தார் . உடனே அவர் சொன்னார் .இதற்கெல்லாம் ஒரே வழி நம்ம சாட்டையடி சாமியாரிடம் முறையிட வேண்டும் மற்றதை எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் அவருக்கு இதுபோன்ற விஷயம் எல்லாம் சர்வ சாதாரணம் இப்படித்தான் ஒருநாள் நம்ம மூணாவது தெருவுல யாருமே இல்லாத வீட்டில் ஒரு பேய் தங்கியிருந்தது அவர்தான் அந்த பேய் இருக்கும் இடம் தெரியாமல் ஒட்டி விட்டார் அதேபோல இந்த தென்னை மரத்தில் இருக்கும் பேய் அவரால்தான் ஓட விட முடியும் நீங்கள் உடனே சாட்டையடி சாமியாரை பார்த்து உங்கள் குறையை சொல்லுங்கள் என்று சொன்னார் உடனே இரண்டு குடும்பமும் முடிவு செய்தார்கள் ஆமாம் அவர்தான் இதற்கு சரியான ஆள் என்று முடிவு செய்துகொண்டு சாட்டையடி சாமியாரிடம் சென்றார்கள்.

சாட்டையடி சாமியார் வழக்கம்போல வலதுபுறம் ஒரு சிஷ்யன் இடதுபுறம் ஒரு சிஷ்யனை அமர வைத்துக் கொண்டு . கண்களை மூடிக்கொண்டு தியனம் செய்வது போல அமர்ந்திருந்தார் .இந்த இரண்டு குடும்பமும் அவரிடம் சென்றது. இவர்கள் வாசலில் வெளியே நின்று கொண்டு சுவாமி சுவாமி என்று குரல் கொடுத்தார்கள் சிஷ்யர்கள் உள்ளே வாருங்கள் என்று சொன்னார்கள் . பிறகு இந்த இரண்டு குடும்ப தலைவர்களும் உள்ளே சென்று அமர்ந்தார்கள் அப்பொழுது சாட்டையடி சாமியார் கண்களை மூடியபடியே சொன்னார் நேற்று இரவு முழுக்க நீங்கள் தூங்கவில்லை அந்தப் பெண் பேய் உங்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது என்று சொன்னார் இதைக் கேட்டதும் அந்த நண்பர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது . எப்படி இவருக்கு தெரியும் இவ்வளவு சக்தியா இவருக்கு என்று ஆச்சரியத்தோடு சாமியாரைப் பார்த்து மறுபடியும் சாமியாரை பக்தியோடு வணங்கி சொன்னார்கள் . ஆமாம் சுவாமி நீங்கள்தான் எங்க இரணடு குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் அந்தப் பேயிடம் இருந்து எங்களுக்கு உங்களை விட்டால் யாரும் கிடையாது அதனால் நீங்கள்தான் எங்களையும் இந்த ஊரையும் காப்பாற்ற வேண்டும் என்று பயபக்தியோடு சொன்னார்கள்

பிறகு சிஷ்யர்கள் இந்த விஷயம் எல்லாம் எங்கள் குருவுக்கு சர்வசாதாரணம் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று சொன்னார்கள் அப்போது சாட்டையடி சாமியார் கண்களை விழிபிதுங்க திறந்தார் அவர்களை முறைத்தபடி . அதற்கு கொஞ்சம் செலவாகும் நீங்கள் கொண்டு வந்துள்ள பணத்தை சிஷ்யர்களிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள் நான் என் சாட்டைக்கு பூஜை செய்ய வேண்டும் அதன் பிறகு இன்று இரவு அந்த பேயை நான் விரட்டி விடுகிறேன் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று ஆக்ரோஷமாக சொன்னார் . அந்த நண்பர்களும் அவர் சொன்னபடி கையில் இருந்த 2000 ரூபாய் கொடுத்தார்கள் சிஷ்யர்களிடம் அதை வாங்கி எண்ணிப் பார்த்தார்கள். இது பத்தாது இந்த பணம் சாட்டைக்கு பூஜை செய்வதற்கு சரியாகிவிடும் பிறகு எங்களுக்கு ஏதாச்சும் கொஞ்சம் பணம் கொடுங்கள் நாங்கள் அந்த பேயை இன்று இரவு விரட்டி விடுகிறோம் அப்பொழுது மீதி பணத்தை கொடுங்கள் என்று சிஷ்யர்கள் சொன்னார்கள் . பிறகு அந்த கூலித் தொழிலாளிகளும் நீங்கள் சொல்வதைப்போல இன்று இரவு அந்தப் பேயை விரட்டியவுடன் மீதி பணத்தை உங்களுக்கு கொடுத்து விடுகிறோம் என்று வாக்குறுதி சொன்னார்கள் . பிறகு அங்கிருந்து கிளம்பினார்கள் அந்த தொழிலாளி நண்பர்கள்.

இரவு நேரம் ஆனது. நேரம் 11 அந்த இரண்டு குடும்பமும் தென்னை மரத்தை பார்த்தபடியே பயந்துகொண்டு வீட்டுக்குள்ளே இருந்தார்கள் . அப்போது சாட்டையடி சாமியார் சின்ன பைக்கில் தனது ஒரு சிஷ்யனை மட்டும் அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டின் வாசலில் வந்து நின்றார் . அப்பொழுது அந்தக் கூலி தொழிலாளிகள் இருவரும் வெளியே வந்தார்கள் மற்றவர்களெல்லாம் வீட்டுக்குள்ளே பயந்து கொண்டு இருந்தார்கள் பிறகு சாட்டையடி சாமியார் கேட்டார்

எங்கே அந்த பேய் சிரிக்கிறது காட்டுங்கள் இன்னைக்கே அந்த பேய் கதையை முடித்து விடுகிறேன் என்று ஆக்ரோஷமாக சொன்னார்

அப்பொழுது ஒரு கூலித் தொழிலாளி சொன்னார் . இதோ இந்த தென்னை மரத்தின் உச்சியில் தான் சுவாமி அந்தப் பேய் சிரிக்கிறது என்று சொன்னார்

இந்த மரத்தில்தான் இருக்கிறதா அந்தப் பேய் நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம் நீங்கள் இங்கேயே நின்று பாருங்கள் நான் எப்படி அந்த பேயை விரட்டுகிறேன் என்று என்று சாமியார் சொன்னார்

எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்கிறது நாங்கள் வீட்டுக்குள்ளே இருக்கும் சாமி நீங்கள் அந்தப் பேயை விரட்டி விடுங்கள் சுவாமி

சரி உங்களுக்கு பயமாக இருந்தால் பரவாயில்லை நீங்கள் உள்ளே இருங்கள் நான் அந்த பேயை விரட்டி விடுகிறேன் என்று தனது சட்டையை எடுத்து ஒரு அடி தென்னை மரத்தின் மீது அடித்தார் . அப்பொழுது வீட்டுக்குள்ளே இருந்து சிறுவர்கள் மற்றும் இவர்களின் மாணைவிகள் எல்லாம் சாட்டையடி சாமியாரின் தைரியத்தைப் பார்த்து ஒரு பக்கம் சந்தோசம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்த பேய் சாமியாரை ஏதாச்சுும் செய்து விடுமோ என்ற பயம். சாமியார் நம்மிடம் பேய் முகத்தைைக் காட்டிவிடுவாரோ அந்த பேய் முகத்தை பார்த்து நாம் பயந்து விட போகிறோமோ என்ற பயத்தில் எல்லோரும் கண்ணிமைக்காமல் சாமியாரைப் பார்த்து நடுங்கினார்கள் .

அப்பொழுது சாமியார் சிஷ்யனிடம் சொன்னார் . சிஷ்யா இந்த திருநீரை எடுத்து இந்த தென்னை மரத்தை சுற்றி தூவு என்றார்

அப்பொழுது சிஷ்யனும் தென்னை மரத்தை சுற்றி திருநீரை தூவிகிக்கொண்டிருக்கும் பொழுது சத்தமாக அந்தப் பெண் பேய் சிரிக்கும் சத்தம் கேட்டது அப்போது சாமியார் பதிலுக்கு குரல் கொடுத்தார்

என்னிடம் நீ வால் ஆட்டாதே உன் கதையை இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிக்கப் போகிறேன் என்று ஆவேசமாக சொன்னார் .

அந்த பேய் சிரிக்கும் பொழுது சாமியார் முகத்தில் எந்த ஒரு பயமும் தெரியவில்லை சிஷ்யன் முகத்திலும் எந்த ஒரு பயமும் தெரியவில்லை ஆனால் இரண்டு தொழிலாளர்களின் குடும்பத்தினர் மட்டும் நடுங்கினார்கள் இன்று ஏதோ நடக்கப்போகிறது நம் வசமாக மாட்டிக் கொண்டோம் அந்தப் பேயிடம் என்று எண்ணி பயந்தார்கள் . அதேசமயம் சாட்டையடி சாமியார் ஒரு சிஷ்யனை மட்டும் அழைத்து வந்து இருக்கிறாரே இன்னொரு சிஷ்யனும் வந்திருந்தல் அவருக்கு மேலும் தைரியமாக இருந்திருக்குமே என்று அந்தக் கூலி தொழிலாளிகள் பேசிக்கொண்டார்கள் அப்பொழுது அந்தப் பெண் பேய் விட்டுவிட்டு சிரிக்கத் தொடங்கினாள்.

உடனே சாட்டையடி சாமியார் சிறிதும் தயங்காமல் தென்னை மரத்தின் மீது ஏறத் தொடங்கினார் .இதைபார்த்த அந்த இரண்டு குடும்பத்தார்களுக்கும் மேலும் பயம் அதிகரித்தது சாமியார் மரத்தின் மீது ஏறி அந்தப் பேய் இருக்கும் இடத்திற்கு செல்கிறாரே அவர்கள் ஜன்னல் வழியாக சாமியாரை தென்னை மரத்தின் மீதுஏறுவதை பார்த்து நடுங்கினார்கள்.

இதோ வருகிறேன் என்னிடமா உன் சிரிப்பு வேலையை காட்டுகிறாய் இதோ வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு சாட்டையடி சாமியார் தென்னை மரத்தின் உச்சியில் ஏறி சாட்டையால் ரெண்டு அடி அடிப்பதைப் போல அடித்து அங்கே மறைத்து வைத்திருக்கும் தனது செல்போனை எடுத்து யாருக்கும் தெரியாமல் சுட்ச் ஆஃப் செய்துவிட்டு தனது இடுப்பில் வைத்துக்கொண்டு இறங்கினார்

மரத்தை விட்டு இறங்கியதும் இடதுகையால் கையை உயர்த்தி யாரையே தலைமுடி பிடித்து இருப்பதைப்போல கையை வைத்துக்கொண்டு சாட்டையால் அடிப்பது போல அடித்துக் கொண்டே வந்தார் .இனிமேல் இங்கு வந்த உன்னை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன் இதுதான் இந்த ஊரில் உனக்கு கடைசி நாள் இனிமே இந்த ஊர் பக்கமே நீ வரக்கூடாது என்று குரல் உயர்த்தி ஆக்ரோஷமாக சொல்லியபடியே சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தார்.

பிறகு கொஞ்சம் தூரம் ஓடி அந்தப் பேயை விரட்டி விட்டது போல திரும்பி வந்தார் .

அந்த குடும்பத்தாரை அவர்களை வெளியே வரச் சொன்னார் அவர்களும் நடுங்கிக் கொண்டே வந்தார்கள் .

இனிமேல் உங்களுக்கு இந்தப் பேய் தொல்லை கொடுக்காது அதை நான் தூரத்தில் விரட்டி விட்டேன் நீங்கள் நிம்மதியாக இருங்கள் என்று சொன்னார் .

அந்த கூலித்தொழிலாளி நண்பர்களும் .........அப்படியே சாமி ரொம்ப சந்தோஷம் இனிமேல் அந்த பேய் பிடிக்காத .

நீங்கள் இன்று இரவு முழுக்க நிம்மதியாக தூங்குங்கள் ஒருவேளை அந்த பேய் சிரித்தாள் அந்த மீதி பணத்தை எனக்கு நீங்கள் தர வேண்டாம் நான் நாளைக்கு வந்து அந்தப் பேயை விரட்டி விடுகிறேன் அப்படி அந்தப் பேய் இன்று இரவு உங்களை பயமுறுத்தவில்லை என்றால் காலையில் என் சிஷ்யர்களிடம் மீதி பணத்தை கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு சாமியார் தனது சிஷ்யனை அழைத்துக்கொண்டு புறப்பட்டார் .

அந்த கூலித் தொழிலாளிகளும் சற்று தைரியத்தோடு இனி இங்கு பேய் இல்லை ஓடி விட்டது என்ற நம்பிக்கையில் வீட்டுக்குள் அமைதியாக உறங்க தொடங்கினர் பொழுதும் விடிந்தது.

அந்தக் கூலித்தொழிலாளியின் நண்பர்களுக்கு பெரும் சந்தோஷம் அதேசமயம் சாமியாரின் மீதும் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது . இப்படி ஒரு சாமியார் நம்மூரில் இருப்பது நமக்கெல்லாம் பெருமை என்று பேசிக்கொண்டார்கள்.

இவ்வளவுநேரம் சிரித்துக் கொண்டிருந்தது செல்போனின் ரிங்டோன் பேய் சிரிப்பது போல ரிங்டோன் வைத்துக்கொண்டு அதை பயப்படும்படியான இடத்தில் மறைத்து வைத்துவிட்டு சாட்டையடி சாமியார் தனது பூஜை அறையில் இருந்து கொண்டு . அந்த செல்போனுக்கு போன் செய்வார் அந்த செல்போன் ரிங்டோன் பேய் சிரிப்பது போல ரிங்டோன் இதை அக்கம்பக்கத்தினர் கேட்டு இங்கு பேய் இருக்கிறது என்று பயப்படுவார்கள் . பிறகு சாமியாரிடம் சொல்வார்கள் சாட்டையடி சாமியாரும் பேய் விரட்டுவது போல சென்று செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்டு வந்துவடுவார் . இவர் பேயை விரட்டுவதற்காக வரும்பொழுது ஒரு சிஷ்யனை மட்டும் அழைத்து வருவார் மற்றொரு சிஷ்யனை பூஜை அறையில் இருந்து மறைத்து வைத்திருக்கும் அந்த செல்போனுக்கு கால் செய்யும்படி சொல்லிவிட்டு வந்துவிடுவார் .

இப்படித்தான் இந்த மூன்று பேரும் இந்த ஊரையே பயமுறுத்தி தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு ஏமாற்றி வருகிறார்கள் . இது தெரியாமல் அந்த ஊர் மக்கள் இவர் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் இவர்கள் எதர்ச்சியாக சொல்லும் வார்த்தைகள் பலித்துவிடும் . இது அவர்களுக்கு சாதகமாகி விடும் இப்படித்தான் இந்த சாட்டையடி சாமியார் இந்த ஊரில் பிழைப்பு நடத்தி வருகிறார்.

ஒரு பக்கம் பண்ணையார் தோட்டத்தில் காணாமல் போனவர்கள் மர்மம் நீடித்துக் கொண்டு இருக்கும் வேளையில் சாட்டையடி சாமியாரின் தந்திர வேலையும் அந்த ஊரில் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது.

தந்திர வேலை எத்தனை நாளைக்கு என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.



தொடரும்......
 

Latest posts

New Threads

Top Bottom