Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பண்ணையார் தோட்டம் - Full Story

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
ரேகா வழக்கம்போல அதிகாலையில் எழுந்து தனது புகுந்த வீட்டையும் பிறகு எதிரே இருக்கும் தனது தாய் வீட்டையும் வழக்கம்போல சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.

ரேகாவுக்கு தான் நெஞ்சுக்குள்ளே யாரிடமும் சொல்லாமல் மனசுக்குள்ளே காதல் செய்துவந்த சங்கரை திருமணம் செய்துகொண்டார் சந்தோசத்தில் இந்த உலகமே தன் கைக்குள் அடங்கி விட்டது போல ஒரு உணர்வு ரொம்ப சந்தோஷமாக இருந்தாள்.

திருமணம் நடந்த பிறகு .....சங்கருக்கு கண் விழித்த உடனே தனது மனைவியான ரேகாவை கட்டியணைத்து முத்தம் கொடுத்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்பார் . இப்படி சங்கர் ரேகாவும் திருமணம் முடிந்த பிறகுதான் அவர்கள் காதலிக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள் . இதற்கு முன்னாடி இருவரும் கண்களால் மட்டும் தான் பேசிக்கொண்டு இருந்தார்கள் .இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று தெரிந்த பிறகு தான் பேச ஆரம்பித்தார்கள். அதனால் இவர்களின் காதல் மயக்கம் இப்போது தான் ஆரம்பிக்கிறது இருவரும் கணவன் மனைவி போல தெரியவில்லை. காதலர்கள் போல கொஞ்சி கிட்டும் சிரித்துக் கொண்டும் எந்த ஒரு கவலையும் இல்லாமல் சந்தோஷமாக நாட்களை கடந்து கொண்டிருந்தார்கள்

ஒரு நாள் ரேகா வழக்கம்போல முத்தையாவுக்கு சிறிது சாதம் கொண்டு வந்து கொடுத்து சாப்பிடுங்க தாத்தா என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் வெளியே வந்து பார்த்தால் முத்தையா சாப்பாட்டை சாப்பிடாமல் கவலையோடு உட்கார்ந்திருந்தார் . அப்பொழுது ரேகாவுக்கு சிறிது கவலை ஏற்பட்டது என்ன தாத்தா சாப்பிடாம இருக்காரு நம்ம மேல ஏதாச்சும் கோவமா நான் ஏதாச்சும் தப்பா நடந்துக் கிட்டேனா என்னன்னு தெரியலையே என்று சற்று லேசாக பதறிப் போனாள் எப்போதுமே சாப்பாடு கொடுத்தால் உடனே சாப்பிட்டு விடுவார் நேற்று பாதி சாப்பாடு வச்சுட்டாங்க இன்னிக்கி சாப்பிடாமலே இருக்காரே என்று கவலையோடு உள்ளே சென்று தனது கணவன் சங்கரிடம் கூறினால்

உங்க அப்பா நேற்றிலிருந்து சரியாக சாப்பிட லங்க எனக்கு என்னமோ பயமா இருக்கு என் மேலே ஏதாச்சும் கோவமா எனக்கு தெரியல நீங்க போயிட்டு என்னன்னு கேளுங்க என்று ரேகா சொன்னாள். சங்கர் உடனே எழுந்து வந்து வெளியில் திண்ணையில் அமர்ந்து இருக்கும் தனது தந்தையை பார்த்தான்.

கை கால் தலை அனைத்தையும் ஒன்று சேர்த்த தை போல ஒடுங்கிக் கொண்டு தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார் முத்தையா.

தோல் சுருங்கி இருக்கும் முத்தையாவின் கைகளை .சங்கர் தன் கைகளால் அழுத்தமாக பிடித்து தனது கன்னத்தில் வைத்துக் கொண்டான் பாசமாய்.

என்னப்பா .......என்ன ஆச்சு நேத்துக்கூட சாப்பாடு சரியா சாப்பிடலாமே உடம்புக்கு முடியலையா . வாங்கப்பா வைத்தியர் கிட்ட போகலாம் என்று பாசத்தோடு பொறுமையாக கேட்டான் சங்கர்.

பொறுமையாக தலைநிமிர்ந்து சங்கரை பார்த்து. உடம்பு நல்லாத்தான் இருக்கு மனசுதான் சரி இல்லை என்று சற்று கவலையோடு முத்தையா சொன்னார்.

தாத்தா உங்களுக்கு என்ன கவலை தாத்தா எதுவாக இருந்தாலும் என்கிட்ட மறைக்காமல் சொல்லி விடுவீர்கள் ஆனா. இப்போ உங்க மனசுல இருக்குற கவலையை மட்டும்ஏன் என்கிட்ட சொல்லாம இப்படி நீங்களே கவலைப்பட்டுக்கிட்டு சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும் தாத்தா . என்று ரேகா முத்தையாவின் தலையைத் தடவி விட்டுக் கொண்டே கேட்டாள் .

யாருகிட்ட சொன்னாலும் என் கவலை போகாதம்மா அதனாலதான் நான் உன் கிட்ட சொல்லல.

அப்படி என்ன கவலை சொல்லு தாத்தா.

எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். நம்ம பண்ணையார் தோட்டம் இப்போ பராமரிப்பில்லாமல் வெயில்ல விவசாயம் எல்லாம் காஞ்சி போச்சு அதனால பண்ணையார் மனசு ரொம்ப கவலைப் படுது அவருக்கு வருமானம் கிடைக்கவில்லை என்பதற்காக கவலைப்படவில்லை .தனது தோட்டம் இதுநாள் வரைக்கும் இதுபோல நிலைமை வந்ததே கிடையாது அதை எண்ணி பண்ணையாரு ரொம்ப கவலைப் படுகிறார் என்கிட்ட சொல்லி . மற்றவர்களைப் போல நானும் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்க முடியாது ஏன்னா பண்ணையார் தோட்டம் இந்த அளவுக்கு செழிப்பா வளர்ந்ததற்கு காரணம் நானும் பண்ணையாரும் மட்டும்தான் .அந்த காலத்துல நாங்க எப்படி கஷ்டப்பட்டு அந்த நிலத்தை பராமரித்து வந்தோம் தெரியுமா ஆனா இன்னிக்கி . யாரோ செய்த சதியால் இப்படிப்பட்ட பண்ணையார் தோட்டம் இன்னைக்கு வீணாகும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு .ஊர் மக்களுக்கு எல்லாம் வேலை இல்லை என்ற வருத்தம் மட்டும் தான் அவங்களுக்கு இருக்கு . ஆனா நானும் பண்ணையாரும் சேர்ந்து வளர்த்த தோட்டம் இன்னிக்கி வீணா போகுது என்பது நெனச்ச என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்குமா . இதேபோல இன்னும் கொஞ்ச நாள் தோட்டம் காஞ்சிகிட்ட போச்சுன்னா பண்ணையாரை உயிரோடு பார்க்க முடியாது. அவனை பத்தி எனக்கு நல்லா தெரியும் அவனுக்கு இந்த பண்ணையார் தோட்டமும் இந்த ஊர் மக்களும் தான் அவன் மூச்சு .இப்போ ரெண்டுக்குமே பாதிப்பு ஏற்பட்டு இருக்கு . இதுக்கு ஒரு நல்ல முடிவு ஏற்பட இல்லனா கொஞ்ச நாள்ல என் நண்பனை நான் இழந்து விடுவேன் என்று கண்ணீர் மல்க முத்தையா உருக்கமாக சங்கர் இடமும் ரேகாவிடம் கண்கலங்கியபடி சொன்னார்.

கஷ்டப்பட்டு உருவாக்கிய தோட்டம் வீணாக போகுது என்பதை எண்ணி தாத்தா வருத்தப்படுகிறார் என்பதை உணர்ந்தால் ரேகா.

தனது உயிருக்குயிரான நண்பனுக்கு ஏதாச்சும் நடந்துவிடுமோ என்ற பயத்தில் அப்பா சரியாக சாப்பிடவில்லை என்பதை புரிந்து கொண்ட சங்கம் பிறகு முத்தையாவுக்கு ஆறுதலாக சொன்னான்.

நீங்கள் ஒன்றும் கவலை படவேண்டாம் அப்பா ....நான் என் நண்பர்களை அழைத்துக்கொண்டு பண்ணையர் தோட்ட வேலைக்கு செல்கிறேன் .எங்களால் முடிந்தவரை தோட்டங்களை வீணாக போகாமல் பார்த்துக் கொள்கிறேன். பிறகு ஊர்மக்களும் பயம் தெளிந்து எங்களைப் பார்த்து ஒவ்வொருவராக வேலைக்கு வருவார்கள் பிறகு பண்ணையார்தோட்டம் எப்போதும்போல செழிப்பாக வளர ஆரம்பித்துவிடும் . நீங்கள் கவலைப்படாமல் இப்பொழுது சாப்பிடுங்கள் என்று சங்கர் முத்தையாவின் கைகளை மீண்டும் இருக்கமாக பிடித்து அன்போடு சொன்னான்.

மகனின் பேச்சைக் கேட்டதும் முத்தையாவுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது மகன் சொல்வது போல அவன் நண்பர்களோடு பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றால் . பிறகு ஊர் மக்கள் ஒவ்வொருவராக வேலைக்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை அவர் மனதில் ஏற்பட்டது பிறகு கண்களைத் துடைத்துக்கொண்டு சாப்பிடுவதற்கு தொடங்கினார்.

முத்தையா சாப்பிடுவதைப் பார்த்த சங்கருக்கும் மிகவும் சந்தோசம் ஏற்பட்டது பிறகு இருவரும் உள்ளே சென்று கட்டில் மீது அமர்ந்தபடி பேசிக் கொண்டார்கள்.

இந்த வயசுலேயும் .....நண்பருக்கு ஒண்ணுன்னா அவர் மனசு துடிக்குது இவர்களைப் போல பாசமான நண்பர்கள் எங்கேயுமே இருக்க மாட்டாங்க என்று ரேகா சங்கரிடம் சொன்னார்.

எங்க அப்பா நெனச்சா பண்ணையார் ஓட நிலத்தை பாதி வாங்கிட்டு இருப்பார் . அந்த அளவுக்கு பண்ணையாருக்கு எங்க அப்பா மேல பாசம் ஆனா இது வரைக்கும் எங்க அப்பா இந்த ஊர் மக்களோடு மக்களாய் தான் பண்ணையார் ஓட பழகிக் கொண்டு வரார் . பண்ணையார் நம்ம நண்பன் தானே என்று நினைத்து . பண உதவியோ பொருள் உதவியோ எங்கப்பா வாங்கி இருந்தால் . இந்த ஊர் மக்கள் எல்லாம் எங்க அப்பாவைப் பார்த்து பயந்து இருப்பாங்க . ஏன்ன இவர் பண்ணையார்ரோட நண்பர் .இவர் எதை கேட்டாலும் பண்ணையார் கொடுப்பாரு என்ன சொன்னாலும் கேட்பாரு . என்ற பயம் இந்த ஊர் மக்களுக்கு இருந்திருக்கும் பண்ணையாருக்கு கொடுக்கிற மரியாதையை போலவே எங்க அப்பாவுக்கும் இந்த ஊர் மக்கள் கொடுத்திருப்பாங்க ஆனா எங்க அப்பா பண்ணையார் உயிர் நண்பனாக மட்டும்தான் பார்த்தாரு அவர்கிட்ட இருந்து எந்த ஒரு பொருளையும் பணமும் இதுவரைக்கும் அவர் வாங்கியது கிடையாது . ஆரம்ப காலத்துல பண்ணையார் அவங்க அப்பா அம்மா இல்லாம தனியா தவித்தபோது . எங்க அப்பாதான் அவருக்கு தோள் கொடுத்து இந்தப் பண்ணையார் தோட்டத்தை இவ்வளவு பசுமையாக வளர பாடுபட்டார் . அதனால பண்ணையாருக்கு எங்க அப்பா மேல தனி மரியாதை இருக்கிறது இந்த ஊர் மக்களுக்கும் எங்க அப்பா மேல தனி மரியாதை இருக்குது ஏன்னா முத்தையா நெனச்சா வசதியா பண்ணையார் போல வாழ்ந்து இருக்கலாம் . ஆனால் அவர் நம்மை போல கூலித்தொழிலாளி யகவே நம்மோடு ஒற்றுமையாக வாழ்ந்து இருக்காரு .அதை நினைச்சு இந்த ஊர் மக்கள் என் அப்பாவுக்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள் . இப்படி பாசத்தில் பணம் பொருளை சேர்க்காமல் சுத்தமான நட்பை மட்டும் வச்சு பழகுற பண்ணையாரும் எங்கப்பாவும் இந்த ஊருக்கு பெரிய மனுஷங்க ... உனக்கு புத்தி தெரிஞ்ச வரைக்கும் கொஞ்சம் தான் தெரியும் ஆனா ஆரம்பத்துல எப்படி இருந்தாங்க என்று உனக்குத் தெரியாது உங்க அம்மா சொல்லி இருப்பாங்க எனக்கும் .இந்த ஊர் மக்கள் சொல்லித்தான் தெரியும் எங்க அப்பா அவரோட பெருந்தன்மையை இதுவரைக்கும் என்கிட்ட சொன்னதே கிடையாது இப்படி நண்பன் மீது பாசத்தோடு இருக்கிறார் அதனால தான் அவங்க நட்பு வயசானாலும் இன்னும் பாசம் குறை யலை .என்று சங்கர் ரேகா விடும் சொன்னான்.

எந்த ஒரு உற்சாகமின்றி சோர்வாக பரந்தாமனும் அவனது தம்பிகளும் மூவரும் வழக்கம் போல ஒரே பைக்கில் தோட்டத்திற்கு கிளம்பினார்கள்.

தோட்டம் எல்லாம் காய்ந்து கிடப்பதை பார்த்து பரந்தாமன் மனம் தீயாய் கொதித்தது . இனி நமக்கு வருமானம் குறைவு தான் பம்புசெட்டில் தனது தாயின் படத்திற்கு பின்னால் சேர்த்து வைத்திருக்கும் பணம் இனி குறைந்துகொண்டே வரப்போகுது செலவுக்கு அந்தப் பணத்தில் இருந்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும் வேறு வழியில்லை என்று நினைத்து கவலையோடு பைக்கை ஓட்டி வந்தான் பரந்தாமன். பிறகு பைக்கை வழக்கமாக நிறுத்தும் களத்துமேட்டில் நிறுத்திவிட்டு மூவரும் நடந்து வந்தார்கள் .பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசுமையாக காட்சியளித்த பண்ணையார் தோட்டம் அன்று காய்ந்துபோய் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது பரந்தாமனுக்கு கவலை மேலும் அதிகமானது . பிறகு பம்புசெட்டில் அருகே மூவரும் வந்து சேர்ந்தார்கள்

அப்போது அந்த தென்னை மரத்து நிழல் பலா மரத்தின் நியல் அவர்களுக்கு குளு குளு குளுவென இருந்தது காற்றோட்டமாக .பக்கத்தில் இருக்கும் கிணற்றின் தடுப்பு சுவர் மீது மூவரும் அமர்ந்தார்கள் .

அப்போது சந்திரனுக்கும் தினாவுக்கும் பம்பு செட்டில் கனகாவை கற்பழித்ததை நினைத்து பார்த்தார்கள் . கனகா தனது இரு கைகளால் கும்பிட்டு என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சி எதை நினைத்துப் பார்த்தார்கள் கனகா சொன்னதைப்போல அன்று நாம் தவறு செய்யவில்லை என்றால் இன்னைக்கு நமது தோட்டம் இப்படி வீணாக போயிரக்காது பாவம் அவள் வாழ்க்கையும் வீணா போச்சு நம்ம வாழ்க்கையும் வீணா போச்சு அண்ணன் அப்பாவும் கவலையோடு இருக்கிறார்கள் தோட்டமும் வீணா போச்சு இப்படி எல்லாத்துக்கும் நாம் காரணமாகி விட்டோமே என்று சந்திரனும் தீனாவும் நடந்ததை எண்ணி பெரும் சோகத்தில் அழுதார்கள்.

தம்பிகளை தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு வாங்கள் என்று சொல்வதற்கும் பரந்தாமனுக்கு மனம் இல்லை . ஏனென்றால் தோட்டம் எல்லாம் வீணாக தானே போய்க்கொண்டு இருக்கிறது அதனால் இவர்கள் இங்கேயே இருக்கட்டும் என்று மனதோடு நினைத்துக்கொண்டான் . அவனுக்கு தனது பம்புசட்டில் இரண்டாவது அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் பின்னால் இருக்கும் பணத்தை பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்து தம்பிகளிடம் நான் அம்மா படத்தின் முன்புவணங்கி விட்டு வருகிறேன் நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள் என்று சொல்லிவிட்டு பரந்தாமன் எழுந்து சென்றான்.

தீனாவுக்கு கனகாவை கற்பழித்ததை நினைத்து வெட்கப்பட்டான் சந்திரன் முகத்தை பார்ப்பதற்கே அவனுக்கு வெட்கமாக இருந்தது மதுபோதையில் பெரிய தவறு செய்து விட்டோம் என்று மனதில் நினைத்துக்கொண்டு சந்திரனே கையைப் பிடித்தான்.

என்னை மன்னித்துவிடு அண்ணா உன் திருமணம் நின்று போவதற்கு நானும் காரணம் ஆகி விட்டேன் இனி நான் எந்த தவறையும் செய்யப்போவதில்லை குடிப்பதை கூட நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன் என்று உருக்கமாக தீனா சொன்னான்.

நானும் இனி குடிக்கப் போவதில்லை யார் குடும்பத்தையும் கிடைக்கப்போவதில்லை இனி அண்ணனுக்கு நம்மால் எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது நாம் செய்த தவறால் அண்ணன் தலை குனிந்து நிற்கிறார் நாம் கனகா மீது ஆசைப்பட்ட காரணத்தினால் அண்ணன் தவறு என்று தெரிந்தும் கனகாவை கற்பழிக்க சம்மதித்தார் அவர் நம்மீது பாசத்தில் அப்படிப்பட்ட தவறை செய்து வீட்டார் . ஆனால் நம் இனி இதுபோன்ற தவறை செய்யக்கூடாது . அண்ணனுக்கும்எந்த தர்மசங்கடத்தை யும் நாம் ஏற்படுத்தக்கூடாது என்று சந்திரன் உருக்கமாக தீணாவிடம் சொன்னான் எப்படி இருவரும் மனம் திறந்து பேசிக்கொண்டு. திருந்துவதற்கு தயாரானார்கள்.

பரந்தாமன் பம்புசெட்டில் இரண்டாவதுஅறையில் இருக்கும் தனது தாய் படத்தின் பின்னால் இருக்கும் பணத்தை சரி பார்த்துவிட்டு பிறகு தாய் படத்தின் முன்னால் நின்று மௌனமாக வேண்டினான்.

அம்மா நான் வேண்டியது போல எனக்கு நீ துணையாய் நின்றய் நான் நினைத்ததை முடித்து விட்டேன். எப்படியோ ஒரு வகையில் தம்பி திருமணத்தை நிறுத்தி விட்டேன் ஆனால் என்னுடைய நோக்கம் விவசாயத்தில் கிடைக்கும் லாபத்தை நான் ஒருவனே அனுபவிக்க வேண்டும் அது உனக்கே தெரியும் .அதனால்தான் தம்பியின் திருமணத்தை நான் சூழ்ச்சி செய்து நிறுத்தினேன் . நான் அப்பாவுக்கு என் மனைவிக்கும் தெரியாமல் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை எல்லாம் உன் படத்தின் பின்னாலேயே சேர்த்து வைத்திருக்கிறேன் . இனி விவசாயத்தில் எனக்கு லாபம் வருமா என்ற சந்தேகம் வந்துவிட்டது . தாயே அதனால் எப்போதும் போல நீ என் கூட இருந்து என் எண்ணங்களுக்கு நீ தான் உதவி செய்ய வேண்டும் நான் செய்வது உனக்கு தவறு என்று நல்லாவே தெரியும் . இருந்தாலும் நீ என் மீது உள்ள பாசத்தில் எனக்கு நீ துணையாய் நிற்பாய் என்பதும் எனக்குத் தெரியும் எத்தனையோ பிரச்சனைகளில் இருந்து நீ என்னை விடுவித்துக் கொண்டு வருகிறாய் அதே போல இந்த பிரச்சினைக்கும் நீதான் என்னை விடுவிக்கவேண்டும் எப்போதும் போல நம் தோட்டம் செழிப்பாக வளர வேண்டும் என்று தனது தாயிடம் பரந்தாமன் . தீய செயலுக்கு துணை நிற்க வேண்டும் என்று . வேண்டிக் கொண்டு வெளியே வந்தான்

வெளியே வந்ததும் அவன் முகம் லேசாக மலரத் தொடங்கியது காரணம். சங்கர் அவனது நண்பர்களுடன் வேலைக்கு வருவதை பார்த்தான் பரந்தாமன்.

ஐயா நாங்க பதினைந்து பேர் இருக்கும் இன்னைக்கு முடிஞ்சவரை தோட்டத்தை தண்ணி பாச்சி பராமரிக்கிறோம் என்று சங்கர் சொன்னான்.

இதைக் கேட்டதும் பரந்தாமனுக்கு சந்தோசம் முகத்தில் மலரத் தொடங்கியது.

நீங்க வேலைக்கு வந்ததில்ல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் நாளைக்கும் வருவீங்களா என்று பரந்தாமன் சங்கரை பார்த்து கேட்டான்.

இனி தினமும் நாங்கள் தோட்டத்திற்கு வேலைக்கு வருவோம் நாங்கள் இனி யாருக்கும் பயப்பட மாட்டோம் என்று சங்கர் ஆணித்தரமாக சொன்னான்.

கிணற்று தடுப்பு சுவர் மீது அமர்ந்திருந்த சந்திரனுக்கும் தினாவுக்கும் சற்று லேசான சந்தோசம் ஏற்பட்டது. உடனே எழுந்து ஓடிவந்து சங்கரின் நண்பர்களின் . கைப்பிடித்து நாங்கள் உங்களை நம்பி தான் இருக்கிறோம் இனி இந்த ஊருக்கு நல்லதே நடக்கும் நீங்கள் பயப்படாமல் வேலை செய்யுங்கள் என்று சந்திரனும் தீனாவும் சங்கருக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் தைரியத்தை சொன்னார்கள்.

ஊரே வந்து பண்ணையார் தோட்டத்தில் வேலை செய்வார்கள் அந்த அளவுக்கு பண்ணையார் தோட்டத்தில் வேலை இருக்கும் அவ்வளவு நிலத்தை 15 பேர் வேலை செய்து சரி செய்ய முடியாது.என்பது பரந்தாமனுக்கு ம் சந்திரனுக்கும் சீனவுக்கும் தெரியும் இருந்தாலும் மெல்ல மெல்ல மற்றவர்கள் வேலைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில் சந்தோசமாக சங்கரும் அவனுடைய நண்பர்களும் தோட்டத்தில் வேலை செய்யும் அழகை பார்த்து ரசித்தபடி நின்றார்கள். பண்ணையார் மகன்கள்.



பரந்தாமன் தனது சுயநலத்துக்காக ஒவ்வொரு தவறாக அடுக்கடுக்காக செய்து கொண்டு வருவதும் பிறகு அதிலிருந்து அவன் மீண்டு வருவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது இப்பொழுதும் அவன் நினைத்தபடி தம்பியின் திருமணத்தை நிறுத்தி விட்டான் விவசாயமும் இனி மெல்ல மெல்ல வளரத் தொடங்கும்.

சந்திரனும் தீனாவும் ....இனி எந்தத் தவறையும் செய்ய மாட்டோம் என்று உறுதியோடு இருக்கிறார்கள். ஆனால் அவன் அண்ணன் செய்யும் சூழ்ச்சியில் இனி சிக்காமல் அவர்களால் இருக்க முடியுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.....



தொடரும்.....​
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
மாமா ....மாமா... என்று குரல் கொடுத்தபடி பரந்தாமனின் மனைவி சிரித்துக்கொண்டே உற்சாகமாக பண்ணையாரை நோக்கிச் சென்றாள்.

என்ன மருமகள் இவ்வளவு சந்தோஷமாக வருகிறாரலே என்ன விஷயமாக இருக்கும் . என்ற எதிர்பார்ப்போடு பண்ணையார் வாம்மா நான் இங்கேதான் இருக்கேன் என்றார்.

நான் தான் சொன்னேன் இல்ல. உங்க நண்பர் வீட்டு திருமணம் முடிந்ததும் ஒரு திருப்பம் ஏற்படும் என்று . அதே போல நடந்திருச்சு பாருங்க என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் பரந்தாமன் மனைவி.

என்னம்மா சொல்ற அப்படின்னா காணாமல் போன ரெண்டு குடும்பமும் வந்துட்டாங்களா என்றார் பண்ணையார்.

அவங்க வரல மாமா ...நம்ம விவசாய தோட்டத்துக்கு உங்க நண்பரோட மகன் சங்கர் .அவரோட நண்பர்கள் எல்லாம் வேலைக்கு வந்து இருக்காங்களா இப்பத்தான் உங்க பெரியபிள்ளை என்கிட்ட சொன்னார் இதை கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா . நம்ம தோட்டம் இப்படியே வீணாக போய்விடுமோ என்று எனக்கு ரொம்ப பயமா இருந்தது . அவரும் ரொம்ப பயப்பட்டார். ஆனா இப்போ வேலைக்கு ஆட்கள் வந்திருப்பதை நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா . இப்படி நம்மளோட கஷ்டம் ஒன்னொன்னா தீர்ந்து கிட்டே வரும். நீங்க பாருங்களேன் இன்னும் கொஞ்ச நாள்ல .காணாமல் போனவர்களும் கிடைக்கத்தான் போறாங்க பாருங்க உங்க நண்பர் வீட்டு திருமணம் முடிஞ்சிடுச்சு இனிமே நமக்கு நல்ல காலம்தான் மாமா. நம்ம சந்திரன் திருமணமும் நடக்கத்தான் போகுது என்று சந்தோசமாக சொன்னாள்.

என் நண்பனுக்கு எப்போதுமே தோட்டத்து மேலதான் அக்கறை அவனுக்கு . எனக்கு ஊர்மக்கள் மேல தான் அக்கறை. இந்த விவசாயம் செய்வது ஒன்றும் எனக்கு ரொம்ப சந்தோசம் கிடையாது ஊர் மக்களுக்காக தான் இதை நான் செய்யறேன் அவங்க நல்லதுக்காக தான் பொறுப்போடு செய்து வருகிறேன். நம் குடும்பத்தின் கடமையாக நினைக்கிறேன் . ரெண்டு குடும்பம் காணாமல் போனது தான் எனக்கு பெரிய வருத்தம் இந்த விவசாயம் அதை பத்தி எனக்கு கவலை இல்லை காணாமல் போனவர்கள் கிடைச்சிருந்தா எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்திருக்கும் பரவாயில்லை நீ சொல்ற மாதிரி அதுவும் ஒரு நாள் நடந்தா எல்லாரும் சந்தோசமா இருக்கலாம் என்று பண்ணையார் சொன்னார்.

வேலைக்கு யாரும் வர மாட்டோம் என்று ஊரே சொல்லிக்கிட்டு இருந்தது . இப்போ உங்க நண்பர் முயற்சியாள கொஞ்சம் பேர் வேலைக்கு வந்து இருக்காங்க இப்படித்தான் நல்லது கொஞ்சம் கொஞ்சமாக தான் வரும் மாமா . நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க மாமா. நான் உங்கள் பிள்ளைகளுக்கு டீ போடணும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் பரந்தாமனின் மனைவி.

பரந்தாமன். சந்திரன் .தீனா .மூவரும் ஒன்றாக அமர்ந்து மெதுவாகப் பேசிக் கொண்டார்கள்.

எப்படியோ ஊர் மக்கள் வேலைக்கு வந்துட்டாங்க இனிமே நம்ம பொறுப்போடு நடந்து கொல்லனும் இதுக்கு முன்னாடி நம்ம எப்படியோ இருந்தோம் ஆனா இனிமே நம்ம நல்லபடியா நடந்துகிட்டா தான் நம் குடும்பம் நிம்மதியா இருக்கும் இப்போ மெல்ல மெல்ல நம்ம விவசாயம் முன்னேறி வரும் அடுத்தது சந்திரன் திருமணத்தை நடத்த வேண்டியதுதான் என்று பரந்தாமன் தம்பிகளிடம் உணர்ச்சிபூர்வமாக சொன்னான்.

அப்பாதான் காணாமல் போனவர்கள் கிடைச்சா தான் . கல்யாணம்னு சொல்லிட்டாரே அண்ணா என்று சந்திரன் கேட்டான்.

அப்பா இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் அப்படி சொல்லிக்கிட்டு இருப்பாரு அதுக்கப்புறம் அவர் மனசு மாறிவடும் அதுக்கப்புறம் திருமணத்தை ஜாம் ஜாம்னு முடிச்சிடலாம் தம்பி.

எனக்கென்னமோ அப்பா மனசு மாறனும் நம்பிக்கை இல்லை அதனால நம்ம உண்மையாவே இரண்டு குடும்பத்தை தேடி கண்டுபிடிச்சு விட்டாள் . அண்ணன் திருமணத்தை நீங்க சொன்ன மாதிரி நல்லபடியா முடிக்கலாமா அண்ணா என்று தீனா சொன்னான்.

தீனா பேச்சைக் கேட்ட பரந்தாமனுக்கு சற்று எரிச்சலாக இருந்தது . என்ன பேசுற தம்பி . காணாமல் போனவர்களை கண்டுபிடித்து கொடுத்து விட்டாள் . சந்திரன் திருமணம் நடந்து விடுமா . எப்படி நடக்கும் . காணாமல்போன வாங்க வந்து எல்லா உண்மையும் சொல்லிட்டா இந்த ஜென்மத்துல உங்க ரெண்டு பேருக்குமே கல்யாணம் நடக்காது . அதனால காணாம போனவங்க கிடைக்காமல் இருக்கிற வரைக்கும் நமக்கு நல்லது இப்படி முட்டாள்தனமான யோசனையே சொல்லாத என்று பரந்தாமன் சற்று குரல் உயர்த்திப் பேசி நான் தீணாவிடம்.

அண்ணன் திருமணத்தை எப்படியாச்சும் நடத்தலாம் என்ற யோசனையிலேயே எனக்கு இப்படிப்பட்ட யோசனை வந்துடுச்சு என்னை மன்னிச்சிடு அண்ணா என்று தீனா சொன்னான்.

நான் உயிரோடு இருக்கும் வரைக்கும் உங்களுக்கு திருமணமே கிடையாது நீ என்னடான்னா திருமணத்தை எப்படியாச்சும் நடத்தனும் என்ற எண்ணத்தில் இருக்கீங்களா என்று மனதில் நினைத்துக்கொண்டான் பரந்தாமன்.அப்பொழுது என்னங்க என்ற குரல் கேட்டது . மூவரும் திரும்பி பார்த்தார்கள் பரந்தாமனின் மனைவி மூவருக்கும் டி எடுத்து கொண்டு வந்தாள் உடனே மூவரும் ரகசியப் பேச்சை கலைத்துவிட்டு . சிரித்த முகத்தோடு டீயை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தார்கள்.



ஒரு வாரம் கழித்து . ஒவ்வொருவராக பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள் ரேகாவின் அம்மா லட்சுமி அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை அழைத்து . நாமளும் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லலாம் நமக்கு வேறெந்தத் தொழிலும் கிடையாது பண்ணையார்தோட்டத்தை நம்பித்தான் இந்த ஊர் மக்கள் இருக்கிறோம் . யாரோ ஒருவர் செய்த தவறால் நாம் ஏன் பட்டினியக கிடப்பது நாமும் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லலாம் என்று யோசனை சொன்னார் மற்ற பெண்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்கள் பிறகு பண்ணையார் தோட்டத்திற்கு ஊர் மக்களும் திரளாக வேலைக்கு சென்றார்கள்

ஆனால் பண்ணையார் தோட்டத்தில் தான் வேலை இல்லை ஏனென்றால் பம்புசெட்டில் தங்கி வேலை செய்தால்தான் இரவு பகல் என்று பாராமல் தண்ணீர் பாய்க்கமுடியும் நிலத்திற்கு . பம்புசெட்டில் தங்கி வேலை பார்ப்பதற்கு யாருக்கும் விருப்பமில்லை அதனால் சரியாக நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை வேலையும் பாதி பேருக்கு தான் கிடைக்கிறது

இப்படி பண்ணையார் தோட்டம் மெல்ல மெல்ல பசுமையாக மாறி வந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நம்ம சாட்டையடி சாமியாருக்கு ஒரு பயம் ஏற்பட்டது. இந்த ஊருக்கு சோதனைக்கலம் வரப் போகுதுன்னு சொல்லி இருந்தோம் அதேபோல பண்ணையார் ஓட மகன் திருமணம் நின்னுபோச்சு அவரோட விவசாயமும் நின்னு போச்சு நம்ம பேச்சுக்கு இந்த ஊர் மக்கள் ஒரு மதிப்பு கொடுத்து கிட்டு இருந்தாங்க ஆனா இப்போ பண்ணையார் தோட்டத்துக்கு எல்லோரும் வேலைக்கு போறாங்க அப்போ எல்லோரும் சந்தோஷமா இருப்பாங்க நம்ம சொன்ன வார்த்தை பொய்யா ஆகிடுமே என்ன செய்கிறது என்று சிஷ்யர்களிடம் கேட்டான் சாட்டையடி சாமியார்.

அப்படின்னா ...நம்ம ஏற்கனவே திட்டம் போட்டபடி கரும்புத் தோட்டத்துக்கு தீ வச்சிடலாம் குருவே . பற்றி எரியட்டும் அப்பாதான் இந்த ஊர் மக்கள் நம்ம வார்த்தைக்கு கட்டுப்படு வாங்க குருவே என்று ஒரு சிஷ்யன் சொன்னான்.

தீவைக்கிறது என்ன சாதாரண காரியமா டா நீ தீ வைக்கிறது பண்ணையார் பசங்க பாத்துட்டா அவ்வளவுதான் மூன்று பேரும் இந்த ஊரிலேயே தூக்குல தொங்க விட்டுடுவாங்க அதுவும் இந்த சங்கர் இருக்கான் பாரு அவன் பாக்குறதுக்கு தாண்டா சாதாரணமா தெரிவன் அவன் சேத்துலகபடி விளையாடும் போது பார்த்தியா அவன் முதுகுல மூன்றுபேரை தூக்கிகொண்டு வருவான் சேத்துலியே இப்படி விளையாடுவன் நம்ம தான் தீவைத்து எரித்து விட்டோம் என்று தெரிந்தால் அவ்வளவு லேசுல நம்மள விட மாட்டான் . நமக்கு எதிரிகளே நாலு பேரு தன் பண்ணையார் ஓட மூன்று பசங்களும் இந்த சங்கரும் தான் இந்த ஊரிலேயே இவனுங்க நாலு பேரு தான் முரட்டுத்தனமான ஆளுங்க நல்லது செஞ்ச மரியாதை கொடுப்பாங்க . ஆனா நம்மளோட விவகாரம் கண்டி அவனுக்கு தெரிந்தது அதோட நம்ம கதை முடிஞ்சது அதனால ரொம்ப அவசரப்படக்கூடாது சிஷ்யா கொஞ்சம் நிதானமா தான் இதை கையாள வேண்டும் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் நமக்கு சாதகமா ஏதாச்சும் கிடைக்கும் அந்த நேரம் பார்த்து கரும்பு தோட்டத்திற்கு தீவைக்கலாமா இல்ல இந்த ஊருக்கே தீ வைக்கலாமா என்று அப்புறம் முடிவு பண்ணலாம் என்று சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களிடம் சொன்னார்.

நம்ம மாட்டிக்கிட்டா கண்டிஷனா சொல்லலாம் குருவே நீங்கள் எல்லாம் எங்களை அடிக்கக் கூடாது சட்டப்படி குற்றம் அதனால எங்கள போலீசிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று சொல்லலாம் குருவே . எப்படி என்னோட ஐடியா

போலீஸிடம் ....குரு தான் தீ வைக்கச் சொன்னார் என்று சொல்லிட்டு நீ தப்பித்து விடலாம் என்று பார்க்கிறியா . அது தாண்டா நடக்காது எது நடந்தாலும் நம்ம மூணு பேருக்குமே நடக்கும் . அதனால தப்பிக்கிர ஐடியாவை விட்டுட்டு பொழப்ப பாருங்கடா என்று சாட்டையடி சாமியார் எரிச்சலாய் சொன்னார்.

ஒரு நாள் முத்தையா சங்கரை அழத்து நமது ஊர் மக்களை எல்லோரையும் இன்று இரவு நமது வீட்டிற்கு வரச் சொல் . ஒரு முக்கியமான முடிவு செய்ய வேண்டும் என்று சொன்னார் சங்கரும் ஒவ்வொரு வீடாக சென்று இன்று இரவு அப்பா எல்லோரையும் வரச் சொல்லி இருக்காரு ஏதோ ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டுமாம் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு வந்தான் சங்கர்

அப்போது எல்லோரும் என்ன முடிவாக இருக்கும் என்று முணுமுணுத்தார்கள் . முத்தையா எதை செய்தாலும் இந்த ஊர் நன்மைக்காகத்தான் இருக்கும் அதனால் இன்று இரவு எல்லோரும் முத்தையா வீட்டிற்கு சென்று என்ன முடிவு சொல்கிறார் என்று கேட்கலாம் வாருங்கள் என்று ஊர்மக்கள் முடிவு செய்தார்கள்.



முத்தையா அப்படி என்ன முடிவு எடுக்கப் போகிறார் . இந்த முடிவினால் யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்......





தொடரும்........​
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
இரவு நேரம் ஆனது ஒவ்வொருவராக முத்தையா வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். முத்தையா எதற்காக எல்லோரையும் வரச்சொன்னார் என்று தெரியாமல் எல்லோரும் புரியாமல் சென்றனர்

பிறகு முத்தையா வீட்டுவாசல் ஊர் மக்களால் நிரம்பியது கூட்டத்தில் ஒவ்வொருவராக முணுமுணுக்க ஆரம்பித்தார்கள் எதற்காக இருக்கும். என் முத்தையா அனைவரையும் வரச் சொன்னார் என்று முணுமுணுத்தனர் அந்த சமயத்தில் முத்தையா சர்ட் பட்டனை போட்டபடி முத்தையா வீட்டிலிரந்து மெதுவாக வெளியில் வந்தார் வந்தவர் கூட்டத்தை பார்த்து இருக்கைகளல் கும்பிட்டார் பிறகு அவரும் அவர்களை பார்ப்பது போன்று அமர்ந்தார் சங்கர் ரேகாவும் கூட்டத்தோடு கூட்டமாக இருவரும் ஜோடியாக அமர்ந்தார்கள்.

அப்போது ரேகா மெதுவாக சங்கரிடம் கேட்டாள் தாத்தா எதுக்காக எல்லோரையும் இங்கு வரச் சொன்னாரு உங்களுக்கு ஏதாவது தெரியுமா மாமா என்று சங்கரின் இடதுபுற கையை இருக்கமாக தன் மார்பில் அணைத்தபடி கேட்டாள். எனக்குத் தெரிந்த நீ கேட்கிற வரைக்கும் சும்மா இருப்பேன அந்த விஷயத்தை முதல்ல உன் கிட்ட தானே நான் சொல்லுவேன் . எனக்கே தெரியாது அப்பா எல்லோரையும் வரச் சொல்லி சொன்னாரு நானும் எல்லோரையும் வரச் சொன்னேன் இப்போ எல்லோரும் வந்துட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல அப்பா எல்லோரையும் ஏன் வரச் சொன்னார் என்பது தெரியப்போகுது அதுக்குள்ள என்னடி அவசரம் உனக்கு இன்று செல்லமாய் ரேகாவின் தொடையை கிள்ளி நான் சங்கர்.

முத்தையா முகத்தைத் துடைத்தபடியே மெதுவாக கேட்டார் நீங்க எல்லோரும் பண்ணையார் குடும்பத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க என்று.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் சொன்னார் . இதில் என்ன சந்தேகம் இந்த ஊரு எப்படி உங்களுக்கு மரியாதை கொடுக்கிறதோ அதேபோல பண்ணையாருக்கும் மரியாதை கொடுத்து கிட்டுதான் வருகிறோம் இன்னும் சொல்லப்போனால் பண்ணையார் குடும்பம் இந்த ஊருக்கே கோவில் மாதிரி அவங்க குடும்பத்தினால்தான் நாம் அனைவரும் அன்றாடம் சாப்பிடுகிறோம் என்று ஒரு பெரியவர் சொன்னார்.

அப்படியான ஏன் பண்ணையாரின் தோட்டத்திலுள்ள பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு யாரும் போகவில்லை. என்றார் முத்தையா

முத்தையா அண்ணே உங்களுக்கு எல்லாமே தெரியும் . ஏற்கனவே அங்கு இரண்டு குடும்பம் காணாமல் போயிருக்கங்க அவங்கள பத்தி விவரம் கிடைக்கிற வரைக்கும் நம்ம யாரும் வேலைக்கு போகக் கூடாதுன்னு அன்னிக்கி உங்க தலை மேல தான் பண்ணையார் வீட்டுக்கு போயிட்டு எல்லோரும் சொல்லிட்டு வந்துட்டோம் இப்ப நீங்களே ஏன் வேலைக்கு போக மாட்டேங்கறீங்க என்று கேட்டால் எப்படி அண்ணே ஒன்னும் புரியலையே அண்ணே என்று மற்றொருவர் முத்தையா வை பார்த்து சொன்னார்.

நீங்க சொல்றது எனக்கு புரியுது ஏதோ ஒரு வகையில் இரண்டு குடும்பம் காணாம போச்சு அதையே காரணம் காட்டி ஒட்டுமொத்த ஊரே அந்த வேலைக்கு போகலான. நமக்கு சாப்பாடு எப்படி கிடைக்கும் பண்ணையார் தொடத்தொட வேலையை நம்பித்தான் நாம் எல்லோரும் இருக்கிறோம் ஆனால் இரண்டு குடும்பத்தை காரணம் காட்டி நாம் யாரும் பம்பு செட்டுக்கு தங்கி வேலை செய்யறதுக்கு யாரும் போறதுக்கு பயப்படுகிறோம் இப்படியே பயந்துகட்டே இருந்தா எப்ப தான் ஒரு முடிவுக்கு வராது

சரியா தண்ணி எல்லா நிலத்திற்கும் போகாதது னால எல்லோருக்கும் வேலை கிடைக்கவில்லை கொஞ்சம் பேருக்குத்தான் வேலை கிடைக்குது அதனால யாராச்சும் ஒரு குடும்பம் பம்புசெட்டில் தங்கி வேலை செஞ்சா எல்லோருக்கும் வேலை கிடைக்கும் எல்லோரும் நிம்மதியா இருக்கலாம் அதுக்கப்புறம் ரெண்டு குடும்பத்தை பத்தி நாமே ஒரு முடிவு செய்யலாம் அவஙகளை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று

அப்போது ஒரு பெரியவர் எழுந்து ஐயா என் மகன் என் மருமகள் பண்ணையார் தோட்டத்துக்கு பம்புசெட்டில் தங்கி வேலை செஞ்சாங்க அவங்க திடீர்னு ஒரு நாள் காணாம போயிட்டாங்க நம்மை எல்லோரும் நினைச்சோம் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் எங்கயாச்சும் இருப்பாங்கன்னு எனக்கும் நீங்க எல்லாம் தைரியம் சொன்னீங்க ஆனா இதுவரைக்கும் என் மகனும் என் மருமகளும் கிடைக்கவே இல்ல அதுக்கு அப்புறம் வேலைக்கு வந்த கனகா குடும்பமும் நல்லா தான் குடும்பம் நடத்தி வந்தார்கள் அவங்களுக்குள்ள எந்த ஒரு சண்டையும் சச்சரவும் இருந்ததா யாருக்குமே சந்தேகம் கிடையாது அப்படி அவங்க அழகா குடும்பம் நடத்திட்டு வந்தார்கள் . அவங்களும் என் மகன் குடும்பம் போல திடீர்னு ஒரு நாள் காணாம போயிட்டாங்க இப்படி ஒவ்வொரு குடும்பமா காணாமல் போய் கிட்டே வந்தா நம்ம கதி என்ன ஆகும் . முதல்ல காணாமல்போன குடும்பத்துக்கு ஒரு முடிவு கட்டிட்டு அதுக்கப்புறம் பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதை பத்தி பேசலாம் ஐயா என்றார் ஒரு பெரியவர்.

சரி காணாமல் போனவர்களை பத்தி என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்களேன் என்றார் முத்தையா.

அப்பொழுத ஒரு தொழிலாளி எழுந்து சொன்னார் . ஐயா நம்ம ஊரில் இருக்கும் சாட்டையடி சாமியார் கிட்ட போயிட்டு அவங்க எங்க இருக்கிறாங்க னு கேட்கலாம் அவர் சக்தியில் எங்கு இருக்கிறார்கள் என்று அவர் சொல்லி விடுவார் அதுக்கு அப்புறம் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு தெரியும் என்றார்.

உடனே சங்கர் எழுந்து .... அண்ணே காணாமல்போனவர்களை நம்ம தான் கண்டுபிடிக்கணும் அவங்கள பத்தி நம்மதான் விசாரிச்சு தேடணும் அப்பதான் அவங்க கிடைப்பாங்க சாமி யார் கிட்ட போனா அவங்கள இந்த ஜென்மத்துல கண்டுபிடிக்க முடியாது . ஏதோ பேய் பிசாசு ஒன்னா சாமியார் விரட்டி விடலாம் ஆனால் காணாமல் போனவர்களை எல்லாம் கண்டு பிடிச்சு கொடுத்துட்டார்ன்ன அப்புறம் போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் எதுக்கு என கிண்டலாய் சொன்னான் சங்கர்.

எல்லோருக்குமே பொதுவான பயநதான். நாம பம்புசெட்டில் வேலைக்கு போனா நாம காணாமல் போய் விடுவோம் என்ற பயம் எல்லோருக்குமே வருவது சகஜம் தான் . ஆனால் இப்படியே பயந்துகிட்டு இருந்தா எப்படி . கொஞ்ச நாளுக்கு முன்னாடி பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போறதுக்கு எல்லோரும் பயப்படுவார்கள் . ஆனா என் மகன் சங்கர் அவனுடைய நண்பர்களோடு வேலைக்குச் சென்று வேலை செய்து வந்த பிறகு ஒவ்வொருவராக வேலைக்கு சென்றார்கள். அங்கு இப்போ வேலைக்கு தைரியமாக போறோம் . பொம்பளைங்க எல்லாம் போகாமல் இருந்தாங்க அதையும் நம்ம லட்சுமி அம்மாள் தைரியம் சொல்லி இப்போ எல்லாம் பொம்பளைங்களும் வேலைக்கு போறாங்க இப்போ எல்லோருமே வேலைக்கு போறதுக்கு தைரியம் வந்துச்சு . அதனாலதான் சொல்றேன் பம்புசெட்டு வேலைக்கு யாராச்சும் ஒரு குடும்பம் வேலைக்குப் போனாள் அடுத்தடுத்து ஒவ்வொரு குடும்பமாக பம்புசெட் வேலைக்கு போக தைரியம் வந்துவிடும் . அதனால முதல்ல எல்லோரும் வேலை செஞ்சு நிம்மதியா இருப்போம் அதுக்கு அப்புறம் அந்த ரெண்டு குடும்பத்தை பத்தி ஒரு முடிவு பண்ணுவோம் என்றார் முத்தையா.

இது வரைக்கும் உங்க பேச்சுக்கு நாங்கள் என்னிக்குமே மறுப்பு தெரிவித்தது கிடையாது அதனால நீங்களே ஒரு முடிவு சொல்லுங்கள் என்றார் ஒரு பெரியவர்.

பண்ணையார் என் நெருங்கிய நண்பன் என்பதற்காக நான் இதை சொல்லவில்லை . அதேபோல இந்த ஊர் மக்களும் எனக்கு ரொம்ப முக்கியம் . ஒரு கண் என் நண்பன் என்றால் மறு கண் இந்த ஊர் மக்கள். எனக்கு இரண்டுமே முக்கியம். அதனால் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் யாராச்சும் ஒரு குடும்பம் பம்புசெட் வேலைக்கு செல்ல வேண்டும் அப்படி அங்கு சென்று வேலை செய்து வந்தால் தான் மற்ற பிரச்சனைகளை நம்மாள் ஈஸியாக கையாள முடியும் இல்லை என்றால் வறுமையால் நம் பிரச்சனை மேலும் அதிகரிக்கும் அதனால் யார் பம்புசெட்டு வேலைக்கு செல்லப் போகிறோம் என்று ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றார் முத்தையா.

அனைவரும் மௌனமாக தலை குனிந்து கொண்டார்கள் யாரும் பம்புசெட் வேலைக்கு செல்வதற்கு தைரியம் கிடையாது அனைவரும் மவுனமாக இருந்தார்கள்.

எல்லோரும் மௌனமாக இருந்தால் எப்படி ஏதாச்சும் சொன்னாதனே தெரியும் பம்புசெட் வேலைக்கு செல்ல விருப்பம் இருக்கு இல்லை என்று.

அப்பொழுது ஒரு தொழிலாளி எழுந்து சொன்னார்....... நான் ஒரு யோசனை சொல்கிறேன் நீங்கள் தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது அண்ணே.

நம்ம எல்லோரும் ஒரு நல்ல முடிவை எடுப்பதற்காக தான் இங்கு ஒன்று கூடி இருக்கிறோம் . இதில் தவறாக இருந்தால் திருத்திக் கொள்ளலாம் தைரியமாக சொல்லு தம்பி என்றார் முத்தையா.

பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல எல்லோரும் பயந்துகிட்டு இருந்த சமயத்துல உங்க பிள்ளை சங்கர்தான் எல்லோருக்கும் தைரியத்தை கொடுத்தாரு அவர் முதல் முதல்ல அங்க வேலை செஞ்சிட்டு வந்து மத்தவங்களையும் கூட்டிட்டு போனாரு அதுக்கு அப்புறம் இப்போ ஊரே அங்க தைரியமா வேலை செஞ்சுட்டு வருது அதேபோல பம்புசெட் வேலைக்கும் உங்க பிள்ளை சங்கர் முதல்ல நாலு மாசம் செய்யட்டும் அதுக்கு அப்புறம் என் மகனையும் மருமகளையும் நான் அனுப்பி வைக்கிறேன் அடுத்த நாலு மாசத்துக்கு இன்னொரு குடும்பமும் அனுப்பி வைப்பாங்க இப்படி எல்லோருக்குமே பயம் தெளிந்து விடும் அதனால முதல் நாள் மாசத்துக்கு உங்க மகன் சங்கர் தான் இதை தொடங்கி வைக்கணும் என்று அந்தத் தொழிலாளி சொன்னார்.

முத்தையா மவுனமாக தலை குனிந்தார்.

ரேகாவுக்கு சற்று பயமாக இருந்தது என்ன இப்படி ஒரு முடிவா ஆயிடுச்சு என்ன செய்வது பம்புசெட்டில் வேலைக்கு சென்றல் நானும் என் கணவரும் காணாமல் போய் விடுவோமோ என்ற பயம் ரேகாவுக்கு ஏற்பட்டது.

கூட்டத்தில் ஒருவர் சொன்னார் முத்தையா அண்ணன் தன் மகனை வேலைக்கு அனுப்புவதற்கு தயங்குகிறார் அதனால்தான் தலைகுனிந்தபடி இருக்கிறார் என்று முணுமுணுத்தார்கள்.

இப்படியே மௌனமாக இருந்தால் எப்படி அண்ணே ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று ஒரு தொழிலாளி சொன்னார்.

சங்கர் என் மகனாக மட்டும் இருந்தாள் நான் உடனே பதில் சொல்லி இருப்பேன் ஆனால் அவன் ஒரு பெண்ணுக்கு கணவன் அதனால் அவனும் அவன் மனைவியும் தான் இதற்கு ஒரு பதில் சொல்ல வேண்டும் என்றார் முத்தையா.

சிறிதும் தயங்காமல் சங்கர் எழுந்து நின்று சொன்னான். பம்புசெட் வேலைக்கு நானும் என் மனைவியும் அங்கு தங்கி வேலை செய்கிறோம் நான்கு மாதம் இல்லை . ஒரு வருடம் ஆனாலும் நாங்கள் அங்கு வேலை செய்கிறோம் மற்ற குடும்பத்திற்கு எப்போது தைரியம் வருகிறதோ அது வரைக்கும் நாங்கள் அங்கு வேலை செய்கிறோம் முத்தையாவின் மகன் பயந்தவன் அல்ல என்பதை நான் நிரூபித்துக் காட்டுகிறேன் என்று ஆவேசமாக சொன்னான் சங்கர்.

முத்தையாவின் முகம் மலர்ந்தது எந்த நேரத்திலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டான் நம்மகன் என்று மனதில் நினைத்துக்கொண்டு சொன்னார். நீங்கள் சொன்னதைப் போலவே முதலில் என் மகன் பம்புசெட்டு வேலைக்கு சென்று வேலை செய்து வரட்டும் அடுத்தகட்டமாக காணாமல் போனவர்களைப் பற்றி ஒரு நல்ல முடிவை எடுக்கலாம் என்று சொல்லிவிட்டு அனைவரையும் கைகூப்பி வணங்கிவிட்டு கூட்டத்தை முடித்தார் முத்தையா.

இலட்சுமி அம்மாளுக்கு பயம் மெல்ல மெல்ல அதிகமானது இப்போதுதான் நம் மகளுக்கு திருமணம் நடந்தது இதற்குள் அந்த பம்புசெட்டு வேலைக்கு செல்வது சரிதானா என்ற குழப்பம் ஏற்பட்டது பெரியவரின் சொல்லை மீறவும் முடியாது அவர் தான் நம் மகளுக்கு நல்ல ஒரு வாழ்க்க ஏற்படுத்திக் கொடுத்து இருக்காரு இப்போ அவரே ஒரு மர்மமான வேலைக்கு அனுப்புகிறார் அவருக்கு அவர் மகன் மீது நம்பிக்கை இருக்கிறது நாமும் நம் மருமகன் மீது நம்பிக்கை வைப்பது தான் நல்லது . நம் மருமகனால். இந்த ஊருக்கு ஒரு நல்லது நடந்தால் அது நமக்குத் தானே பெருமை என்று நினைத்து ஆறுதலாக இருந்தாலும் அவள் உள் மனசில் ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வார்களோ என்ற பயம் அவள் உள் மனசில் சொல்லிக் கொண்டே இருந்தது.

சங்கர் பண்ணையார் தோட்டத்துக்கு வேலைக்கு போயிட்டா எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு வரும் என்று ஊர் மக்கள் பேசிக்கொண்டே கடநது சென்றார்கள்.....



இனி பண்ணையார் குடும்பத்திலும் பண்ணையார் தோட்டத்திலும் பரபரப்புக்கு குறை இருக்காது ஏனென்றால் சங்கரும் ரேகாவும் பண்ணையார் தோட்டத்தில் உள்ள பம்புசெட்டில் தங்கி வேலை செய்யப் போகிறார்கள் இனி பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமா . இல்லை பிரச்சனை உண்டாகும்மா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்....



தொடரும்.......

 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
நேற்று இரவு இந்த முத்தைய கிழவன் தலைமையில் கூட்டம் நடந்தது அதைப் பற்றி விசாரிச் சிங்கள டா என்று சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களிடம் கேட்டான்.

விசாரிச்சோம் குருவே . ஊர் மக்கள நம்ம கிட்ட சிக்கின ஒரு அடிமை நம்முடைய மந்திர தந்திரங்களை பெருமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறது . ஆனால் இந்த முத்தைய கிழவன் அவன் மகன் சங்கர் நம்மளை பத்தி எளக்காரமாக பேசியிருக்கிறார்கள் இவனுங்களுக்கு ஒரு பாடத்தை நம்ம புகட்டுனம் குருவே என்றான் ஒரு சிஷ்யன்.

இந்த ஊர்ல பண்ணையார் குடும்பமும் இந்த முத்தையா குடும்பமும்தான் நம்மள மதிக்கிறதே கிடையாது மத்த எல்லோரும் நம்மள மதிக்கிறார்கள் சிலபேர் ஓரளவுக்கு மதிக்கிறார்கள் ஆனா இந்த ரெண்டு குடும்பம்தான் நம்மள பத்தி எளக்காரமா பேசறது மரியாதை இல்லை என்றாலும் பரவாயில்லை இந்த ஏலக்காரணமான பேச்சு நிறுத்தினாலே போதும் நம்ம வளர்ச்சிக்கு இந்த ரெண்டு குடும்பம் தான் தடையாக இருக்கிறார்கள் இவனுங்கள என்ன செய்யறதுன்னு எனக்கே தெரியல ஆனா நிச்சயமா ஒன்னு சொல்றேன் இவனுங்க ரெண்டு பேருமே ஒரு நாளைக்கு இல்லைனாகூட ஒருநாள் நிச்சயமா நம்ம உதவியை தேடி வருவான் அவங்களை அன்னிக்கு பாத்துக்கலாம் விடுங்கடா என்றார் சாட்டையடி சாமியார்.

இல்லை குருவே ....இதை இப்படியே சும்மா விட்டா அவங்க நம்மளை பத்தி கேவலமா பேசிக்கிட்டே இருப்பாங்க அதனால நீங்க இன்னிக்கு ஒரு வாக்குறுதியை ஊர்மக்களுக்கு சொல்லுங்க வேலைக்கு போய் இருக்கிற சங்கரும் ரேகாவுக்கும் ஆபத்து வரப் போகுதுன்னு சொல்லுங்க அதுக்கப்புறம் மத்ததை பார்த்துக்கலாம் . என்றான் இன்னொரு சிஷ்யன்.

அதுக்கப்புறம் நீ என்னத்த பாக்க போற. நான் அந்த சங்கர்கிட்ட செம அடி வாங்குவதைப் பார்க்க போறியா.நானும் கொஞ்ச நாளா பார்த்துகிட்டே இருக்கேன் வம்புல மாட்டி விடுற மாதிரியே நீ ஐடியா சொல்ற. பாத்துக்க அப்புறம் உனக்கே நான் வாக்குறுதி கொடுத்து விடுவேன். ஒழுங்கா செல்போனை மறைத்து வைக்கிற வேலைய மட்டும் பாரு மத்ததெல்லாம் நான் பாத்துக்கறன் என்றார் சாட்டையடி சாமியார்.



சங்கரும் ரேகாவும் துணிமணிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு சிறிது பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு பம்புசெட் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

முத்தையா சங்கரை அழைத்து கட்டி அணைத்துக் கொண்டார். அப்பொழுது முத்தையாவின் கண்கள் லேசாக கலங்கியது.

ஊரே பம்புசெட் வேலைக்கு போகமாட்டோம் என்று சொல்லி பயந்துகிட்டு இருக்காங்க . நீ எனக்கு ஒரே ஒரு மகன் .வேறு யாரும் எனக்கு கிடையாது நீ ஒருவன் தான் எனக்கு உன்னை நான் சில நாட்கள் பிரிந்து இருக்க வேண்டும் என்பதை நினைத்தால் எனக்கு மனம் கஷ்டமாக இருக்கிறது இருந்தாலும் பரவாயில்லை. இந்த ஊருக்காக நீ செய்யப் போகும் இந்த வேலை எனக்கு மட்டும் பெருமை தராது இந்த ஊருக்கே நீ பெருமை சேர்த்திருப்பாய் அதனால் நீ எந்த கவலையும் படாமல் யாருக்கும் பயப்படாமல் கொஞ்சநாள் பண்ணையார் பம்புசட்டில் இரவும் பகலும் வேலை செய் . பிறகு எல்லோருக்கும் பயம் தெளிந்து விடும் அதுக்கப்புறம் மற்றொரு குடும்பம் போய் வேலை செய்யட்டும் இப்படி மாறி மாறி வேலை செய்து கொள்ளலாம் ஆனால் ஏற்கனவே இரண்டு குடும்பங்கள் காணாமல் போயிருப்பது நீ மறந்து விடக்கூடாது நீ கவனமாக அங்கு வேலை செய்ய வேண்டும் உனக்கு ஏதாவது சின்ன சந்தேகம் என்றாலும் உடனே பண்ணையாரிடமும் என்னிடமும் நீ தெரியப்படுத்தி வீடு அதுதான் உனக்கும் நல்லது. உன் குடும்பத்துக்கும் நல்லது. நீ இப்போது தனி ஆள் கிடையாது உனக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக் கொண்டாய் அதனால் எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது பொறுமையாக கையாள வேண்டும் நிச்சயமா நீ இந்த காரியத்திலும் ஜெயிச்சிடுவ என்ற நம்பிக்கையில உன்னை அனுப்பி வைக்கிறேன் பத்திரமா போயிட்டு வாப்பா என்று சங்கரை ஆசீர்வாதம் செய்தார் முத்தையா.

அப்போது அங்கு வந்த லட்சுமி அம்மாள் ரேகாவை அழைத்து தனது முந்தானையில் முடிந்து வைத்திருந்த அம்மன் திருநீரை எடுத்து காக்காவுக்கும் சங்கருக்கும் நெற்றியில் தடவினாள் பிறகு ரேகாவை வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்று பாசமாக சொன்னாள்.

தம்பி கிட்ட சொல்லுமா... இரவு நேரத்துல கண்டபடி வயல் வேலையில் சுற்றித் திரிய வேண்டாம் தேவையானல் மட்டும் போக சொல்லு. அது ஆர்வத்துல அங்குமிங்குமாய் ஓடுவான் நீதான் அவனை. கவனமா பாத்துக்கணும் நீயும் வாரத்தில் இரண்டு நாள் மூன்று நாள் வீட்டுக்கு வந்துட்டு போங்க அங்கேயே தங்கி விடாதீங்க வேலை முக்கியம்தான் அதேசமயம் இங்க வந்துட்டு போன உனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும் அதனால தான் சொல்றேன். எனக்கென்னமோ மனசு கொஞ்சம் சங்கடமா தான் இருக்கு எதுக்குன்னு தெரியல இருந்தாலும் இனி வரப்போற நாள நம்ம தான் உஷாரா வாழ்ந்து காட்டணும் என்றால் லட்சுமி அம்மாள்.

நீ ஒன்னும் பயப்படாதமா அவரு என் பக்கத்துல இருக்கிற வரைக்கும் எனக்கு எந்த கவலையும் கிடையாது அதேபோல அவரும் எப்படிப்பட்ட காரியத்தையும் ஜெய் சுடுவார் எனக்கு அந்த நம்பிக்கை இருக்குமா நீ பயப்படாம இரு அதுக்கப்புறம் தாத்தாவை அப்பப்பா வந்து பாத்துக்கோ அவருக்கு சுடுதண்ணி வச்சு உடம்புக்கு ஊத்தி விடுமா கரெக்டா சாப்பாடு குடு கொஞ்சமா குடும்மா அவர் நிறைய சாப்பிடமாட்டார் என்று பாச மழையில் நனைந்தபடி சொன்னாள் ரேகா

பிறகு அங்கிருந்து சங்கர் ரேகாவும் விடைபெற்றுக்கொண்டு தனது துணிமணிகள் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு பண்ணையார் தோட்டத்திற்கு கிளம்பிச் சென்றார்கள் பம்புசெட்வேலைக்கு.

நடந்தது எல்லாம் பண்ணையார் கேள்விபட்டு சந்தோஷமாக இருந்தார் நமது நண்பனின் மகன் பம்புசெட் வேலைக்கு இன்று குடும்பத்தோடு வரப்போகிறான் என்ற சந்தோஷத்தில் பண்ணையாருக்கு சற்று உற்சாகம் காணப்பட்டது அப்போது மகன்களை அழைத்தார் பண்ணையார்.

பரந்தாமா சீக்கிரம் கிளம்புங்க பா இந்நேரம் பம்பு செட்டுக்கு என் நண்பனின் மகனும் மருமகளும் இன் நேரம் வந்துட்டு இருப்பாங்க என்றார் பண்ணையார்.

இதோ கிளம்பிட்டோம் அப்பா என்று சொல்லிக்கொண்டுப பரந்தாமன் அவசரமாக கிளம்பினான் பரந்தாமனுக்கும் அவன் தம்பிகளுக்கும் சந்தோஷம் இனி வழக்கம்போல நமது தோட்டம் செழிப்பாக மாறிவிடும் என்று எண்ணி சந்தோஷமாக மூவரும் பம்புசெட் செல்வதற்கு கிளம்பினார்கள்.

வழக்கம்போல புல்லட் பைக்கில் மூவரும் ஒன்றாக சென்றார்கள் தோட்டத்திற்கு.

சங்காரும் ரேகாவும் பம்பு செட்டுக்கு சென்று அங்கு இருக்கும் பெரிய கிணறு மற்றும் பண்ணையாரின் மனைவியின் பூஜை அறை மற்றும் சுற்றியிருக்கும் தென்னை மரம் பலா மரங்களை ரசித்தபடி காத்திருந்தார்கள் அப்போது சங்கர் மனதில் ஏற்கனவே தங்கி வேலை செய்த பெரியவரின் மகன் மருமகள் இருவரும் அங்கு சந்தோசமாக ஓடித்திரிந்தை நினைத்துப்பார்த்தான் பிறகு கனகாவும் அவள் கணவனும் குழந்தைகளும் இங்கு சந்தோசமாக வந்ததை நினைத்துப் பார்த்தான் சங்கர் இப்படி நன்றாக இருந்தவர்கள் எப்படி காணாமல் போயிருப்பார்கள் என்று எண்ணி சற்று சோகத்தோடு காணப்பட்டான் சங்கர்.

என்ன மாமா ..வருத்தமா இருக்கீங்க அப்பாவா எல்லாம் விட்டுட்டு வந்துட்டோம் என்று வருத்தம இருக்கா என்றாள் ரேகா.

அதெல்லாம் ஒன்னும் இல்ல இங்க ஏற்கனவே வேலை செஞ்சவங்க எவ்வளவு சந்தோஷமா இருந்தாங்க என்பதை நான் நேரடியா பார்த்து இருக்கேன் இப்படிப்பட்டவர்கள் ஏன் காணாமல் போனார்கள் என்பதை நினைச்சாதான் மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்குமா என்றான் சங்கர் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது புல்லட்டில் பண்ணையார் மகன்கள் வருவதை இருவரும் பார்த்தார்கள்

உடனே ரேகாசற்று கூச்சத்தோடு நின்றாள் இதுவரைக்கும் அவள் பண்ணையார் தோட்ட வேலைக்கு வந்தது கிடையாது முதல் முறை என்பதால் பண்ணையாரின்மகன்களை பார்த்ததும் சற்று சங்கடத்தோடு நெளிந்தபடி நின்றால் ரேகா சங்கருக்கு இது இயல்பான விஷயம்.

புல்லட்டை சற்று தூரத்தில் நிறுத்தி விட்டு பரந்தாமனும் அவன் தம்பிகளும் பம்புசெட்டை நோக்கி வந்தவர்கள். சங்கர் ரேகாவை பார்த்து பரந்தாமன் தனது இரண்டு கைகளால் கும்பிட்டு மரியாதை கொடுத்தார். பதிலுக்கு சங்கரும் ரேகாவும் இரண்டு கைகளால் கும்பிட்டார்கள் பிறகு பரந்தாமன் முகத்தில் சந்தோசம் ஜொலித்தது சிரித்தபடியே சங்கரை கட்டி அணைத்துக்கொண்டான் சந்திரனும் தீனாவும் அவர்களைப் பார்த்து சிரித்தபடியே பின்கை கட்டிக் கொண்டு நின்றார்கள்.

நீங்க இந்த வேலைக்கு வந்து இருப்பது இந்தப் பண்ணையார் தோட்டத்தை பசுமை ஆகுறதுக்கு மட்டுமில்ல பண்ணையார் குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பதற்கும் தான் நீங்க இங்க வேலைக்கு வந்து இருக்கீங்க எங்க அப்பாவும் உங்க அப்பாவும் உண்மையான நண்பர்கள்தான் என்று நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் நீங்க செஞ்சி இருக்கும் இந்த உதவியை நான் என்னிக்குமே மறக்க மாட்டேன் நீங்க இங்க உங்க விருப்பம் போல சந்தோசமா இருங்க உங்களுக்கு என்னென்ன வேலை செய்யணும் என்று நான் சொல்லித் தரவேண்டிய அவசியமில்லை உங்களுக்கே எல்லாமே தெரியும் நீங்க இங்க அதிகமா வேலை பார்த்து இருக்கீங்க அதனால என்ன செய்யணும்னு உங்களுக்கே தெரியும் நீங்க உங்க வேலைய இன்னிலிருந்து சந்தோஷமா தொடங்குங்கள் என்று சொல்லிவிட்டு பரந்தாமன் தம்பிகளை தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு அனுப்பி விட்டான்.

சங்கருக்கும் ரேகாவுக்கும் சற்று சந்தோசமாக இருந்தது பண்ணையார் மகன்கள் இவ்வளவு பாசமாக பழகுகிறார்களே என்று நினைத்து.

பிறகு பரந்தாமன் பம்புசெட்டில் மற்றொரு அறையில் இருக்கும் தனது அம்மாவின் பூஜை அறைக்கு சென்று மனதுக்குள் வேண்டிக்கொண்டான்.

அம்மா இனி எந்தத் தவறையும் நான் செய்யப் பவதில்லை ஏனென்றால் எல்லாம் எனக்கு சாதகமாகவே அமைந்து விட்டது . இனி நம்முடைய தோட்டம் செழிப்பாக வளரும் வழக்கம்போல எனக்கு வருமானம் கிடைக்கும். நான் தம்பிகளையும் சந்தோசமாக பார்த்துக் கொள்வேன் இதேபோல என்னை சந்தோசமாக பார்த்துக்கொள்ளும் தாயே என்று வேண்டிக்கொண்டு .யாரும் நம்மை பார்க்கவில்லை என்று நினைத்து வழக்கம்போல மெதுவாக தாய் படத்தின் பின்னால் சேர்த்து வைத்திருக்கும் பணப்பெட்டி பூட்டு சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு கீழே இறங்கி திரும்பிப்பார்த்தான் . பரந்தாமன்னுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது அவன் கைகள் நடுங்கியது வாசலில் சங்கரும் ரேகாவும் நின்றிருப்பதை பார்த்து..



தொடரும்.....​
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
எப்போதும் போல... பரந்தாமன் தாய் படத்தின் முன்னால் நின்று வேண்டிக்கொண்டான் தாயே இதேபோல விவசாயம் நல்ல படியாக முன்னேற வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டு பிறகு நம்மை யாரும் கவனிக்கவல்லை என்ற எண்ணத்தில் அவனுடைய தாய் படத்தின் பின்னால் பணப்பெட்டி பூட்டு சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பதற்கு சற்று மேலே ஏறி பார்த்துவிட்டு கீழே இறங்கி திரும்பி பார்த்தான் . அவன் மனம் இடி விழுந்தது போல் இருந்தது கை கால் உதற ஆரம்பித்தது காரணம் வாசலில் சங்கரும் ரேகாவும் நின்று கொண்டிருப்பதை பார்த்து

என்ன செய்வது என்று திகைத்து போனான் பரந்தாமன் பிறகு சங்கரையும் ரேகா வையும் உற்றுப் பார்த்தான் அவர்கள் இருவருமே கண்களை மூடியபடி வேண்டிக் கொண்டிருந்தார்கள் பரந்தாமனின் தாய் படத்தின் முன்பு அப்பொழுதுதான் பரந்தாமனுக்கு சற்று லேசான தகிரியம் ஏற்பட்டது இவர்கள் நாம் ஏறி பணப்பெட்டியை சரி பார்த்ததை இவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள் இவர்கள் வந்த உடனே கண்களை மூடி கொண்டு வேண்டிக்கண்டு இருந்திருப்பார்கள்என்ற நம்பிக்கை பரந்தாமனுக்கு ஏற்பட்டது

பிறகு சிறிது நேரத்தில் சங்கர் ரேகாவும்கண் திறந்து பார்த்தார்கள் பார்த்தவுடன் . சங்கர் உடனே கையிலிருந்த மண்வெட்டியை பரந்தாமனின் தாய் படத்தின் முன்பாக வைத்து கும்பிட்டுவிட்டு பிறகு அந்த மண்வெட்டியை எடுத்துக்கொண்டு பரந்தாமனிடம் ....ஐயா நாங்கள் இப்பொழுதே எங்கள் வேலையை தொடங்கி விட்டோம் என்று கூறிவிட்டு சங்கர் ரேகாவும் அங்கிருந்து புறப்பட்டார்கள் வயல் பகுதிக்கு

பரந்தாமனுக்கு ஒருகணம் மூச்சே நின்று விடும்போல் அளவிற்கு அதிர்ச்சியானது எங்கே இவர்கள் நம்முடைய பணப்பெட்டியை கண்டுபிடித்து விட்டார்களோ என்ற பயம் பரந்தாமனுக்கு ஏற்பட்டது . பிறகு மனம் லேசாக படபடப்பு குறைந்தது அங்கிருந்து வெளியே வந்த பரந்தாமன் கிணற்று சுவர் மீது உட்கார்ந்தான். இருப்பினும் அவன் கைகள் நடுங்குவது குறையவில்லை சற்று லேசாக வே நடுங்கி கொண்டிருந்தது அவன் இதயமோ லேசாக படபடத்துக் கொண்டிருந்தது பிறகு அவன் பம்புசெட்டில் போய்க்கொண்டிருக்கும் தண்ணீரை சிறிது . இரு கைகளால் அள்ளி குடித்துவிட்டு மீண்டும் கிணற்று சுவர் மீது அமர்ந்தான் .

சிறிது நேரத்தில் தம்பிகளும் வந்தார்கள் அண்ணே வீட்டுக்கு கிளம்பலாமா .

கிளம்பலாம் ..அதுக்கு முன்னாடி கொஞ்சம் உங்க கிட்ட நான் பேசனும் என்றான் பரந்தாமன்

சொல்லுங்க அண்ணே என்று சந்திரன் சொன்னான்.

நான் என்ன சொல்றேன்னா இப்பத்தான் நம்முடைய குடும்ப பிரச்சனையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா சரியாகி கொண்டே வருதுஅதனால இனிமே நம்ம குடும்பத்திற்கு எந்த ஒரு பிரச்சினையும் நம்மளால ஏற்படக் கூடாது தம்பி . இதோ வந்திருக்கிற சங்கரும் ரேகாவும் இங்க நிம்மதிய வேலை செய்யட்டும் நம்ம அவங்கள எந்த தொந்தரவும் செய்யக்கூடாது ஏற்கனவே நம்ம செஞ்ச தவறு நாளா நம்ம குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கோம் . இனிமேலாவது நமோ எந்த தவறும்செய்யக் கூடாது என்றான் பரந்தாமன் .

அண்னே ....இனிமே எந்த தவறும் நாங்க செய்ய மாட்டோம் .குடிக்கக்கூட மாட்டோம் நாங்கள் .அதனால எங்க மேல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் . மறுபடியும் நாங்க ரேகாமேலே ஆசைப்படுவோம் என்றுதானே நீங்க இந்த மாதிரி சொல்றீங்க என்றான் தீனா.

இல்ல தம்பி ஏற்கனவே இருந்த குடும்பம் வேற. இப்போது வந்திருக்கிற குடும்பம் வேற நம்ம செஞ்ச தப்பு வெளியே சொல்லாமல் நம்ம மேல இருக்கிற பயத்தினால் அந்த இரணடு குடும்பமும் ஓடிட்டாங்க ஆனா இப்போ இருக்கிற சங்கர் ரொம்ப முரட்டுத்தனமான ஆளு அவனை பத்தி நமக்கும் தெரியும் இந்த ஊருக்கும் தெரியும் அவனை ஜெயிக்கிறது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை அதனால சொல்றேன் நீங்க மறுபடியும் பழக்க தோஷத்தில். இந்த ரேகா அழகா இருக்கிறதுனால அவள் மீது ஆசை வைத்து விடாதீர்கள் உங்க ஆசையை அப்புறம் நான் நிறைவேற்ற முடியாது . அதனால தான் சொல்ல வரேன் என்றான் பரந்தாமன்

உங்களுக்கு அந்த பிரச்சினையே வேண்டாம் இனி நீங்களா சொன்னாலும் நாங்க செய்ய மாட்டோம் எங்களுக்கும் மனசாட்சி இருக்குது என்றார்கள் சந்திரனும் தீனாவும் .

பிறகு பரந்தாமனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது இனி நம்ம ராஜாங்கம் தான் நாம் நினைத்தது போல விவசாயம் செழிப்பாக வளர அந்த வேலையை சங்கர் பார்த்துக்கொள்வான் .அவன் இரவும் பகலுமாக உழைத்து இந்த தோட்டத்தை பழையபடி பச்சை பசுமையாக மாற்றி விடுவான் வழக்கம்போல நமக்கு வருமானம் கிடைக்கும் என்று பரந்தாமன் நினைத்து சந்தோஷப்பட்டான்

பிறகு அங்கிருந்து மூவரும் கிளம்பி விட்டார்கள் .

அதன் பிறகு சங்கரும் ரேகாவும் தனது வேலைகளை சந்தோஷமாக செய்யத் தொடங்கினார்கள் முதல் நாள் இரவு ரேகாவுக்கு சற்று லேசான பலத்தோடு பம்புசெட்டில் தங்குவதற்கு சற்று லேசான பயம் இருந்தது பிறகு அங்கு இருக்கும் பெரிய பெரிய பலா மரம் தென்னை மரத்தைப் பார்த்து இரவில் சற்று லேசான பயத்தோடு இருந்தால் ரேகா.

அப்பொழுது பலா மரத்தில் கனகாவின் குழந்தைக்காக கட்டிய ஆணை புடவை துணி தொங்கிக்கொண்டிருந்தது அதை பார்த்த சங்கர் ரேகாவும் இருவரும் சென்று அந்தத் துணியை கையால் பிடித்து கொண்டு . கனகாவின் குழந்தையை நினைத்துப் பார்த்தார்கள் . எப்போதுமே இந்த குழந்தை இந்த அணையில் தான் தூங்கிக் கொண்டிருக்கும் என்று சங்கர் சொன்னான் . அப்போது ரேகா சொன்னாள் .....அப்படி என்றால் இந்த துணி கூட எடுத்துக்கொண்டு செல்ல முடியாத அளவுக்கு அவர்களுக்கு அவசரமாக இருந்திருக்கிறது. அவர்கள் ஏற்கனவே திட்டம் போட்டு இருந்தாள் இந்த துணி எல்லாம் அவிழ்த்து பேக்கேஜ் செய்து கொண்டிருப்பார்கள் . அவசரத்தினால் இந்த குழந்தைக்கு கட்டிய ஆணை துணை கூட அவர்களால் எடுத்துச் செல்ல முடியவில்லை அந்த அளவுக்கு அவர்கள் அவசரப்பட்டு இருக்கிறார்கள் அப்படி என்றால் அது என்ன பிரச்சினையாக இருக்கும் என்று ரேகா கேட்டாள் . சங்கருக்கும் ரேகாவின் பதில் சற்று யோசிக்க வைத்தது குழந்தைக்கு கட்டிய ஆணை துணை கூட எடுக்க முடியாமல் உடனே புறப்படும் அளவிற்கு அவர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டு இருக்குமோ என்று யோசிக்க ஆரம்பித்தான்

பிறகு இருவரும் பம்பு செட்டுக்குள் உறங்க சென்று விட்டார்கள்

மெல்ல மெல்ல நாட்கள் நகர்ந்தது ஊருக்குள்ளே சங்கர் மிகவும் சிறப்பாக வேலை செய்து வருகிறார்கள் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டது.

ஊர் மக்களும் சந்தோஷமாக பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றார்கள் பயம் தெளிந்து.

ஊர் சந்தோசமாக இருப்பதை கவனித்த சாட்டையடி சாமியாருக்கு சற்று எரிச்சலாக இருந்தது இனியும் சும்மா இருந்தால் நம்ம பேச்சை இந்த ஊரில் யாரும் மதிக்க மாட்டார்கள் என்று நினைத்து சிஷ்யர்களிடம் யோசனை கேட்டார் சாட்டையடி சாமியார்.

நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க குருவே இன்னைக்கு இரத்திரி நான் நம்ம செல்போனை எடுத்துக்கொண்டு போய் பம்புசெட்டில் வைத்துவிடுவேன் அதுக்கு அப்புறம் வழக்கம் போல நடுராத்திரியில் கால் பண்றேன் அங்க நம்ம செல்போன். பேய் சிரிப்பது போல ரிங்டோன் அடிக்கும் அப்போ அந்த சங்கரும் ரேகாவும் அலறி அடிச்சுக்கிட்டு இங்க ஓடி வந்திடுவாங்க அதுக்கு அப்புறம் நம்ம ராஜாங்க தான் குருவே என்ற ஒரு சிஷ்யன்.

அந்த சங்கர் பயந்து அவன் பொண்டாட்டியை கூட்டிகிட்டு வந்துட்டான்னா நம்ம ஜெயிச்சிட்டோம் அவனுக்கு இருக்கிற தைரியத்துக்கு இந்தப் பேய் எங்கதான் சிரிக்குது என்று தேடிக்கிட்டு போனா நம்ம செல்போன் மாட்டிக்கும். அப்புறம் அவ்வளவுதான் நம்ம மூணு பேருமே மாட்டிக்குவோம் அதுக்கு அப்புறம் இந்த ஊர்ல இல்ல வேற எந்த ஊரிலும் நம்மல வாழ விட மாட்டான் அந்த சங்கர் . அவன பேய் இருக்குதுன்னு எல்லாம் பயமுறுத்த முடியாது டா வேற ஏதாவது ஒரு யோசனை சொல் என்றார் சாட்டையடி சாமியார்.

அப்படின்னா ஏற்கனவே போட்ட திட்டம் தான் செய்யணும் குருவே.

என திட்டம் அந்த கரும்பு தோட்டத்தை கொளுத்தி விடலாம் என்று சொன்னேனே அதுவா.

ஆமாம் குருவே வேற வழி இல்லை ஏதாச்சும் செஞ்சாதன் நம்மள இந்த ஊர் பசங்க மதிப்பானுங்க குருவே என்றான் சிஷ்யன்.

இந்த வேலையை கொஞ்சம் பொறுமையா தான் செய்யணும் ஏன்னா கரும்பு தோட்டத்திற்கு தீவைகிரப்பா யாராச்சும் பார்த்துட்டா நம்மள இந்த ஊர் மக்கள் மட்டும்மில்ல பண்ணையார் ஓட பசங்கள் நம்மள உயிரோட விட மாட்டானுங்க இந்த பிரச்சனை ரொம்ப பெருசா ஆயிடும் அதனால ஒரு சந்தர்ப்பத்தை பார்த்து கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்து விடலாம் என்றார் சாட்டையடி சாமியார்.

பிறகு ரேகா வாரத்தில் இரண்டு முறை .மூன்று முறை தனது அம்மாவையும் தாத்தாவையும் ஊருக்குள் சென்று பார்த்துவிட்டு சிறிதுநேரம் சந்தோசமாக பேசிவிட்டு வருவது வழக்கமாக கொண்டிருந்தால் ரேகா.

முத்தையாவுக்கு ம் சந்தோஷமாக இருந்தது அடுத்தது இந்த ஊரை கூட்டி காணாமல் போனவர்களை பற்றி தேடுவதற்கான வேலையை ஆரம்பித்து விடலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் முத்தையா.

பரந்தாமனின் மனைவி சாந்தி. முருங்கைக்கீரையை உருவிக்கொண்டு பண்ணையாரிடம் பேச்சுக் கொடுத்தாள்.

நான் சொன்ன மாதிரி நம்ம பிரச்சனை மெல்லமெல்ல சரியாகி கொண்டு வருது . என்ன மாமா என்றால் சாந்தி.

நீ சொல்றதெல்லாம் உண்மைதான் நம்முடைய தோட்டம் இவ்வளவு சீக்கிரமா பழைய நிலைமைக்கு வந்திடும் என்று நான் நெனச்சு பாக்கலை இந்த கனகா குடும்பம் காணாமல்போன அன்னைக்கே நான் முடிவு பண்ணினேன் நம்ம தோட்டம் இதோட பசுமையா மாறாது என்று நினைத்தேன். என் நண்பனோட மகன் வந்து என்னோட தோட்டத்தை பழைய நிலைமைக்கு மாற்றிவிட்டான் . ஆரம்ப காலத்தில் முத்தையா எனக்கு எப்படி உதவியாக இருந்தானோ அதேபோல அவன் மகன் என் பிள்ளைகளுக்கு உதவியாய் இருக்கிறன். எனக்கு ரொம்ப சந்தோசம இருக்கு மா நீ சொல்றது உண்மைதான் அப்படியே என்னோட பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துடுச்சு மா என்றார் பண்ணையார்.

உங்களுடைய விரோதி. கூடிய சீக்கிரத்துல உங்க முன்னாடி நின்னு மன்னிப்பு கேட்கத் தான் போறன் நீங்களும் அவன் முகத்தை பாக்கத்தான் போறீங்க என்றாள் சாந்தி.

அதுக்காகத்தான் ஒரு யோசனை வச்சிருக்கேன் அந்த யோசனை கண்டி நான் நினைச்சது போல நடந்தா என்னுடைய விரோதி யாருன்னு கூடிய சீக்கிரத்தில் கண்டு பிடித்து விடுவோம் என்றார் பண்ணையார்.

யோசனையா அப்படி என்ன யோசனை வச்சிருக்கீங்க மாமா என்றாள் சாந்தி.

இப்படி இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் வந்தார்கள் இவர்களைப் பார்த்ததும் பண்ணையாருக்கும் பரந்தாமனின் மனைவி சாந்திக்கும் சந்தோசமாக இருந்தது.

என்ன யோசனை அப்படி இப்படி என்றுபேசிக்கிட்டு இருக்கீங்க என்றான் பரந்தாமன்.

நீங்களே கேளுங்க மாமா எனக்கு தெரியாமலே ஏதோ ஒரு பெரிய திட்டம் போட்டிருக்காரு என்றாள் சாந்தி

என்னப்பா இவ ஏதோ திட்டங்கள் என்று உளறிக்கொண்டு இருக்கா என்றான் பரந்தாமன்.

ஆமாம்பா நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன் அந்தத் திட்டம் நான் நினைத்தபடி நடந்தா காணாமல் போனவர்கள் இரண்டு குடும்பமும் கிடைத்து விடுவாங்க என்னோட விரோதியும் எனக்கு அடையாளம் தெரியும் என்றார் பண்ணையார்.

பரந்தாமன் சந்திரன் தீனா மூவருக்கும் இடி விழுந்தது போல் சற்று நேரத்தில் உடம்பு ஆடியது என்ன திட்டம் அப்பா போட்டிருப்பார் நம்மளை கண்டுபிடித்து விடுவாரோ என்ற பயம் அவர்களுக்கு கிடுகடு கிடுவென தலைக்கு ஏறியது பிறகு இலேசான பதட்டத்தோடு பரந்தாமன் கேட்டான்

என்ன திட்டம் பா சொல்லுங்களேன் எங்களுக்கும் என்றான் பரந்தாமன்.

இது சரியான நேரம் இல்லை அதுக்கும் ஒரு நாள் வரட்டும் அப்பொழுது சொல்கிறேன் உங்களிடம் சொல்லாமல் இந்த திட்டத்தை போட மாட்டேன் சிறிது நாள் போகட்டும் என்றார் பண்ணையார்.

உடனே மூவரும் அவரவர் அறைக்கு சென்றுவிட்டார்கள்.

இப்போ இது தான் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிட்டது என்று அம்மா படத்தின் முன்னால் வேண்டிக் கொண்டு வந்தோம் மறுபடியும் அப்பா பிரச்சனையை உண்டாக்குவார் போல் தெரிகிறதே என்று நினைத்து பரந்தாமனுக்கு லேசாக தலைசுற்ற ஆரம்பித்தது.





முத்தையாவின் திட்டப்படி பண்ணையார் தோட்டம் செழிப்பாக வளர ஆரம்பித்துவிட்டது அதேபோல பண்ணையார் காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்..



தொடரும்.......
 

Latest posts

New Threads

Top Bottom