Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL மாய நிலா - Tamil Novel

Status
Not open for further replies.
21 மாய நிலா


மாயா உடைந்து போய் உட்கார்ந்து இருந்தாள்.

அர்ஜுனும், ஆதிராவும் தான் மாயாவை எப்படி சமாதானம் செய்வது என்று ஒன்றும் புரியாமல் இருந்தார்கள்.

"மாயா கொஞ்ச நாள் பொறுத்துக்கோ மா நான் இருக்கேன், எல்லாம் சரியா போய்டும் நாங்க பாத்துக்குறோம் தங்கம்" என்ற அர்ஜுன் வார்த்தைகளை மாயா மனம் ஏற்கவில்லை.

"என் நிலையை பாத்தியா அண்ணா என்னால யாரையும் கட்டிப்பிடித்து கூட ஆறுதல் தேட முடியல, ஒரு பக்கம் என் நினைவுகள். இந்த நிலைக்கு நான் இல்லாமல் போயிருந்தா கூட கவலை பட்டிருக்க மாட்டேன்" புலம்பிக் கொண்டிருந்த மாயா திடிரென்று வசீகரன் மீது ஆத்திரத்தில் பொங்கினாள் மாயா "அந்த வசீகரனுக்கும் மூளையே இல்லை, போன ஜென்மத்திலும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அனைத்தும் சரி கட்டி இருப்பேன், நல்லது செய்றேன்னு ஒத்தையில் நின்று அனைத்து பிரச்சனையும் இழுத்து விட்டுட்டு எவ்ளோ பேர் வாழ்க்கையை வாழாமல் தவிச்சிட்டு இருந்து இருக்கோம் பாரு". வசி மீது கோபம் தான் வந்தது மாயாக்கு (அக்னி நிலாவின் நினைவுகள்).

"போன ஜென்மத்தில்தான் அனைவர் உயிரையும் வாங்கினான், இப்போதும் அந்த சகுந்தலைக்கும் இவனுக்கும் வித்யாசம் தெரியாம இப்படி செய்தால் என்ன செய்வது" மாயாக்கு கோபம் அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது.

ஆதிரா அர்ஜுனிடம் மாயாக்கு எப்படி சமாதானம் சொல்வது என்று ஒன்றும் புரியாமல் நின்று இருந்தார்கள்.

அவர்கள் வாழ்ந்த வீட்டில் பல நினைவுகள் மூன்று குடும்பமும் ஒரே வீட்டில் அவ்ளோ சந்தோசமா இயற்கையின் மடியில் சுதந்திரமாக சுற்றி திருந்தவர்களின் நிலை இப்போது மிகவும் மோசமாக இருந்தது.

அர்ஜுன் ஆதிராவால் பழையபடி வீட்டைதான் புதுமை படுத்த முடிந்தது, உயிர் இழந்த 8 பேர் உயிரை கொண்டு வர வைக்க முடியாதல்லவா.

சுதந்திர பறவையாக அந்த காட்டில் எந்த பயமும் இல்லாமல் சுற்றித் திரிந்தது மூணு ஜோடி. பெற்றோர்களின் பாசத்தை முழுமையாக பெற்றவர்கள், இப்பொழுது ஒருவரும் இல்லாமல் இருப்பதற்கு இதயம் வலித்தது மூவருக்கும்.

"மாயா முடிந்ததை விடு இப்போ என்ன செய்வது அதை பற்றி யோசிக்கலாம்" என்று அர்ஜுன் இவர்கள் மன நிலையை மாற்ற முயற்சி செய்து கொண்டு இருந்தான்.

மாயா அதை பற்றி பேசாமல் அர்ஜுன் மடி மீது தலை சாய்த்து படுத்து விட்டாள்.

ஆதிரா அர்ஜுனை பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருக்க அவளை அர்ஜுன் தோள் மீது சாய்ந்து கொண்டான்.

அங்கு சகுந்தலா வசியிடம் ஒட்டி உரசி உட்கார்ந்து அக்னி நிலாவுக்கு கோவத்தை அதிகரிக்க செய்துகொண்டு இருந்தாள்.

ருத்ராவும் அக்னி நிலாவை திசை திருப்ப, அவளுக்கு பிடித்ததை அவளுக்கு மட்டும் சமைத்து கொடுத்து முடிந்த அளவுக்கு அவன் கூடவே வைத்துக்கொண்டு இருந்தான்.

மிஸ்டர் ஜீரோ மூழியமாக பல துப்புகள் வசிக்கு கிடைத்தன, கொலை நடந்த விசயத்தை பத்தி. சில துப்புகளும், சகுந்தலா நாட்டில் கண்டு பிடிக்கும் பல அறியவகை மருந்தை வெளிநாட்டுக்கு அரசாங்கத்துக்கு தெரியாம பார்முலா விற்பது போன்ற நிறைய ஆதாரங்கள் மிஸ்டர் ஜீரோ மூலம் கிடைத்ததது. ஆனால் பேர் மட்டும் மிஸ்டர் ஜீரோ கொடுக்கவில்லை, காரணம் அவனாக தெரிந்து கொள்ளும் சமயம் மொத்தமாக அவள் மீது உள்ள நம்பிக்கை உடையும் அப்போது தான் சகுந்தலாவை வைத்து செய்ய முடியும் என நினைத்தான் மிஸ்டர் ஜிரோ.

சாந்தி அறியாத சமயம் அவளை ரசித்துகொண்டுதான் இருக்கிறான். ருத்ரா அக்னி நிலாவிடம் நிறைய நேரம் செலவழித்தான். அக்னி நிலாவுக்கு எதும் தவறாக நடந்துவிடக் கூடாது என அவளுக்கு ஒரு காவலனாகவே மாறிப்போனான்.

சாந்தி கிடைத்த ஆதாரம் வைத்து இறந்தவர்களுக்கு தலைமையில் இருந்தது யார்? என்று கண்டு பிடிக்க கிளம்பினாள்.

"என்னை யாராலும் கண்டுபிடிக்க முடியாது" என சகுந்தலா மனதில் கர்வம் தாண்டவமாடியது.

இறந்த அனைவரும், ஒரு வகையில் பழங்காலத்து பொதுப்பணியில் இருந்தவர்கள். சாந்தி எவ்வளவு முயற்சி செய்தும் அவளுக்கு ஒரு துப்பும் கிடைக்கவில்லை.

இந்த ரெண்டு கேள்விக்கும் பதில் கிடைத்தால் போதும் அனைத்தும் சரியாகி விடும். இன்னும் ஒரு கொலையை தடுக்கவும் முடியும், அந்த பாரம்பரியம்மிக்க பொருளை எடுக்கத் தான் இந்த கொலை நடந்துகொண்டிருக்கிறது என மட்டும் சாந்தி கண்டுபிடித்திருந்தாள்.

"அந்த நபரை கண்டுபிடித்தால் தான் அவரையும் அவரிடமிருக்கும் பாரம்பரிய பொருளையும் ஆபத்தானவர்களின் கைகளுக்கு போகாமலும் தடுக்க முடியும்" என சாந்தி மண்டையை குழப்பிக்கொண்டிருந்தாள்.

வசி கொலையை பற்றியும் அந்த கொலை செய்யப்பட்ட தலை யார் என்றும் தேட துவங்கினான்.

சகுந்தலா அவனை தடுக்க வசியை விடாமல் கூடவே இருந்து கொண்டு இருந்தாள்.

அவன் விசாரிக்கும் போது காரில் இருப்பவள் வசி வேறு பக்கம் சென்றதும் இவள் வேறு ஒரு வழியில் அவன் தேடி வந்ததை எடுத்துக் கொண்டு, ஒன்னும் தெரியாத பாப்பா போல வந்து உட்கார்ந்து கொள்வாள் சகுந்தலா. வசியை வைத்து அவளுக்கு தேவையான பொருட்களையும் சேகரித்துக்கொண்டிருந்தாள்.

என்னதான் அவள் அறிவாளியாக இருந்தாலும் அவள் செய்த மிக பெரிய தவறு முகத்தை மாற்ற மறந்தது தான். அதுவே அவளுக்கு வினையாக வரப்போவது தெரியாமல் வசியுடன் காதல் செய்கிறேன் என்று அவளது மனதில் உண்மையாகவே ஆசையை வளர்த்துக்கொண்டாள். இதுவும் அவளது புத்திசாலி தனத்துக்கு செக் வைத்தது, வசி பாசத்தில் காதல் கரைபிரண்டோடியது.

வசியை எப்படியாவது வேலை செய்ய விடாமல் எந்த நேரமும் அவளுடனே வைத்துக்கொண்டு அந்த நகரத்தில் காதல் ஜோடியாக வளம் வந்தார்கள். வசிக்கு சில சமயம் தோன்றும் 'இப்போ எல்லாம் இவளை தொடும்போது அந்த உணர்வு வருவதில்லை ஏன்?' அது அடிக்கடி நினைவுக்கு வந்தாலும், அவனுக்கவனே சமாதானப் படுத்திக்கொள்வான். 'அப்போது புதியது இப்போ நிறைய முறை தொட்டு பழகியதால் அந்த உணர்வு வருவது இல்லை போல' என்று அவன் கேள்விக்கு அவனே பதில் சொல்லிக் கொள்வான்.

நவீன மருத்துவம் வைத்து, அந்த வேரின் சக்தியை மாற்ற ரகசியமாக முயற்சி செய்துகொண்டு இருந்தார்கள். அந்த வேர் கெட்டவர்கள் தொட்டாலும் எதும் ஆகாத வகையில் அதன் தன்மையை மாற்றி அதனின் முழு சக்தியையும் தனக்குள் வைத்துக்கொள்ள சகுந்தலா முயற்சி செய்துகொண்டு இருக்கிறாள். ரோஸியிடம் அந்த மரத்தை பற்றி சில விசயம் சேகரிக்க துவங்கினாள் சாந்தி. சகுந்தலாவை தேடுவதை விட்டுவிட்டு அந்த வேரை பின் தொடர எண்ணினாள்.

அதற்க்கான முக்கிய பொருள் சமீபத்தில் பூமிக்கு அடியில் கிடைத்துள்ளது என ஒரு பொய்யான குறிப்பை அவர்கள் கண்ணில் படும்படி செய்தாள்.

அந்த சிறு கோட்டையில் அதற்கான குறிப்பு இருப்பது தெரிந்து அனைவரும் அங்கு வருவார்கள் அந்த சமயம் அனைவரையும் பழிதீர்த்திட நினைத்தாள் மாயா. மாயாவாள் வரவைக்கப்பட்ட சூழ்ச்சி என்று தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டார்கள். சகுந்தலாவால் அன்று வர முடியாமல் தப்பித்துவிட்டாள் மாயாவிடமிருந்து.

மாயா ஒருவர் பின் ஒருவராக அனைவரையும் வேட்டை ஆடினாள். சகுந்தலா மட்டும் சிறு நூலிலையில் உயிர் தப்பினாள். அன்று அவள் வர சற்று தாமதமானதால் மாயாவும் மிஸ்டர் ஜீரோவும் சேர்ந்து ஆளுக்கு ஒருவரை கொன்று விட்டு கிளம்பும் போது வசியிடம் மாயா மாட்டிக்கொண்டாள், என்ன செய்வது என தெரியாமல் சில சக்திகள் மூலம் வசிக்கு முத்தமிட்டு காற்றோடு கரைந்தாள், அவள் பார்க்காமல் ரசித்த அந்த முகத்தை தான் கடைசியாக பார்த்திருந்தாள் மாயா.

இங்கு சாந்தியின் கதறல் கேட்ட காளி ருத்ராவின் நினைவுகலான மிஸ்டர், ஜீரோக்கு அந்த துணி மூலம் உருவம் கிடைத்தது.

சகுந்தலாவிற்கு மாயா உருவம் பெற்றது தெரிந்தது. ருத்ராவின் நினைவுகள் தான் ஜீரோ என்று அவளுக்கு தெரியவில்லை.

சகுந்தலாவால் மொத்தமாக அக்னி நினைவையும் ருத்ராவின் நினைவுகளையும் அழிக்க முடியவில்லை. ஆனால் அவள் குறிப்பிட்ட அவளுக்கு அழிக்க முடிந்தது அழித்துவிட்டாள். காரணம் அவள் வெளிநாட்டுக்கு புதியதாக கண்டு பிடிக்கும் பார்முலா மாட்டிக்கொள்ளும் சமயம் ருத்ராவும் அக்னி நிலாவும் பார்த்துவிட்டார்கள். அதனால் மொத்தமாக அவர்கள் ஒன்றாக இருந்த நினைவுகளை அழித்து விட்டாள்.

அளித்தது மட்டும் இல்லாமல் அக்னி நிலாவின் உயிரையும் எடுத்துவிட்டாள்.

இப்போது நல்லவள் போல வசியின் பழைய நினைவுகள் வராத படி செய்துவிட்டு. அக்னி நிலா இருக்கும் இடத்தில் அவள் வந்து ஆடிக்கொண்டு இருக்கிறாள்.

மாயாவும் அர்ஜுனும் சில வேலைகள் செய்தார்கள், நினைவுகள் தானே விட்டுவிடலாம் என்று நினைத்தாலும் அதனால் ஆகவேண்டிய காரியங்கள் நிறைய இருப்பதால் இருவரின் நினைவுகளும் அவர்கள் மூளைக்கும் போக வேண்டும். அதுமட்டும் இல்லாமல் வசிக்கு பழைய நினைவுகள் வர வைக்க வேண்டும்.

அக்னி நிலா வசிக்கு பார்வை போன சமயம் வரைந்த அக்னி நிலாவின் ஓவியம் வசியிடம் காட்டவேண்டும் என்று தக்க சமயம் பார்த்து காத்துக்கொண்டு இருந்தாள். ஆனால் சகுந்தலா அதனை அளிக்க வந்த நாளன்று முயற்சி செய்துகொண்டு இருக்கிறாள். ஆனால் அவளால் அக்னி நிலாவை மீறி கை வைக்க முடியவில்லை.

பிரேம் முழுவதும் அக்னி நிலா வேர்களை ஒட்டி வைத்து இருந்தாள். அதை தொட்ட மறு நொடி அவளுக்கு மரணம் வரும் என்று தெரிந்து ஒதுங்கிக் கொண்டாள் சகுந்தலா.

இருவரையும் சும்மா ஒன்றாக பார்த்தாலே அக்னி நிலா வயிறு பற்றி எரியும், ஆனால் அவளால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.

சாந்தி ஒரு புறம் அவள் செய்ததை நினைத்து பார்த்து வருந்தினாள். சில சமையம் மிஸ்டர் ஜீரோவிடம் மன்னிப்பு கேட்கும் எண்ணம் இருந்தது அவளுக்கு இருந்தாலும் ஒரு தயக்கம் அவனிடம் பேச.

சாந்தி அமைதியாக நாட்களை கடத்திக்கொண்டு இருந்தாள் ஆக மொத்தம் எவரும் எந்த வேலையும் செய்யாமல் சுற்றிக்கொண்டு இருந்தார்கள்.

அக்னி நிலாவால் பொறுக்க முடியவில்லை, இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது அந்த பெய்ண்டிங் பற்றி தொடங்கினாள்.

வசி பதில் எதிர்பார்த்து அமர்ந்து இருந்த சமயம் வசிக்கு யோசிக்க கூட அவகாசம் தரமுடியாமல் நான் தான் நேர்ல வந்துட்டனே எதுக்கு அந்த பெய்ண்டிங். வசியும் "ஆமா என் காதலை நேரில் பார்த்துட்டேன், அந்த பெய்ண்டிங் பாத்துதான் கண்டு பிடிக்கணும்னு நினைத்தேன் அதுக்கு அவசியம் இல்லாமல் என்னுடைய தேவதை என் உயிரை காப்பாற்ற என்னிடம் வந்துட்டா".

'யாரு இவ உயிர காப்பாற்றவா உயிரை எடுக்க தான் வந்து இருக்கா, அது தெரியாம இவர் வேற' என காண்டாக்கிட்டு.

அப்போதுதான் அக்னி நிலாவுக்கு மண்டையில் உரைத்தது, இந்த விஷத்தை தனியாக வசியிடம் பேசி இருக்கணும் தவறு செஞ்சிட்டேன். கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கணும்.

வேற எப்படி வசிக்கு நான்தான் நீங்கள் காதலித்த பெண் அதுமட்டும் இல்லாமல் போன ஜென்மத்தில் நான் காதல் மனைவி என்று எப்படி சொல்வது என்ற யோசனையில் அமர்ந்து இருந்தால் ' சொன்னாலும் நம்பாது இந்த ஜென்மம்.

ஆகாஷ் அவன் கழுத்தில் இருக்கும் சாவியை மிகவும் பாதுகாப்பாக வைத்து இருந்தான், சைலுவை ஒரு தாங்கு தாங்கினான்.

ராஜா அனைவர்க்கும் செய்தி அனுப்பினான் வசியை தவிர்த்து சில சமயம் அவனுக்கு சொல்லி புரியவைக்க முயற்சி செய்த போதும் போங்கடா சும்மா விளாடிட்டு என்று அவர்கள் சொல்ல ஆரம்பிக்கும் போதே தடுத்து விடுவான் வசி.

வசி புரிந்துகொள்ளும் நாள் என்னாளோ.

மாயா மாயம் செய்ய வருவாள்.
 
22. மாய நிலா

வசி மற்றும் மாயா உருவில் வந்த சகுந்தலா ஆட்டம் தொடங்கியது அக்னியை வெறுப்பேற்றினாள்.

அக்னி நிலா பார்க்கும் போது வசியை நெருங்கி அமர்வது கன்னத்தில் முத்தம் கொடுப்பது என்று சகுந்தலா எதாவது ஒன்று செய்துகொண்டே இருந்தாள்.

அக்னி ஆத்திரத்தை அடக்க முடியாமல் சில சமயம் ருத்ரா பேசுவதற்கு சம்பந்தம் இல்லாமல் எரிந்து விழ ஆரம்பித்தாள்.

ருத்ராவும் அவளது மன நிலையை புரிந்துகொண்டு அமைதியாக இருந்துவிடுவான்.

வசி சகுந்தலாவுக்கு அனைத்தும் பார்த்து பார்த்து செய்தான். அவளுக்கு உணவு முதல் அவளுக்கு ஆடை வரை அவனே அவளுக்கு தேர்வு செய்வது என்று ஏதோ கணவன் போல செய்துகொண்டு இருந்தான்.

அக்னி நிலா அதன் பிறகு வசி சகுந்தலா ஒன்றாக இருக்கும் சமயத்தில் தனியாக சென்று அமர்ந்து கொள்வாள். மிஸ்டர் ஜீரோ தான் எதாவது பேசி அவளை சரி கட்டுவான். அவளது மன நிலையை மாற்ற அடிக்கடி வெளியே கூட்டிச்செல்வான்.

ருத்ராவின் தேடல் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தான், அவன் மறந்ததை அன்று என்ன நடந்தது என்று சகுந்தலா பி. எ வுக்கு மட்டும் தான் தெரியும், அவனை தேடிப் போன சமயம் அவன் இறந்தது தெரிய வந்தது.

சகுந்தலா வசி உடன் வரும்போது அவனுக்கு தோன்றியது இவளுக்கும் ரூபிக்கும் ஏதோ செய்துவிட்டாள் என்று, ஆனால் ரூபி போன துக்கத்தில் அவன் போக்கே மாறியது சோகத்தை மறைக்க நிறைய உற்சாகமாக இருப்பது போல காட்டிக்கொண்டான். அதன் பிறகுதான் அவன் கண்டு பிடிக்கும் அனைத்தும் தடாலடியாக விளையாட்டு பிள்ளை போல செய்து வாரத்துக்கு ஏழு ஆய்வு கூடத்தை எரித்துக்கொண்டு இருந்தான். இதையே வாடிக்கையாகவும் வைத்து இருந்தான். அதன் பிறகு அவனிடம் மனதில் பேசும் அக்னி நிலாவின் பேச்சும் இல்லாமல் போனது. ருத்ரா தனிமையில் இருந்த போது அவனுக்கும் நிலா தான் துணை. அந்த நிலாவை தனியாக அவன் மட்டும் ரசிக்க வேண்டும் என்று நிறைய வேலைகள் செய்து விட்டு தனியாக கிளம்பும் போதுதான். அக்னி நிலாவை சந்தித்து அவனது தனிமையை போக்கினாள் அக்னி நிலா.

அவன் தனிமையை போகியவள் மீது அலாதி பிரியம் ருத்ராவுக்கு.

வசி செயல் அக்னி நிலாவை வெறுப்பேற்றியது. இவனை இன்றே கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவைத்திருந்தான் வசி.

சகுந்தலா அக்னி நிலாவை வெறுப்பேற்ற ஒரசிக்கொண்டிருந்தாள் அவனை, வசியும் பெரிதாக சகுந்தலாவை நெருங்க வில்லை. அவனுக்கு கிடைக்கும் ஆதாரங்கள் எப்படி காணாமல் போகிறது என்று குழம்பினான்.

'கூட வருவது சகுந்தலா தான் ஆனா அவள் பார்க்க அப்பாவி போல இருக்காளே, ஒரு வேலை எதாவது திட்டத்தோட வந்து இருப்பாளா' என்று யோசித்தான் வசி, ஆனால் மறு நொடி 'நல்ல பொண்ணு ரொம்ப அமைதி, இங்க இருக்கவங்க கிட்ட கூட பெருசா பேசிகறதில்ல'. வசி அவன் எண்ணத்தோடு பயணித்துக்கொண்டிருக்க.

வசி தூங்க போகும் போது சகுந்தலா முன் வந்து "நானும் உங்க கூட படுத்துக்கவா எனக்கு தூக்கமே வருவதில்லை புதுயிடம்ல" என்று சொல்ல.

"சரி வா, நம்ம பேசிட்டு இருக்கலாம்" என்று வழக்கமாக வசி படுக்கும் இடத்தில் அமர்ந்தான். சகுந்தலா வசி கால் மீது தலை வைத்து படுத்துக் கொண்டு ஏதோ பேசி சிரித்துக் கொண்டு இருந்தார்கள். வசி தான் நெளிந்துகொண்டு இருந்தான், அவனுக்கு இது ஏதோ ஒரு ஒவ்வாமையை தந்தது.

அக்னி நிலா கண்ணிலும் இது பட்டது வசியை முறைத்துக் கொண்டே ஆத்திரம் தீரும் அளவுக்கு தண்ணீர் குடித்து விட்டு மிஸ்டர் ஜீரோ மற்றும் ருத்ராவின் காது கிழியும் வரை புலம்பிக் கொண்டு இருந்தாள்.

ருத்ராவும் அக்னியை சமாதானப் படுத்தி தூங்க வைத்தான்.

வசிக்கு அந்த ஆதாரத்தை எடுத்தவனையும் கண்டு பிடிக்கணும், வேலையும் காதலும் ஒன்னா செய்யக் கூடாது என்று உருப்படியான ஒரு வேலையை செய்தான் வசி.

அடுத்தநாள் சகுந்தலாவும் தயாராகி வர "நம்ம ஈவினிங் வெளியே போலாம் சகுந்தலா, எனக்கு ரொம்ப இம்பார்ட்டண்ட் ஒர்க் இருக்கு" என சகுந்தலாவை கழற்றிவிட்டு வெளியே கிளம்பினான் வசி.

முதலில் வசி மொத்தமாக எவ்வளவு பேர் இந்த அகழ்வாராய்ச்சி சம்பந்த பட்டவர்கள் இறந்து இருக்கிறனர் என்று கணக்கு எடுத்தான். இன்னும் மிச்சமிருப்பவர்களை தோடினான்.

தீ விபத்து நடந்து இருக்கிறது சில மாதத்துக்கு முன்னால் ஒருவர் உயிர் பழி, மற்றவர்களுக்கு சிறு காயம் கூட இல்லை. அது வேற யாரும் இல்லை சகுந்தலாவின் பி. எ அவளை எதிர்த்து ஒரு செயல் செய்தான் அப்போது கோபம் வந்த அவள் அருள் மீது தீ வைத்துவிட்டாள்.

குடும்பத்தை எதும் செய்யவில்லை, அவர்களுக்கு சகல வசதியும் செய்து கொடுத்து அருள் குடும்பத்தில் நல்ல பேர் வாங்கிக்கொண்டாள். இந்த நிகழ்வுக்கு அவளுக்கு சிட்டியில் அவார்ட் எல்லாம் கொடுத்தார்கள்.

வசி அந்த அருளை பற்றி ராஜாவிடம் விசாரிக்க சகுந்தலா பற்றியும் அவள் எந்த தவறு செய்தாலும் அவளுடன் வருபவன். ஆனால் தனிப்பட்ட முறையில் ரொம்ப நல்லவன் அருள் வீட்டு தேவைக்கு மட்டும் பணம் எடுத்துக்கொண்டு மொத்தமாக கொடுத்துவிடுவான் அனாதை குழந்தைகளுக்கு.

வசிக்கு விசித்திரமாக இருந்தது, சகுந்தலா நல்ல ஆளு போல இருக்கே.

ராஜா வேண்டும் என்றே சகுந்தலா பெயரை அழுத்தி சொன்னான். 'இந்த முட்டாள் அரசனுக்கு இப்போவாவது உண்மை தெரிகிறதா என்று பார்ப்போம்'.

சகுந்தலா அவளது மந்திர சக்தி மூலம் வசி செல்லும் இடத்தை அறிந்து கொண்டவள். அருள் வீட்டுக்கு அழைப்பு போய்க்கொண்டே இருந்தது யாரும் எடுக்க வில்லை.

குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கோவிலுக்கு போய் இப்போதுதான் திரும்பிக்கொண்டு இருந்தார்கள்.

இவர்கள் அழைப்பை எடுக்காததால் சகுந்தலாவே அவர்கள் வீட்டுக்கு வந்தாள்.

யாருக்கும் தெரியாமல் அங்கு தோட்டத்தில் வேலை செய்துகொண்டு இருக்கும் பெண்ணின் உருவம் மாற்றிக்கொண்டு அவளது புகைப்படம் எதாவதுஅங்கிருக்க வாய்ப்பிருக்கு, அதனை அப்புறப்படுத்த மாறு உருவத்தில் உள் நுழைந்தாள். அங்கிருக்கும் அவளது சம்பந்தப்பட்ட போட்டோ அனைத்தும் ஒழியவைத்தாள்.

வசி வாசலில் நின்று கொண்டு இருந்தான் இவர்கள் வருகைக்காக. வாட்ச்மன் வீட்டில் யாரும் இல்லை என்று சொல்லிவிட்டான், "எங்க போய் இருகாங்க?" என வசி விசாரிக்க.

"பக்கத்துல இருக்க கோவிலுக்கு ஐயா சீக்கரம் வந்துடுவாங்க, நீங்க உள்ள உட்காருங்க ஐயா" என வசியின் போட்டிருந்த உடுப்புக்கு மரியாதை தந்து உள்ளே அனுப்பினான்.

வசியும் உள்ளே போகும் போது, வீட்டை சுற்றி பார்த்தான் என்ன அரண்மனை போல காட்சி அளித்தது.

'சாதாரண ஊழியருக்கு எதுக்கு இவ்ளோ பெரிய வீடு?' என்று வசி ஒரு குழப்பத்தோடு வீட்டில் நுழைந்தான்.

அங்கு இருக்கும் பொருட்களை பார்த்தான் அனைத்தும் விலை உயர்ந்ததாக இருந்தது.

உள்ளே மாறுவேடத்தில் நுழைந்த சகுந்தலா அனைத்தும் எடுத்து விட்டோம் என்று பெருமூச்சி விட்டதும் வசி உள்ளே வந்தான், அவனை பார்த்து ஒரு உடனே நடுங்கி விட்டாள்.

"என்னமா பாத்துட்டு இருக்க போ, தண்ணீர் கொண்டு வா".

"சரி ஐயா".

"இவ எதுக்கு நடுங்கரா" என்று யோசித்தவன் அங்கு இருக்கும் போட்டோ ஆல்பத்தை பார்த்துக்கொண்டு இருந்தான்.

அதில் சகுந்தலா போட்டோ இருந்தது, என்ன நம்ம ஆளு போட்டோ இருக்கு என்று யோசித்தவன் பின்னால் வந்து நின்ற வேலைக்காரி உருவில் இருந்த சகுந்தலா, அவன் அவளது போட்டோ பார்த்துவிட்டதை எண்ணி கையிலே இருந்த கண்ணாடி ஜூஸ் கிளாஸ் கைத்தவரி போட்டாள்.

"பாத்து மா, கை குத்திக்க போது" என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்த புகைப்படத்தை பார்க்க இப்போது வேறு ஒரு உருவம் இருந்தது. சகுந்தலா அனைத்தையும் மாற்றி விட்டாள் அவளது மந்திர சக்தியால்.

'நம்ம சகுந்தலாவை நினைத்து இருக்கோம், அதுதான் காதல் முத்திடுச்சி' என்று நினைத்தான். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் உள்ளே வரும் போது சகுந்தலா அங்கு இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறினாள்.

அருள் குடும்பம் வந்தது வசி அவன் விசாரணையை தொடர்ந்தான், அவர்களிடம் அவரது கணவன் இறப்பை பற்றியும் சகுந்தலா செய்த உதவியும் சொன்னான்.

"சகுந்தலா இருக்கும் போட்டோ காட்டுங்க" என்று சொன்னவன் திரும்பி அங்கு ஆள் உயரம் இருக்கும் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்தான் வசி காதலிக்கும் சகுந்தலாவும் இப்போது சந்தேகத்தின் பேரில் இருக்கும் சகுந்தலாவும் ஒன்று.

அந்த இறந்த ஆய்வாளர் தலைமை பொறுப்பில் இருந்ததார் இவள பார்க்க போனது போல இருந்து மாயா பேரில் அவள் என்னிடம் எதற்கு வரவேண்டும்.

வசிக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. எதிர்ச்சியாக அருளின் மகள் கழுத்தில் இருந்த டாலர் பார்த்துவிட்டு.

"அதை கொஞ்சம் கழட்டி கொடு மா".

அந்த பொண்ணும் தயக்கத்தோடு கழட்டி கொடுக்க, அதனை பிரித்தவன் கையில் ஒரு சிப் வந்து விழுந்தது ஒரு சிறு காகிதமும் அதனுள்ளிருந்தது. "அக்னி நிலா" என்று எழுதி இருந்தது அந்த சிறு துண்டுகாகிதத்தில். வீட்டிலிருக்கும் அனைவரையும் வசி ஒரு பார்வை பார்த்து.

"இதை பற்றி எதும் யாரிடமும் சொல்லக்கூடாது முக்கியமா சகுந்தலாவிடம், உங்க புருஷன் செத்தது விபத்து இல்லை கொலை" என்று மனைவியிடம் மட்டும் சொல்லிவிட்டு வசி கிளம்பினான். அதனை சொன்னதுக்கு காரணம் இந்த விஷயம் சகுந்தலாவிற்கு தெரியக்கூடாது என்பதற்காக.

வசி யோசனையாக வெளியே வந்தான். தோட்டத்தில் வேலைக் கார பெண் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தாள், வசி யூகித்துவிட்டான் வந்தது சகுந்தலாவாகத்தான் இருக்கும் என்று.

அந்த பெண் உடை முழுவதும் அங்கங்கு சேறு அப்பி காய்ந்து இருந்தது. உள்ளே இருந்தவளும் இவளும் ஒன்று இல்லை என்று யூகித்தவன் ருத்ராவிற்கு அழைத்தான்.

"ருத்ரா என் ஆளு என்ன செஞ்சிட்டு இருக்கா?".

"இப்போதான் வெளியே போனாள்" சொல்லி முடிப்பதற்குள் சகுந்தலா அங்கு வந்து நின்றாள் மூச்சி வாங்க. அவளது பதட்டத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நின்று இருந்த சமயம். "சகுந்தலாவே வந்தாச்சு" என்று போனை கொடுத்துவிட்டு அங்கு இருக்கும் இருக்கையில் அமர்ந்தான் ருத்ரா.

"சகுந்தலா என்னாச்சி ஏன் இவ்ளோ மூச்சி வாங்குது?".

"வெளியே கொஞ்சம் நடந்துட்டு வந்தேன் ஒரு நாய் துரத்திட்டு வந்தது அதான் ஓடி வந்தேன், சரியா மூச்சி வாங்குது" என்று பொய்யையும் உண்மையையும் சேர்த்து கோர்த்து ஒருவழியாக சொல்லி முடித்தாள் சகுந்தலா.

"சரி சாயந்தரம் தயாராக இரு நான் வரேன் கொஞ்சம் வெளியே போகலாம்."

சகுந்தலாவிற்கு இப்போது தான் மூச்சே வந்தது "சரிங்க நான் தயாராகுறேன்" போனை வைத்துவிட்டு ருத்ராவிடம் கொடுத்தான்.

"உன் அழிவு நெருங்கிவிட்டது".

சகுந்தலா "என்ன?" என்றாள் ருத்ராவை முறைத்து.

"படம் பேரு கொஞ்சம் பழைய படம்‍, நான் படம் பார்க்க போறேன் வரையா?".

"இல்லை நான் வரல" என்று சகுந்தலா அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

வசி வந்ததும் அவளை அழைத்து சென்றான் என்றும் இல்லாமல் அவளை மிக அருகில் நிற்பதும். இவளும், அவன் காதலித்ததும் ஒரு பெண்ணா என்று சோதிதான். இன்று பார்த்து அக்னி நிலாவின் மோதிரத்தை சகுந்தலா எடுத்து வர மறந்திருந்தாள்.

வசி கண்டு கொண்டவன் பெரியதாக காட்டிக்கொள்ளவில்லை. காரணம் இவள் எதற்க்கு வந்து இருக்கிறாள் என்று தெரிந்த பின்புதான் எதாவது செய்ய முடியும் என்று வசிக்கு தெரிந்தது. சகுந்தலாவிடம் சந்தேக பார்வை வீசாமல் சாதாரணமாக பார்த்தான்.

சாந்தி ஒரு புறம் அவளுக்கு கிடைத்த செய்தியை வைத்து கண்டு பிடித்ததை வசியிடம் சொல்ல வந்தாள். சகுந்தலா இருப்பதை பார்த்து அதனை சொல்லாமல் அவளுடன் எடுத்து சென்று விட்டாள்.

சாந்தி கொண்டு வந்த புத்தகத்தில் அனைத்து கேள்விக்கும் பதில் இருந்தது.

முன் ஜென்மத்தில் நடந்ததை ஒன்று விடாமல் அக்னி நிலா எழுதி வைத்து இருந்தாள் புகைப்படத்தோடு. இதை பார்த்தால் வசி நம்புவாங்க என்று நினைத்தாள். ஆனால் சகுந்தலா முன்பு இதனை காண்பிப்பது ஆபத்து என்று புரிந்து கொண்டவள் அந்த பழைய கதையை திரும்ப படித்துக்கொண்டு இருந்தாள்.

அக்னி நிலாக்கு நடந்தது என்ன? அவளது நினைவுகளுடன் சேர்ந்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவாளா?

மாயா மாயம் செய்ய வருவாள்...
 
23 மாய நிலா

அக்னி நிலா பிறந்தநாள் அன்று பலத்த மழை, இடி என்று காடே அனைவரையும் பயம் காட்டியது. அந்த சில மணி நேரத்தில் போன ஜென்மத்தில் ஒரே நாளில் இறந்த அனைவரும் பிறந்தார்கள், பல்வேறு இடத்தில்.

இது இவர்கள் இறப்பிலே முடிவு ஆனதுதான் மீண்டும் பிறப்பெடுத்து அவர்கள் வாழாத அந்த வாழ்வை மறுபிறவியில் வாழ நினைத்தார்கள். ஆனால் விதி மீண்டும் விட்டதிலிருந்து தொடங்கியது. இவர்களுடன் சேர்ந்து கெட்ட குணம் கொண்ட சகுந்தலாவும் வரவிருப்பது விதியின் விளையாட்டு போல.

முதலில் அவதரித்தது ருத்ரன் சந்திரனின் முழு அருள் பெற்று பிறந்தான். அன்று நிலவு சந்தோசத்தின் வெளிப்பாடக தங்கமும் வெள்ளியும் கலந்தது போல வெளிச்சத்தால் நிரப்பியது, அந்த இரவை பகல் நேரம் போல.

அடுத்து வசி பிறந்தான், அமைதியான சூழலில், அவனை தொடர்ந்து அர்ஜுன், ஆகாஷ், சாந்தி, ரோஸ், ஆதிரா, சைலு என அனைவரும் வெவ்வேறு சூழலில் பிறந்திருந்தார்கள்.

கடைசியாக அக்னி நிலாவும், சகுந்தலாவும் ஒரே நேரத்தில் ஒரே தாயின் வயிற்றில் யார் “முதலில் யார் வருவது?” என்று போட்டிப்போட்டுக் கொண்டு இருந்தார்கள் அவர்களின் தாய் வயிற்றில்.

அக்னி நிலா வெளி வருவதற்குள், சகுந்தலா தாயின் உயிரையும் அக்னி நிலா உயிரையும் எடுத்துவிட்டு முதலில் வெளியே வந்தாள்.

யாருக்கும் சக்தி இல்லை, பிறந்த போதே அபறிவிதமான சக்தியோடு வெளியே வந்த சகுந்தலா, அவளுக்கான வழியை அப்போதே தேடத் துவங்கிவிட்டாள், அறிவியலை தன் கைக்குள் வைத்துக்கொள்ள.

அக்னி நிலாவின் தந்தை, இறந்த மனைவியையும் குழந்தையையும் நினைத்து அழுவதா, இல்லை இருக்கும் ஒரு குழந்தையை வைத்து வாழ்வதா என்று குழம்பிய சமயம். காதல் மனைவி இல்லாத உலகில் அவருக்கு வாழ சுத்தமாக விருப்பமில்லை.

அந்த சமயம் மலைக்கு ஒதுங்க வந்த அந்த மாவட்டத்தில் தலைமை இடத்தில் இருக்கும் ஒரு அலுவலர், இவர்கள் வீட்டு பக்கம் வந்து நின்றார்கள், மழையின் புயல் வேகத்துக்கு பயந்து.

இவர்களுக்கு பல வருடங்கள் குழந்தை இல்லாமல், எதோ பரிகாரம் செய்ய காட்டு கோவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் மழையில் மாட்டிக்கொண்டார்கள்.

ஏற்கனவே அந்த அலுவலரை அக்னி நிலா தந்தைக்கு தெரிந்து இருந்தது.ற

“ஐயா எனக்கு வாழ பிடிக்கல, என் மனைவி இல்லாத உலகில், உங்களுக்கு குழந்தை இல்லைனு எனக்கு தெரியும் இந்த குழந்தையை நீங்க வச்சிக்கோங்க”.

இருவரும் ஒருவர் முகம் மாற்றி பார்த்துக்கொண்டு, “சரி ஆனா நீங்க உயிரோட இருக்கிறதா இருந்தா நாங்க வாங்கிக்குறோம்”.

அக்னி நிலா அப்பாவுக்கும், இறைவன் கொடுத்த உயிர் இறைவனே எடுத்துக்கட்டும் என்று நினைத்து “சரி” என்று சகுந்தலாவை அவர் கையில் கொடுத்துவிட்டார்.

“நாங்க கிளம்பறோம்” என்று அந்த தம்பதிகள் அந்த இடத்தைவிட்டு கிளம்பினர். போகும் முன்பு “உங்க குழந்தையை எப்போ பார்க்க தோணினாலும் வந்து பார்த்துட்டு போங்க” என்று சொல்லிவிட்டு தான் சென்றார்கள்.

சகுந்தலா அந்தயிடத்தைவிட்டு செல்லவும் மழை நிற்கவும் சரியாகயிருந்தது.

இறந்த மனைவியையும் குழந்தையையும் அக்னி அப்பா கண்களில் கண்ணீரோடு காட்டு பகுதிக்கு கொண்டு சென்றார் இறுதி சடங்கு செய்ய.

இருவரையும் ஒன்றாக புதைக்க மண் வெட்டிக்கொண்டு இருந்தார் கண்களில் கண்ணீர் வடிய. புதைக்க கூட அங்கு ஆட்களில்லை தனியாகதான் அனைத்தும் செய்தார், புதைக்கும் முன்.

மனைவியையும் குழந்தையும் கட்டி அழுதுகொண்டு இருந்த சமயம் குழந்தைக்கு ஏதோ ஒரு துடிப்பு இருப்பது போல தெரிந்தது மண் வெட்டுவதை விட்டுவிட்டு குழந்தையை தூக்க.

குழந்தையை தூக்க முடியாமல் போனது அவரால் என்ன என்று பார்க்கும் போதுதான் தெரிந்தது அந்த வேர் மரத்தின் விழுதுகள் அக்னி நிலாவை சிறிது சிறிதாக மேலே தூக்கியது. தனக்குள் அந்த மரம் இழுத்துக் கொண்டது இங்கு நடக்கும் அதிசயத்தை பார்த்து பிரமித்து நின்று இருந்தார் அக்னியின் அப்பா.

வானம் நெருப்பு போல சிவந்தது அந்த நேரத்தில், பால் நிலவின் ஒளி கண்கள் கூசியது.

அவரின் இறந்த குழந்தையின் உடலை உள்ளே இழுத்தது, அக்னி நிலா தந்தை பதறிவிட்டார். விழுதுகள் அதன் சக்தியை அக்னி நிலாவின் உடலில் செலுத்தி உயிருடன் திருப்பி கொடுத்தது, அக்னி நிலா அப்பா கைகளில்.

விழுதுகளின் கைகளிலிருந்து அவளை வாங்கி அணைத்துக் கொண்டவர், நிலா ஒளியில் வேர் மரத்தின் சிவப்பு கைகலால் அவளை வாங்கி அடுத்த நொடி அக்னி நிலா என்று பெயர் வைத்தார்.

அக்னி நிலா அன்னையை நோக்கி கை நீட்ட நிலா அப்பா அருகில் படுக்க வைத்தார். அக்னி நிலா கை பட்டதும் அன்னையின் கண்களை மெல்ல திறந்தார்.

கண் திறந்து குழந்தையயை வருடிக்கொண்டு இருந்தவர், “ஏங்க இங்க இருக்கோம்”, நடந்ததை சொல்ல, ஆச்சர்யமாக இருவரும் குழந்தையை பார்த்தார்கள்.

கொடுக்கப்பட்ட குழந்தையை பற்றி நிலாவின் அப்பா மறைத்திருந்தார்.

அக்னி நிலா அழகிலும் அறிவிலும் அதிக ஆற்றல் பெற்று பிறந்து இருந்தாள்.

கேள்வி கேட்டு கேட்டு அன்னையையும் தந்தையையும் ஒரு வழி செய்து விடுவாள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது.

அவள் கேட்கும் கேள்விக்கு பெற்றவர்கள் பதில் தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தார்கள். அதும் இல்லாமல் இவர்கள் காட்டு பகுதியில் வசிப்பதால், பள்ளிக்கூடமும் பெரியதாக இல்லை 10 ஆம் வகுப்பு வரைதான் இருந்தது.

அக்னி நிலா வெளியே நண்பர்களோடு விளையாட சென்று இருந்தாள். ஆதிரா அப்போதுதான் அறிமுகம் ஆனால், புதியதாக அந்த காட்டை ஆராய்ச்சி செய்ய இரு குடும்பம் வந்தது, அதில் அர்ஜுன் குடும்பமும், ஆதிரா குடும்பமும் சேர்ந்து அந்த காட்டில் செடி கொடிகளின் தன்மையை ஆராய்ச்சி செய்யத் துவங்கினார்கள்.

மூவரும் ஒரே வயதில் இருந்ததால் சீக்கிரமே நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டார்கள்.

அர்ஜுனும் சரி ஆதிரையும் சரி அக்னி நிலாவை சிறுவயதில் இருந்து தாங்கினார்கள்.

குழந்தைகள் மூலமாக பெற்றோர்களும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.

அர்ஜுன், ஆதிரா அப்பாக்கள் இருவரும் காட்டில் ஆராய்ச்சி செய்ய அவர்களுக்கு உதவியாக நிலா அப்பா கூட செல்வது என இன்னும் நெருங்கிய நண்பர்களாகினார்கள்.

நிலா அப்பாவுக்கும் சில மரத்தின் பண்புகள் அதனை உபயோகிக்கும் முறையும் தெரியும் கிட்டத்தட்ட படிக்காத சயின்டிஸ்ட் அக்னி நிலா அப்பா. மூவரும் சேர்ந்து வித்யாசமான செடிகளை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார்கள்.

மூன்று இல்லத்தரசிகளும் சேர்ந்து நாள் முழுவதும் தேடி அலைந்து வரும் கணவர்களுக்கு ஒன்றாக சமைப்பது, குழந்தைகளை பார்த்துக் கொள்வது இப்படியே இனிமையாக இவர்கள் வாழ்க்கை நகர்ந்துக்கொண்டு இருந்தது.

சகுந்தலா அவளது சக்தி கொண்டு தோட்டத்துல எல்லாம் வைரமாக மாற்றிக்கொண்டு இருந்தாள். சிறுவயது ஆனால் அவள் அப்போதே 60 வயது உடையவர்களின் அறிவு. மாவட்டத்தில் ஒரு ஓரத்தில் வேலை செய்து கொண்டு இருந்த வளர்ப்பு அப்பா. உலக அளவில் மருத்துவ துறையில் தலைமை இடத்தில் இருந்தார் சகுந்தலாவின் தந்திரத்தால்.

அவளும் தக்க சமயத்துக்கு காத்துக் கொண்டு இருந்தாள், அக்னி நிலாவை சிறப்பாக வைத்து செய்ய. ஆனால் அதற்கான பலம் இன்னும் வேண்டும் என்று தந்தை தொழிலையும் நிலையையும் இன்னும் அதிகரிக்க, என்ன செய்ய முடியுமோ அனைத்தும் செய்தாள் அவள் மாய சக்தி கொண்டு.

அக்னி நிலாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சக்தி இல்லாவிட்டாலும் இப்போது எல்லாம் அவள் கேட்கும் கேள்விக்கும் பதில் உடனடியாக கிடைத்தது.

இவள் மனதில் நினைக்கும் சமயம் பல ஆயிரம் கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ருத்ராவிற்கு கேட்கும் அவனுக்கு தெரிந்த பதிலை மனதில் சொல்லிவிட்டு, தெரியாத கேள்விக்கு பதில் தேடி சொல்லுவான்.

டெலிபதி இருவருக்குமிடையில் தொடங்கியிருந்தது, பள்ளி இறுதிகட்டத்தில் இருந்த போது ஏற்பட்ட இந்த நட்பு தெடர்ந்தது. ஆனால் இதுவே ருத்ரா தேடி தேடி படித்துக்கொண்டு இருந்தான்.

அக்னி நிலாவிற்கு சில சமயம் வசி குரலும் ருத்ரா மூழியமாக கேட்கத் துவங்கியது, வசீகரமான வசீகரனின் குரல் அவளை சில சமயம் தூங்க விடாமல் செய்துவிட்டது, 12 வது முடித்த சமயம் வசியை பார்க்காமலே காதலிக்கத் துவங்கினாள். இது அனைத்தும் ஒரு கற்பனை என்று தான் அக்னி நிலா நினைத்திருந்தாள்.

ருத்ராவிடம் சந்தேகம் மட்டும் கேட்டுக் கொண்டு இருந்ததைவிடுத்து.

ருத்ராவிடம் பேசவும் துவங்கினாள் அக்னி நிலா, தெலைபேசி செலவேயில்லாமல் மணி கணக்காக இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பெரும்பாலும் இரவு சமயத்தில் அமைதி சூழலில் மட்டும் இருவரும் பேசுவது நன்றாக கேட்கும். மற்ற நேரங்கள் இருவராலும் தொடர்பு கொள்ள முடிவதில்லை என்ன தான் பேசிக்கொண்டிருந்தாலும்.

“ஹலோ நான் பேசுறது கேக்குதா?”.

ருத்ராக்கு இதைப் பற்றி படித்த அறிவு இருந்தாலும் அவன் நினைத்தது என்னவென்றால் நமக்கு எழும் சந்தேகத்துக்கு லேடி வாய்ஸ் மனதில் நினைத்துகொண்டோம் போல என்று.

“ஹாய் நீ” என்றான் ருத்ரா தயங்கிக்கொண்டே.

“எனக்கு இவ்ளோ நாள் பதில் சொன்னது நீங்களா?”.

“கேள்வி கேட்டது நீங்களா?”.

“ஆமா ஆச்சர்யமா இருக்கு, இவ்ளோ நாள் நான்கூட என்னோட மைண்ட்க்கு லேடி வாய்ஸ் கொடுத்துட்டேன்னு நினச்சேன்” என்றான் ருத்ரன்.

ருத்ரா பேச்சை கேட்டு அக்னி நிலா சிரித்துக்கொண்டு இருந்தாள்.

இப்படியே துவங்கியது இவர்களின் பேச்சி.

சிறிது சிறிதாக வசி பற்றியும் அவள் அவனுக்கே தெரியாமல் அவனை பற்றி சேகரிக்க துவங்கினான்.

அழுக்கு ஒரு பக்கம் கல்லூரி சேர்ந்து இறுதி ஆண்டும் படித்து முடித்தார்கள்.

அடிக்கடி பேசிக்கொண்டு இருந்த ருத்ராவும் அக்னி நிலாவும் எப்போவாவது பேசத் துவங்கினார்கள்.

ருத்ராவின் திறமையை கண்டு அரசாங்க ஆய்வுக்கூடம் பெயரளவில் மட்டும் தான் மற்றபடி சகுந்தலாவின் பெரிய சாம்ராஜ்யம் அது.

அந்த கூடத்தில் பணி கொடுக்கபட்டது ருத்ராவிற்கும் ஆகாஷ்க்கும்.

திடீர் என்று அக்னி நிலா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் சகுந்தலா. அவளுக்கு தேவையான அனைத்தும் இருக்கிறது, ஆனால் அக்னி நிலா உயிரோடு இருக்கக்கூடாது. இதுமட்டும் தான் அவள் சிறு வயதில் இருந்து மனதில் விஷத்தை விதைத்து அது விருட்சமாக வளர்ந்து நின்றது.

அனைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்த சமயம் அர்ஜுன், ஆதிரா, அக்னி நிலா மூவரும் டென்னிஸ் விளையாடிவிட்டு உள்ளே வரும் போது.

அக்னிக்கும், அக்னி அம்மாவிற்கும் சொல்லப்பட்ட செய்தி கேட்டு அக்னி அம்மாக்கு சகுந்தலாவை பார்த்து ஆனந்த கண்ணீர் பொங்கியது.

சகுந்தலாவுடன் அவளை வளர்த்தவர்களும் வந்து இருந்தார்கள், மூவர் குடும்பமும் ஒரு வீட்டில் மூனு போர்சன் கட்டி ஒன்றாகத்தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அனைவரும் சாப்பிட உட்காற அக்னி நிலா சகுந்தலாவை யோசனையாக பார்த்துக் கொண்டு இருந்தாள். சகுந்தலாவை பார்த்து அக்னிக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை. அவளை பார்த்தது பாச உணர்வு வருவதற்கு பதிலாக வெறுப்பு உணர்வு தான் வந்தது, அனைவரும் சாப்பிட்டு முடிந்தபின்பு சிறுவர்கள் நால்வரும் சாப்பிட அமரும் போது சகுந்தலா தான் பாசமாக உணவு மூவருக்கும் பரிமாறினாள்.

அர்ஜுன், ஆதிரா உம் சாப்பிட துவங்க அக்னி நிலாக்கு பசிக்கவில்லை என்று அமர்ந்து இருந்தாள்.

வீட்டில் உள்ளவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் மயங்கி சரிந்தார்கள்.

சகுந்தலா பெற்றவர், வளத்தவர் என்று எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைவர்க்கும் விஷம் வைத்து விட்டாள். இவர்கள் கிட்சனில் இருந்தாதால் அங்கு நடப்பது இந்த மூவருக்கும் தெரியவில்லை.

சகுந்தலா கை கடிகாரத்தை பார்த்து, “எல்லோரும் கிளோஸ்” என்று மனதில் நினைத்தவள்.

அர்ஜுன் ஆதிரா சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை பார்த்து கொஞ்ச நேரத்தில் இவங்களும் காலி ஆகிடுவாங்க, இவளையும் நம்ம கையில சாகடிக்கணும்” என்று நினைத்தவள்.

அக்னி நிலாவுக்கும் சகுந்தலா ஊட்டிவிட வந்தாள்.

அக்னி நிலாவும் வேண்டா வெறுப்பாக வாயை திறந்தாள். ஆயிரம் தான் சகுந்தலாவை பிடிக்கலை என்றாலும் அக்காவாச்சே என்று நினைத்து வாயை நம்பி திறந்தாள்.

விஷம் கலந்த சாதத்தை ஒரு வாய் ஊட்டியும் விட்டாள்.

அக்னி நிலா சகுந்தலா சூழ்ச்சியில் இருந்து தப்பிப்பாளா?

மாயா மாயம் செய்ய வருவாள்…
 
24 மாய நிலா

நிலா அப்பா நடக்க போகும் விபரீதம் புரிந்து, மயங்கியபின் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று ஓடி வந்தார். அவர் வருவதற்குள், அர்ஜுனும் ஆதிராவும் மயங்கி சரிந்தார்கள்.

சகுந்தலா இரண்டாம் வாய் அக்னி நிலாவுக்கு ஊட்டிவிட்டு வரும்போது பக்கத்தில் சரிந்து விழுந்தவரை பார்த்து பதறினாள்.

“அர்ஜுன் என்னாச்சி, ஆதி எந்திரி டி” என்று இருவரையும் உளுக்கி எழுப்ப முயற்சி செய்துகொண்டு இருந்தாள்.

சகுந்தலா தான் ஏதோ செய்துவிட்டாள் என்று நிலா அப்பா, அந்த சாகும் தருவாயில் போராடி சட்டென்று விழித்துக்கொண்டவர். தலையில் யாரோ சுத்தியால் அடிப்பது போல இருந்தது.

அந்த வலியை சமாளித்துக் கொண்டு எந்திரித்து நின்றவருக்கு அனைத்தும் இரண்டு இரண்டாக தெரிந்தது.

ரெண்டு அடி எடுத்து வைக்கவே அவ்ளோ சிரமப் பட்டு அவர்கள் உயிர் போனாலும் பரவாயில்லை குழந்தைகளின் உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்று விரைவாக இவர் அப்பா வருவதற்குள் சகுந்தலா நினைத்தது நடந்தந்து, மூவரும் உணவை சாப்பிட்டு விட்டார்கள்.

அக்னி நிலா அப்பா ஓடி வந்து அர்ஜுன் அதிரா மயங்கி இருப்பதை பார்த்து. “அர்ஜுன் எந்திரி, ஆதி குட்டி என்னாச்சி, அடிப் பாவி ஏண்டி என் குடும்பத்தை அழிச்ச” சகுந்தலாவை அடிக்க போனார் நிலா அப்பா.

வயதானவர் என்று கூட பார்க்காமல் கீழே தள்ளி விட்டாள், அந்த கொடூர அரக்கி. உங்கள எல்லாம் அழிக்கத்தான் நான் பிறப்பு எடுத்து வந்து இருக்கேன் என்றாள் சாவகாசகமா.

இரு பிள்ளைகள் தான் போய்ட்டாங்க, அக்னி நிலாவாவது உயிர் தப்பிக்கவேண்டும் என்று நினைத்த நிலா அப்பா.

“நிலா இங்க இருந்து போ இந்த பொண்ணு சாப்பாட்டுல ஏதோ கலந்து கொடுத்துட்டா.”

நிலா வெளியே அனைவரையும் விட்டு எப்படி ஓடுவது “இல்லப்பா நானும் உங்க எல்லோரும் கூடவும் வந்துடறேன்” என்று கதறிக்கொண்டு இருந்தாள்.

“இந்த டெத் ட்ராமா எனக்கு பிடிச்சி இருக்கு, ஆனா இன்னும் ரியாலிஸ்டிக்கா வரணும்” என்று சகுந்தலா நிலா அப்பா நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி மிதித்தாள். சகுந்தலாவின் பி. எ மன வருத்தத்தோடு இங்கு நடக்கும் அனைத்தையும் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தான்.

“போயும் போயும் இந்த ராட்சசிங்ககிட்டவா நான் வேலை பார்க்கணும், ரத்தம் குடிக்கும் காட்டேரியை கதைகள் சினிமாவில் மட்டும் பார்க்க பழக்க பட்டவனுக்கு இவை அனைத்தும் ஒரு வித பயத்தை கிளப்பியது அந்த பி. எ க்கு.

“அப்பா” என்று அக்னி நிலா அருகில் சென்று கட்டிக்கொண்டாள்.

“நீ எதுக்கு இப்படி செய்ற என் குடும்பத்தை, ஒரே நாளுல சிதச்சிட்டியே ராட்சச்சி”.

“ஆமாடி நான் ராட்சசி தான், உன்னை கொல்ல மறு பிறவி எடுத்து வந்த ராட்சசி” என்று அகங்காரமாக சிரித்தாள்.

பக்கம் இருந்த அவள் பி. எ வை பார்த்து “ஒழுங்கா கை ஆடாம வீடியோ எடுக்கணும் புரியுதா?” என்று அவனையும் ஒரு மிரட்டிவிட்டு அவனது அதிரும் கைகளை பார்த்தாள். அவள் பார்வை அவனது கைகளில் இருக்கிறது என்று சகுந்தலா பார்வையில் கண்டு கொண்டு மிக சிரமப்பட்டு அவனது பயத்தில் அதிரும் கைகளை இறுக்கி பிடித்து படம் பிடிக்க துவங்கினான்.

“நிலா அம்மா நான் சொல்றதை ஒழுங்கா கேளு, அப்பா கடைசி ஆசை நிறைவேத்து மா” என்று நிலா அப்பா உயிரை விட்டார்.

நிலாவுக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் இல்லாத வாழ்க்கை எனக்கு மட்டும் எதற்கு நானும் சாகுறேன் என்று நினைத்தாள்.

அர்ஜுனிடம் அசைவு இருப்பதை தெரிந்துக்கொண்டவள், சகுந்தலாவுக்கு சந்தேகம் வராத படி, கதறிக்கொண்டு அர்ஜுன் பக்கம் போனாள்.

நிலா மயங்கி கிடக்கும் அர்ஜுனை கட்டிப்பிடித்து. “அண்ணா எந்திரி அண்ணா, அவ பாரு நம்ம குடும்பத்தை கொன்னுட்டா, எந்திரிச்சி அவளை நம்ம எதிர்த்து நிற்கணும்,” என்று கதறிக் கொண்டே சகுந்தலாவிற்கு தெரியாமல் அர்ஜுன் காதில், அர்ஜுன் பாதி மயக்கத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட அக்னி நிலா.

“அண்ணா நான வெளியே ஓடி போறேன் நீ, ஆதிராவை தூக்கிட்டு காட்டு பக்கம் போ, நானும் அங்க வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அக்னி ஓட்டத்தை பிடித்தாள்.

“நினைத்தேன் இவள் அமைதியாக இருக்கும் போதே, டேய்ய் நீ இங்கவே இரு” என்று பி. எ வை இருக்க சொல்லிவிட்டு அக்னி நிலாவை துறத்திச் சென்றாள் சகுந்தலா.

அக்னி நிலாவுக்கு காட்டில் அனைத்து இடங்களும் அத்துப்படி சகுந்தலாவை வேற திசை திருப்பி விட்டு, அழுதுகொண்டே அக்னி நிலா முள் பாதையில் கால்களில் ரத்தம் வழிய வழிய ஓடி வந்தாள். அது ரொம்பவே கடினமான பாதை சில விச முள்கள் அவளது கைகளிலும் கால்களிலும் கீறி ரத்தம் வடிய வடிய ஓடி வந்தாள்.

அர்ஜுன் இருக்கும் இடத்தை நோக்கி வந்தாள், இவர்களுக்கு பிரியமான அந்த வேர் மரம், எப்போதும் பிடித்த இடம், அங்குதான் எப்போதும் சுற்றித் திரிவார்கள். இன்னொரு தாய் மடி போல அவர்கள் மூவருக்கும், நிலா அப்பாகும் அம்மாக்கும் அந்த வேர் மரம் தான் குலசாமி. குடும்பமா இங்கு நடந்த அதிசயத்தை சொல்லிக்கொண்டே இருப்பார். பல ஆயிரம் முறை சொன்ன பிறகும் இது தான் முதல் முறை போல சொல்லுவார் நிலா அப்பா.

அர்ஜுன் ஆதிரா இருக்கும் இடத்துக்கு ஓடி வந்தவள், இருவரும் பாதி மயக்கத்தில் இருந்தார்கள்.

அங்கு ஆதிராவை மயக்கத்திலிருந்து தெளியவைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான் அர்ஜுன்.

அக்னி நிலா அவசரமாக வந்து அங்கு இருக்கும் மரத்தின் முன்பு நின்று.

“அப்பா நிறைய முறை சொல்லி இருக்கார், நீங்கதான் எனக்கும் என் அம்மாக்கும் உயிர் கொடுத்தீங்கன்னு, இது எல்லாம் தெரிஞ்சும் உன்ன நாங்க கடவுளா தான் பார்த்தோம், இது வரை எதும் வேண்டிக்கிட்டது கூட இல்லை. எனக்கு என்ன ஆனாலும் பரவா இல்லை இவங்க உயிரை காப்பாற்றுவது உனது கடமை” என்று மனமுருக வேண்டியபின் அங்கு இருந்த ஒரு விழுது அர்ஜுன் ஆதிரா மற்றும் அக்னி நிலாவையும் தொட்டது.

அந்த வேர் இவர்களை ஒரு சுற்று சுற்றி அவர்களுக்கு உள்ளே இருந்த விஷத்தை உறிஞ்சி எடுத்தது.

அக்னி நிலா அந்த வேர் மரத்துக்கு நன்றி சொல்லிவிட்டு “எனக்கு கொஞ்சம் விழுது கொடுங்க என் குடும்பத்தை நான் காப்பாற்றனும்” வேர் மரமும் அவளது கையில் சில விழுதுகள் கொடுத்தது, மரம் கொடுத்தை கொஞ்சம் எடுத்துக்கொண்டு, மீதியை மரத்திலே வைத்து விட்டாள் அக்னி நிலா. அர்ஜுன் ஆதிராவுக்கு சிறிது மயக்க நிலையில்தான் இருந்தார்கள்.

இருவரையும் அங்கு இருக்கும் ஒரு கொடியை எடுத்து கைகளையும் கட்டிவிட்டு, “இதுக்கு அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது, ஆனா இத நான் நம்ம குடும்பத்துக்காக செய்துதான் ஆகணும், உங்க ரெண்டு பேரையும் நான் மிஸ் பண்ணுவேன், அங்க இருக்க நம்ம குடும்பத்தை நான் காப்பாத்த போறேன், அப்படி இல்லனா அவளை கொல்லப் போறேன், நீங்க ரெண்டு பேரும் உங்க வாழ்க்கையை வாழனும் அதான் என் ஆசை” என்று சொல்லிவிட்டு கிளம்பும் போது இருவருக்கும் மயக்கம் தெளிந்திருந்து.

“அங்க யாரும் உயிரோட இல்லை அக்னி போகாத”.

“அவங்கள காப்பாத்த முடியும்னு எனக்கு தோணுது”.

“சரி கையை அவிழ்த்து விடு நானும் வரேன் அக்னி தனியா போகாத” என்று அர்ஜுன் பாதி மயக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் கையை விலக்க போராடிக் கொண்டு இருந்தான்.

“அர்ஜுன் நான் வளந்துட்டேன் டா, இனி தனியா தான் பிரச்சனையை சமாளிக்கனும்” என்று அவர்கள் இருவரும் எவ்ளோ சொல்லியும் கேட்காமல் சென்று விட்டாள்.

அக்னி நிலா சகுந்தலாவை சுத்த விட்ட சிறிது நேரத்தில் கண்டு கொண்ட சகுந்தலா, அந்த வீட்டை நோக்கி வந்தாள்.

“டேய்ய் அந்த வீட்டை கொளுத்திடு” அவளது பி. எ தயங்கி நிற்க.

“உனக்கு ஒன்னும் பாவம் வராது, நான் ஏற்க்கனவே என் கையால கொன்னுட்டேன், செத்த பாம்பை கொழுத்தலாம் போ போ, சரியான சாமியார்” என்று சகுந்தலா அவனை விரட்டினாள். அவளும் வேண்டா வெறுப்பாக மனதில் பாரம் ஏறி அந்த வீட்டை கொளுத்தி விட்டான்.

ஆதிரையும் அர்ஜுனையும் ஒரு இடத்தில் கட்டிப்போட்டு விட்டு அக்னி நிலா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வீட்டை நோக்கி போனாள். அங்கு இருப்பவர்களுக்கு அந்த வேர் உடைய சக்தியை கொடுத்து உயிர் பிழைக்க வைக்க அங்கு ஓடினாள்.

அக்னி நிலா இது போல எதாவது செய்வாள் என்று புரிந்துகொண்டு மொத்தமாக வீட்டை எரித்துவிட்டாள்.

அந்த வீடு கொழுந்து விட்டு எறிவதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள் சகுந்தலா.

பக்கம் இருக்கும் அவளது பி. எ அருளுக்கு அடி மனதில் இருந்து சகுந்தலாவிற்கு சாபம் கொடுத்துக்கொண்டு இருந்தான்.

அக்னி நிலா கடைசி முயற்சிக்கும் தடையாக இருந்த சகுந்தலா மீது ஆத்திரம் பொங்க அங்க இருக்கும் கட்டையால் அவளை அடிக்க வந்தாள்.

அக்னி நிலா அடியில் இருந்து லாவகமாக தப்பித்து, அவளை ஒரு சொடக்கு போட்டுட்டு அக்னி நிலாவை மறைய வைத்தாள்.

சகுந்தலா ஆட்டத்தை முடிக்க வருவாளா? அக்னி நிலா.

மாயம் செய்ய வருவாள் மாய நிலா…
 
25 மாய நிலா

சகுந்தலா அவள் கால் அடியில் இருக்கும் முயல் குட்டியாக மாறியிருந்த அக்னி நிலாவை தூக்கினாள்.

அவள் மந்திர சக்தியால், அக்னி நிலாவை மறைய வைக்க முடியவில்லை. அக்னி நிலா அங்கு பக்கம் ஓடிக் கொண்டு இருந்த முயலை கடைசி நேரம் பார்த்ததால், "நான் மறையக் கூடாது முயலாக மாறவேண்டும்" என்று கையில் இருந்த வேரை பிடித்து வேண்டிக்கொண்டாள். அதனால் சகுந்தலாவின் மந்திரம் பலிக்கவில்லை.

"ஓ சோ ஸ்வீட், இனி நீதான் எனக்கு பெட் அனிமல்" பக்கம் இருக்கும் பி. எ விடம் தூக்கி போட்டாள்.

"இதை என் சயின்ஸ் லேப்ல மிருகங்கள் அடைத்து வைக்கும் இடத்துல அடைத்து வை" என்று அனைவரையும் முடித்து விட்டோம் என்று நினைத்த சகுந்தலாவிற்கு தெரியவில்லை இதுதான் ஆரம்பம் என்று.

அந்த பி. எ விற்கு மனம் கேட்கவில்லை எப்படியாவது அக்னி நிலாவை பாதுகாப்பாக இருக்க வைக்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு தோன்றியது ருத்ராவின் நினைவு, பெரிய பெரிய அறிவாளிகள் கூட மிருகத்தை ஒரு சோதனை பொருளாக நினைக்கும் அந்த இடத்தில் ருத்ரா குட்டி குட்டி மிருகங்களை கொஞ்சி பேசுவதை பல முறை பார்த்து இருக்கிறான். அவனிடம் எப்படியாவது அக்னி நிலாவை சேர்த்து விட வேண்டும் என்ற முனைப்பில், அக்னி நிலாவை பத்திரமாக பிடித்து காரில் அமர்ந்தான் அந்த அசிஸ்டன்ட்.

அக்னி நிலாவிற்கு சாப்பாடு போடக் கூடாது என்று சொல்லிவிட்டுத்தான் போனாள் சகுந்தலா.

'இந்த பிறவி இந்த உலகத்துல பிறக்கலன்னு யார் அழுதா, கடவுளே உனக்கு கண்ணு இல்லையா' என அசிஸ்டன்ட் முயலாக மாறிய அக்னி நிலாவை கையில் வைத்துக்கொண்டு வழி முழுவதும் சகுந்தலாவை தாளித்துக் கொட்டிகொண்டே வந்தான்.

வீட்டிற்கு உள்ளே போகும் முன் சகுந்தலா திரும்ப வந்து "அந்த போன் கொடு டா, அந்த வீடியோ செம. இனி அத பார்த்து ரசிக்கும் போது இனிமையாக இருக்கும்".

'மத்தவங்க உயிரை எடுத்துட்டு இனிமையா இருக்குமாம், ராட்சச மிருகம்' என்று சகுந்தலாவின் அசிஸ்டன்ட் அருள் நினைத்தான்.

"என்னை மனசுல திட்டினது போதும், போய் வேலைய பாரு, புதுசா வந்த சயின்டிஸ்ட் கிட்ட என்ன என்ன டாலன்ட் இருக்குன்னு சீக்கரம் தெரிஞ்சிக்கோ, ரொம்ப நாள் ஆச்சி புது கண்டுபிடிப்பு கண்டு பிடிச்சி இந்த மாசம் எதாவது கண்டு பிடிக்கல நம்ம மார்க்கெட் அவுட் ஆகிடும்".

அருள் "சரிங்க மேடம்" என்று முயலக மாறிய அக்னி நிலாவை தூக்கிக்கொண்டு கிளம்பும் சமயம்.

"அருள் இங்க வா" அருள் அக்னி நிலாவை காரில் விட்டுவிட்டு வர எண்ணினான்.

"அவளையும் தூக்கிட்டு வா".

'ஐயோ கடங்காரி, இந்த சின்ன பொண்ணை என்ன செய்வானுங்கன்னு தெரிலயே' அக்னி நிலாவை தூக்கிக்கொண்டு மெதுவாக நடந்து அவள் அருகில் வந்தான்.

"ஏன்டா ரெண்டு எட்டு வைக்கறதுக்கு ஒரு மணி நேரம் மெதுவா வருவியா? எனக்கு வேகம் முக்கியம் புரியுதா" அருளால் தலையை மட்டும் தான் ஆட்ட முடிந்தது.

"மண்டையை மட்டும் நல்லா ஆட்ரீங்கடா".

அக்னி நிலா இரு காதையும் பிடித்து அவளது முகத்துக்கு நேராக தூக்கி நிறுத்தினாள். "ஐயோ மை கியூட் தங்கச்சி, உன்னை பிறக்கும் போதே கொன்னுட்டுத்தான் பிறந்தேன்னு நினச்சேன், கடைசியா கொஞ்ச வருஷம் முன்னாடித்தான் தெரிஞ்சது நீயும் உன் அம்மாவும் உயிரோட இருக்குற விஷயம். சரி படிப்பு எல்லாம் சிறப்பாக முடிச்சிட்டு உங்களை முடிக்கலாம்னு நினச்சேன், பார்த்தையா நான் சிறப்பாக முடிச்சிட்டேன்" அக்னி நிலா கோவத்தில் சகுந்தலா கன்னத்தை கீறிட்டா.

"ஆ என்று அலறியவள், ஏதோ ஒரு மந்திரம் உபயோகித்து அந்த காயத்தை இரு விரல்கள் கொண்டு காயத்தை குணமடைய செய்தாள்.

அருள் அமைதியாக சகுந்தலாவிடம் இருந்ததற்க்கு இந்த மந்திர சக்தியும் ஒரு காரணம் தான். முதலில் மிரண்டவன் பிறகு அவளை கண்டு நடுங்க ஆரம்பித்தான். அவளை எதிர்த்து நின்றால் அவனது குடும்பத்தை எதாவது செய்துவிடுவாள் என்று பயந்து அவள் சொல்வதை எண்ணம் மனதை இரும்பாக மாற்றிக்கொண்டு செய்து வருகிறான்.

சகுந்தலாவின் சக்தி தெரிந்த ஒருவன் அருள் மட்டும் தான்
அக்னி நிலாவை தூக்கிக்கொண்டு அவர்களுக்கு சொந்தமான ஆய்வு கூடத்திற்குள் நுழைந்தான். "என்ன மன்னிச்சுடு மா என்னால அங்க நடந்த அநியாயத்தை தட்டி கேட்க முடியாத நிலையில் இருந்து இருக்கேன். நான் ஒருத்தர் கிட்ட கூட்டிட்டு போய் விடுறேன், அங்க பத்திரமா இரு. உனக்கு திரும்ப உயிருக்கு பாதிப்பு வரும் சமயத்தில் என் உயிரை கொடுத்தாவது உன்னை காப்பாத்துவேன்" என்று அருள் வாக்கு கொடுத்துவிட்டு.

ருத்ரா பணி புரியும் இடத்தை நோக்கி சென்றான்.

"ருத்ரா" அருளின் அழைப்பில் திரும்பி பார்த்தவன், அவர் கையில் இருக்கும் முயலை பார்த்து "சோ கியூட் என்கிட்ட வரியா உனக்கு கேரட் தரேன்".

அக்னி நிலா அவளது சிவப்பு கண்களை உருட்டி அருனை பார்த்தா, அவர்களிடம் போவதா வேண்டாமா என்று கேட்பது போல தெரிந்தது ருத்ராக்கு அவளது பார்வை.

"போ…" என்றார் அருள், அக்னி நிலாவும் தயங்கிக்கொண்டே ருத்ராவின் கைகளில் வந்த உடன் ஒரு பாதுகாப்பு உணர்வு வந்தது அவளுக்கு.

"இத நீங்க பாத்துக்கோங்க மேடத்தோட ஸ்பெஷல்."

"அவங்க ஸ்பெஷல்லா?" என்று கேள்வியாக அருளை பார்க்க. அவருக்கு தெரியும் ருத்ரா எதை கேட்கிறான் என்று, பேசக் கூடிய நிலையில் அருள் இல்லை, அந்த இடத்தை விட்டு செல்லும் போது ஒரு நாள் மிருகங்கள் அடைத்து வைத்து இருக்கும் இடத்திலிருந்து ஒரு குட்டி பப்பி வெளியே ஓடி வந்து விளாடிக்கொண்டிருந்தது. அந்த சமயம் பார்த்து சகுந்தலா கால் மீது ஓடி சென்று சுச்சு போய்விட்டது. ஆத்திரம் வந்த அந்த மிருகமாக மாறிய சகுந்தல பப்பியை ஓங்கி ஒரு மிதி அதனை பார்த்து ருத்ரா பதறிக்கொண்டு ஓடிவந்து பப்பியை மிகவும் சிரமப்பட்டு காப்பாத்தினான் அன்று.

'இவள் எல்லாம் பெண்ணா இல்லை மிருகமா' என்று நினைத்தான். அப்போது இருந்த அந்த சகுந்தலா எப்போவாவது மேற்பார்வையிட வரும்போது எல்லாம் ருத்ரா அவளை முறைத்துக்கொண்டுதான் இருப்பான்.

சகுந்தலா அவன் முறைப்பது தெரிந்தாலும், 'உன்னால என்னை முறைக்க மட்டும் தான் முடியும் மூடனே' என்று நினைத்து விலகி விடுவாள்.

அவனது திறமையை பணமாகவும் ருத்ராவை கூட வைத்திருந்தாள். முடிந்த அளவுக்கு இவனது கண்டுபிடிப்பை உரிஞ்ச நினைத்தாள் சகுந்தலா.

சயின்ஸ் மற்றும் மாயாஜாலம் சேர்ந்த ஒரு உலகத்தை உருவாக்க ருத்ரனின் உதவி அவளுக்கு தேவைப்பட்டது. அதனால் சற்று அவனிடம் இருந்து விலகியே இருந்தாள்.

அவனை எதாவது சொன்னால் அடுத்த நிமிடம் அவன் இங்கு இருந்து செல்ல நிறைய வாய்ப்பு இருப்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். ருத்ராவால் நிறைய வருமானமும் வந்து கொண்டு இருந்தது பழைய மருந்துடன் மூலிகையை சேர்த்து புது வித புரட்சி ருத்ராவும், ரோசும் துவங்கிக் கொண்டு இருந்தார்கள். அவன் மருந்து சாப்பிடுபவர்களுக்கு வியாதி சீக்கிரமா குணமாவது மட்டும் இல்லாமல், அவர்களுக்கு எந்த பக்கவிளைவு ஒரு சதவீதம் கூட வராது என்ற நம்பிக்கை ருத்ரா கொடுத்து இருந்தான்.

அது வெற்றிகரமாகவும் அவன் நிரூபித்துக் காட்டி இருந்தான். அதன் பிறகு அவனுக்கு என்று தனி பிரிவை கொடுத்து இருந்தார்கள்.

ருத்ரா மற்றும் ஆகாஷ் சேர்ந்துதான் அந்த கண்டு பிடிப்பு செய்ததால் இருவரையும் ஒரே பிரிவில் தூக்கி போட்டுட்டு இருந்தார்கள். ரோஸ் அசிஸ்டன்ட் ஆக ராஜா தேர்ந்து எடுத்தனர். முதல் பார்வையில் அவள் மேல் காதல் கொண்டான், அவளை இன்டெர்வியூ எடுக்கும்போது அவளது பதில்கள் மெய் சிலிர்க்க வைத்தது. அவர்கள் அலுவலகத்தில் எப்போதும் இளமையாக இருக்கும் நபரைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். மூவரும் தொடர்ந்து புதியதாக எதையாவது கண்டு பிடிக்க வேண்டும் என்பதுதான் இவர்கள் நோக்கம். சகுந்தலா இவர்களை நல்லா உபயோக படுத்திக்கொண்டிருந்தாள்,
தொடர்ந்து நிறைய கண்டுபிடித்தார்கள். ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அக்னி நிலாவை முயலாக இருக்க அதற்க்கு ரூபி என பெயர்வைத்து தூக்கிவைத்து கொஞ்சிக் கொண்டிருப்பது இதுதான் ருத்ராவின் வேலை.

அக்னி நிலாவிற்கு இது மனதில் பேசிக் கொள்ளும் அந்த ருத்ராவின் குரல் போல் தெரிய ஒரு எண்ணம் தோன்றியது.

ஒரு நாள் இதை தெளிவுப்படுத்த எப்போதும் போல மனதில் இருவரும் சில வருடம் கழித்து பேசினார்கள்.
"ஹலோ ருத்ரா" சிறிது இடைவேளை விட்டு "ருத்ரா நான் பேசுறது கேட்குதா?".

"கேட்குதே மேடம்க்கு இப்போதான் என்ன தெரிஞ்சதோ".

"காலேஜ் பிஸி இப்போதான் முடிஞ்சது".

"எனக்கும் நானும் காலேஜ் முடிச்சிட்டு, இப்போ வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டேன்".

"எங்க போற" அவன் வேலை செய்யும் இடத்தை சொல்ல, "எந்த பிரிவு" என்று கேட்டாள். 'அப்போ நிலா நீ நினைத்தது சரி தான்', அதன் பிறகுதான் அக்னி நிலா ருத்ரா ஓடு நன்றாக ஒட்டிக்கொண்டாள். அக்னி இந்த விசயத்தை சொல்லி அவனையும் வருத்த படவைக்க கூடாது என அவள் நிலையை ருத்ராவிடமிருந்து மறைத்திருந்தாள்.

இவர்கள் நெருக்கம் எப்படி இருந்தது என்றால் இருவரும் ஒன்றாக சாப்பிடும் அளவிற்கு.

அவளுக்கு தினமும் கேரட் கொண்டு வருவதை மட்டும் ருத்ரா மறக்க மாட்டான்.

தனியாக இருக்கும் சமயம் குடும்பத்தை நினைத்து அவளால் கண்ணீர் மட்டும் தான் விட முடிந்தது.

அர்ஜுனும் ஆதிராவும் சிறிது நேரம் போராடி அக்னி நிலா கட்டிய கைகளை அவிழ்த்து விட்டு வீட்டை நோக்கி வந்தார்கள். வீடும், அதில் உள்ளவர்களின் சாம்பல் மட்டும் தான் பார்க்க முடிந்தது.

அனைத்தும் சுத்தம் செய்துவிட்டு இருவரும் ஆளுக்கு ஒரு மூலையில் சோகமாக உட்கார்ந்து இருப்பார்கள். அர்ஜுன்தான் எதாவது கிடைக்கும் பொருள் வைத்து சமைத்து ஆதிராவுக்கு ஊட்டி விடுவான்.

இவ்ளோ வருடம் பழகி இருந்தாலும், இந்த தனிமையில் தான் இருவரும் தங்கள் காதலை உணர்ந்தார்கள்.

அக்னி நிலாவையும் அந்த சகுந்தலா கொன்று விட்டாள் என்று தான் நினைத்தார்கள். கடவுள் மனதை அவர்களால் திட்ட தான் முடிந்தது. சகுந்தலாவை பழிவாங்க வேண்டும் என்று அவர்கள் முதல் அடி எடுத்து வைக்கும் போதே தெரிந்து விட்டது அவள் சாதாரணமானவள் இல்லை என்று அதற்கான ஏற்பாடுகளும் துவங்கினார்கள், அந்த வேர் மரத்திடம் உதவி கேட்டார்கள்.

அந்த மரமும் சில விழுதுகளை அவர்கள் மேல் போட்டது, ஆனால் இருவருக்கும் ஒன்று புரியவில்லை. இவர்களை வேர் தான் காப்பாற்றியது ஆனால் அவர்கள் மயங்கி இருந்ததால் அது இருவருக்கும் தெரியவில்லை. வேர்மரம் கொடுத்த விழுதுகளையும் வேரையும் பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டார்கள் இருவரும். இதை வைத்து என்ன செய்வது என இருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

26 மாய நிலா

அக்னி தனிமையிலே சோகத்தில் இருந்தாள் அவளுக்கு ஒரே ஆதரவு ருத்ராதான். அவளுக்கு ரூபி என்று பெயரும் வைத்தான். கழுத்தில் ஒரு பெல்ட் போட்டு ஒரு சிறிய டாலரும் இணைந்திருந்தது.
அவளை தன்னோடு கூட்டிப்போக ருத்ரா அதிகாரிடம் கேட்டபொது அனுமதி அவனுக்கு கொடுக்கப்பட வில்லை.

அதனால் சில சமயம் அவன் தூங்குவது கூட அலுவலகத்தில் தான்.

ஆரம்பத்தில் அமைதியாக இருந்து
கேரட் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து போய்விட்டது, ரூபியாகயிருக்கும் அக்னி நிலாக்கு.

இவர்கள் அனைவர்க்கும் 25 வயதுக்கு பிறகு பழைய நினைவு வருவது என்பது விதி. ஆனால் சகுந்தலாவிற்கு பிறந்ததில் இருந்தே அந்த பழைய வஞ்சம் மனதில் வைத்துக்கொண்டுதான் பிறந்தாள்.

சகுந்தலாவின் மாய வேலையால் அதனை தடுக்க நினைத்தவளுக்கு வசியின் நினைவுகளை மட்டும் தான் மறைக்க முடிந்தது.

மற்றவர்களை அவளால் தடுக்க முடியவில்லை, இதனை பயன்படுத்தி அக்னி நிலா நினைவு உருவில் வசியிடம் வந்து சேர்ந்தாள் சகுந்தலா.
அவள் அழித்த முக்கியமான ருத்ரா நினைவுகள் மிஸ்டர் ஜீரோ என்ற பெயரில் சுத்திக்கொண்டிருப்பது தெரியாமல் சகுந்தலா ஆடிக்கொண்டிருந்தாள்.

வசிக்கு பழைய நினைவுகள் வந்தால்தான் அனைத்தும் சுலபமாக முடியும்? ஆனால் சகுந்தலா அதற்க்குவிட மாட்டாள் போல.

சகுந்தலாவுக்கு தெரியாமல் அனைவரும் யோசித்துக்கொண்டு இருந்த சமயம்.

வசியும், சகுந்தலாவும் கைகள் மட்டும் தான் தொட்டு பேசிக்கொள்வார்கள்.

இவர்களை நிறைய முறை மிஸ்டர் ஜீரோ பார்த்துக்கொண்டுதான் இருந்தான். அவர்கள் கை படும் வேலையில் ஏதோ ஒரு பொருள் கொண்டு சகுந்தலா அவனது உடல் படும் படி வைப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள்.

அந்த சமயம் சாந்தியை முறைத்துக்கொண்டு வந்து அக்னி நிலா தோளில் பறந்து வந்து உட்கார்ந்தான்.

சாந்திக்கு முன்பு போல எல்லாம் இப்போது மிஸ்டர் ஜீரோ மேல் வெறுப்பும் இல்லை நெருக்கமும் இல்லை. அவனை சாதாரணமாக பார்க்கத் துவங்கினாள்.

ஆனால் மிஸ்டர் ஜீரோக்கு அவள் மீது ஆத்திரம், காதலுக்கு எதற்கு உருவம் என்று யோசிக்க துவங்கியது.

அன்று இரவு அனைவரும் தங்குவது போல ஒரு வீடு ஏற்பாடு செய்தான் ருத்ரா.

சகுந்தலாவை நெருங்க விடுவது சரி இல்லை என்று தோன்றியது அவனுக்கு.

ராஜா பாதுகாப்பான ஒரு இடத்தை பார்த்து சுற்றிலும் வேர்கள் பாதுகாப்போடு ஒரு இடத்தை வடிவமைக்க திட்டம் தீட்டியது போல செய்தான், பாதி வேலை முடிந்த நிலையில் ரோஸை பார்க்க சென்றான்.

"பாரு டா சார் இன்னைக்கு வந்துட்டீங்க போல".

"ஆமா" என்று மட்டும் சொல்லி அவன் அறைக்குள் பதுங்கிக் கொண்டான்.

இவர்கள் திருமணம் முடிந்து சில வாரங்கள் கழித்து இன்று தான் வந்து இருந்தான் ராஜா வீட்டுக்கு.

அவனுக்காக சில பிடித்த உணவை சமைத்து மேஜையை நிரப்பிக் கொண்டு இருந்தாள்.

அமைதியாக ராஜா சிறிது நேரம் ஓய்வு எடுத்தவன் சாப்பிட வந்து அமர்ந்தான்.

ரோஸ் ஆசையாக பரிமாறினாள், ரசித்து கூட சாப்பிடவில்லை ராஜா, சாப்பிட்டு எழும்போது.

"நீங்க நாளைக்கு பிரியா?".

"எதுக்கு கேக்கற?".

"என்னோட பாட்டியை போய் பாத்துட்டு வரலாமா?".

"இப்போ போனா ரிலாக்ஸ்சா இருக்க முடியாது டா புரிஞ்சிக்கோ".

"சரி வீடியோ கால் ஆச்சி பேசலாமா?".

"ம்ம்ம்".

"ரொம்ப தேங்க்ஸ் ராஜா" அவனை நெருங்கி அமர்ந்தால், ராஜா அவளை பார்க்க.

"பாட்டி கண்டு பிடிச்சிடும் என்ன பிடிக்காம கட்டிக்கிட்டீங்கன்னு".

"நான் பிடிக்காம கட்டிகிட்டேனா?".

"ஆமா அப்படித்தான சொன்னிங்க".

"சரிதான்" ராஜாவுக்கு இறுக்கம் தளர்ந்து சிரித்தான்,
இந்த பிரச்சனையில் இருவரும் தங்கள் சுயத்திலேயே இல்லை. எப்போதும் பேசிக்கொண்டு இருப்பவன் அமைதியாகவும் அமைதியாக வேலை பார்த்துக் கொண்டு இருப்பவள், விறுவிறு என்று இவனிடம் பேச கிடைக்கும் சில நிமிடத்தில் மொத்தமாக இடைவிடாமல் பேசிக்கொண்டு இருக்கிறாள்.

ராஜாவுக்கு அவளது வற்புறுத்தல் பேரில் திருமணம் செய்துகொண்டாலும் அவளை மனைவியாக பார்ப்பது பிடித்துதான் இருந்தது.

பிடித்து என்ன பலன் அதனை முழுவதாக மனதில் ரசிக்கக்கூட முடியவில்லை. சிறிது மாதத்தில் நடக்க இருப்பதை நினைத்து கலங்கினான் அவன்.

ரோஸ்க்கு போன ஜென்மத்தில் தான் காதலை கூட சொல்லாமல் அடுத்த கணவன் மனைவியாக ஆக நினைத்த இருவரும் இந்த ஜென்மத்தில் தாலியாவது கட்ட மாட்டானா என்று தான் ரோஸ் அதிரடியாக அன்று ராஜாவை கிட்டத்தட்ட தற்கொலை முயற்சி செய்து திருமணத்தை முடித்தாள்.

சேர்ந்து வாழ்வோமா என்பது தெரியாது அவளுக்கு, ஆனால் அவன் கூட இருக்க வேண்டும் அவ்ளோதான். ஆனால் ராஜாவுக்கு எப்படியாவது தனது உயிரை கொடுத்தாவது மற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம். அவனுக்கு பின்னால் இவளது வாழ்க்கை என்ன ஆவது என்ற பயம் ராஜாவுக்கு இப்போதே தொற்றிக்கொண்டது.

ரோஸ் பாட்டியை பார்த்துக்கொள்ளும் நர்ஸ்க்கு போன் போட்டுட்டு அவர் உடல் நிலையை விசாரித்து, "பாட்டி முழிச்சிட்டு இருக்காங்களா?"

"ஆமா அக்கா முழிச்சிட்டுதான் இருகாங்க".

"சரி சிஸ்டர் பாட்டிய பத்திரமா பாத்துக்கோங்க".

ரோஸ் பாட்டிக்கு அழைத்தாள்.

அவர் ஜாலியாக கொரியன் சீரிஸ் பார்த்துக்கொண்டு இருந்தார்.

"ரோஸ் எப்படி இருக்க, இரு டிவி ஆப் செஞ்சிடறேன்" என்று சீரிஸ் நிறுத்திவிட்டு. பாட்டி பேத்தியை ரசித்து பார்த்தார், புது தாலி நெற்றியில் குங்குமம் என மங்களகரமாக இருந்தாள் ரோஸ்.

"எப்படி டா இருக்க?".

"பாட்டி நான் சூப்பர், என் வீட்டுக்காரர பாரு" என்று ராஜாவை காண்பித்தாள்.

"ரோஸ் சூப்பர் செலக்சன் டா, மாப்பிள்ள ஜம்முனு இருக்கார்".

ராஜாவும் அவரது குழந்தை பேச்சை ரசித்துவிட்டு, அவரது உடல் நிலை பற்றி விசாரிக்க "நீங்க வேற தம்பி எனக்கு ஒன்னும் இல்லை. இவதான் நான் தனியா இருக்கேன்னு ஒரு ஆளு போட்டுட்டு போய்ட்டா, அந்த பொண்ணு செம போறிங். வா சீரிஸ் பாக்கலாம்னு கூப்பிட்டா அட போங்கமா வேலை இருக்குனு துடைத்த வீட்டை திரும்ப திரும்ப துடைச்சிட்டு இருக்கா".

"சரி பாட்டி நான் இனி அவங்கள வீடு துடைக்க வேண்டா, என் பாட்டி ரொம்ப ஹெல்த்தியா இருக்கு அவங்க இனி துடைப்பாங்கன்னு சொல்லிடறேன்".

"அடி பிச்சு, சும்மா பந்தாக்கு சொன்னேன்? முன்பைவிட இப்போ உடம்பு பரவா இல்லை" என்றார் பாட்டி.

"அதான பாத்தேன் சரியான பிராட் பாட்டி நீங்க ஆமாடி உன் கூட சேர்ந்து நானும் பிராட் பாட்டி ஆகிட்டேன் என்ன செய்றது".

"ஈஈ" என்று பாட்டி குழந்தை போல பற்களை பழிப்பு காண்பிக்க. ராஜாவும் சிரிக்க துவங்கியவன், "ரோஸ் உன் பாட்டி செம கியூட் இல்லை".

"என் பாட்டி ஆச்சே என்ன போல கியூட் ஆக தான் இருப்பாங்க" என்று ரோஸ் காலர் தூக்கி சொல்ல.

ரோஸ் சும்மா இருந்தாவே ரசிக்கும் ராஜா, இன்று பாட்டியுடன் சேர்ந்து அடித்த லூட்டியையும் குழந்தையாக மாறி பேசும் ரோஸை ரசிக்க துவங்கினான்.

ராஜா தனது பேத்தியை ரசிப்பதை பார்த்து "ரோஸ் நான் சீரிஸ் பாக்கணும் நான் பிஸி அப்புறம் கூப்பிட்றேன்" என்று போனை வைத்து விட்டார்.

ராஜா அவன் பார்வையை திருப்பிக்கொள்ளவே இல்லை. இவ்ளோ நேரம் நெருங்கி உட்கார்ந்து இருப்பவளுக்கு, முன்பு ஒன்றும் தோன்றவில்லை இப்போது சங்கடமாக நெளிந்தாள்.

"என்னாச்சி நெளியுற, மேடம் தான் ரொம்ப வீர தீர செயல்கள் செய்யும் பெரிய ஆளாச்சே".

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை கையை விடுங்க நான் இன்னும் சாப்பிடல சாப்பிடணும்" எந்திரிக்கும் ரோஸை பிடித்து அவன் கைக்குள் வைத்துக்கொண்டான்.

"எனக்கு உன் வாழ்க்கையை நினைச்சி பயமா இருக்கு ரோஸ்".

"இனி பிரிச்சனை இல்லை, இது நம்ம வாழ்க்கை".

"நான் இல்லனா உன் வாழ்க்கை என்ன ஆகும்".

ராஜா வாயை பொத்திக்கொண்டாள் ரோஸ், "எங்க திரும்ப பிறந்து இருக்கோம் சாக இல்லை வாழ, ஒரு ஜென்மத்துல வாழாத வாழ்க்கையை இந்த ஜென்மத்துல வாழுங்கன்னு கடவுள் கொடுத்து இருக்கார்".

"கொடுத்தவர் அந்த சகுந்தலாவுக்கும் இல்லை வாழ்க்கை கொடுத்து இருக்கார், அவளால எல்லா பிரச்சனையும் திரும்ப வந்து இருக்கு".

"இங்க எவ்ளோ பேரு இருக்க ஒரு வாழ்க்கையை வாழாமல் இறந்து இருப்பாங்க, எல்லோருக்குமா திரும்ப வாழ்க்கை கொடுத்து இருக்கார். நமக்கு கொடுத்து இருக்கார்னா எதாவது சோதனை வரும் அதை தாண்டி வாழுங்க அர்த்தம் புரியுதா?".

"கேட்க நல்லா தான் இருக்கு இருந்தாலும்" ராஜா தயங்க.

"ஒன்னும் இல்லை சரியா போய்டும் புரியுதா".

"பாப்போம் சீக்கிரமா தெரிஞ்சிடும் வாழ்வோமா என்னன்னு".

புதியதாக வந்த வீட்டில் அனைத்து பொருட்களும் எடுத்து வந்துகொண்டு இருந்தார்கள். சாந்தி மட்டும் ஏதோ யோசனையில் இருந்தாள், மிஸ்டர் ஜீரோக்கு வாய் வரை வந்தது' என்னாச்சி உனக்கு' என்று அதனை முழுங்கிகொண்டான்.

'இவட்ட நமக்கு என்ன பேச்சி, உருவம் வேணும்னு நினைக்கறவளுக்கு நான் வேண்டா'.

அக்னி நிலா வசியும் சகுந்தலாவும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த வெறுப்பில் தூங்க போனாள். அதன் பிறகு ருத்ரா, வசி, சகுந்தலா ஒருவர் பின் ஒருவர் அவர்களுக்கு ஒதுக்க பட்ட அறையில் தூங்கச் சென்றார்கள்.

சாந்தி மட்டும் மிஸ்டர் ஜீரோவை ஏற்றுக்கொல்வதா இல்லையா என்ற மன குழப்பத்தில் இருந்த சமயம் ஏதோ தீயும் வாசம் வந்தது.

"என்ன தீ வாசம் வருது எங்க இருந்து வருது" ஒரு ஒரு அறையில் சோதித்து கொண்டு இருக்கும் போது அக்னி நிலா அறையில் தீ கொழுந்து விட்டு எறிந்தது. சாந்தி போட்ட கூச்சலில் அனைவரும் ஓடி வந்தார்கள்.

ருத்ராவும் வசியும் கதவை திறக்க முயற்சி செய்து தோற்றுதான் போனார்கள்.

வேகமாக கதவு திறந்து கொண்டது அக்னி நிலாவை முழு பலம் கொண்டு மிஸ்டர் ஜீரோ அவளை தள்ளி விட்டு சிறு துணிப்போல இருந்த மிஸ்டர் ஜீரோ பெரிய உருவம் எடுத்து அந்த அறையில் இருந்த தீயை அணைத்து மீண்டும் பழைய சிறு துணி போல வந்து சாந்தி காலடியில் சாம்பலாக விழுந்தன்.

சகுந்தலா 'ச்சை இவள அவ்ளோ சீக்கரம் சாகடிக்க முடியாது போலவே' மனதில் மிஸ்டர் ஜீரோவை வதக்கிக்கொண்டு இருந்தாள்.

மிஸ்டர் ஜீரோ கடைசி மூச்சி போது கூட "சாந்தி நான் உன்னை காதலிக்கிறேன்" என்று சொல்லி அதன் இறுதி முச்சை விட்டது.

சாந்தி கண்களில் இருந்த கண்ணீர் மிஸ்டர் ஜீரோ சம்பலில் பட்டு தெரித்தது.

சாந்தி இப்போதாவது உண்மையான காதல் என்று உணர்ந்து கொள்வாளா?

மாயா மாயம் செய்ய வருவாள்…
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom